Advertisement

தகிக்கும் தீ…
காதல் திருவிழாவில்…
தணிக்கும் தீ..
காதல் திருவிளையாட்டில்…
தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் .
ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம்.
அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்… அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக அசைவு வந்தது பெண்ணிடம். மேலும் சில நொடிகள் கடந்த பிறகே முழுதாக நினைவிற்கு திரும்பினாள்.
கீழே மயங்கிய நிலையில் கிடந்த தன் ஆருயிர் தோழி ஆருவை பார்த்ததும் பதறி போனாள் கீதா. அவளை மடி தாங்கிய படி கன்னங்களில் மாறி மாறி தட்டி சுயத்திற்கு வர போராடினாள். ஆருவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அப்படியே அசையாமல் கிடக்கவும் கீது மேலும் பதறினாள். சட்டென எழுந்து அருகிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து ஆருவின் முகத்தில் தெளித்தபடி “ஆ..ரு ஆ..ரு… ஹே.. ஆரு.. கண்ணை திறந்து பாருடி..” பதற்றத்துடன் அவளை எழுப்ப முற்பட்டாள். சில நிமிடங்கள் கடந்து பல வேண்டுதலுக்கு பிறகே கண் விழித்தாள் ஆரு.
“நான் ரொம்ப பயந்துட்டேன் ஆரு. இப்போ உனக்கு ஒன்றும் இல்லையே…?!”
முகத்தினை கைகளால் அழுந்த தேய்த்து கொண்டாள். ஒரு முறை கண் மூடி நடந்ததை நினைத்து பார்த்தாள். மனம் கலங்கியது. தன் முகத்தினை மறைத்தபடி விழுந்த முடி கற்றைகளை காதோரமாய் ஒதுக்கியபடி கீதுவை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹ்ம்ம்…. மேலே சொல்லு. உனக்கு யாரு சொன்னா… என்ன ஆச்சு அந்த கு..குர்க்கா..க்கு..?”
“ஷ்… நீ நினைக்கிற மாதிரி அவனோட சாவுக்கு நீ காரணம் இல்லை. அவனுக்கு யாரோ மயக்கமருந்து கொடுத்துருக்காங்க. அது ஓவர் டோஸ் ஆகி அவன் எதிரில் வந்த வண்டி மேலே மோதி இறந்திருக்கான். அவ்ளோ தான். சோ உனக்கும் இவனோட டெத்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. புரியுதா உனக்கு?” தோழியை ஆறுதலாய் அணைத்தபடி கூறினாள்.
“இது ஏதாவது திருடனுங்க வேலையா இருக்கும் . சோ நீ தேவையில்லாம பயப்படாத..”
இப்போது கொஞ்சம் உடலும் மனமும் சமன்பட்டது போல இருந்தது ஆருவிற்கு.
“அது சரி. உனக்கு எப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சி?” புருவம் உயர்த்தியபடி கேட்டாள் பெண்ணவள் ஆரு.
“அ…து..
அ…து…
அது வ…ந்…து….து….து..”
“என்னடி இழுக்குற… என்ன விஷயம்…?”
ராஜே…ஷ் தான் சொன்னான். சொல்லியபடி குனிந்து கொண்டாள் கீது.
“எ..ன்..ன..து…?!!! இப்போ என்ன சொன்ன நீ…? கம் அகெய்ன்”. வியப்பில் கத்திய படி கீதுவின் முகைத்தை நிமிர்த்தினாள் அவள், அவ்விழிகளோ நாணக் கவிதை பாடியது.
“ஹேய்… என்னடி இது.. நிஜமாவா…!! எப்படிடி…??
உனக்கும் ராஜேஷ்கும் எப்படிடி செட் ஆச்சு… கள்ளி இது எத்தனை நாளா நடக்குது? சொல்லவே இல்லை பார்த்தியா..??!”
நாணத்தால் சிவந்த முகத்தை மறைத்தபடி திக்கி திணறி பேசினாள் அவள்.
