அத்தியாயம் :17

நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை,அந்த நேரத்தில் அவளுக்கு மனதில் தோன்றிய பாடல் தான் இது..

அவன் அவளையே பார்த்தவன்,கொல்றடி!!

இந்நேரத்துக்கு என்னோட பொண்டாட்டியா  இருந்திருக்க கூடாத நீ, இப்படி LOVER ஆக இருக்கியே ஐயோ பிரகாஷ்! உன்னோட நிலைமை இப்படியா இருக்கணும் என்று போலியாக நொந்து கொண்டான்..

அடி பிச்சிருவேன்!!வாங்க தூங்கலாம் என்றவள் படுக்க ஆயத்தமானாள்..

“பாவா” என்று அவள் அழைத்ததும் அவனோ ஆவலாக அவளை பார்த்தான்..

தண்ணீர் வேண்டும் என்றவளை “உன்னை என்று அடிக்க ஓடினான்” …ஏனென்றால் தண்ணீர் அவள் கையில் தான் இருந்தது ..ஒரு மனிஷன ரொம்ப தான் படுத்துற..

உடனே அவன்  என்னோடு படுக்கிரியே உனக்கு பயமாக இல்லையா?எதாவது தப்பு நடந்துரும்ன்னு பயம் இல்லையா என்றான்..

அவளோ அதற்க்கு புன்னகை முகமாக,அப்படி உங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்திருந்தா நான் எதுக்கு உங்கள தேடி இங்க வர போறேன்..

“உங்ககிட்ட ரொம்ப பாதுகாப்பாக இருப்பது போல் உணர்வு…”

அதும் இல்லாம “நீங்க என்னோட செல்லம் இல்லையா என்னை நீங்க கஷ்டபடுத்துற மாறி எதும் பண்ண மாட்டிங்க” அந்த அளவுக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு…

இதுக்கு முன்னாடி love லாம் பன்னிருக்கிங்களா “பாவா” என்றாள்..

அவனுக்கு முகம் சட்டென்று இறுக்கமாக மாறியது.. அவன் பதில் ஏதும் சொல்லாமல் இருப்பதை பார்த்தவளுக்கு,அச்சோ கோச்சிகிட்டிங்களா என்று பயந்து விட்டாள்..

அதெல்லாம் ஒன்னு இல்லடா…company பொறுப்பு எல்லாம் எடுத்துகிட்டேன் அதனால RELATIONSHIP எதுக்குள்ளேயும் போனதில்லை..but சைட்லாம் நல்லா  அடிப்பேன்..

அவள் முகத்தை பார்த்தான்,உனக்கு கோவம் வரலையா அஞ்சு?

இதுக்கு எதுக்கு பாவா கோவப்படனும் ..இதெல்லாம் NORMAL தான என்று சிரித்த  முகமாகவே கூறினாள்..

சரி தூங்கலாமா என்றவளுக்கு goodnight என்றான்…

“என்ன goodNIGHT இவ்வளவு தூரமா படுத்தா எப்படி தூங்கறது,

“கிட்ட வாங்க என்று அவனை  நோக்கி இரு கைகளையும் நீட்டினாள்”..

அதில் அவன் மொத்தமாக அவளிடம் மயங்கியே போனான் ..

ஏண்டி இப்படி கொஞ்சுற!!

முடியாதுன்னு சொல்லவே முடில என்றான்..அவன் படுத்துக்கொண்டு,அவளை தன் மேல் இழுத்து போட்டுகொண்டான்..

அவன்,அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்..அவள் அவனின் இதழில் இதழ் பதித்தாள்..

அவன் எத்தனை பெண்களை பார்த்திருக்கிறான்,அனைவரிடமும் காமத்தை மட்டுமே பார்த்திருப்பான் ஆனால் இவளிடம் இவ்வளவு அருகில் இருந்தும் அவளிடம் தவறான எண்ணங்கள் ஏதுமின்றி, குழந்தை போல் அவளை பார்த்துகொள்கிறான்..அவளின் கன்னத்தில் முத்தமிட்டு இவள் என்னோடைய தேவதை பெண் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தான் தோன்றியது..

