Advertisement

அத்தியாயம் 4
பூக்களின் மொட்டுக்கள்
கூட மெட்டுக்கள் அமைத்து
உன் நினைவை
என்னுள் விதைக்கிறதே!!!
 
மழை, சிறிது தூறல் போட ஆரம்பித்ததுமே, நேவா கிளப்பி விட்டாள். “சீக்கிரம் வாங்க, மழை வர போகுது. சீக்கிரம் போகலாம்!”, என்று அவனை அழைத்தாள்.
 
அவனும் “சரி”, என்று சொல்லி விட்டு அவள் பின்னே வந்தான். இருவரும் ஓடோடி வந்தார்கள்.
 
பாலம் அருகே வரும் போதே, மழை வலுத்தது. அந்த பாலத்தில் நடக்க, முகிலுக்கு ஏற்கனவே சர்க்கஸில் நடப்பது மாதிரி தான் இருக்கும். இன்றும், அதே போல் பயத்தில், அவள் விரல்களை பிடித்து கொண்டு தான் நடந்தான்.
 
ஆனால், ஏற்கனவே பாதி உடைந்த பாலம், மழையில் வலுவிழந்து, அப்படியே கீறியது.
 
அப்படியே, இருவரும் ஆற்றில் குதித்தார்கள். ஆற்றின் வேகத்தில், எதிர்புறமாக நீந்த முடியாமல், இருவரும் கையை பிடித்து கொண்டே, ஆற்று நீர் போகும் பாதையிலே நீந்தி, ஒரு பாறையை பிடித்து, அப்படியே அந்த குகைக்குள் அமர்ந்தார்கள்.
 
இருவருக்கும் மூச்சு வாங்கியது. நீந்தியதால் உடம்பெல்லாம், நனைந்து குளிரில் நடுங்கினார்கள்.
 
அவனுடைய பேக் எல்லாம் நனைந்து விட்டதால், உள்ளே உள்ள கேமரா நனைத்து விட்டதா என்று பார்த்தான். அது ஒரு, கண்ணாடி கவருக்குள் இருந்ததால், ஒன்றும் ஆகாமல் இருந்தது. அதை, எடுத்து ஒரு மூலையில் வைத்தான்.
 
“எப்படி நேவா மேல போறது?”, என்று கேட்டான் முகில்.
 
“இப்போதைக்கு, போக முடியாதுங்க. பாலம் வேற கழண்டு கிடக்கு. வடக்கார  சுத்தி தான் போகணும். அதுவும் இந்த தண்ணில போக முடியாது!”
 
“நீச்சல் அடிச்சு போகலாமா நேவா?”
 
“இப்ப ஓத தண்ணீர் வர ஆரம்பிச்சுரும். மழை தண்ணி வேற சேர்ந்து, வெள்ளம் மாதிரி வரும். இதுல, அவ்வளவு தூரம் நீந்த முடியாது. காலைல வெயில் ஏற ஏற தான், தண்ணி வரத்து குறையும். அப்ப தான், நீந்த முடியும்!”, என்றாள் நேவா. 
 
“அப்ப நைட் புல்லா இங்க தானா?”
 
“ஆமா, இங்க தான். ஏன், இருட்டு பயமா இருக்கா?”
 
“ஹ்ம்ம்! கொஞ்சம் பயம் தான். உனக்கு பயம் இல்லையா நேவா?”
 
“எனக்கு என்ன பயம், அதான் நீங்க இருக்கீங்களே!”, என்று சிரித்தாள் நேவா.
 
கொஞ்ச நேரத்தில் இருட்டு வந்தே விட்டது. தன்னுடைய மொபைல் எடுத்தவன், அதில் டார்ச்சை போட்டான். கொஞ்சம் வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சத்தில், அவளுடன் பேசி கொண்டிருந்தான்.
 
நேரம் செல்ல செல்ல தான், இருவருக்கும் குளிர் தெரிந்தது. நேவாவுக்கு பழகியதால், அவள் கையால், தன்னை  இறுக்க கட்டி கொண்டு அமர்ந்தாள். ஆனால், கொஞ்ச நேரத்தில், முகில் நடுங்க ஆரம்பித்து விட்டான்.
 
“ரொம்ப குளிருது நேவா!”, என்று சொன்னவனுக்கு, பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது.
 
“ஐயோ! இப்ப என்ன செய்ய?”, என்று முழித்தவள் “ஈர சட்டையை கலத்துங்க!”, என்றாள்.
 
சட்டையை, கழட்டி விட்டு பணியனோடு இருந்தவனுக்கு இன்னும் குளிர் அதிகமாக தான், எடுத்தது. “எல்லாமே ஈரமா இருக்கையில், என்ன செய்ய?”, என்று விழித்தாள் நேவா.
 
