அத்தியாயம்:15

அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு அப்படி ஒரு மனவேதனையாக இருந்தது “சாரி” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்..

அவள் விளையாட்டு போல  தான் அப்படி கேட்டுவிட்டாள்,இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்..சரி நம்ம குளித்துவிட்டு வந்து போன் செய்வோம் எடுத்தால் போலாம் இல்லையென்றால் விட்டுவிடுவோம்..

இவளுக்கு இங்கு இப்படி ஒரு மனநிலை என்றாள் அங்கு அவனோ கொதித்துகொண்டு இருந்தான்..

“இவளுக்கு ஏன் என்மீது நம்பிக்கையே வர மாட்டேங்குது என்ன செய்தால் தான் நம்புவாள்” என்று குழப்பத்தில் இருந்தான்..அவன் தாத்தா பாட்டியிடம் இன்று “நான் காதலிக்கும் பெண்ணை கூட்டி வருகிறேன் என்று வேறு கூறி இருந்தான்”..வயதானவர்களை போய் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்று தான் தோன்றியது..

அவள் குளித்துவிட்டு வந்து அவன் வாங்கி தந்த புடவையை தான் கட்டி இருந்தாள்..அந்த கிளி பச்சை நிற புடவை அவளுக்கு அவ்வளவு அழகா பொருந்தி இருந்தது,அதற்க்கு ஏற்றார் போல் பச்சை நிற வளையல் அணிந்திருந்தாள்,கழுத்தில் சிறு செயின் அவ்வளவு தான் ..நீண்ட தலை முடியை பின்னி அதில் மல்லிகை பூ வைத்திருந்தாள்..

அவனுக்கு அழைத்து பார்த்தால் அவன் எடுக்கவில்லை..சரி நம்மலே கிளம்புவோம் என்று கிளம்பினாள்,அன்றே அவன் இரு கார்டு கொடுத்து இருந்தான்…ஒன்று அவனோடய office அட்ரஸ் மற்றொன்று, அவனோடய வீட்டு அட்ரஸ் and போன் நம்பர் எல்லாமே அன்றே கொடுத்து இருந்தான்..இவன் வசிக்கும் இடம் சென்னையில் திருவாண்மையூரில் இருந்தது…

அங்கே சென்று விட்டாள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது…அவளே ஒரு வழியாக வீட்டை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து விட்டாள்…உள்ளே செல்ல சிறு தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது..

அங்கே தோட்டக்காரர் இருந்தார்,அவனின் தாத்தா பாட்டியின் பெயரை கேட்டாள்,அவர்களின் வீடு இது தான் தாயி உள்ளே வா என்று பாசமாக அழைத்து சென்றார்…

சரி அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தவன் ரூமை விட்டு வெளியே வந்தவன்,தாத்தா பாட்டி என்று அவர்களின் அருகில் வந்தவன்,

பாட்டிடி!!! என்று அழைத்தவன் அது! அது! வந்து ….

அப்போது உள்ளே தோட்டக்காரர் உள்ளே வந்ததை கவனித்தவர்கள் , அம்மா என்று அழைத்தார் அப்போது அவர் பின்னால் ஒரு பெண் நின்று இருப்பதை கவனித்தவர்,

    நீ கீதாஞ்சலி தான !!என்று கேட்டதும் தான் பிரகாஷ் நிமிர்ந்து பார்த்தான்..அவளே தான்,அவளை சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை …

Anjuu என்றான் அவள் பேசவே இல்லை.

தாத்தா பாட்டி எப்படி இருக்கீங்க,என்னை உங்களுக்கு எப்படி தெரியும் என்றாள்.. FORMALITIESகாக FRUITSஎல்லாமே வாங்கி வந்து இருந்தாள்..

அவளை பாட்டி நெட்டி முறித்தார்..ரொம்ப அழகா இருக்க கன்னு.. உன்னை எங்களுக்கு தெரியாத என்ன! என்று வெள்ளந்தியாக சிரித்தார்…அவர் சென்று கிட்செனில் இருந்து மல்லிகை பூவை எடுத்து வந்து அவள் வைத்திருந்த அந்த பூவை எடுத்து விட்டு இந்த பூவை அவளின் முடியின் நீளத்திர்க்கு வைத்து விட்டார்…

அப்போது தான் அவனின் தாத்தாவும் வந்தார்..மரியாதை நிமித்தமாக எழுந்து வணக்கம் கூறினாள்..

