Advertisement

கண்முன்னே காதல் கதகளி நீயாட..
கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை…
கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ…?!
காலம் முழுதும் காத்திருக்கிறேன்..
உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட…
தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா… பார்கவி எங்கே..? காணோமே… எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான் மாட்டிக் கொள்வது நிஜம். விரைந்து செயல்பட்டார்.
கீர்த்தனாவிற்கு பார்கவிக்கும் ஏதோ பெரிய வாக்குவாதம். அதில் மனமொடிந்து அழுது கொண்டே பார்கவி வந்தார். டிரைவருக்கு உடம்பு சரி இல்லாததால், தானே போய் பார்கவியை அழைத்து வர சென்றார். அப்போது தான் பார்கவி அழுது கொண்டே வெளியே வந்ததை மித்ரன் பார்த்தார். கீர்த்தனா மிகவும் தரக்குறைவாக பேசினார். வரும் வழியில் கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்து வருகிறேன். என்னை தனியே விடு என்று பார்கவி மித்ரனிடம் கூறினார். அதனால் மித்ரன் காருக்கு அருகிலே நின்று விட்டார். ஆனால் வெகு நேரம் ஆகியும் பார்கவி திரும்பி வரவேயில்லை.
இது தான் மித்ரனின் கதை. கேட்டதும் ராஜசேகர் பதறிப் போனார். கண்டிப்பாக கீர்த்தனா மேல் தவறு இருக்காது என்று மனம் அடித்து சொன்னது. ஆனால் சூழ்நிலை, நேரம் அவருக்கு எதிராக வாதாடியது. மித்ரன் சொன்ன கட்டுக்கதையை கடைசியில் நம்புவதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் பார்கவி இப்போது உயிரோடு இல்லை. உடலும் கிடைக்கவில்லை.
விஷயம் அறிந்து பதறி ஓடி வந்த கீர்த்தனாவை ராஜசேகர் சந்திக்கவே விரும்பவில்லை. கோபத்தில் தன் உயிருக்கு உயிரான தோழியை ஏதும் சொல்லிவிடுவோமோ.. என அஞ்சினார். அது மித்ரனுக்கு வசதியாய் போய் விட்டது. கீர்த்தனாவை கண்டபடி பேசி அவர் தான் பார்கவி மரணத்திற்கு காரணம் என்று அங்கு இருந்தவர்கள் அனைவரையும் நம்பவைத்து மிகவும் கேவலமாக வெளியேற்றினார் கீர்த்தனாவை.
இருவரும் கோபத்தில் அதன் பிறகு சந்திக்கவில்லை.. இல்லை இல்லை சந்தர்ப்பத்தை தடுத்து நிறுத்தினார் மித்ரன்.
பல வருடங்கள் கழித்து இப்போது தான் எதிர்பாராத விதமாக கீர்த்தனாவும் ராஜசேகரும் சந்தித்துக் கொள்கின்றனர்.
“ஹ்ம்ம்.. சொல்லு ராஜு.. நீ ஏன் அன்றைக்கு என்னைப் பார்க்கவே இல்லை. அப்படின்னா மத்தவங்க சொன்னதை தான் நம்பி இருக்க. என்னை நம்பல. எத்தனை வருஷம் ஒண்ணா பழகியிருப்போம். இருந்தும் உனக்கு நம்பிக்கை இல்ல..ன்..னா… நான் எவ்ளோ பெரிய துரதிஷ்டசாலி…” குற்றம்சாட்டும் குரலில் தொடங்கி வருத்தத்தில் முடித்தார்.
“அதான் சொல்றேன்னே கீர்த்தி.. மன்னிச்சிடு. அன்றைக்கு பார்கவியோட இழப்பை தாங்க முடியாத சோகத்துல இருந்தேன். அந்த நிலைமையில் உன்னை பற்றி தவறாக விஷயம் என் காதுக்கு வருது. அப்போ என்ன செய்வேன் நான். என்னால தெளிவா யோசிக்கக்கூட முடியல. உன்னை ஏதாவது சொல்லிருவேன்னு பயந்து தான் உன்னை பார்க்கல. அதுக்கு அப்புறம் உன்னை சந்திக்க எவ்ளோ தரம் முயற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பே கிடைக்கல”.