அவன் அருகில் போய், வெறும் கையால், அவன் தலையை துவட்டினாள். தன்னுடைய சேலையை பிழிந்தவள், அதை வைத்து, அவன் தலை, முகம் மீது உள்ளே தண்ணீரை துடைத்தாள்.
 
அப்போதும் அவன், நடுக்கம் குறையாததால் அவனை நெருங்கி, அவனை இறுக்கி கட்டி கொண்டு, அவனுடைய உதடுகளை சிறை செய்தாள் நேவா.
 
“என்னால முடியலை நேவா”, என்ற படியே அவள் மீது சாய்ந்தான் முகில்.
 
அவன் உடல் நெருப்பாய் கொதித்தது.  “போச்சு, இப்படியே விட்டா, இன்னும் அதிகமாகுமே!”, என்று நினைத்தவள் அவன் முகத்தை நிமிர்த்தினாள். மயக்கத்தில், குளிரில், காச்சலில் முனங்கினான் முகில்.
 
மயங்கியதும், “என்ன செய்ய?”, என்று திகைத்தாள் நேவா. ஆனால் அவனோ முழு மயக்கத்துக்கும் செல்லாமல் முணங்கிய படியே சுயநினைவில்லாமல் இருந்தான்.
இருக்க இருக்க, குளிர் அதிகமாகும் போது, அவளால் மட்டும், என்ன செய்ய முடியும். “இப்படியே விட்டா ஜன்னி வரும்”, என்று தெரியும் ஆகையால் வேறு வழி இல்லாமல், அவன் சட்டையை எடுத்து, அவனுடைய போன் மீது போட்டு, அதில் இருந்து வந்த வெளிச்சத்தை மறைத்தவள், அவனுடைய ஈர உடையை கழற்றி விட்டு, அவனுடன் ஐக்கியமானாள்.
 
அவன் உயிரை காப்பாற்ற, தன்னையே அவனுக்கு கொடுத்தாள், நேவா. சுய நினைவு இல்லாமலே, அவளை அவனுடையவளாக, ஆக்கி கொண்டான் முகில்.
 
இரவு முழுவதும், அவனுடன் ஒட்டி கிடந்தவளுக்கு, வெளிச்சம் வரும் முன்னே விழிப்பு வந்தது. கண்ணு முழிச்சதும், “இவன் என்ன சொல்லுவான்?”, என்று சிறு வெட்க சிரிப்போடு, அவனுக்கு உடையை போட்டு விட்டாள். அவனுடைய போன் எப்பவோ, அணைந்து இருந்தது. 
 
தன்னுடைய உடைகளையும் சரி செய்தவள், அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாள். மனம் முழுவதும் குழப்பமும், சிறு குறு குறுப்பும் நிறைந்து இருந்தது.
 
“தப்பு செஞ்சிட்டேனா?”, மனதுக்குள் கேட்டு கொண்டாள். “அவனுக்காக, என் உயிரையும் கொடுப்பேன். இப்ப, அவனுக்கு எதுவும் ஆக வில்லை. அதுவே போதும்”, ஆனாலும், மனதுக்குள் சிறு பயம் எழுந்தது.
 
“இவன் என்னை ஏத்துக்குவானா? இல்லை, வேலை முடிஞ்சதும் என்னை விட்டுட்டு போயிருவானா? அப்படி போனால், நான் என்ன ஆவேன்?”, என்று பல விதமான சிந்தனைகள், அவள் மனதில் உலா வரும் போதே, சூரியன் மெதுவாக எட்டி பார்த்தான்.
 
மெதுவாக, அவனை எழுப்பி பார்த்தாள். அவன் முழிக்கவே இல்லை. காச்சல் இன்னும், அடித்து கொண்டு தான் இருந்தது. “இப்ப என்ன செய்றது?”, என்று நினைத்தவள், மெதுவாக வெளியே வந்து, ஆத்து நீரை பார்த்தாள். அதன் வேகம் குறைந்து இருந்தது. ஆனால், “மயங்கி இருக்கும், அவனால் நீந்தவும் முடியாது. அவனை தூக்கி கொண்டு என்னாலும், நீந்த முடியாது”, என்று நினைத்தவள், அவனை விட்டு விட்டு நீந்தி, அடுத்த கரையை அடைந்து மேட்டில் ஏறினாள்.
 
அவசர, அவரசமாக ஓடியவள், குடிலுக்கு சென்று சரகாவை அழைத்தாள். “அம்மாடி நீ வந்துட்டியா? உன்னை தேடி தான், நம்ம ஆளுக போனாவ. முகில் வேந்தன் எங்க?”, என்று  கேட்டார் சரகா.
 
“அவர் அங்க மயங்கி கிடக்கார் ஐயா?”, என்றாள் நேவா.
 
