Advertisement

அத்தியாயம் 9
“எத்தனை முகமூடி அணிந்தாலும்
மனதிடம் மாறுவேடம் போட முடியுமா…?”
தன் எதிரே அத்துணை ஆளுமையாய் அமர்ந்திருந்தவனை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
“அட… இவள் எங்கே இங்கே…?” கொஞ்சம் யோசித்ததில் அவனுக்கு இதுவாக தான் இருக்கும் என்று தோன்றியது.. கடைக்கண் கொண்டு பாட்டியை பார்த்தான். முகம் தெளிவாக இருந்தது. அவனுக்கு கொஞ்சம் குழப்பமாகி விட்டது.
“இது என்ன கூத்து. . . இவன் எங்கே இங்கே. . ?” -ஆராதனா.
பார்வை தானாக அவனது பெயர் தாங்கிய பலகையின் மீது பதிந்தது.
“ரவி வர்ம குலோத்துங்கன்”
“மேனேஜிங் டைரக்டர் “
கம்பீரமாய் கர்ஜித்தது அதன் அறிவிப்பை.
பெண்ணவள் கொஞ்சம் மிரண்டு போனாள்.
“ஹைய்யோ. . ?! இவன் எம்.டியா. . ?!! பெ. .ரி. . ய. . ஆளோ . . .??!”
“அது தெரியாமல் இவனிடம் நாம் இன்று காலை ஏதும் கிறுக்குத்தனமாக பேசி விட்டோமோ .. . தெரியலயே. . .  என்னத்த பேசுனேனு ஒன்னும் நியாபகத்துக்கு வந்து தொலைக்க மாட்டுக்குதே…!”
சட்டென சுதாரித்தவன். .  அங்கே குழுமியிருந்த மற்ற கம்பெனி நபர்களையும் பார்த்து வசீகர புன்னகையை உதித்தவன் பேசலானான்.
“குட் மார்னிங் எவெரி படி . . .
உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மிக்க  மகிழ்ச்சி. எல்லோரோட கம்பெனி பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும். எல்லோருமே நல்ல திறமையானவங்க தான். இருந்தும் எதுக்கு உங்க மூணு கம்பெனியும் செலக்ட் பண்ணி வர வச்சிருக்கேனா . . .?! ஐ வான்ட் பெஸ்ட் . எங்களுக்கு இந்த ப்ராஜெட் கொஞ்சம் சென்டிமெண்டல் கூட. சோ டூ யுவர் பெஸ்ட். தென் என்னோட பாட்டியோட முடிவு தான் பைனல் டிசிஷன் . பெஸ்ட் விஷேஸ் ச்சு ஆல்.”
கண்கள் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும் அவன் இவளை ரசித்தான் பிறர் பார்வைக்கு படாமல்.
“அட ராட்சஷா …!   அப்படி பார்க்காதடா. . . சும்மாவே ஒன்னும் மண்டையில ஏற மாட்டுக்குது. . . இதுல நீ வேற ஆளை விழுங்குற மாதிரி பார்த்தா. . . விளங்கிடும். . .  !”
“என்னோட ரெஸ்டாரண்ட் பத்தின உங்களுக்கு தேவையான டீடெயில்ஸ் எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு. ரீட் பண்ணி பாருங்க. தென் உங்களோட ஐடியாவை சொல்லுங்க. . .”
“யாரோட ஐடியா எங்களுக்கு பிடிக்குதோ அந்த கம்பெனிக்கு சான்ஸ் ..  ஓ.கே . . லேடீஸ் அண்ட் ஜென்டல் மேன்  பிளீஸ் டேக் யுவர் டைம்.”
“இவன் பக்கத்துல இருந்தாலே என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல… ச் ச் ச.  .. ..
ஏய் தேஜா வூ. . . யூ கோ . .
ஹேய் ஆரு… யூ கம் . . வேக் அப். . .  நிமிர்ந்து நில்லு…”
பாட்டியின் அருகில் சமத்தாய் அமர்ந்து விட்டான் ரவி.
அந்த பேப்பரில் இருந்தவற்றை அகில் வாசித்து விட்டு இவள் முகம் பார்த்தான்.
“அட தேங்காய் மண்டையா! என்னை ஏன். . டா பார்க்கிற. . .?!”
“ஹ்ம்ம்ம்… சொல்லு. உன்னோட ஐடியா எப்படி..? நம்மால் இவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்ன்னு நினைக்கிறியா..?”
