Advertisement

அவள் அருகில் வந்த முகில், “அம்மா அழுததை நினைச்சு பீல் பன்றியா? விடு ராதிகா. அவங்க ரெண்டு நாளில் சரியாகிருவாங்க. எப்பவும் வானதி அவங்க கூட இருப்பா. இப்ப அவ இல்லைனு, அவங்களுக்கு வருத்தம். நீ வொரி பண்ணிக்காத ரெஸ்ட் எடு”, என்று சொன்னாலும், அவன் முகமும் கலங்கி தான் இருந்தது.
 
“எதையோ நினைச்சு தவிக்கிறான்”, என்று நினைத்து கொண்டு, “நான் மாமா வீட்டுக்கு போய்ட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
 
“வா மா ராதிகா. முகில் வரலையா?”, என்று வரவேற்றாள் வள்ளி.
 
“அவர் தூங்குறாரு அத்தை. எங்க யாரையும் காணும்?”
 
“சின்ன வாலுங்க ரெண்டும் காலேஜ் போய்டுச்சு. கார்த்திக் வேலைக்கு போய்ட்டான். உங்க மாமா மட்டும் சின்ன பையன் மாதிரி, எனக்கு உடம்பு சுடுது, காச்சல் அடிக்குது.  நான் வேலைக்கு போகலைனு படுத்துருக்காரு. நீ எத்தனை நாள் லீவு போட்டுருக்க?”
 
“நாளைக்கு போயிருவேன் அத்தை. கொஞ்ச நேரம் உங்க மடில படுக்கணும் போல இருந்தது. அதான் வந்தேன்”
 
“என்ன ஆச்சு மா?”, என்று கேட்டு கொண்டே அவளை தன் மடியில் படுக்க வைத்தாள் வள்ளி.
 
“மனசுக்குள்ளே ரொம்ப குழப்பமா இருக்கு. எங்க அத்தையை எனக்கு மன்னிக்கவே முடியலை. ஆனா, அவங்க எல்லாத்தையும் மறந்துட்டு சகஜமா பேசுறாங்க. எனக்கு தான் அங்க நெருப்புல நின்ன மாதிரி இருந்தது. ஆனா, முகிலுக்கு அங்க தான் விருப்பம்னு நினைக்கிறேன். ஆனா, அவரும் எனக்காகன்னு யோசிச்சு மறைக்கிறார். எனக்கு என்ன செய்யன்னு தெரியலை அத்தை. ஒரு பக்கம் அவங்களை நினைச்சா பாவமா இருக்கு. இன்னொரு பக்கம் கஷ்டமா இருக்கு. என்ன செய்யனு தெரியலை அத்தை”
 
“இங்க பாரு ராதிகா எனக்கு அட்வைஸ் பண்ணாலே பிடிக்காது. எனக்கு உங்க மாமா தான் அட்வைஸ் பண்ணுவாரு. அப்ப அவர் மீசையை இழுத்து தீ வைக்கணும் போல இருக்கும். ஆனா, இன்னைக்கு நீ குழப்பத்துல இருக்குறதுனால என்னோட எண்ணத்தை உனக்கு சொல்றேன்.
 
முகில் உன் மேல உயிரையே வச்சிருக்காரு. உனக்காக அவரோட வீட்டை விட்டு, பிறந்த ஊரை விட்டு, அம்மா அப்பாவை விட்டு இங்க வந்திருக்கார். அவ்வளவு சொத்து சுகத்தை விட்டு, இங்க அடுத்தவங்க கிட்ட முப்பதாயிரத்துக்கு வேலை செய்றார்”
 
“நான் ஒன்னும் அவரை வேலைக்கு  போக சொல்லலையே அத்தை”
 
“நீ சொல்லலை. ஆனா, வேலைக்கு போகாம உன்னோட சம்பாத்தியத்துல உக்காந்து அவரை சாப்பிட சொல்றியா? அது அவரோட தன்மானம் மா. அவருக்காகவாது நீ பழசை மறக்கணும் ராதிகா. எல்லா கோபத்தையும் மனசுக்குள்ள வச்சிருந்தா, அது நம்மளையே அழிச்சிரும். மன்னிக்கிறது கஷ்டம் தான்.
 
