அவன் மறுபடியும் சொல்லுங்க என்று கேட்டதும் தான் ,அம்பிகா ஆரமித்திருந்தாள்,
சார் ப்ராஜெக்ட் விஷயமா வந்துருக்கோம் என்று அவள் கூறியதும்,
ப்ராஜெக்ட் நேம் என்ன? அதை பத்தி EXPLAIN பண்ணுங்க என்றதும்,
அதை அஞ்சு தான் EXPLAIN செய்தாள் சார் நாங்க RICE HUSK ASH BRICK பத்தி ப்ராஜெக்ட் பண்ண போறோம் சார்…
அதாவது சார் வழக்கம் போல் இல்லாமல் அரிசி உமியை பயன்படுத்தி தயாரிக்க கூடிய செங்கல் மற்ற செங்கலை விட வலிமையானதாகவும் இருக்கும்..சாம்பலை பயன்படுத்தி தயாரிக்கும் சூழல் நட்பு செங்கல்..இதில் அதிகம் சிலிக்கா சத்து இருப்பதால் செங்கற்களுக்கு வலிமையை கூட்டுகிறது..
Good என்றவன்…
ஒரு போன் செய்து அவனின் மேனேஜரை அழைத்தான்,இவங்க எல்லாரையும் பிரிக் MANUFACTURED பண்ற FACTORY கூட்டிட்டு போங்க..
இவர்களிடம் திரும்பியவன் ,இவர் உங்களை அழைத்து செல்வார்…எதாவது புரியலனா சொல்லுங்க நான் வந்து பார்கிறேன் என்று கூறும் வரை அஞ்சு அனைத்தையும் கோவத்தோடு தான் பார்த்து கொண்டு இருந்தாள்…
சரியான சிடுமூஞ்சியாக இருப்பாங்க போல என்று நினைத்தவள்…யாரும் அறியாவண்ணம் அவனை முறைத்துக்கொண்டே தான் சென்றாள்..
இதை எல்லாம் அவன் பார்க்காமலா இருக்க போகிறான்…அவன் பக்கா பிசினஸ் MAN அவனுக்கு எல்லா பக்கமும் கண் இருந்து கொண்டு தான் இருக்கும்…அவள் வந்ததில் இருந்து அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவன் கவனித்து கொண்டு தான் இருக்கிறான்..
அவள் வரவேற்பறைக்கு வரும்போதே அவன் கேமராவில் அவளை பார்த்துகொண்டு தான் இருந்தான்…வழக்கத்தை விட இன்று ஏனோ அழகா இருந்தாள் அவளை விட்டு அவனால் கண்ணை திருப்ப கூட முடியவில்லை.. கேள்வி மற்றவர்களிடம் இருந்தாலும் அவன் அவளை தான் பார்த்துகொண்டு தான் இருந்தான்…
உங்க கேள்வி புரியுது..நம்ம hero எப்போதுமே கண்ணாடி இல்லாம இருக்க மாட்டாரு அதனால அவருக்கு நம்ம HEROINe SIGHT அடிக்க நல்லா வசதியா இருக்கும் போல..
அவளோடு கோவம் நன்கு புரிந்து தான் இருந்தது ஆனாலும் அவளிடம் பிறகு புரிய வைத்துகொண்டால் புரிந்து கொள்வாள்..
சரியான என் அழகு ராட்சசி…
பாக்டரியில் இருந்து வெளியே வந்தவர்கள் அவனின் MANAGER கிட்ட சொல்லி விட்டு வெளியே உணவருந்த சென்றனர்..
அங்கே உணவருந்தி விட்டு ஒரு பலூடாவை ஆர்டர் செய்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு,அங்கிருந்த கடைக்காரரிடம் பலூடாவில் NUTS கம்மியா போட்டு எங்கள ஏமாத்துரிங்களா என்று சூரியா சண்டைக்கு அடிக்கல் நட அதையே இருவரும் பின்பற்றி அவர்களிடம் சண்டை இட்டு NUTS மறுபடியும் போட்டு குடுத்ததும்,மூவரும் கெத்தாக கடைகாரராய் பார்த்தனர் மூவருக்குமே அதை நினைத்து நமட்டு சிரிப்பு வந்தது..