“நல்லா கேட்டா போ. . . . குடுடா அந்த பேப்பரை..” குனிந்து அவர்கள் கண்டிஷன் மற்றும் விருப்பத்தை பார்த்தாள். பின் கொஞ்சம் யோசித்தாள். நிமிர்ந்து பார்த்தவள் அவனை பார்த்து அழகாய் கண்ணடித்தாள்.
“ஹைய்யோ …! என்ன பண்ற ராம் . . ? !” குரல் கொஞ்சம் பட படப்பாய் வந்தது.
“சு . . ம். .மா. . .” கண்களால் சிரித்தப் படி அழகாய் கண் சிமிட்டினான் கள்வன்.
கைகள் அதுபாட்டிற்கு அவளை தழுவி கொண்டது. இதழ்கள் அவள் முகமெங்கும் ஊர்வலம் சென்றது.
பெண்ணவள் இத்தாக்குதலை எப்படி தாங்குவாள் . ?! வெலவெலத்து போனாள் அக்காரிகை.
“ச் ச் சு …. ராம்…!” பெண்ணவள் கிறங்கினாள். அவளவன் மிஞ்சினான்.
“நோ ராம். டோன்ட் டச் மீ.” என்றபடி அவன் கைகளை விலக்க பார்த்தாள் வதனா. ஹும்..ம்ம்…. அக்காதல் மன்மதன் சிறிதும் அசைந்தானில்லையே .
இளக துடித்த மனதை அடக்கியப்படி  “இப்போ இங்கே எதுக்குடா  வந்த…? இது என்னோட ஆபிஸ்டா.. யாராச்சும் பார்த்திட போறாங்கடா. . .” சிணுங்கினாள் அவள்.
“ஹா ஹா ஹா…. சோ வாட் ஹனி…”  இதழ்கள் அவள் கன்னக்கதுப்பை தடவி சென்றது. பெண்ணவள் சிலிர்த்து போனாள் . “அட என்னடா இது. .  . இப்படி இம்சிக்கிறாயே. . .?” குரல் கொஞ்சியது.
இருந்தும் தன் மறுப்பை பெண்ணவள் மீண்டும் காட்டினாள்.
“நோ ராம் … நோ. ..”   அவன் கைகளை விலக்கியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அக்கண்கள் அவளை காதலோடு சிறையெடுக்க விளைந்தது. “ஹேய் . . டோன்ட் லுக் அட் மீ லைக் தட் …”
தன் காதல் சிந்தும் பார்வையை துளியும் வீணாக்காமல் அக்கன்னிகை மீது தெளித்து அவளை வீழ்த்துவதிலே குறியாய் இருந்தான் போலும். அவளால் அப்பார்வையை தாக்கு பிடிக்க முடிய வில்லை. உடல் லேசாக உதறியது. இவனை… இப்படியே விட்டால் …. “ஹ்ம்ம்… நோ…”
சட்டென அவன் பிடியிலிருந்து விலகி தூரமாய் தள்ளி நின்று கொண்டாள் . கொஞ்சம் தன்னை திடப்படுத்தி கொண்டு… தன் எதிரே நின்றிருந்த மாயக்கண்ணனை  பார்த்து…
“இட்ஸ் எனப்ஃ ராம்.
டோன்ட் கம் நியர்…. ஹே… சொல்றேன்ல .. தள்ளி போ.. பக்கத்துல வராதா. . .!”
பிடிவாதமாய் சொன்னாள் இம்முறை.
“ஓ.கே ஓ.கே. . ரிலாக்ஸ். .” கைகளை உயர்த்திய படி சமாதானமாய் சொன்னான்.
சிவந்திருந்த முகத்தை கைகளால் தேய்த்து கொண்டாள் வதனா. அவன் சிரித்து கொண்டான்.
“சிரிக்காதடா. .. போடா முதல இங்கிருந்து. . .”
பலமாய் சிரித்தான் இப்பொழுது…
“என் நிலைமை உனக்கு வேடிக்கையா இருக்குதாடா . . .?!” மேசையின் மீது இருந்த பேனாவை எடுத்து சட்டென அவன் மீது எறிந்தாள்.
“ஹேய் . . .!” பதட்டமாய் விலகினான் அவன்.  . அப்படியே மறைந்தும் போனான் அக்கள்வன்.
“என்ன இது. . ? இவன் எங்கே போனான். .  இப்போ. .போ. .து தா . . னே . .   என் கண் முன்னால் நின்று கொண்டிருந்தான்.
ச் ச்ச . .  வெறும் கனவா. . .?!” மூச்சை இழுத்து விட்டபடி சேரில் அமர்ந்தாள் பெண். “டேய் நீ என்னை ரொம்பவே படுத்துறடா . . .”  புகார் சொன்னாள் பெண். அவன் மந்தகாசமாய் புன்னகைத்து கொண்டான் அவள் மொபைல் ஸ்கிரீனில் இருந்த படி .
