ஏன் பாவா நம்ப முடியல உங்களால் ??உங்களை ஏமாத்திட்டு போயிருவேன்னு நெனச்சிங்களா என்ன??
என்னடி இப்படி பேசற…உன்னோட மூளை இந்த அளவுக்கு யோசிக்குமா என்ன??
கொஞ்சம் நல்லா யோசி அஞ்சு…எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,உனக்கு உன்னோட பாமிலி problem லாம் சமாளிக்க முடியுமா நல்லா யோசிடி..அப்பறம் ஏன்டா இவன கல்யானம பண்ணேன்னு நீ யோசிக்க கூடாது சரியா…
“பாவா உங்களுக்கு புரியுதா என்னால உங்களை விட்டு இருக்க முடியல,எனக்கு நீங்க வேண்டும் என்று அழுதாள்..”
அவளின் அழுகையை அவனால் பார்க்க முடியவில்லை…அஞ்சு இங்க பாரு அழ கூடாது..என்றதும் அவள் அவனை பார்த்தாள்,அஞ்சு உனக்கு சின்ன வயசு தான் நீ நெறைய சாதிக்க வேண்டிய விஷயமெல்லாம் இருக்கு..
உனக்குன்னு கனவு இருக்கும் அதைலாம் ACHIEVE பண்ணனும்…
கனவு வேறு , காதல் வேறு அஞ்சு நல்லா யோசிச்சி சொல்லு சரியா…
அவன் சொல்வதுலயும் நியாயம் இருக்கு தான் என்று அவளுக்கு புரிந்தது…
நீ எந்த விஷயம் சாதிக்க நெனச்சாலும் உன் கூட கண்டிப்பா நான் இருப்பேன்…நீ உன்னோடு கனவை அடையும்போது எனக்கு என்னோட பொண்டாட்டின்னு சொல்ல அவ்வளவு பெருமையா இருக்கும்டா…
நல்லா யோசி நான் சொன்னதுல இருக்க அர்த்தம் கண்டிப்பா புரியும்டா…இப்போ நம்ம கல்யாணம் பண்ணா உன்னால எதுமே சாதிக்க முடியாதுடா..நம்ம குழந்தைக்கு அம்மாவாக தான் இருப்ப புரியுதா…சிறு குழந்தைக்கு சொல்வது போல் சொல்லி புரிய வைத்தான்
“உனக்கு FINACIAL INDEPENDENTகண்டிப்பா வேணும்…அப்பாக்கிட்டயும் காசு வாங்க கூடாது ,HUSBAND கிட்டயும் காசு வாங்க கூடாது..சும்மா கெத்தா நீ இருக்கணும் …EMOTION இருக்கணும் ஆனா அது மட்டுமே இருக்க கூடாது..”
எனக்கு புரியுது உன்னால என்னை விட்டு இருக்க முடியலன்னு… என்னாலையும் தான் இருக்க முடியல ஆனா, உன்னோட வயசு ரொம்ப சின்ன வயசு சாதிக்க வேண்டியது இருக்குன்னு என்ன நான் கட்டுபடுத்தி BUSINESS அதிகமா பார்க்கிறேன் அது மாறி உன்னோட DREAMஎன்னன்னு கண்டுபிடி அதை நோக்கி ஓடு சரியா..
அவளுக்கோ அவனை நினைத்து அவ்வளவு வியப்பாக இருந்தது,இதை விட என்மேல் யாரால் இவ்வளவு காதலை காட்ட முடியும்…
அழுதவளின் முகம் இப்போது தெளிவாக மாறியது.. அதை பார்த்தவனுக்கு மனதில் நிம்மதி தோன்றியது.