காலை எழுந்தவனுக்கு, அப்படி ஒரு சிரிப்பு தூங்கும்போது அவன் மேல் மொத்தமாக கிடந்தாள் இது போதாதுன்னு  காலை தூக்கி அவன் மேலே போட்டுகொண்டு தூங்கினாள்,இதில் புடவை வேறு களைந்து இருந்தது அதை எல்லாம் சரி செய்து விட்டு அவளை எழுப்பி குளிக்க அனுப்பினான்..

அவள் குளிக்க போன நேரம் இவனுக்கும் அலுவலகத்திற்கு நேரம் ஆனது அவன் வேறு ரூம் போய் குளித்து ரெடி ஆகிவிட்டு வந்ததும் ,இவளும் ரெடி ஆகி கீழே வந்து இருந்தாள்..

அவளின் உடையை பார்த்தவனுக்கு,மனதில் ஒரு திருப்தியை தந்தது..அவன்  எடுத்த உடைகள்  அவளிற்கு பொருந்துமா இல்லையா என்ற சந்தேகம்  இருந்தது..

அஞ்சு சாப்பிட்டுவிட்டு போ என்றார் பாட்டி..இல்லை பாட்டி டைம் ஆச்சு என்றதும்,அவனே ஒரு தட்டில் தோசையும் சட்னியும் போட்டு அவளிற்கு ஊட்டிவிட்டான்..போறவரைக்கும் படிக்காத  அஞ்சு அதெல்லாம் மூடி வை போதும் என்றதும்,மூடி வைத்துவிட்டு சாப்பாட்டில் கவனமானாள் ..

அவன் தனக்கு மட்டும் ஊட்டியதை பார்த்தவள் நீங்க சாப்பிடலையா ?என்றதும்,எனக்கு வேண்டாம்  அஞ்சு office  போயிட்டு நான் பார்த்துகிறேன்..

அதெல்லாம் முடியாது நானும் அதை தான சொன்னேன் விட்டிங்களா இல்லைல, அப்போ நானும் ஊட்டிவிடுறேன் சாப்பிடுங்க என்று அவனிற்கு ஊட்டிவிட்டாள்..இருவரையும் பார்த்த பெரியவர்களுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது..

உடனே பாட்டி இருவருக்கும் சுற்றி போட்டார்..என்னோட கண்ணே பட்டுடும் போல ரெண்டு பேரும் இதே மாறி ஆயுள் வரை இப்படி சந்தோசமா இருக்கணும் என்றவருக்கு ஆனந்த கண்ணீர் அதை பார்த்த இருவருக்கும் கண் கலங்கியது..

இருவரும் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிகொண்டு காரில் செல்லும்போது,

“பாவா” என்று அழைத்தவள் ஏதோ சொல்ல வந்தாள் ஆனால் ஏதும் சொல்லவில்லை பின்பு  மௌனமாக வந்தாள்..

அதற்குள் அவள் கல்லூரியின் HOSTEL வந்துவிட்டது..காரை ஓரமாக நிறுத்தியவன் அவளின் கையை பிடித்து என்னடா? என்ன ஆச்சு? எதாவது எங்கிட்ட கேட்கனுமா என்று அவன் கேட்டதும்,அவள் அவனை இறுக அணைத்து கொண்டு அழுதாள்….

அவள் அழுவதை பார்தவனுக்கு மனம் வேதனையாக இருந்தது..இங்க பாரு அஞ்சு என்ன தான் ஆச்சு சொல்லுடா,

அவள் அவன் முகத்தை பார்த்து “என்னால உங்கள விட்டு இருக்க முடியும்ன்னு தோனல கஷ்டமா இருக்கு பாவா…”

மறுபடியும் அழுகையில் கரைந்தவளை பார்த்தவன்,அவளின் கண்ணீரை துடைத்து விட்டு,அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன்,ஒன்னும் இல்லைடா சரி ஆகிரும் என்று அவனும் அவளை இறுக அணைத்துகொண்டான்…அவனிற்குமே மிகவும் வருத்தமாக தான் இருந்தது ஆனாலும் அவளிடம் அவன் காட்டி கொள்ளவில்லை..