“பாட்டி. . . உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா. . . ?!” ஆர்வமாய் கேட்டான் ரவி.
“என்னப்பா. . .? சொல்லு!” அவருக்கும் அவனது குதூகலத்தில் கொஞ்சம் தொற்றி கொண்டது.
“இன்னைக்கு மார்னிங் நான் வாக்கிங் போயிட்டு வரும் போ ஒரு அழகான குட்டி பாப்பாவை பார்த்தேன். . .”
“அது யாருடா குட்டி. . ?! எனக்கு தெரியாமா. .?”
“ஹைய்யோ பாட்டி . நான் தான் சொன்னேன்ல.  மார்னிங் பார்த்தேன்னு. அதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்…?”
“சரி சரி சொல்லு… அந்த குட்டிக்கு என்ன ஆச்சு. . ?!” ஆர்வமாய் தான் கேட்டார் கூடவே கொஞ்சம் விசாரிப்பு தென் பட்டதோ . . .?!
“ஹ்ம்ம்ம். . . குட்டி பொண்ணு  ஒரு மிட்டாய் சாப்பிட்டு  கொண்டு இருந்தா  . .  நான் பக்கத்துல போய் இது என்னனு கேட்டேன். அதுக்கு அந்த பொண்ணு..  . என்னை வச்சி செஞ்சுட்டா. .  .” சோகமாய் முகத்தை வைத்த படி சொன்னான் அவன் .
“அட பாவமே. .  ஒரு மிட்டாய் பெயர் கேட்டது ஒரு குத்தமா. . . இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுனா. . . ஆமா அந்த குட்டி உன்ன என்னடா செஞ்சா. . . ?”
“எங்க பாட்டி செஞ்சா. . .  நான் தான் செய்யாமா மிஸ் பண்ணிட்டு இப்போ பீல் பண்ணுறேன். . .” சத்தம் வராமல் இதழசைத்தான் அவன்..
“என்ன பேராண்டி சொன்ன. . .?! ஒன்னும் சரியா கேட்கல. .  .” பாட்டி கொஞ்சம் அவனுருகில் நெருங்கியபடி அமர்ந்தார்.
“அதுவா. . . சொல்றேன் நல்லா கேட்டுட்டு அது என்ன மிட்டாய்ன்னு சொல்லுங்க. அந்த குட்டியை  அடுத்த முறை பார்க்கும்போ நான் கண்டிப்பா அவகிட்ட என்னோட பதில்லை சொல்லணும். சரியா. .?” என்றபடி புதிரை சொல்ல தொடங்கினான்.
“ஒரு ரூபாய் காயின் அளவே இருந்தாலும் . . . .
. . . . . . . . . .
மின்னுமையா மின்னும். . .”
“ஹ்ம்ம்ம்.. அவ்ளோ தான் பாட்டி. . .”
பாட்டி இப்போது சாய்ந்த படி சேரில் அமர்ந்து கொண்டார்.  காற்றில் கோலம் போட்ட படி… விரலசைத்து தனக்கு தானே என்னமோ பேசி கொண்டார். .  பின் இது அதுவா தான் இருக்கணும். . . ஹ்ம்ம். .  அப்புறம் அது இதுவா தான் இருக்கணும். . .  என்று ஏதேதோ பேசியபடி இருந்தார்.
பின் சட்டென இவன் புறம் திரும்பி. . . “டேய் பேராண்டி. .  . அந்த மிட்டாய் சாப்பிடும் போ. .  உதடெல்லாம் ஒட்டிக்கிட்டு.. ருசிச்சு சாப்பிட்டாளா என்ன. . .?”
அவன் கண்கள் ஒரு நொடி மின்னி மறைந்தது.
“அய்யோ இந்த பாட்டிக்கு எப்படி தெரிஞ்சி. . . ?! ஒரு வேலை நம்ம பின்னாடியே வந்து இருப்பாங்களோ….?”
உங்களுக்கு எப்படி பாட்டி தெரியும்.. ? சிறுவனாய் மாறி போனான் அவன் விடை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.