“விளக்குமாத்து கையோட அவனை அடிக்க அன்றைக்கு கை ஓங்குனேன்லா அ..ப்..போ…”
“அப்போ இருந்தேவா.. அடி எமகள்ளி.. ஒரு வார்த்தை சொன்னீயா நீ..?!”
“அய்யோ. அப்படிலாம் ஒன்னும் இல்லை. முதல நான் சொல்லி முடிச்சிருதேன். அதுக்கு அப்புறம் பேசு”. என்றவள் தொடர்ந்து
“அவனோட மல்லுகட்டுனதுக்கு அப்புறமா எனக்குள்ள ஒரு பீலிங். அது எப்படி வந்துச்சி ஏன் வந்துச்சின்னு கேட்டா சத்தியமா எனக்கு சொல்ல தெரியலடி…”
சொல்லியபடி ஜன்னலருகே சென்று ஆகாய மன்னனின் நீல வண்ணத்தை ஆழ்ந்து பார்த்தாள். தனக்குள்ளே நினைவுகளை அசைப்போட்டபடி சில நொடி அமைதிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“அந்த சம்பவத்துக்கு பிறகு அவனை அடிக்கடி எதேச்சையா சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. கொஞ்சம் கூர்ந்து கவனிச்ச அப்புறம் தான் தெரிஞ்சி.. இதெல்லாம் எதேச்சையா நடக்கல, எல்லாம் அவனோட வேலைன்னு. அவனோட செயல் பார்வை பேச்சு எல்லாம் எனக்கு அப்படி தான் சொல்லிச்சு. எனக்கு ஏற்பட்ட அந்த பீலிங் அவனுக்கும் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன். இருந்தும் இந்த காதல் சாத்தியமா? அப்படின்னு எனக்குள்ள ஒரு சின்ன பயம். அவனோட காதல் உண்மையான்னு எனக்கு சந்தேகம். சோ அவனை தவிர்க்க நினைத்தேன். ஆனால்.. என்னால முடியல ஆரு… அவனை பார்க்காம இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எதை..யோ.. இழந்தது போல இருந்தது. என்னோட காதல் கூடிச்சே தவிர குறையல.
இன்றைக்கு காலைல உன்னை பார்க்க வரும் போது தான் மீண்டும் அவனை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. அவன்கிட்ட சொல்லிடலாம்னு நினைக்கிறதுக்கு முன்ன உங்க அம்மா வந்துட்டாங்க”.
“ஹே.. என்னடி சொல்லுற.. அப்புறம் எப்போ…டி.. நீங்க ரெண்டு பேரும் லவ்வை சொன்னீங்க?”
“இதோ இப்போ உன்னை பார்க்க வரதுக்கு முன்ன தான்”. சொல்லியபடி கண்ணடித்தாள் தோழி.
“அடா… இவ்ளோ பாஸ்ட்டா நடந்துருக்கா… அது சரி.. ஹ்ம்ம்… அப்புறம்…” இடுப்பில் கை வைத்தபடி கேட்டாள் ஆரு.
“ஈவ்னிங் நம்ம தெரு பிள்ளையார் கோயிலுக்கு போயிருந்தேன். அப்போ தான் அவன் சொன்னான். அவனும் என்ன லவ் பண்ணுறானாம். நீ சொன்னது போல சும்மா விளையாட்டுக்கு தான் நம்ம பின்னாடி வந்திருக்கான். அப்புறம் அந்த சம்பவத்துக்கு பிறகு தான் அவனுக்கு புரிஞ்சிச்சாம். இப்போ சுயமா சம்பாதிக்கிறான். ஒழுங்கா வேலைக்கும் போகிறான். வேற எந்த பிரச்சனைக்கும் போறது இல்லை.. அப்படின்னு சொன்னான். என்னோட விருப்பத்தை கேட்டான். இவ்ளோ தூரம் அவனே எனக்காக மாறி இறங்கி வந்துருக்கான அதுல இருந்தே அவனோட காதல் உண்மைன்னு எனக்கு புரிஞ்சிது. சோ நானும் அக்ஸப்ட் பண்ணிட்டேன். அவனோட வீட்ல சொல்லி சீக்கிரம் பொண்ணு கேட்டு வராதா சொல்லியிருக்கான்”.
