Advertisement

பகுதி – 14
என்ன?” என்று முகம் சுளித்தவன், “போனுக்காகவா இவ்வளவு அழுகை?” என்று லேசாய் முறுவலித்து அவள் கன்னம் ஏந்தி உப்பு நீரை துடைத்தான், “சரி ஏன் உடைத்தாய்?” என்று வினவ மீண்டும் அவள் கண்கள் உவப்பு நீரை இறக்க தயாராகியது. 
இதற்கெல்லாம் ஏன்டி இவ்வளவு அழுகிறாய்?” என்று சலித்தவன் கோபம் கொள்வதற்குள் முந்திக்கொண்டாள், “எனக்கு அது பிடித்திருந்தது. அதுவும் நீங்கள் எனக்காக  வாங்கிக் கொடுத்தது.” என்றாள் வெகுளியாய் கன்னத்தை துடைத்தபடியே.
சீட்டியடித்தபடியே  அவளின் வெகுளித்தனத்தை எண்ணி அவளை இறுக கட்டிக் கொள்ள அவன் தந்தை அழைக்கும் குரல் கேட்டு அவன் பிடியிலிருந்து வெளி வந்தாள் அனு.
அப்புறம்… உன் மாமனார் என்ன சொன்னார்?” என்று தன் சட்டையை மாற்றிய படியே கேலி கலந்து வினவ அவன் உடை மாற்ற போவதை பார்த்து வெட்கி வெளியேறினாள்.
அவளின் வெட்கப் புன்னகையை தன் கடைக்கண்ணால் ரசித்து இதழ் விரித்தவன் மனம் மறுநிமிடமே தன் தந்தை பக்கம் சாய்ந்தது. என்ன சொன்னார் என்று தெரியவில்லையே, என்றெண்ணியபடியே உடை மாற்றி வெளியே வரவும் கோபால் அவனை பார்த்து ஒரு அர்த்தப் பார்வை வீசவும் சரியாக இருந்தது. அதை உணர்ந்து அவருக்கு பதில் பார்வை வீசியவன் “அனு… அனு…” என்று கூவ அவனுக்கு வேகமாக தண்ணீர் கொண்டு வந்தாள் அவன் மனையாள்.
அதை வாங்கி ஒரே மடக்கில் பருகியவன், “நான் வர நேரமாகும். நீ இரவு தூங்கிவிடு எனக்காக காத்திருக்காதே. கதவை நன்றாக தாழிட்டுக்கொள்.” என்று அவசரமாக உத்தரவுகள் பிறப்பித்தவனை  இடைமறித்தவள், “உடனே போக வேண்டுமா? இரவு உணவு? நேற்று சாப்பிட்டீர்களா?” என்று அவள் கேள்விகளை அடுக்க கோபால் மனம் நிறைந்தது.
அனுவிற்கு தன் மகன் மேல் காதல் இருப்பது அப்பட்டமாய் தெரியும் போதே அவர் மனதுள் ஆதியை பற்றிய கவலை எழுந்தது. ஏதோ அவசரத்தில், உதவியாய் இவளை திருமணம் செய்தாலும், அவன் மனதில் வேறொரு பெண் இருப்பாளோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. அதை இன்று எப்படியும் தெரிந்துக் கொண்டேயாக வேண்டும் என்ற முடிவுடன் வந்தவர் தன் மகனின் செய்கைகளை பார்த்து தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொண்டார். 
தன் மனதில் வேறொரு பெண்ணை வைத்துக்கொண்டு மூன்றே நாளில் தன் மனைவியிடம் எந்த ஒரு ஆணும் சகஜமாக பழக முடியாது என்ற அவரது கருத்தை உறுதி செய்தார் போல் இருந்தது ஆதியின் நடவடிக்கை.
அவன் வந்தவுடன் அனு தயங்காமல் அவனுக்கு உதவியது, இவன் அவளிடம் அக்கறையுடன் பத்திரமாக இருக்க சொல்வதிலே தெரிந்தது இவர்களின் அன்யோன்யம். இரண்டொரு நாட்களில் இப்படி ஒரு இணக்கமா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது அவனின் அடுத்த செயல்.
சாப்பிட்டுவிட்டு தூங்கு. நேற்று இரவே நீ சாப்பிடவில்லை.” என்று வருந்தியவன் அவள் நெற்றியில் வேகமாக தன் இதழ் ஒற்றி எடுத்தான்.
அவன் வாக்கியத்தில் கண்கள் விரிய ஆச்சர்ய பார்வை வீசியவள், “எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று வினவ அவளை அணைத்து விடுவித்து புன்னகை மட்டுமே பதிலளித்தான்.
கயலை பார்த்துக்கோ…” என்றவன் அவளிடம் கையசைத்து விடைபெற்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, 
“நான் இன்னொரு தினம் வருகிறேன் மா. பத்திரமாக இரு. இது என்னுடைய எண் ஏதாவது உதவி வேண்டுமானால் கூப்பிடு.” என்று கோபால் தன் போன் நம்பர் கொடுத்து விட்டு அங்கிருந்து தன் காரில் விடை பெற்றார்.
