Advertisement

மந்திர புன்னகையோ
மயக்கும் மான்விழியோ…
வேண்டாம் பெண்ணே…!
நாணமேந்திய வதனம் போதும்
நான் ஆயுள் முழுதும் 
உனக்கு அடிமைசாசனம் எழுதிதர…!
காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள்.
கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை அழைத்தும் பதில் இல்லை. அவனும் பின் அமைதியாகி விட்டான். அவளே வாய் திறந்து பேசட்டும் என்று.
கீர்த்தனா தன் வாழ்வில் வந்தது… கணவரதுடனான நட்பு… தான் ராஜசேகரது வாழ்வில் அடியெடுத்து வைத்தது…தனக்கான காதல்.. எல்லா நினைவுகளையும் மனதில் அமைதியாக அசை போட்டார். மூன்றாம் நபராக பார்க்கையில் எங்கேயும் தவறு நடந்தது போல தெரியவில்லை. தான் தான் அதீத காதலால் தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்.
“மித்ரா…”அமைதியான குரலில் இனிமையாய் ஒலித்தது பார்கவியின் குரல்.
காதலித்த பெண்ணின் வாயால் தன் பெயர் கேட்கையில் உடலின் ஒவ்வோர் அணுவும் துள்ளி கூப்பாடு போட்டது.
“என்னமா… சொல்லு.. என்ன ஆச்சு..?” கனிவு ததும்பிய குரலில் ஆதரவாய் கேட்டார்.
மனம்விட்டு பேச ஒரு நபர் கிடைத்தால், இந்த பெண் மனம் இருக்கிறதே.. அப்பப்பா.. அப்படியே அனைத்தையும் சொல்லி கதறி துடித்திட விரும்பும். அதை தான் பார்கவியும் செய்யலானார்.
“வாழ்க்கை எத்தனை எதிர்பாராத திருப்பங்களையும் மாற்றங்களையும் அடக்கி வச்சியிருக்குது தெரியுமா? நிஜம்ன்னு நினைச்சா… நிழலை தேடி ஓடுது… அந்த நிழலை நம்பி இத்தனை காலமும் சந்தோஷத்தை முழுசா அனுபவிக்காம அவசர அவசரமா ஓடியிருக்கேன். கடைசில என்னோட நினைப்பு தான் தப்புன்னு நெத்தியடியா சொல்லாம… அன்பால என்னோட நெஞ்சை சாய்த்துட்டா அவள்…” சொல்லியபடி விம்மி அழுதார் பார்கவி.
அந்த கடற்கரை ஓரமாய் காரை நிறுத்தியிருந்தார் மித்ரன். இருள் பரவ தொடங்கியிருந்தது. ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் இருந்தது. தூரத்தே தெரிந்த கடலலைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
பார்கவி மனதில் இருக்கும், இல்லை இல்லை இதுவரை இருந்த அழுக்கு போகுமட்டும் அழுது கரைந்தவர் நடந்ததை சுருக்கமாக சொன்னார். அந்த பரமபத விஷயத்தின் விளக்கத்தை தவிர்த்து மீதி அவர்கள் உறவில் இதுவரை இருந்த மனக்கசப்பை.
“நான் முட்டாள் மித்ரா.. அழகான நட்பை இவ்ளோ நாள் புரிஞ்சிக்காம கெடுதல் செய்ய இருந்தேன். நல்ல வேளை இப்போவாது புரிஞ்சி. இல்லைன்னா எவ்ளோ பெரிய தப்பு பண்ணியிருப்பேன்”.
“அப்படி என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருந்த பார்கவி….??!” கூர்மையுடன் பிறந்தது கேள்வி.
சிறு அமைதிக்கு பிறகு,
“நீ கேட்டியே உன்னோட ரூம்ல இருக்கிற பெயின்டிங்ஸ் பற்றி. அது சாதாரணது இல்லை. ரொம்ப விசேஷஷமானது!!”.
“என்ன சொல்லுற நீ…?!”
கால பயணம் பற்றி எடுத்துக் கூறினார். ஆனால் அதை இயக்கும் விதத்தை சொல்லவில்லை. நொடி பொழுதில் மித்ரனது மனம் ஆயிரம் தப்பு கணக்கு போட்டது. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்கவி நினைத்தது போல தன் காதலை தக்க வைத்து கொள்ள திட்டம் தீட்டினார். பார்கவியின் திருமணத்தை நிறுத்தினால்… தனது காதலை அவளிடம் சொல்லி அவளை மனைவியாக்கி இருக்கலாமே… ?! குருட்டு புத்தி கச்சிதமாக ஆலோசனை வளங்கியது.
