Advertisement

அத்தியாயம் 5
கண்களில் கண்ணீர் மட்டும் அல்ல,
இதயத்தின் வலி கூட
உன் நினைவை தட்டி
எழுப்பிக்கிறது என்னவளே!!!
 
சந்தோசத்துடன் அவனை பார்த்த நேவா, அவன் முகம் திருப்பவும் அதிர்ச்சியானாள். “ஒரு வேளை, அவன் என்னை தப்பா நினைக்கிறானோ? வெறுக்குறானோ?”, என்று மனதுக்குள் நினைத்து குழம்பி போனாள்.
 
அந்த பூஜை முடிந்த பிறகும், அவன் அவளுடன் பேச வில்லை. இத்தனை நாள், விலகி இருந்த நேவா, இப்போது அவன் விலகலை தாங்க முடியாமல் தவித்தாள்.
 
“இன்னைக்கு, எப்படியும் பேசியே ஆகணும்”, என்று நினைத்து கொண்டு காலை உணவை, அவன் குடிலுக்கு எடுத்துச் சென்றாள்.
“இந்தாங்க சாப்பாடு”, என்று அவன் முகம் பார்த்து சொன்னாள் நேவா.
 
“அங்க வச்சிட்டு போ”, என்று சொல்லி விட்டு முகம் திருப்பி கொண்டான் முகில்.
 
போகாமல் கண்ணீருடன், அவன் முன்பு போய் நின்றவள், “என்னை நீங்க தப்பா நினைக்கிறீங்களா? நான் வேணும்னு அன்னைக்கு, அப்படி செய்யலை. என்னை கல்யாணம் பண்ணுறது, உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க. நான் எங்கயாவது விழுந்து சாகுறேன். ஆனா, இப்படி என்ன நினைக்கீங்கன்னு தெரியாம, நீங்க பேசாம இருக்கிறதை, என்னால தாங்க முடியலை”, என்று அழுது கொண்டே சொன்னாள் நேவா.
 
அவள் அழுகையில், கரைந்த முகில், அவள் கையை பிடித்து கொண்டு, “எனக்கு உன் மேல கோபம் தான் நேவா. ஆனால், உன்னை போய் நான் எப்படி தப்பா நினைப்பேன் சொல்லு?”, என்றான்.
 
“கோபமா? அன்னைக்கு, எனக்கு நிஜமாவே வேற வழி தெரியலை. அப்படியே விட்டா, உங்களுக்கு ஜன்னி வந்துருக்கும். அதனால தான், வேற வழியே இல்லாமல்….”
 
“என்னோட கோபம் அது இல்லை. இவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கு. ஆனா, உனக்கு இதை என்கிட்டே சொல்லணும்னு தோணலைல்ல? மனசுக்குள்ளே  நினைச்சு, அழுதுட்டு இருந்திருக்க. நான் தான் உன்னை விரும்புறேன்னு தெரியும்ல? அப்புறம், எப்படி நான் உன்னை தப்பா நினைச்சிருவனோன்னு நீ நினைக்கலாம்? அப்ப, நீ என்னை நம்பலை தான?”, என்று சொன்னவனின் வாயை பொத்தியவள், “எனக்கு நிஜமாவே, என்ன செய்யனு தெரியலை. அதனால் தான், அப்படி அழுதுட்டு இருந்தேன். உங்க மேல நம்பிக்கை இருக்கு. ஆனால், உங்களுக்கு என்ன நடந்ததுன்னு, தெரியாதப்ப எனக்கு என்ன செய்யனு தெரியலை”, என்றாள் நேவா.
 
“விடு நேவா, இப்ப தான் எல்லாமே சரியா போயிட்டே. நான் தருவி வந்து சொல்றதுக்கு முன்னாடியே, சரகா ஐயா கிட்ட பேசணும்னு தான், நினைச்சிட்டு இருந்தேன்!”, என்று சிரித்தான் முகில்.
 
“அப்ப, என் மேல உங்களுக்கு கோபம் போய்ட்டா?”
 
“கோபம் போகலை!”
 
“ஐயோ, ஏன்?”
 
