Advertisement

அத்தியாயம் 10
மெதுவாக தீண்டி
செல்லும் தென்றலே
என்னவளின் நினைவுகளை
விட்டு செல்வது ஏனோ?!!!
 
அடுத்த நொடி “முகில்”, என்று அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தாள் ராதிகா. அவனும் அவளை இறுக்கி கொண்டான். அவள் கண்ணீரில் அவன் கண்களும் கலங்கியது.
 
அவன் அழுவது அவளுக்கு கஷ்டத்தை தர கண்ணீரை அடக்கி கொண்டு “நேவாவோட புருஷன், ராதிகா கிட்ட எதுக்கு ஐ லவ் யு சொல்றார்?”,  என்று சிரித்து கொண்டே கேட்டாள்.
 
“சரி நீ என்னோட நேவாவும் இல்லை. கமிஷனர் ராதிகாவும் இல்லை. என்னோட பொண்டாட்டி. என்னோட காதலி. என்னோட தேவதை போதுமா?”, என்றான் முகில்.
 
அவனை பார்த்து சிரித்தவள், “பிச்சைக்காரியா தெரிந்த நான், தேவதையா எப்ப தெரிய ஆரம்பிச்சேன்?”, என்று கேட்டாள்.
 
அவள் பதிலில் அமைதியாக இருந்தான் முகில். தான் பேசியது அவனை காய படுத்தி விட்டது புரிந்து “சாரி முகில். தெரியாம பேசிட்டேன்”, என்றாள் ராதிகா.
 
“பரவால்ல ராதிகா, இதெல்லாம் உன்னோட காயங்கள்னு எனக்கு தெரியும். ஆனா, என்னோட மன நிலையில் கொஞ்சம் யோசிச்சு பாரேன். எதுவுமே நினைவு இல்லாத நேரத்தில் நான் என்ன யோசித்திருக்க முடியும்? சாரி மா”
 
“ஹ்ம்ம் பரவால்ல. இனி அதை பத்தி பேச வேண்டாம். இப்ப இங்க எதுக்கு வந்தீங்க?”
 
“நான், என் பொண்டாட்டியை பாக்க வந்தேன்”
 
“பொண்டாட்டியா, அதுக்கு சாட்சி இருக்கா?”
 
“இதோ இருக்கே சாட்சி”, என்று சொல்லி கொண்டே அவள் சட்டைக்குள் இருந்த தாலியை வெளியே எடுக்க முயற்சித்தான் முகில்.
 
அவன் கைகளில் குறு குறுப்பில் நெளிந்தாள் ராதிகா. “நெளியாத டி, அப்புறம்  கண்ட இடத்தில், கை பட்டால் நான் பொறுப்பில்லை”, என்ற படியே அதை வெளியே எடுத்தவன், “இது நான் கட்டின தாலி. நீ என்னோட பொண்டாட்டி தான்”, என்றான்.
 
“அப்படியா? நம்புற மாதிரி இல்லையே”, என்று மறுபடியும் சிரித்தாள் ராதிகா.
 
“இந்த வீட்டில், உன்னோட ரூம் எது ராதிகா?”, என்று விஷமமாய் கேட்டான். அவனுடைய சூழ்ச்சி புரியாமல், “இப்ப எதுக்கு இதை கேக்குறான்?”, என்று நினைத்து கொண்டு, “அது தான்”, என்றாள்.
 
“கிளீனா இருக்கா?”
 
“ஹ்ம்ம் இருக்கு. இப்ப தான் கிளீன் பண்ணுனேன்”
 
“பெட் எல்லாம் தூசி இல்லையா?”
 
“அதெல்லாம் இல்லை. அடிக்கடி இங்க வந்து ரெண்டு மூணு நாள் தங்குவோம். முன்னாடி மாசம் ஒரு தடவை வருவேன். அப்பா அம்மா நினைவு வரும்னு நினைச்சு, மாமாவும், அத்தையும் விட மாட்டாங்க.  இப்ப எல்லாம் வாரம் வாரம் இங்க வருவேன். எப்பவாது வித்யா வருவாள்”, என்றாள் ராதிகா.
 
“அப்ப சரி”, என்று சிரித்தான் முகில்.
 
“நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?”
 
“நீ தான, நீ என் பொண்டாட்டின்னு சொன்னதுக்கு, சாட்சி கேட்ட?”
 
“ஆமா கேட்டேன். நீங்க அதுக்கு பதில் சொல்லாம பெட் ரூம் பத்தி கேக்குறீங்க”
 
“ஆமா, அதுக்கு விளக்கம் கொடுக்க தான் கேட்டேன். கொஞ்சம் இறங்கேன்”, என்று சொல்லி மடியில் இருந்து அவளை இறங்கியவன் அடுத்த நொடி, அவளை கைகளில் அள்ளி கொண்டு, அந்த அறையை அடைந்தான்.
 
