Advertisement

பகுதி – 18
ஓ… அப்பொழுது… முரளி அண்ணா இதைச் சொல்லத் தான் அன்று உங்களை அழைத்தாரா?” எனவும் அவன் தலை தன்னால் ஆடியது. இரண்டு நிமிடம் மௌனம் காத்தவள் மனம் நிலாவிற்காக வருந்தியது.
பாவம் அவர்கள்… இவ்வளவு நாள் உங்களை விரும்பி இருப்பார்கள். ப்ச்…பெற்றோர்கள் செய்த தவறால் பாதிக்கப்பட்டது என்னவோ நிலா அக்கா தான். அவர் மேல் கோபப்படாதீர்கள். பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். எனக்கென்னவோ நீங்கள் பொறுமையாக உங்கள் நிலையை எடுத்துக் கூறினால் அவர் புரிந்து கொள்வார் என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் நான் அவரிடம் பேசவா?” என்று அனு அக்கறையில் வினவினாள்.
அதெல்லாம் வேண்டாம் அனு. இப்போது அவள் இருக்கும் நிலையில் உன்னை கண்டால் ஆக்ரோஷமாகி விடுவாள். நானே இதை பார்த்துக் கொள்கிறேன். என் மேல் நம்பிக்கை வை. இன்னும் சில நாட்கள் தான் பின் எல்லாம் சரி ஆகிவிடும். அதுவரை நான் அங்கு சென்று தான் ஆக வேண்டும், வேறு வழி இல்லை. இப்போது அவள் நம் வீட்டில் தான் இருக்கிறாள். அவர்கள் வீட்டில் சண்டை போட்டு அங்கு வந்து விட்டாள். அம்மா தான் பார்த்து கொள்கிறார்கள். நான் காலையில் ஆஃபீஸ் செல்வதால் என்னை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் இன்று வெளியில் போக வேண்டும் என்று ஒரே அடம். அவளை சமாதானம் செய்ய முடியாமல் அரை நாள் விடுப்பு எடுத்து அவள் கூடவே இருந்தேன். இரவு தூங்கியதும் சத்தம் இல்லாமல் இங்கு வந்து விடலாம் என்று நினைத்தேன்எல்லாம் தலை கீழாக மாறி விட்டது. ப்ச்… என் மேலே எனக்கு வெறுப்பு வருகிறது அனு. இத்தனை வருடம் அவள் கூட பழகிய பின்பும் அவள் மனதில் வேறு எண்ணம் இருப்பதை காணத் தவறி விட்டேன். ஒரு வேளை முன்னரே தெரிந்திருந்தால் அவளை இவ்வளவு கஷ்டபட விட்டுருக்க மாட்டேன். அப்பொழுதே சரி செய்திருப்பேன்…” என்றவனின் குரலில் துக்கம் கரைபுரண்டோடியது.
அவளை இந்த நிலையில் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. என் கண்முன்னே வளர்ந்தவள் இப்படி மனப்பிரம்மையில் மூழ்கிவிட்டாள்எப்படி சரி செய்யப்  போகிறேன் என்று தெரியவில்லை.” என்றவன் வருந்த அனு யோசனையில் ஆழ்ந்தாள்.
தன்னோடு காலையில் பேசிய பெண் யாரென்பதற்கு இப்போது விடை தெரிந்து விட்டது. ஏதோ ஒரு வகையில் தானும் அவளுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று அவள் மனம் கூற, மூளையோ நீ இல்லை என்றாலும் ஆதி அவளை மணந்திருக்க மாட்டான் என்று வாதாடியது. எது எப்படி இருந்தாலும் அவளை சரி செய்தால் தான் ஆதி நிம்மதியாக இருப்பான்அவன் மனம் சந்தோசமாக இருந்தால் தான் தனக்கும் மகிழ்ச்சி என்றெண்ணியவள் ஒரு முடிவிற்கு வந்தாள்.