இருவரும் கோபத்தை இறக்கி வைத்துவிட்டு மனம்விட்டு பேசினர். கீர்த்தனாவால் பார்கவி ஏன் தற்கொலை செய்தார் என்பதற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை. ஒரு வேளை தனக்கும் ராஜுவுக்குமான உறவை தவறாக எண்ணிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை முடிவிற்கு போயிருப்பாரா..??!
முஹும்… வாய்ப்பே இல்லை. பார்கவி தைரியசாலியான பெண் ஆயிற்றே.. இறந்த ஒருவரை பற்றி எப்படி தவறாக சொல்வது. அவர் தவறாகவே நடந்திருந்தாலும் அவர் உயிரோடு இல்லாத தருணம் குறை கூறுவது எவ்வளவு பெரிய இழுக்கு. ச் ச…! ராஜுட்ட சொல்ல வேண்டாம். பின் பார்கவியை தப்பா நினைப்பார். அவர் மனைவி பற்றி எப்பவுமே நல்ல விதமாகவே நினைக்கட்டும்.
இந்த மித்ரன் பையன் ஏன் எங்களை பற்றி தவறாக சொல்ல வேண்டும். ஒருவேளை போகும் போது பார்கவியை கட்டிபிடிச்சதை மிரட்டுனதா தப்பாக நினைச்சியிருப்பானோ…??! பார்கவி ஏன் அழுதா..?? கீர்த்தனாவால் ஏன் பார்கவி தற்கொலைக்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஒருவேளை பார்கவியுடனான உரையாடல் பற்றியும், அந்த பரமபத விளையாட்டை பற்றியும் கீர்த்தனா பகிர்ந்து கொண்டிருந்தால் பின்னால் வரும் பெரும் ஆபத்திலிருந்து தப்பியிருக்கலாமோ..?!
“சரி விடு கீர்த்தி. பார்கவி மனசுல என்ன இருந்ததுன்னு நமக்கு தெரியாது. அவளோட ரகசியம் கடைசி வரை அவளுக்கு மட்டும் தெரிஞ்சதாகவே இருக்கட்டும். அப்புறம் இப்போ நீங்க எங்கே இருக்கிறீங்க. அந்த பிரச்சினைக்கு பிறகு வீடு மாறி போயிட்டீங்கன்னு பக்கத்துல இருக்கிறவங்க சொன்னாங்க”
“ஆமா. தேவாக்கு வேலை இங்கே செட் ஆச்சு. சோ உடனே கிளம்ப வேண்டியதா போயிச்சு. அப்புறம் வேலை குழந்தைங்கன்னு வாழ்க்கை அப்படியே ஓடிற்று”.
குழந்தைகள் குடும்பம் வேலை என்று பேச்சு நாலாபுறமும் சென்றது. ஒரு நாள் கண்டிப்பாக வீட்டுக்கு குடும்பத்துடன் வருவதாக முடிவெடுத்து விட்டு இருவரும் தற்காலிகமாக பிரிந்து சென்றனர்.
###########
அங்கே ரவியின் அறையில் இருந்த ஆராதனாவிடம், தன் காதல் இவளுக்கு புரியவில்லையே என்ற ஆதங்கத்தில் வார்த்தையை தவறவிட்டிருந்தான். இருவரும் கீரியும் பாம்புமாய் சீறிக் கொண்டிருக்க அவன் ஆராதனா அணிந்திருந்த செயினில் உள்ள அந்த கற்கள் பற்றி சொல்ல வருகிறான்.
“இந்த கல்லு சொல்லும் என்னோடனா காதலை…. உனக்கு எல்லாமே விளையாட்டு தானே..??! உனக்கெங்க புரியபோகுது.?!”
“அப்போ நான் மனுஷி இல்லை. இந்த கல்லு மாதிரின்னு சொல்லறீங்க”.
“இல்லை. இந்த கல்லு கூட என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்கும். ஆனா நீ இருக்கீயே…” ஏதோ சொல்ல வந்தவன் வாயிற்குள்ளேயே முனகி கொண்டான்.
அந்த அளவுக்கு தாழ்ந்து போயிட்டேனா நான்…?? கோபம்… கோபம்… அவ்வளவு கோபம்… பெண்ணவளிடத்தில்.