“வாவ்…. கீது… சூப்பர்டி… சான்சே இல்லை… அடிச்சி தூள் கிளப்பிட்டான் உன் ஆளு… அப்போ கூடிய சீக்கிரமே அம்மணிக்கு கல்யாணம்ன்னு சொல்லு…” மகிழ்ச்சியாய் கட்டி அணைத்து கொண்டாள் தோழியை.
########################
“டேய்.. டேய்… ஒன்னே ஒன்னு…. தாடா…”
“ப்ளீஸ் டா…”
“டேய்.. ஓடாத.. நில்லு…”
“ஏய்… “
“நான் இவ்ளோ தூரம் சொல்றேன்ல.. பின்ன என்னடா…?! அவ்ளோ நாள் என்னால தாக்கு பிடிக்க முடியாதுடா… உன்னை பார்க்காம எப்படிடா இருப்பேன். சோ பிளீஸ் புரிஞ்சிக்கோடா… டேய்… ஏண்டா… என் உயிரை வங்குறா…?!”
அழாத குறையாக கெஞ்சி கொஞ்சி காரியம் சாதிக்க முற்பட்டாள் வதனா.. அந்த ஆணழகன் ராமோ கொஞ்சமும் இலகினான் இல்லை. அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவன் பாட்டிற்கு அவன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்.
பெண்ணவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அவனுடன் வாதாடியதில் சோர்ந்து போனது தான் மிச்சம். தொண்டை வறண்டு போகவே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் கட கடவென அந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தாள். எதிரே மனத்திற்கினியவன் அத்தனை சுந்தரமாய் காட்சியளித்தான். பெண்ணவள் ஏக்கம் கூடியதே தவிர கடுகளவும் குறையவில்லை.
“அட பாவி மகனே… நான் உன்கிட்ட என்னடா கேட்டேன்.. ரொம்பதான் பிகு பண்ணுற. ஏதோ கேக்க கூடாத ஒன்றை கேட்டது போல ஓவரா தான் ஆடுற. அவனவன் தன் காதலி எப்போ தருவான்னு ஏங்கி போய் இருப்பானுங்க. ஆனா நீ நானா வழிய போய் தாரேன்னு சொன்னா என்னமோ ஏக பத்தினி விரதன் மாதிரி என்னமா சீன் பண்ணுற.. டேய் டேய்… மகனே உனக்கு ஒரு நாள் இருக்குடா… நீயா வந்து என்கிட்ட கேட்படா. அப்போ நீ எவ்ளோ கெஞ்சி கேட்டாலும் தரமாட்டேன்டா.. பாருடா… அப்போ இருக்கு உனக்கு!” கெஞ்சல் போய் மிஞ்சல் வந்திருந்தது இப்போது கேட்டது கிடைக்காத ஆத்திரத்தில்.
விஷயம் என்னவெனில் வதனாவிற்கு புது அசைன்மெண்ட் ஒன்றிற்கு கீழ் வேலை பார்க்க வேண்டி ஆர்டர் வந்திருந்தது. அது அவளுடைய பாஸின் நெருங்கிய நண்பரின் கீழ் வேறு.அதனால் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் தொடர்ந்து வேலை நேரம் தவிர அதிக நேரம் வேலை பார்க்கவேண்டிய கட்டாயம். அதனால் ராமை அவளால் சந்திக்க முடியாது. சோ அதனை ஈடுகட்ட பெண்ணவள் அவனிடம் ஒரே ஒரு முத்தம் கேட்டு தான் கெஞ்சி கொண்டிருக்கிறாள்.
