அத்தியாயம்:16

அவளையே பார்த்து கொண்டு இருந்தவனும் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை ..சற்று நேரம் உறங்கியவன் மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது கண்ணை விழித்து பார்த்தான்..

தன்னவள் தான் இன்னும் சிறிது கூட அசையாமல் அவன் மேல் படுத்திருந்தாள்..

அவளை ஒருவாராக BEDல் படுக்கவைத்து அவள் அருகில் அவனும் படுத்து கொண்டான்..அப்போதும் அவன் சட்டையை பிடித்துக்கொண்டே உறங்கும் அவளை பார்த்தவன்,அவளின் இதழில் இதழ் பதித்தான்..

அவள் சிறிது அசைவது போல் தோன்றியதும்,எழுந்து விட்டாளோ? என்று பார்த்தான்…அவள் மறுபடியும் அவனின் அருகில் சென்று அவனை நன்றாக கட்டிக்கொண்டு, அவன் மேலே காலையும் போட்டுகொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்..

அவளை பார்க்கும்போது ஏதோ குழந்தை தூங்குவது போல் தான் தோன்றியது அவனுக்கு ஒரே சிரிப்பாக வந்தது…இவனுக்கும் அவளின் அருகாமை வெகுவாக தேவைபட்டது..அதும் அவளின் மேல் இருந்து வரும் ஒரு நறுமணம் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது…”இதற்க்கு மேல் இவளை விட்டு என்னால் இருக்கவே முடியாது என்று தான் தோன்றியது”…

அஞ்சு!!எழுந்திரிடி டைம் ஆச்சு..ஹோச்டேல் போகலையா என்றான்..

ம்ம்ஹும் வேண்டாம் பாவா இப்படியே இருந்துக்கலாம் ..

இந்த ஒரு செமஸ்டர் தான்டா கெளம்பு அப்பறம், ஏன்கூடவே இரு என்று அவளிடம் கெஞ்சினான்..

“அவளோ அவனை இன்னும் இறுக அனைத்து,போக  மாட்டேன் பாவா” என்று கொஞ்சிக்கொண்டு இருந்தாள்…

அப்போ சரி என்றவன்,காலையில் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிரலாம்..அப்பறம் என்னோட பொண்டாட்டியா ஏன் கூடவே இரு சரியா என்றான்..

பாவா ஓகே தான்…ஆனா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றாள்..

ஆனா இன்னைக்கு மட்டும் உங்க கூடவே இருக்கட்டுமா!…night அங்க HOSTEL போனாலும்  என்னால தூங்க முடியாது…உங்க நியாபகமாக இருக்கும்..இப்போ உங்கள விட்டு என்னால போக முடியும்ன்னு தோணல..

நாளைக்கு தான செமஸ்டர் EXAM இங்க இருந்தே போய்க்கிரனே PLEASE பாவா..

இன்னைக்கு night அப்போ பாட்டி கூட படுத்துகிரியா என்று கேட்டான்…அதற்க்கு அவள் எனக்கு ஓகே தான் சார்..நீங்க நான் இல்லாம தூங்கிருவிங்களா என்ன??

ஒரு மார்கமா தாண்டி பேசற…

சரி போயிட்டு பிரெஷ் ஆகிட்டு வா …TEA குடிச்சிட்டு வந்து படிக்கணும் சரியா என்றவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு,அவளுக்கு தேவையான உடைகள் இருக்கும் ஒரு CUPBOARD யை காட்டினான்..

அதை பார்த்தவளுக்கு ஒரே ஆச்சர்யம்!!எப்படி பாவா!!

நீ கண்டிப்பா எனக்கு ஓகே சொல்லுவன்னு அன்னைக்கே தெரியும்..நேத்து night தான் தோணிச்சி,நாளைக்கு உன்னை இங்க வர சொல்லாம்ன்னு அதன் நேத்து night இதையெல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்..எல்லாம் ஓகே தான என்றான் ..

உனக்கு இப்போ என்ன தோணுதோ அத போட்டுக்கோ…பிரெஷ் ஆகிட்டு கீழ வா நான் கீழ போறேன் என்று சென்றவனை கையை பிடித்து இழுத்து,அவனை கட்டிபிடித்து THANKS பாவா என்றாள்..