“நான் மயக்கத்துல இருக்கும் போது, நடந்த விஷயம் நினைவு இருக்கும் போது நடந்துருக்கலாம்”, என்று சிரித்து கொண்டே சொன்னான் முகில்.
 
“ச்சி!”, என்றவள், அவன் கையை விட்டுவிட்டு ஓட பார்த்தாள். அவள் கையை பிடித்து, தன்னை நோக்கி இழுத்தான் முகில்.
 
அவன் முகத்தை, பார்க்க முடியாமல் அவன் நெஞ்சிலே, முகத்தை புதைத்தாள் நேவா.
 
அவளை இறுக்கி கொண்ட முகில், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். இயல்பாக, அவன் முதுகில், தன் கைகளை படர விட்டாள் நேவா.
 
அவளின் நெருக்கத்தை உணர்ந்தவன், இன்னும் இன்னும் அவளுடன் புதைந்தான்.
 
அவனுடைய தொடுகையில், கரைந்து கொண்டிருக்கும் போது, அவள் காதில் “அன்னைக்கு, எதுக்கு அப்படி நடந்து கிட்ட நேவா?”, என்று முணுமுணுத்தான் முகில்.
 
அவன் கேள்வியில் இயல்புக்கு திரும்பியவள், “அதான் சொன்னேனே, உங்களை காப்பாத்த தான் …”
 
“அதை சொல்லல நேவா. அந்த விசயத்தை, நான் சாகும் வரைக்கும் மறக்க மாட்டேன். என்ன தான் காதலிச்சிருந்தாலும், என்னோட உயிரை காப்பாற்ற,  என் மேல முழு நம்பிக்கை வச்சு, உன்னையே இழந்துருக்க. நான் இப்ப கேட்டது, அதை இல்லை. அன்னைக்கு, மரத்துல சாச்சு முத்தம் குடுத்தப்ப, என்னை நீயும் இறுக்கி கிட்ட. இப்பவும் அப்படி தான். முன்னாடி எல்லாம், நீ இந்த அளவு நெருக்கம் காட்ட மாட்ட. இப்ப மட்டும் ஏன் அப்படி?”
 
“அது.. அது”, என்று தடுமாறியவள் “எனக்கு சொல்ல தெரியலை. ஆனால், உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு. உங்களை, இப்படி தொட்டுட்டே இருக்கணும். உங்க தோளில் சாஞ்சிக்கணும். உங்க மடியில் படுக்கணும். அப்படின்னே தோணுது. வெக்கத்தை விட்டு சொல்லனும்னா, மனசும் உடம்பும் உங்களை தேடுது”, என்று சொல்லி அவன் நெஞ்சிலே, மறுபடியும் முகத்தை மறைத்து கொண்டாள்.
 
அவளை, அவன் நெஞ்சில் இருந்து பிரித்து எடுத்தவன், அவள் முகம் முழுவதும் முத்தங்களை பதித்தான்.
 
“எனக்கும் நீ வேணும் நேவா. ஒரு ஜென்மம் மட்டும் இல்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எனக்கு நீ துணையா வரணும்.  என்னை விட்டு, உன்னை போகவே விட மாட்டேன் நேவா. ஆனா, இந்த தடவை சுய நினைவோட, என்னோட பொண்டாட்டி அப்படிங்குற உரிமையோட, முழுசா உன்னை எடுத்துக்கணும்.  அதுக்கு, இன்னும் ஒரு மாசம் இருக்கு”, என்றவன், “அதுவரைக்கும், இது மட்டும் தொடரும்”, என்று சொல்லி கொண்டே அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
 
சிறிது நேரம் கழித்து விலகிய முகில் “அன்னைக்கு, அப்படி நடந்ததுக்கு, என்னைக்கும் நீ வருத்த பட கூடாது” என்று சொல்லி கொண்டே, அவள் கையை பிடித்தவன், அவள் கையில் இருந்த மோதிரத்தை காட்டி, “இந்த மோதிரம் நினைவு இருக்கா? உன்னை விரும்புறேன்னு சொன்ன அன்னைக்கு, உன் கையில் போட்டேன். அன்னைக்கே, உன்னை என்னோட பொண்டாட்டியா நினைச்சி தான், போட்டேன். நான் உன்னோட புருஷன் நேவா. இனி ஒரு தடவை, அன்னைக்கு நடந்ததை தப்புனு சொன்னா, மறுபடியும் அதே தண்டனையை நான் தரவேண்டி இருக்கும்”, என்று சொல்லி கண்ணடித்தான்.
 