“சரி தான்.. அப்புறம் எதுக்கு அப்படிப்பட்ட பொண்ணை நீங்க லவ் பண்ணறீங்க. பேசமா போக வேண்டியது தானே. உங்களுக்கும் பிடிக்கல. எனக்கும் பிடிக்கல. பின்ன எதுக்கு சேர்த்து வைக்கணும். பேசாம அவரவர் வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு போக வேண்டியது தானே…??! எதுக்கு முட்டாள் தனமா நடந்துக்கணும்?”
சட்டென அவன் தோள்களை இழுத்து பிடித்து அழுத்திய வேகத்தில் எலும்புகள் நொறுங்கிவிடும் அளவுக்கு வலித்தது. முகத்தில் அத்தனை கோபம்… அதையும் தாண்டி அந்த கண்களில் வருத்தம் இழையோடியதை பெண்ணவள் மனம் குறித்துக் கொண்டது.
“என்ன சொன்ன… இப்போ நீ என்ன சொன்ன… போக வேண்டியது தானே… அதாவது என் வேலையை பார்த்துட்டு போகணும்ன்னு சொல்லுற… ஹாங்…!”
அவளது தோள்களை பிடித்திருந்த கைகளை உதறிய வேகத்தில் தொப்பென அந்த நாற்காலியில் சாய்ந்தாள். அதிலேயே தெரிந்தது அவனது கோபம். எழுந்து அவன் அங்கும் இங்கும் நடந்தபடியே…
“இப்போ சொல்லுறீயே உன் வேலையை பார்த்துட்டு போன்னு.. அதை அப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே…?”
எப்போ..? நான் என்ன சொன்னேன்..??!
பேந்த பேந்த விழித்தாள்.
“நாலு வயசுல மிட்டாய் வாங்கி தாரேன் என் கூட வான்னு ஒருத்தன், யாருமில்லா இருட்டு பக்கம் கூட்டிட்டு போனானே.. அப்போ நீ கூட நல்லா சிரிச்சிகிட்டே அவன் பின்னாடி நாய் குட்டி கணக்கா போனீயே… அதற்கு அப்புறம் அவன் எந்த மிட்டாய் எப்படி உனக்கு தந்தான்.. எந்தெந்த இடத்துல கொடுத்தான்… நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி.. கத்தும் போது தொண்டை குழி நிறைய வச்சி அழுத்தி உ.. உ… உன்னை… “
“ஷிட்.. ஷிட்..ஷிட்..”
கோபத்தில் பற்களை நறநறவென கடித்து அதற்கு மேல் சொல்ல முடியாமல் வார்த்தைகள் தந்தியடிக்க… விரலால் தலையை அழுந்த கோதி கொண்டான். அவள் அன்று அனுபவிக்க இருந்த வேதனை இன்றும் அவனுக்குள் வலியை மிச்சம் வைத்திருந்தது.
அவளோ.. அவன் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் விழிகள் தெறிக்க கண் முன்னே காட்சிகள் மங்கலாக தெரிய இப்போது அனுபவித்தது போல தேகம் நடுங்க விதிர்விதிர்த்து போய் அமர்ந்திருக்க…. அவன் தொடர்ந்தான்
“அப்போ உன்னை காப்பாத்த வந்தானே ஒருத்தன்… உன்னோட தலை முடிக்கு கூட எந்த பாதிப்பும் வராம பத்திரமா உன்னோட வீட்ல கொண்டு போய் விட்டானே… அப்போ சொல்ல வேண்டியது தானே… போடா உன் வேலையை பார்த்துட்டுன்னு… அப்போ எதுக்காக என்னை விட்டு போகாதன்னு சொன்ன?!”
அதிர்ச்சியில் சிலையாய் அமர்ந்திருந்தாள் ஆராதனா.
