Advertisement

காலங்கள் மாறினாலும்
தேகங்கள் மறைந்தாலும்
நினைவுகளை அழிக்க முடியுமா..??!
பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.(செஸ் போர்ட் மாதிரி இருக்கும்) இதற்கு தாயக்கட்டையும், வழி நடத்தும் ‘கல்’லும் தேவை.
ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து(1,2,3,4,5,6,7,8), காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.
‘தாயம்’ என்றால் ‘உரிமை’ என்று பொருள்படும். உறவினர்களை ‘தாயத்தார்’ என்று அழைக்கும் பழக்கம் இருந்தததாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.
மூச்சு விடாமல் அந்த நோட்டு புத்தகத்தில் எழுதியிருந்தவற்றை வாசித்து முடித்தாள் கீர்த்தனா.
“இத்தனை விஷயங்களையும் எப்படி கீர்த்தி தெரிஞ்சி வச்சிருக்க..?!”
“நான் எங்கே…??! இது என் பாட்டியோடது. கிராமத்துக்கு போகும் போ விளையாடுவோம். அப்போ ஏதாவது டௌட் வந்தா கிளியர் பண்ண பாட்டி தான் இதை தந்தாங்கா. சோ இது இப்போ யூஸ் ஆகுது”.
“சரி வா… தாயக்கட்டை எங்கேன்னு பார்ப்போம்.
“இந்த மூடி இருக்கிற பாக்ஸ்குள்ள தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் இதை எப்படி ஓபன் பண்ணுறது..??” மெதுவாக தட்டி திறக்க முயற்சித்தார் ராஜ சேகர்.
“முஹும்… என்னால முடியல. நீ ட்ரை பண்ணி பாரு”.
தட்டி தடவி கீர்த்தனாவும் முயன்றார். ஆனால் அவராலும் முடியவில்லை. சட்டென ஒரு ஐடியா தோன்ற, தன் தலையில் இருந்த ஹேர் பின் கொண்டு அதை திறக்க முயன்றார்.
“திறந்துடு சிஸே….
ஹை.. ய்…. ஓபன் ஆகிட்டுடா..”
இருவரும் அதை திறந்து பார்க்க… அங்கே இரண்டு கற்கள் ஒளிர்ந்தது. அந்த அறையே இப்பொழுது ஏதோ அனுமாய்ஷ்யம் நிறைந்தது போல மனதை திடுக்கிட வைத்தது.
“ஹே இது என்ன.. இப்படி லைட் அடிக்குது… டைமண்ட்டா இருக்குமோ…?!!”
“ஹம்ச்.. சும்மா இரு கீர்த்தி. நான் பார்க்கிறேன்”.
கைகளில் எடுத்து அதை கூர்ந்து பார்த்தார் ராஜ சேகர். “ஏதோ வித்தியாசமான கல் மாதிரி இருக்கு. நிலா வெளிச்சம் பட்டதுனால இப்படி தக தக ன்னு மின்னுது. அவ்ளோ தான்”.
“பட் இதுல புள்ளி எதுவுமே இல்லையே.. எப்படி தாயம் உருட்டுவது…?” -கீர்த்தனா
“ஹ்ம்ம்.. பொறு நான் பஸ்ட் செக் பண்ணி பார்க்கிறேன். சொன்னவர் அந்த கற்களை கண்களின் அருகில் வைத்து பார்த்து விட்டு…
ஹ்ம்மம்ம்.. ஒன்றும் இருந்த மாதிரி தெரியல.. வேஸ்ட்…” கையில் இருந்த கற்களை அந்த மரபலகை மீது தூக்கி போட்டார்.
அப்போது நடந்தது அதிசயம். அந்த பரமபதத்தில் இருந்த ஏணிகளும் பாம்புகளும் மறைந்து, நேர்கோட்டு வரிசையில் நம்பர்கள் மாறி மாறி சுழல ஆரம்பித்தது. இருவரும் ஷாக் அடித்தது போல உறுத்து விழித்தனர். கீர்த்தனா அதன் அருகில் சென்று தொட்டு பார்த்தார். மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அந்த எண்கள் அப்படியே அசையாமல் நின்றன. விழிகள் ஆச்சரியத்தில் மின்ன கீர்த்தனா ஒவ்வொரு இலக்கங்களையும் அசைத்து எண்களை தேர்ந்தெடுத்தார்.
“ஹே என்ன பண்ணுற…??”
“சும்மா… நானே ஒரு டைம் செட் பண்ணுறேன். எவ்ளோ நேரத்துக்குள்ள இந்த கேம் முடியனும்னு. சும்மா ஒரு கெஸ் தான்”.
