Advertisement

மாயம் 5


   லாரி மீது மோதி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் நரேன் தத்தளிபதாக நீரு அவள் கனவில் காண ” திரா ” என்று குரலுடன் கண் விழித்து பார்க்க ,அவள் முன்பு அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் அவளை வீனோதமாக பார்த்தனர்.

அவளின் பதற்றத்தை அறிந்த ஒரு பெண்மணி அவளின் வந்து ” என்ன மா ஆச்சி ஏதாவது பிரச்சனையா தூங்கிட்டு இருந்த பொண்ணு தீடிர்ன்னு எந்திரிச்சு கத்துற ” என்று பாசத்துடனும் அக்கறையுடனும் ஒரு அன்னையாய் கேட்டிட , அவளுக்கு அவள் தாயின் இன்முகம் அவரது உருவத்தில் தெரிய கண் கலங்கி போனாள் நீரு.

தாயை இழந்த போது வராத அழுகை இத்தனை வருடங்கள் கழித்து இன்று வந்தது.

அவரை பார்த்த படி கண் கலங்கிய நிலையில் அமர்ந்திட ,அவளை உலுக்கி சுயநினைவிற்கு கொண்டு வந்தார் அந்த பெண்மணி.

” உனக்கு பாக்கும் போதே உனக்கு ஏதோ பிரச்சனைன்னு தெரியுது கவல படாத மா பிரச்சினை இல்லாத வாழ்க்கையும் இல்லை முடிவில்லாத பிரச்சனையும் இங்க இல்ல மா ” என்றார் அவளை தின படுத்தும் பொருட்டில்…

அவர் எவ்வளவு சமாதானம் கூறினாலும் அவள் மனது முரண்டு பிடிக்க , ” திரா திரா ” என்று நிமிடதுக்கு ஆயிர‌ அழைப்பு விடுத்தது.

மூலைக்கு தெரிந்தது ” இது முட்டாள்தனம்” என்று ,ஆனால் மனதுக்கு அது புரிபட வில்லையே காதல் கொண்ட மனதல்லவா..?? அதுவுமிண்றி அவனுக்காகவே ஜனனம் பெற்ற உயிர் என்ற மாயையில் சுழலும் மனதிற்கு எங்கிருந்து தெரிய போகுது.

உயிர் பெற்ற நொடியில்

உன்னை சந்தித்தேன்..!!!

காதல் அறிந்த நொடியில்

மீண்டும் உயிர் பெற்றேன்..!!!

களவாடும் நொடியில்

உயிரில் உன்னை இழந்தேனே டா..!!!

உயிரே தன்னை விட்டு பிரியும் அளவிற்கு மனதினுள் பாரம் குடிக்‌ கொண்டது.

இன்ஜின் மாற்றும் வேலையில் இன்ஜினியர்கள் வேலை செய்து கொண்டு இருக்க , அதில் இரு காந்தங்களும் தன் பிரிவினை போக்கும் பொருட்டு இரண்டும் ஓட்டி ஒரு ஆட்டத்தை காட்ட நீரு அங்கே கடினப் பட்டு அமர்ந்திருந்தாள்.

மொபைலில் இருந்த அவன் புகைப்படத்தை பார்த்தவாறே அழுகையினை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

அவனுக்கு தான் அவள் அழுவது சுத்தமாக பிடிக்காதே .அவனுக்கு பிடிக்காது என்றால் அவளுக்கும் பிடிக்காது அல்லவா.

விரல் பிடித்து என்னுடன் வருவாய்

என்று தான் நினைத்தேன்…

விலகி செல்வாய் என்று தெரிந்திருந்தால்

விட்டிருப்பேன்னே

உன் விரலை அல்ல
என் உயிரை…!!!

அவள் வாழ்க்கையே திரா தான் என்றிருந்தவள் இப்போது அது நடவாது என்று நினைக்கும் போது எல்லாம் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.

இங்கே கோவை வந்தடைந்த திரா வேகமாக சாலையை கடக்க முயலும் போது  அவனது இடது புறத்தில் இருந்து லாரி வேகமாக வர அதை காணாது செல்ல துணிந்தவன் , யாரோ ஒருவரின் இழுப்பில் கன நொடியில் ஏற்பட இருந்த பெரிய விபத்தில் தப்பித்திருந்தான்.

