Advertisement

இத்தனை நாட்கள் நடந்ததை கூறி முடித்த நரேன் பெரும் மூச்சை இழுத்து விட அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள் நீரு.

அவன் கூறிய பின்பு கனத்த அமைதி அங்கு நிலவியது. அங்கு இருந்த எவராலும் பேச முடியவில்லை. நரேனின் கஷ்டங்கள் புரிந்து விட அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தனர்.

நீருவிற்கு அவனின் காதல் புரிந்தும் தன்னை ஏமாற்றி உள்ளான் என்பதே மனதில் தோன்ற கோபத்தை ஆயுதமாக எடுத்து அந்த அமைதியை கலைத்தாள்.

“நீ என்ன பெரிய தியாகியா டா .பெரிய இவன் மாதிரி பண்ணி இருக்க . உனக்குலாம் எவன் தான் நரேந்திரன்னு பேரு வச்சாங்களோ ” என்று கோபமாக பேச

“ஏய் என்ன டா வா ” என்று வாயை பிளக்க அடுத்து சொன்னதில் பிளந்த வாயை அடைத்துக் கொண்டான்.

” பொய்க்கே பொறந்திருக்க போல பொய்யோட மன்னனே நீயா தான் இருப்ப உனக்குலாம் நரேந்திரன்னு பேரு வச்சிருக்க கூடாது பொய்திரன்னு தான் வச்சி இருக்கனும் ” என்று கத்திக் கொண்டே போக ,அதில் இடை புகுந்தவன் “அப்போ கூட திராவ விட மாட்டேங்கிற பாரேன்.இது தான் என் நீருன்றது ” என்று காதலாய் சொல்ல

“மண்ணாங்கட்டி ” என்றவள் பக்கத்தில் இருந்த ஃபோக் ஸ்பூனை எடுத்து குத்த வர அதனை கண்டவன் தெரித்து ஓட தொடங்கினான்‌. அவள் பின்னாடியே காளியை போல் ஓடினாள் நீரு.

அவர்களை கண்டு வாய்விட்டு சிரிக்க தொடங்கினர்.

நீரு அவனை துரத்திக்கொண்டே ஆழ் அரவமற்ற இடத்திற்கு வந்து விட ,அந்த இருட்டு இடத்தை பார்க்கவே அவளுக்கு பயம் வந்து தொற்றிக் கொள்ள “திரா ” என்று பயத்தில் அழைத்தாள்.

எந்த ஒரு பதிலும் வராமல் போகவே , பயத்தில் வேர்வை துளிகள் வருகை தந்து விட அது கூட சேர்ந்து அழுகை வருவதற்கு சான்றாக உதடுகள் பிதுங்க தொடங்கிய நேரம் அவளின் மெல்லிய இடையை பிடித்து இழுத்து அழுந்த இதழில் முத்தத்தை பதித்தது.

அந்த தொடுகையை கூறியது அது நரேன் தான் என்று. இதழில் ஆரம்பித்த முத்த போராட்டம் முடிவு பெறாமல் இருக்கவே அவளின் வேர்வை துளிகளும் போட்டிக்கு படை எடுத்து வர , அதனை வர விடாது அதனையும் சேர்த்து சுவைக்க தொடங்கினான் நீருவின் திரா.

முதலில் திமிறிய நீரு அவனின் தாக்குதலில் அவனுடன் கரைய தொடங்கினாள்.

இருவருமே மூச்சு விட சிரம பட , முதலில் சுதாரித்த நீரு அவனிடமிருந்து கடினப்பட்டு பிரிந்து நின்றாள்.

“இது முத்தம் என்னோட காதல் பரிசு நீரு மா ” என்றவன் அவள் முகத்தில் கோலம் போட அதை தடுத்தவள்,”  உன் காதல் பரிசு ஒன்னும் எனக்கு தேவை இல்லை .அதை நீயே வச்சிக்கோ ” என்றவள் அவன் இதழில் துளிகள் சொட்ட சொட்ட இதழை சுவையை திருப்பி தர முயன்றாள்.