அம்மாடி அனுஎங்க மாப்பிள்ளை? அவரிடம் சரியாகக் கூட பேசவில்லை.” என்றபடியே ஒரு தட்டில் இனிப்புடன் வெளியே வந்தார் அவள் சித்தி.
அவர் முக்கிய வேலையாக வெளியே சென்றிருக்கிறார் சித்தி. நீங்கள் இரவு இங்கே தானே இருக்கப் போகிறீர்கள்… நாளை காலை பார்த்துக் கொள்ளலாம். அவரிடம் உங்களை பற்றி கூட சொல்ல மறந்துவிட்டேன்.” என்று தலையை லேசாக அடித்துக்கொண்டாள். அவனிடம் தன் சித்தியை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று ஆவலோடு நினைத்திருந்தவள் அவனை பார்த்ததும் வேறு ஏதோ யோசனையில் அழுது கொட்டிவிட்டாள்.
ஓ… இரவு வந்து விடுவாரில்லைநான் அப்பொழுது பார்த்துவிட்டு கிளம்புறேன். உன் தம்பியை பற்றி தெரியாதா என்னஎதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று என்னை ஏலம் போட வில்லை என்றால் அவனுக்கு தூக்கம் வராது. நான் இங்கே வருகிறேன் என்று சொல்லாமல் தான் வந்தேன். உன் சித்தப்பா வேறு தேடுவார்.” என்று பேசியவரை குறுக்கிட்டாள் அனு, “அவர் இரவு வருவது சந்தேகம் தான் சித்தி. நேற்றும் இரவு வீட்டிற்கு வரவில்லை. நீங்கள் இன்று ஒரு நாள் தங்கி விட்டு போங்களேன்…” என்று அவரை கொஞ்சினாள் அனு, அவரின் முக பாவனையை பார்க்கத் தவறி.
என்ன? இரவு தங்க மாட்டாரா? அப்பொழுது எங்கிருப்பார்?”, ஏனோ அவள் சித்தியின் மூளை எச்சரிக்கை மணி அடித்தது.
ஏதோ வேலை சித்தி. இல்லையென்றால் வீட்டில் தான் தங்குவார்.”
ஏய்…இரண்டு நாள் தானே ஆகி இருக்கிறது திருமணமாகி, அதற்குள் என்ன வெளியில் வேலை அப்படி வீட்டில் கூட இருக்க முடியாமல்? காலையில் ஆபீஸ் தானே போகிறார். இது என்ன போலீஸ் மாதிரி 24*7 வேலையா?” என்று பதற்றமாய் அவர் வினவ சித்தி கேட்பதும் சரி தானேஎன்று அனு மூளை தன் வேலையில் மூழ்கியது.
ஏனோ எனது மனதிற்கு இது சரியென்று தோன்றலடி. நீ கொஞ்சம் அவரோட பேசு. என்ன பிரச்சனை என்று பார். திருமணம் ஆன இரண்டே நாளில் வெளியில் தங்குவது எல்லாம் தவறு.” என்று அவர் பேச பேச இவளுக்கு சங்கடமாய் இருந்தது.
அதெல்லாம் ஒன்றும் இல்லை சித்தி. நீங்கள் ஏதேதோ மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். அவர் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்று அந்த விஷயத்தை உதறி தள்ளி விட்டு அடுத்த விஷயத்துக்கு மாறினாள்.
சித்தி இரவு உணவு செய்ய வேண்டும். எனக்கு உதவுங்கள்.” என்று அவரை உள்ளே இழுத்துச் சென்றாள் அனு.
இவர்களின் இந்த உரையாடல்களில் கயலை முழுவதுமாக மறந்தனர். அவள் தனி அறையில் கதிருடன் பேசலாகினாள்.
கதிர்அக்காவிடம் உண்மையை சொல்லி விடலாம் என்று நினைக்கிறேன்.” என்று கயல் பேச மறுமுனையில் கால் கட்டானது.
இது என்ன அபசகுணம் என்று பதறிய கயல் மறுமுறை கால் செய்ய அவன் எடுத்தான், “சாரி, பாலன்ஸ் முடிந்து விட்டது. என்ன சொன்னாய் நீ?” என்று அவன் வினவ மீண்டும் தன் யோசனையை முன் வைத்தாள்.
இப்போது வேண்டாம் செல்லம். இன்னும் சில நாட்கள் போகட்டும்… பிறகு பார்க்கலாம்.” என்று அவன் கொஞ்ச, சமாதனம் ஆகாதவள், “ஏன்? எனக்கு குற்ற உணர்ச்சியாய் இருக்கிறது. அவளிடம் இவ்வளவு நாள் மறைத்ததே என்னால் தாங்க முடிய வில்லை. முரளி அண்ணாவிற்கு வேறு தெரிந்து விட்டது, அவர் மாமாவிடம் சொல்லி, மாமா அக்காவிடம் சொல்லி விட்டால் என்ன செய்வது?” என்று பதறினாள் திடீரென்று முளைத்த பயத்தில்.