“அட லூசு பயலே… இது கூட தெரியாம நீ எப்படி தான் இவ்வளவு சாதிச்சியோ… அட போடா…”
“ஏன் ..  பாட்டி.. அப்படி என்னது அது. . . சொல்லுங்க…”
அவன் கெஞ்சுவதை பார்க்கையில் அவருக்கு கொஞ்சம் அவனது பால்ய கால நினைவுகள் வந்து போயின… அவன் முகத்தை வாஞ்சையாக தடவி கொடுத்த படியே சொல்லலானார்…
ஒரு ரூபாய் அளவு தான் அந்த மிட்டாய் இருக்குதுன்னா… அது கண்டிப்பா ரொம்ப சின்ன சைஸ் தான்.. அப்புறம் நொங்கு எவ்வளவு சுவை.. அது போல இந்த மிட்டாய்க்கும் கண்டிப்பா மறக்க முடியாத ஒரு சுவை தான் இருக்கணும்.. சரியா பேராண்டி…! அப்புறம் நாக்குல வச்சவுடன் நம்மல அறியாமையே தண்ணீர் ஊறணும்ம்னா . . . . அது என்னவா இருக்கும்… ஒன்று இனிப்பு இல்லை புளிப்பு.. சரியா..? ” புருவம் உயர்த்தி கேட்டார்.
“அட ஆமா பாட்டி…”
“இதை செய்யணும்ன்னா… வீட்ல இருக்கிற பொருளே போதும். அதுவும் எல்லோர் வீட்லயும் இருக்கும்ன்னு சொல்லியிருக்கா.. சோ இது கண்டிப்பா அதுவா தான் இருக்கும்..” சொல்லியபடி புன்னகைத்தார்.
“என்ன பாட்டி சொல்லுறீங்க.. அது இது…?! ஹ்ம்ம்…. என்னது அது..? இது..? நீங்களும் புதிர் போடுறீங்க போங்க…” அலுத்துக் கொண்டான் பேரன்.
“டேய் பொறுடா… விவரமா சொன்ன தான் உனக்கு புரியும்.” என்றபடி அவர் புதிரின் மெயின் ஸ்விட்ச்யை தொட்டார்.
“சுவையில் இரண்டு.. அது மட்டும் இல்லாம சூப்பரா ஜொலிக்கிறது.. அப்புறம் ரஜினி போலன்னா… அது கருப்பா இருக்கணும்.. அதை தான் இந்த பொண்ணு இப்படி வர்ணனையா சொல்லியிருக்கணும்…”
“அச்ச்சோ  . . போதும் பாட்டி .. முதல அது என்னனு சொல்லுங்க…” நொந்து போனான்.
“இதுக்கே உனக்கு பொறுமை இல்லைன்னா… இன்னும் வாழ்க்கையில நீ எதிர் கொள்ள வேண்டியது தெரிஞ்சா எப்படிடா ஹாண்டில் பண்ண போற…?!”
அவன் முறைப்பு இரட்டிப்பாகவும் ….
“வெயிட்! இப்போ சொல்றேன்.. அந்த மிட்டாய் … “புளி மிட்டாய்” டா மடையா…”
“இனிப்பு ப்ளஸ் புளிப்பு.. சோ ரெண்டு சுவை. அல்சோ பிளாக் கலர்.. அதோட ஐஸ் க்ரீம் ஸ்டிக் இருக்கும் போ தனித்துவமா தெரியும்.. சோ எத்தனை நடிகர்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் மின்னுறதை போல இந்த மிட்டாயும் பளிச்சுனு மின்னும்.. அதை தான் சொல்லியிருக்கா.. போதுமா…”
“ஹைய்யோ.. ஆமாம்…”  சிரித்து கொண்டான் அவன்.. அதை ரசித்து கொண்டார் அந்த முதிர் ரசிகை..
கதவு தட்டும் ஒலியில் சிரித்த படியே  திரும்பி பார்த்தான்.. அவனது பி.ஏ நின்று கொண்டிருந்தான்.
“யெஸ். கம் இன் ” என்றபடி அவன் புறம் திரும்பி அமர்ந்தான்.
“சார். அங்கே மீட்டிங் ரூம்ல எல்லோரும் உங்களுக்குகாக வைட்டிங். அவர்களோட சாம்பிள் பெயிண்ட்யிங் பார்த்துட்டு நீங்க ரிசல்ட் சொன்னா நாம் அடுத்த ப்ரோசிஜர் மூவ் பண்ணலாம்.”
“ஓ.கே.
வாங்க பாட்டி. நாம் போகலாம்.” என்றபடி இருவரும் எழுந்து அந்த அறை நோக்கி சென்றனர்.
அந்த கண்ணாடி தடுப்பின் வழியே பார்க்கையில் ஆரு முதுகு காட்டிய படி அமர்ந்திருந்தாள். அருகில் இன்னொரு கம்பெனியில் இருந்து வந்திருந்த வேறொரு ஆடவனுடன் பேசியபடி தான் தெரிந்தாள்.
அருகே நெருங்க நெருங்க. . .  ரவியின் முகம் பாறையாய் இறுகி கொண்டே சென்றது.
