Advertisement

மாயம் 06
இன்றோடு ஒரு மாதம் கடந்திருந்தது…
சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி இருந்தாள் நீரு. அவளுக்கு துணையாகவே சாதனாவும் அங்கேயே அறை எடுத்து தங்கிக் கொண்டாள்.
இருவரும் ஒரே இடத்திலேயே வேலைக்கு செல்வதால் இரு தோழிகளும் அரட்டை அடித்த படியே வேலைக்கு சென்றனர்.
” ஹே சாது மா இன்னைக்கு சனி கிழமை தான அதுனால நாம ஈவுனிங் வெளியே போய் எப்போதும் போல சாப்ட்டு வரலாம் சரியா ” என்றாள் நீரு.
அவளை பார்த்து மார்க்கமாக சிரித்தவள் ” சரி சரி இப்போ ஆஃபிஸ் வரியா இல்ல இப்பவே அந்த ரெஸ்டாரன்ட் முன்னாடி போய் உட்காந்துக்கலாமா ” என்று புருவம் உயர்த்திட
அவளை கண்டு முறைத்தவள் ” அது ஏதோ போன வாரம் அந்த ரெஸ்டாரன்ட்ல இடம் இல்லாததுனால அப்படி சொன்னேன் .அதுக்காக இப்பவே போய் அங்க உக்கார முடியுமா சொல்லு ” என்றாள்.
” ஏன் டி கொஞ்சமாவது ஞாயமா பேசுறியா. நீ பண்றது எல்லாம் பாத்தா நல்லதாவே தெரியல பாத்துக்க. யாராவது ரெண்டு பேருக்கு ஐஞ்சு பேரு உக்கார மாதிரி டேபிள் கேட்டு சண்ட போடுவாங்களா சொல்லு ” என்று நக்கலாக கேட்க
” அச்சோ கண்டு பிடிச்சுருவாளோ ” என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியில் எதுவும் அறியா பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு ” நான் என்ன எனக்காக வா கேட்டேன். உனக்காக …” என்று சொல்ல வருவதற்குள் சாதனா அவளை கண்டு முறைக்க
” பச் !சொல்ல விடு டி பன்னி ” என்று  சிணுங்க
” சரி சொல்லி தொல ” என்றாள் .
” நான் என்ன எனக்காக வா கேட்டேன் .உனக்காகவும் நமக்காகவும் தான் கேட்டேன். நம்ம உக்கார ரெண்டு சீட் டேபிள்ல நம்ம சாப்பிடற புட் இருக்கும். அப்போ நம்ம கொண்டு வர பேக் வேலட்லாம் எங்க வைக்கிறது. அதுக்காக தான் இன்னொரு ரெண்டு சீட் . இதெல்லாம் உனக்காக தான் டி பண்ணேன் ” என்றவள் தோளை குலுக்கி விட்டு முன்னே நடந்தாள்.
நீருவின் பதிலை கேட்டு கடுப்பான சாதனா ” ஏண்டி இவ்வளோ கேவலமான ரீசன் சொல்ற இதுக்கு நீ என்னால சொல்ல முடியாதுன்னே சொல்லி இருக்கலாம் டி ” என்று கடுகடுத்தாள்.
” சொல்லி இருக்கலாம் தான் ஆனா பாவம் என் பிஞ்சு மனசு சொல்லுச்சி உன்னோட பீரங்கி மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு அதான் உனக்கு ஏத்த மாதிரி ஒரு உண்மைய சொன்னேன் ” என்றாள் சிறு குழந்தை போல்‌.
” என் மனச பீரங்கி மனசுன்னு சொன்னத கூட நான் ஈ ஏத்துக்கிறேன் டி. ஆனா உன்னோட மனச பிஞ்சு மின்சுற்று மட்டும் சொல்லாத அத என்னால சுத்தமா தாங்கிக்க முடியல ” என்று பொய்யான வேதனையை முகத்தில் காட்டி
” ஏன் ஏன்னாம் ” என்றாள் லிஃப்டிற்குள் நுழைந்த படி..
