Advertisement

 

 

 

பள்ளிக்குள் நுழைந்த நீருவிற்கு ” குச் ஐஸ் பால் ஐஸ்  ” என்று குரல் ஒழிப்பது அவள் காதில் கேட்டுவிட

நரேன் முன்பு சென்று கொண்டிருக்க , ” திரா இங்க வா ” என்று சொல்லிட்டு விட்டு சிட்டு குருவி போல் ஓடிச் சென்று அந்த ஐஸ் கிரீம் காரரின் முன்பு நின்றாள்.

” அங்கில் 2 ஐஸ்கிரீம் கொடுங்க ” என்று அந்த பிஞ்சு இரண்டு விரல்கள் என்று இருக்கையிலும் இரண்டு விரல்களை காட்டினாள்.

” காசு வச்சிருக்கியா ” என்று நீருவிடம் கேட்க

” காசுன்னா என்ன அங்கில் ” என்று அவர் சொல்லியது புரியாமல் நீரு கேட்க

அவர் பேக்கட்டில் இருந்து எடுத்து ” இது தான் காசு”  என்று காட்டி ” இந்த மாதிரி உன்கிட்ட இருந்தா எடுத்து கொடு ” என்றார்.

பள்ளி முன் இருந்து இதனை பார்த்த நரேனிற்கு கோபம் வந்து விட , சாலையை கடந்து வந்தவன் நீருவின் கை பிடித்து இழுத்து வந்தான்.

” திரா திரா ” என்று நீரு அழைத்திட

” என்கிட்ட சொன்னா நான் வாங்கி தர மாட்டேன்னா நீரு .எதுக்கு நீ தனியா போய் கேட்ட ” என்று தன்னை தவிர்த்து வேறொருவரிடம் பேசியதை எண்ணி கோபம் கொண்டே அவளிடம் கோபமாக கேட்டான்.

” திரா ஐஸ் போகுது ஐஸ் போகுது ” என்று அழுகும் குரலில் கூற

அவளின் அழுகை அந்த ஊட்டி குளிரில் அவனுக்கு வெப்பத்தை ஊட்டியது அவளின் ஒரு துளி கண்ணீர் அவனின் கையில் பட்டவுடன்..

அவளின் கண்ணீரை தாங்காது அதனை துடைத்து விட்டவன் , ” அழக்கூடாது நீரு குட்டி நீ என்னோட டால் தான நீ அழுதா என்னால தாங்க முடியாது. இப்போ நீ க்ளாஸ்க்கு போ நான் உன்ன அப்புறமா வந்து பாக்குறேன்  ” என்று கவலையான குரலில் சொல்லிவிட்டு அவளை அவளின் வகுப்பான இரண்டாம் வகுப்பில் சென்று விட்டு வந்தான்.

வெளியே வந்தவன் யாருக்கும் தெரியாமல்  கேட்டின் வழியாக வெளியே வந்து அந்த ஐஸ்கிரீம் காரரை தேடிச் சென்று அவளுக்காக அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி  வந்தான்.

அதேபோல் செக்யூரிடிக்கு தெரியாமல் உள்ளே வந்தவன் , நேராக போய் நின்றது நீருவின் வகுப்பின் முன்பே…

அவனை கண்ட நீரு வகுப்பு என்றும் பாராமல் ஓடிச் சென்று அவனுடன் ஒன்றி கொண்டாள்.

இதனை கண்ட ஆசிரியர் கோபம் வெளி வர , அங்கே பார்த்தவர் அவர்களின் பிணைப்பை கண்டு ஆச்சரியபட்டார்.

அங்கே நரேன் நீருவை அமர வைத்து ஐஸ்க்ரீமை ஊட்டிக்கு கொண்டு இருந்தான்.

இருவரும் மாறி மாறி ஊட்டிக்கு கொண்டு இருந்தனர்.