அந்த அவன் ஆருவை கொஞ்சம் ஆர்வமாய் பார்த்த படி இருந்தான். பெண்ணவள் இதை கவனிக்காது ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். அவன் பாட்டிற்கு இவளிடம் ஏதோ விஷமமாய்..கண்டிப்பாக ஏதோ வேண்டாத கடலை தான் போட்டு கொண்டிருந்தான் என்பது தூரத்தில் வந்து கொண்டிருந்தவனுக்கு தெளிவாக புரிந்தது.
“இவளுக்கு எங்கே போனது அறிவு.. இவனை ஏன் இவள் பக்கத்தில் அமர அனுமதித்தாள்.?”
அறையை திறந்து கொண்டு உள்ளே சென்ற போதும் பெண்ணவள் நிமிர வில்லையே.. அது வேறு ஆத்திரத்தை கிளப்பியது.
“இவளுக்கு என்னையெல்லாம் எப்படி கண்ணிற்கு தெரியும்.?” பொரிந்து கொண்டிருந்தான்.
“ஹலோ ஹைய்ஸ்.. லெட்ஸ் சி யுவர் ஒப்பீனியன்.”
“கம் ஆன் ஸ்டார்ட் ஒன் பை ஒன் …” என்றதும் முதலிரண்டு கம்பெனி சார்பாக வந்தவர்கள் அவர்களது முன்மாதிரி வரைபடங்களையும் மற்ற கருத்துகளையும் தெரிவித்தனர்.
அடுத்து ஆருவின் முறை. ஆரு அகிலை பார்த்தாள். அவனுக்கு முதலிரண்டு கம்பெனிகளின் விளக்கத்தில் கொஞ்சம் டென்ஷன் தொற்றி கொண்டது போலும் கண்களால் இவளை பேச சொன்னான்.
“ஹ்ம்ம்…” என்றபடி இவள் “தேஜா வூ” வின் புறம் திரும்பி பேசலானாள்.  .
“சார். எவ்வளவு தான் தொழில் நுட்பம் முன்னேறி இருந்தாலும் பழைய பொருளுக்கு மதிப்பு குறைஞ்சி போறது இல்லை. அது போல.. நாம ஏன் கருப்பு வெள்ளை வரைபடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது..?
அதுமட்டும் இல்லாம எல்லோரோட பார்வைக்கும் பளிச்சுன்னு தெரியும். மனசுக்கு ஒருவித ஆறுதல் தர கூடியதும் கூட… அதோட நாம இந்த ட்ராயிங்ஸ்ல சிலதை மட்டும் குறிப்பிட்டு ஹை லைட் பண்ணி காட்டுனா .. அது சுலபமா எல்லோரோட மனசுலயும் பதிஞ்சிரும்.
நீங்க உங்க ரெஸ்டாரண்ட் உணர்ச்சி பூர்வமா நினைக்கிறீங்க. சோ நாம் வரவேற்பறை பக்கம் சாமி படங்கள் ஏதாவது வைக்கிறது  உங்க ரெஸ்டாரண்ட் வர மக்களுக்கு ஒருவித மன நிறைவை கொடுக்கும். அது கூடவே சுவருக்கு நீங்க செலக்ட் பண்ணுற கலர், டைல்ஸ் கலர், இன்டெர் டெகரேஷன் இது எல்லாம் பொறுத்து தான் நாம பெயிண்ட்டிங்ஸ் தேர்ந்தெடுக்க முடியும். அது தான் புத்திசாலி தனமும் கூட…
நீங்க இந்த பேப்பர்ல சொல்லியிருக்கிற விஷயம் கூட, எக்ஸ்ட்ரா  தான் பிளான் போட்டுறுக்கணும்… ?!” என்ன சரியா என கண்களால் கேட்டாள்.
“பரவாயில்லையே கண்டு கொண்டாளே …” மெச்சி கொண்டான் அவளின் தேஜா வூ.
பார்வை பரிமாற்றம் பாட்டியின் கண்களிலும் தவறாமல் பட்டது. கண்டுகொள்ளவில்லை அவர்.
” சோ உங்க அடுத்த பிளான்  ஹோட்டல் தொடங்கி இந்த ரெஸ்டாரண்ட் கூட அட்டச் பண்ணுற மாதிரி தான் இருக்கணும்.. ஒரு வேளை ஷாப்பிங் காம்ப்லெஸ் மாதிரி நீங்க இதை மாற்றி கொண்டாலும் ஆச்சரிய பட்றதுக்கு இல்லை.. சோ மெயின் எண்ட்ரன்ஸ்ல நான் முன்னவே சொன்ன மாதிரி அமைதியை தர மாதிரி, இல்லை மனசுக்கு இதம் தருவது போல பெயிண்ட்ங்ஸ் வைக்கிறது தான் செட் ஆகும்.. “
என்றபடி தன் கையில் இருந்த சில மாதிரி பெயிண்ட்டிங்க்ஸை காட்டினாள் .