“உனக்காக என்னவேனாலும் பண்ணுவேன் அஞ்சு..நீ என்னோட தேவதை அஞ்சு”..அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்..

அவன் கீழே சென்றான்..அவனின் பாட்டியும் தாத்தாவும் TEA குடித்து கொண்டு இருந்தனர்..இவனை பார்த்ததும் வாடா கண்ணா !!

அஞ்சு எங்க??

குளிச்சிட்டு வருவா பாட்டி…நாளைக்கு தான் போவேன்னு ஒரே அடம்பிடிக்கிறா…அதான் குளிச்சிட்டு வந்து TEA குடிச்சிட்டு போயிட்டு படிக்க சொல்லிருக்கேன் …

அதற்க்கு அவனின் தாத்தா அவ சொன்னாளா இல்லை? நீ சொல்றியா? என்று அவனை கலாய்த்து கொண்டு இருந்தார்..

PRAKASH ஏன் பேத்திய எங்க இருந்துடா பிடிச்ச..நல்ல கலகலப்பான பொண்ணு டா..நல்ல பாசமாகவும், மரியாதை தெரிஞ்ச பெண்ணாகவும் இருக்கா என்று பாட்டி பெருமையாக கூறினார்..

“உடனே அவனின் தாத்தா என்னோட பொண்டாட்டி அளவுக்குலாம் ஒன்னும் இல்லை என்று முறுக்கி கொண்டார்”..

உடனே அவனின் பாட்டிக்கு ஒரே வெட்க்க சாயல்..இருந்தாலும் என்னோட பேத்தி” பேரழகி தான்” என்று சொல்லும்போதே அஞ்சு,இறங்கி வந்தாள் ..

வந்தவளையே பார்த்து கொண்டு இருந்தான்..ஊதா நிற புடவை கட்டி இருந்தாள்..வழக்கம் போல் தலை முடியை பின்னி போட்டிருந்தாள்..அந்த மூக்குத்தி அவளுக்கு அவ்வளவு அழகா இருந்தது ..இந்த காலத்தில் எப்படி எல்லாம் உடை அணிகிறார்கள், ஆனால்க இவள் ஒருத்தியே இன்னும் புடவை அணிந்து கொண்டு இருகிறாள்..

வா அஞ்சு,என்னடா ஒரே tiredஆக இருக்க மாறி இருக்கு.. என்ன ஆச்சு!!

AFTERNOON TRAVEL பண்ணதால தான் இருக்கும் பாட்டி…அவளுக்கு அவன் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தான்..அதை குடித்து விட்டு சற்று நேரம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள்..

அஞ்சு உனக்கு புடவை ரொம்ப பிடிக்குமா என்றார் பாட்டி??ஆமா பாட்டி அது ஏன்ன்னு தெரில ஆனா ரொம்ப பிடிக்கும்..

என்னோட பொண்ணுகூட உன்ன மாறி தான் அஞ்சு..எப்பவுமே புடவை தான் கட்ட பிடிக்கும்ன்னு ஒருநாளைக்கு அத்தனை புடவை கட்டுவா என்றவருக்கும் கண் கலங்கியது, அவளுக்கும் சோகமாகவும் இருந்தது..பிரகாஷ்க்கும் கண் கலங்கியது..

அஞ்சு அப்பறம் வந்து பேசிக்கலாம்..நீ போயிட்டு படி என்று அவளை அனுப்பி  வைத்தான்..

அவனின் தாத்தாவும் ஆமாடா நீ போயி படி என்றார்..

அவனை முறைத்துகொண்டே ரூமிற்கு சென்றாள்..night 9 OCLOCK வரை படிக்கணும் சரியா..உன்னோட FRIENDS கிட்ட இன்போர்ம் பண்ணிரு…

அப்போது தான் அவளுக்கும் நியாபகம் வந்தது..போனை எடுத்து பார்த்தாள் அத்தனை போன் வந்து இருந்தது…

அவர்களிடம், தான் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் ஒரு FUNCTION இருந்துச்சு காலையிலே கிளம்பிவிட்டேன்..நாளைக்கு காலையிலே வந்துருவேன் என்று அவர்களிடம் பொய் உரைத்தாள்…அதை சொல்லும்போது அவளுக்கும் மனது வேதனையாக இருந்தது..இதை எல்லாம் சொல்லுவதற்கும் இவளுக்கு தைரியம் இல்லை..