உன்னால் பார்க்க வர முடியாது என்றால் நேரம் கிடைக்கும் பொழுது நான் வந்து உன்னை பார்க்கிறேன். நீ கேட்டது போல இப்போது முத்தம் யுத்தம் என்று எதுவும் கிடையாது. எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான் என்றும் முதலில் வேலையில் கவனம் செலுத்தி விட்டு மற்றதை பிறகு பார்க்கலாம் என்று கூறி விட்டான். அதை தான் பெண்ணவளால் தாங்க முடியவில்லை.
அமர்ந்திருந்த அந்த மேசையில் தலை சாய்த்தபடி ராமை சோகமாக பார்த்துக்கொண்டிருந்தாள். பார்க்காதது போல அவளை பார்த்துக்கொண்டே தன் வேலையில் கவனமாய் இருந்தான் அவன். ஆயினும் அவளது சோர்ந்த முகம் வேறு அவனது மனதை வாட்டியது. ஷ் ஷ் ஷ்… கையிலிருந்த பொருளை கீழே வைத்துவிட்டு அவளருகே வந்து அமர்ந்தான்.
“என்ன வதனா இது. சின்ன பிள்ளை மாதிரி பிகேவ் பண்ணுற..?!”
“இது உனக்கு சின்ன விஷயமா…ஹாங்..?!” எகிறினாள் வதனா.
“ஷ்… மெதுவா பேசு. ஏன் கத்துற?”
“இப்போ உனக்கு என் பேச்சு அப்படி தான் தெரியும். உன் லவ் அக்ஸப்ட் பண்ணிட்டேன்ல சோ உனக்கு எல்லாம் ஈஸி தான். நான் தான் பேக்கு மாதிரி உன் பின்னாடி அலையுறேன்.அப்படி தானே சொல்லுற..??!” வராத கண்ணீரை துடைத்து கொண்டே விசும்பினாள்.
இது போதாதா.. காதலன் காதலில் கசிந்துருக.. ஆண்மகன் உள்ளம் தவித்து போனது.
“ஒற்றை நீர் துளி
நெஞ்சு குழி வரை 
தாக்க..
கற்றை அடியாய்
நொறுங்கி போனது உள்ளம்…”
தன் மனதிற்கினியவள் அழுகை எந்த ஆண்மகனுக்கு தான் பிடிக்கும். அவள் கண்ணிலிருந்து வடிந்த ஒவ்வொரு துளியும் அவனுள் ஈட்டியாய் பாய்ந்தது. அவனால் அதற்கு மேலும் தாங்க முடியாமல் அவளை இழுத்து அணைத்து கொண்டான். தன்னுள் அடக்கி அவள் கண்ணீரை அவனுடையதாக மாற்றினான்.
“நோ மா.. நோ..
நீ எக்காரணத்திற்காகவும் அழ கூடாது. நான் இருக்கிற வரை உன் கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வர கூடாது”. இரு கைகளாலும் கன்னம் தாங்கியவன் அவள் கண்ணீரை இதழ் கொண்டு துடைத்தான். பெண்ணவள் சிலிர்த்து போனாள். அவன் நடுக்கம் அவளுள் மின்சாரமாய் பாய்ந்தது. அவன் கண்களிலும் இப்போது கண்ணீர். எதற்காக அழுகிறான்.? நான் அழுதலாலா?! அட லூசு பயலே.. இவ்ளோ சென்டிமென்டல்லா இருக்கியேடா.. உன்னை கவுக்கிறது ரொம்ப ஈஸிடா.. ஹேய் வதனா உன் ஆள் இப்படி குழந்தையாட்டம் இருக்கானே.. எப்படிடி..?!! தனக்கு தானே கேட்டு தன் நடிப்பை மெச்சி கொண்டாள்.
“கொஞ்ச நாள் தானேமா.. நீ எதற்கும் கவலைப்படாத.. உனக்கு என்னோட நினைப்பு வரும் போது கண்டிப்பா நான் உன் முன்னாடி இருப்பேன். ஐ ப்ராமிஸ் யு”. சொல்லியபடி நெற்றியில் இதழ் பதித்தான்.