சில நிமிடங்களில் அவனை விட்டு தள்ளி நின்றவள் , ” இதோட கணக்கு முடிஞ்சது” என்று கூறி திரும்ப எத்தனிக்க அவளின் வலக்கை பிடித்தவன் தன்க்குள் நெருங்கி நிற்க வைத்தவன் ,”  என்ன மாயம் செய்தாயோ காதல் என்றதின் அர்த்தம் புரிவதற்கு முன்பே காதலாய் நுழைந்தவள் நீயே ..!!!என்னுள்ளே மாயாமாகி என்னை செதுக்கியவளும் நீயே..!!! உனக்கான உயிரை என்னுள் பதித்தவளும் நீயே..!!! நேசமாய் ஊன்றி காதலாய் வலுப்பெற்று உயிராய் வளர்ந்து நெஞ்சமெல்லாம் நிலைத்து வாழ்க்கையில் வண்ணத்தை தந்தவளே என் வாழ்வின் இறுதி வரையும் வண்ணமாக வந்து வாழ்வை வசந்தமாக்குவாயா..???” என்று காதலை அவனுக்கு தெரிந்த வகையில் கூறி அவள் விழியை நோக்கி பார்வையை பதிக்க

அவனின் செயலிலும் பேச்சிலும் ஒரு முறை திகைத்தாலும் அவனை தள்ளி விட்டவள் ,” அவ்ளோ சீக்கிரம் என்னோட காதல் உனக்கு கிடைக்காது என்ன சந்தியா அக்காவ வச்சி ஏமாத்துனல . என்கிட்ட காதல வரவைக்க கொஞ்சம் கஷ்ட படலாம் தப்பே இல்ல ” என்றவள் சிட்டாக பறந்து விட்டாள்.

அதன் பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு,அங்கேயே ரூம் எடுத்து தங்கி கொண்டனர்.

அடுத்த நாள் அவன் எழும் போதே அவன் கண் முன் காகிதத்தால் நீரு எழுதி வைத்து விட்டு சென்றிருந்தாள்.

” சென்னைக்கு போறேன் டா பொய்திரன். அத்தைக்காக அன்பை பொழிஞ்சது போதும் கொஞ்சம் அத்த பெத்த ரத்தினத்துக்கும் காட்டி வாழ்க்கையில செட்டில் ஆக பாரு டா திரா .அதுக்கான வேலையை பாரு ” என்று இருந்தது. அதனை கண்டு சிரித்தவன் அடுத்த கட்ட வேலையை தொடங்கினான்.

________________________

அனைத்தையும் நினைத்தவன் அடுத்த நாள் செய்ய வேண்டியதை நினைத்த படியே உறங்கி போனான்.

காலையில் சீக்கிரமாகவே எழுந்த நரேன் வேகவேகமாக கிளம்பி விட அப்போதும் உறங்கிக் கொண்டிருந்த ஆதியின் முகத்தில் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றி எழுப்பி விட்டான்.

” டேய்..!!அறிவு கெட்டவனே ஏன்டா இப்படி பண்ண .??” என்று முகத்தை தொடைத்த படி கேட்க

“சீக்கிரம் கிளம்பு டா மணி ஆகுல ” என்றவன் அவனை இழுத்து குளியலறைக்குள் துரத்தி விட்டான்.

அதன் பின் இருவரும் கிளம்பி அவர்கள் ஹாஸ்டல் சென்று விட , அவர்கள் இருவரையும் பிக்கப் செய்து மாலிற்கு அழைத்து சென்றனர்.

சந்தியா யாதவ் திருமண நிகழ்விற்கு ஆடைகள் எடுத்துக் கொள்ள ,நீரு எடுத்த உடையின் நிறத்தை போலவே நரேனும் ஆடை தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

அதன் பின் நால்வரும் சேர்ந்து அங்கிருந்த ஃபுட் கோர்ட்டில் உணவை முடித்தனர்.

பின்னர் அங்கேயே நேரத்தை கழிப்பதற்காக மூவி பார்த்து விட்டு வெளியே வர மாலை ஆனது.

அதன் பின்னர் , நரேன் இவர்கள் மூவரையும் திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து வந்தான்.

ஒரு காதல் ஒரு மோதல் ஜோடியும் அவர்களது இணையுடன் தனித்து விடப்பட ,தனியே ஒரு இடத்தை பார்த்து அமர்ந்து கொண்டாள்.

நீரு அமர்ந்ததை கண்டு நரேனும் அமர செல்ல அதற்குள் அவன் முன் ஒரு பெண் வந்து நின்று ” நீங்க நரேந்திரன் நரேன் தானே ” என்று ஆவலாய் கேட்டிட

அவனும் ” ஆமா..! நீங்க..???” என்று கேள்வியாய் நோக்க

” என்ன தெரியலையா சீனியர் நான் தான் ஸ்ரீதேவி உங்களோட தேவி என்ன மறந்துட்டிங்களா சீனியர். நான் கூட உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணேன்னே ” என்று அவள் பாட்டுக்கு சொல்ல அவனின் பார்வையோ நொடிக்கொரு முறை நீருவை தீண்டியது.