“சரி வா, சிக்கனையும், நம்ம சரணாவையும் கூட்டிட்டு போவோம்”, என்று சொல்லி கொண்டே, அவளை அழைத்து கொண்டு போனார்.
 
ஒரு வழியாக, எல்லாருடைய உதவியுடன், இங்கே தூக்கி வர பட்டு சிகிச்சை கொடுக்க பட்டான் முகில்.
 
அவனுக்கு சரி ஆனதும், தன்னுடைய குடிலுக்குள் சென்று முடங்கினாள் நேவா.  மனம் முழுவதும் பாரமாக இருந்தது. “கண்ணு முழிச்சு அவன் என்னை பார்த்தால் என்ன சொல்லுவான்? திட்டுவானோ? தப்பு செஞ்சிட்டேனா?”, குழம்பி கடைசியில் அழுது, தூங்கியே போனாள்.
 
எழுப்ப வந்த தருவியும் திகைத்தாள். “எதுக்கு அழுதுட்டு படுத்துருக்கா?”, என்று நினைத்து கொண்டு எழுப்பாமல் சென்றாள்.
 
அடுத்து வந்த நாள்கள், எல்லாருக்கும் அமைதியாகவே சென்றது. முகில் கண் விழித்து, சகஜமானான். ஆனால், அவன் கண்ணுக்கு நேவா படவே இல்லை. தருவியிடம் கேட்டதுக்கும், “உள்ள படுத்துருக்கா”, என்ற பதில் தான் வந்தது.
 
ஒரு வாரம், அவன் கண்ணில் படாமல்  சமாளித்தாள் நேவா.
 
முகிலுக்கும், தேவையான போட்டோ எல்லாம் கிடைத்ததால், எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்தான்.
 
ஆனாலும், நேவாவின் ஒற்றை பார்வைக்காக தவம் இருந்தான். பெண்கள் குடிலுக்குள், ஆண்கள் போக கூடாது என்பதால், அவள் வரவுக்காக காத்திருந்தான்.
 
ஆனால், அவள் மட்டும் வரவே இல்லை. தருவிக்கே சந்தேகம் வந்தது. “என்ன ஆச்சு?”, என்று. அவளிடமும் நேவா ஒழுங்காக பேசவே இல்லை.
 
நேவாவின், குடிலை பார்த்து கொண்டே ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் முகில்.
 
“சும்மா தான இருக்கீக. எங்க கூட வாங்க, நேரம் கழியும்”, என்று அழைத்து கொண்டு போனான் சிக்கன்.
 
தருவி, ஒரு முடிவுடன் நேவா குடிலுக்குள் சென்றாள். அங்கே, தூங்காமல் ஒருக்களித்து படுத்திருந்தாள் நேவா.
 
“நேவா, என்ன எப்ப பாத்தாலும் படுத்தே கிடக்க? வா, அருவிக்கு போய்ட்டு வரலாம்”, என்றாள் தருவி.
 
அதே படுத்த நிலையிலே, “நீ போ தருவி, நான் வரலை”, என்றாள் நேவா.
 
“எதுக்கு, இப்ப நீ வா. வெளிய யாரும் இல்லை. எனக்கும் நேரம் போகலை. நீ வா!”, என்று இழுத்து எழுப்பினாள். வேறு வழியில்லாமல், வெளியே வந்தாள் நேவா. கண்களை, அவன் குடிலுக்குள் சுழல விட்டாள் நேவா.
 
அவள் பார்வையை உணர்ந்து, “சிக்கன் கூட்டிட்டு போயிருக்கான்”, என்றாள் தருவி.
 
அருவி கரைக்கு போன பின்பும், அமைதியாய் இருந்த நேவாவை குழப்பத்தோடு பார்த்தாள் தருவி,.
 
“இப்ப, இந்த நேரத்துக்குள்ள ஆறு தடவை நீந்தி வந்துருப்ப, இப்ப என்ன ஆச்சு நேவா? அமைதியா இருக்க. என்கிட்ட சொல்ல மாட்டியா?”
 
தருவி என்ன கேட்டாலும், பதில் சொல்லாமல் வாயை இறுக மூடி கொண்டு மௌனமாய் இருந்தாள் நேவா.
 
அடுத்து தருவியும், எதுவும் கேக்காமல் விட்டு விட்டாள். குடிலுக்கு திரும்பி நடக்கும் போது, எதிரில் சிக்கன் வந்தான். கூடவே முகிலும்.
 
அவன் வரவை உணர்ந்து, குனிந்த தலை நிமிராமல், நடந்து அவன் எதிரே சென்றாள் நேவா. அவர்கள் அருகில் சென்றதும், அவனை தாண்டி போக போனவளை, கை பிடித்து நிறுத்தினான் முகில். தருவி நைசாக, நழுவி சிக்கனுடன் பேசி கொண்டிருந்தாள்.
 