“பத்து வயசு இருக்கும்போ.. கண்ணாமூச்சி விளையாடிக்கிட்டு இருந்த நேரம் தவறுதலா தெருவோரம் இருந்த சாக்கடை குழியில விழுந்து… மூச்சுக்காற்று இல்லாம உயிருக்கு துடிச்சியே அப்போ ஒரு கேணயன் வந்து.. அந்த நாற்றத்தையும் அழுக்கையும் பொருட்படுத்தாம உன்னோட சுவாசமா அவன் இருந்தானே.. அப்போ சொல்லியிருக்க வேண்டியது தானே.. போடா.. முட்டாபயலே உன் வேலையை பார்த்துட்டுன்னு…”
ஹாங்… இவன் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறான். அது ராம் தானே..?! அம்மா அப்பாவை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்து காப்பாற்றியது… ?
அதன் பின் தானே ராம் நட்பு கிடைத்தது, கீது அறிமுகம், எல்லாம் நினைவில் இப்போது தெளிவாக வந்தது.
மெதுவாக அவளது அருகில் வந்து, நாற்காலியின் இருபுறமும் தன் கைகளை தாங்கி, குனிந்து அவள் முகம் பார்த்தபடி, பேசினான்…
“நீ ஒன்பதாம் வகுப்பு பரீட்சை எழுதிட்டு வீட்டுக்கு வர வழியில… உன்னோட ஹார்மோன் மாற்றத்தால, பொண்ணுங்கிற நிலையை உணர்ந்தியே.. அப்போ என்ன பண்ணுறது.. எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம பயந்து போய் தவிச்சியே… அப்போ ஒருத்தன் வந்து அவனோட சட்டையை கழற்றி உன்னோட இடுப்புல விரிச்சி கட்டிவிட்டு, பயப்படாத.. இது சாதாரண விஷயம் தான். தைரியமா போ. உன் கூடவே நான் இருக்கும் போது உன்னை யாரும் தப்பா பார்க்க விட்ருவேனா..??! போ. உன் பின்னாடியே நான் வர்றேன்ன்னு சொன்னானே அப்போ அவனை பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே… போடா.. முட்டாள்ன்னு…!!!!”
முட்டை கண் போண்டா கண்ணாக பிளந்தது பிளந்தபடி.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
இடப்புருவம் உயர்த்தி அவன் கேட்ட தினுசில் இருக்கும் சூழ்நிலை மறந்து பெண்ணவள் சொக்கி தான் போனாள் அவன் அழகில்.
“டான்ஸ் ஆடி முடிச்சிட்டு அம்மணி ஒய்யாரமா நடந்து போய் ஒரு லூசுகிட்ட வம்படியா போய் மல்லுகட்டுனீயே.. அப்போ எந்த கிருஷ்ணர் வந்துமா உன்னை காப்பாற்றுனார்…?!!”
இளநகை மின்ன அவன் கேட்ட அழகில் பெண்ணவள் மயங்கி தான் மீண்டாள்.
“கனவுலகில் மிதந்துகிட்டு தத்தி மாதிரி நடு ரோட்டுல போயி மண்டையை முட்டிக்க பார்த்தியே… ஹ்ம்ம்…. அப்போ கூட ஒன்று தெளிவா உலறுனியே.. ஏழடுக்கு வானவில்லுக்கு எட்டடுக்கு உடுப்பு காரின்னு ஏதோ தத்து பித்துன்னு …” சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தான்.
“ஹ்ம்ம்… அப்போலாம் சொல்லியிருக்க வேண்டியது தானேமா… போட உன் வேலையை பார்த்துகிட்டுன்னு….!
அப்போ எல்லாம்..
போகாத.. என் கூடவே இரு.. அப்படின்னு வயசு பையன்னு கூட பார்க்காம கையை இழுத்து பிடுச்சு வச்சுக்கிட்டு செஞ்சி…யே அட்டூழியம்!! அப்போலாம் இந்த ரோஷம் எங்க போச்சாம்..??!” சிரித்தபடியே மூக்கோடு மூக்கு உரசி கேட்டான். ஏதோ அடம்பிடிக்கும் குழந்தையிடம் தாய் கொஞ்சி பேசி சமாதானம் செய்வது போல.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… ஒரே நாளில் இத்தனை அதிரடி வேண்டுமா…?! குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் பெண்ணவள் மூளை சோர்ந்து போய் சிந்திக்க மறந்தது.