உண்டு முடித்த நரேன் ” இங்க பாரு நீரு மா உனக்கு என்ன வேணும்னாலும் முதல என்கிட்ட தான் கேக்கணும் சரியா .உனக்கு தேவையானத செய்ய தான் நான் இருக்கேன். நீயா போய் எதுவும் செய்ய கூடாது சரியா ” என்று அறிவுரை கூறிவயன் அவளை வகுப்பிற்குள் அனுப்பி வைத்தான்.

இவர்களின் பந்தத்தை கண்டு அந்த ஆசிரியரே வியந்து போய் நின்றார்.

அவருக்கு இதை அவர்களின் பெற்றோரிடம் கூற தோன்றா விட்டாலும் வகுப்பு ஆசிரியராக இருப்பினும் சொல்லி ஆக வேண்டும் என்ற கடமையினாலே இரு குடும்பத்தாரிடமும் இதை கூறினார்.

அவர்களுக்கு இருவரின் பிணைப்பை பற்றி அறியும் என்பதால் சிரிக்க மட்டுமே செய்தனர்.

இருவரின் வளர்ச்சி வளர வளர இவர்கள் ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருந்த நேசமும் வளரத் தொடங்கியது.

பிரித்தறிய முடியாத வயதில் இருவருக்குள்ளும் இருக்கும் பந்தம் அந்த கதிரவனும் கதிர்வீச்சுகள் போன்றும் இருந்தது.

சூரியன் இல்லை எனில் வெளிச்சம் இல்லையோ அதேபோல் தான் நரேன் இல்லை எனில் இந்த நீருவும் இல்லை. நீரு இல்லை எனில் நரேனும் இல்லை என்றானது.

காலங்கள் அவர்களுடன் சேர்ந்து நேரத்தை கழித்திட இருவரும் பருவ நிலையை அடைந்திருந்தனர்.

நீரு இப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நரேன் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தான்.

நரேன் நீருவிற்கு கம்ப்யூட்டர் பிடிக்கும் என்பதால் நரேன் பதினோராம் வகுப்பில் கணினி பாட பிரிவை தேர்ந்தெடுத்தான்.

பள்ளி முடிந்த பின்பும் நரேன் பள்ளியிலே இருந்து பேஸ்கெட் பால் விளையாடி கொண்டு இருக்க நீரு வேடிக்கை பார்த்த படியே வீட்டு பாடத்தை செய்து கொண்டு இருந்தாள்.

விளையாட்டில் கவனமாக இருந்தாலும் நீருவின் மீதும் ஒரு பார்வை வைத்தே இருந்தான்.

கோல் போஸ்ட் கிட்டே வந்தவுடன் அவனின் கவனம் முழுதும் பந்தை கூடையில் போடுவதில் இருக்க நீருவின் பார்வை முழுவதும் அவனின் மேலே இருந்தது.

அவளுக்கு அவன் மீது முழு நம்பிக்கை இருந்தது அவன் அதனுள் போட்டு விடுவான் என்று..

ஆனாலும் அமர்ந்திருந்த சில பெண்கள்” நரேன் யூ கேன் டூ இட் ” என்று உற்சாகம் படுத்த நீரு அவர்களை கண்டு முறைத்து விட்டு நரேனின் மீது பார்வையை திருப்பினாள்.

நீருவை ஒர் பார்வை பார்த்தவன் புன்னகையுடன் கூடையில் பந்தை சரி பார்த்து ஏவினான். அதுவும் சரியாக கூடைக்குள் விழுந்திட நீரு ” ஹோ ” என்று கத்தினாள்.

அப்போது ஒரு இளைஞன் அவனுக்கும் நரேனின் வயதே இருக்கும் நீருவை நெருங்கியவன் ” நீர்த்திகா ” என்று மென்மையாக அழைத்திட,

நீருவும் நரேனின் மேல் இருந்த பார்வையை திருப்பி வந்தவன் மீது பதித்தாள்.

” யார் நீங்க ” என்று அவனை கண்டு கேட்க

” நான் யாதவ் இந்த ஸ்கூல தான் 12 th படிக்கிறேன் .பையாலஜி குருப் ” என்றான்.