இந்த காதல் தான் எத்தனை ஆபத்தானது. எதையும் யோசிக்காமல்.. யாரை பற்றியும் கவலைப்படாமல்… சுயநலமாய் சிந்திக்க வைக்கிறதே!?!
“அது எப்படி ‘ஒர்க்’ ஆகுதுன்னு உனக்கு தெரியுமா…??!!!” குரலில் ஆர்வம் அவரையும் மீறி தெரிந்தது.
பழைய பார்கவி திரும்பி இருந்தார் இப்போது. கொஞ்சம் மனம் விட்டு அழுதளாலோ.. என்னவோ… மனம் தெளிவாயிருந்தது.
“காலபயணமெல்லாம் எதுக்கு நமக்கு மித்ரா…?”
“நீ இதை ஏன் தெரிஞ்சிக்காமல் வந்த… இதனால எவ்ளோ விஷயத்தை நாம சாதிக்கலாம்…???!” கண்களில் குள்ளநரி தனம் அப்பட்டமாய் தெரிந்தது.
பார்கவி சுதாரித்துக் கொண்டார். ஏதோ சிறு வயதிலேயே பழக்கமானவர். நன்றாக தெரிந்தவர்தான். அதற்காக எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியுமா… அதுவும் இல்லாமல் இது எத்தனை ஆபத்தானது..?? இது வேறு எவரேனும் கைகளில் கிடைத்தால் இந்த உலகமே மாறிடுமே.. முதலில் இதை தூக்கி எரியவேண்டும்.
ஒன்றும் சொல்லாமல் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி நடக்கலானார்.
“என்ன பண்ணுற பார்கவி… எங்கே போற..??”
“நான் அதை தூக்கி தூர போட போறேன். யாரோட கைக்கும் கிடைக்காதப்படி…” விரைவாக நடந்தபடி பதில் கூறினார்.
மித்ரன் பதறி போனார். அவரும் காரிலிருந்து இறங்கி அவர் பின்னே ஓடலானார்.
“நில்லு பார்கவி.. நான் சொல்லுறதை கேளு”.
“நோ… நான் எதையும் கேட்கிறதா இல்லை.. ” மணலில் கால் புதைய வேகமாக நடக்க முயன்றார். ஆனால் எவ்வளவு வேகமாய் நடந்தாலும் அவரால் கொஞ்ச தூரத்தை கூட கடக்க முடியவில்லை..
“சொன்னா கேளு.. நில்லு..” வேகமாய் வந்தவர் பார்கவியின் கைகளை பிடித்து தடுத்தார்.
“நீ இப்படி செய்ய கூடாது. செய்யவும் நான் விட மாட்டேன். உனக்கு வேண்டாம்ன்னா என்கிட்ட கொடு. அது எனக்கு வேண்டும்”. குரலில் உறுதி இருந்தது.
“நோ.. நான் தர மாட்டேன். ஒரு நாளும் நீ சொன்னதை செய்யமாட்டேன்”.
“இப்போ மட்டும் நான் சொன்னதை நீ செய்யலன்னா உன்னோட பையனை உயிரோட பார்க்க முடியாது”.
அவரது நடை பிரேக் போட்டது போல சட்டென நின்றது.
“ஏய்.. என்ன சொல்லுற..?” சட்டை காலரை பிடித்து உலுக்கினார்.
“ம்ம்ம்.. உண்மையை தான் சொல்லுறேன். உன் கைப்பையில் இருக்கிற அந்த காலபயணம் செய்யக்கூடிய பெட்டியை இப்போ என்கிட்ட கொடுக்கிற. கீர்த்தனாகிட்ட இதை எப்படி வேலை செய்ய வைக்கணும்ன்னு நீ கேட்டு என்கிட்ட சொல்லுற… இல்லை…ன்..னு வை நடக்கிறதே வேற”. தோழன் மித்ரன் வில்லன் கேரக்டர்க்குள் இப்போது முழுமையாக புகுந்திருந்தான்.
கடலலைகளின் பேரிரைச்சல் எல்லாம் இப்போது காதில் விழவில்லை. தன் மகன் ரவியை சுற்றியே அவரது உலகம் வலம் வந்தது.
“நோ. நீ பொய் சொல்லுற. உன்னால என் ரவியை ஒன்றும் பண்ண முடியாது”.
