Advertisement

அத்தியாயம் 7
யாரும் உடன்வராத
நேரத்திலும் சூழலிலும் . .
யாரோ போல
நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கும்…
சுயநம்பிக்கை..!!!
ஓடி ஓடி களைத்து. .  கடைசியில் அந்த புலிக்கு இரையாகும் மானை போல. . . தோய்ந்து சரிகையில் கதவு தானாக திறந்தது. இவளை ரட்சிக்க வந்தான் அந்த தேவதூதன். கண்ணை கசக்கி உருவத்தை தரிசிக்க முனைந்தாள். ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை. அப்போது. .  . அப்போது. .
அந்த தேவதூதன் இவளை பார்த்தபடியே அழகாய் புன்னகைத்தான். மதிமயங்கி போனாள் பெண்ணவள். என்ன ஒரு கண் கொள்ளா காட்சி …! வீட்டுக்கு போனதும் அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும். .
நினைத்தவள் சுற்றி முற்றி பார்த்தாள் . .  ஒரே புகை மூட்டமாக இருந்தது…! இது என்ன இடம்.
நிமிர்ந்து பார்த்தாள்.
தேவேந்திரன் இப்போதும் சிரித்த முகமாகவே நின்றிருந்தான் .
“தேவா ! நான் எங்கே இருக்கிறேன்…? இது எந்த இடம்?”
“குழந்தாய்..! பயம் கொள்ளாதே..! உன்னை இங்கு யாரும் எதுவும் செய்ய இயலாது. ஆனால் இப்போது நீ எதற்காக இங்கே வந்தாய்….”
மொழி அறியா குழந்தை போல் முழித்தாள் பெண்.
இதமாக புன்னகைத்தான் தேவன்..
பின் ஆறுதலாய் இவளை பார்த்து..
“செல். உன் உலகத்திற்கே செல். நீ வரவேண்டிய நேரம் இதுவல்ல…” தோள் தொட்டு திருப்பினான் .
“நான் இப்போது எங்கே செல்ல..? வழி தெரியவில்லையே. .  . ஒரே புகையாக அல்லவா இருக்கிறது.தெளிவாக பார்க்க  த்ரீ-டி கண்ணாடி அல்லது கூகிள் மேப் எதுவும் இருக்கிறதா? தேவா. .”
குறும்பாய் புன்னகைத்த படியே தேவன் இவள் கையில் கூழாங்கற்கள் போல எதையோ ஒன்றை திணித்தான்.
“போய் விடு மகளே. . ! உனக்காக மகிழ்ச்சியான உலகம் காத்துக் கொண்டிருக்கிறது..” சொல்லி கொண்டிருக்கும் போதே தேவன் மறைந்து விட்டான்.
குனிந்து கைகளில் இருந்தவற்றை பார்த்தாள் பெண். “இந்த கற்கள் இப்போது எனக்கெதற்கு. . ?! வீட்டில் மீன் தொட்டி கூட இல்லையே.. இதை நான் எங்கே வைக்க. .  . ?”
பெண்ணவள் எதையும் தெளிவாக உணரும் நிலையில் இல்லை. . .
எங்கேயோ.  . யாரோ யாரையோ அழைத்தது போல இருந்தது. . ?!!?
“அம்மு. . . அம்மு. .  . . அம்மு. . .”
“அது யாரு அம்மு. .  ?!!!”
“இங்கே சின்ன குழந்தை ஏதும் இருக்கிறதா என்ன . . ?”
குரல் கேட்ட திசை நோக்கி நடந்தாள் பேதை.
“பேபி…வேக் அப் ..! கம் ஆன்.. பேபி…. கம் ஆன்…”
துடிப்பாய் கேட்டது ஒரு ஆணின் குரல். ஏனோ கண்களை திறக்க முடியவில்லை அவளால்.
“ஓ ! காட் ! பிளீஸ் ஹெல்ப் மீ. . .” குரல் ஏகத்துக்கும் கரகரத்தது .. .
எத்தனை ஆண்மை மிக்க குரல். . இந்த பதற்றத்திலும் நடுக்கத்திலும் கூட எவ்வளவு கம்பீரமாய் ஒலிக்கிறது.  . ?! ரசித்துக் கொண்டாள்.