இதுவரை அவள் மனதில் யாரும் இப்படி ஒரு சலனத்தை ஏற்படுத்தியது இல்லை அதனால் இந்த சிறு பிரிவு கூட அவளிற்கு வேதனையாக இருந்தது..

சரி அஞ்சு டைம் ஆச்சுடா நீ கிளம்பு உனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தா கால் பண்ணு, நீ கூப்பிட்டதும் ஓடி வந்துருவேன் சரியா என்றதும் சமதானம் அடைந்தாள் ..கடைசி வருஷத்துல இருக்க இன்னும் கொஞ்ச நாள் நண்பர்களோடு இருக்க முடியும் அதனால அவங்களோட நல்ல டைம் ஸ்பென்ட் பண்ணு,ஜாலியாக இரு, எல்லா தேர்வுகளையும் நல்லா எழுது சரியா என்றதும் அவள் தலையை மட்டும் ஆட்டினாள்..

அவள் இறங்குவதற்கு முன்பு அவனின் இதழில் இதழ் பதித்து விட்டு தான் சென்றாள்..அவனுக்கும் அது தேவைபட்டது.. அவளை இறக்கிவிட்டுட்டு அவள் உள்ளே செல்லும் வரை பார்த்தவன்,காரை எடுத்துகொண்டு அளுவலகத்திற்கு கிளம்பி விட்டான்..அவள் சென்றதும் இவனுக்கு மனதில் அவ்வளவு வெறுமையாக இருந்தது…

“அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது அவள் கல்லூரி முடித்ததும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று தீவிரமாக முடிவு எடுத்து கொண்டான்..அதன் பிறகு அவளை பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு அலுவலக வேலைகள் அவனை இழுத்துகொண்டது..

இவள் ரூமிற்கு சென்றதும்,தேர்விற்கு தேவையானதை எடுத்துகொண்டு மூவரும் எக்ஸாம் ஹாலிற்கு சென்றனர்..

எக்ஸாம் எழுதி முடித்துவிட்டு மூவரும் HOSTEL வந்து படுத்து கொண்டனர்..அஞ்சு தூங்கி விட்டாள்,காலையில் கிளம்பி வந்தது அவளிற்கு அசதியாக இருந்ததும் உடனே உறங்கி விட்டாள்..அவர்களும் உறங்கி விட்டனர்…

மாலையில் இவள் தான் சீக்கிரம் எழுந்து அனைவரையும் எழுப்பி விட்டாள்..மூவரும் எழுந்து TEA குடித்துவிட்டு அங்கேயே அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்..

அம்பிகா தான் ஆரமித்தாள் ,என்ன அஞ்சு முகம்லாம் ரொம்ப சோகமாக இருக்கு என்றதும் அஞ்சுவிற்கு மனது ஒரு கலவரம் கிளம்பியது,ஒருவேளை கண்டுபிடித்து விட்டார்களோ,

….அது வந்துடி என்றவள் ஏதோ சொல்ல வந்தவள் வேண்டாம் என்று நிறுத்தி கொண்டாள்..

சொல்லுங்க madam என்று சூரியாவும் அவளை பிடித்துகொண்டாள்..

அஞ்சுவின் நிலைமையோ “ஐயோ” என்று தான் இருந்தது…

ஊருக்கு போய்ட்டு வந்ததால் ஒருமாறி  இருக்குடி..