கொஞ்ச நேரத்திற்கு முன்னால் இருந்த துள்ளல் எல்லாம் அடங்கி அமைதியாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
“சொல்லும்மா.. இப்போ ஏன் இவ்ளோ அமைதியா இருக்கிற…? வாயை திறந்தா முத்து ஏதும் உதிர்ந்திடுமா என்ன.. ??!” நையாண்டி செய்தான் அவள் இருக்கும் மனநிலை பற்றி அக்கரையின்றி.
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் இடிச்சு வச்ச புளி மாதிரி அப்படியே இருக்கவும், அவனே அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, அவளை பார்த்தபடி சொன்னான்.
“இதோ உன் எதிர்ல தான் இருக்கேன். இப்போ கேளு. உனக்கு என்ன கேட்கணுமோ அத்தனையும் கேளு”.
அவன் சொல்லி முடித்த செய்திகளின் வீரியம் இன்னும் அவளுள் மிச்சமிருக்க.. பெண்ணவள் மெதுவாக தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். இதழ்களை விரித்து அவள் பேசிய வார்த்தையில் அப்படியே ஆணி அடித்தார் போல ‘நச்’ என்று அதிர்ந்தது இப்போது அவனது முறையாயிற்று.
“ஓ. காட்..! இப்போ நீ என்ன சொன்ன..?! ஒன்ஸ் அகெய்ன்”. நம்பமுடியாமல் தெளிவு படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டான்.
“போ…போடா… ஃபிராடு…டு…!!!
கேட்டுச்சா இப்போ.. ம்ம்ம்.. ??!”
ஓ மை காட்.. மில்லியன் சொத்துக்களின் அதிபதி… எந்தவித பந்தாவும் இல்லாமல் இனிமையாக பழகும் சுபாவம் கொண்டவன்… யாருக்கும் கெடுதல் நினைக்க தெரியாதவன்… யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் தன் சாதுர்யமான பேச்சால் எதிராளியை தலையாட்ட வைக்கும் திறமை கொண்டவன்… இவ்வளவு பொறுமையாக பேசுவதே இவளிடத்தில் மட்டும் தான். அப்படி இருந்து இவள்… இ..இ…இவள்… எவ்வளவு சுலபமாக சொல்கிறாள்.
“யூ… யூ… இடியட்…ரீயலி யூ ஆர் பிக் இடியட்..”
டென்ஷன் மேல் டென்ஷன் ஏத்துகிறாள் இவள். இவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சா கடைசில எ..ன்..னை பார்த்து ஃபிராடுன்னு சொல்லுற…. இ…இ…வ…ளை… கோபத்தில் பற்கள் உடைப்படாமல் இருந்தது ஆச்சர்யம் தான். கண்களை மூடி தன்னை ஒருநிலைப்படுத்த சில நொடித்துளிகள் எடுத்துக் கொண்டான்.
“தென்…”
சொல்லியபடி ஒன்றும் நடவாதது போல் பழைய கம்பீரத்துடன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அலட்சியமாக பார்த்தான்.
“நெஸ்ட் வாட்.. ??”
அவனது பார்வையும் பேச்சும் உள்ளுக்குள் உதறினாலும், துணிந்து சொன்னாள்.
“என்னோட ஜிமிக்கி கம்மல் நல்லா இருக்குதா..?”
குடை ஜிமிக்கி அசைத்து ஆட்டிய படி புன்னகை வதனமாய் கேட்டாள்.
பைத்தியம் பிடித்து விட்டதா இவளுக்கு..?! மனதினுள் இவ்வெண்ணம் எழாமல் இல்லை. இருந்தும் அவள் தலை அசைத்து காட்டிய தினுசில் புன்னகை வராமலும் இல்லை. இவளிடத்தில் மட்டும் ஏன் என்னால் கோபத்தை இழுத்து வைத்து கொள்ள இவ்வளவு சிரமமாக உள்ளது. இதழோரமாய் பூத்த புன்னகையை அடக்கிய படி அவளையே கூர்ந்து பார்த்தான்.
“எனக்கு சின்ன வயசுலயே காது
கு..த்..தி… க..ம்…ம..ம…ல்.. தொங்கட்..ட…ம்.. எல்லாம் போட்டு அழகு பார்த்தாச்சு. இத்தனை வருஷம் கழிச்சி வந்து திரும்பவும் காது குத்த பார்த்தா எப்படி..?”