‘கண்..ணா… லட்டு திங்க ஆசையா.. அதுவும் ரெண்டு லட்டு…’ என்பது போல… அவன் அவள் கண்ணீரை கண்டதும் அவனது காரணம் மறந்து முத்தங்களை அவளுக்கு வாரி வழங்கி கொண்டிருந்தான். நெற்றி கண் மூக்கு கன்னம் நாடி என இதழ் பதித்தப்படியே பேசிக் கொண்டிருந்தான்.
“நீ எதை நினைச்சும் ஒர்ரி பண்ணிக்காத. இந்த ஒர்க் உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்ன்னு நான் நம்புறேன். சோ எதையும் நினைச்சி மனசை போட்டு குழப்பிக்கிடாத. சரியா…?!”
நெஞ்சில் தலை சாய்த்தபடியே பூம் பூம் மாடு போல தலை அசைத்து கொண்டாள். முத்த மழையில் சந்தோஷம் கூட ஓடி வந்தது. அவளது மலர்ந்த முகத்தை கண்டவன்.. “இதே போல நீ எப்பவும் சிரித்த முகமாகவே இருக்கணும். செய்வீயா குட்டிமா…?!”
“மம்ம்ம்ம்…சரி….” இப்போது மனம் லேசானது இருவருக்குமே.
##################
“ஹாய் இளங்கோ… எப்போடா வந்த…?!”
“வந்து டூ டேஸ் ஆகுது மதன். தென் ப்ரொஜெக்ட் எந்த லெவல்ல இருக்கு”.
“எவரிதிங்க் இஸ் என்ட்”.
“ஓ. கே. நாம் சீக்கிரம் இதை சோதித்து பார்க்க வேண்டும். நேரமில்லை. சோ கூடிய சீக்கிரம் அதற்கு வழிய பாரு”.
“கண்டிப்பாடா… இந்த வாரத்திலே அதையும் முடிச்சிருவோம்ன்னு நினைக்கிறேன். ஆனால் நமக்கு ஒரிஜினல் பீஸ் கிடைச்சா தான் ரிசல்ட் பக்காவா இருக்கும். அதையும் புரிஞ்சிக்கோ”.
“ஹ்ம்மம்ம்.. நீ சொல்லுறது புரியுது. பட் அது எப்போ கிடைக்கும்னு சொல்ல முடியாதுடா. அது ஒரிஜினலா இல்லை அதுவும் டுப்பிலிகேட்டான்னு கூட தெரியல. அதற்காக காத்துகிட்டு இருந்தா டைம் தான் வேஸ்ட். சோ இப்போ கையில இருக்கிற செயற்கை படிகங்களை வைத்து தான் இந்த ப்ரொஜெக்ட் ரன் பண்ணி ஆகணும்”.
“ஆனால் நமக்கு நூறு சதவீதம் வெற்றி கிடைக்காது. ஜஸ்ட் இது சாத்தியமா.. இல்லை ரிசல்ட் எப்படி இருக்கும்னு வேணா பார்க்கலாம். நடைப்படுத்த வேணும்னா உண்மையான படிகம் வேண்டும். அதை புரிஞ்சிக்கோ”.
“ஹ்ம்ம்… புரியுது. ஆனால் என்னால் நேரத்தை கடத்த முடியாதுடா. ரொம்ப அவசரம்”.
“டேய்.. எனக்கு உன்னோட நிலைமை புரியுது. ஆனால் அவசரப்பட்டா காரியமே கேட்டு போய்டும். அதையும் புரிஞ்சிக்கோ”.
“ம்ம்ம்ம்… சரி. கூடிய சீக்கிரம் ஒரிஜினலலோடு வர்றேன். சி யூ…” கை குலுக்கிய படி இருவரும் அந்த ரெஸ்டாரண்ட்டிலிருந்து பிரிந்து சென்றனர்.
####################
“ஹேய் நேகா… அந்த பக்கம் இருக்கிற காயை அடி…” வலப்புறமிருந்து குரல் கொடுத்தார் லதா.