இழுத்த வேகத்தில் கீழே விழுந்தவனுக்கு கை கொடுக்க ,அப்போதே நரேன் தன்னை காப்பாத்தியவனின் திருமுகத்தை கண்டான்.

அவன் இதழ்கள் அன்னிசையாக அந்த நபரின் பெயரை சொல்லியது.

“யாதவ் ” என்று நரேன் சொல்ல , ” ஹே எழுந்திரு நரேன் ” என்று தன் கரத்தினை நீட்டி சொல்ல

நரேனும் அவனின் கரத்தை சமநிலைக்காக பற்றிக் கொள்ள , அவனை தூக்கி விட்டான் யாதவ்.

” ஏன் நரேன் இப்படி ரோட்ல என்ன வருதுன்னு கூட பாக்காம ரோட க்ராஸ் பண்ண பாக்குற..??ஒரு நிமிஷம் நான் வரலைன்னா என்ன ஆகுறது சொல்லு ” என்று அவனின் கரத்தினை பிடித்தவாறே கேட்டான்.

அதற்குள் ” ஆமா யாதவ் மட்டும் உன்ன தள்ளி விடலைன்னா என்ன ஆகுறது ” என்று பதறிப்போய் வந்தாள் சந்தியா.

அவளின் குரலில் இருவரும் திரும்பி அவளை பார்த்திட ,அதில் யாதவ்க்கு அவளை அங்கு கண்டது பெரும் அதிர்ச்சி.

” ஹே தியா நீ இங்க என்ன பண்ற..??” என்று அவளை புருவம் உயர்த்தி கேள்வி கேட்டிட

” அத பத்தி அப்புறமா சொல்றேன் ” என்றவள் நரேனின் புறம் திரும்பி ” இப்ப நான் கொஞ்சம் பொறுமையா கேளு சரியா ” என்றவள் அவளின் உபதேசத்தை கூறத் தொடங்கினாள்.

” இங்க பாரு நரேன் ஆறிப்போன டீயில எப்படி நாம பண்ணு தொட்டு  எடுத்து சாப்பிட நினைச்சி வாய்க்கு கொண்டு போனா சட்டன்னு விழுந்திடும். ஆனா அதே டீயில பிஸ்கட் தொட்டு எடுத்து பாரு கீழ விழாது. அட்லீஸ்ட் ரெண்டு மூணு தடவையாவது தொடணும் அப்போ அத சாப்பிட முடியும் ” என்றாள் எதையோ பெரிதாக சொன்னது போல் தொண்டையை சரி செய்து கொண்டாள்.

அவளையே பே என இருவரும் பார்க்க ” என்ன நடக்குது இங்க ” என்று வந்தான் ஆதித்யா.

” அது நான் நரேன்க்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன் ” என்றாள் .

” என்னது அட்வைஸா ” என்று வாயை பிளந்தான் யாதவ்.

” ஆமாம் மிஸ்டர் யாதவ் ” என்று சொல்லி காலரை தூக்கி விட்டு கொள்ள யாதவ் அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

” இப்படி தலையில அடிச்சிக் கிட்டா எப்படி நான் வேன்னா வேற எக்ஸ்சாம்பில் சொல்லவா ” என்று நக்கலாக சொல்ல

” அம்மா தாயே போதும் நிறுத்து ” என்று யாதவ் கை எடுத்து கும்பிட்டு கூற

” அது ” என்று சந்தியா கூறி சிரித்தாள்.

” ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க விளையாட்ட நிறுத்துறீங்களா ” என்று கத்தினான் நரேன்.

அவனின் கத்தலில் சிரித்துக் கொண்டிருந்த சந்தியா சிரிப்பினை நிறுத்திக் கொண்டு ” நீ ஆரம்பிச்சு வச்ச விளையாட்ட எப்போ நிறுத்த போற நரேன் ” என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவள் ” நீ இப்போ தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் உன்னோட உயிர் உன்ன விட்டு பிரிஞ்சு பொய்ட்டு இருக்கு ” என்று சந்தியா சொன்ன அடுத்த நொடியே ரயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கினான் இல்லை இல்லை ஓடத் துவங்கினான்.