அவன் ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டே வந்தான். பின் பாட்டியிடம் நகர்த்தினான்.
“சோ என்னோட கருத்தை நான் சொல்லிட்டேன். முடிவு உங்களோடது. தாங்க் யூ .” என்றபடி அமர்ந்து கொண்டாள் .
அவன் ஒன்றும் பேசவில்லை. பாட்டி தான் அவன் விருப்பத்தை கேட்டார். அவன் உங்கள் விருப்பம் என்று சொல்லி முடித்து கொண்டான்.
சரி தான். பிள்ளை ஏதோ டென்ஷன்ல இருக்கான். என்று நினைத்தபடி பாட்டி பேசலானார்..
“உங்க எல்லோரோட கருத்துமே நல்லா இருந்துச்சி. நீங்க காட்டுன்னா எல்ல வரைபடங்களும் அழகு. வாழ்த்துக்கள். உங்க எல்லோருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு. நான் ஒருத்தரை மட்டும் தேர்ந்தெடுக்கிறதுனால இங்க யாரும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லை…”
என்று கொஞ்சம் பீடிகை போட்டவர் பின்…
“அல்சோ நாங்க இந்த ப்ராஜெக்ட்டை என்னோட மருமகள்.. ரவியோட அம்மா நியாபகர்த்தமா இருக்கணும்னு நினைக்கிறோம். அவளுக்கு பிடிச்சதும் இந்த பொண்ணு சொல்லுற மாதிரி தான். எதேச்சையா இந்த பொண்ணு சொன்னது எப்படியோ எங்களுக்கு அவளோட விருப்பத்தை நியாபகபடுத்துது …” என்றபடி ஆராதனா வை பார்த்து கூறியவர், பின் லேசான முறுவலுடன் ….
“சோ என்னோட இந்த ப்ராஜெக்ட் நான் மிஸ் ஆராதனா கம்பெனிக்கு கொடுக்கிறேன். அவர்களோட கணிப்பு சரி தான். நாங்க வச்சிருந்த அடுத்தடுத்த பிளான்ஸ் எல்லாம் பக்கவா ஜட்ஜ் பண்ணியிருக்காங்க. அந்த அறிவு கூர்மைக்காகவே அவர்களை நாங்க தேர்ந்தெடுக்கலாம்…! கங்கிராட்ஸ் மிஸ். ஆராதனா அண்ட் யுவர் டீம் ” என்றபடி கைகளை தட்டியபடி வாழ்த்தை தெரிவித்து கொண்டார்.
அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் அந்த ஜொள்ளு பார்ட்டியும் தான். கூடவே அவளது பஞ்சு கரம் பற்றி வேறு வாழ்த்து தெரிவித்தான்..
இங்கே தேஜா வூ வின் கோவத்தை சொல்லவும் வேண்டுமா…?! காது வழி புகை வராத குறை தான்..
எல்லோரும் ஒன்றன் பின் ஒன்றாக கலைந்து சென்றனர். பாட்டியும் தனக்கு கொஞ்சம் சோர்வாக இருக்கிறது என்று சொல்லி சென்று விட்டார்.
ஆருவின் மனம் இவனது வாழ்திற்க்காக கொஞ்சம் ஏங்கியதோ..? அவனை தட்டு தடுமாறி நிமிர்ந்து பார்த்தாள். அவனோ உதாசீனமாய் இவள் பார்வையை எதிர் கொண்டான். பெண்ணவள் கொஞ்சம் வாடி போனாள்.
“ஓ.கே கைஸ் .. நாளையிலிருந்து நீங்க உங்களோட ஒர்க்ஸ் இ..ந்..த.. கம்பெனியி..லி..ரு..ந்..து.. தொடங்கலாம்..” என்றபடி சொன்னவன்… எல்லோரும் கிளம்பிய பின்.. ஆருவும் அகிலும் மட்டும் இருப்பதை உறுதி செய்துகொண்டு..” மிஸ். ஆராதனா… உங்ககிட்ட இந்த ட்ரையிங்ஸ் பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கிறன். மிஸ்ட்டர் அகில் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ண முடியுமா..?!” அலுங்காமல் குலுங்காமல் அழகாய் அப்புறப்படுத்தினான்.