அவனை பார்த்து சிரித்து கொண்டே, முறைத்தாள் நேவா. அவள் பார்வையில் மயங்கியவன், “அன்னைக்கு நல்ல ஒத்துழைச்சனா நேவா?”, என்று கேட்டு, அவளிடம் இருந்து நன்கு அடியை பெற்றான்.
 
அதன் பின் சந்தோசமாக சுற்றி திரிந்தார்கள் இருவரும்.  கல்யாண நாளும் வந்தது.
 
“நேவாவை, வீட்டுக்கு அழைத்து சென்று போய், அதுக்கு பிறகு தான் கல்யாணம் செய்யணும்”, என்று நினைத்திருந்த முகில், முழு காதலையும் அர்ப்பணித்த நேவாவுக்காக, அவர்கள் முறை படியே கல்யாணம் செய்ய ஒத்து கொண்டான்.
 
தருவியை அழைத்து, போட்டோ எடுக்க சொல்லி கொடுத்தான். அவள் தான், கல்யாண காட்சிகளை முழுவதும் பதிவு செய்தாள்.
 
அந்த இடமே, காட்டு பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது. வித விதமான தோரணங்களை தொங்க விட்டிருந்தனர்.
 
அவனிடம், உள்ள நல்ல உடையை அணிந்து வெளியே வந்தான் முகில். அவன் கண்கள் நேவாவை தேடியது. அவளை காணும் என்றதும், சிரித்து கொண்டே சரகா அருகில் சென்றான்.
 
அவனை பார்த்ததும், எதுவோ சொல்ல வந்தவர், “பின் வேண்டாம்”, என்று முடிவு செய்து விட்டு சிக்கனை அழைத்தார்.
 
“என்னங்க ஐயா?”, என்று அங்கு வந்தான் சிக்கன்.
 
“சிக்கா, இவங்க கல்யாணம் நம்ம முறைப்படி நடக்க போகுது. அதனால, மாப்பிளைக்கு உரிய உடையலங்காரம் செஞ்சு அழைச்சிட்டு வா”
 
“சரிங்க ஐயா!”, என்றவன், முகிலை உள்ளே அழைத்து சென்றான். அங்கே, அவனுக்கு ஆதி வாசிகளின் உடை அணிவிக்க பட்டது.  வித விதமான மாலைகள், அவன் கழுத்தில் போட பட்டன.
 
முகத்தில் சிரிப்போடு, மனதில் சந்தோசத்தோடு, அந்த தருணத்தை அனுபவித்தான் முகில். கடைசியாக இருவரும், வெளியே அழைத்து வர பட்டார்கள்.
 
அவளை, அந்த உடையில் பிரமித்து போய் பார்த்தான் முகில். ஆனால், “இதிலே இப்படி இருக்கா, நிஜமாவே நம்ம சைடு நடப்பது மாதிரி, அலங்காரம் செஞ்சா எப்படி இருப்பா?”, என்று நினைத்து பார்த்து இன்னும் வியந்தான் முகில்.
 
அவன் பார்வையில், எப்பவும் போல் தலை குனிந்து கொண்டாள் நேவா.
 
அடுத்து சரகா அவனுக்கு, கொம்புகள் வைத்த, தலை கிரீடத்தை அவனுக்கு சூட்டினார். எதுவோ காட்டு ராஜ போல் இருந்தான் முகில்.
 
கடைசியில், சரகா கையில் இருந்து வாங்கி, அந்த கருகு மணி மாலையை, அவளுக்கு அணிவித்தான்.
 
அடுத்து , ஆடலும்  பாடலும் என்று சந்தோசமாக கழிந்தது அந்த நாள்.
 
