Advertisement

அத்தியாயம் 10
தொலை தூர நிலவானாலும்
விடாமல் துறத்துகின்றன
நீ தீண்டிய நினைவுகள்!!!
தன்னை மைதிலி கட்டிக் கொள்வாள் என்று கண்ணன் கனவிலும் நினைத்ததில்லை. நினைக்காததெல்லாம் நடப்பது நன்மைக்காகவா? இல்லையென்றால் வேறு எதுவும் சோதனையை கொடுக்கவா? அது நம்மை படைத்த அந்த கடவுள் கார்த்திக்கேயனுக்குத் தான் தெரியும். 
தான் முதல் முறையாக அவன் தோளில் சாய்ந்தும் அவனிடம் இருந்து எந்த எதிர் செயலும் வராததால் நிமிர்ந்து அவனை பார்த்தாள் மைதிலி.
அவனோ எங்கோ பார்த்துக் கொண்டு எதையோ சிந்தித்த படி இருந்தான். அவன் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்தவள் “என் மேல எதுவும் கோபமா?”, என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் அவள் புறம் திரும்பியவன் “அதெல்லாம் இல்லை மா”, என்றான்.
“பிறகு என்ன தீவிர யோசனை?”
“இல்லை, முதல் தடவையா நீயா என்னை நெருங்கிருக்க”
“அதை தான் நானும் கேக்குறேன். முதல் முறையா நானா உங்களை நெருங்கிருக்கேன். ஆனா நீங்க பேசாம யோசிச்சிட்டு இருக்கீங்க?”
“இல்லை மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதான்”
“நீங்க புரியாத புதிரா இருக்கீங்க. உங்க வார்த்தைல இருக்குற சந்தோஷம் உங்க முகத்திலோ செய்கையிலோ இல்லையே?”
“ரொம்ப சந்தோஷம் தான் என்னை ரொம்ப கஷ்ட படுத்தும் மைத்தி. இந்த சந்தோஷம் நிலைக்குமா? இல்லை எதுவும் பிரச்சனை வருமான்னு பயமா இருக்கு? மறுபடியும் நமக்குள்ள ஏதாவது பிரிவு வருமோன்னு கவலையா இருக்கு”
“இப்ப தான் சேந்துருக்கோம். அதுக்குள்ள பிரிவைப் பத்தி யோசிக்கிறீங்க. இனி எல்லாம் நல்லதா தான் நடக்கும். சரி நான் போய் கிளம்பட்டுமா?”
“ஹ்ம் சரி, நான் வேணும்னா வெளிய போய் இருக்கவா?”
“பரவால்ல, நான் பக்கத்து ரூம்ல போய் கிளம்புறேன்”
“போ மைத்தி, நீ வேற சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்”
“வேறயா என்ன?”
“நீங்க எதுக்கு வெளிய போறீங்க. நீங்க இங்கயே இருங்க. நானும் இங்கேயே கிளம்புறேன்னு சொல்லுவன்னு எதிர் பார்த்தேன்”, என்று புன்னகையுடன் கூறினான் கண்ணன்.
“இவ்வளவு நேரம் கிட்ட ஒட்டிக்கிட்டு இருக்கும் போது பேசாம இருந்துட்டு இப்ப பேச்சைப் பாரு”
“ஏய், நீயா இப்படி எல்லாம் பேசுற? உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன அப்புறம் நிறைய மாறிட்ட”
“பழைய கதை எல்லாம் இனி பேச வேண்டாமே”
“உனக்கு பழைய விஷயம் எதுவும் நினைவுக்கு வராம இருந்தா சரி தான்”, என்று நினைத்தவன் “போய் கிளம்பு”, என்றான்.
“நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க”, என்று சொல்லி அவனுக்கு படுக்கையை ஒழுங்கு படுத்திக் கொடுத்து விட்டு சென்று விட்டாள்.
அவள் தலையணையில் முகம் புதைத்து படுத்தவன் சில நிமிடங்களிலே நன்கு உறங்கி விட்டான்.
அவள் வந்து எழுப்பும் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கண்ணன்.
எழுந்து அமர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?”, என்று கேட்டான்.
“இல்லை ஒரு மணி நேரம் தான்”
சாரி, ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் நல்லா தூங்குறேன் மைத்தி”
“பாத்தாலே தெரிஞ்சது. எழுப்ப மனசில்லை. ஆனா அப்பா எழுப்பி விட சொன்னாங்க, என்னை விட்டுட்டு நீங்க அன்டைம்ல திரும்பி வருவீங்களாம். அதான் எழுப்புனேன்”
“பரவால்ல மைத்தி, நீ எல்லாம் எடுத்து வச்சிட்டியா?”