அதை அனைத்தையுமே பிரகாஷ் பார்த்துகொண்டு தான் இருந்தான்…சரியான கேடி பில்லா GANG ஆக இருக்கும் போல என்று சிரித்துகொண்டான்…
அவர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போதே, கடைக்காரர் மறுபடியும் மூன்று பலூடா வந்து கொடுத்தார்..நாங்கள் அதை ஆர்டர் செய்ய வில்லை என்று மறுத்தனர்..அதற்கு அவன் இன்னைக்கு எங்க கடையோட lucky CUSTOMER MAM நீங்க மூவரும், அதான் உங்கள் மூன்று பேருக்கும் கொடுத்தேன் என்றான்…அவன் சொல்லும்போதே அஞ்சுவிற்கு பிரகாஷ் போன் செய்தான் அதிலே அவளுக்கு புரிந்து போனது இது யாருடைய வேலை என்று கோவத்தில் அந்த கால் கட் செய்து போனை சுவிட்ச் ஆப் செய்தாள்..
உடனே அம்பிகா,ஏன்டி அஞ்சு,சூர்யா நம்மள இன்னைக்கு மாவு அரைக்க விற்ற போறாங்கடி…
அதைலாம் நாங்க பண்ண மாட்டோம் MAM என்றான்..
ஏன் அதுக்கு பதிலாக தோச சுட சொல்லுவிங்களா என்றாள்…
கடகாரருக்கோ ஐயோ என்றானது..MAM நீங்க சாப்பிட்டதுக்கு காசு கூட தர வேண்டாம் MAM PLS என்னை விட்ருங்க..
அப்போ எங்கள பார்த்தா ஓசியிலா சாப்பிட்டு விட்டு காசு குடுக்கமா ஏமாத்திட்டு போற ஆளு மாறியா இருக்கு என்று சூர்யா எகிறினாள்…
அதானே என்று அஞ்சுவும் எகிறினாள்…
விட்டால் அவன் அழுதுவிடுவான் போல் இருந்தது அதனால் போனா போகுது என்று அவனை விட்டு விட்டனர்….
இதை எல்லாம் பார்த்த பிரகாஷ்க்கு நல்ல சுவாரசியமாக இருந்தது…அஞ்சுவை அப்படி பார்பதற்கும் அவனுக்கு பிடித்து தான் இருந்தது..
“எப்படி பாத்தாலும் அழகா இருக்காளே……”
சாப்பிட்டுவிட்டு கிளம்பி மறுபடியும் அலுவலகத்திற்கு சென்றனர்..அனைத்தையும் கற்றுக்கொண்டு,MANAGER கிட்ட ஒரு சாம்பிள் காட்டிவிட்டு ப்ராஜெக்ட் தேவையானதை அனைத்தையும் ரெடி செய்துவிட்டு பிரகாஷ் பார்க்க என்றனர்..
ஏற்கனவே நேரம் ஐந்தை தாண்டியது அவன் அப்போது மீட்டிங்கில் இருந்தான்…வெயிட் பண்ண சொல்லிருந்தான்..
சரி என்று மூவரும் அதற்க்கு தேவையான டாகுமென்ட்ஸ் laptopல் டைப் செய்து கொண்டு இருந்தனர்…மணி ஏழும் ஆகிவிட்டது அவன் வருவது போல் தெரியவில்லை..
அவன் MANAGER யாரவது ஒருத்தவங்க வெயிட் பண்ணுங்க madam…சார் இப்போ வந்துவிடுவார்..
உடனே அம்பிகா அது என்ன ஒருத்தவங்க வெயிட் பண்ணும் பரவாயில்லை நாங்க மூணு பேருமே வெயிட் பண்றோம் என்றாள்…சரியாக அந்நேரம் சூரியா, அம்பிகாவின் ஆளு company வெளிய வெயிட் பண்றோம் சீக்கிரம் வா என்றதும் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..
அதற்க்கு அஞ்சு ஹே ஒன்னும் பிரச்சனை இல்லைடி நீங்க கிளம்புங்க அப்பாவுக்கு நல்லா தெரிஞ்சவங்க தான் பயப்பட தேவையில்லை என்றாள்..இருந்தாலும் அவர்களுக்கு என்னவோ போல் தான் இருந்தது…
அவனுங்க வெயிட் பண்ணட்டும்டி அஞ்சு, நம்ம மூணு பெரும் பார்த்துட்டே போலாம்டி என்றனர்….