“சீனியர் இப்பவும் நான் சிங்கிள் தான். நீங்க சிங்கிளா இருந்தா நாம வேன்னா கமிட் ஆகலாம் ” என்று தயங்கி சொல்ல நீருவோ ருத்தரகாலியாக மாறிக்கொண்டே இருந்தாள்.

எரிக்கும் சக்தி இருந்திருந்தால் இன்னேரம் அந்த  ஸ்ரீதேவி என்னும் பெண் கருகி சாம்பலாகி போய் இருப்பாள்.தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பற்களை நறுநறுவென கடிக்க தொடங்கி இருந்தாள்.

“நானா நான் சிங்…..” என்று நரேன் சொல்ல வருவதற்குள் முன்பே எழுந்த நீரு பக்கத்தில் இருந்த கட்டையை எடுக்க ,அதை கண்டும் அதையாது நின்றவனை கண்டு ” எங்க சிங்கிள்ன்னு சொல்லு பாப்போம் ” என்று சவால் விட

” இரு டி சொல்றேன் ” என்றவன் ” நான் சிங்கி…” என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டை அவன் மீது வந்து விழுந்தது.

” நீ சிங்கிளா டா எரும ” என்றவள் அவனை நெருங்க

” இப்போ எதுக்கு கிட்ட வர ,வராத அங்கேயே நில்லு ஒழுங்கா  ” என்றே பின்னே நடக்க

” ஒழுங்கா நில்லு டா” என்றவள் ஓட்டமெடுக்க ,அதற்கு முன்பே ஓட துவங்கினான் அவன்.

” குலாபி உன் திரா பாவம் தானே .‌இப்படி பண்ணாத டி ” என்ற படியே ஓட

” ஒழுங்கா நில்லு டா .இப்போ நீ நிக்கலன்னா நீ எப்போதும் சிங்கிள் தான் பாத்துக்கோ  ” என்று துரத்திய படியே மிரட்ட

அப்படியே நின்றவன், ” அதான் நீ ஓகே சொல்ல மாட்டேங்கிறியே ” என்று ஏக்கத்துடன் சொல்ல

” அதுக்கு நீ சிங்கிள் ஆகிட முடியுமா ” என்றே முச்சிறைக்க சொல்ல

” சரி எங்க ஐ லவ் யூ சொல்லு பாப்போம் ” என்று காதலாய் கேட்க

” அதெல்லாம் சொல்ல முடியாது ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“அப்போ ஓகே ” என்றவன் ” தேவி ” என்று அழைக்க போக அதற்குள் வார்த்தைகள் தடைப்பட்டு இதழ் யுத்தங்கள் பேசத் தொடங்கியது.

சிறிது நேரத்திலே விடுவித்த நீரு ” போனா போகுதுன்னு சொல்றேன் .நல்லா கேட்டுக்கோ ” என்றவள் ,

” லவ் யூ திரா ” என்று கண்களில் காதலை தேக்கி சொன்னாள்…

“லவ் யூ டு நீரு “என்று கத்தினான்…

சந்தியா திருமணத்திற்கு வந்த பொழுது இரு குடும்பத்து முன்னிலையில் இருவரது காதலை சொல்லி விட அனைவரும் அதற்கு மகிழ்வோடு சம்மதித்தனர்.

நீரு ஆசைப்பட்டது போல் இயற்கை சுழலின் நடுவில் அவர்கள் திருமணம் அழகாக நடந்தேறியது…

நீருவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சினையும் தான் மட்டும் தான் போடுவேன் என்று அடம்பிடித்து ஒவ்வொரு முடிச்சிற்கும் ஒரு முத்தத்தை பரிசாக அளித்தவன் , இறுதியில் ” என்ன மாயம் செய்தாயோ “என்றே தன்னில் பாதியாக ஆக்கிக் கொண்டான்.

அன்று மாலையே ஊட்டியில் பெரிய ரிசப்ஷனாக வைத்து அவர்கள் கம்பெனி எம்ப்ளாயிஸ் அண்ட் பார்ட்னர்ஸ் எல்லாரையும் வரவழைத்திருந்தார் அமுதவேல்.

அனைவரும் அவர்களை வாழ்த்தி விட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் நீரு தன் தாயை போல் கருதும் குட்டி தேவதையின் வருகை தர ,அவளை ஓடிச் சென்று தூக்கி கொண்ட நீரு கண்ணத்தில் அழுந்த முத்தத்தை பதித்தாள்.