மூன்று மணி நேரம் படித்து கொண்டே இருந்தாள்..அவன் தான் அவளிற்கு போன் செய்து அழைத்தான்..

Madam சாப்பிட வாங்க என்றான்..

இதோ வரேன்…

அவள் வரும்போது அவனின் தாத்தா பாட்டி சாப்பிட்டு விட்டு ரூமிற்கு தூங்க போலாம்ன்னு  இருந்தனர்..

அவள் வந்ததும் அவளிடம் சொல்லிவிட்டு, அஞ்சு உனக்கு அங்க COMFORTABLE இல்லைன்னா,எங்க ரூமுக்கு வாடா..இவன் எதாவது தொந்தரவு பண்ணினா ஓடி வந்துரு சரியா என்றார்..

அதெல்லாம் நான் பார்த்துகிறேன் பாட்டி நீங்க தூங்க போங்க..டேய் பிரகாஷ்,என்னோட பேத்திய பத்ரமா பார்த்துக்கோ..

அஞ்சு சாப்பிடு என்று தட்டில் தோசை வைத்தான் அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறினான்..

எல்லாம் படிச்சிட்டியா என்றான்..

எல்லாம் முடிஞ்சுது என்று சிரித்தாள்..

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் தோட்டத்திற்கு சென்று அமர்ந்து இருந்தனர்..

“பாவா” இது எல்லாம் ஏதோ கனவு போல் இருக்கிறது..நம்பவே முடில தெரியுமா..

அவன் அப்படியா என்பது போல் பார்த்தான்..

உங்களுக்கு சந்தோசமா இல்லையா என்று கேட்டாள்..

ரொம்ப சந்தோசமா இருக்கேன் அஞ்சு ஆனா, அதை  எப்படி வெளி காற்றதுன்ன்னு தெரில,

“அப்படி சந்தோசத்த வெளிய காட்டனும்ன்னா நீ இப்போ என்னோட பொண்டாட்டியா இருக்கணும்..”

அவள் அவனை காதலாக பார்த்தாள்..உன்கிட்ட இப்போதைக்கு ரோமன்சே மட்டும் தான் அதுக்கு மேல ஒரு STEPS கூட எடுத்து வைக்க மாட்டேன் அஞ்சு..நீ அந்த அளவுக்கு தூய்மை ஆனவள்..

என்னாலையும் சத்தியமா நம்பவே முடியவில்லை…எல்லாமே ஏதோ MAGIC மாறி தான் இருக்கு..என்னோட அம்மாகிட்ட தான் உன்னை திரும்ப என்னோட கண்ணுல காட்ட வைங்கமான்னு வேண்டினேன் அன்னைக்கு காலையில் வேண்டினேன் அன்னைக்கு மதியம் உன்னை பாத்துட்டேன்..

உன்னை பார்த்ததுல இருந்து இப்போ வரைக்கும் நான் எவ்வளவு நிறைவா இருக்கேன்னு உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரில அஞ்சு..

உன் மேல எனக்கு love அதிகம்…உன்னை ஏன்னோட பக்கத்துலையே என்னோட பொண்டாட்டியா வெச்சிக்கணும் உன்னை விட்டு எங்கயும் போக கூடாதுன்னு தோணிக்கிட்டே இருக்கு..

“நீ இல்லாம என்னாலையும் இருக்க முடியாது அஞ்சு.. என்னை விட்டுட்டு மட்டும் போய்டாத அஞ்சு என்னால அந்த வலிய தாங்கவே முடியாது …என்னோட அம்மா தான் உன்னை எங்கிட்ட குடுத்துருகாங்கன்னு ரொம்ப STRONG நம்பேறேன்”..