“ஹா ஹா ஹா.. ஏன் முடியாது…??”
ஒற்றை புருவம் மேலேற மீசையை நீவி விட்டப்படியே வில்லன் சிரிப்பு சிரித்தபடியே கேட்டான்.
இவன் கண்கள் பொய் சொன்னது போல தெரியவில்லையே… எதற்காக இப்படி செய்கிறான். இவனுக்கு எதற்கு அந்த பரமபதம். இவனிடம் இல்லாத சொத்தா…??!
கால பயணம் செய்து எதை மாற்ற போகிறான்…
“உனக்கு என்ன வேணும் மித்ரா…??”
இக்கட்டான நிலையிலும் தைரியமாய் எதிரியின் இலக்கை அறிய விரும்பினார்.
“நீ தான் வேணும்னு சொன்னா தந்துருவீயா…?? ஹ்ம்மம்ம்…?”
“ச் ச் சி…. என்ன பேச்சு இது…??” அருவருப்பில் முகம் சுளித்தார் பார்கவி.
“ஏன்.. உனக்கு என்னை பி..டி..க்..க..லை…யா… கவி..?!” காதல் சிந்தியது அவன் குரலில்.
“உனக்கு என்கிட்ட என்ன பிடிக்கலைன்னு அ…ந்…த… அ…ந்த ராஜசேகரை கல்யாணம் பண்ணுன…? நான் உன்கிட்ட எத்தனை முறை என்னோட… என்னோட காதலை புரிய வைக்க முயன்றேன் தெரியுமா…?”
இவன் என்ன சொல்கிறான்… காதலா.. என் மீதா…?
“என்னடா சொல்ற…?”
“நான் உன்னை காதலிச்சேன்…ன்…னு சொன்னேன். இப்பவும் நீ தான் என்னோட மனசுல இருக்கன்னு சொல்றேன். ஒன்று இப்பவே என் கூட வா.. இல்லை அந்த காலபயணம் பற்றி முழுசா சொல்லு. என்னோட காதலை எப்படி உனக்கு புரியவைக்கிறதுன்னு எனக்கு தெரியும்…”
“என்ன பேச்சு இது. இப்போ நான் இன்னொருவரோட மனைவி. அது மட்டும் இல்லாமல் எனக்கு அழகானா குழந்தை இருக்கு. குடும்பமா வாழ்ந்துகிட்டு இருக்கிற என்கிட்ட வந்து இப்படி கேட்கிறீயே அசிங்கம் பிடிச்சவனே! உனக்கு வெட்கமா இல்லை.
த் த் தூ….
இப்படி ஒரு கேவலமான எண்ணத்தோட இவ்ளோ நாள் பழகி இருக்கிறீயே…
ச் சி… நினைச்சாலே வாந்தி வருது.
தயவு செய்து என் கண் முன்னாடி நிக்காத. போயிடு”.
“என்ன.. போகணுமா.. அதற்காகவே இவ்ளோ நாள் உன் கூடவே உறவுங்கிற பெயருல சுத்திக்கிட்டு இருந்தேன். முடியாது. உனக்கு இப்போ என் கூட வர முடியலன்னா போகட்டும். நான் உன்னை இந்த நினைவுகளே இல்லாத அந்த புது உலகத்துக்கு கூட்டிட்டு போறேன். வா. உனக்கு கல்யாணமே ஆகாத, நாம் நல்ல நண்பர்களா பழகுன அந்த பால்ய காலத்துக்கு போவோம். அப்போ உனக்கு என்னை பிடிக்கும். என் காதலையும் பிடிக்கும். அந்த ராஜசேகர் மட்டும் வரலன்னா கண்டிப்பா நீ என் மனைவி ஆகியிருப்ப.
மம்ம்ம்ம்… டைம் வேஸ்ட் பண்ணாத. சீக்கிரம் போய் கீர்த்தனாகிட்ட கேளு. நாம் உடனே எல்லாத்தையும் மாற்றணும். இல்லைன்னு வை… உன்னோட குழந்தை இப்போ என்னோட ஆட்கள்கிட்ட”.
சர்வமும் நடுங்கியது பார்கவிக்கு. வசமாக இவனிடம் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்தார். டிரைவரை என்ன பொய் சொல்லி வர விடாமல் தடுத்தானோ… என்ன செய்வது. ஒன்றும் புரியவில்லையே…
“என்ன யோசிக்கிற பார்கவி.. ம்ம்ம்ம். நட.. காருக்கு போ”. மிரட்டலாக சீறினான் அவன்.