இப்போது.. நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.. சுவாசத்திற்க்காக நுரையீரல் தூக்கி வாரி போட்டது…
“ஓ..! நோ . . நோ.  . டோன்ட் டூ இட்.  .  பேபி. . பிளீஸ் . .  பேபி.  . நோ .  .
நான் இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது. நோ.. ஒன்றும் ஆக விட மாட்டேன்….”
அழுகையுடனே குரல் கரகரத்து ஒலித்தது.
அவளால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை.. ஏதேதோ நினைவுகள் நெஞ்சில் முட்டி மோதியது…
இப்போது மூச்சு விடவே சிரமமாக இருந்தது.. அப்பொழுது யாரோ. .  முகத்திற்கருகே நெருங்குவது போல இருந்தது.. அசைய முடியவில்லை பெண்ணால்.
யாருடைய மூச்சு காற்றோ.. தனக்குள் இறங்குவது போல இருந்தது.. தொண்டை குழியில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மூச்சு காற்று சுகமாய் இம்சித்த படியே இறங்கி . .  அவள் உடலெங்கும் மின்சாரத்தை பாய்ச்சியது.. பெண்ணவள் சிலிர்த்து போனாள் . . .
“அப்படியே வைத்து கொண்டிருந்தாள் தான் என்ன… பட்டும் படாமலும் .. ஏன் விட்டு விட்டு போகிறது . .  இன்னும் கொஞ்சம் அப்படியே இருந்து விடேன். .” மனம் கெஞ்சியது.
“கம் ஆன்.. பேபி. . பிரித் . . கம் ஆன்..”
மீண்டும் குரல் பதறியது.
கண் முகம் காது எல்லாம் கூச்சமாய்… ஏதோ  ஊர்வது போல ஒரு பிரம்மை உண்டானது  பெண்ணுக்குள். இது யாருடைய கூந்தல். என் மீது ஏன் மோதுகிறது. .  கூச்சமாய் வேறு இருக்கிறதே…!
“ஒரு வேளை தேவேந்திரனோ. . ?! மீண்டும் வந்து விட்டானோ..?!”
“ஹ்ம்ம்…” புருவம் சுருக்கினாள் .
அவளிடம் தெரிந்த சிறு அசைவினை அவ்வுருவம் பற்றிக் கொண்டதோ. . ?!
“யெஸ் . யெஸ் . . . பேபி பிரித் .  . அவ்வ்ளோ தான்.  . இப்படி தான். .  . நோ . . நோ. .  டோன்ட் லாஸ் யுவர் ஹோப். . . எனக்காக..  பிளீஸ். .  பேபி. .எனக்காக . .”
என்னன்னவோ செய்தான். அவள் உயிரை காப்பாற்ற அவன் உயிரை கையில் பிடித்தபடி பரிதவித்தான் .
“ஏன் இவ்வளவு நடுங்குகிறான். .?! இப்போது இங்கே யாருக்கு என்ன. .?! அந்த பதற்றத்திற்கு சொந்தக்காரி யாராக இருக்கும் . . ?!”
மீண்டும் மூச்சு முட்டுவது போல இருந்தது. ஆனால் இம்முறை வேறு விதமான அவஸ்தையில். .
யாரோ.  . ஆண்மகனின் முரட்டு இதழ் தன் இதழை தீண்டுவது போல இருந்தது. காமமாக இல்லாமல். . காப்பது போல தான் உணர முடிந்தது. அந்த மீசையின் குத்தலும் , கன்னத்து தாடியின் சொர சொரப்பும் , முகத்திலே விழுந்த அந்த கேசமும்… அவனிடமிருந்து வந்த அந்த பிரத்யோக வாசமும் பெண்ணவளை கிறங்கடிக்க செய்ய போதுமானதாக இருந்தது.
“அம்முகத்தை ஒரு முறை பார்த்தால் என்ன. . ?” கஷ்டப்பட்டு முயற்சித்து கண் திறக்க முற்பட்டாள் . லேசாக உருவம் தெரிந்தது.
“தேங்க் காட்… உனக்கு ஒன்றுமில்லை… பேபி.. நான் ரொம்பவே பயந்துட்டேன்..”
என்று படப்படப்பாய்  கூறி நெற்றியில் இதழ் பதித்தான். அந்த உஷ்ணம் அவளுள் ஏதோ  செய்தது.
அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அந்தரத்தில் மிதப்பது போல இருந்தது. பின் மெதுவாக எதிலோ கிடத்துவது போல தோன்றியது.