அதெல்லாம் ஒன்றும் நடக்காது. நீ சும்மா பயப்படாதே. என் படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, பின் வேலை தேட வேண்டும். எல்லாம் சரியான பின் சொல்லிக் கொள்ளலாம்.” என்று அதோடு அந்த விஷத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
மறுபுறம் கிட்சனில் காய் நறுக்கியபடியே அவள் சித்தி “முன்னரே கேட்க வேண்டும் என நினைத்தேன். எங்கிருந்துடி உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது. முன்னர் எல்லாம் யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாய்… ஆனால் இன்றோ கையெல்லாம் நீளுகிறதே?” என்று புருவம் உயர்த்தி கேட்டார்.
அச்சோ… அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சித்தி. அவர்கள் செய்யும் பல விஷயங்கள் எனக்கு பிடிக்காது தான்ப்ச்…ஆனால் என்ன செய்வது… நானும் கயலும் எல்லோரையும் அனுசரித்து தான் வாழ வேண்டும். இல்லையென்றால் ஒன்று மாமா அவர் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்து விடுவார் அல்லது அத்தை கயலை வேலைக்காரி போல் நடத்துவார்கள், அவள் படிப்பையும் நிறுத்தி விடுவார்கள். இதிலிருந்து தப்பிக்கவே அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டினேன். என் நல்ல நேரம் எப்போதும் எனக்கென்ன என்று என் விஷயத்தில் அமைதியாய் இருக்கும் அப்பா மாமா பையனுக்கு என்னை மணம் முடித்து தரமுடியாது என்று மறுத்து விட்டார். இல்லையென்றால் இந்நேரம் கையில் ஒரு குழந்தையுடன் கண்ணை கசக்கிக் கொண்டு நின்றிருப்பேன்.” ஒரு பெருமூச்சை உள்ளே இழுத்தவள் தன் மனம் திறந்து தொடர்ந்தாள்,
எல்லா பெண்ணிடமும் அச்சம், மடம், நாணம் போல் தைரியமும் இருக்கிறது. அதை சிலர் வெளிக்கொணர்கிறார்கள். சிலர் அதை மலுங்கடித்து விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சிலர் பலவந்தமாக மலுங்கடிக்கப் படுகிறார்கள். ஒரு சிலர் என்னை போல் குடும்பத்திற்கு பயந்து ஒடுங்கி விடுகிறார்கள். இதை எல்லாம் தாண்டி ஒரு பெண் தைரியமாக செயல் பட்டால் சிலர் திமிர்ப்பிடித்தவள்என்று முத்திரை குத்தி விடுவார்கள். எல்லாரும் அப்படி இல்லை தானே. ஆனால் நம் சமூகத்தில் பாதி பேர் இப்படி தான் இருக்கிறார்கள். ஏன் இதை சரி செய்ய முடியாதா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் நிச்சயமாக சொல்வேன் என் வாழ்க்கை அப்படி இல்லை. என் அடி மனது சொல்கிறது அவர் அப்படி பட்ட ஆள் இல்லையென்று. முதலில் அவருக்கு பயந்து நான் படிக்க விருப்பம் இல்லை என்று சொன்னேன். அவரோ அதை எல்லாம் காதில் வாங்காமல் பெண்ணுக்கு கல்வி அவசியம் என்று கூறி என் படிப்பிற்கு வழி செய்தார். இதை விட பெரிய ஊந்துதல் எனக்கு தேவை இல்லை. அவர் என்னுள் மறைந்திருந்த அந்த வீரத்தை தட்டிக் கொடுத்ததன் விளைவே நீங்கள் பார்த்தது சித்தி.” என்று முடித்தவளின் முகத்தில் என்றுமில்லாத திடம் ஆக்கிரமித்து இருந்தது.
விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களே இவள் அவனுடன் இருந்தாலும் அனுவின் இந்த புதிய ரூபம் அவள் சித்தியின் மனதில் ஆதி எந்தளவிற்கு ஊன்றி இருக்கிறான் என்பது தெளிவாக விளங்க, அவள் சித்தி தன் சந்தேகங்களை ஒதுக்கினார்.
இப்படியே சந்திரன் பரவ, அவள் சித்தி விடை பெற்றார். முன்தினம் போலவே ஆதி இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. அவன் முன்னரே சொன்னதால் கயலும் அனுவும் கயல் அறையிலேயே கழித்தனர். மறுநாள் காலையில் சூரியன் ஒளியோடு விடிய, அனுவிற்கு மட்டும் சந்திரன் ஆக்ரமித்து அவ்விடம் விட்டு நகர மறுத்தார். 

Advertisement