அஞ்சுவிர்க்கும் அவனிடம் சண்டை போடணும் போல் இருந்தது அதனால் தான் அவர்களை கிளப்ப எண்ணினாள்..
சரியாக அந்நேரம் அவனே மீட்டிங் முடித்து வெளியே வந்து பார்த்தான்..
மூவரையும் உள்ளே அழைத்து சென்று அனைத்தையும் பார்த்தவன் எல்லாம் சரியாக இருந்ததும் அவர்களை சிறு மெச்சுதளோடு பார்த்தான்…
இவளோ சின்ன வயசுல இந்தளவுக்கு டேலன்ட் ஆக இருக்கீங்க வெரி good ..நெறைய சேட்டை பண்ணாலும் வொர்க்ல சரியாக இருக்கீங்க good என்றான்…
மூவருக்குமே புரிந்து போனது மதியம் அவன் நம்ம பண்ண வேலையை பார்த்து தான் இருக்கிறான் என்று…
சார் அது வந்து ….
சும்மா விளையாட்டுக்கு பண்ணது சார் சூர்யா சமாளித்தாள்..
“அவன் வேலையை விட்டு போகாமல் இருந்தால் சரி தான் என்று அவனும் சிரித்து வைத்தான்”..
இதை எல்லாமே அவன் வேலையை பார்த்துக்கொண்டே தான் பேசினான்…
அதனால் அவர்களுக்கு அவன் மேல் நல்ல ஒப்பினியன் வந்தது…
லாஸ்ட் செமஸ்டர்ல இருக்கீங்க நாளைக்கு ஒரு எக்ஸாம் தான இருக்கு அதை நல்ல படியா முடிச்சிட்டு இந்த கம்பனிக்கு நீங்க எப்போ வேணாலும் JOBக்கு வரலாம் என்றவனை சூர்யாவும், அம்பிகாவும் ஏதோ கடவுளை பார்ப்பது போல் பார்த்து வைத்தனர்..
ஏனென்றால் அவர்கள் அஞ்சுவை போல் பணக்கார வம்சம் இல்லை…நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்..
கண்டிப்பாக சார் வருவோம் என்றனர்..
உடனே அஞ்சுவிடம் திரும்பியவன் நீங்க ஸ்ரீராம் சார் பொண்ணு தான எப்படி இருக்கீங்க,அப்பாவ கேட்டதா சொல்லுங்க என்றான்…
அவளுக்கோ அப்போது என்ன பேசுவதென்று தெரியவில்லை..
அவனை முறைத்துக்கொண்டே சரிங்க சார் என்றாள்..
DOCUMENT கொஞ்சம் MISTAKES இருக்கு மா, அத மட்டும் சரி பண்ணிடுரிங்களா என்றதும் அஞ்சு சரி என்று விட்டாள்..
சார் நாளைக்கு வரலாமா என்று சூர்யா கேட்டாள்…நாளைக்கு இமபோர்டன்ட் மீட்டிங் இங்க இருக்க மாட்டேன்…
சூர்யா அம்பிகா நீங்க ரெண்டு பேரும் ஹோச்டேல் கிளம்புங்க நான் சரி பண்ணி குடுத்துட்டு வரேண்டி..
இருந்தாலும் அஞ்சு என்று இருவரும் இழுத்தனர்..
டோன்ட் வொர்ரி மா நானே ஹோச்டேல் வந்து விட்டுறேன்…அவனோடய PERSONAL நம்பரையும் அவர்களிடம் கொடுத்ததும் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது…
அஞ்சு பாத்துடி எதாவதுன்னா கூப்டுடி என்று அரை மனதாக சென்றனர்…
சார் பத்ரமா வந்து விட்ருங்க அஞ்சுவ…
உடனே அஞ்சு அதெலாம் நான் பத்ரமா வந்துருவேன் பயப்படாம போடி..