மூச்சிறைக்க ஓடி வந்தவன் நீலகிரி எக்ஸ்பிரஸ் நிற்கும் இடத்தை அறிந்து கொண்டு வேகமாக அந்த தளத்தை நோக்கி வேக நடை எடுத்து வைக்க சரியாக ரயில் கிளம்புவதற்காக ஹாரன் அடித்து மெதுவாக நகர்ந்தது.

அடித்து பிடித்தாற்போல் ஓடி வந்தவன் படிகளில் இறங்க முற்படும் போது கால் பிடரி படிகளில் கீழே உருண்டு விழுந்தான்.

அதற்குள் ரயில் கிளம்பி சென்றது. வேகமாக எந்திரிக்க முயல அவனது வலது காலில் பலத்த அடி பட்டிருந்தது.

அதை பொருட் படுத்தாமல் எந்திரித்தவன் அந்த நொண்டி கால்லை வைத்துக் கொண்டு ” நீரு  நீரு ” என்ற அழைப்போடு ரயில் சென்ற பாதையில் நடக்க முடியாத நிலையிலும் ஓடத் துவங்கினான்.

அவனின் நிலையை கண்ட ஆதி சந்தியா மற்றும் யாதவ் வேகமாக நரேனிடம் வந்தவர்கள் அவனை தாங்கி பிடித்தனர்.

” விடுங்க டா என்ன அவ போறா அதுவும் என்னைய இப்படி தவிக்க விட்டுட்டு தனியா போறா டா. நான் போய் அவள தடுத்து நிறுத்தனும் டா விடுங்க என்னை ” என்று அவர்களின் பிடியில் இருந்து விலக முயல ஆதியோ அவனை அழுத்தமாக பிடித்திருந்தான்.

” லூசா டா நீ ” என்று ஆதி கோபத்தை காட்ட

” மச்சான் நீரு டா ” என்று கண்ணீருடன் ரயில் சென்ற வழியை காட்டி ” நான் போகனும் டா விடு என்னைய ” என்று சிறு குழந்தை போல் அடம்பிடிக்க தொடங்கினான்.

” நரேன் நீரு பொய்டா டா “என்று சொல்லி அவனுக்கு புரிய வைக்க முயல

” இல்ல இல்ல நான் போகனும் டா நீரு எனக்காக காத்திருப்பா எப்போதும் எங்க போனாலும் நாங்க ஒன்னா தான் போவோம் அதே போல தான் இப்பவும் அவ என்னைய தனியா விட்டுட்டு எங்கையும் போக மாட்டா டா .விடு டா என்னைய நான் போயே ஆகனும்” என்று மன்றாடினான்.

நரேன் அவன் கட்டுப்பாட்டை கடந்து பிதற்றுபவனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆதி அவனை ஓங்கி கண்ணத்தில் அறைய நரேன் அவனின் அடியில் பிடியின்றி தடுமாற அவனை தாங்கினான்  யாதவ்.

அவனின் பிடியில் இருந்த படியே ” ஆதி !என்னோட நீரு டா ” என்று கண் கலங்கினான்.

” நீரா எங்கேயும் போகல டா இங்க இருக்கிற சென்னைக்கு தான் பொயிருக்கா அவள கொஞ்சம் தனியா விடு டா ரொம்ப காயப் பட்டுட்டா .அவளோட காயம் ஆறட்டும் விடு ” என்று அவனை தன்னிலைக்கு கொண்டு வர முயன்றான்.

அதனை கேட்ட நரேன் யாதவின் பிடியிலிருந்து விடுதலை பெற்று அப்படியே கீழே அமர்ந்து விட்டான்.

நரேனுக்கு அவளின் சிரித்த முகமும் அவனின் சிறு வயதிலிருந்து அவளுடன் கடந்து வந்த பாதையை கண் மூடி நினைக்க தொடங்கினான்.

கனவிலும் நீயே..

நினைவிலும் நீயே..

நிஜத்தில் மட்டும் இல்லையே..!!!