“ஹ்ம் நீங்க முகம் கழுவிட்டு வாங்க”, என்று அவள் சொன்னதும் தயாராகி வந்தவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். 
கார் சென்னை நோக்கி சென்றது. போன முறை போல் அல்லாமல் இந்த முறை இருவரும் கதை அளந்த படி சென்றார்கள்.
காலேஜ் வருவதுக்கு சிறிது தூரம் முன்பே அமைதியாகிப் போனாள் மைதிலி.
“என்ன ஆச்சு மைத்தி? எதுக்கு டல்லா ஆகிட்ட?”, என்று கேட்டான் கண்ணன்,
“உங்களைப் பிரிஞ்சு எப்படி இருப்பேன்?”, என்று அவள் பதில் கூற வேண்டும் போல் ஆசையாக இருந்தது கண்ணனுக்கு.
ஆனால் அவள் கூறியதோ வேறு. எ”ன்னைப் பிரிஞ்சு நீங்க எப்படி இருப்பீங்கன்னு யோசிச்சுப் பார்த்தேன்”, என்றாள் மைதிலி.
வியப்புடன் அவளைப் பார்த்தவன் “நீ சொல்றது சரி தான். உன்கூட இருந்துட்டு நீ போன அப்புறம் வாழ்க்கையே பிடிக்காத மாதிரி இருக்கும். ஆனா உனக்கு எதுவும் என்னைப் பத்தி தோணாதா மைத்தி?”, என்று கேட்டான்.
“எனக்கு உங்களைப் பாத்ததுல இருந்தே என்னைப் பத்தி நான் அதிகம் யோசிச்சது கிடையாது. உங்களைப் பத்தி அடிக்கடி யோசிப்பேன். உங்க கூட பேசாதப்பவே உங்க சோகம் என்னை ரொம்ப பாதிக்கும். உங்களுக்கு பசிக்கும் போது சாப்பாடு போடணும். சோகமா இருக்குறப்ப நான் இருக்கேன்னு ஆறுதல் சொல்லணும். என்னை பிரிஞ்சு கஷ்ட படுறப்ப உங்க கூட இருக்கணும்னு எல்லாம் தோணும். இதெல்லாம் எதுனாலன்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியவே இல்லை”, என்று மைதிலி சொன்னதும் அவளைப் பார்த்து சிரித்தான் கண்ணன்.
அவன் சிரிப்பைப் பார்த்தவள் “நான் பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு இருக்கேன். நீங்க சிரிக்கிறீங்க?”,என்று முறைப்புடன் கேட்டாள்.
“இந்த குணம் உன்னோட இயல்பு மைத்தி, அதான் மாறாம இருக்கு. உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகுறதுக்கு முன்னாடியும் நீ இப்படி தான் இருப்ப. அதான் அந்த குணம் மாறல போலன்னு நினைச்சேன்”
“சரி அதெல்லாம் போகட்டும். இப்ப சிரிச்ச மாதிரி நீங்க எப்பவும் ஹேப்பியா இருக்கணும். ஓகே வா?”
“அதுக்கு என்னோட மைத்தி என்கூடவே இருக்கணும் ஓகே வா?”, என்று அவளைப் போலவே சொல்லிக் காட்டினான்.
“இனி மரணத்தை தவிர வேற எதுவும் நம்மளை பிரிக்க முடியாது சரியா?”, என்று மைதிலி சொன்னதும் கிரீச் என்ற சத்ததுடன் கார் நின்றது.
அடுத்த நொடி அவன் அணைப்பில் இருந்தாள் மைதிலி. அவன் காரை நிறுத்தியதில் அதிர்ந்து போனவள் அவன் அணைப்பில் அவனுடைய எண்ண ஓட்டத்தை உணர்ந்தாள்.
அவன் அணைப்பில் இருந்த நடுக்கமே அவள் சாவைப் பற்றி பேசியதால் வந்தது என்று புரிந்தது. 
அந்த நடுக்கத்தை குறைக்கும் விதமாக அவனுடன் ஒன்றியவள் அவன் முதுகைத் தடவிய படி இருந்தாள். 
அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவள் தோளை நனைத்தது.