ம்ம்ம்…?? புருவம் உயர்த்தி கேட்ட அழகில் அவன் அவளையே வைத்த கண் அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எப்படி எப்படி… இவர் என்னோட சின்ன வயசுல இருந்து எனக்கு ஆபத்து வரும் போதெல்லாம் வந்து ஹெல்ப் பண்ணாரா… இதை நாங்க நம்பனும்… ஹ்ம்ம்…???
எனக்கு என்ன அந்த அளவு விவரம் இல்லாமையா இருக்கும்.. சின்ன வயசுல வந்த அந்த உருவம் வேணா மறந்திருக்கலாம். ஆனால் டீன் ஏஜ்ல வந்த அந்த பையனை நல்லா நியாபகம் இருக்கு. அவனோட சட்டை கூட என்கிட்ட பத்திரமா இருக்கு. இப்படி இருக்கிறப்போ எப்படி அவன் தான் நீங்கன்னு சொல்லுறீங்க. யார்கிட்டயோ டீடெய்ல் கேலக்ட் பண்ணிட்டு வந்து கப்ஸா விடுறீங்களா…??
யார்கிட்ட… ஹாங்…”
அவன் ஒன்றும் சொல்லவில்லை. சுவாரசியத்துடன்அவளையே பார்த்தது பார்த்தப்படி இருந்தான்.
“நீங்க படிச்சது வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் அப்படின்னு சொல்லறது எல்லாம் ரீ..ரீ..லா..?? அங்கே இருந்துகிட்டு நீங்க எனக்காக வந்தீங்களா..?? சின்ன பாப்பா கிட்ட சொன்னா கூட இந்த காலத்துல நம்ப மாட்டாங்க”.
சொல்லியபடி ‘உன் பருப்பு என்கிட்ட வேகாது’ என்பது போல் லுக் விட்டாள்.
“அப்படின்னா நீ இன்னும் அந்த பையனை மறக்கல.. அவனோட திங்ஸ் பத்திரமா வச்சி இருக்கிறதை பார்த்தா.. உனக்கு அவனை பிடிக்கும் போல…” எதையோ மனதில் கணக்குப் போட்டப்படி தூண்டில் போட்டான், இதையறியாத மீனும் அழகாய் சிக்கியது.
“ஆமா.. நான் இன்னும் அந்த பையனை மறக்கல.. என்னோட முதல் க்ரஷ் அப்டின்னு கூட சொல்லலாம். அதுக்கு இப்போ என்ன..? அவன் இப்போ திரும்பி வந்தா, யெஸ் ஐ லைக் யூ.. அப்படின்னு கூட சொல்லுவேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..??”
அவள் வெளிப்படையாக பேசியதில் வந்த புன்னகையை அடக்க பெரும்பாடுப்பட்டான். சரியான மக்குடி நீ.. உன் எதிர்லயே உக்காந்து இருக்கேன். நீ என்னடான்னா… இப்படி பேசுற… சரியான அரை லூசுடி…
“அது சரி…அப்போ மத்த பசங்ககிட்ட.. ஐ மீன் உன்னை மத்த டைம்ல காப்பற்ற வந்தவங்ககிட்ட என்ன சொல்லுவ…??”
“ஐ லவ் யூ ன்னு சொல்லுவேன்..!” பட்டென சொன்னாள்.
வியப்பில் புருவம் உயர்ந்தது மட்டும் தான் அவனிடம் தெரிந்த மாற்றம் . மத்தப்படி அவன் கல்லூளி மங்கனாய் இருந்தான்.
“யார் அந்த லக்கி பாய்…?! போய் சொல்லிட வேண்டியது தானே…”
“யாருக்கு தெரியும்…? அவன் முகத்தை எங்கே காட்டுனான்…?!! இருட்டுல தான் பார்த்தேன். சரியா தெரியல.. இந்த கற்கள் கூட அவன் தான் தந்தான். வெய்ட் பண்ணு திரும்பவும் வருவேன்னு சொன்னான்”.