வேறு வழியில்லாமல், நின்றாள் நேவா.
 
“எதுக்கு நேவா, நீ என்னை பாக்கவே வரலை? எனக்கு சாப்பாடு கூட கொண்டு வரலை. வெளியவே நீ வரலை. நான் நீ எப்ப வருவன்னு, பாத்துட்டே இருந்தேன் தெரியுமா?”, என்று முகில் கேட்டதுக்கும் பதிலே சொல்லாமல் குனிந்தே இருந்தாள்.
 
நேவா, உடல் நடுங்கி கொண்டிருந்தது. “அன்னைக்கு, நடந்ததுக்கு ஏதும் சொல்லிருவானோ?”, என்று மனதுக்குள் பயந்து போனாள்.
 
“எதுக்கு நேவா, என்கிட்ட பேச மாட்டிக்க? எனக்கு கஷ்டமா இருக்கு. என் மேல ஏதும் கோபமா? உன்னை கஷ்ட படுத்துற மாதிரி நடந்துக்கிட்டேனா? அன்னைக்கு, அந்த தண்ணில மாட்டிகிட்டு உனக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன்ல? அதான், என் மேல கோபமா? அன்னைக்கு குளிர்ல என்ன நடந்ததுன்னு எனக்கு தெரில நேவா? எதுவுமே நினைவு இல்லை. கண்ணு விழிச்சப்ப குடிலில் இருந்தேன். உன்னை தான் தேடுனேன் தெரியுமா? நீ என்கிட்ட பேசு நேவா ப்ளீஸ்!”, என்று கெஞ்சினான்.
 
அவனுடைய பேச்சில், மெல்ல தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள் நேவா. “அப்பாடி அவனுக்கு, அன்னைக்கு நடந்தது நினைவே  இல்லை”, என்று ஒரு மனது நிம்மதி ஆகும் போதே, “அப்ப அவனுக்கு எதுவுமே தெரியாதா? இதை எப்படி இவன் கிட்ட சொல்லுவேன்?”, என்று தடுமாறினாள் நேவா.
 
“என்ன சொல்ல?”, என்று தெரியாமல், “எனக்கு உடம்பு சுகமா இல்லை. அதனால தான், வெளிய வரலை”, என்று அவன் முகத்தை பார்த்து சொல்லி விட்டு, நடக்க துடங்கினாள்.
 
கண்களை சுழற்றி சிக்கனையும், தருவியையும் பார்த்தான் முகில். அவர்கள், உலகையே மறந்து கதை பேசி கொண்டிருப்பது பட்டது. அடுத்த நொடி, நேவா கையை பிடித்து இழுத்து, அருகில் இருந்த மரத்தின் மீது அவளை சாய்த்து, தன் கைகளால் அரண் அமைத்தான்.
 
மூச்சு காற்று, ஏறி இறங்கியது நேவாவுக்கு. அவன், அருகாமை சும்மாவே வதைக்கும். அதுவும், அந்த நாளுக்கு பிறகு, அவனை புறக்கணிக்க முடியாமல், அவனுடைய அருகாமைக்கு ஏங்கி கொண்டிருக்கும் போது, இப்படி நடந்தால், அவளும் தான் என்ன செய்வாள்?
 
“என்னை தொடாத. தொட்டா அப்படியே, உடம்பு முழுவதும் நெருப்பு பத்திக்கிற மாதிரி தவிக்கிறேன்!”, என்று மனதுக்குள் புலம்பினாள் நேவா.
 
அவளுடைய, எண்ணம் எதுவும் தெரியாமல், “ஏண்டி இப்படி சாகடிக்கிற? முகத்தை கூட காட்டாம, என் கிட்ட இருந்து விலகி நிக்குற? உன்னோட தலை கோதுதல்  இல்லை. எனக்கு சாப்பாடு ஊட்ட வரலை. அதுக்கும் மேல, ஒரே ஒரு முத்தம் கொடுத்து, எத்தனை நாள் ஆச்சு தெரியுமா?”, என்ற படியே அவளை நெருங்கினான்.
 
மனதில் எழும் நினைவுகள், சஞ்சலங்கள் எல்லாவற்றையும் மறந்து, அவன் முத்தத்தை அனுபவித்தாள் நேவா.
 
ஆனால், இந்த முத்தத்தில், ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான் முகில்.
 
காதலை சொல்லும் போது, முத்தமிட்டது தவிர அதுக்கு பின், பல முறை அவளை நெருங்கி இருக்கிறான் முகில். அவனுடைய, முத்தத்தை மட்டும் ஏற்கும் நேவா, அவனை நெருங்க மாட்டாள். முத்தம் கொடுத்த அடுத்த நொடி விலகி விடுவாள். ஆனால், இன்று அவளும் அவனை அணைத்திருந்தாள்.
 

Advertisement