அவர் இலக்கங்களை தேர்வு செய்து முடித்த பின் அந்த கற்களை கையில் எடுத்துக்கொண்டார். உடனே அது மறைந்து அதிலிருந்து வந்த ஒளி இவர்களை உள்ளே இழுத்து சென்றது.
“ஆ ஆ ஆ ஆ….” அலரலுடன் இருவரும் ஏதோ மாய உலகத்தில் பயணிப்பது போன்ற பிரம்மை.
இப்போது இருவரும் அவர்கள் வீட்டு பால்கனியில் நின்று ஏதோ பேசியபடி நின்ற இரு உருவங்களுக்கு பின்னால் இருந்தார்கள். அவர்கள் பின்னே இவர்கள், ஆம் இவர்கள் மாய உருவம் நின்று கொண்டிருந்தது. அங்கே பால்கனியில் நின்றிருந்தவர்கள் ஒரு கீர்த்தனா ராஜசேகர் என்றால் பின்னே நின்றுருந்தவர்கள் மாய தோற்றம் உடைய கீர்த்தனாவும் ராஜசேகரும்.
மாயா தோற்றம் உடையவர்களுக்கு அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி.. ஒரு வேளை நாம் இறந்து விட்டோமோ… ஆவியாகி வந்திருக்கிறோமோ..??!!! என்றெல்லாம் விபரீதமான கற்பனைகள் எழுந்தது.
“ஷ் ஷ் ஷ்… கீர்த்தி. அவர்கள் என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம். பொறு”.
அங்கே நிஜ உருவம் கொண்ட கீர்த்தனாவும் ராஜசேகரும்..
“டேய்.. என்னால நம்பவே முடியவில்லை. எப்படிடா இது… ரொம்ப திரில்லிங்கா இருந்ததுடா…” கைகளை கன்னத்தை தாங்கியபடி பிரம்மித்து போயிருந்தார்.
“ஹ்ம்ம்… என்னாலும் தான். நம்மளால் ட்ராவல் பண்ண முடியுது. எதிர்காலத்துல போய் என்ன நடக்கும்ன்னு தெரிஞ்சிக்க முடியுது. ஆனால் இது எல்லா முறையும் நல்லது இல்லை. ஆபத்து கூட வர வாய்ப்பு இருக்கு”.
“என்னடா சொல்லுற..?”
“ம்ம்ம்… இங்க வா”. கீர்த்தானவை தன் அருகே அமர வைத்தவர். அந்த தாயம் விளையாடிய பலகையை காண்பித்து.. ஒவொவொன்றுக்கும் விளக்கம் செல்லலானார். அங்கே இருந்த ஒவ்வொரு குறிப்புக்கும், அவரால் அந்த வயதுக்கும் மீறிய அவரிடம் இருந்த புத்தி கூர்மையால், உள்ளே பொதிந்து கிடந்த அர்த்தங்களை, இப்போது அவர்கள் பயணித்த கால பயணத்தின் அனுபவத்தையும் சேர்த்து , சொன்னார்.
முதல் குறிப்பு.
சந்திர தேவதை
சூரிய கதிரை
திருடி கொள்ள..
வான்மகள் மடி திறக்க..
அங்கே புதிதாய் பிறந்தது
புது உலகம்..!
நேரத்தை தாயம் கொண்டாடிய படியே!
விரும்பினால் என்னை தொடு..!
“சூரியன் இல்லாம நிலா இருக்கும் போது… அதாவது ராத்திரி நேரத்துல, வானத்துல இருந்து மழை பெய்யும் நேரம், இந்த கால பயணம் நடக்கும். அதாவது நேரத்தை திருடும் உரிமை. பிடிச்சா இந்த கேம் விளையாடுங்க. அப்படின்னு சொல்லுது”.
“ஹ்ம்மம்ம்… சரி சரி.. கால பயணம் பற்றி சரியா புரியலடா”.
“பொறு சொல்லுறேன். இந்த கற்கள் தாயம் விளையாடுற பலகை மீது பட்டவுடன் எண்கள் மாறி மாறி ஓடுதுலா.. அது தான் காலத்தின் நேரம். இந்த தேதி இந்த நேரம் அப்படின்னு ஒரு நேரத்தை செட் பண்ணி அதை தொட்டவுடன் நம்மலால் அந்த நேரத்துக்குள்ள பயணம் செய்து அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ள போக முடியும். நம்ம உருவம் அங்கே நிழல் போல போகும். நாம் விரும்புன்னா அங்கே நிஜமான தோற்றத்துக்குள்ள போகலாம். இல்லைன்னா அப்படியே மாய தோற்றம் நிழல் மாதிரி திரும்பி நாம் முதல எந்த காலத்துல இருந்தோமோ அங்கேயே திரும்பி வந்துரும்.