பெண்ணவள் மூளையில் மணி அடித்தது. “தனக்கு ஏதோ ஆப்பு ரெடி.. ரை..ட்..டு….”
அகில் கதவை சாத்தி விட்டு சென்றதும்.. மெதுவாக.. அதே சமயம் உறுதியான நடையுடன் இவள் புறம் வந்து கொண்டிருந்தான்.. இவளின் தேஜா வூ…
இதயதுடிப்பு கொஞ்சம் கூடியது…
அவன் பார்வை கூர்மையாய் இவளை துளைத்தது.
“சொல்லுங்க சார்.. உங்களுக்கு எந்த படத்துல விளக்கம் தேவை…?”
“இதோ.. இந்த படத்துல..” என்றபடி அவள் அவன் அறையினுள் நுழையும் போது வரைந்து கொண்டிருந்த படத்தை காட்டி கேட்டான்.
அதில் மேக கூட்டத்தின் நடுவே.. இரு வலியகரங்களில் பச்சை மற்றும் அடர்நீலம் கலந்த இரண்டு கற்களை கொடுப்பது போலவும், அதன் கீழே ஒரு பெண் கை நீட்டி வாங்க முற்பட்டது போலவும் இருந்தது… அந்த வரைபடம்..
“இதை இவன் எப்போது பார்த்தான்..?”
“சொல்லுங்க மிஸ்.ஆராதனா.. இதோட அர்த்தம் என்னனு தெரிஞ்சிக்கலாமா..?”
“நோ சார். இது உங்களுக்கானது அல்ல.. இது என்னோட தனிப்பட்டது.” உறுதியாய் சொன்னாள்.
“ஓ… ” அளவுக்கு அதிகமாய் வியந்தவன்.. அவள் புறம் இருந்த மேசையின் மீது சாய்ந்த வண்ணம் அவள் முகம் பார்த்தான்…
“அப்போ அந்த அவன் உன்னிடம் வழிஞ்சதும் தனிப்பட்ட விஷயம்ன்னு சொல்லுற…”
“இவன் யாரை சொல்கிறான்..?” யோசித்தவளுக்கு சில நொடி கழித்து தான் அந்த எதிர் கம்பெனிகாரன் ஏதோ பேசியது நினைவில் வந்தது. “இதற்கு தான் இவ்வளவு கோவமா..? அட லூசு பயலே! அந்த பக்கி சொன்னதே நான் கவனிக்கல… இதுல இவன் வேற…” என்று நினைத்தவள்..”அது சரி.. அவன் என்னிடம் வந்து பேசி கை குலுக்கினால் இவனுக்கு என்ன..?”
நிமிர்ந்து ஆண்மகனின் கண்களை சளைக்காமல் பார்த்து சொன்னாள்…
“யெஸ்.. இட்ஸ் மை பர்சனல்….”
சொல்லி முடிப்பதற்குள்.. அவன் கரம் மங்கையவள் சங்கு கழுத்தை இறுக்கியது…
“ஏய்.. என்னடி சொன்ன..?! ஹவ் டார் யூ…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்..
பெண்ணவள் உடல் லேசாக உதறியது.. இருந்தும் வீம்பாய் நின்றாள். “இவன் யார் என்னை கேள்வி கேட்க..? இவனுக்கு எப்போது அந்த உரிமையை நான் கொடுத்தேன்.. ஏதோ காலையில் பார்த்தேன்.. பழகினேன்.. அவ்ளோ தான்.. அதற்குள் இவனுக்கு பெரிய இவன் என்று நினைப்பா….?”
அவன் கண்கள் இடுங்கியது இவள் நிமிர்வில்….
“ஹேய்.. உனக்கு புரியவில்லையா..? இல்லை ஒன்றும் தெரியாதா..? அவன் உன் கிட்ட வழியிறான்னா நீ அதை அவாய்ட் பண்ண வேண்டமா.. இப்படியா அலோவ் பண்ணுவா…அறிவு கெட்டவளே…” அவன் பாட்டிற்கு திட்டி கொண்டிருந்தான்.
அவள் அவன் கையை உதறி தள்ள முயன்றாள். அவன் பிடி இறுகியது..
“விடுங்க…முதல உங்க கையை எடுங்க….”
அவன் கோபம் குறைந்த பாடில்லை..
இறுக்கி பிடித்து கொண்டிருந்ததில் மூச்சு விட கொஞ்சம் சிரம பட்டாள்.. வலித்தது பெண்ணவளுக்கு. எவ்வளவு நேரம் தான் தாக்கு பிடிப்பாள் ஆண்மகனின் கோவத்தை.. அதுவும் இவ்வன்மையை ..?!