விழி மூடி நினைத்தவனின் மனதில் முழுதும் அவளே நிறைந்திருக்க அவனை அறியாமலே அவனின் கண்ணில் கண்ணீர் சுரந்தது.

நரேனின் கண்ணீர் துளி நிலத்தில் தெறித்த அதே நேரம் வானமும் மழையினை பொழிந்தது.

இடியுடன் மழை பெய்ய அவனுக்கு அவளின் ஞாபகங்களே வந்து சென்றது.

மண்ணை
முத்தமிட்டுத்
திரும்பும் வழியில்
என்மீது படும்
சாரல்கள்
அனைத்திலும்
உன் வாசமே
கலந்திருக்கிறது!

மழையின் மண் வாசனை கூட அவளையே ஞாபக படுத்திட , ஒருநாள் அவளின் செய்கை தானாக அவன் நிழற்ப்படமாக ஓட அதை ஆழ்ந்து கவனித்து இரசிக்க தொடங்கினான்.

*****************

கல்லூரி சேர்ந்த ஒரு மாதம் வரையிலும் நீரு யாருடனும் பேசாமலே தனியே நாட்களை கடத்தி வந்தாள்.

அவளுக்கு மழை என்றால் அல்லாத பிரியம் கொண்டவள் , ஏனோ ஊட்டியில் இருந்ததாலோ என்னவோ நீருவை மழையில் நினைய விட்டது இல்லை மலர் விழி.

கோவை வந்த புதிதில் அவளுக்கு சூடு தாங்க மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்க , அவளின் நிலையினை புரிந்து கொண்டு அந்த வார இறுதியில் அவளை மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாருக்கு அழைத்து சென்றான்.

அங்கே சென்றவர்கள் அதனின் அழகில் மெய் மறந்து நின்றனர் இருவரும்.

நரேன் தனியாக கோவையில் இருந்த மூன்று வருடத்தில் நண்பர்களுடன் வெளியே சென்று சுற்றி இருந்தாலும் கல்லார் வந்ததில்லை.

நீருவுடன் தான் முதல் முறை இந்த இடத்திற்கு வந்திருக்கிறான். அதுவும் அவனுக்கு பிடித்த பெண்ணுடன்.

” ஹே திரா இந்த ப்ளேஸ் சூப்பரா இருக்கு ” என்றாள் சுற்றிலும் பார்வையை பதித்தவாறே..

” உனக்கு பிடிக்கும்னு தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன் . அதுவும் இல்லாம இந்த ப்ளேஸ் கொஞ்சம் கூல்லா இருக்கும். உனக்காக தான் நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்ததே ” என்றான்.

அவளிடம் இருந்து வெறும் புன்னகையே பதிலாக வந்தது.

நரேனை பொறுத்தவரை அது வெறும் புன்னகை ,அவளை பொறுத்தவரை  அந்த ஒற்றை புன்னகையில் அத்தனை காதலையும் அடக்கி வைத்திருந்தாள்.

காதல் கொண்ட மனதல்லவா அவனின் ஒவ்வொரு செயலுக்கும் அவளே அறியாமல் காதல் மாயையில் மூழ்கி போனாள்.

இருவரும் அந்த காட்டு பாதையில் நடக்க‌ , நீரு காதலினால் அவனின் கை பிடித்து கொண்டு நடக்க தொடங்கினாள்.

இருவரும் சேர்ந்து அந்த இடத்திற்கு சென்றனர்.

நீரு இயற்கையின் அழகினை இரசித்து கொண்டிருக்க ,திரா வாட்டர் ஃபால்ஸில் குதித்து நீச்சல் அடிக்க தொடங்கினான்.

இயற்கையின் அழகினை இரசிக்க மறுத்தவள் தன் மனம் கவர்ந்தவனை இரசிக்க தொடங்கினாள்.

வெள்ளை நிறம் ஆறடி உயரத்தில் ஆண்மைக்கே உரிய மிடுக்கான கட்டுப்பான உடலை கொண்டு இருந்தான். துரு துரு என்று அலைப்பாயும் கண்கள் ,அவளது மூச்சு காற்றை சுவாசிக்கும் மூக்கு , எப்போதும் நீரு என்று அழைத்திடும் உதடுகள் , புன்னகைக்கையில் கண்ணத்தில் அழகாய் விழும் கண்ணக்குளிகள் என அவள் விழிகள் அவனை மனதில் நிரப்பிக் கொண்டே இரசித்திட ., இவை அனைத்தையும் ஈடுகட்டும் வகையில் அவன் காதிற்கு பின்னே மறைந்து இருந்த அந்த மச்சம் அவளை இம்சித்தது.