அவன் அழுவதை உணர்ந்தவள் அவனிடம் இருந்து விலகி “இப்ப எதுக்கு இப்படி அழுது சீன் போடுறீங்க?”, என்று கேட்டாள்.
“என்னது சீனா?”, என்று அதிர்ந்து போய் கேட்ட கண்ணன் “மரணத்தை பத்தி பேசுற? நீ இல்லைன்னா நான் என்ன ஆவேன்னு யோசிச்சியா? இனி இப்படி எல்லாம் பேசாத”, என்றான்.
“அடப்பாவி நான் என்னோட மரணத்தைப் பத்தி மட்டும் பேசாலை. ரெண்டு பேரையும் சேத்து தான் சொன்னேன். என்னை சாக விட்டுட்டு நீங்க மட்டும் வாழ்ந்துருவீங்களோ? நான் செத்தா உங்களையும் கூட்டிட்டு போய்ருவேன். நீங்க செத்தா உங்க கூடவே நானும் வந்துருவேன்”, என்று அவள் சொல்லி முடித்தது தான் தாமதம் அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான் கண்ணன்.
கோபத்துடன் அவள் இதழ்களை முற்றுகை இட்ட அவன் இதழ்கள் தண்டனையை  வழங்காமல் முத்தம் என்ற பரிசை வழங்கிக் கொண்டிருந்தது.
அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்த மைதிலி அவன் முதுகை வளைத்துக் கொண்டாள். 
அவள் செய்கையை உணர்ந்து மேலும் வேகம் கூட்டியவன் அவள் இடுப்பை வளைத்துக் கொண்டான்.
அவள் மூச்சுக் காற்றுக்காக ஏங்குவதைக் உணர்ந்து தான் அவளை விட்டான். 
அவனை விட்டு விலகியவள் முகச்சிவப்பை  அவனுக்கு மறைத்த படி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதைப் பார்த்து சிரித்தவன் “என் பொண்டாட்டி வெட்கப் படுறா டோய்”, என்று சொல்லிய படியே காரை எடுத்தான்.
“மைத்தி”
“ம்ம்”
“தேங்க்ஸ்”
“எதுக்கு?”
“இந்த முத்தம் என்னோட ரொம்ப நாள் ஆசை”
அவனைப் பார்த்து முறைத்தவள் “என்னமோ இன்னைக்கு தான் முதல் தடவை நடந்த மாதிரி சொல்றீங்க? அன்னைக்கும் கொடுத்தீங்க தான?”, என்று கேட்டாள்.
“அன்னைக்கு கொடுத்தப்ப அப்படியே பேய் அறைஞ்ச மாதிரி நின்ன. ஆனா இன்னைக்கு அப்படி இல்லையே”
“ஏன் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?”
“என்ன ஸ்பெஷலா? உன்னோட நாக்க கொடுக்குற? என் உதட்டைக் கடிக்கிற. அன்னைக்கு இப்படியா? பொம்மை மாதிரி இருந்துச்சு”, என்று சொன்னதும் அவன் வாயை தன் கையால் மூடியவள் “இப்ப நீங்க வாயை மூடலை அடி பின்னிருவேன்”, என்றாள். அவள் முகம் வெட்கத்தால் சிவந்திருந்தது.
அதை நிறைவுடன் பார்த்தவன் தன் வாயை மூடி இருந்த விரல்களில் தன் நாக்கால் கோலம் போட்டான்.
“ச்சீ”, என்ற படி கைகளை உதறியவள் “நீங்க ரொம்ப மோசம்”, என்று முணங்கினாள்.
“ஹா ஹா, இதுக்கே ச்சீயா? சரி சரி முறைக்காத. ஸ்நாக்ஸ் வாங்குவோமா?”
“வாங்கலாம், ஆனா போன தடவை மாதிரி வேண்டாம்”
“சரி உனக்கு வேண்டியதை வாங்கலாம். அடுத்த வாரம் லீவ் இருக்கா?”
“தெரியலை. சனிக்கிழமை லீவ் இல்லைன்னா வர முடியாது”
“போன் பேசுவியா?”
“நீங்க தேவை இல்லாததை பத்தி பேசாம இருந்தா பேசுறேன்”
“தேவை இல்லாததுன்னா என்ன மைத்தி? கட்டிப் புடிச்சதைப் பத்தியா? முத்ததைப் பாத்தியா?”
“மூச், இனி கல்யாணம் வரைக்கும் என் கிட்ட வந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்கு சொல்லிட்டேன்”
“அதெல்லாம் கஷ்டம், வேணும்னா இப்படி வேணா செய்யலாம்?”