அவளின் அழுத விழிகளை துடைத்துவிட்டு அவளை நோக்கி இரு கைகளையும் நீட்டினான்,அவள் இதை தான் எதிர்பார்த்தாள் அதனால் அவனிடம் விரும்பியே சரணடைந்தாள்…
அஞ்சு இத தான காலையிலே இருந்து எதிர்பார்த்த சரி தான…
“பாவா நம்ம இப்படியே இருந்துரலமா…”
மறுபடி மறுபடி இப்படி சொல்றேன்னு நெனைக்க வேண்டாம் ஆனா என்னால நிம்மதியா தூங்க கூட முடியல பக்கத்துல நீங்க வேண்டும்ன்னு ஏக்கமாக இருக்குது என்றவள் அவளை இன்னும் அணைத்துகொண்டாள்…
அவனிற்கும் இது நன்றாக புரிந்து தான் இருந்தது…
சரி அஞ்சு இதுக்கு நான் ஒரு நல்ல முடிவு எடுக்குறேன் டா ..என்னோடே இரு ஆனா உன்னோட கனவை நீ போகஸ் பண்ணனும் சரியா என்றதும் சரி என்று தலையை ஆட்டினாள் ஆனால் அவனிடமிருந்து சிறிதும் விலகவில்லை…கிட்டத்தட்ட அரை மணி நேரம் அப்படியே தான் இருந்தாள்..
மெதுவாக அவளது தலையை வருடிகொண்டே,
அஞ்சு …டைம் ஆச்சு ஹோச்டேல் உள்ளே போறியா என்றதும் அவள் அவனை விட்டு பிரிந்து அவன் முகத்தை பார்த்தாள் ..
அப்போது அவளை அழுத முகத்தை துடைத்துவிட்டு,அவளின் முகத்தில் கிடந்த கூந்தல் கற்றைகளை ஒதுக்கிவிட்டு,அவளின் களைந்த உடைகளை சரி செய்தவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்..
அதில் நெகிழ்ந்தவள்,அவன் நெற்றியில் இதழ் பதித்து MISS YOU பாவா என்று சொல்லிவிட்டு இறங்கி சென்றவளை வேதனையுடன் பார்த்தான்..
இவளை இப்படி பார்க்க ரொம்ப வேதனையாக இருக்கு என்ன தான் இதற்க்கு முடிவு என்று யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தான்..
சீக்கிரம் வீடு திரும்பியவனை அவனின் தாத்தா பாட்டி ஆச்சர்யமாக பார்த்தனர்..
என்ன அதிசயம் பிரகாஷ் சீக்கிரம் வந்துருக்க அதும் முகம் வேற வேதனையாக இருக்கு என்ன ஆச்சு என்று அவர்கள் கேட்டதும் நடந்ததை அனைத்தையும் கூறினான்..
அவனின் பாட்டி,அஞ்சலிய நீ கல்யாணம் பண்ணிக்கோ, அப்பறம் அவ இங்க இருந்தே என்ன பண்றதா இருந்தாலும் பண்ணட்டுமே என்றனர்…
பாட்டி அவ இப்போ தான் கல்லூரியே முடிக்க போறா அவளை போய் இப்பவே கல்யாணம் பண்ணி அவளோட கனவை அழிக்கவேண்டாம்..
அவகிட்ட சாதிக்கனும்ன்னு ஒரு வெறி இருக்கு பாட்டி…அதும் இல்லாம அவளோட பாமிலி கிட்ட பேசினாலும் அவங்கலாம் ஒத்துக்க மாட்டங்கன்னு அவ இப்போவே பயப்படுறா இதுக்காக தான் அவ தன்னோட கனவை கூட விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நெனைக்கிறா…
சரி பாட்டி நான் ரூமிற்கு செல்கிறேன் என்றவன் தன்னோடைய அறைக்கு சென்று,தன்னை சுத்தம் செய்து கொண்டு படுத்தவனுக்கு உறக்கம் தான் வரவில்லை…
அவனின் போனில் இருந்த அவளோட போட்டோவை எடுத்து பார்த்தவனுக்கு அந்த பால் மனம் மாறாத முகத்தை பார்த்தவனுக்கு மனதில் அப்படி ஒரு நிம்மதி,
இவ்வளவு வருஷம் எங்கடி இருந்த,இப்படி ஒருத்தவங்க என்னோடு இருக்க மாட்டாங்களா என்று நான் ஏங்காத நாளே இல்லைடி அம்முலு..அவளின் குழந்தை தனத்தில் அவன் மொத்தமாக அவளிடமே சரணடைகிறான்…அவள் எதை சொன்னலும் அவனால் ஏனோ மறுக்க முடியவில்லை..
“எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்
அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல்போனில் பதித்தேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிரிப்பில் சொம்பல்கள் முறிப்பேன்”
அவளின் சாந்தமான முகத்தை பார்த்தவனுக்கு அவளின் மேல் இன்னும் காதல் தான் கூடியது..அவளை நினைத்து கொண்டே உறங்கி விட்டான்…
அங்கு அவள் உள்ளே வருவதற்குள் அவ்வளவு போன் கால்ஸ்,அதை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டே உள்ளே வந்தாள்..அவளிற்கு மனம் இப்போது சற்று நிம்மதியாக இருந்தது..
ஹே சூர்யா இவ ஏண்டி போன் எடுக்க மாட்ரா! என்று அம்பிகா அவளிடம் கத்தி கொண்டு இருந்தாள்…
அவ வரட்டும்டி கேட்ருவோம் என்றதும் உள்ளே அஞ்சுவை பார்த்தவர்ளுக்கு அப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது..தெரியாத இடத்தில் விட்டுட்டு வந்தது அவர்களுக்கு பயமாகவே இருந்தது..அதும் அவள் வீட்டில் தெரிந்தால் அவ்வளவு தான் இவர்கள்..
இவர்களோ பயத்தில் இருந்தனர் ஆனால் இவளோ ரொம்ப CASUAL ஆக சிரித்துக்கொண்டே உள்ளே வந்தவளை, அவர்கள் வெட்டவா குத்தவா என்று பார்த்தனர்..
என்ன madam ஒரே ஜாலியாக இருக்கீங்க போல என்று சூர்யா அவளை பிடித்து கத்தி கொண்டு இருந்தாள்..
அவர்களின் பதட்டம் அவளுக்கு புரிந்து தான் இருந்தது.. நாளை ஒரு நாள் இவர்களோடு தான் இவங்க இல்லாமல் நமக்கு வேதனையாக இருக்கும் என்று அதை நினைத்தவளுக்கு கண்கள் கலங்கியது அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டாள்…
இன்னைக்கு ஒரு நாள் தானடி திட்டுவிங்க எவ்வளோ வேணாலும் திட்டிகோங்க என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை…
அவர்களுக்கும் அப்போது தான் நியாபகம் வந்தது மூவருமே அழுகையில் கரைந்தார்கள்..
அஞ்சு,சூர்யா இனி நான் போலம்பரதுலாம் யார்டி கேட்பாங்க உங்க அளவுக்கு யாராலையும் என்னோட தொல்லை தாங்கிக்க முடியாதுடி என்றாள் அம்பிகா
அஞ்சு,அம்பி நீங்க இருக்க தைரியத்துல தான் நான் கடைல ரகளையே பண்ணுவேன்,இனி யார்கூட கடைக்குலாம் போவேண்டி என்றாள் சூர்யா,
அஞ்சுவோ நீங்க இருக்க தைரியத்துல தாண்டி நான் எவன்கிட்டயாவது பிரச்சனையே பண்ணுவேன் இனி அதெல்லாம் இருக்காதுள்ள என்று மூவரும் ஒவ்வொன்றாய் கூறி அழுதனர்…
இந்த நான்கு வருடம் ஏண்டி இவ்வளோ சீக்கிரம் போனது,இனி நம்மலாம் எப்போ மீட் பன்னுவோம்ன்னு தெரிலையே,இந்த ரூம் ,நம்ம கல்லூரி ,நம்ம டி கடை,கேன்டீன்,முக்கியமா நம்ம பிரின்சிபால் ரூமை மிஸ் பண்ணுவோம் என்றவர்களுக்கு இந்த வேதனையிலும் சிரிப்பு வந்தது…
எல்லோருமே அறிந்த ஒன்று தான் கல்லூரி வாழ்கை என்பது அப்படி ஒரு பொன்னான வாழ்க்கை…மறக்க முடியாத பல அனுபவங்களை நம்மிடையே விதைத்து விட்டு தான் செல்லும்..சில கசப்பான அனுபவங்களையும் அது கொடுக்க தான் செய்கிறது….யாரென்றே தெரியாதவர்களிடம் ஏற்படும் சில எண்ணங்கள் நட்பாகவும் ,காதலாகவும் மாறுகிறது…இந்த வயதில் தான் நாம் வாழ்கையின் அதிகபட்ச சந்தோசத்தையும்,நினைவுகளையும் அடைகிறோம்..