அவுருவத்தினை தெளிவாக பார்க்க முயன்றாள்.  . நிழலாய் தான் பிடிபட்டது. குரல் மட்டும் அவ்வளவு அன்பாய் இருந்தது… காலம் முழுதும் இப்படியே.. இந்த குரலுக்காகவே … இந்த தவிப்பிற்காக. . . இப்படியே இருந்தால் என்ன. . .?
“நீ இப்படியே படுத்திரு. நான் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன். சரியா.. பயப்படாதே.. நான் எப்பவும் உன் கூட தான் இருப்பேன்.” என்றபடி கையை மெதுவாக வருடியது.
பின் “இங்கேயே இரு. இப்பவே வந்து விடுவேன். ஓ கே பேபி.  . .”
என்றபடி அவன் கதவை சாத்தி விட்டு சென்றதை பெண்ணால் உணர முடிந்தது.
———————————————————————————————————————-
மேகத்தை தொடும் எண்ணத்தில் ஆங்காங்கே உயர்ந்து கம்பீரமாய் காட்சியளித்த கட்டிடங்களில் இருந்து வந்த ஒளி பார்ப்பதற்கு வானிலிருந்த நட்சத்திரங்கள் எல்லாம் பூமியில் இறங்கி ஊர்வலம் போவது போல மின்னி மின்னி ஒலித்தது.
தூரத்து வானில் தெரிந்த அந்த சந்திரன் கூட தேவதையாய் தகதகத்தாள்.இரவு நேர குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் அவனோ எதையோ கூர்ந்து பார்த்தபடி சிந்தனை வயப்பட்டிருந்தான். அமெரிக்கா வந்து இன்றோடு முப்பது நாட்களை முழுதாய் முழுங்கி விட்டிருந்தது.
அவனது எண்ணங்கள் குழப்பத்திலே மிதந்து கொண்டிருந்தது. எப்படி தன் செயலை செயல்படுத்துவது  ? ஒருவித தயக்கமாய் இருந்தது..
அப்போது கிங்கிணியாய் சிரித்தது தொலைபேசி.
எடுத்து காதில் வைத்தவன்..
“யெஸ் , ரவி வர்மா ஹியர் .” கம்பீரமாய் ஒலித்தது..
“எப்போ?” குரலிலே இப்போது பதற்றம்.
“நவ் ஹவ் இஸ் ஹி ?”
“ஓ கே . நான் வரேன்.”
“நோ நோ . . பாட்டிக்கு இப்போ சொல்ல வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.”
ஒரு முறை ஆழ்ந்த மூச்சை இழுத்து தன்னை நிலைப் படுத்தி கொண்டான்.
தான் இப்பொழுது செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான். விரைவாக அமெரிக்காவில் தன் பிஸ்னஸ் சம்மந்தமான முடிவுகள் பொறுப்புகள் அனைத்தையும் மாமன்மார்களிடம் எடுத்துரைத்தான். மற்ற இதர வேலைகளையும் துரித வேகத்தில் முடித்தான்.
பாட்டி விஷயம் என்னவென்று கேட்ட பொழுதும் “இந்தியா போய் சொல்றேன்” என்று இறுகிய முகத்துடனே பதிலளித்தான்.
வந்தாயிற்று.. அவசர அவசரமாக… கிடைத்த பிளைட்டில் ஏறி இந்திய மண்ணில்  காலடி எடுத்து வைத்தாயிற்று..
அந்த நவீன ரக ஆடி கார் சறுக்கி கொண்டு இவர்கள் அருகே வந்து நின்றது. பாட்டிக்காக கார் கதவை திறந்து விட்டான். ஆயிரம் கேள்விகள் இருந்தும் அவனிடம் ஒன்றும் பேசாமல் அமர்ந்து கொண்டார். கார் நேரே பிரபல மருத்துவமனையின் முன் நின்றது. பாட்டியின் புருவங்கள்… அதீதத்திற்கு முடிச்சிட்டன.
அவன் கைகள் ஸ்டியரிங் வீலை அழுந்த பற்றி கொண்டது…
“ஹ்ம்ம்.. இப்போவது சொல்றீயா..?!”
முதிர்ந்த குரல் கர்ஜித்தது.
“பாட்டி டி . .?”  தயங்கினான் அவன்.
“ம்ம்ம்ம்ம்ம்….” கை நீட்டி தடுத்தவர். . .
