Advertisement


“அது .! ஏதோ சொல்ல வந்தேன்ல மறந்துட்டேன் . ஞாபகம் வந்தா அப்புறமா சொல்றேன் சரியா ” என்று சந்தியா கூற

“இப்போ என்கிட்ட மறைக்கிற அளவுக்கு என்ன விஷயம் சந்தியா .அப்போ உனக்கும் நான் முக்கியம் இல்லையா ” என்று விட்டு இருக்கையில் இருந்து எழுந்தான்.

” அட ச்சி உக்காரு ” என்று அவனின் கை பிடித்து அமர வைத்தாள்.

“அது வந்து கம்மிங் ஃபெப்ரரி 14 th எனக்கு நிச்சயதார்த்தம் டா . அதான் நீ இருக்கிற நிலைமைல எப்படி சொல்றதுன்னு தெரியல அதான் சொல்லல “என்றாள்.

புன்னகையை தவழ விட்டவன் ,” ஏன் நான் பொறாமை பட்டுருவேன்னு நினைச்சியா ” என்றான் கேள்வியாக

“அப்படியே ஒன்னு விட்டேன்னா பாரு ஓவரா பேசுற ” என்று கோபமாக சொன்னவள் ” நீ நிம்மதியா இரு உனக்கான சொல்யூஷனோட வரேன் ” என்று விட்டு நகர்ந்து சென்றாள்.

அதன் பின் நாட்கள் செல்ல செல்ல நரேனிற்கு இதயம் கனகனத்தது.

அந்த நாளும் வர ,அன்று காலையே சந்தியா நரேனிற்கு அழைத்து ஒரு பூங்காவின் பெயரை சொல்லி அதை நீருவிடம் சொல்லி வர சொல்லுமாறு  சொல்லி இருந்தாள்.

அதேபோல் நரேனும் நீருவிற்கு அழைத்து வர சொல்லி இருந்தான்.

பல கனவுகளுடன் நீரு அந்த பூங்காவிற்கு வர ,நரேனோ எதற்காக என்று அறியாமல் கூட சந்தியாவிற்காக பூங்காவின் வெளியே நின்றிருந்தான்.

சந்தியா வந்ததும் ” எதுக்கு இப்போ அவள இங்க வர சொன்ன சந்தியா ,இப்போ நீ என்ன பண்ண போற ” என்று தவிப்பாய் அவளின் கேட்டான்.

” அது வந்து நாம ரெண்டு பேரும் காதலிக்கிறோம்னு நீ சொல்ல போற அதுவும் அதுக்கு காரணம் நீ தான்னு சொல்லனும். இன்னைக்கு காலையில தான் என்னோட காதல ஏத்துக் கிட்ட மாதிரி நீ அவ கிட்ட சொல்ல போற . இதான் என் ப்ளான்” என்று அனைத்தையும் கூறினாள்.

அவள் கூற கூற அவனுக்கு கோபம் வரத் தொடங்கியது.

“நீ என்ன பேசுற என்னால எப்படி அவ மனச உடைக்க முடியும் சொல்லு .இது நடக்கிற காரியமே இல்லை . என்னால என்னைக்குமே என் நீருவோட மனசை காய படுத்த முடியாது ” என்றான் உறுதியாக

” அப்போ அவளோட காதல ஏத்துக்கோ ” என்க தானாகவே தலை கவிழ்ந்தான் நரேன்.

“முடியாதுல அப்போ நான் சொல்ற மாதிரி நடி ” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

நீருவை தன் மறுப்பை மறைமுகமாக சந்தியாவை வைத்து சொன்னவன்னால் நீருவை நிமிர்ந்து பார்க்க கூட முடிய வில்லை. அது புரிந்து புரியாமலோ நீருவே அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற அடுத்த நொடியே பக்கத்தில் இருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவன் ,”பாரு நீயே நல்லா பாரு சந்தியா என்னோட நீரு எப்படி கண் கலங்கி போறான்னு இதுக்கு தான் இப்படி பண்ண மாட்டேன்னு சொன்னேன் ” என்று சொல்லி அவனும் அழுதிட


வரிகளால் வடிவிக்க முடியவில்லை

எந்தன் காதலின் ஆழத்தை..!!!

விழிகள் விவரித்தது

எந்தன் காதலை நீரின் தோற்றத்தில்..!!!

பெண்களுக்கு மட்டுமே கண்ணீரே வருவதில்லை ஆண்களும் அழுவார்கள் விழிகளினால் அள்ள மனதினால். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனதினிலே அடக்கி வைத்து அதற்கான அடுத்த கட்ட வேலையை செய்ய தொடங்குவார்கள்.