” சரி அதுக்கு எதுக்கு இப்போ என்ன கூப்பிட்டிங்க ” என்று அவன் அழைத்தற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்டாள்.

இதனை தூரத்தில் இருந்து நரேன் பார்த்திட , அவனுக்குள் எள்ளும் கொல்லும் வெடித்தது.

வேகமாக அவர்களை நோக்கி நடக்க தொடங்கினான்.

” நான் எதுக்கு உங்கள கூப்பிட்டேன்னா… ” என்று பேசத் தொடங்கிய நேரம் நரேன் நீருவை நெருங்கி அவளுக்கு முன் நின்று ” எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு .அவ கிட்ட பேச தேவையில்லை ” என்று வெடித்தான்.

” அத நான் உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல நரேன்.நான் அத நீரா கிட்டயே சொல்லிக்கிறேன் ” என்றான்.

” அவ வேற நான் வேற கிடையாது .இரண்டு பேருமே ஒன்னும் தான் .அதுனால நீ என்கிட்டயே சொல்லலாம்.சொல்ல விருப்பம் இல்லன்னா ..” என்றவன் அவனுக்கு பின்புற வழியை கையால் காண்பித்தான்.

அதனை பார்த்தவன் ” நீரா ” என்று அழைத்திட‌ , அவளின் பார்வையோ நரேனின் மீதே இருந்தது. இனி இங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் யாதவ்.

” அவ வேற நான் வேற கிடையாது .இரண்டு பேருமே ஒன்னும் தான்” என்ற வாக்கியமே அவள் மனதினுள் ஓட இதுவரை இல்லாத கண்ணோட்டத்தில் அவனை முதல் முறை கண்டாள்.

ஐந்தடி உயரம் பார்க்கும் பார்வையில் ஒரு கரிசனை. பார்ப்போரை வசிகரிக்கும் முகம் .அனைவரையும் தள்ளி நின்றே பேசும் குணம். தன்னிடம் மட்டும் நெருங்கி பழகும் குணம். தன்னை ஒருவரிடத்திலும் விட்டுக்கொடுக்காத தன்மை என ஒவ்வொன்றாக அவனை பற்றி சிந்திக்கும் கண்ணோட்டத்தை மாற்றி இருந்தது.

” நீரு வா போலாம் ” என்று அவளின் கையை பிடித்து பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து
கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே…
ஐயோ தடுமாறுதே…

என்ற பாடல் நீருவின் பிண்ணனியில் பாடிக்கொண்டே இருந்தது..

விளையாடியதின் தாக்கமாக அவனின் வேர்வை துளிகள் அவன் கண்ணத்தில் பட்டு தெறிக்க அதனை ஆசையுடன் பார்த்தவளுக்கு அடுத்த வரிகள் பிண்ணனியாக பாடியது.

உன் கண்ணம் மேலே
மழை நீரை போலே
முத்தக்கோலம் போட
ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே….

பருவ நிலையை அடையும் அந்த வயதில் அவளுக்குள் பல்வேறு வகையான எண்ணங்கள் தோன்றியது.

அவனை கண்டவாறே வீட்டிற்கு சென்றாள். அவனுடன் சேர்ந்து காப்பி அருந்தினாள். எப்போதும் போல் அவனுடனே படித்தாள். அவன் சொல்லிக் கொடுத்தும் தான் தப்பு செய்தால் செல்லமாக மண்டையில் கொட்டியது அவளுக்கு வலியை உண்டாக்காமல் புதிதாக தோன்றிய உணர்வை வலுப்படுத்த வைத்தது.

நாள்தோறும் சாதாரணமாக ஊட்டி விட்டவள் , இன்றைய நாளில் இருந்து ஆசையாக ஊட்டி விட தொடங்கினாள்.

அவன் வீட்டிற்கு செல்லும் நேரம் அவளை அறியாமலே கண்களை கரிக்க தொடங்கியது அவளது விழி நீர்.