“எப்படி?”
“நான் உன்னை கட்டிப்;  புடிச்சா, முத்தம் கொடுத்தா நீ விலகி ஓடிரு”
“அதை எப்படி செய்ய முடியும்? கிட்ட வந்தாலே இன்னும் ஒட்டணும்னு தான தோணுது”, என்று நினைத்தவள் தன்னைப் பற்றி தெரிந்தே அவன் விளையாடுகிறான் என்று புரிந்து அவனைப் பார்த்து முறைத்தாள்.
அவனோ அவளை பார்த்து கண்ணடித்துச் சிரித்தான். அவன் புன்னகையைக் கண்டவள் “ஆள் மயக்கி”, என்று முணுமுணுத்தாள்.
“அதான் அன்னைக்கே சொன்னேனே? எல்லாரையும் மயக்கி என்ன புண்ணியம்? வீட்டுக்காரி மயங்கணுமே”
“இப்ப ஆள் மயக்கின்னு சொன்னது நான் மயங்கினதுனால தான். மாயக்கண்ணன்”
“ஏய், நிஜமாவா? நான் பிறந்ததுக்கு இன்னைக்கு தான் ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு. ஆனா நீ ரொம்ப மோசம். இப்படி எல்லாம் ஏத்தி விடுற. அப்புறம் வாயை மூட சொல்ற”
“காலேஜ் வர போகுது. போகும் போது பாத்துப் போகணும். வண்டி வேகமா ஓட்டக் கூடாது. நேரா நேரத்துக்கு சாப்பிடணும். எதுக்கும் கவலைப் படக் கூடாது. சே உங்க அம்மாவைப் பாத்துருக்கலாம்”
‘அம்மா’ என்றதும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன் “அம்மாவா?”, என்று கேட்டான்.
“டக்கு டக்குன்னு காரை நிறுத்தணுமா? வேலை வேலைன்னு அலைஞ்சு ஒழுங்கா சாப்பிட மாட்டுக்கீங்க? உங்க அம்மாட்ட சொன்னா இன்னும் கேர் எடுபாங்கால்ல?”, என்று அவள் சொன்னதும் அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?”
“பிளீஸ் மா, இது தப்பா எல்லாம் இல்லை. ஒரே ஒரு நிமிஷம் இப்படியே இரு”, என்றவன் ஒரு அன்னையின் தோளில் சாய்ந்திருப்பது போல உணர்ந்தான்.
அவன் எண்ணங்கள் புரிய வில்லை என்றாலும் அவன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அசையாமல் இருந்தாள் மைதிலி.
சிறிது நேரத்தில் அவனாகவே விலகி காரை எடுத்தான். என்னவென்று கேட்காமல் “மறுபடியும் என்னை பிரிஞ்சு இருக்க போறதை நினைச்சு பீல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? நான் போன் பேசுறேன்”, என்றாள்.
“அப்ப எப்போ படிப்ப?”
“அடப்பாவி, அப்ப நான் பேச வேண்டாமா?”
“அதெப்படி முடியும்? காலேஜ் முடிஞ்சு வந்த அப்புறம் கொஞ்ச நேரம் பேசு. அப்புறம் தூங்கும் முன்னாடி பேசு. அது போதும். உன்னோட படிப்பும் முக்கியம்”
“சரிங்க சார். படிக்கிறேன் போதுமா? ஹாஸ்டல் வந்துடுச்சு. இப்ப நீங்க பத்திரமா போயிட்டு வாங்க”
“மைத்தி”
“ம்ம்”
“என்கூடவே வந்துறியா? எப்ப டா நம்ம கல்யாணம் முடிஞ்சு நீ என் கூடவே இருப்பன்னு இருக்கு. இனி முதல் வேலை உன்னோட ரெண்டு அக்காங்களுக்கும் மாப்பிள்ளை பாக்குறதுதான்”
“சூப்பர், அதை செய்ங்க. அத்தை, மாமா, சாரு, அருண், வேலண்ணா எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க”
“ஹ்ம் சரி நான் வீட்டுக்கு போய் பேசுறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான் கண்ணன்.
புன்னகையுடன் உள்ளே சென்று தன் தந்தையை அழைத்து ஹாஸ்டலுக்கு வந்து விட்டதைச் சொல்லி விட்டு கட்டிலில் படுத்தாள் கண்ணனின் நினைவுகளோடு.
தீண்டல் தொடரும்…
 

Advertisement