அவன் அழுவதை அவளால் பார்க்க முடியவில்லை…

பாவா இங்க பாருங்க உங்கள கண்டிப்பா விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்..அழாதிங்க PLEASE.. வாங்க ரூமுக்கு போலாம் என்று அவனை அழைத்துக்கொண்டு சென்றாள்..

உள்ளே அழைத்து சென்று அவனிற்கு தண்ணீர் கொடுத்தாள்..அவனின் அருகில் அமர்ந்தவள்,எதுக்கு இப்போ இவ்வளவு வருத்தபடுரிங்க நான் தான் உங்க பக்கத்துலையே இருக்கேன் என்று அவனை கட்டிகொண்டாள் …

கொஞ்சம் சமாதானமாக ஆனான்..சாரி அஞ்சு உன்னை வேற கஷ்டபடுதுறேன் போல..

அதெல்லாம் ஒன்னும் இல்லை..

பாவா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா ?என்றாள்..

அவன் நிஜமா தான் சொல்றியா!!

ம்ம் ஆமா..இப்பவே பண்ணிக்கலாம் என்றாள்..

எப்படி அஞ்சு முடியும்..

“உனக்கு விளையாட்டு தனம் அதிகம் வாயாடி என்றவன் சோகத்தை மறந்து சற்று அதிகமாக சிரித்தான்..”

அவன் சிரித்ததை முறைத்தவள்,அவன் கன்னத்தை பிடித்து கடித்து வைத்தாள்..

தான் போட்டிருக்க செயின் கழட்டி அவனிடம் கொடுத்து திரும்ப என்னோட கழுத்துல போடுங்க அவ்ளோதான் கல்யணம் முடிஞ்சுது..

அதற்க்கு சிரித்தவன்,அவளுக்காக வாங்கிய வைர மோதிரத்தை விரலில் போட்டுவிட்டு இப்போ நீ என்னோட தான் என்றான்..

மறுபடியும் அவன் கன்னத்தை கடித்தாள் ..

சரியான ராட்சசிடி…அவள் கடித்தும் அவன் அவளை தாபமாக பார்த்தான்…அதை எல்லாம் கவனிக்காமல் அவனை கடிப்பதயே நோக்கமாக கொண்டு இருந்தாள்..

“அஞ்சு”!!

அவன் அப்படி ஏக்கமாக கூப்பிட்டதும்,அவளுக்கே என்னமோ போல் இருந்தது..

சொல்லுங்க என்று குனிந்து கொண்டே கேட்டாள்..

ஏதுக்கு அஞ்சு night டைம்லகூட புடவை  கட்டிருக்க..

எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதும் இல்லாம உங்க கூட இருக்கும்போது இப்படி இருக்க ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறினாள்..

அப்படி கூறியது அவன் அவளை இழுத்து அவனின் மடியில் அமர வைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்..

அவள் உடலில் சிறு அதிர்ச்சியோடு,கூச்சமும் சேர்ந்து கொண்டது உடனே எழுந்து சென்று,ஜன்னலின் அருகில் சென்று குனிந்து கொண்டாள்..

அவளின் அருகில் வந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தான்..

அவளை தன் ஒற்றை விரலினால் முகத்தை நிமிர்த்தினான்..

அஞ்சு நீ எவ்வளவு அழகுன்னு உனக்கு தெரியுமா??

ம்ம்ஹும் என்றாள்..

அவனோ அவளை விடாமல் பார்த்துக்கொண்டே இருந்ததால் அவள் முகம் செவ்வனமாக சிவந்தது….

அவளும் பார்த்தால் அவனும் அவளை பார்த்து கொண்டே இருந்தான்,

“கண்ணிரண்டில் நூறு..

வெண்ணிலாக்கள் தோன்றும் ..

ஆனாலும் அனல் பாயும்..

நாடி எங்கும் ஏதோ

நாத வெள்ளம் ஓடும்..

ஆனாலும் என்ன தாகம்

மெய் சிலிர்க்கும் வண்ணம்

தீ வளர்த்ததென்ன!!

தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதென்ன

என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே…

பல மின்னல் எழும் நேரம்

எங்கெங்கோ எங்கெங்கோ

என் எண்ணம் போகும் தூரம்”..