இதற்காகத் தான் இப்போது மாமா உங்களை அங்கு வரச் சொன்னாரா?” என்ற அவளது கேள்விக்கு ம் போட்டான்.
நீங்கள் ஏன் அக்காவை பார்த்து வரக்கூடாது? ஏதாவது பிரச்னையாய் இருக்கும்அதனால் தான் மாமா உங்களை கூப்பிட்டிருக்கிறார்.”
என்னால் அங்கு போக முடியாது அனு. இரண்டு நாட்களாக சரியாக தூங்க வேறு இல்லை.” என்றான் கண்களை தேய்த்தபடி.
ம்ம்… நம்பி விட்டேன். விளையாடாதீர்கள் போய் என்னவென்று பார்த்து வாருங்கள்.” என்று அவள் எழும்ப அவளை பிடித்து நிறுத்தினான்.
நாளைக்கு பார்த்துக் கொள்கிறேன் அனு. உன் புத்தகம் எல்லாம் சரியாக இருக்கிறதா? இந்த பிரச்சனையெல்லாம் மனதில் இருந்து தூர தூக்கி போட்டு, படிப்பில் கவனம் செலுத்துபரிட்சை வரப் போகிறது, குறைந்த நாட்களே இருக்கிறது…” என்று அவன் படிப்பை பற்றி பேசவும் அதில் ஆர்வமானாள்.
ம்… நாளையில் இருந்து படிக்கிறேன். ஹால் டிக்கெட் வரப் போகிறது என்று பேப்பரில் போட்டிருந்தார்கள். எப்படி பார்ப்பது?”
அவன் அதை விளக்கி கூற ஆர்வமுடன் கேட்டவள் இடையில் தன் சந்தேகத்தை வினவினாள்.
இந்த பரிட்சை எல்லாம் முடிந்ததும் என்ன செய்வது? எப்படி, எங்கே மேலே படிப்பது?”
நீ விரும்பும் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுத குறைந்தபட்ச வயது 21. உன் கையில் முழுதாக மூன்று வருடங்கள் இருக்கிறது. அதில் டிகிரி முடிக்க சரியாக இருக்கும்படிக்கும் நேரம் போக மீதி நேரத்தை எக்ஸாமிற்கு செலவிடு… என்ன பேச்சையே காணும்?” என்று அவன் விளக்க அதை மும்மரமாக கேட்டவள் ஏதோ சிந்தனையில் அமைதியானாள்.
இல்லை… அத்தை வேறு இன்னும் நம் மேல் கோபமாக இருக்கிறார்கள்இதில் நிலா அக்கா பிரச்சனை வேறு…  இதில் நிச்சயம் அவர்களுக்கு என் மேல் இருந்த கோபம் அதிகமாகி இருக்கும்இதில் நான் படிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால்…” என்று அவள் பிரச்சனையில் வருந்த அதை சற்றும் விரும்பவில்லை அவன்.
இப்போ தானே சொன்னேன் இதை எல்லாம் மறந்துவிடுயென்று. அதை சரி செய்வது என் வேலை, புரிகிறதா? நிலா விஷயத்தை கவனிப்பது என் பொறுப்பு. அப்புறம் அம்மா உன் படிப்பிற்கெல்லாம் தடை போட மாட்டார்.” என்று அவள் முகம் ஏந்தி கூறினான்.
அதில்லைஅப்படியே அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டாலும் கயலை ஏற்றுக் கொள்வார்களா? அவளை எப்படி தனியே விடுவது?” என்று தயக்கத்துடன் ஒலித்தது அவள் குரல்.
நான் அவளை தனியாக விட்டு விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் இவ்வளவு சொல்லியும் நீ அதையே பிடித்து தொங்குகிறாய்என் மேல் உனக்கு இருக்கும் நம்பிக்கை அவ்வளவு தான், அப்படித் தானே?” என்று அவன் சற்று கறாராக கேட்க தன்னையே நொந்து கொண்டு அவனை சமாதானம் செய்ய இறங்கினாள்.