ஆனா, கூடவே இருந்தா கால போக்கில் மறைஞ்சிரும். முகில் தங்கச்சி கல்யாணம் ஆகி போனதுல, பெரியவங்க தனிமையா பீல் பண்ணுவாங்க. இப்ப கூட நம்மளால நம்ம அப்பா அம்மாவுக்கு ஆறுதலா இருக்க முடியலையேன்னு முகில் நினைச்சிருப்பார். அப்ப அவருக்கு கஷ்டமா தான இருக்கும்? உனக்காக இங்க ஒரு வருஷம் அவர் இருந்துட்டார். இனி அவருக்காக, அவரோட சந்தோஷத்துக்காக மன்னிச்சி, உன் குடும்பத்தோட வாழ பாரு மா”, என்றாள் வள்ளி.
 
“வள்ளி சொல்றது தான் கரெக்ட்”, என்று சொல்லி கொண்டே அங்கு வந்தார் தனா.
 
“நீங்க எப்ப வந்தீங்க?”, என்று கேட்டாள் வள்ளி. “நீ மீசைல தீ வைக்கணும்னு சொன்னப்பவே வந்துட்டேன்”
 
“ஹி ஹி டீ எடுத்துட்டு வரேன்”, என்று நகர்ந்தாள் வள்ளி.
 
“வேண்டாம் வள்ளி, நீ டீ சொல்றது கூட எனக்கு தீ தீ னு கேக்குது. யோசிச்சு முடிவு எடு மா ராதிகா”
 
“சரி மாமா. நான் வீட்டுக்கு கிளம்புறேன். வரேன் அத்தை”, என்று சொல்லி விட்டு கிளம்பி வெளியே வந்தவள் மயங்கி விழுந்தாள்.
 
தனா, வள்ளி இருவரும் பக்கத்தில் இருந்த ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றனர். செக் செய்த பின்னர் தான் தெரிந்தது அவள் வயிற்றில் குழந்தை இருப்பது. சந்தோசத்துடன் அவளை வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
 
“இப்ப அவளுக்கு முகிலை பாக்கணும் போல இருக்கும். நீங்க அவ வீட்டுக்கு வண்டியை விடுங்க”, என்று சொன்னாள் வள்ளி. “உன்னோட காரை நாளைக்கு எடுத்துக்கலாம் மா”, என்று சொல்லி விட்டு ராதிகா வீட்டில் காரை நிறுத்தினார் தனா.
 
“நீ உள்ள போ மா”, என்று சொல்லி விட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்று விட்டார்கள்.
 
அடி மேல் அடி வைத்து உள்ளே வந்தாள். ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தான் முகில்.
 
“வந்துட்டியா ராதிகா? உன்னை இன்னும் காணும்னு நினைச்சு, நானே இப்ப அங்க வரணும்னு நினைச்சேன்”, என்றான் முகில்.
 
எதுவும் சொல்லாமல் அவன் அருகில் போய் அமர்ந்தவள், அவன் கையில் இருந்த ரிமோட் பிடுங்கி டீவியை அணைத்தாள்.
 
“என்ன?”, என்பதாய் அவளை பார்த்தான் முகில்.
 
“எனக்கு ஊருக்கு போகணும்”, என்றாள் ராதிகா.
 
“எந்த ஊருக்கு ராதிகா?”
 
“ஊட்டிக்கு”
 
என்னவென்று புரியாமல் விழித்தான். “என்ன சொல்ற? எனக்கு புரியலை. காலைல தான அங்க இருந்து வந்தோம்”
 
“ஆமா, ஆனா போகணும்”
 
“போகலாம், ஆனா எதுக்கு?”
 
“நாம அங்கேயே போகலாம் முகில்”, என்றாள் ராதிகா.
 
ஒரு நொடி சந்தோசத்துடன் அவளை பார்த்தான். “ஆமா முகில், நாம உங்க வீட்ல தான் இருக்கணும். அங்க போவோம். நமக்காகன்னு உங்க அப்பா நம்மளை இங்க பெரிய மனசு வச்சு இருக்க சொன்னாலும், உங்களை பிரிஞ்சு மாமா கஷ்ட படுவாங்க. அத்தையும் ரொம்ப அழுதாங்க. நாம அங்கேயே போயிரலாம்”
 
“ஆனா, உனக்கு கஷ்டமா இருக்குமே மா”
 
“இல்லை முகில், உடனே மாறுவேனு சொல்ல முடியாது. ஆனால், கொஞ்ச நாளில் நான் மாறிருவேன். ஆனா, என் ஒருத்திக்காக, நீங்க எல்லாம் கஷ்ட படுறது, எனக்கு கஷ்டமா இருக்கு”
 
அடுத்த நொடி, அவளை இழுத்து அணைத்து கொண்டான் முகில்.
 