வாடா எப்படி இருக்க..”தனியாகவா வந்த என்று கேள்வியை அவளிடம் கேட்டு விட்டு தன் பேரனை முறைத்தார்”..

தாத்தா அவருக்கு எத்தனை வாட்டி கூப்பிட்டேன் என்று போனை காட்டினாள்.. அவர் தான் எடுக்கவே இல்லை அதான் நானே தேடி பிடிச்சி வந்துட்டேன் என்றாள்..

அவளை பாவமாக பார்த்தவர்,அவனை  முறைத்து கொண்டே என்ன பிரகாஷ் இதெல்லாம் என்றார் ..”என்ன தான் உங்களுக்குள்ள சண்டைன்னாளும் அவளை எந்த இடத்திலும் விட்டு குடுக்க கூடாது, அதும் இல்லாம ஏன் பேத்தியே  வீட்டை கண்டுபிடிச்சி வந்துருக்கா!அவ ஒரு  பொண்ணுயா..அவளுக்கு எதாவதுன்ன நம்ம தான் அவளுக்கு பொறுப்பு இதான் தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் ஓகே வா என்றார்ர்..

நடப்பதை  எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தான் பிரகாஷ் ஆனால் மிகவும் பிடித்து போய் பார்த்து கொண்டு இருந்தான்..

சாப்பிட்டியாஎன்று பாட்டி கேட்டார்..

இல்ல பாட்டி ஹோச்டேல் morning சாப்பிட்டது தான்..

இருடா நான் சமைக்கிறேன்  என்றார்..அதெல்லாம் வேண்டாம் பாட்டி நான் சமைக்கிறேன் என்றாள்..பயப்பட வேண்டாம் நல்ல தான் சமைப்பேன் என்று கூறியவள் KITCHEN க்கு சென்று ஒரு மணி நேரத்தில் சமைத்து முடித்தாள்..அனைத்தையும் table மேல் எடுத்து வைத்தாள்..சமைப்பதற்காக புடவை முந்தானையை  இடுப்பில் அழகா சொருகி இருந்தாள் அது அவளின் அழகை தூக்கி காட்டியது இது நம்ம hero மட்டுமே ரசித்து கொண்டு இருந்தார்..

“கை கழுவது போல் அவளின் அருகில் சென்றவன் அவளின் முந்தானயை இறக்கி விட்டான்” அப்போது தான் அவளிர்க்கே தெரிந்தது..

எல்லோருக்கும் அவளே பரிமாறினாள் அவனுக்கு பரிமாரும்போது போது தான்” சாரி கவனிக்கலை” என்றாள் ..

எனக்கு மட்டும் காட்டின போதும் என்று அழகாக  சிரித்தான் அதில் அவள் முகம் அவ்வளவு சிவந்து போனது அதையே ரசித்து கொண்டு இருந்தான்..

அவளின் கையை பிடித்து தாத்தா சாப்பிட உட்காருமா எல்லாரும் அவங்கவங்க சாப்பிட்டுபாங்க என்றார்..

அவனின் அருகில் உட்காந்து அவளும் சாப்பிட்டாள்..அஞ்சு சமையல் SUPERDA ..எப்படியோ உன்னோட புண்ணியத்துல உன்   பாட்டி சமையல்ல இருந்து இன்னைக்கு நாங்க தப்பிச்சிட்டோம் என்று சிரித்தார்..

பாட்டி அவரை முறைத்தார்..அவர்களை பார்க்க அவளுக்கு அவ்வளவு வேடிக்கையாக இருந்தது…

அஞ்சு உனக்கு எப்போ இருந்து சமைக்க தெரியும் என்று அவனின் பாட்டி கேட்டார்…வீட்டுல எல்லா வேலைக்கும் ஆளுங்க உண்டு பாட்டி ஆனா சமையல் மட்டும் நம்ம தான் சமைக்கனும்ன்னு அம்மா சொல்லுவாங்க அதனால எனக்கு கத்து குடுத்தாங்க நானும் கத்துகிட்டேன்…

பதில் சொல்லி கொண்டு இருக்கும்போதே,ஒரு கை அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டது அதை பார்த்த பெரியவர்கள் கண்டும் காணதது போல் குனிந்து கொண்டார்கள்..