அப்பொழுது என் வேலை என்ன?” என்று கேட்டாள் சற்று குறும்போடு.
அவள் முகத்தை தன் ஆள்காட்டி விரலால் தீண்டியவன், “என்னை ரொமான்ஸ் செய்வது…” என்றான் சற்று கிறங்கி.
ஹான்…” அவன் ஏற்படுத்திய உணர்வுகளில் சிக்குண்டவள் தன்னை மறக்க அவன் இதழ் அவளிடம் சேர்ந்தது.
சில நிமிடங்களில் தன்னை விட்டு விலகியவனை சந்தேக பார்வை பார்த்தாள். தன்னை சமன் படுத்தியவன் அவளின் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்தவனாய் பேச்சை மாற்றினான்.
யாருக்கோ தூக்கம் வருகிறது என்றார்கள், யாரது?” என்று தேடுவது போல் பாவனை செய்தான்.
நான் தூங்கி விட்டேன்…” என்று சிரித்துக் கொண்டே அவள் கண்களை மூடிக்கொண்டாள் மனதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு. அவனுக்கு இதில் விருப்பம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிய குழம்பினாள். முன்தினம் வரை ஆசையாய் தங்கள் உறவை முன்னெடுக்க முயன்றவன் ஏன் திடீரென்று விலகுகிறான் என்பதை நினைத்து விடை தெரியாமல் தூங்கிப் போனாள்.
அவன் தான் புரண்டு புரண்டு தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கினான். ஆதவன் உயிர்களுக்கு புத்துயிர் அளிக்க, அதைப் போல புதிய உத்வேகத்தோடு விடிந்தது இந்த தம்பதியற்கு.
அப்பா… இன்றைக்கு அங்கு வர வேண்டுமா? அவள் எப்படி இருக்கிறாள்?” என்று ஆதி போனில் நலம் விசாரித்தான்.
இப்பொழுது பரவாயில்லை ஆதி. தூக்கமாத்திரை கொடுத்திருக்கிறார்கள், மாலை வரை எப்படியும் எழ மாட்டாள். நீ அதுவரை வர வேண்டாம். என் மருமகளை எங்காவது வெளியில் கூட்டிப் போ…” என்றார் மறுமுனையில் கோபால்.
அவர் கூறியது மற்றும் நேற்று நடந்ததை மனதில் போட்டு உலம்ப அதை கேட்டுவிட முடிவு செய்தான் “நேற்று ஏதும் பிரச்சனை செய்தாளா? நான் கோபமாக வந்துவிட்டேன். அவளுக்கு சீக்கிரம் கவுன்சிலிங் குடுக்கச் சொல்லுங்கள்.”
“எப்போதும் போலத் தான் ஆதி. உன்னை காணவில்லை என்றதும் ரூமில் இருந்த பொருட்களை உடைத்து விட்டாள். எப்படியோ உன் அம்மா தான் சமாதானம் செய்தாள். இன்று காலை உன் மாமா வந்ததும் அவளை டாக்டரிடம் கூட்டி போனோம். எல்லாம் சரி ஆகிவிடும், நீ மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே…” என்றவர் அதற்கு மேல் இந்த விஷயத்தை பெரிது படுத்த விரும்பவில்லை.
சரி அதைவிடு அவளை எங்காவது வெளியில் கூட்டிப் போய்வா. நான் டிரைவரிடம் கார் அனுப்புகிறேன்.”
வேண்டாம்பா… உங்களுக்கு தேவைப்படும், நான் முரளியிடம் வாங்கிக் கொள்கிறேன்.” என்றான் தன் தந்தையின் வார்த்தைகளை புரிந்து கொண்டு. தன் தந்தையும் கயல் இருப்பு பற்றி புரிந்துகொண்டது இதயத்தில் இதம் பரப்பியது.