” உனக்கு பிஞ்சு மனசா இருந்திருந்தா நீ இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருந்திருக்க மாட்ட டி பன்னி ” என்றவள் அதற்குள் அவள் செல்ல வேண்டிய தளம் வந்து விட
” சரி நாம லஞ்ச்ல மீட் பண்ணலாம் ” என்று விட்டு சென்றாள்.
அவள் கூறியதை ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்த்தவள் ,” ஹோ நீயும் எனக்கு எதிரா இருக்கியா இரு இரு இன்னைக்கு உன் காசுல சாப்பிட்டு காச காலி பண்ணுறேன் ” என்று கோபமாக முணு முணுத்துக் கொண்டே இருந்தவள் நான்காவது தளம் வரவும் வெளியே வந்து அவளின் வேலை இடத்திற்கு சென்றாள்.
மதிய வேலையில் சாதனாவும் நீருவும்  கேண்டினில் சந்தித்துக் கொள்ள, நீரு அவள் நினைத்தது போலவே சாதனாவின் பணத்தை கரைக்க தொடங்கினாள்.
அவளின் செயலை வினோதமாக பார்த்தாலும் அவளுக்காக செலவு செய்தாள்.
நீருவை பொறுத்த வரை அது சாதனாவுடைய பணம் . ஆனால் உண்மையில் அது அவளின் திராவின் பணம்.
தான் தான் அவளுக்காக எதுவா இருந்தாலும் செய்ய வேண்டும் என்று குறிக்கோளோடு இருந்த அவனுக்கு பற்று கோளாய் இருந்து வருபவள் தான் சாதனா.
மதிய உணவை முடித்துக் கொண்ட இருவரும் அவரவர்களது இடத்திற்கு சென்று வேலையை தொடர்ந்தனர்.
அன்று மாலையே நீரு கூறியது போல் இருவரும் வேலை முடித்து வெளியே சென்றனர்.
டி நகர் முழுவதும் சுற்றியவர்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு ரெஸ்டாரன்டிற்குள் நுழைந்தனர்.
நீரு வருவதை கண்ட வேலையாளிகள் அனைவரும் ” இன்னைக்கு எத வச்சி சண்டை போட போறாங்களோ தெரிலயே ” என்று மனதிற்குள் புலம்பி தள்ளினர்.
புன்னகையோடு உள்ளே நுழைந்த நீரு தனக்கு ஏற்ற டேபிளை கண்டு அமர்ந்துக் கொண்டாள்.
அவர்களை நோக்கி பேரர் வந்து ” எஸ் என்ன சாப்பிடுறீங்க ” என்று தன்மையாக கேட்க
அவனை கண்டு முறைத்தவள் ” எங்க மேன் மெனு கார்ட் ” என்று காட்டமாக கேட்க
” மேம் இதோ ” என்று அவள் முன் நீட்டிட அதை வாங்கிய நீரு  ,மெனு கார்டை பார்ப்பதும் வெளியே கதவை பார்ப்பதுமாகவே இருந்தாள்.
அவளின் எண்ண ஓட்டத்தை அறிந்த சாதனா ஊமையாக சிரித்தாள்.
அதற்குள் பேரர் மீண்டும் ” ஆடர் மேம் ” என்றிட
” கொஞ்ச நேரம் கூட உங்களால வெயிட்டு பண்ண முடியாதா என்ன ” என்று நீரு சிடு சிடுக்க அவளிடம் இருந்து மெனுகார்ட்டை வாங்கிய சாதனா ” கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கியா சும்மா சும்மா சண்டை போட்டுக்கிட்டு” என்றவள் மெனு கார்ட் பார்த்து ஆடர் செய்து பேரரை அனுப்பி வைத்தாள்.
ஆடர் செய்தவள் மொபைலை நோண்ட விழிகளை கதவினை நோக்கியே செலுத்தி இருந்தாள்.