இதனை கண்ட நரேனிற்கு புகை வராத குறை தான் .காலையில் இருந்து தன்னை நெருங்க விடாது எட்டி நிற்க வைத்த மனையாளை முறைத்து பார்த்தான். அவள் அதை கண்டு கொள்ளாது அந்த குட்டி தேவதையுடன் பேச்சு கொடுத்து கொண்டு இருந்தாள்.

அதன் பின் நேரங்கள் கடக்க , விருந்தினர்கள் அனைவரும் சென்ற பிறகு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர்.

இரவு நல்ல நேரம் பார்த்து ,நீருவை விளக்கேற்றி வைத்து நரேனின் அறைக்கு சாதனாவும் சந்தியாவும் அனுப்பி விட்டனர்.

வெட்கத்தோடு வரும் தன் மனையாளுக்காக காத்திருந்த நரேனிற்கு , அவன் எண்ணத்தில் சூடான பாலை ஊற்றுவது போல் கோபமாக வந்து நின்றாள்.

உள்ளே வந்தவளின் அழகினை இரச்சித்தவாறு இருந்தவனின் தலையில் நங்கென கொடுத்து வைத்தவள் , அவள் கொண்டு வந்த பாலை நீட்டினாள்.

இப்போ நீ எதுக்கு கொட்டுன டி குலாபி ” என்றே தலையை தேய்த்தவாறு கேட்க

நீ பண்ணி வச்ச வேலைக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி பாத்துக்க .இப்ப நீ குடிக்கிற பால்ல வெசத்த தான் கலந்து கொடுத்திருக்கனும். ஆனா புருஷனா பொயிட்டியே அதுனால விடுவேன்” என்றாள் கோபமாக

“அப்படி என்னத்த தாண்டி பண்ணேன் கொஞ்சம் சொல்லிட்டு தான் திட்டேன் “என்க

“ஏன்டா அந்த நிச்சயத்தை நிறுத்த உனக்கு என்னோட கற்பு தான் கிடைச்சிதாடா எரும. எல்லாருக்கும் முன்னாடியும் நமக்கு கல்யாணம் ஆகி எல்லாம் முடிஞ்சிருக்குன்னு சொல்லி வச்சிருக்க .உனக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு “என்று முடியை பிடித்து ஆட்ட

“அடியேய் !அத நான் எங்க அம்மாகிட்ட மட்டும் தான் டி இந்த பொய்ய சொன்னேன் . அதுனால தான் இந்த கல்யாணத்துக்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சம்மதிச்சாங்க ” என்று தலையில் இருந்த அவளின் கைகளை பிடித்தவன் இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

ஏன் டா நீ எதையும் உண்மைய சொல்லியே பண்ண மாட்டியா .உனக்கு பொய்திரன்னு பெயர் வச்சது சரியா தான் இருக்கு போ ” என்று முகத்தை சிலுப்பிக் கொண்டாள்.

அவளின் இரு கன்னத்தையும் தாங்கியவன் “எனக்கு நீ வேணாம்னு நான் நினைச்சதே இல்ல நீரு மா .எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையால்ல தான் நாம பிரிஞ்சி இருக்க வேண்டியதா போச்சி. என்னோட காதல் முடிவில்லா காதல் டி .எனக்கே எனக்காக பிறந்தவ நீ உன்ன விட்டுட்டு ஒருநாளும் இருந்திட மாட்டேன். அடுத்து எதாவது நீ என் குழந்தைய வயித்துல சுமக்குறன்னு ஒரு பொய்ய சொல்லியாவது உன்ன கல்யாணம் பண்ணி இருப்பேன் டி குலாபி ” என்றான்.

“ச்சீ..!!!போடா எருமை ” என்று அவன் மடியில் இருந்து எந்திரிக்க முயல , நரேனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் போனது.

அவளது காது மடலிற்கு குனிந்தவன் ,” இந்த பொய்திரன் சொல்ல நினைச்சத்த மெய்யாக்கி என்னைய மெய்திரனா ஆக்கு டி “என்று நீருவின் உடலில் இதழ்கள் உரச பேசிட , அதில் தன் முழு பயத்தையும் இழந்தவள் அவனோடு ஊடலில் கரைந்து கூடலில் இருவரையும் இணைத்து புது சங்கமத்தை உருவாக்கினர்.

பிறப்பிலேயே இவர்களுக்கு இவர்கள் தான் முடிவெடுக்க பட்டு விட ,அதை மாற்ற நினைத்து எவ்வளவு செய்தாலும் அவர்களின் பிணைப்பே அவர்களை ஒன்று சேர்க்கும்…

-*-முற்றும்-*-

Advertisement