பள்ளி படிப்பு முடியும்வரை ஒரு பயத்தோடு நம்மை வைத்து இருப்பார்கள் ,அதன் பிறகு வரும் இந்த கல்லூரி வாழ்க்கையை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது…பலருக்கு இந்த கல்லூரி வாழ்க்கை தான் வாழ் நாள் முழுவதும் வருகின்ற நண்பர்களையும் கொடுக்கிறது…
கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு தான் வாழ்க்கை என்ற போர்க்களத்தில் இறங்குகிறோம் அதில் பல சவால்கலையும் எதிர்கொள்கிறோம்…
இன்றும் பல பேரிடம் இருந்து வரும் ஒரு வார்த்தை அது என்னவென்றால்”கல்லூரி வாழ்க்கையிலே இருந்து இருக்கலாம் போல” இப்போது நாம் வாழும் வாழ்க்கை அவ்வளவு வலியோடும் வேதனையோடும் தான் செல்கிறது என்கிறார்கள்…
காலையில் எக்ஸாம் ஹாளிற்கு செல்லும் வரை மூவருக்குள்ளும் ஒரே அமைதி…கல்லூரி செல்லும்போது காலையில் ஒருவரை ஒருவர் அடித்துகொண்டு கண்ணாடிக்கு கூட சண்டை போட்டு கொண்டு தான் கிளம்புவார்கள்…அதை எல்லாம் நினைத்தவர்களுக்கு வேதனையாக இருந்தது …
தேர்வு முடித்துவிட்டு ஹோச்டேல் ரூமிற்கு வந்தவர்களால் மறுபடியும் அழுகையாக தான் வந்தது…எல்லா பொருளையும் PACK பண்ணி வைத்தவர்களுக்கு துக்கம் தொண்டயை அடைத்தது என்ன முயன்றும் கட்டுபடுத்த முடியாமல் அம்பிகா இருவரையும் அணைத்துக்கொண்டு மறுபடியும் அழுகையில் கரைந்தாள்…
இப்படியே அழுது இருந்தா என்னடி அர்த்தம் வெளியே எங்கயாவது போலாமா என்றாள் சூர்யா..இருவரின் முகத்திலும் அப்போது தான் சிறு சிரிப்பு கூட வந்தது..
எல்லாம் எடுத்து வெச்சிட்டு ஹோட்டலுக்கு போலாம்டி…
கிளம்பலாமா? என்றாள் அம்பிகா..
அதற்க்கு அஞ்சுவிற்கும், சூர்யாவிற்கும் சிரிப்பு தான் வந்தது…இது என்னடி அம்பி புது பழக்கம் நம்மலாம் நேர்வழியில போக கூடாது யாருக்கும் தெரியாமல் அர்த்த ராத்திரியில் செவரு ஏரி குதித்து தான் செல்ல வேண்டும் புரிந்ததா என்றதும் அவளுக்கு வாவ் மறுபடியும் ADVENTURES பண்ண போறோமோ SUPERU போலாம்டி…
எல்லா திங்க்ஸ் PACK செய்துவிட்டு,இரவு 9 மணிக்கு மூவரும் வழக்கம் போல் செவரு ஏறி குதித்தனர்…
தங்கள் முன்னாள் இருந்த அதை பார்த்த மூவருக்கும் வியர்த்து வழிந்தது…
அஞ்சு இன்னைக்கு நம்ம மாட்டினோம்டி…
உடனே சூர்யா,ஹே அம்பி எதாவது வித்தை காட்டுடி என்றதும் அவள் அவளை முறைத்தாள்..நான் என்ன CIRCUS காரியாடி??