ஹ்ம்ம்… பெருமூச்சு விட்டப்படி நாற்காலியில் சகஜமாக அமர்ந்து கொண்டாள். இதுவரை இருந்த கோபம் எல்லாம் காணாமல் போயிருந்தது. மனதில் உள்ளது மடை திறந்த வெள்ளமாய் வெளிப்படுத்தினாள்.
“பட் இன்னும் வர்ல.. அந்த தேஜாவூக்காக தான் நான் காத்துகிட்டு இருக்கிறேன். சோ இடையில் வந்து நீ குழப்பம் பண்ணாத. கண்டபடி உளறி நீயே உன்னை அசிங்க படுத்திக்காத. உனக்கு என்னை பிடிச்சிருக்கலாம். ஆனால் அல்ரெடி நான் தேஜாவூ கூட கமிட் ஆகிட்டேன்.
பொய் சொல்லி.. உன் காதலை கேவலப்படுத்தி… உனக்கு நீயே ஆப்பு வச்சிக்காத. ஒழுங்கா பெரிய மனுஷனா நடந்துக்க..
புரியுதா…??”
“நான் சொன்ன எதையும் நம்பல. பொய்யா கதை கட்டி விடுறேன்னு நினைக்கிற. சரி தான். திடு திப்புன்னு வந்து இப்படி ஒன்றை சொன்னால் யாருக்கு தான் நம்ப தோன்றும்… என்னோட தரப்பு விளக்கத்தை நான் கொடுத்துட்டேன். நம்புவதும் நம்பாததும் உன்னோட இஷ்டம். சொல்லி புரிய வைக்க முடியாதவங்களுக்கு பட்டா தான் தெரியும்ன்…னா.. அப்படியே விட்டுற வேண்டியது தான்.. இனி நீயா என்னை தேடி வர வரைக்கும் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
அப்படியா.. சரி தான். இவ்ளோ தூரம் மனசு விட்டு பேசுனத்துக்கு ரொ..ம்ப தாங்க்ஸ்மா. நவ் யூ கோ”. இவ்வளவு நேரம் தோழமையுடன் உரையாடி கொண்டிருந்தவன் திடிரென அந்நியன் மாதிரி மாற்றி பேசவும் பெண்ணவளுக்குள் லேசான சோகம் படராமல் இல்லை.
என்ன.. இவன் உடனே தலையாட்டிவிட்டான். முரண்டு பிடிப்பான் என்றல்லவா நினைத்தேன். குழப்பமாய் இருந்தாலும் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றாள். கதவை திறக்க முயன்ற சமயம்,
“ஒன் மினிட்…”
அவள் திரும்பி என்னவென்று பார்க்கவும்…
அவன் அவள் பின்னே வந்து நிற்கவும் சரியாய் இருந்தது. அவன் மீது தேகம் படாமல் இருக்க கதவில் ஒட்டிக் கொண்டாள். அவனோ இன்னும் நெருக்கமாய் அவளருகே வந்தான்.
“தேஜாவூவை உனக்கு எந்த அளவு பிடிக்கும்…???”
ஹ்ம்ம்… இதை கேட்கவா லூசு பயலே கூப்பிட்ட..
ஷ்… ஷப்பா.. நானும் என்னவோ ஏதோன்னு பதறிட்டேன். ஹ்ம்மம்ம்.. இ…வ..னை… இப்படியே விட கூடாதே… கண்டிப்பா ஏதாவது செய்யணுமே..
வெறுப்பேற்றும் எண்ணத்தில் எதையும் யோசிக்காமல் வாய் விட்டாள் அவள்.
“கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்குற அளவுக்கு.. போதுமா..??!”
சொல்லிமுடிக்கவில்லை.. அவன் முரட்டு இதழ் அவளது இதழை கவ்வியிருந்தது.
ஷாக்… ஹை வால்டேஜ் ஷாக்…
எம்மாடி…
இ.. இ..இவன்… என்ன செய்கிறான்…??!
யோசிக்க இடம் கொடுக்காமல் அவனுள் புதைய விரும்பியது வெட்கங்கெட்ட மனது. எதிர்ப்பு காட்ட கூட மறந்து போய் கற்சிலையாய் நின்றாள்.
காமத்தில் சேராதது…
காதலர்களுக்கு அவசியமானது…
முத்தமாம்…!

Advertisement