அவர்கள் சென்றதும் அவள் laptop ல் வேலை பார்த்துகொண்டு இருந்தாள்…அவள் அதை சரி செய்யும் வரை இவனும் ஏதோ வேலையாக இருந்தான்..இருவரும் ஏதும் பேசி கொள்ளவில்லை…
சார் என்றதும் அவன் அவளை முறைத்தான்…
என்னடி நக்கலா…
எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க நான் கிளம்பனும் என்றதும், அவன் அதை எல்லாம் சரி செய்து அவளிடம் கொடுத்துவிட்டு, அவளையே பார்த்துகொண்டு இருந்தான்…
அவள் கிளம்ப எத்தனிக்கும்போது அவளின் கையை பிடித்து இழுத்தவன்,டோரை லாக் செய்து விட்டு அவளின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்..
அவளோ என்ன என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள்,அவனோ பார்ரா எனக்கேவா என்றான்..
“என்னோட செல்லத்துக்கு அப்படி என்ன கோவம்..சொல்லுங்க கேட்போம் என்றான்…”
நான் யாருங்க உங்க மேல கோவப்படரதுக்கு என்றாள்..
அப்படியா!! என்றான்…
இங்க பாரு அஞ்சு ஏதுவா இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லணும் அதை விட்டுட்டு,இப்படி மொரச்சிகிட்டே இருந்தா என்ன அர்த்தம்…
அப்போ தான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்..என்னை பார்த்துட்டு ஏதோ தெரியாத மாறி பார்க்கிறிங்க..நேத்து ஹோச்டேல் வந்து விட்டிங்க அதுக்கு அப்பறம் ஒரு போன் கூட நீங்க பண்ணல,எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சி தெரியுமா?? என்று அழுதாள்..
இங்க பாருடா நேத்து FULL DAY மீட்டிங் வொர்க்,வீட்டுக்கு போகும்போது நேரம் பன்னிரண்டு ஆகிருச்சிடா..
இன்னைக்கு நீ வந்தது PERSONAL மீட்டிங் இல்லை PROFESSIONAL மீட்டிங் அதுக்கு ஏத்த மாறி தான் இருக்கணும்…நமக்கு கல்யாணம் ஆனாலும் அப்படி தான் நீ இருக்கணும்..அதை விட்டுட்டு உன்னை பார்த்ததுமே உன்னை மடியில வெச்சி கொஞ்ச கூடிய இடமா இது சொல்லு..
அவன் சொல்லிய பிறகு தான் அவளுக்கு உண்மை உரைத்தது..
SORRRY என்றாள்…
இது தான் அஞ்சு சொன்னால் புரிந்து கொள்வாள்…அதை மீறியும் அவள் சண்டைலாம் போடமாட்டாள்..
வழக்கம் போல் அவளுக்கு ஊட்டிவிட்டான்…அவளும் அவன் பாசத்திற்கு சலித்தவள் அல்ல,காலையில் இருந்து அவனை பார்த்துகொண்டு தான் இருந்தாள் அவனோட அலைச்சலை,அவள் சாப்பிட்டு விட்டு அவனுக்கு அனைத்தையும் எடுத்து வைத்து அவனிற்கு ஊட்டிவிட்டாள்…
கிளம்பலாமா என்றான்..
சரி என்றாள்..
உங்களுக்கு வொர்க் முடிஞ்சுதா இல்லை எனக்காக தான் வரிங்களா என்றதும்..
உன்னை விட பெரிய வேலைலாம் எனக்கு ஏதும் இல்லை அஞ்சு…
உண்மையில் அவனக்கு வேலை இருந்தது தான் ..
காரில் செல்லும்போது இருவருக்குமே தான் செய்வது சரி தானா என்று தான் தோன்றியது..அவளுக்கோ தான் அதிகமாக அவனிடம் பாசத்தை எதிர்பார்க்கிறோமா? என்று எண்ணம் ஓடியது என்றால் இவனுக்கோ இந்த சின்ன பெண்ணை நான் தான் ரொம்ப கஷ்டபடுதுறேனா ஒருவேளை?
இதை இப்போதே பேசி முடித்திருந்தால் வருங்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருந்துருக்கும்..
அவனுக்கோ முழு நேரமும் office வேலை தான் ஆனால் இவளுக்கோ முழு நேரமும் இவனோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்..இதில் இருவரையுமே குறை சொல்ல முடியாது அல்லவா….
இதை இருவரும் மனம் விட்டு பேசி இருந்தாள் அடுத்தடுத்த பிரச்சனைகளை சமாளித்து இருக்கலாம்..
இருவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை அவள் தான் கலைத்தாள்…