“என்னமோ சொல்ற சரி பொழச்சி போ” என்றதும் தான் அவளிற்கு உயிரே வந்தது போல் இருந்தது…இருந்தாலும் அவர்களிடம் மறைப்பதற்கும் கஷ்டமாக தான் இருந்தது…

அப்போது தான் அம்பிகாவிற்க்கு நியாபகம் வந்தது,அஞ்சு நம்ம ப்ராஜெக்ட் பண்ண வேண்டி இருக்குடி..எந்த கம்பனிக்கு போலாம்ன்னு எதாவது ஐடியா இருக்காடி??

அப்போது அஞ்சுவிற்கு நியாபகம் வந்தது பேசாமல் பாவா companyக்கு சென்றாள் என்ன என்று தோன்றியதும் அவர்களிடம் அதை கூறினாள்..

எங்க அப்பா சொன்னாருடி சென்னைல இருக்க PGS company நமக்கு நல்ல RESPONSE பண்ணுவாங்கன்னு சொன்னாங்கடி..

சரிடி அஞ்சுவே சொல்லிட்டா  அப்போ நாளைக்கு அந்த company போலாம்டி…

இரவு வழக்கம் போல் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு அவனிற்கு MESSAGE அனுப்பி இருந்தாள்…நாளைக்கு உங்க companyக்கு தான் ப்ராஜெக்ட் வேலையாக வரோம் என்று அவனிற்கு இன்போர்ம் செய்தாள்…

அவன் வீட்டிற்கு வரும் நேரம் அவனின் தாத்தா,அஞ்சுவிற்கு போன் பண்ணியா என்றதும் தான் அவனிற்கு அவள் நியாபகமே வந்தது..

இல்லை தாத்தா…அவன் அப்படி கூறியது அவர் முகத்தில் தெரிந்த வேதனையில் இவனுக்கும் தன்னை நினைத்து வேதனையாக இருந்தது…

இங்க பரு பிரகாஷ் வேலை முக்கியம் தான்..ஆனால அது மட்டும் வாழ்க்கை இல்லை சரியா..நம்மள சுத்தி இருக்கறவங்களும் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும் சரியா..

சரி தாத்தா…அவளுக்கு முதலில் போன் செய்து பேசிட்டு அப்பறம் உன்னோட வேலைய பாரு சரியா..

ரூமிற்கு சென்றதும் அவளுக்கு தான் முதலில் அழைத்தான் அவள் எடுக்கவில்லை …

அந்த ரூமிற்கு சென்றதுமே அவனுக்கு என்னவோ போல் இருந்தது நேற்று இந்நேரம் என்னோடு இருந்தாள்…

அவள் இல்லாமல் இந்த ரூமில் நான் எப்படி இனி இருப்பேன் மறுபடியும் அவனிற்கு ஒரு வெறுமை மனதை தாக்கியது…அதை எல்லாம் மீறி அவன் மனதில் அவளை நினைத்து ஒரு வெட்க்க புன்னகையும் வந்தது..

“சரியான ரௌடி”

அவன் போன் செய்யும் நேரம் அவன் உறங்கி விட்டாள் ..சரி என்று போனை செக் செய்து பார்த்தான் அவள் தான் அவனிற்கு msg செய்து இருந்தாள்..அந்த மெசேஜ் எடுத்து பார்த்தவனுக்கு மனது அவ்வளவு நிம்மதியாக இருந்தது..நாளை அவளை பார்க்கலாம் என்று சிறு நிம்மதி வந்தது…படுத்ததும் உறங்கியும் விட்டான்..

காலையில் எழுந்தவளுக்கு ஒரே உற்சாகமாக இருந்தது,அவனை பார்க்க போகிறேன் என்று நிம்மதியாக இருந்தது…அவள் அனுப்பிய குறுஞ்செய்திக்கு அவன் சரி என்று பதில் அனுப்பி இருந்தான்..

வழக்கமான காதலர்கள் போல் இல்லாமல் சற்று புரிதலோடு இருவரும் இருந்தனர்..சிறு பெண்ணின் மனதில் சலனங்கள் ஏற்படுத்த வேண்டாம் என்று அவன் சற்று நிதானமாக இருந்தான்..