“வீட்டில், முதலில் சொல்லணும்”, என்று நினைத்த முகில், பின் “அவளை கூட்டி கொண்டே போவோம்”, என்று நினைத்து, அன்று மாலையே அங்கு எல்லாரிடம் விடை பெற்று கொண்டு, நேவாவை அழைத்து கொண்டு வந்து விட்டான்.
 
தருவியின் அழுகையை, சிக்கன் தான் ஆறுதல் என்ற பெயரில் காதலை வழங்கி நிறுத்தினான். முகம் முழுவதும் பூரிப்புடன், முகிலுடன்  வந்தாள் நேவா.
 
பாதி தூரம் வந்தவுடன்,  தன்னுடைய டிரைவரை, பஸ் ஸ்டாண்ட்க்கு  கார் எடுத்து வர சொன்னான் முகில்.
 
அப்போது தான், நேவா அவனிடம் கேட்டாள். “உங்க வீட்ல என்னை எல்லாருக்கும் பிடிக்குமா? நான் அவங்க மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன். நான் சீலை கட்டிருக்குறதே வேற மாதிரி தான். எனக்கு பயமா இருக்கு”, என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் நேவா.
 
“நீ, நீயா இரு நேவா. முதலில் எதாவது சொன்னா, எனக்காக பொறுத்துக்கோ. போக போக எல்லாம் சரியாகிரும்”, என்றவன் ராமை அழைத்து, ” எனக்கு கல்யாணம் முடிஞ்சிட்டு. போட்டோ அனுப்புறேன் டா. அதை ஆல்பம் போட கொடுத்துரு. மித்த போட்டோஸ் எல்லாம், அழகா வரிசை படி ரெடி பண்ணி, மெயில் பன்னிரு. இந்தா அவ கிட்ட நீயே பேசு “, என்று சொல்லி நேவாவை பேச சொன்னான்.
 
அடுத்து தான், அவன் வீட்டுக்கு வந்ததும், ஆக்சிடென்ட் நடந்ததும், அவள் வீட்டை விட்டு போனதும். எல்லாவற்றையும் தருவி சொன்னாள். மீதி கதையை ராம் யூகித்து சொன்னான்.
 
தருவி சொல்ல சொல்ல, அவன் மன கண்ணுக்குள்ளே அத்தனை காட்சிகளும் நினைவுக்கு வந்தது. மொத்த கதையையும் கேட்ட முகில், நிலை குலைந்து போனான்.
 
“என்னோட வாழ்க்கையை, என்னோட காதலை தொலைச்சிட்டேனா? இனி எங்க போய், என் நேவாவை தேடுவேன்?”
 
அன்று முழுவதும், தூக்கத்தை தொலைத்தவன், காலையிலே எல்லாரிடமும் சொல்லி விட்டு, ராமை அழைத்து கொண்டு, கிளம்பி விட்டான்.
 
ராமை, அவன் வீட்டில் விட்ட முகில் தன் வீட்டுக்கு சென்றான். காரில் இருந்து இறங்கி, ஹால் சோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்.
 
அவன் நினைவுகள் முழுவதும், நேவாவை சுற்றி தான் இருந்தது. “இப்ப எங்க இருப்பா? அடுத்து என்ன செய்யணும்? எனக்கு என் நேவா வேணும்?  நானே எப்படி கேவலமா பேசி நோகடிச்சிருக்கேன். அதுக்கு அவ காலை பிடிச்சு மன்னிப்பு கேக்கணும்”, என்று பலவாறாக நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
 
அப்போது தான், உள்ளே இருந்து வசந்தியும், மேகநாதனும் அவன் அருகே வந்து அமர்ந்தார்கள்.
 
“என்ன பா, லேண்ட் பிரச்சனை சரியாகிட்டா?”, என்று கேட்டார் மேகநாதன்.
 
“இப்ப தான் வந்தியா முகில்? நீ குளிச்சிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”, என்றாள் வசந்தி.
 
இருவரின் முகத்தை கூட, நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தே அமர்ந்திருந்தான் முகில்.
 
அவன் மௌனத்தில், இருவரும் பார்வையை பரிமாறிக்கொண்டார்கள்.
 