சாப்பிட்டு முடித்தவர்கள் அவளிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு,பிரகாஷ் அவளை ரூமிற்கு கூட்டி போ..

தப்பா  அவகிட்ட நடந்துக்க கூடாது சரியா!!உன் பொண்டாட்டியாக வர அப்போ நாங்க எதும் சொல்ல மாட்டோம்.. ஆனா அவ நம்மள நம்பி தான் இவ்வளவு தூரம் வந்துருக்கா!!ஏன் பேத்திய பத்திரமாக  பாத்துக்கோ என்றனர்…சொல்லி விட்டு ஓய்வெடுக்க ரூமிற்கு சென்று விட்டனர்…

அவளை அழைத்துக்கொண்டு அவனோடு ரூமிற்கு அழைத்து சென்றான்..கதவை லாக் செய்யும்போது தான் அவள் அவனை சிறிது பயத்தோடு பார்த்தாள்..

என்ன என்று கேட்டு இரண்டு அடி பின்வாங்கினாள்..அவள் பின்னே செல்ல செல்ல இவனும் பின்வாங்கி ஒருவழியாக சுவர்  இடித்தது..அவனோ அவளுக்கு மிக அருகில் இருந்தான்..இவனின் சட்டையும் அவளின் புடவையும் மோதி கொண்டது ஆனாலும் அவன் அவளை தொடவில்லை…

என்ன பாத்து பயபடுற ஆனாலும் முகம் இவ்வளவு செவக்குது என்று அவளின் கன்னத்தை நோக்கி குனிந்தான் ஆனால் குடுக்கவில்லை…

அஞ்சு! என்று கூப்பிட்டவனின் மூச்சு காற்று அவளின் முகத்தில் மோதியது..லேசாக கண்ணை திறந்து பார்த்தாள்..அவன் அவளை சாப்பிடுவது போல் பார்த்தான் உடனே அதை மறைக்க  முகத்தை அவன் நெஞ்சில் சாய்த்துகொண்டாள்..

அஞ்சு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா?

வீட்டுல சொல்லாம எப்படி பண்றது என்றறாள்..

உங்க வீட்டுல சொன்னா சரின்னு சொல்லுவங்கன்னா சொல்லு நான் வந்து பேசறேன் என்றான்..

அவள் முகத்தில் சிறு கலக்கம் வந்தது..தெரியல என்று சிறு பிள்ளை போல் பதில் அளித்தாள்…சரி இதற்க்கு மேல் அதை பற்றி கேட்க வேண்டாம்ன்னு விட்டுவிட்டான்..

நீ என்னை love பண்றியா என்று கேட்ததற்கும் வெட்கத்தையே பதிலாக அளித்தாள்..

இங்க பாரு என்று அவளின் முகத்தை நிமிர்த்தினான்..அவளின் முகம் சிவந்து விட்டது..

அதை பார்த்தவன் “என்னை ஏண்டி இப்படி கொல்ற” என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்..

இதற்க்கு மேல் இவள் அருகில் இருந்தால் சரி வரது அவள் நம்பிக்கையை பொய்த்து போல் ஆகும் என்று அருகில் இருந்த சேரில் அமர வைத்தான்..

இந்த புடவை  உனக்கு ரொம்ப அழகா இருக்கு அஞ்சு!

அப்படியா! என்றாள் ..

தாலி மட்டும் தான் மிஸ்ஸிங் இப்போவே கட்டிரவ என்றான்..

அதற்க்கு அவள் ஆவேன அவனை பார்த்தாள்..

அவன் சற்று அதிகமா சிரித்தான்..அவன் சிரிப்பதையே  முறைத்து கொண்டு பார்த்தாள்..

உங்களை!!என்று அவனின் அருகில் சென்று கிடைத்த பில்லோவை கொண்டு அவனை அடித்தாள்..

இத பாரு அஞ்சு பேச்சு பேச்சாக தான் இருக்கணும் NO அடிதடி என்றான்..இதே இந்நேரத்துக்கு நீ என்னை கல்யாணம் பண்ணிருந்தா எனக்கும் பெருமையாக இருந்திருக்கும் ஏன் பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்கிறேன்ன்னு வெளியே சொல்லிருப்பேன் …

அவன் அப்படி கூறியதும் இது ஒரு பெருமையா என்று வயிற்றை பிடித்துகொண்டு சிரித்தாள்..