இவள் கிளம்பிவிட்டு அவர்களையும் அவசரமாக கிளம்பி விட்டாள்….

இந்த அஞ்சுக்கு என்னடி ஆச்சு,ஏதோ அவளோட ஆள பார்க்க போற மாறி இந்த சீன் போடுறா..

இதை அப்படியே சூரியா  அவளிடம் கேட்டும் விட்டாள்..

அவள் அப்படி கேட்டதும் அவளுக்கு மறுபடியும் மனதில் அவர்களிடம் மறைப்பது தவறோ என்று தான் தோன்றியது..

பிச்சிருவேன் பிச்சி என்று பொய்யாக மிரட்டிவைத்தாள்..

ஒரு வழியாக அனைவரும் கிளம்பி அவன் company இருக்கும் இடத்திற்கு சென்றனர்..

PGS CONSTRUCTION COMPANY…அவள் நினைத்தை விட மிகபெரிய COMPANY ஆக இருந்தது..

அம்பிகா உடனே WOW வாட் A company..அதும் இந்த கம்பெனியோட  INFRASTRUCTURE பாரேன் செம்மையா  இருக்குடி..இத பிளான் பண்ணி கட்டினவன் கண்டிப்பா கலா ரசிகனா தான் இருப்பான்..

அஞ்சு இந்த கம்பனி OWNER கரெக்ட் பண்ணிருடி அஞ்சு..இந்த கம்பனிலையே மூணு பேரும் வேலை பார்க்கலாம்டி..

ஆமாடி அஞ்சு என்று சூரியவும் கலாய்த்தாள்..

 அஞ்சுவிர்க்கோ ஒருவேளை தெரிஞ்சி தான் கலாய்க்கிராளோ என்று தான் தோன்றியது..

எது எப்படியோ வந்த வேலைய பாப்போம் வாங்கடி என்று அஞ்சு வரவேற்பறைக்கு சென்று அவனிடம் வாங்கிய APPOINTMENT   காட்டினாள்..

சரிங்க madam..சார் போயிட்டு பாருங்க என்றதும்,அவளுக்கு சிறு பதட்டமும் வந்து ஒட்டிகொண்டது ..

டோரை திறந்து மே i கம் இன் சார் என்றவளை,

போன் பேசிக்கொண்டே உள்ளே வாங்க என்று சைகை செய்து  உட்கார வைத்தவன்..ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டு போன் பேசி பிசினஸ் முடித்தவன்..

ஒற்றை புருவத்தை தூக்கி சொல்லுங்க என்று மூன்று பேரையும்  பார்த்தான்..அஞ்சுவையும் அவன் யாரோ போல் தான் பார்த்தான்..அலவலகத்தில் அவன் எப்போதுமே பக்கா பிசினஸ் MAN இதை யாருக்காவும் மாற்றி கொண்டது இல்லை..

ஒரு பக்கம் அவனை அப்படி பார்த்ததில் அவளுக்குமே நிம்மதியாக தான் இருந்தது..தன்னவனை கொஞ்சி பார்த்து இருக்கிறாள் ஆனால்  இந்த அளவுக்கு கடுமையான முகத்தோடு பார்த்தது இல்லை…  அவன் அப்படி செய்தது அவளுக்கு மிகவும் வேதனையாக தான் இருந்தது சிறு பயத்தையும் கொடுத்தது ….

அவனை பொறுத்த வரை பிசினஸ் வேறு அங்கு கராறாக தான் இருக்க வேண்டும்..PERSONAL லைப்ல ஜாலியாக இருக்க வேண்டும்..அது அந்த அந்த  இடத்தை பொருத்தது..அதனால் தான் அவளை தெரிந்தும் தெரியாததை போல் காட்டி கொண்டான்..

அதுவே அவர்களிடம் பெரிய பிரச்சனையை கொண்டு வர போகிறது என்று அவனிற்கு தெரியுமா என்ன…..