அவளுக்கு அந்த மச்சம் உள்ள இடத்தை இதழால் ஒற்றி எடுக்க வேண்டும் என்று உணர்வு மேலோங்கியது .

காதலாய் மனம் அவனிடம் தாவ பார்க்க அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் நீரு ஒரு வழியாகிவிட்டாள்.

இதனை உணராமல் தன் போல் பார்வையை அலைய விட்டிருந்தான் நரேன்.

காதலாய் அவள் பார்வை வீசிட

காவலனாய் அவன் பார்வை வீசியது..!!

காதல் மனம் அவனுள் சேர்ந்திட துடிக்க

பாதுகாவலாய் அவள் துடிப்பை பாதுகாத்தான்..!!

பின்னர் இருவரும் சிறிது நேரம் இடத்தில் நேரத்தை கழித்திட , நரேன் வாகுவாக ஒரு இடத்தை பார்த்து அதில் இருவரும் அமர்ந்தனர்.

இருவரும் எதுவும் பேசவில்லை .அங்கே இருவரது மௌனமுமே ஆட்சி புரிந்தது. அதை கலைக்கும் விதமாக அவளே பேசத் தொடங்கினாள்.

” உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா திரா ” என்று ஆசையாய் கண்களில் காதலை தேக்கி சொல்ல

” ஹான் ! சொல்லு நீரு ” என்றான் மொபைலை பார்த்தவாறே

” பச் !! நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லனும் திரா ” என்று மீண்டும் சொல்ல

அவள் சொல்ல வந்தததை புரிந்து கொண்ட திரா மொபைலை உள்ளே வைத்து விட்டு ” சரி இப்போ சொல்லு என்ன விஷயம்னு ” என்றான் அவளின் முகத்தை பார்த்து ,

” அது வந்து எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு திரா ” என்றாள் ஆசையாக

” அட பாரு டா !என்னோட நீருக்கு பெரிய ஆசை எல்லாம் இருக்காமே அதுவும் எனக்கு தெரியாம ” என்று நக்கலாக கூறியவன் யோசிப்பது செய்கை செய்தான்.

” பச்! கிண்டல் பண்ணாத திரா ” என்று சிணுங்கினாள்.

” சரி சரி கிண்டல் பண்ணல என்ன விஷயம்னு சொல்லு ” என்றான்.

” அது வந்து திரா ” என்று வார்த்தைகளை மென்று முழுங்க

” இப்போ சொல்ல போறியா இல்லையா ” என்று புருவம் உயர்த்திட

” அது வந்து நமக்கு இல்ல இல்ல எனக்கு இந்த மாதிரியான ஒரு அழகிய இடத்துல தான் என் மனம் கவர்ந்தவனோட கை கோர்க்கனும்னு ஆசப்படுறேன் திரா ” என்றவள் ஏதோ பல மணி நேரம் பேசியது போல் ஆழ்ந்து ஒரு மூச்சை இழுத்து விட்டாள்.

” பாருடா என்னோட நீருக்கு இப்படி ஒரு ஆசை வேற இருக்கா . என்கிட்ட சொல்லிட்டில உன்னோட திரா இருக்கான் .அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான் சரியா. உன்னோட இந்த ஆசையையும் நான் கண்டிப்பா நிறைவேத்துவேன் டா ” என்றான் அவளின் ஆசைக்கு இணங்க…

” தேங்க்ஸ் திரா ” என்று லாவாக அவனை அணைத்துக் கொண்டாள்.

பின்னர் , இருவரும் கிளம்பி கார் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.

அந்த சாலையில் வண்டியை வேகமாக ஓட்டி வர , கிளம்பும் போது சாரலாய் பெய்த மழை இப்போது பெரிய மழையாக பெய்ய தொடங்கி இருந்தது.

அவசரமாக நீரு திராவை கண்டு வண்டியை நிறுத்த சொல்ல அவனும் என்னவோ ஏதோவென்று பயந்து காரை ஒதுக்குபுறமாக நிறுத்தினான்.

வண்டியை திரா நிறுத்திய அடுத்த நொடி வேகமாக இறங்கிய நீரு ஆசையாய் மழையில் நனைய தொடங்கினாள்.

அவளின் செயலை கண்டு புரிந்து விட , அவளின் மகிழ்ச்சியை கண்டு மழை பகவானிடம் நன்றி கூறினான்.

பின் அவளின் செய்கையை புகைப்படம் எடுத்துக் பத்திர படுத்திக் கொண்டான்.

****************

கோவை ரயில் நிலையம்

அவளின் நினைவு அவனின் இதழில் புன்னகையை பூக்க செய்தது.அதனுள் சேர்த்து கண்ணீரும் தொடுக்க சிரிப்புடனே அழுது கரைந்தான்.

அவனின் செய்கையை கண்டு மூவரும் நரேனை புரியாமல் பார்க்க ,சந்தியா தான் யாதவ் ஆதியின் காதில் ” இப்போ நரேன் எதுக்காக சிரிக்கிறான் எதுக்காக அழுகிறான்.பாக்கவே பயங்கரமா இருக்கே ” என்று அவனை பார்த்து இவர்களிடம் கேட்க

” அது எப்படின்னா டியும் பண்ணும் மாதிரி இல்லாம உன்ன மாதிரி பலாப்பழம் மாதிரி . வெளிய பாக்க முள் மாதிரி இருந்தாலும் அவனுக்குள்ள இருக்கிற நீரு அந்த பழம் மாதிரி இருந்து அவனை சிரிக்க வைக்கிறா டி ” என்றான் யாதவ்.

” என்னடா சொல்லி தொலையிற கொஞ்சம் புரியிற மாதிரி தான் சொல்லி தொலையேன் டா ” என்றாள் அவன் கூறியது புரியாமல்.

” இப்படி தான் நீயே டி பண்ணுன்னு உளறி கிட்டு இருக்கும் போது எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் “என்று கேட்க

” நாங்க எப்படி வேணாலும் பேசலாம் டா .ஆனா நீங்க தான் பேச கூடாது .அதுவும் இல்லாம எனக்கு கிடைச்ச அடிமைங்க கிட்ட சொல்லாம என்கிட்டயே வா நான் சொல்லிக்க முடியும் சொல்லு ” என்று நக்கலாக சொல்ல அவளை பார்த்து முறைத்து வைத்தான் யாதவ்.

ஆதி இவர்கள் இருவர் பேச்சு வார்த்தைகளில் கண்டு கொள்ளவில்லை.‌ மாறாக நரேனை கவனித்து கொண்டு இருந்தான்.

திடிரென பெரிய இடி ஒன்று இடிக்க ,அதே சமயம் திரா அவளின் நினைவில் தன்னை அறியாமலே ” நீரு ” என்று கத்தினான்.

அவனின் சத்தத்தை விட இடியின் சத்தம் காதை கிழிக்கும் விதமாக இருந்தது.

அதேநேரம் ” திரா ” என்ற பயந்த நீருவின் குரல் கேட்டிட வேகமாக எழுந்தான்.

” மச்சி நீரு இங்க தான் டா இருக்கா ” என்று சந்தோஷ மிகுதியில் நரேன் ஆதியிடம் சொல்ல

” நரேன் இங்க யாருமே இல்ல டா அதுவும் இல்லாம எங்களுக்கு எந்த வாய்ஸூம் கேக்கல ” என்றான் ஆதி.

” இல்ல நீரு என்னோட நீரு இங்க தான் இருக்கா ” என்றான்.

” நரேன் எங்களுக்கு எந்த குரலும் கேக்கல ” என்றாள் சந்தியா.

” இல்ல இல்ல இல்ல இல்ல எல்லாரும் பொய் சொல்றீங்க .என்கிட்ட இருந்து என்னோட நீருவ பிரிக்க பாக்குறீங்க ” என்று கத்தலானான்.






Advertisement