இதை கால பயணம் அதாவது டைம் ட்ராவல் அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது நேரத்தையும் காலத்தையும்… நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர முடியும். அது எதிர் காலமா இருக்கலாம், நிகழ் காலாமா இருக்கலாம், கடந்த காலமா கூட இருக்கலாம்”.
மீண்டும் ஏதோ சந்தேகம் கேட்க வந்த கீர்த்தனாவை கை உயர்த்தி தடுத்தவர், “பொறு மற்ற எல்லா குறிப்புக்கும் அர்த்தம் பார்த்துட்டு கேள்வி கேளு”.
குறிப்பு 2.
நான் நீயாகலாம்..
நீ நானாகலாம்…
நாம் காணாம லாகளாம்…
என்னை தாயம் விருந்தாக்கினால்…
உன் விருப்பப்படி என்னை உனதாக்கிக்கொள்!
“அதாவது நாம் கால பயணம் செய்து போனதும் நமது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளலாம். நான் உன்னோட வாழ்க்கையை மாற்றலாம். இல்ல என்னோட காலத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம். இல்லன்னா காணாமல் கூட போகலாம். ஏதாவது அந்த நிழல் உருவத்துக்கு ஆபத்து வந்தா… இந்த தாயக்கற்கள் நாம பயன்படுத்தி நாம் காலத்தின் ஓட்டத்தில் பயணம் செய்யலாம். அதுவும் நம்ம விருப்பப்படி”.
அடுத்த குறிப்பு 3.
குற்றமில்லை குற்றமில்லை..
காலபகவானை வதம் செய்தால்..
குறுக்கு வழி துணிந்தால்…
கண்சிமிட்டும் நேரத்தில் 
காணாமல் போவாயடா…!!
“இதுல என்ன சொல்லியிருக்குதுன்னா.. நாம் இப்படி காலத்தின் நேரத்தை பயன்படுத்தி கொள்வதால் எந்த தப்பும் இல்லை. தவறான எண்ணத்தோடு இல்லை தவறான குறிக்கோளோடு இந்த பரமபத விளையாட்டை விளையாடினால் நம்மளோட வாழ்க்கை அழிஞ்சி போய்டும். ஒரு வேளை செத்து கூட போகலாம்”.
“அய்யய்யோ… டேய் என்னடா இது.. ரொம்ப பயமா இருக்குதுடா…”
“ஷ்… ஏன் பயப்படுற.. நான் தான் இருக்கிறேன்லா… ஒன்றும் ஆகாது. பொறு அடுத்த குறிப்பையும் பரர்த்திரலாம்…”
குறிப்பு 4.
முக்காலமும் தோகை விரித்தாட
ரசித்து பார்க்கையில்
தற்காத்து கொள்ள..
உற்ற தோழனாய் 
உடன் வருவேன் நான்…!
“முக்காலம் அதாவது மூன்று காலங்கள், கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம். இந்த மூன்று காலத்திற்குள்ளும் நாம் போகலாம். நமக்கு ஏதாவது பிரச்சனை இல்லை ஆபத்து வந்தா ஒரு பிரெண்ட் மாதிரி கூட வருமாம். அதாவது நமக்கு உதவி செய்யுமாம். அதாவது இந்த தாய கற்கள் தான் நமக்கு உதவி செய்யும். அப்படின்னு சொல்லுது”.
“அது சரி இந்த கற்கள் நமக்கு உதவி செய்யும். அப்படின்னா இந்த பக்கத்துல இருக்கிற மண்துகள் எதுக்கு.?”
“அது தான் எனக்கு சரியா கெஸ் பண்ண முடியல..”
“ஆமா உனக்கு எப்படி…எங்கே இருந்து… இவ்ளோ அறிவு வந்து…??! இந்த புதிர்க்கு எல்லாம் எப்படிடா அன்செர் கண்டுபிடிக்க முடிஞ்சு…?”
“அதுவா… எனக்கு பழங்கால இலக்கியங்கள் மீது ஆர்வம் உண்டு. அதுல வரும் பாடல்களுக்கு விளக்கம் கத்துகிட்டதுனால என்னால இந்த குறிப்புக்கும் விளக்கம் கண்டு பிடிக்க முடிஞ்சி”.
“அதுவும் இல்லாம நான் கொஞ்ச நாளைக்கு முன்ன தான் ‘ஜும்மாஞ்சி’ அப்படின்னு ஒரு ஆங்கில படம் பார்த்தேன். அதுலயும் இப்படி தான் தாயக்கட்டை கேம் வரும். அவர்கள் விளையாட விளையாட ஒவ்வொரு விபரீதம் நடக்கும்”.