“பிளீஸ் ரவி..” பெண்ணவள் பலவீனமாய்  கெஞ்சினாள்.
கண்ணோரமாய் நீர் கசிவு. அவன் மனதை என்னவோ செய்தது…
நெஞ்சில் வலித்தது அவனுக்கு…
சட்டென கைகளை உதறியவன்…அவள் கன்ன கதுப்பை  இரு கரங்களிலும் ஏந்தி கொண்டான்…
நெற்றியை அவள் பிறை நெற்றியோடு சாய்த்தவன். . . “சாரி பேபி…” கரகரத்த குரலில் சொன்னான்.
அவள் உடல் நடுக்கம் அவளது பயத்தை எடுத்துரைத்தது..
ச் ச்ச . ..  . முட்டாள் தனமாக நடந்து கொண்டேனே…
“சாரி பேபி.. வெரி சாரி.. இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன். பிளீஸ்…” கெஞ்சினான்.
“கெஞ்சினால் எல்லாம் சரியாகி விடுமா.. போடா..” மனம் முரண்டு பிடித்தது அவளுக்கு..
அவன் கைகளை அப்புற படுத்தினாள். அவன் அவளையே பார்த்தான்.
“என்னத்த சாரி..போடா…” வார்த்தைகளை கடித்து துப்பினாள் பெண். ஆத்திரத்தில் மரியாதை எல்லாம் பறந்து விட்டது.
அவன் கண்கள் தீடிரென பளிச்சிட்டது. கண்கள் சிரிக்க உதடுகள் இறுகியது.
அவள் அவனை தள்ளி விட்டு நகர முற்பட்டாள்.  அவள் கைகளை பற்றி அவன் புறம் சட்டென இழுத்தான் அக்கயவன். பஞ்சு பொதி போல அவன் மார்பு மீது முகம் புதைத்த படி மோதினாள் ரதியவள். அத்தனை நெருக்கத்தில் மங்கையவளை தரிசிக்கையிலே கூடுதல் அழகாய் தெரிந்தாள். கூடவே சுகமான தீண்டல் வேறு…
அவள் பின்னங்கழுத்தில் தன் வலக்கையை பிடித்து சிரம் தாங்கியவன் மறுகரம் பெண்ணரசியின் மெல்லிடை அணைத்தது.
அவன் நெஞ்சில் கைகளை வைத்து விடுபட முற்பட்டது அவ்வெண்புறா.
இரும்பு மனம் படைத்தவன் போல் எதற்கும் அசைந்தானில்லை.. பெண்ணவள் தான் தோற்று போக வேண்டியதாகிற்று …
அவன் கண்கள் அவளை ரசித்து உண்டது…
“என்ன பண்ணுற நீ? என்னை இப்போ விட போறியா இல்லையா..?” கத்தினாள் அவள்..
“ஷ் ஷ் ஷ்… காம் டவுன்…..”
அவள் கண்களை பார்த்தவாறு ஏதோ பாஷை பேசினான். பெண்ணவள் விழி திறந்து கனா கண்டாள். அந்த கண்களின் மொழி இவளை ஏதோ செய்தது. மீண்டும் அதே உணர்வு… தேஜா வூ…! இதயத்தின் அடி ஆழம் வரை புரியாத உணர்வு. அவன் கைகளில் பெண்ணவள் உடல் உருக தொடங்கியது…
அவள் காதோரமாய் அந்த முடிக்கற்றையை பட்டும் படாமலும் ஒதுக்கி விட்டான்…
“டோன்ட் டூ லைக் திஸ் பேபி.. டோன்ட் அலோவ் எனி ஒன் நியர் டு யு வித் ராங் தாட்ஸ் . . . ஓ.கே பேபி…” கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.. இவள் தலை தானாக சரி என்றது.
அவன் இதழ்கள் விரிந்தது. அதையும் இந்த வெட்கங்கெட்ட மனது ரசித்தது.
அவளிடமிருந்து விலகியவன்… “இப்போ நான் போறேன்… ஒரு த்ரீ மினிட்ஸ் கழிச்சி உன்னை சரி செய்துட்டு நீ வா…” என்றபடி அவள் சிவந்த முகத்தையும் கலைந்த முடியையும் சுட்டி கட்டிய படி நகர்ந்து விட்டான்.
பெண்ணவள் குழம்பி போனாள். தனக்கு என்ன ஆயிற்று.. நான் ஏன் இவனுருகில் இப்படி ஆகி போகிறேன்.. கடவுளே என்ன இது….?
“குழப்பங்கள் பிறக்கையில்
தெளிவுகள் பூக்கின்றன…”

Advertisement