“எனக்கும் முதலில் ஒன்னும் பெருசா தெரியலை ராதிகா. ஆனா, அம்மாவும் அப்பாவும் மனசளவுல அவங்கள விட்டு, நான் பிரிஞ்சிட்டேன்னு நினைச்சு பீல் பண்றதை பாக்கும் போது தான், கஷ்டமா இருக்கும். நீ முழு மனசோட தான் சொல்றியா ராதிகா?”
 
“நான் உங்க வீட்டில் இருந்து வரும் போது, உங்களோட நினைவுகளோடே எப்பவுமே வாழணும்னு நினைச்சேன். அப்படி உங்களை நேசிக்கிற நான், உங்களோட மனசை எப்படி காய படுத்துவேன்? எனக்காக உங்க சந்தோசத்தை இழக்கும் போது, அத்தை அவங்க செஞ்ச தப்பை மறந்து இறங்கி மன்னிப்பு கேக்கும் போது, நான் மட்டும் அப்படி இருக்குறது தப்பு முகில். கோபத்தை மறந்துறலாம்”
 
“ஹே குட்டி மா, அப்ப உங்க கமிஷனர் வேலை என்ன ஆகுறது?”
 
“ஒரு ஜனாதிபதி  கையால அவார்ட் வாங்குன  எனக்கு, உங்க தமிழ் நாட்டுக்கு  டிரான்ஸ்பர் தர மாட்டாங்களா என்ன?”, என்று சிரித்தாள்  ராதிகா.
 
“நிஜமாவே, ரொம்ப சந்தோசமா இருக்கு டி செல்லம்”
 
“ஹ்ம்ம், அப்ப நாளைக்கு கிளம்புவோமா?”
 
“என்னது, நாளைக்கே வா? நீ டிரான்ஸ்பர்  கிடைக்குற வரைக்கும், இங்க தான வேலை செய்யணும்?”
 
“அதுவா, வயித்துக்குள்ள ஒரு குட்டி முகில் இருக்காங்க. அதனால, அவங்க அம்மா லீவு போட்டு ரெஸ்ட் எடுக்க போறாங்க. அந்த ரெஸ்டை, அவங்க அப்பாவோட சொந்த வீட்டில் தான் எடுக்க போறாங்களாம்”, என்று சொல்லி விட்டு தலை குனிந்தாள்.
 
அவள் தலையை நிமிர்த்தியவன் “நிஜமாவா ராதிகா?”, என்று சந்தோசத்துடன் கேட்டான்.
 
“ம்ம்”, என்று சொன்னவள் இதழ்களில், ஆழ்ந்த முத்தத்தை பதித்தான் முகில்.
 
“வலிக்குது முகில்”, என்ற படியே அவனிடம் இருந்து விலகி அவள் உதட்டை தடவினாள்.
 
“சந்தோசமா இருந்ததா, அதான். இன்னும் இன்னும் தேடுது, வலிக்காத மாதிரி முத்தம் கொடுக்கிறேன்”, என்றவன் அவள் உதடுகளை சுவைத்தான்.  அடுத்து “குட்டி பாப்பாக்கு ஒன்னு”, என்று சொல்லி அவள் சேலையை விலக்கி உதடுகளை, அவள் வெற்றிடையில் பதித்தான்.
 
அடுத்து வந்த  இரண்டு நாளில் முகில் வேலையை விட்டு விட்டு, படம்  எடுக்கும் வேலையை “ஊட்டில இருந்து வந்து, அப்ப அப்ப பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு ராதிகாவுடைய  டிரான்ஸ்பர் மற்றும் லீவு லெட்டரை தனாவிடம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டார்கள்.
 
“குழந்தை வந்ததால், அவளை கெட்டவள்”,  என்று வெளியே போக சொன்ன வசந்தி இன்று  “தன்னுடைய மருமகள், தன் மகனின் வாரிசை சுமந்து கொண்டு,  தன்னுடன் இருக்க வந்திருக்கிறாள்”, என்று நினைத்து சந்தோசத்துடன் வர வேற்றாள்.
 
கல்யாணம் முடிந்து “அவனுடன் சந்தோசமாக இருக்கணும்”, என்று நினைத்து வந்த நேவா, அதே வீட்டில் அவனுடைய அறையில் ராதிகாவாக, அவனுடைய கை அணைப்பில் சந்தோசத்துடன் இருந்தாள்.
 
“இந்த உலகத்துல நான் தான், ரொம்ப சந்தோசமா இருக்கேன் ராதிகா”, என்று சொல்லி கொண்டே அவளை கட்டி அணைத்தான் முகில்.
 
அவர்கள் வாழ்வில் காதல் தொடரும், நினைவுகள் முற்றும்!!!!
 
 

Advertisement