முதலில் திகைத்த ராதிகா, அடுத்த நொடி அவன் கழுத்தில் கைகளை மாலையாக போட்டாள். அவளை தூக்கி வந்து கட்டிலில் விட்டவன், “நீ என் பொண்டாட்டி இல்லைனு சொன்ன. இப்ப இப்படி இழையிறீங்க. நீ தான் கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை சுவாகா பண்ண ஆள் ஆச்சே”, என்று சிரித்தான் முகில்.
 
வெட்கம் வந்து முகத்தை, அவன் நெஞ்சிலே மறைத்து கொண்டாள்.
 
அவளை இறுக்கி அணைத்தவன் , “கல்யாணம் ஆகி மூணு மாசம் கழிச்சு, இன்னைக்கு தான் பர்ஸ்ட் நைட் நடக்க போகுது. அதுக்குள்ளே முகத்தை மறைச்சா எப்படி மேடம்?”. என்று கேட்டு மேலும் அவளை வெட்க பட வைத்தான்.
 
மேலும் மேலும் அவனுடன் ஒண்டியவளை, தன்னிடம் இருந்து பிரித்து விட்டு, சட்டையை கழட்டினான்.
 
“யாரோ அன்னைக்கு கண்டவ முன்னாடி, டிரஸ் மாத்த மாட்டேன்னு சொன்னாங்க பா”, என்று சொல்லி சிரித்தாள் ராதிகா.
 
“இன்னைக்கு, என் பொண்டாட்டி முன்னாடி தான கழட்டுறேன். பரவால்லை”
 
“சரி எதுக்கு கழட்டுறீங்க? வாங்க வீட்டுக்கு போகலாம். அத்தை தேடுவாங்க”
 
“வள்ளி அம்மா கிட்ட நேரம் ஆகும்னு சொல்லிட்டு தான் வந்தேன். அப்புறம், சட்டை கழட்டலைன்னா கசங்கிரும்”, என்றான் முகில்.
 
“எதுக்கு நேரம் ஆகும்? எதுக்கு கசங்கும்?”
 
“ஹ்ம்ம் இதுக்கு தான்”, என்ற படியே அவளை நெருங்கி கட்டி அணைத்தான்.
 
அவனுடைய செய்கையை ரசித்த ராதிகா, அவன் காதில் “இது பர்ஸ்ட் நைட் இல்லை, செகண்ட் நைட்”, என்று சிரித்து கொண்டே சொன்னாள்.
 
அவள் கழுத்து வளைவில் இருந்து நிமிர்ந்து, அவளை கண்ணோடு கண் பார்த்தவன், “அன்னைக்கும் இப்படி தான் கோப்பரேட் செஞ்சேனா?”, என்று கேட்டான்.
 
“அதையே சொல்லி காட்டாதீங்க!”, என்று சிணுங்கினாள் ராதிகா.
 
“சொன்னா, என்ன செய்வீங்களாம்?”
 
“கடிச்சு வச்சிருவேன்”
 
“அப்ப கண்டிப்பா சொல்லி காட்டுவேன், அன்னைக்கு, என்ன டிரஸ் போட்டுருந்தேன்”, என்று கேட்டவனின் இதழ்களை, பேச விடாமல் சுவைத்தாள் ராதிகா.
 
காலையில் ஆரம்பித்த வேலையை மதியம் மேல் தான் முடித்து விட்டு, அங்கு இருந்து அவளுடைய காரில் கிளம்பினார்கள்.
 
வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு, எல்லாருடைய கேலி கிண்டலை ரசித்து விட்டு  மறுபடியும் அதே வேலையை தொடர்ந்தார்கள்.
 
அன்று இரவு அவள் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தான் முகில்.
 
இயல்பாக அவன் தலையை வருடியது அவள் கைகள்.
 
“என் மேல உனக்கு கோபம் இருக்கா ராதிகா?”
 
“உங்க மேல எனக்கு எப்பவுமே கோபம் வராதே முகில்”
 
“எதுக்கு?”
 
“எதுக்குன்னா, இந்த உலகத்திலே நான் அதிகம் நேசிக்கிறது உங்களை தான்”
 
“பிச்சைகாரினு சொன்னேனே  ராதிகா, கஷ்டமா இருந்துச்சா?”
 
“அப்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, உங்க நிலைமைல இருந்து யோசிச்சு பாத்தா அது தப்பா தெரியலை”
 
“தேங்க்ஸ் மா. சரி நீ எப்படி அந்த காட்டுக்கு போன? அவங்க எப்படி உன்னை ஏத்துக்கிட்டாங்க?”
 