“என்ன பா, அமைதியா இருக்க?”, என்று கேட்டாள் வசந்தி.
 
“அங்க எதுவும் பிரச்சனையா முகில்? அதான், இப்படி மூடவுட்டா இருக்கியா?”, என்று கேட்டார் மேகநாதன்.
 
“ஹாய் அண்ணா, எப்ப வந்த?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்து அமர்ந்தாள் வானதி.
 
“என்ன ஆச்சு மா? அண்ணா பேசாமலே இருக்கான்?”
 
“தெரியலை வானதி, அமைதியாவே இருக்கான்”
 
அவன் கையை, மெதுவாக தொட்டார் மேகநாதன். அடுத்த நொடி, அவர் கையை தட்டி விட்டவன், எல்லாரையும் வெறுப்புடன் பார்த்தான்.
 
அவன் பார்வையில் திகைத்து போய் “என்ன ஆச்சு பா?”, என்றார் மேகநாதன்.
 
“நான் இந்த வீட்டில் தான் பொறந்தேனா? நீங்க தான் என்னோட அப்பா, அம்மாவான்னு சந்தேகமா இருக்கு. அதான், யோசிச்சிட்டு இருக்கேன்”, என்றான் முகில்.
 
“என்ன பா, என்ன என்னமோ பேசுற?”, என்று கேட்டாள் வசந்தி.
 
“என்னோட பொண்டாட்டியை விரட்டிடீங்கள்ல? என்னையே நம்பி, என் பின்னாடி வந்தவளை, தொலைச்சிட்டு எங்க தேடன்னு தெரியாம, நொந்து போய் உக்காந்துருக்கேன். தயவு செஞ்சு எல்லாரும் என்னை, தனியா விடுங்க”, என்று மறுபடியும் முகத்தை மூடி கொண்டு அமர்ந்தான்.
 
“ஐயையோ! உனக்கு அந்த சனியன் நினைவு வந்துட்டா?”, என்று கேட்டாள் வசந்தி.
 
“அம்மா”, என்று கத்தி கொண்டே எழுந்தான் முகில். அவன் அரட்டலில், அப்படியே வாயை மூடி கொண்டாள் வசந்தி.
 
“இப்படி பேசி தான, அவளை வீட்டை விட்டே போக வச்சீங்க? எனக்கு தான் எதுவுமே நினைவில் இல்லை. ஆனால், உங்களுக்கு இருந்தது தான? என்னோட பொண்டாட்டின்னு உங்களுக்கு தெரியும் தான? ஆனா, தெரிஞ்சே அவளை தப்பா பேசி அனுப்பிருக்கீங்க?”
 
“இல்லை பா முகில். நான் அந்த பொண்ணை தடுத்தேன்”, என்றார் மேகநாதன்.
 
“என்கிட்ட சொல்லிருக்கலாமே பா? இவ தான் உன் பொண்டாட்டின்னு. சொல்லிருந்தா, நான் நேசிச்ச அவளை இப்படி தொலைச்சிருப்பேனா? எங்க போனானே தெரியலை. எங்க போய் தேடன்னு தெரியலை. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு பா”
 
“உன்கிட்ட எதுவுமே சொல்ல கூடாது, உன் உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொன்னார் பா. அதான்”
 
“அப்படி நான், செத்துருந்தா கூட எனக்கு இந்த வலி வந்துருக்காது பா. அவ அப்பாவி பா. உலகம் தெரியாதவ. அவளோட கூட்டுகுள்ள இருந்து, இங்க கூட்டிட்டு வந்து, தொலைச்சிட்டு நிக்குறேன். யாரையுமே தெரியாத, இந்த ஊரில், எங்க என்ன கஷ்ட படுறாளோ?”, என்று புலம்பினான் முகில்.
 
“சும்மா, என்ன டா அவளை பத்தி பேசிட்டு இருக்க? சரியான ஒழுக்கங்கெட்டவ? வயித்தில் பிள்ளையை வச்சிட்டு, உன்னை ஏமாத்திருக்கா?”, என்றாள் வசந்தி.

Advertisement