“விஷயத்தை முதல சொல்லு….”
அப்பொழுதும் அவன் பேச லேசாக தடுமாறினான் .
“சொல்லு ராஜ சேகருக்கு என்ன ஆச்சு…?”
அவன் முகம் ஒரு நொடி வியந்து போனது. இவருக்கு எப்படி….? மேலே யோசித்தவனை அவர் குரல் தடை செய்தது.
“எப்படி இந்த கிழவிக்கு தெரியும்னு பார்க்கிறியா . .    நான் உன் அப்பன்னுக்கே அம்மாடா…
நேரே விஷயத்துக்கு வா. உன் அப்பாவுக்கு என்ன ஆச்சு..? இவ்ளோ சீக்கிரமா பிஸ்னஸ் எல்லாம் கை மாத்தி விடற அளவுக்கு விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்ன்னு எனக்கு புரியாமாய் இருக்கும்..?ஹ்ம்ம்… சொல்லு…?”  தீர்க்கமாய் வந்தது குரல்.
ஹ்ம்ம்.. இனியும் விஷயத்தை மறைத்து பயனில்லை.. “வாங்க பாட்டி உள்ளே போயிட்டே பேசலாம் .”
டக் டக் . . . காலடி சத்தத்துடன் சேர்த்து அவனது குரலும் பேச தொடங்கியது.
“அப்பாக்கு மேஜர் அட்டாக்காம். .  .”  சொல்லிய படி பாட்டியின் முகம் பார்த்தான். அவர் நின்றது நின்றபடி அசையாமல் அப்படியே நின்றார்.
விரைந்து சென்று அவர் தோள்களை ஆதரவாய் தாங்கியவன் . .
“பயப்பட ஏதும் இல்லை பாட்டி. நொவ் ஹி இஸ் ஆல் ரைட் பாட்டி…”
கண்களை மூடி தியானித்து.. பின் மெதுவாக விழிகளை திறந்தவர் கண்கள் வைரமாய் மின்னியது ..
“பாட்டி . . .  .”
என்றபடி அவரை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“ஷ் ஷ் … பாட்டி என்னது இது… தி கிரேட் அயர்ன் லேடி இப்படி மனசு தளர விடலாமா…?” தோள்களை ஆதரவாய் தாங்கியவன் அவர் கண் பார்த்து சொன்னான்.
“ஒன்னும் ஆகாது .. உங்க பையன் இப்போ ஷேப் தான் . நார்மல் வார்ட்ல தான் இருக்கிறாங்க . வாங்க நான் இருக்கேன்ல பாட்டி . ..”  என்று தெம்பூட்டியவன் அவரது தளர்ந்த விரல்களை பற்றியபடி அறை நோக்கி சென்றான்.
சாய்வாக படுத்தப்படி இருந்த மகனை பார்த்ததும் விம்மி அழுதாள் அந்த வயதான தாய்.
“அம்மா எனக்கு ஒண்ணுமே இல்லை..
பிளீஸ் ம் ம் மா . .  . அழாதீங்க.. . “
“என்னடா இது.. இப்படி பார்க்கவா நான் உயிரோட இருக்கேன்.? அய்யோ ஆண்டவா..!”
“அ. . ம். . மா..” ராஜசேகர்
“பா. . ட். .டி . . .” ரவி வர்மா
அழுதழுது ஓய்ந்தவர்.. பின் கண்களை துடைத்தப்படி . .
“இப்போ டாக்டர் என்ன சொல்றார் ?” தேம்பிய குரலில் கேட்டார்.
“டூ டேஸ் ல டிஸ் சார்ஜ் பண்ணிருவாங்களாம் . நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க .”
“ஹ்ம்ம்.. சரி.. அப்போ கொஞ்ச நாளைக்கு நான் பிஸ்னஸ பார்த்துக்கிறேன்.” சொன்னது பாட்டி.
அப்பாவும் மகனும் பதறினர்.
“என்னம்மா நீங்க.. வேண்டாம் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்.”
“யெஸ் கிரன்னி. நீங்க அப்பாவை பார்த்துக்கோங்க . நான் பிஸ்னஸ் பார்த்துகிறேன்.”
“இல்லை.என்னால பார்த்துக்க முடியும். தேவை இல்லாம உனக்கு எதுக்கு கஷ்டம்.” வீம்பாய் பேசினார் பாட்டி .
“பாட்டி நீங்க என்ன சொல்லுறீங்க.?! அப்பாவுக்கு இப்படி இருக்கும் போ … வேண்டாம் பாட்டி .. நீங்களும் ரெஸ்ட் எடுங்க. அப்பாவுக்கு துணையா நீங்க இருங்க…?” புரிய வைக்க முனைந்தான் பேரன்.
“அதெல்லாம் முடியாது. நீ இப்போ சரின்னு சொல்லுவ . அப்புறம் அமெரிக்கான்னு பெட்டிய தூக்கிறுவ .!” அழுத்துக் கொண்டார் பாட்டி.
“நோ பாட்டி. நான் முடிவு பண்ணிட்டு தான் வந்துருக்கிறேன் . இனி அமெரிக்காலாம் இல்லை.. எப்பவும் அப்பா பக்கத்துல இருக்கிற மாதிரி ஐடியாலா தான் இந்தியாவே வந்துருக்கிறேன் . சோ நீங்க ரெண்டு பேறும் ஒர்ரி பண்ணிக்காதீங்க …”
“நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க. சாப்பிட உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்றபடி அறையை விட்டு சென்றான் பேரன்.
கிழட்டு அயர்ன் லேடியும், நிறைத்த சிங்க இளைநனும் ஒரு சேர கண்ணடித்து… பின் பக்கென வாய் விட்டு சிரித்தனர்.
——————————————————————————————————
வெண் பஞ்சு மேகங்கள் உடை மாற்ற காத்திருக்கும் அந்த தருணத்தை கண் கொட்டாமல் பார்த்து ரசித்த படி இருந்தாள் அந்த அழகு தேவதை ஆராதனா.
“ஆரு.  . .  ஆரு . . . ”
மூச்சிரைக்க அழைத்தப்படி . .  மாடியேறி வந்தாள் அந்த வெண்ணிற ஏஞ்சல்.
“ஹ்ம்ம்.. சொல்லு.. என்ன அவசரம்? இப்படி ஓடி வர..” அவளையே பார்த்தபடி கேட்டாள்.
“பொறு பொறு . .” இழுத்து இழுத்து மூச்சு விட்டு தன்னை ஆசுவாச படுத்தி கொண்ட வதனா .. பின் கோபத்துடன்
“அந்த தீ கோழி ஓவரா ராம்ட்ட பழகுற பார்த்துக்கோ?! எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அந்த சனியன்ட்ட சொன்னா அப்படி தான் என் ராம்ட்ட பழகுவேன்! உனக்கு என்னன்னு கேக்குறா . . . ? எவ்ளோ திமிரு இருக்கனும்  ! ! என் ராமாம் ராம்.!” மூஞ்சை சுழித்தப்படி குற்றப் பத்திரிக்கை நீட்டினாள் சகோதரி.
“அதுவும் சரி தான். அவ அவளோட ராம்ன்னு சொன்னா உனக்கு ஏன் பத்திக் கிட்டு வருது ..? அவள் அவன்கிட்ட பழகுன்னா உனக்கு என்ன வந்துச்சி..? அது ராமோட கவலை. நீ ஏன் இதுல தேவையே இல்லாம பீல் பண்ற . . . ?” குறும்பாய் மனதினுள் புன்னகைத்த படியே அழுத்தி கேட்டாள் பெண் .
இப்பொழுது அழுத்தி இவள் மண்டையில் புரிய வைக்கா விட்டாள் .. சாகுற வரைக்கும் ராம் பிரம்மசாரியா இருக்க வேண்டியது தான்…
தலை குனிந்த படி இருந்த தன் சகோதரியை பார்த்து ஆராதனா சில நொடி பேசாமல் இருந்தாள் .
“ஹ்ம்ம்… சொல்லு. இப்போ மட்டும் எதுக்கு அமைதியா நிக்குற.. கொஞ்ச முன்னாடி பட படவென பொரிந்த..?? இப்போ எங்க போச்சி அந்த வாய்..?!” 
“ஹ்ம்ம்… நானும் ரொம்ப வருஷமாவே பார்த்துகிட்டு தான் இருக்கேன். நீ அந்த ராமை அவொய்ட் பண்றதும்.. அப்புறம் ரூமை சாத்திக்கிட்டு பூஜிக்கிறதும்.. என்னதுடி இது…?”
சட்டென புருவம் உயர்த்தி. . இவளுக்கு எப்படி தெரியும்? என்ற ரீதியில் பார்த்தாள் வதனா.
“ஏய் முழிக்காத..! எனக்கு எல்லாம் தெரியும். அவனோட போட்டோவை தலையணைக்கு கீழ வச்சி நீ பண்ணற ரொமான்ஸ் இருக்கே . . .
அ . . ப். .ப். . ப் . . ப . . ப் . . ப் . . பா . . . !”
நாணத்தால் சிவந்து போனாள் அவள்.
“அய்.  . . வெள்ளச்சிக்கு வெட்கத்தை பாறேன்…?!” வாரினாள் இளையவள்.
“ஷ் ஷ் . .  . சும்மா இருடி. . .” தவித்தாள் மூத்தவள்.
“ம்ம்ம்… சொல்லு . ராமோட காதலை ஏத்துக்கிறதுல உனக்கு எது தடையா இருக்குது..?”
“அது. . அது . . .  ஹ்ம்ம்..ச் ச் … உனக்கு சொன்னா புரியுமான்னு தெரியல.. எனக்கு பயமா இருக்கு. என்னோட ஜாப்க்கும் அவனோட பீல்டுக்கும் ஒத்து வருமான்னு ரொம்ப குழப்பமா இருக்கு….”
“அச்ச.. இதுக்கு போயா . . ? நீ இவ்ளோ வருஷமா தயங்கிட்டே இருந்த… பேசாம ராம்ட்ட மனசு விட்டு பேசியிருக்க வேண்டாமா…?”
“என்ன என்னடி பண்ண சொல்லுற… அவன் என் பக்கத்துல வந்தாலே எனக்கு நடுக்கமா இருக்கு.. இதுல வேற அவன் சில சமயம் காதலை சொல்ல வரும் போ..ரொம்ப பயமா இருக்கும். நான் எதுவும் தெரியாதது மாதிரி கதையை மாற்றி விட்ருவேன்.”
“ஹா ஹா . . . என் அக்காவுக்கு பயமா.  . . ? அதுவும் ராமை பார்த்து.. அவன் எவ்ளோ சாப்ட் கரக்ட்டர் தெரியுமா…?!”
வாய் விட்டு சிரித்தவள் பின் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து..
“இது தானா. . .
இது தானா. . .
எதிர்பார்த்த திருநாளும் இது தானா. . .”
“ஹா ஹா . . .” மகிழ்வாய் அணைத்து கொண்டாள் ஆரு தன் சகோதரியை. .  காதலில் விழுந்த சகோதரியை. . . !
—————————————————————————————————–
“ஹாய் டாட். . . .  இப்போ எப்படி பீல் பண்றீங்க. . .?”
ஆபீஸிலிருந்து  நேராக வீட்டிற்கு வந்தவன் அப்பாவின் அருகே அமர்ந்தவாறு கேட்டான் ரவி வர்மா.
“குட் . . !” என்ற படி புன்னகைத்தார் ராஜ சேகர்.
“இந்தாடா… டீ குடி.” என்ற படி பாட்டியும் சேர்ந்து கொண்டார்.
“ஹ்ம்ம்.. அப்புறம் சொல்லுப்பா.. பிஸினெஸ்ல்லாம் எப்படி போகுது. உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே.?!”
“நோப்பா.. ஒரு பிரச்சனையும் இல்லை. என்னால நல்லாவே சமாளிக்க முடியுது. கண்டிப்பா இந்த மந்த் ப்ராபிட் ரெண்டு மடங்கு அதிகமா தான் இருக்கும்.!”
“நாம் புதுசா கட்ற ரெஸ்ட்டாரண்ட் ஒர்க் என்ன கண்டிஷன்ல இருக்குப்பா. . ?”
“அது கிட்ட தட்ட முடியிற சிட்டுவேஷன்ல தான் பாட்டி இருக்கு.”
“டேய் . .   சீக்கிரம் அந்த சடை முடியை தூக்கி போடுடா. அசிங்கமா இருக்குடா..”
“ஹா ஹா ஹா .. கண்டிப்பா.. நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா. . ?
சரி பாட்டி நான் டிரஸ் சேஞ்ச்  பண்ணிட்டு வந்திருதேன். .” மாடி ஏறினான் அவன்.
“இது என்னடா ஆச்சர்யம். .  இவன் இப்படி ஆளே மாறிட்டான் . எது சொன்னாலும் நோ சொல்லவே மாட்டுக்கிறான். டேய் சேகர் உனக்கு ஏதும் தெரியுமா சங்கதி . . ?”
“இல்லைம்மா . .  இன்னும் ஒன்னும் நடந்த மாதிரி இல்லை. இவன் தான் ஆபீஸே கதின்னு கிடக்கிறான்னே . . .? நாமலா பார்த்து ஏதும் மூவ் பண்ணா தான் உண்டு. .”
“ஹ்ம்ம். . . நம்ம ஆட்டத்தை ஆரம்பிச்சிடலாமா ?!”
“இது சரியா வருமாம்மா. .  . ?”
“டேய்.. நீ ஏன்டா பயப்படற.  . ? எல்லாம் ஆகும். நீ ஒழுங்கா நா சொல்றதை மட்டும செய். புரியுதா…?”
சிறியவர்கள் பார்க்காமலே கண்ணா மூச்சி ஆட. . .  பெரியவர்கள் அழகாய் காய் நகர்த்துகிறர்கள். .
—————————————————————————————————–
ஆடி பறந்து வந்த காற்று அவள் அணிந்திருந்த இலகுவான உடையை பதம் பார்த்து கொண்டிருந்தது..அவள் கண்கள் அந்த நீல நிற கடலை பார்த்து கொண்டிருந்தது . மனதிற்கு இதமளிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை தான் ஓடி வந்து கரையை அலைகள் முத்தமிட்டு செல்கிறது. இதற்கு சலிக்கவே சலிக்காதோ.. ?!
இவள் இங்கே ரசித்த படி இருக்க. . .  கொஞ்ச தூரம் தள்ளி அங்கே ராமும் வதனாவும் காதல் மொழி பேசி கொண்டிருந்தனர். ராமிற்கு கூட வெட்க பட தெரியும் என்பதை இப்பொழுது எல்லாம் ஆரு அடிக்கடி காண முடிந்தது.
அவர்கள் இருவரது காதல் சேட்டைகள் காண்கையில் இவளுக்கு சிரிப்பு தான் வரும். அத்தனை ரசனையாய் இருக்கும் இருவரது அந்நியோந்யமும்.
இத்தனை நாட்களாய் இவ்வளவு காதலை எங்கு தான் ஒளித்து வைத்திருந்தார்களோ . . ?! மனதிற்கு நிறைவாய் இருந்தது.
தனக்கும் இப்படி ஒரு வாழ்வு கிடைத்தால் எப்படி இருக்கும்.. மனம் தானக அந்த நிழல் உருவத்திடம் சென்றது.  . .
“எங்கேயடா போன..? எப்போடா என்னை பார்க்க வருவ . .?”
அப்போது . .  .  மன்மதனும் தேவேந்திரனும் மேலிருந்து இவளது புலம்பலை கேட்டபடி தங்கள் சம்பாஷணையை தொடங்கினர்.
“என்ன மதன் இது..? இன்னும் காதல் லீலையை தொடங்காமல் இப்படி பிஞ்சு நெஞ்சங்களை பிரித்து வைத்திருக்கிறாயே. .  .? இது உமக்கே தகுமோ..?”
“நான் என்னையா செய்யட்டும்?! வழிகளை உண்டாக்கினால் கூட, இவர்கள் எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்களே..?!”
“அட.. போமய்யா. . . உனக்கு உன் ஸ்தீரிகளுடன்  நேரம் செலவழிக்கவே சரியாய் இருக்கிறது என்று சொல்.”
வெகுண்டு விட்டார் மன்மதன். .
“அட நிறுத்தும்மய்யா . . . இப்பொழுது நீயே பார். என் மன்மத அம்பு எப்படி அதன் வேலையை சரியாக செய்கிறது என்று. .”
தன் முதுகிலிருந்த மலர் அம்பை எடுத்து குறி தவறாமல்… எறிந்தான் மங்கையவள் மீது. .
“ஹ்ம்ம்… இப்போது பாரும்ம்ம்மய்யா . . .”
“ஹா ஹா ஹா . .”  கல கலவென சிரித்தார்.
மணலில் கோலம் போட்டு இருந்த பெண்ணவள் ஆராதனா மீது எங்கிருந்தோ வந்த பலூன் ஒன்று மோதியது. சட்டென அதை பிடித்தவள், யாருடைய பலூனாக இருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்..
அப்போது தூரத்தில் குழந்தை ஒன்று அழுதபடி இருந்தது.
“ஓ . .  நீ இரும்மா.. நான் கொண்டு வந்து தரேன்..”
என்றபடி எழுந்து  குழந்தையை நோக்கி ஒரு அடி தான் எடுத்து வைத்தாள். அதற்குள் எங்கிருந்தோ பலத்த காற்று அந்த பலூனை கடத்தி கொண்டு சென்றது. .
அதிர்ந்தவள். .  சட்டென அதன் பின்னே மான் குட்டி போல ஓடினாள்.  .
அந்த பலூனோ சோம பானம் அருந்திய போதையில் இவளுக்கு ஆட்டம் காட்டியது. .
ஓரிடத்தில் நிற்பதும்.. பின் பறப்பதும்… பெண்ணவளுக்கு மூச்சு வாங்கியது.
இதோ.. பார்.. இப்போது உன்னை பிடிக்கிறேன். என்று கருவிய படி வெறி கொண்டு பாய்ந்தாள் .
பட்டென பலூன் மன்மதனிடம் அடைக்கலம் புக. . .  இவளோ கால்தடுமாறி தொப்பென அந்த கரையோர இடிந்த சுவர் மீது மோத . .  மோத இருந்தாள். .  .  பயந்து விட்டாள் பெண்.
அப்போது யாரோ பின்னிருந்து தன்னை அணைத்தார் போல இடையில் ஒரு கரம் கொண்டு தாங்கி பிடித்தார் போல இருந்தது.
உடலெல்லாம் ஒரு நொடிக்கு பல முறை சிலிர்த்து அடங்கியது. குனிந்து பார்த்தாள் அவன் கரம் . . வலுவானதாக திடகாத்திரமானதாக பட்டது.
எனக்கு என்ன ஆயிற்று..? ஏன் உடம்பெல்லாம் இப்படி தடுமாறுகிறது..
அந்த கரத்தின் அழுத்தம் கொஞ்சம் கூடியதோ. . ?
ஆனால் ஏன் ?
சட்டென அவளை அவனோடு அணைத்தது படி தூக்கி மணலில் நிலையாக கால் ஊன்ற வைத்தான்.
அவன் இதய துடிப்பு இப்போது அவள் செவியில் தெளிவாக கேட்டது. அத்தனை ஒட்டிய படியா நிற்கிறேன். இவன் யாராக இருக்கும். என்றெண்ணிய படியே தலை நிமிர்த்தி சாய்வாக பார்த்தாள் பெண்.
அவன் முகம்… . .  ஏதோ செய்தது பெண்ணுக்குள்.
இந்த கண்கள் ஏன் இத்தனை காதலாய் பார்க்கிறது. . ?
சுவாச காற்று ஏன். .  என் மீது இப்படி உரிமையாய்  வண்ணம் தீட்டுகிறது.?
அந்த இதழ்கள்…. ஏன் என் இதழோடு வாசம் செய்ய தவம் கிடந்தது போல ஏங்குகிறது…?
இதழுக்கும் இதழுக்கும் இடையே ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருக்குமா.  ..  இல்லை அத்தனை நெருக்கமா. ..  உரசுகிறதா.. இல்லை பதம் பார்க்க காத்திருக்கிறதா. . .
பின்னிருந்து யாரும் பார்த்தால் . .  பார்ப்பதற்கு டைட்டானிக் படத்தில் ஜாக்கும் ரோஸ்ஸும் பறப்பது போல குதுகளித்து விட்டு காதலுக்கு பரிசாய் இதழ் முத்தம் ஒன்று பரிமாறுவார்களே அது போல தான் இருந்திருக்கும். .
அத்தனை நெருக்கம்.
இவன் பார்வை ஏன் என்னை வசியம் செய்கிறது. பெண்ணவள் அவனிடமிருந்து விலகும் எண்ணமின்றி அவனையே வைத்த கண் வைத்த படி  பார்த்த படி நின்றிருந்தாள்.
அவனும் தான் ஏதோ மாய உலகில் சஞ்சரித்தது போல. .  அவளை விட்டு விலகும் எண்ணமின்றி அப்படியே அணைத்த படி இருந்தான்..
“காதல். . .
அது ஒரு மாய உலகம்.
அதில் நுழைந்தால் .  .
மீள்வது எளிதோ. . ?”

Advertisement