Advertisement

மாயம் 07
ரயில் நிலையத்திலிருந்து நீருவை நரேன் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து வந்தான்.
அங்கு ஒரு மயான அமைதி நிலவ அதை கலைக்கும் விதமாக நீருவே பேச தொடங்கினாள்.
“இப்பவாது சொல்லு இங்க என்ன தான் நடக்குது எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அதனால தான் கேக்குறேன் கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன் “என்று நீரு கேட்க
அவளின் வலப் புற கையை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன் பரம்பரை இரகசியமாக வைத்திருந்த நிகழ்வுகளை கூறத் தொடங்கினான்.
” உனக்கு மலர் அத்த எப்படி இறந்தாங்கன்னு தெரியுமா நீரு “என்று கேட்க , அவளோ ” அம்மா ஆக்சிடன்ட்ல தான இறந்து போனாங்க ” என்று என்று சொல்லும்போதே அவள் கண்கள் கலங்க செய்தது.
அவளின் கலங்கிய விழிகளை கண்டவன் பற்றிய கைகளை அழுத்தமாக பற்றினான். அதிலே தன்னை தேற்றிக் கொண்டவள் , ” இப்போ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் திரா ” என்று புரியாமல் கேட்க சந்தியாவை தவிர்த்து அனைவரும் புரியாமலே அவனை பார்த்தனர்.
“என்னோட அத்த தானா உயிர விடல நீரு அவுங்களா தனக்கு வாழ விருப்பம் இல்லாம இறந்துட்டாங்க ” என்று வருத்தத்துடன் கூற ,இப்போது அவள் கைகளுக்குள் அவன் கைகள் அடங்கியது..
“அன்னைக்கு உண்மையா என்ன நடந்துச்சின்னா அம்மா அத்தைய ஒரு பார்க்க்கு வர சொல்லி பேசி இருக்காங்க. எங்க அம்மாவுக்கு எங்க நீ இந்த மருமகளா வந்துருவியோன்னு பயம் அதுனால எங்க அம்மா கிட்ட பேசி பயமுறுத்திருக்காங்க. அதே நினைவுல வந்த அத்தைக்கு ஆக்சிடன்ட் ஆகவும் அந்த ட்ரைவரே ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்து இருக்காரு. சரியான நேரத்துல கொண்டு போய் சேர்க்கவும் அத்தைய காப்பாத்திருக்காங்க நீரு. ஆனா அத்தை அம்மா சொன்னதையே நினைச்சி பயந்து போய் அவுங்களே அவுங்களோட ஆக்சிஜன் ட்யூப எடுத்து விட்டு அவுங்களோட உயிர மாய்ச்சிக்கிட்டாங்க ” என்றான் அடக்கப்பட்ட வலியோடு…
“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் திரா சொல்லு ..சொல்லு ” என்று அவன் கைகளை விட்டு சட்டையை பிடித்து உலுக்க
“எனக்கு இதெல்லாம் அந்த டிரைவர் தான் சொன்னாரு நீரே . இவர் போய் அத்தைய பார்க்கும்போது அவுங்களோட கடைசி நொடியில இருந்திருக்காங்க அப்போ தான் டாக்டர கூப்பிட ட்ரை பண்ணும் போது இத சொல்லி வேணாம்னு சொல்லி நம்மளவிட்டுட்டு பொய்டாங்க நீரு மா ” என்றான் விழிகளில் நீரோடு…
அவளுக்கு அது ஏனோ இப்போது நடந்தது போல் தோன்ற அன்று வராத கண்ணீர் இன்று வந்தது.
அதை துடைத்து தன்னை சரி செய்து கொண்டவள் , அவனின் பேச்சை கவனிக்க தொடங்கினாள்.
” எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் நீரு .நீ எப்போ அத்த வயிற்றுல கருவா இருக்கன்னு தெரிஞ்சதோ அப்பவே நான் உன்ன என் மனசு பூறா நிறைச்சி வச்சிக்கிட்டேன். நீ வளர வளர உன்னோட நெருக்கமானவுங்க உன்கிட்ட பேச ஆரம்பிச்சா அத நீ அசைவுகள்ள காட்ட ஆரம்பிச்ச , ஏன் சில நேரம் உன்கிட்ட பேசும்போது கூட அசைவுகள்ள காட்டாம இருக்கிற நீ , நான் பேசும்போது மட்டும் எப்போதுமே அசைவு கொடுப்ப தெரியுமா .அப்பவே என்னோட மனசு வானத்துல பறக்கிற மாதிரி உன்ன சுத்தியே பறக்கும். நீ குழந்தையா வெளில கொண்டு வந்து காட்டும் போது எனக்கான உயிர் என்கிட்ட வந்துடுச்சின்னு அவ்ளோ சந்தோஷபட்டேன். நான் உன்கூடவே இருக்க வேண்டி வீட்டுக்கு கூட போக மாட்டேன் தெரியுமா..???என் உலகமே உன்ன சுத்தி தான் சுழல விட்டிருந்தேன். இப்படியெல்லாம் இருந்த என் உலகத்துல இடி மாதிரி இடிச்சி என் வாழ்க்கைய சுக்கு நூறாக உடைச்சது எங்க அம்மாவோட செயல் அதுக்கு விலையா அத்த விட்ட உயிர் ” என்றவன் வெகுவாக கலங்கி போனான்.