சிரிக்கும் அவளையே பார்த்தான்..அவளை அப்படியே தன் பக்கம் இழுத்தான்…அவள் இதை எதிர்பாராமல் அவன் மேலேயே சரிந்தாள்..

என்ன!!என்று இந்த முறை அவன் தான்  கேட்டான்..இப்போ சிரி பார்க்கலாம் என்றான்..அவனை அப்படியே கட்டிகொண்டாள்..

நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்..நான் எடுக்குற முடிவு சரி தானா என்று அவனை கூர்ந்து கவனித்தாள்..”என்மேல நம்பிக்கை இல்லாம தான் ஏன்மேல இப்படி படுத்திருக்கியா என்றான்”..

அதற்க்கு ஏதும் பதில் சொல்லாமல் அவன் மேலேயே அவனை இன்னும் இருக்க கட்டிகொண்டாள்..அவனும் அவளை இருக்க கட்டிகொண்டான்…

“என்னடா”என்று அவள் தலையை கோதிக்கொண்டே கேட்டான்..

வாங்க போங்கன்னு பேச புடிக்கல உங்கள எப்படி கூப்டனும் என்று ஒரு அரியவகை கேள்வியை கேட்டாள்..

அந்த கேள்விக்கு அவன் சிரிப்பை தான் பதிலாக கொடுத்தான்..அதற்க்கு அவள் அவன் கன்னத்தை கடித்தாள்..

சரியான ராட்சசி டி என்றான்

தெரிஞ்சா சரி தான் கெத்தாக கூறினாள்..

ஆனா அழகான ஏன் செல்ல ராட்சசி என்றான்..

பாவான்னு கூப்டுவாங்க அஞ்சு..

அப்போ நீங்கலம் தெலுங்கு குடும்பமா?எனக்கு தெலுங்கு ரொம்ப பிடிக்கும்..

அப்போ ஓகே, அவன் முகத்தை பார்த்து பாவா என்று அழைத்தாள்..

பாவா என்றவள்,நான் ஏன் வாழ்க்கைல எந்த ஒரு முடிவுமே நானாக எடுத்தது இல்லை, எல்லாமே அப்பா,அம்மா சொல்லி தான் எடுத்துருக்கேன் …நானாக எடுத்த ஒரே முடிவு  நீங்க மட்டும் தான்..இதுவரைக்குமே யார்கிட்டையும்  loveலாம் சொன்னதில்லை ஆனா, கொஞ்ச பேர் loveலாம் சொல்லிருகாங்க..ஆனா  உங்ககிட்ட இருக்க இந்த FEELINGSலாம் யார்கிட்டயும் வந்ததில்லை..

“என்னை விட்டுட்டு இல்லை ஏமத்திட்டுலாம் போய்ட மாட்டிங்கள்ள” என்று அழுதுவிட்டாள்..அவளின் கண்ணீர் அவனின் சட்டையை தாண்டி அவனின் நெஞ்சை நனைத்தது..

ஹே அஞ்சு! அழாத ஏன் உயிரே போனாலும் சரி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன் சரியா என்று அவளை இன்னும் இறுக அனைத்து கொண்டான்…

பாவா உங்ககிட்ட இன்னும் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..

என்னது அஞ்சு!!

I love youபாவா..

Love you TO Bangaram..என்று அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான்..

நீங்க கோவில்ல love சொன்னதுல இருந்து இன்னும் என்னால சரியாக தூங்க முடில..

அதனால அஞ்சு..

அதனால என்று கூறியவள் அவன் மேலே தூங்கி விட்டாள்…அவனுக்கு வானத்தையே  வசப்படுத்தியது போன்று ஒரு உணர்வு வந்தது..தன் மேல் குழந்தை போல் உறங்கும் அவளை பார்த்தவனுக்கு,என்ன ஆனாலும் சரி உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன் Bangaram..யார்கிட்டயும் விட்டு கொடுக்கவும் மாட்டேன் அஞ்சு..

“காமத்தை அதிகம் பார்த்தவன்,அதிகம் அதில் வாழ்ந்தவனும் கூட ஆனால், இவளிடம் மட்டும் எல்லை மீரக் கூடாது” என்று முடிவு செய்தான் .. இவளை பூவை போல் பார்த்து கொள்ள வேண்டும்..