சரி ஆதி… பார்த்து போய் வாருங்கள். நாளை நகை கடை போக வேண்டும். எப்படியும் உன் அம்மா மருமகளுக்கு ஒன்றும் வாங்க மாட்டாள். நாம் தான் செய்ய வேண்டிய முறை எல்லாம் செய்ய வேண்டும். முடிந்தால் அவளையும் கூட்டி வாஅவளுக்கு பிடித்ததே வாங்கிக் கொடுத்து விடலாம்.” என்றவர் போனை கட் செய்ய ஆதி அனுவை தேடி போனான். 
… 
அனுஅனு… இன்னும் என்ன செய்கிறாய்? சீக்கிரம் வா.”
அக்கா… கிளம்ப இவ்வளவு நேரமா?”
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் கோபால் சொன்ன ஐடியாவிலும் மூவரும் வெளியில் எங்காவது சென்று வரலாம் என முடிவெடுத்து இவர்கள் இருவரும் கிளம்பி நிற்க அனு வேலையெல்லாம் முடித்து தயாராக சற்று நேரமாகி விட்டது. அதற்குள் இவ்வளவு கூப்பாடு இருவரும்.
இதோ வருகிறேன்எனக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் இருவரும் கிட்சனை இரண்டாக்கி விட்டு இப்போது நான் கிளம்புவதற்குள் கத்துகிறீர்கள்.” என்று சலித்துக் கொண்டாள் அனு தன் துப்பட்டாவை சரி செய்தபடியே.
அக்கா… இந்த சல்வாரில் அழகா இருக்க. இனி இது மாதிரியே போடு.” என்று கயல் அனுவை கட்டிக்கொள்ள,
“ஹலோ… மேடம்ஸ்… படம் பத்து மணிக்கு உங்க பாச மழையை கொஞ்சம் தள்ளி வையுங்கள்.” என்று அவர்களை பிரித்தான் ஆதி.
என்ன கும்பகர்ணன் உனக்கு உதவினானா?” என்றபடியே உள்ளே நுழைந்தான் முரளி. அனைவரின் பார்வையும் அவனை நோக்க,
ஏன்டா…என்பது போல் முறைத்தான் ஆதி.
வாங்க அண்ணா… பூரி சுட்டு தருகிறேன் என்ற பெயரில் இருவரும் சேர்ந்து மாவை கீழே கொட்டியது தான் மிச்சம்.” என்று உவகையாய் சலித்துக்கொண்டாள் அனு.
முரளி… நேரமாகிறது கார் கீயை கொடு.” என்று ஆதி பிடுங்க கையை மேலே உயர்த்தினான் முரளி.
நான் வந்தது அதற்காக அல்லஅங்கிள் கயலை என்னுடன் கூட்டி வர சொன்னார்கள். நீங்கள் இருவரும் வெளியில் சென்று வாருங்கள்.” என்று முரளி கூற கயலிற்கு பயம் தொற்றிக் கொண்டது.
யாரை இவர் கூறுகிறார்எதற்கு நான் இவருடன் போக வேண்டும்கதிர் பற்றி ஏதாவது பேச வேண்டுமா? என்று கேள்விக் கணைகள் அவள் மனதை மொய்த்தன.
அப்பாவா…” என்று இழுத்த ஆதி ஒருவேளை சடங்கு அது இதுவென்று கூறினாரே அதற்கு தான் கூப்பிடுகிறாரோ, என்றெண்ணி சம்மதித்தான்.
அனுவிற்கும் ஒன்றும் புரியவில்லை ஆதி அப்பா கூப்பிட்டார் என்பதனால் அவளை வீட்டில் விட்டு இவர்கள் இருவரும் பைக்கில் கிளம்பினர்.
அவர்கள் சென்ற பின் கயல் புறம் திரும்பியவன், “உன்னிடம் முக்கியமாக பேச வேண்டும்.” என்றதுமே பக்கென்று ஆகிவிட்டது கயலிற்கு.
முரளியின் இறுகிய முகமும் எதையும் கணிக்கும்படி இல்லை.

Advertisement