சந்தியா அவளுக்கு ஆறுதல் படுத்த முயன்று தோற்று போனாள்.

அதன் பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் சந்தியாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு வந்து விட்டு சென்றான்.

அன்று மாலையே அவளது நிச்சயத்திற்கு வந்தவன் சிறிது நேரத்திலே கிளம்பி விட்டான்.

ஒவ்வொரு முறையும் சந்தியாவினால் மட்டுமே நரேனால் நீருவை தவிர்க்க முடிந்தது.

ஒரு மாதம் கடந்த நிலையில் சந்தியா தான் வற்புறுத்தி அவனை ஊட்டிக்கு அழைத்து வந்தாள்.

வீட்டில் உள்ள எல்லோரிடமும் நரேந்திரனின் காதலி என்றே அறிமுகமாக்கி கொண்டாள்.

வடிவுக்கரசிக்கு சந்தியாவை பிடித்து போக அவளை தன் மருமகளாக்கி கொள்ள நினைத்து கணவரையும் அழைத்துக் கொண்டு சந்தியாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர்.அவர்களும் சம்மதம் தெரிவித்து விட வேகமாக அனைத்து வேலைகளும் நடை பெற்றது.

இதில் நிம்மதியை குலைத்து நின்றது என்னமோ நரேன் தான் .சந்தியா மிகவும் சந்தோஷமாக அந்த ஊரை சுற்றி வலம் வந்தாள்.

அப்படி இருந்த நிலையில் தான் நரேன் இங்கு நடப்பது எதுவும் பிடிபடாமல் சந்தியாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்திருந்தான்.

” நீ என்ன நினைச்சி இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க சந்தியா ” என்று அடக்கப்பட்ட வலியோடு கேட்க

” நான் ஒன்னும் பண்ணல பா எல்லாம் அதுவா நடக்குது . எப்படி இந்த மேரேஜ் நடக்காது அப்புறம் என்ன மேன் சில் ” என்று சொல்லி இயற்கையை ரசிக்க தொடங்கினாள்.

“எப்படி இந்த கல்யாணத்த நிறுத்த போற உனக்கு எதாவது கிறுக்கு பிடிச்சிருச்சா ” என்று கேட்க

” எனக்கு எப்பவுமே என்னோட யாதவ்வ மட்டும் தான் பிடிக்கும் பா வேற எதுவும் பிடிக்காது ” என்றே சொல்லி அவனை பார்க்க

” என்ன நக்கலா ” என்றவன் அவளை கண்டு முறைக்க

“கவல படாத டா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது .ஆனா உனக்கு நடக்கும் ” என்று பொடி வைத்து கூற

” என்ன சொல்ற நீ கொஞ்சம் தெளிவா சொல்றியா . எனக்கு நீரு வ தவிர யாரோட கரத்தையும் பிடிக்க முடியாது ” என்று சொல்லி விட்டு ” இப்போ ஏன் இப்படி சொன்ன .அதுக்கான காரணத்தை மட்டும் சொல்லு ” என்றே கேட்க

“ம்ம் எல்லாம் உங்க அம்மாவால தான் யா. நான் எப்பவோ போயிருக்க வேண்டியது. ஆனா உங்க அம்மா பண்ண நினைச்ச காரியத்துனால தான் இப்ப வரைக்கும் நீடிக்குது ” என்றாள்.

“என்ன சொல்ற ..??” என்று கேள்வியாய் அவளை நோக்க

“அது வந்து அன்னைக்கு ஒரு நாள் யார்க்கிட்டையோ உங்க அம்மா ஃபோன் பேசிட்டு இருந்தாங்க .இந்த கல்யாணம் முடிஞ்சதும் நீருவை போட்டு தள்ள சொல்லி. அப்போ தான் முடிவு பண்ணேன். அவ உன்ன விட்டு தள்ளி இருந்தா அவளோட உயிருக்கு ஆபத்துன்னு அதுனால தான் உங்கள சேத்து வைக்க நினைச்சேன் .உன்ன மீறி எதுவும் பண்ண முடியாதுல அதான் இந்த ப்ளான் இப்படி கண்டின்யூ ஆகுது ” என்று இதுநாள்வரை மறைத்து வைத்திருந்த உண்மையை கூறினாள் .

அதனை கேட்டவனுக்கு அத்தனை கோபம் . ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.

பின் சந்தியா சொன்னதை போல் நீருவை திருமணம் செய்ய சம்மதித்தான்.

இவர்களின் ப்ளான் எதுவும் அறியாத நீரு சென்னை செல்ல முடிவெடுத்து சென்றும் விட்டாள்.

இவர்களும் நிச்சயத்தை நிறுத்தி விட்டு இவளை காண வந்துவிட்டனர்.

Advertisement