“உங்களை எப்படி ஏத்துக்கிட்டாங்களோ, அப்படி தான் என்னையும் ஏத்துக்கிட்டாங்க. ரொம்ப நல்ல மக்கள் அவங்க. நான் சாதாரண பொண்ணா தான், அங்க போனேன். அப்புறம், கொஞ்ச நாளில் சரகா ஐயா கிட்ட மட்டும், நான் தீவிர வாதியை பிடிக்க வந்தேன்னு சொல்லிட்டேன். அவரும் நல்லதுக்குனு சொல்லி ரொம்ப சந்தோச பட்டார். தினமும், பகலில் தருவி கூட போய் அந்த காட்டை பழகுவேன். நைட் போய், அங்க இருக்குறவங்களை கண்காணிப்பேன். நம்ம இருந்தோமே, அதுக்கு அடுத்து ஒரு இருபது நிமிஷம் நடந்து போனோம்னா, அவன் அங்க தான் இருந்தான்”
 
…..
 
“என்னால அவங்களை பத்தி, கண்காணிக்க தான் முடியும். ஒத்தைல போய் அவங்க கூட சண்டையா போட முடியும்? அவங்க நிறைய தவறான வேலைகள் செஞ்சாங்க. அதை எல்லாம் தூரமா நின்னு வீடியோ எடுப்பேன்.
சந்தன மரம் வெட்டுவாங்க. அப்புறம், பாம் செய்வாங்க. எல்லா எவிடென்சும் கலக்ட் செஞ்சேன். தருவிக்கு உடம்பு சரி இல்லன்னா, பகலில் கூட போவேன்”
 
“இது ரிஸ்க்கான வேலை தான ராதிகா?”
 
“எந்த வேலைல ரிஸ்க் இல்லை முகில்? எத்தனை பேர் அந்த குண்டு வெடிக்கும் போது துடிச்சிருப்பாங்க. எத்தனை பேர் என்னோட அம்மா, அப்பாக்காக நான் ஏங்கின மாதிரி ஏங்கி இருப்பாங்க? அவனை எல்லாம் கொல்லணும்னு தான் தோணும். ஆனா, மனித உரிமைன்னு ஒன்னு இருக்கே. அதான், அந்த கூட்டத்தையே பிடிக்க முடிவு செஞ்சேன்”
 
“உனக்கு எதாவது ஆகி இருந்ததுன்னா?”
 
“ஆகி இருந்தா, போக வேண்டியது தான். பிறப்பும், இறப்பும் இயற்கை தான முகில்?”
 
அவளுக்கு இப்போது எதுவோ ஆபத்து வந்தது போல, அவளை இறுக்கி கொண்டான்.
 
“என்னை கட்டி பிடிக்கணும்னா நேரடியாவே பிடிக்கலாமே? இப்படி எல்லாத்துக்கும் காரணம் வேணுமா?”, என்று கேட்டாள் ராதிகா.
 
“ஏய் வாயாடி, கதையை சொல்லு டி”
 
“அப்புறம் என்ன? எல்லாம் நல்ல படியா தான் போச்சு. ஒருத்தனை மலை சரிவில் பார்க்கும் வரை”, என்றவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டிருந்தான் முகில்.
 
“என்னைக்கு அவனை நான் பார்த்தேனோ, அன்றில் இருந்து நான் நானாவே இல்லை. அவனும் வேற, என்கிட்ட மயங்கி காதலை சொன்னான். வேறு வழி இல்லாமல், அவன் காதலை ஏத்து கிட்டேன்”
 
“அவன் கெட்டவனா ராதிகா?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் முகில்.
 
“ஆமா கெட்டவன் தான், ரொம்ப ரொம்ப பேட் பாய். கை ஒரு இடத்தில் இருக்காம கண்ட இடத்தில் அலையும்”, என்று சொல்லி கொண்டே அவள் வயிற்றில், விரலால் கோலம் போட்டு கொண்டிருந்தவனின் விரலை பிடித்தாள்.
 
“அழகா இருக்கு டி அதான்”, என்றான் முகில்.
 
“இப்படி செஞ்சா, நான் எப்படி சொல்ல?”
 
“சரி, ஒன்னும் செய்ய மாட்டேன்”, என்றவன், அவள் வயிற்றில் ஒரு முத்தம் பதித்து விட்டு, “இனி கொஞ்ச நேரம் சமத்தா இருக்கேன் சொல்லு”, என்றான்.
 