“ஹே.. அப்படியா… அப்போ ரொம்ப பயங்கரமா இருக்குமே”.
“ஆமா.. சோ நாம இந்த கேம் இனி விளையாடமா இருக்கிறது தான் நமக்கு நல்லது”.
“டேய் என்னடா சொல்லுற….??”
“ம்ம்ம். நாம இப்படி டைம் ட்ராவல் பண்ணுனா, அது நம்மளோட வாழ்க்கையை பாதிக்கும்.ஒரு வேளை எதிர் காலத்துல நமக்கு பிடிக்காதது நடந்தா… நாம் அதை மாற்றி, நமக்கு ஏற்றமாதிரி மாத்திக்க விரும்புவோம். சோ நம்ம வாழ்க்கையில நடக்க இருந்த ஒரு நிகழ்வை மாற்றி அமைக்கிறோம். அதனால கண்டிப்பா ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும். அதனால எதையும் நாம் தெரிஞ்சிக்க வேண்டாம். மாற்றி அமைக்கவும் வேண்டாம். வாழ்க்கை அதுபாட்டிற்கு போகட்டும். நடப்பது நடக்கட்டும்”.
“ஹ்ம்ம்.. நீ சொன்னா சரி தான்”.
“இது தான் என் கீர்த்தனா. குட் கேள்”. இருவரும் ‘ஹை-பை’கொடுத்து அன்பை பரிமாறி கொண்டனர்.
“டே…ய்…. டே…ய்…”
“என்ன இழுக்குற…??”
“ஒரு சந்தேகம்…”
“ஹ்ம்ம்.. கேளு…”
“அது எப்படிடா மூன் லைட் (நிலா வெளிச்சம்)அண்ட் மழை பெய்யுற நேரம் மட்டும் தான் தாயக்கட்டை கேம் விளையாட முடியும்ன்னு கண்டுபிடிச்ச…”
“அதுவா… முதல இது நம்ம கைக்கு கிடைக்கும் போ நிலா வெளிச்சத்துல தான் எழுத்துக்கள் எல்லாம் தெளிவா தெரிஞ்சி. இருட்டுல இல்லை சாதாரண ஒளியில் பார்த்தா ஏதோ ட்ராயிங் மாதிரி தான் இருந்து. அதுல வேற… மழை துளி பட்ட அப்புறம் தான் இதுக்கு உயிர் வந்துருக்கு. இப்போ கொஞ்ச முன்னாடி ரூம்க்குள்ள வச்சி நான் பார்க்கும் போது கூட ஒரு எழுத்து கூட தெரியல.. ஏதோ சுவத்துல மாட்டுற பெயின்டிங்ஸ் மாதிரி தான் இருந்துச்சி. ஃபேன் காத்துல மழை துளி எல்லாம் காய்ந்த பிறகு தாயக்கற்கள் போட்டாலும் அதுக்கு உயிர் வரல. ஒரு ஆக்சனும் இல்லாம இருந்து. சோ மூன் லைட் அண்ட் ரையின் வாட்டர் தான் இதோட சார்ஜர் “.
“வாவ்… சூப்பர்.. ஏதோ மேஜிக் ஸ்டோரி கேட்டது போல இருக்குதுடா”.
“அதுலாம் இருக்கட்டும். இனி நீ இந்த கேம் பக்கமே வர கூடாது. இது என் கூடவே இருக்கட்டும். நானே நாளைக்கு இதை தூர போட்டுர்றேன். எங்கே இருந்து இதை எடுத்தோமோ அதை மாதிரி அந்த கடல்லேயே தூக்கி தூர போட்டுர்றேன். சரியா. நீ எதையும் நினைச்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. போ போய் தூங்கு”. சொன்னவன் அப்படியே அந்த தாயக்கட்டை பலகையை தன்னோடு தூக்கி கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்.
இதோடு அந்த நிழல் உருவங்களும் மறைந்து பழைய அதாவது கடந்த காலத்திற்கே திரும்பி வந்தனர். கையில் அந்த கற்களோடு.
இப்போது அவர்களுக்கு புரிந்தது. தங்கள் கையில் இருக்கும் அந்த தாயக்கற்கள் மகிமையும் தாயக்கட்டையின் வீபரீதமும்.
“இந்தா பிடி. இதை நீயே வச்சிக்கோ. ஆளை விடுடா சாமி”.
சொல்லியபடி கீர்த்தனா நடந்து சென்று அந்த பால்கனி பக்கம் நின்று கொண்டார்.