இப்படியே ஒவ்வொரு நாளும் கழிந்தது. இதற்கிடையில் நீரு பூப் பெயர்த்து இருந்தாள்.

அதனால் நீருவை ஒரு குடிசை அமைத்து அதில் தங்க வைத்தனர்.

நரேன் தான் அவளை காணாமல் மிகவும் சிரமப்பட்டு விட்டான். ஆனால் அவளை நினைத்த படியே நீரு வீட்டில் தங்கராஜ் மாமாவுடன் சுற்றி திரிந்தான்.

இதனை குடிசையினுள் இருந்த படியே இரசித்து கொண்டு இருந்தாள் நீர்த்திகா.

பதினாறு நாள் கழித்து நரேனை தாய் மாமா என்ற முறையில் மாலையை நீருவின் கழுத்தில் பொட்டு சீர் செய்து முடித்தனர்.

மாமா முறை நரேன் மாலையிட்டது என்னமோ வடிவுக்கரசிக்கு பிடிக்காமல் போய்விட , அதனை பற்றி பேசுவதற்காக மலரை தனியே அழைத்திருந்தாள்.

வடிவுக்கரசி சொன்னது போலவே மலர்விழி அந்த இடத்திற்கு வந்து விட , சிறிது நேரத்திலே வடிவும் வந்து விட்டாள்.

” வாங்க அண்ணி நல்லா இருக்கீங்களா..?? எதுக்கு வர சொன்னீங்க அண்ணி அதுவும் இந்த இடத்திற்கு ” என்று கேள்வியாக வடிவை பார்த்தாள்.

” நான் நேராவே கேக்குறேன் நீ என்ன என் புருஷன் கூட பிறந்தவளா என்ன..?? இல்ல நான் தான் உன் புருஷன் கூட பிறந்தவளா ..??” என்று கோபத்தில் வார்த்தையை விட ,

அதில் நொறுங்கிய மலர் ,” என்ன அண்ணி பேசுறீங்க ..??” என்று கனத்த மனதுடன் கேட்க

” வேற எப்படி பேச சொல்ற சொல்லு ..என்னோட மகன எப்படி நீ மாலை போட சொல்லலாம். உன் பொண்ணும் என்னோட பையன் பின்னாடியே சுத்துறா சொல்லி வை. என்னோட பையன வலச்சி போட்டு சொத்த அடையலாம்னு ஆசையா .அப்படி எதாவது ஆசை இருந்தா அத இப்பவே பொதச்சிடு ” என்று மிரட்டும் தோனியில் வடிவு கூற அதில் முழுதாய் நொறுங்கி போனாள் மலர்.

தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டதால் கிளம்பி சென்று விட்டாள் வடிவுக்கரசி.

வெகு நேரம் அங்கேயே இருந்தவள் , குளிர் தாங்க முடியாமல் போனதால் எழுந்து நடக்க தொடங்கினாள்.

நடந்து போகும்போது எல்லாம் வடிவு கூறிய வார்த்தைகளே மனதில் ஓடியது.

” உன் பொண்ணு உயிரோட இருக்கனும்னா என் பையன் கிட்ட இருந்து தள்ளி இருக்க சொல்ல இல்லன்னா அவள பாக்க முடியாத படி பண்ணிடுவேன் பாத்துக்கோ ” என்று போகும் போது வடிவு மிரட்டி விட்டு சென்றது நினைவினிலே ஓட மலரின் விழிகளில் கண்ணீர் ஒடமாய் வழிந்து கொண்டு இருந்தது..

வலைந்து வலைந்து போகும் பாதை என்பதால் மலருக்கு எதிர் புறத்திலிருந்து வந்த லாரி கண்ணில் படாமல் போக வேகமாக வந்த லாரி வலைவில் ஒரு பெண் வருவதை கண்டு நிறுத்த முயன்றிட அதுவே வினையாக வந்து அவளின் மீது மோதியது….

Advertisement