அவனிற்கு ஆறுதலாக சந்தியா தோல் பற்றி சமாதானம் படுத்த ,அதை கண்ட நீரு விழிகள் நெருப்பை கொட்டியது. இதனை கண்ட திராவிற்கு இழந்த அத்தனை தெம்பும் கிடைத்தது போல் இருந்தது. அதனை தொடர்ந்து அவன் பேசத் தொடங்கினான்.
” எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல நீரு .ஒருபக்கம் நான் நேசித்த நேச்சிக்கிற ஏன் இந்த உலகமே அவ தான் இருக்கிற ஒரு பக்கம் , இன்னொரு பக்கம் எங்க அம்மாவோட எண்ணம் அத்தையோட இறப்புன்னு என்னால எந்த பக்கமும் நிக்க முடியாம தவிச்சேன். அதுக்கப்புறம் அத்தையோட இறப்புக்கு காரணம் என்ன ரொம்ப பாதிக்க ஆரம்பிச்சது அதுலர்ந்து திசை திருப்பவும் உன்கிட்ட இருந்து விலக நினைச்சு தான் நான் பெஸ்கெட் பால் (Basketball) விளையாட ஆரம்பிச்சேன். ஆனா அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி இந்த யாதவ் வந்து உன்கிட்ட பேசினான். எவ்வளோ முயற்சி பண்ணியும் என்னால அமைதியா இருக்க முடியல” என்று நரேன் அடுக்கிக்கொண்டே போக யாதவை கண்டு ஏகத்திற்கும் முறைத்து வைத்து கொண்டு இருந்தாள் சந்தியா.
இதனை கண்ட ஆதி யாதவை கண்டு சிரிக்க , இங்கு இவர்கள் யாரும் இல்லாதது போல் நீருவும் திராவும் பேசிக்கொண்டு சென்றனர்.
“ஏன் திரா என்ன விட்டு பிரியனும்னு நினைச்ச ” என்று கவலை தேய்ந்த குரலில் கேட்க
” அப்போ இருந்த நிலைமை நீரு மா என்னால எத பத்தியும் யோசிக்க முடியல . அத்தையோட நினைப்பு மட்டும் தான் இருந்துச்சி .அவுங்களோட இறப்புக்கு காரணம் எங்க அம்மா அவுங்களோட வார்த்தைகள் . அத நிஜமாக்கி இறந்தவுங்களோட காரணத்தை உண்மையாக்க விரும்பல டா அதான் இப்படி பண்ணேன் ” என்றான்.
அவனின் வார்த்தைகள் யாவும் அவன் தன் அன்னையின் மீது வைத்திருந்த பாசத்தை காட்ட , அவளுக்குள் இருந்த காதலும் கிணற்று அடியில் இருந்து தண்ணீர் சுரப்பது போல் சுரந்து வெளி வர தொடங்கியது…
இவர்கள் காதல் இரசனனையை கண்ட அனைவரும் ஒரே போல் ” ஓஓஓஓஓஓஓ ” என்ன கத்த , இருவரும் திடுக்கிட்டனர்.
“கொஞ்ச கேப் கிடைச்சா போதுமே சிந்துல கெடா வெட்டுறது .ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் இப்ப நீ சொல்ற ” என்று ஆதி அவர்களின் இன்றைய எண்ணவோட்டத்திற்கு கொண்டு வந்தான்.
பார்வையை திருப்பிய நரேன் அவனை பார்த்து முறைத்தவன் , மீண்டும் சொல்லத் தொடங்கினான்.
“உன்ன விட்டு பிரிய நினைச்சேன் நீரு. அதுக்கு ஏத்த மாதிரி என்னோட படிப்பு இருந்துச்சா அதான் அடம் பிடிக்கிற மாதிரி நடிச்சு நான் கோவைக்கு வந்துட்டேன். அதுக்கப்புறம் படிப்புன்னே பொய்டுச்சி . நான் படிப்ப முடிச்சப்ப நீ வந்த ,உன்ன தனிய விட என்னோட மனசு ஒத்துக்கல அதுனால அங்கேயே பீஜி ஜாயின் பண்ணேன். அந்த மூணு வருஷம் அமைதியா இருந்த மனசு உன்ன பாத்ததும் என்ன மாயம் நடந்துச்சோ பேயாட்டம் ஆடிருச்சி டா. உன்கிட்ட பேச வரவுங்க எல்லாத்தையும் மிரட்டி பேச விடாம பண்ணதுக்கப்புறம் தான் நிம்மதியாவே மூச்சு விட ஆரம்பிச்சது . அப்புறம் சாதனா ஆதி எல்லாரும் வரவும் என் மனச ஓரளவுக்கு கன்ட்ரோல் பண்ண முடிஞ்சது அதுவும் உன் கண்ணுல எனக்கான காதலை பார்க்கிற வரைக்கும் தான் . அதுவும் இல்லாம நீ உன் காதலை சொல்ல காத்திருக்கன்னு தெரிஞ்ச பிறகு…” என்றவன் கடந்த கால நிகழ்வை கூறத் தொடங்கினான்.
வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கழிந்திருந்த நேரத்தில் தான் நீரு நரேனை அழைத்து வரும் சனிக்கிழமை சந்திக்கிலாம் என்று கூறி இருந்தது.
இதை கேட்டவனுக்கு எவ்வாறு ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருக்க ,அப்போது சந்தியா அவனை தேடி வந்தாள்.
“ஹே நரேன் ..!!!வாட் ஹேப்பண்ட் மேன் ..??ஏன் இப்படி உக்காந்துருக்க..?? உன்கிட்ட ஒரு ஹேப்பி ந்யூஸ் சொல்லலாம்னு தான் இவ்வளோ வேகமா வந்தேன் ” என்று சந்தியா கூற
நரேன் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்ட சந்தியா ,” என்ன ஆச்சி டா ஏன் இப்படி டல்லா உக்காந்துருக்க..?? ஏன் உன் நீரு இன்னைக்கு உன்கிட்ட பேசலையா என்ன ” என்று நக்கலடிக்கும் தோரணையில் கூற
“இப்போ அவ கூப்பிடதுனால தான் பிரச்சனையே ” என்று சொங்கி போல் முகத்தை வைத்து கூறினான்.
” நீயா இது ..??” என்பது போல் ஆச்சரியமாக பார்த்தாள் சந்தியா.
“ஏன் இப்படி பாக்குற சந்தியா ” என்று பயந்தவனாய் நடிப்பது போல் கேட்க
” உனக்கே இது ஓவரா தெரியல .இங்க உள்ள நிறைய பல பேருக்கு தெரியும் நீ நீருவ காதலிக்கிறது. இதுல நீ அவ கால் பண்ணது தான் பிரச்சனைன்னு சொல்ற ” என்று சிரித்து அவனை கடுப்பேத்தி விட
“நானே டென்ஷனா இருக்கேன் சந்தியா நீ வேற கடுப்படிக்காத சரியா ” என்றவன் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட ,அதிலே சந்தியாவிற்கு  ஏனோ சரியில்லை என்று புரிபட என்னவென்று கேட்டாள்.
“முதல இப்ப ஏன் இப்படி டல்லா உக்காந்துருக்கன்னு சொல்லு அசே ஃப்ரேண்டா என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியும்னு பாக்குறேன் ” என்று சொல்ல
” February 14 th அவளோட லவ்வ சொல்ல போறான்னு நினைக்கிறேன் சந்தியா . அதான் பயமா இருக்கு அவள விட்டு விலக தான் நினைக்கிறேன். ஆனா இப்போ அவளாகவே நெருங்கி வரா இதுக்கெல்லாம் காரணம் எங்க அம்மா தான். அத்தை கிட்ட மட்டும் அப்படி பேசாம இருந்திருந்தா பிரச்சனையே இருந்திருக்காது . நானும் அவளும் சந்தோஷமா இருந்திருப்போம். இப்போ எல்லாம் தலைகீழா மாறிப்போச்சு ” என்று கவலை தேய்ந்த குரலில்….
” டேய் உங்க அத்தை இப்போ இந்த உலகத்துலையே இல்ல டா. உயிரோட இல்லாதவுங்கள பத்தி நினைச்சு உயிரோட இருக்கிறவள கொன்னுடாத டா. அதுவும் அவ சின்னு பொண்ணு கண்டிப்பா இதெல்லாம் தாங்கிக்க மாட்டா ” என்று அவன் மூலைக்கு எட்டும் படி எடுத்துரைக்க ஆனால் அவன் மூலையோ கம்பளிக்கு கம்பளி போட்டு தன்னை முழுவதுமாக மூடிக்கொண்டது.
“நீ சொல்ற லாஜிக் எல்லாம் மனசுக்கு புரியாது சந்தியா .என்னோட நீருவ எனக்காக இந்த உலகத்துக்கு கொண்டு வந்து கொடுத்ததே என்னோட மலர் அத்தை தான். அவுங்களோட சாவுக்கு ஏதோ ஒருவகையில நான் காரணமா பொய்ட்டேன் ” என்று கூறிய நரேன் வராத புன்னகையை வரவழைத்துக் கொண்டான்.
அவனின் பேச்சில் வேறென்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக சந்தியா நிற்க ,அவனே பேச்சை தொடர்ந்தான்.
” சந்தியா !நீ ஏதோ சொல்ல வந்த அப்புறம் என்னோட நிலைமையை கேட்டு சொல்லாம விட்டுட்ட என்ன விஷயம் ” என்று கேட்டான்….

Advertisement