இப்போது மீண்டும் தொடங்குகிறது அவர்களது நிகழ் காலம். இங்கே நிழல் இல்லை நிஜம் மட்டும்.
அங்கே மீண்டும் அந்த காட்சி விரிகிறது. ராஜசேகரும் கீர்த்தனாவும் டைம் ட்ராவல் பற்றி பேசிய பின் இருவரும் அன்றைய இரவு தூக்கத்திற்கு சென்று விட்டனர்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல அவரகள் அந்த பரமபத விளையாட்டை மறந்தே போயினர். அதை கடலில் தூக்கி போடுவதாக சொன்னதையும் தான். ராஜசேகரது வீட்டில் ஒரு மூலையில் கிடந்தது அந்த பரமபத பலகை.
ஒரு நாள் வேலைக்காரி கண்ணில் பட…
இவ்ளோ அழகான பெயின்டிங்ஸ் யார் தூர போடுவார்கள். இங்கே எங்கேயாவது மாட்டி வைக்கலாம் என்றேண்ணத்தில் அங்கே இருந்த கெஸ்ட் ரூமில் மாட்டி வைத்தார்.
நாட்கள் மாதங்களாக… மாதங்கள் வருடங்களாக இப்போது ராஜசேகர் திருமணம் வரை வந்துவிட்டது.
திருமணம் நல்லபடியாக முடிந்து வந்த நாள் முதல் ராஜசேகரது மனைவி பார்கவிக்கு ஏனோ கீர்த்தானவை பிடிக்கவில்லை. வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். ஆனால் உள்ளே கொழுந்து விட்டு எரியும். ராஜ சேகரை ‘ராஜு’ என்று அழைத்து கொண்டு இன்னும் சின்ன பிள்ளை போல அவர் கூடவே சுத்துவது என்னவோ பார்கவிக்கு பொறாமையாக இருக்கும். தான் செய்யவேண்டியதை இவள் எப்படி செய்யலாம். என்னை விட இவளுக்கு என்ன உரிமை என் கணவரிடத்தில்.
சில சமயம் பொறுக்கமாட்டாமல் கேட்டும் விடுவார். ஆனால் இருவரும் அதை பெரிதாக என்ன.. விஷயமாக கூட கருத மாட்டார்கள். அவரது மனதில் வன்மம் நாளாக நாளாக கூடி கொண்டே போனது. பார்கவிக்கு ரவி பிறக்க, கீர்த்தனாக்கு அப்போது தான் திருமணம் ஆகியிருந்தது. முன்பு போல இப்போது அடிக்கடி சந்திப்பதில்லை. அதுவே அவருக்கு போதுமாய் இருந்தது.
அப்போது தான் பார்கவியின் அண்ணன் தோழன் அவரது வீட்டில் தொழில் விஷயமாக தங்க வேண்டி வந்தது. அவருக்கு பார்கவியை பிடிக்கும். திருமணம் வேறு ஒருவருடன் ஆன பின்பு அந்த காதலை மனதிற்குள் புதைத்து கொண்டார். பார்கவிக்கும் அவரை பிடிக்கும் ஆனால் காதல் என்றில்லை.
அப்போது தான் அவர் கண்ணில் பட்டது அந்த பெயின்டிங். அது அந்த பரமபத பலகை. சாதாரணமாக பார்க்க அழகான ஓவியம் போல காட்சியளித்தது.
அதன் அழகில் மயங்கியவர் அதை பற்றி ஒரு நாள் பார்கவியிடம் எதேச்சையாக கேட்டார். பார்கவிக்கு ஒன்றும் தெரியவில்லை. பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனாலும் அதில் ஏதோ இருப்பது போல் தோன்றியது. அதன் பழமையான தோற்றம் வேறு அவரை வெகுவாக கவர்ந்திருந்தது.
ராஜசேகரிடம் இது பற்றி ஆஃபீஸ் விட்டு வந்ததும் கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. இதை எப்படி மறந்தேன்.
“பாரு.. இதை முதலில் தூக்கி தூர போடு. இதை இங்கிருக்கிறதை ஒரு நிமிஷம் கூட விரும்பலை”. சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
பார்கவிக்கு அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது. எதை தொடாதே… என்று சொல்கிறோமோ, அதை தொட்டு பார்த்தால் என்ன? என்று தோன்றும்..! எதை செய்யாதே… என்று சொல்கிறோமோ.. அதை ஒரு முறை செய்து பார்த்தால் என்ன? என்று தோன்றும்..! இது தான் மனித இயல்பு.
உயிர் தருவாளா………

Advertisement