“அப்புறம் அந்த இரவு, கல்யாணம். சரகா ஐயா முன்னாடியே என்கிட்டே கேட்டுட்டார். முகிலை உனக்கு பிடிச்சிருக்கான்னு. ஆமா னு சொன்னேன். அப்புறம், கன்னி பூஜை அன்னைக்கு, நீங்க அவங்க இனம் இல்லைனு சொன்னாங்க தான? அவங்க கிட்ட என்னையும் அவங்க இனம் இல்லைனு சொல்லி தான், சம்மதிக்க வச்சாங்க”
 
….
 
“அப்புறம் நடந்தது உங்களுக்கே தெரியும். உங்க அம்மா செஞ்ச விஷயங்கள் என்னை ரொம்ப பாதிச்சிட்டு முகில். உங்களுக்காக மட்டும் ரொம்ப பொறுமையா போனேன். என் வாழ்க்கையில், நான் அடுத்தவங்க கிட்ட திட்டு வாங்குனது அது தான் முதல் தடவை”
 
மெதுவாக அவள் கைகளை அழுத்தி கொடுத்தான். “புரியுது டா. இங்க ராணி மாதிரி இருந்துட்டு, அங்க வேலை காரி மாதிரி இருந்தது கஷ்டமா இருந்துருக்கும்”
 
“இல்லை முகில், வேலை செய்றது எனக்கு எப்பவுமே கஷ்டமா இல்லை. ஆனா, அவங்க பேச்சு, ஒரு பொண்ணா உங்களுக்காக நான் எப்படி தவிச்சிருப்பேனு, அவங்க யோசிக்காம உங்களை பாக்க கூட விட மாட்டாங்க. உங்களோட வார்த்தைகள் வேற ரொம்ப வதைக்கும். அப்புறம், உங்களுக்கு நினைவு வந்த உடனே சரியாகிரும்னு நினைச்சு என்னையே சமாதானம் செஞ்சுக்குவேன். ஆனா, அன்னைக்கு நான் உயிரோட கண்ணு முன்னாடி இருக்கும் போதே உங்களுக்கு வேற கல்யாணம் செய்ய பாத்தாங்க பாருங்க. அப்ப தான் ரொம்ப வெறுத்துட்டேன்”
 
“விடு ராதிகா. அதை நினைக்க வேண்டாமே”
 
“ம்ம்”
 
“அப்புறம் அங்க இருந்து நீ எங்க போன? பணம் கையில் இருந்ததா?”
 
“உங்களை நம்பி, உங்க பின்னாடி ஒண்ணுமே இல்லாம தான் வந்தேன். ஆனா, ராம் அண்ணா கொடுத்த பணம் இருந்தது. ஆனா, காட்டில் என்னோட பொருளெல்லாம் இருந்தது. துப்பாக்கி கூட அங்க தான் இருந்தது. ஆனா, அதே கோலத்தோடு அவங்க முன்னாடி போய் நின்னா, நீங்க என்னை நல்லா வைக்கலைனு நினைப்பாங்க. அவங்களை எதுக்கு கஷ்ட படுத்தணும்னு தான்  இங்கயே வந்துட்டேன். அப்புறம், என்னோட ரிப்போர்ட் எல்லாம் எடுக்கணும்ல. அதான் அங்க மறுபடியும் போய் துப்பாக்கி எல்லாம் எடுத்துட்டு வந்தேன். என்னோட டிரஸ் அங்கேயே இருக்கட்டும். யாருக்காவது யூஸ் ஆகும்னு நினைச்சு வச்சிட்டு வந்தேன். அதுல இருந்து தான் மாமா கார்டு விழுந்திருக்கும். அவர் மீசைக்கு நான் பேன். அதனால எனக்கு மட்டும் அவர் மீசை மாமா. அதுல தான் மாட்டிகிட்டேன் போல? நீங்க அப்படி தான  என்னை கண்டு பிடிச்சீங்க? ஆனா நான் உங்க நினைவிலே மீதி வாழ்க்கையை வாழ்ந்துரலாம்னு தான் நினைச்சேன். உங்களை நேரில் பாக்குற வரைக்கும். அன்னைக்கு ஆபிஸ்ல வச்சு பாத்தப்ப அப்படியே உங்க கிட்ட ஓடி வரணும்னு தோணுச்சு தெரியுமா? கஷ்ட பட்டு என்னை அடக்கினேன்”
 
“ராம் கிட்ட இருந்த ஆல்பம் பாத்து தான் தெரிஞ்சது ராதிகா, நீ என் பொண்டாட்டின்னு. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அப்புறம், அவன் கிட்ட கேட்டேன். உடனே அந்த காட்டுக்கு போய் தேட போனோம். அங்க தான் தருவி எல்லாத்தையும் சொன்னா”
 
“தருவி எனக்கு நல்ல தோழி”, என்று சிரித்தாள் ராதிகா.
 

Advertisement