“ஷிட்… ஜஸ்ட் மிஸ் மாம்” .
“விடு. நெஸ்ட் ரௌண்ட்ல பார்த்துக்கலாம்”.
“டேய் பேரா… போடுறா குழியில அந்த சிவப்பு சிங்காரியை. என்னா ஆட்டம் காட்டுறா..!”
“உங்கள் சொல்லை மீறு வேணா பாட்டி. இதோ பாருங்க”.
“ஹே… அப்படித்தான். கூடவே அந்த கருப்பு காந்தவராயனையும் தூக்கி உள்ளே போடுடா…”
“டன்” என்றபடி தன் முன்னே இருந்த அந்த கேரம் போர்டில் அழகாய் காய் தட்டினான் ரவி.
“ஹேய்… டன் டன் டன்…” வெற்றி பெற்ற சந்தோசத்தில் பாட்டியும் ரவியும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.
“என்னமா நேகா இந்த முறையும் போச்சா..?!” என்றபடி வந்தார் இளங்கோ.
“யெஸ் டாடி. எப்போ விளையாண்டாலும் இந்த தடியன் தான் வின் பண்ணுறான்”.
“ஹே யாரை பார்த்து தடியன்னு சொல்லுற…” நங் கென்று அவள் தலையில் கொட்டினான்.
“பாருங்க டாடி. எப்படி அடிக்கிறான். இருடா வர்றேன் சொன்னபடி எழுந்து அவனை அடிக்க துரத்தினாள். அவனோ சிட்டாய் பறந்தான். “இந்தா முடிஞ்சா பிடிச்சிக்கோ” ஓடியபடியே வம்பு வளர்த்தான் அவன்.
“என்னதுடி இது சின்ன பிள்ளையாட்டம்…”
“விடு லதா.. இப்போ விளையாடமா பின்ன எப்போ தான் இதெல்லாம் அனுபவிக்க. காலம் கடந்து அப்புறம் பொறுப்புகள் வந்துரும். அப்போ நாம நினைச்சா கூட இந்த மாதிரி சந்தோசம் கிடைக்காது”.
“சரியா சொன்னா இளங்கோ” -பாட்டி
“அப்புறம் எங்கடா போய்ட்டு வர..” -ராஜ சேகர்.
“பிரென்ட் ஒருத்தனை பார்த்துட்டு வர்றேன். வெளிய போய்ட்டு வந்தது அலுப்பா இருக்கு நான் போய் குளிச்சிட்டு வாரேன்” எழுந்து கொண்டார் இளங்கோ.
“சரி நான் போய் உங்கள் எல்லோருக்கும் டீ போட்டு கொண்டு வரேன்” சொல்லியபடி லதாவும் கிச்சனுக்குள் புகுந்து கொண்டார்.
அங்கே ரவியும் நேகாவும் தோட்டத்து பக்கம் துரத்தி கொண்டு ஆட்டம் போடுவது தெரிந்தது. ஜன்னல் வழி தெரிந்த காட்சியில் புன்னகைத்து கொண்டார் பாட்டி.
“என்னம்மா? என்ன ஆச்சி? எதை பார்த்து அப்படி சிரிக்கிறீங்க..”
“நம்ம ரவிய பார்த்து தான்டா.. சின்ன வயசுல இப்படி தான் எப்பவும் சிரிச்சுக்கிட்டு கலகலன்னு இருப்பான். பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்போ அதே மாதிரி அவன் சிரிக்கவும் மனசு சந்தோஷ பட்டு போச்சுடா.”
“ஹ்ம்ம்..ஆமாம்மா.”
இளசுகளின் ஆட்டம் கிழடுகளின் முகத்தில் மகிழ்ச்சியை பரப்பியது. இது தான் அவர்கள் அனைவரும் நிம்மதியாக கழிக்கும் கடைசி பொழுது என்பதை அறிந்தால் அயர்னும் சிங்கமும் என்ன பண்ணுமோ…? பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement