Advertisement

அத்தியாயம் 25 b
பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய் எங்கும் பரந்திருக்க, வழியில் ஓரிடம் வந்ததும் தன்னையும் அறியாமல் வெட்கம் கொண்டது. தன் வெளிச்சத்தை வாரி சுருட்டிக் கொண்டு வான்மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டது. நாணத்தால் தேகம் நடுங்க நிலாமகள் முகத்தை ஒரு நொடி மறைத்துக் கொண்டாள் மேகத்தினுள்ளே.
தன்னுள் எழுந்த படப்படப்பை ரசித்தப்படி மேகத்தின் ஜன்னல் வழி விழி விரித்து பார்த்தது அவனை. தன் ரோமியோவை கண்ட மகிழ்ச்சியில் ஒரு நொடி தடுமாறினாலும் பின் சுதாரித்து தன் மனம் கவர்ந்த ஆணழகனை கவரும் பொருட்டு தன்னழகை மிச்சமின்றி வெளிச்சம் போட்டு காட்டியது. இதுநாள் வரை அந்த நிலா இவ்வளவு அழகாக பிரகாசித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். எல்லாம் காதல் செய்யும் மாயம்.
அங்கே மூன்று பக்க கண்ணாடி சுவரும் மேலே ஆகாயம் திறந்தவெளியாகவும் ஒரு புறம் பால்கனி சுவரோடு இணைந்திருக்க, செடிகள் சூழ அமைந்திருந்த அந்த இடத்தில் ஓவல் வடிவ வுட்டன் ஸ்டைலில் ஆன பாத் டப்பின் விளிம்பில் மரத்திலான மெழுகுவர்த்தி தாங்கியில் அழகாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது மூன்று டீ லைட் கேண்டில்கள்.
வேறு எந்த செயற்கை வெளிச்சமும் இல்லாததால் அதன் வெளிச்சம் கண்ணிற்கு இதமாய் இருந்தது. அதன் அழகை பொறாமையுடன் கண்ட நிலாமகள் தன் ஒளிக்கதிர்களின் வீரியத்தை கொஞ்சம் கூட்டினாள் என்றால் இங்கே கேண்டில்லிருந்து வந்த ஒளி காற்றின் வேகத்தில் தன் இடுப்பை வளைத்து உடலை நெளித்து பெல்லி டான்ஸ் ஆடியது.
இவர்களது கூத்தை லவேண்டேர் ஆயிலுலோடு இனிப்பும் கலந்த அந்த இதமான சுடுநீரில் மிதந்து கொண்டிருந்த வெள்ளை ரோஜா பார்த்து பரிகாசித்து புன்னகைத்தது.
இப்படியே மாறி மாறி நிலாமகளும் கேன்டில்லும் அந்த ஆண்மகனுக்காக மல்லுக்கட்டி கொண்டிருக்க அவனோ தலையை பின்னோக்கி அந்த பாத் டப்பில் சாய்த்து கண்களை மூடியபடியே எதையோ எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் ரவி வர்ம குலோத்துங்கன்.
வெள்ளை ரோஜாக்களும் லவேண்டேர் மணமும் கேண்டில் வெளிச்சத்தில் கலந்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. வலிமையான காதலை எங்கிருந்தாலும் எப்படியாவது சேர்த்து வைக்கும் என்பது இக்குளியலின் கூடுதல் சிறப்பு.
இதமான குளிர் காற்று முகத்தில் வீச, கதகதப்பான சுடுநீரில் உடல் புதைந்திருக்க அந்த நிழவொளியில் அவன் அழகனாய் தெரிந்தான். அவன் மனதில் இருந்த மகிழ்ச்சி முகத்திலும் புன்னகையாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது. தன் செல்ல காதலி ஆராதனாவிடம் காதலை சொல்லிய மகிழ்ச்சியில் வீட்டில் உள்ளவர்களுடன் ஆட்டம் போட்டு விட்டு அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டி தனிமையை நாடி அவனறைக்கு வந்திருந்தான்.
நொடிகள் நகர நகர அந்த இன்ப அவஸ்தை கூடியதே தவிர குறையவில்லை. அவன் இருக்கும் நிலையில் இரவு என்றும் பாராமல் ஆராதனாவை தேடிச் சென்றிருப்பான். ஆனால் அவளுக்கு கொடுத்த வாக்கு நினைவில் வர அப்படியே விட்டு விட்டான். அவளாக வரும் வரை அவளை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று தான் உறுதி கொடுத்திருந்தானே. தன் காதலிக்காக முதன்முதலில் செய்த சத்தியம் வேறு. அதை எப்படி மீறுவான் அந்த கட்டிளங்காளை?
காதலுக்கும் காமத்திற்கு இடையே ஊசலாடிய அந்த உணர்வை அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தான் நீருக்குள் வந்து அமர்ந்தான். இருந்தும் அவளது நினைவுகளே அவனை ஆக்கிரமித்து ஆண்டு கொண்டிருந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் இருந்து தன்னவளுடனான உரையாடல் வரை மனம் அசைப் போட்டுக்கொண்டிருந்தது. அவளிடம் தன் காதலை சொல்லும் பொழுது வந்து போன அந்த மின்னல் பார்வையும், கடந்த கால நினைவுகளை நியாபக படுத்தும் பொழுது அவள் பேந்த பேந்த முட்டை கண் விரிய முழித்ததையும் இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பாய் வந்தது.
‘டேய் ரவி. உன்னோட லவ்வர் சரியான டுயுப்லைட்டா இருக்காடா. இவ்ளோ எடுத்து சொல்லியும் இன்னும் மந்திரிச்சி விட்ட கோழியாட்டம் முழிக்கிறா? ஹா ஹா ஹா..’ ரவியின் மனசாட்சி அவனை கேலி செய்தது.
“சொல்லுவடா சொல்லுவ. உனக்கென்ன. அவள் பாவம்டா. நான் சொன்னதை நம்ப கஷ்டமா இருந்திருக்கும் அதான் அப்படி நடந்துகிட்டா. அவளுக்கே உண்மை புரியும் போது கண்டிப்பா என்னை புரிஞ்சிப்பா. நீ வேணும்னா பாரு இந்நேரம் அவள் என்னை தான் நினைச்சிக்கிட்டு இருப்பா. ஏன் நாளைக்கே என்னை தேடி வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. ஏன்னா என்னோட காதல் மேல நம்பிக்கை இருக்குடா”.
கொஞ்சம் விசித்திரமானது தான் இந்த காதல். மனதில் நுழைந்தவுடன் அடுத்தவர் மனதையும் அறிந்து கொள்ளும் கலையை கற்றுக்கொடுத்து விடுகிறதே!
இங்கே தன் காதல் மீது கொண்டுள்ள அபார நம்பிக்கையில் காதலன் உரைக்க அங்கே நிஜமாலுமே அவள் காதலுக்காக துடித்துக் கொண்டிருக்கிறாள். இது தான் காதலின் விளையாட்டோ?!
அந்த ஏகாந்த நிலையில் அவன் அப்படியே ஒரு வித காதல் கிறக்கத்தில் மிதந்து கொண்டிருக்க, அந்த இரவு நேரத்தை பகலாக்கும் பொருட்டு கண்ணை கூசும் விதத்தில் எங்கிருந்தோ ஓர் பெருவெளிச்சம் வீசியது. தொப்பென ரவி அமர்ந்திருந்த பாத் டப்பில் எதுவோ ஒன்று விழுந்தது. அதன் அதிர்வில் நீர்த்திவலைகள் சிதற கேண்டில் லைட்டுகளின் உயிர் ஒருநொடி ஆட்டம் கண்டு மீண்டது.
திடீரென ஏற்பட்ட இத்தாக்குதலில் அதுவரை கண்களை மூடியிருந்த ரவி விழிகளால் சுற்றுப்புறத்தை துலாவினான். அங்கே அவன் கண்ட காட்சியில் அந்த சுடுநீரிலும் அவனது தேகம் ஓர் நொடி நடுங்கியது.
அங்கே எதிரே அவனது ஆருயிர் காதலி ஆராதனா அவனுக்கெதிரே பாதி உடை நனைந்தபடி அமர்ந்திருந்தாள். விழிவிரித்தப்படி  இதழ் மலர இவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அதெப்படி இவள் இங்கே வரமுடியும்?’ என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது அவன் கண்ணில் பட்டது அவள் நெஞ்சில் ஒட்டிக் கொண்டிருந்த நீல பச்சை வண்ண கற்கள். இவன் புரிந்து கொண்டதை அறிந்த அந்த கற்களும் ஒரு முறை ஒளிர்ந்து அணைந்தது.
ரவி யோசனையிலிருந்து வெளிவரும் போது பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள் ஆராதனா. இப்போது அவள் அவனது ஆராதனாவாக.
தன்னை பாய்ந்து வந்து இறுக கட்டிக் கொண்டிருக்கும் ஆராதனாவை கண்ட ரவி ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று விட்டான்.
“ர..ர..வி.. ரவி.. என்னோட ரவி! நீ சொன்னதை நான் நம்பாம போயிட்டேனே டா. ஆனா இப்போ நான் தெளிவா புரிஞ்சிகிட்டேன். நான் வந்துட்டேன் ரவி. உன்னை தேடி வந்துட்டேன். என்னோட தேஜா வூ யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.
ர..ர..ரவி! எனக்கு இப்போ எல்லா விஷயமும் தெரியும். நீ சொன்னது சரின்னு இப்போ ஒத்துக்கிறேன் ரவி. என்னை வெறுத்திட மாட்டியே? என்னை ஏத்துப்பல்..ல்..ல்..ல?!
ரவி.. ரவி.. நான் முதல நீ சொன்னதை நம்பல ரவி. ஆனால் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் எனக்கு என்னோட தேஜா வூ யாரு? என்னோட ரவி யாருன்னு சொல்லிடிச்சி. ஐ ம் சாரி ரவி. உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?”
அழகிய கண்கள் தண்ணீரில் மிதக்க உதடு துடிக்க பெண்ணவள் கேட்டதில் ஆண்மகன் நெஞ்சம் விம்மியது. ‘இவளை நான் வெறுப்பதா? அது கனவில் கூட நடக்காதே’. அவளை தழுவி ஆறுதல் சொல்ல முயன்ற கைகளை பிடித்தவள் தன் கண்களில் ஒற்றி அழுகையின் ஊடே இதழ் பதித்தாள். பின் தன் கழுத்திலிருந்து டாலரை அவனிடம் காண்பித்தவள்,
“இ..தோ.. இ..தோ.. இந்த கல்லு இருக்குல்ல.. அது உனக்கும் எனக்குமான உறவை வெளிச்சம் போட்டு காட்டிடிச்சி. நான் உன்னை பார்த்தேன் ரவி. சின்ன பையனா.. டீன் ஏஜ் ரவியா.. இப்படி நீ எனக்காக தேடி வந்து என் மேல கேர் பண்ணுனதை நான் பார்த்தேன் ரவி. இதுக்கும் மேலயும் என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு தோணிச்சி. எனக்குள்ள ஏன் உன்னைப்பார்க்கும் போதெல்லாம் படபடப்பா வித்தியாசம ஒரு உணர்வு வந்ததுன்னு இப்போ நான் புரிஞ்சிகிட்டேன். ரவி நான் சொல்லுறதை நம்புற தானே?” என்று அவனை பேச விடாமல் தொடர்ந்து பிதற்றிக் கொண்டிருப்பவளை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் அந்த பிசினஸ் மக்னேட்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த இரு வெளிச்ச மங்கைகளான நிலாவும் கேன்டிலும் அழுது கரைந்தனர். தங்கள் காதல் பொய்த்து போனதை விட, தங்களை விட வெகு அழகாய் ஜொலித்தபடி இருந்த இந்த மானுடப் பெண் விசும்புவதை அவர்களால் தாங்க முடியவில்லை போலும். தங்கள் சோகத்தை துடைத்துவிட்டு பெண்ணவள் ஆராதனாவை தேற்றும் பொருட்டு தங்கள் ஒளிக்கதிர்களை அள்ளி வீசினர் அவர்கள் மீது. அந்த பாத் டப்பில் ரோஜா இதழ்களின் நடுவில் காதலர்களின் சம்பாஷனைகளை கேட்டப்படி அவர்கள் காதலுக்கு குடை பிடிக்க ஆரம்பித்தனர்.
தன் கன்னங்களை வருடி தோள் தடவி தனக்கு வெகு அருகில் பிதற்றிய படி இருக்கும் தன் காதலியை அதற்கு மேலும் சகிக்க முடியாமல் அவளை இழுத்து தன் கைவளைவில் நிறுத்தி காற்றுக்கு அவசர அவசரமாய் விடுமுறை கொடுத்துவிட்டு அவள் இதழை சிறைசெய்தான் தங்களுக்கான அழகான காதல் சிறையில். அதில் அவர்கள் இருவரும் கைதிகளாக இருக்கவே பிரியப்பட்டனர்.

Advertisement