முஹும்… இவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது. சாதுரியமாக நடித்து தான் தப்பிக்க வேண்டும். நிமிடத்தில் யோசித்தவர், மெதுவாக முன்னே நடப்பது போல் நடந்து, அவனுக்கு முதுகு காட்டி எங்கேயோ பார்ப்பது போல திரும்பி கொண்டு, கைப்பைக்குள் கை விட்டு அந்த பரமபத பலகையின் உள்ளே இருந்த அந்த தாயக்கற்களை கை மறைவில் எடுத்துக்கொண்டார்.
சாலையை அடைந்ததும் விறுவிறுவென அவன் எதிர்பாராத அசந்த தருணத்தில் ஓட்டம் பிடித்தார்.
மித்ரன் திகைத்துப் போனார்.
“என்னையே ஏமாற்ற பார்க்கிறீயா…???”
வேகமாக அவரும் பின் தொடர்ந்து ஓடினார்.
கால்கள் அதன் போக்கில் போக, எங்கே போகிறோம் என்ற இலக்கின்றி கால் போன போக்கில் ஓடினார். கொஞ்சம்
யோசித்து செயல்பட்டிருந்தால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு
சென்றிருக்கலாம். அவசர அவசரமாய் அவனிடம் இருந்து தப்பித்து தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் அவரே அந்த காலபயணம் செய்து மாற்ற எண்ணினார்.
இது தான் விதியின் ஆட்டம் என்பதை அறியாமல், அதை மாற்ற அவர் அவரது உயிரையே பயணம் வைத்து காலபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். ஆபத்து சமயத்தில் நிதானமாக யோசித்தாலே போதும் சுலபமாக விடை கிடைத்துவிடும். அவசரகதியில் சீக்கிரம் செய்யவேண்டும் என்கிற படப்பிடிப்பில் முட்டாள்தனமாக முடிவெடுத்தார் பார்கவி.
இருள் நன்றாக பரவத் தொடங்கியது. மழை தூரளாய் ஆரம்பித்து கொட்டி தீர்த்தது. தேகம் நடுங்கியது. கால் தடுமாறியது. இனி முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
கையில் இருந்த பரமபத பலகையை நிலவொளியில் பிடித்துக்கொண்டு கற்களை கையோடு பிடித்தபடி வைத்தார். இத்தனை ஆண்டுகளாய் அன்ன ஆகராமின்றி கோர பசியுடன் இருந்த அந்த பரமபத பலகை வெறியுடன் செயல்பட ஆரம்பித்தது. நாடி நரம்பெங்கும் நிலவொளியின் ஆற்றலும், மழை நீரும் சுவாசமாய் அதன் தேகமெங்கும் பரவியது. அதன் இலக்கங்கள் மாறியது, பிரகாசமான ஒளி அதிலிருந்து புறப்பட்டது, இதை எதையும் லட்சியம் செய்யாமல் தன் உலகமே அழிந்தாலும் குழந்தையை காக்க வேண்டும் என்ற தாயுள்ளத்தில் அவர் அவசர அவசரமாக கால பயணம் செய்தார் காலத்தின் அளவை குறிப்பிடாமலே.
வெகு அருகில் மித்ரன் வருவதை அறிந்து கொண்டு அந்த பலகையை அப்படியே வெறி கொண்ட மட்டும் தூர வீசியபடியே அந்த மாய ஒளியின் பிடியில் விழுந்தார்.
“ஆ…ஆ…..ஆ….
ர……….வி…….
வந்துட்டேன்டா அப்பு…மா…”
எக்காரணம் கொண்டும் அவன் கையில் சிக்கக்கூடாது , காலபயணமும் மாட்டக்கூடாது. இதற்கு ஒரே வழி கண் எட்டாத தூரத்தில் வீச வேண்டும் என்றெண்ணத்தில், பார்கவி தூக்கிப் போட்ட பரமபத பலகை அப்படியே கடல் அலைகளில் சிக்கி, கடலுக்குள் மெது மெதுவாக சென்று ஜலசமாதி ஆகியது.
அபிமன்யூ எப்படி மகாபாரதப் போரில் சக்கரயூகத்தில் மாட்டிக்கொண்டு வெளிவராமல் மாண்டுப்போனானோ… அதே மாதிரி பார்கவி கால பயணத்தில் சிக்கி கொண்டார் வெளிவரும் மார்க்கம் அறியாமலே.
சாய்த்தாளே… உயிர் தருவாளா…??!

Advertisement