” ஹே ஆதி அண்ணா உன்னைய பாக்க வரலையா டி ” என்று வாசலை பார்த்தவாறே சாதனாவிடம் கேட்க
“வாடி ஏ அமுல் பேபி இப்போ தான் நீ எங்களோட வழிக்கே வந்துருக்க உன்ன வச்சி தான் கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணணும். கேண்டி க்ரஷ் விளையாட போர் அடிக்குதேன்னு இருந்தேன் வசமா சிக்கிக்கிட்ட ” என்று மனதில் எண்ணியவள் வெளியில் ” அது நரேன் அண்ணாக்கு ஏதோ வேலை இருக்காம் டி .அதுனால இந்த வாரம் வர முடியாதுன்னு ஆதி சொல்லிட்டான். நானும் சரி நீ வேலைய பாருன்னு சொல்லிட்டேன் டி ” என்றாள் மொபைலை நோண்டியவாறே..
” என்னது இன்னைக்கு வரலையா ” என்று உட்ச்சகட்ட அதிர்ச்சியில் கேட்க
” ஆமா டி . இதுக்கு எதுக்கு நீ இவ்வளோ ஷாக் ஆகுற சொல்லு.?வருத்த பட வேண்டிய நானே வருத்த படலையாம்மா உனக்கு இந்த அதிர்ச்சி சொல்லு சொல்லு ” என்று கண்களை மொபைலை விட்டு பிரித்தெடுக்காமலே கேட்க
“அது அது அது சும்மா தான் கேட்டேன். என்ன இருந்தாலும் எனக்கு அண்ணா தான அதான் கேட்டேன் ” என்றாள் வாய்க்கு வந்ததை ..
“ஹோ !! அம்புட்டு பாசமா உங்க நொன்ன மேல” என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே ” ஏன் உனக்கு இருக்கும் என் தங்கச்சி இருக்க கூடாதா என்ன..??” என்ற குரல் வர நீரு திடுக்கிட்டு அந்த நபரை பார்க்க சாதனா அசாதாரண பார்வையை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
அவளை பார்த்து முறைத்தவன் ” ஏன் மா தங்கச்சி உனக்கு இந்த அண்ணா மேல இவ்வளவு பாசம் இருக்குன்னு தெரியாம போச்சே ” என்று ஆதி சாதனா பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்த படி பேச நீருவின் செவிக்குள் ஆதி கூறுவது விழுந்தாலும் விழிகள் அதன் தேடலை தொடங்கி இருந்தது.
“எனக்கு இப்படி ஒரு தங்கச்சி கிடைச்சதுக்கு நான் எவ்வளவோ பெரிய புன்னியம் செஞ்சிருக்கேன்னே தெரியல . தேங்க்ஸ் டு காட் ” என்று மேலே பார்த்து சொல்ல
” அப்போ என்னோட தங்கச்சி கிடைச்சது உனக்கு எந்த கணக்குள டா வந்து சேரும் .எல்லாமே உன்னோட தங்கச்சிக்கே கொடுத்தினா அப்புறம் என் தங்கச்சிக்கு “என்று சிரித்த படி லாவாகா அமர்ந்து கேட்க ஆதி அவனை முறைத்து பார்க்க நீரு திகைத்து போய் பார்த்தாள்.
“அப்படி கேளுங்க அண்ணா ” என்று சாதனா ஆதியிடம் வாரை தொடங்க அதற்கு காரணமானவனோ நீருவையே பார்வையால் துளைத்துக் கொண்டு இருந்தான்.
” என்ன நீரு இப்படி உன் மாமாவ பாக்குற பாரு என் க்யூட்டான கன்னம் எல்லாம் சிவக்குது பாரேன் ” என்றவன் அவளின் ஆப்பிள் போல் சிவந்திருந்த கண்ணத்தை தொட்டு சொல்ல
அவனை கண்ட திகைப்பில் சிலையாக இருந்தவள் ,அவன் ஸ்பரிசம் படவும் உடனே உயிர் பெற்றாள் பாவையவள்.
உயிர் பெற்ற அடுத்த நொடியே அவனை கண்டு ஏகத்திற்கும் முறைத்து வைத்தவள், ” அறிவில்லையா உனக்கு கைய எடு மேன் ” என்று கையை தட்டி விட்டாள்.
“சரிங்க மிஸ் டார்லு எனக்கு புரிஞ்சிடுச்சி நீ ஏன் என் கைய தட்டி விட்டன்னு” என்றான் சில்மிஷமாக
” என்ன புரிஞ்சிது உனக்கு சொல்லு ” என்று மூக்கு விரைக்க அவள் கேட்க அதற்குள் அவர்கள் ஆடர் செய்த உணவு வர நரேன் அமைதியாக சாப்பிட தொடங்கினான்.
ஆனால் நீருவிற்கு தான் சாப்பாடு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. நரேனிற்கு என்ன புரிந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது.
” மிஸ்டர் .நரேந்திரன் நீங்க இப்போ சொல்ல போறீங்களா இல்லையா ” என்று மூக்கு சிவக்க கேட்டிட
அவளை பார்த்து ” லவ் யூ குலாபி ” என்றான் காதல் மின்ன
அவனை கண்டு ஏகத்துக்கும் முறைத்து வைத்தவள் வேகமாக சாப்பிட தொடங்கினாள்.
அவர்களை கண்டும் காணாமல் காதல் ரசத்தை ஓட்டிய இருவரும் அமைதியாக சாப்பிட ,அதன் பின் நால்வரும் கிளம்பி வெளியே வந்தனர்.
ஆதியும் சாதனாவும் முன்னாடி செல்ல பின்னே இவர்கள் இருவரும் வந்துக் கொண்டு இருந்தனர்.
“குலாபி ஏதாவது பேசு டி போர் அடிக்கிது .அதுங்கள பாரு எப்படி ரொமேன்ஸ் பண்ணிட்டு போகுதுன்னு நீயும் தான் இருக்கியே. ரொமேன்ஸ் கூட வேண்டாம் அட்லீஸ்ட் பேசவாது செய்லாம்ல  ” என்று சளித்துக் கொள்ள
” ஹோ சார் கூட பேசணுமா பேசலாமே ” என்று இழுத்தவள் ” எதுக்கு இங்க வந்தீங்க மிஸ்டர் ” என்று கடுகடுத்த படி கேட்டாள்.
“இது நீ பேசாமலே இருந்திருக்கலாம் டி ” என்றான்.
” பதில் சொல்லுங்க மிஸ்டர். பேச சொன்னது நீங்க தான அப்போ நான் கேட்ட  கேள்வியும் பேசுறதுக்கு சமம் தான் ‌.சோ ஆன்சர் பண்ணுங்க ” என்றாள் .
“பண்ணிட்டா போச்சி ” என்றவன் நாலாபுறமும் பார்வையை ஓட்ட விட்டவன் அவளை இழுத்து ஆள் அரவமற்ற இடத்திற்கு சென்றான்.
“என்ன பண்ணுற விடு முதல ” அவனிடமிருந்து விடுபட முயல ,அவளை நெருங்கியவன் இடையை பிடித்து தன்னோடு இறுக்கியவன் மூக்கோடு மூக்கு உரசி  ” எப்போ இது எனக்காக காத்திருக்காம இருக்குதோ அன்னைக்கு நான் வரத நிறுத்திருவேன். ஏன்னா அப்போ நீ என் பக்கத்துலையே இருப்ப குலாபி ” என்றவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தை பதித்தான்.
அவனை தள்ளி விட்டவள் ,வேகமாக அந்த இடத்தை காளி செய்து சாதனா ஆதியுடன் இணைந்து கொண்டாள்.
அவள் பின்னாடியே அவனும் வந்துவிட நால்வரும் கிளம்பினர்.
இருவரையும் ஹாஸ்டல் முன்பு இறக்கி விட்டவன் ,” நாளைக்கு ரெண்டு பேரும் மார்னிங் நைன்க்கு வெயிட் பண்ணுங்க சந்தியா மேரேஜ்க்கு ஷாப்பிங் போகலாம் ” என்றான்.
” முடியாது ” என்று சட்டென்று..
“சரி டா குலாபி ஷார்ப் அட் நைன் வில் பிக் அப் யூ ஓகே குட் நைட்டு ” என்று இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தான்.
வீடு வந்து சேர்ந்த நரேன் நேராக படுக்கையில் சென்று படுத்து கொண்டு அன்று நடந்த நாளை நினைக்க தொடங்கினான்.
******************
மழையின் தாக்குதலில் கோவையில் இருந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திகைத்து இருக்க ,அந்த குழுமையிலும் வெப்பமாக உணர்ந்தான் நீருவின் திரா.
அவனுக்கு அவளின் இருப்பின் உணர்வு தோன்றிய நொடியே இடி இடித்து அவளின் இருப்பை அவனுக்கு உறுதி செய்தது.
” டேய் ஆதி நீரு இங்க தான் டா இருக்கா அவளுக்கு இடின்னா ரொம்ப பயம் டா .அவளோட நான் இப்போ இருக்கனும் டா ” என்று அழுகையில் புலம்பியவாறே எந்திரிக்க முடியாமல் எந்திரித்த நேரம் மேலும் ஒரு இடி இடிக்க ” திரா ” என்ற குரல் இப்போது சத்தமாகவே கேட்டது..
“நீரு “
” நீரு ”
” நீரு ” என்று அவனது குரல் அந்த இடியையும் விட பலமாக கேட்டிட மழைக்காக ஒதுங்கி இருந்து சில நாய்களும் குறைக்க தொடங்கியது..
ஆதி யாதவ் சந்தியா என அனைவரும் நரேனை ஒட்டி தேட , பின் இறுதியில் நரேன் அவனின் இணையை கண்டு விட “நீரு ” என்று மென்மையாக அழைத்தான்.
பயத்தில் ஓர் இடத்தில் தன்னை முடக்கிக் கொண்டவள் ஜெபம் போல் நரேனின் பெயரையே சொல்லி கொண்டு இருந்தாள்.
அவளை நெருங்கிய நரேன் ” நீரு ” என்று அழைத்தவாறே அவளின் தோளில் கை வைக்க , யாரோ என்று பயந்த நீரு திடுக்கிட்டு எழ நரேனை கண்டவள் ஓடிச் சென்று அவனிடம் சரண் அடைந்தாள் ‌.
பயத்தில் உலன்று கொண்டு இருந்தவள் அவளின் அணைப்பை இறுக்கினாள். அதுவே அவளின் பயத்தை தெள்ளத் தெளிவாக கூறிட , நரேனும் அவளை இறுகி அணைத்துக் கொண்டான் காற்றுக் கூட புகாத வகையில்.
தேடிக் கொண்டே வந்த மூவரும் இவர்கள் இருந்த நிலையை கண்டு ,திரும்பி செல்ல எத்தனிக்கும் போது நீருவின் கண்களில் சந்தியா தென்பட நரேனிடமிருந்து தன்னை பிரித்தெடுக்க முடிவெடுத்தாள்.
நீரு விலக முற்பட நரேன் மேலும் மேலும் அவளை தனக்குள் புதைத்துக் கொண்டே சென்றான். எங்கே விட்டாள் மறைந்து விடுவாளோ என்றே பயந்தே அந்த அணைப்பு இறுகியது.
“நரேன் ப்ளிஸ் லீவ் மீ இட்ஸ் ப்பெயினிங் ” என்று சொல்லி விலக முயற்சிக்க
“நரேன் ” என்று வார்த்தையிலே அவளை கண்ட சந்தோஷம் எல்லாம் வடிந்து விட ,உடனே அவளை விட்டு விலகி நின்றான்.
விலக நினைத்தவள் தான் என்றாலும் அவன் விலகியதும் உயிர் வரை வலி ஏற்பட்டது அவளுள். அது அவள் கண்களில் அப்பட்டமாக தெரிய அதை விட நரேனின் கண்களில் சொல்ல முடியாதா வேதனை நிறைந்திருந்தது‌.
தன்னை மீட்டெடுத்த நீரு ” நீங்க எல்லாம் இங்க என்ன பண்ணுறீங்க..??” என்று கேள்வியாய் அனைவரையும் நோக்க
“எல்லாம் உன்னால தான் ” என்று பதில் வந்தது நரேனிடம் இல்லாமல் சந்தியாவிடமிருந்து…
” என்ன சொல்றீங்க..?? நான் என்ன பண்ணேன் ” என்று அப்பாவியாக கேள்வி தொடுக்க
” நீ என்ன பண்ணல ..?? எல்லாத்தையும் பண்ணிட்டு அமைதியா எதுவும் தெரியாதது போல் கேள்வி கேக்குற ” என்று சந்தியா சொல்ல
” உங்க எங்கேஜ்மெண்ட் ” என்று வார்த்தைகள் மென்று முழுங்கி நரேனை பார்த்தவாறே கேட்க
” எல்லாமே உன்னால தான் நின்னுடுச்சி ” என்றான் நரேன்.
அவள் புரியாமல் அவனை நோக்கி ,” நான் என்ன பண்ணேன் திரா..??”என்று கேட்க
” நான் போட்ட ப்ளான் எல்லாத்தையும் ப்ளாப் பண்ணது நீ தானே .அப்போ இந்த எங்கேஜ்மண்ட் நின்னதுக்கும் நீ தான காரணமா இருப்ப ” என்று கூறி வெற்று பார்வையை அவள் மேல் பதிக்க
நீரு ஆதி இருவரும் ஒன்னும் புரியாமல் நிற்க யாதவ்கோ தான் ஏதோ பஸ்சிலில் (Puzzle) நிற்பது போல் நின்றான்.சந்தியா மட்டுமே புன்னகையோடு நின்றிருந்தாள்.அவளை கண்டு புன்னகைத்த நரேன் நீருவை கண்டு ஏகத்துக்கும் முறைத்து வைத்தான்.
“நீங்க என்ன பேசுறீங்க எனக்கு ஒன்னும் புரியல . நான் என்ன பண்ணேன் உங்க எங்கேஜ்மெண்ட் நிக்க ” என்று நரேனை கண்டு கேட்க
” ஒரு ஸ்மால் கரக்க்ஷென் நீரு .எங்க எங்கேஜ்மெண்ட் இல்ல டா அது நம்ம எங்கேஜ்மெண்ட் .நீயே இல்லாதப்ப இந்த நிச்சயதார்த்தம் மட்டும் எப்படி நடத்த முடியும் சொல்லு . கொஞ்ச நேரம் நீ அங்கேயே இருந்துருந்தின்னா இந்த நிச்சயம் நல்ல படியா நடந்துருக்கும்.ஆனா எங்க மேடம் தான் ஏதோ தியாகி மாதிரி நான் சென்னைக்கு போறேன்னே கிளம்பிட்டிங்களே.அதுவும் இல்லாம என்னைய பேசவிடாம வேற அடிச்சிட்டு பொய்ட்ட .இதுல எங்க நிச்சயித்த நடத்துறது ” என்று சலித்துக் கொண்டு சொன்னான்.
அவனின் கூற்றை கேட்டு நீரு திகைத்து நிற்க ,” என்ன டா சொல்ற அப்போ சந்தியாவோட நிலைமை..??” என்று கேள்வியாய் பார்க்க
” அவளுக்கு தான் ” என்று சொல்ல வரும் போதே இடையில் புகுந்த சந்தியா ” எனக்கு தான் ஆல்ரெடி எங்கேஜ்மெண்ட் ஆய்டுச்சே .அதுவும் லவ்லி யாதவ் கூட ” என்று காதலாய் அவனை பார்த்து சொல்ல யாதவும் அவளை தான் பார்த்து இருந்தான்.
“எனக்கு மொதல இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுங்க .ஒரே கொளப்பமா இருக்கு ப்ளிஸ் கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா ” என்று வாய் விட்டே நீரு கதற
“சரி சரி நான் சொல்றேன் ஆனா இங்க வச்சி வேணாம். எதாவது ரெஸ்டாரன்ட் போய் சாப்பிட்டே சொல்லலாம் . அதுவும் இல்லாம உனக்காக இப்போ என் கால் அடிப்பட்டது தான் மிச்சம் ” என்று விட்டு அனைவரையும் அழைத்து சென்றான்.
நரேன் நடக்க கஷ்ட பட ,நீரு அவனை தாங்கிக் கொண்டு நடக்க நரேனின் முகத்தில் இதுநாள்வரை மறைத்து வைத்திருந்த காதல் வெளிப்பட அந்த வலியிலும் அது புன்னகையாக மலரச் செய்தது.
போகும் வழியில் நரேனை மருத்துவமனையில் காட்டிவிட்டு ஒரு ரெஸ்டாரன்டிற்குள் அனைவரும் நுழைந்தனர்.



Advertisement