Advertisement

“இதோ இங்க பாருங்க” என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள்.
“ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!” சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா.
“பார்க்க அப்படி தான் தெரியுது”. மலாதியும் ராஜேஸும் சேர்ந்தபடி சொன்னனர்.
“நம்ம டீக்கடை கணபதி காலையில வரும் போ அவரை இந்த பூதம் என்ன பண்ணிச்சோ.. ஆள் இன்னும் எழுந்த பாடில்லை… அவர் பொண்டாட்டி ஒரே புலம்பல்க்கா…” தகவல் சொன்னார் மாலதி.
“அது மட்டுமில்லை மாலதி அக்கா.. நம்ம குர்காவை இப்போ தான் ஆம்புலன்ஸ்ல ஏற்றிட்டு போறாங்க.. அவரையும் இந்த பூதம் தான் ஏதோ பண்ணியிருக்கணும்..” அவனும் தனக்கு தெரிந்த தகவலை சொன்னான்.
இவர்கள் பேச்சு தொடரவும் சரி நாம் வந்த வேலையை பார்ப்போம் என்றெண்ணியபடி.. கீது கடகடவென ஆருவின் அறைக்கு சென்று பார்த்தாள்.. அம்மணி படுக்கையில் காணவில்லை.
“இது என்னடா..?? இவள் எங்க போனா..?!”
முகத்தில் வெளிக்காற்று தீண்டவும் ஜன்னல் புறம் பார்த்தாள்.. அங்கே கும்பகர்ணி சேரில் அமர்ந்த வாக்கில் தலையை ஜன்னல் புறம் வைத்து தூங்கி கொண்டிருந்தாள்.
“இவள் எதற்கு ஜன்னலருகே சென்று உக்காந்துகிட்டே தூங்குறா..?!!” புருவம் தூக்கி யோசித்தாள் பெண்.
“ஹ்ம்ம்.. சரி தான்.. இவள் வேலையா தான் இருக்கும்” எண்ணியபடி ஆருவின் அருகில் வந்தாள். குனிந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். தெளிவாக அந்த வெள்ளை பூதம் காட்சி தந்தது..
“ஹ்ம்ம்… இதை பார்க்க தான் அம்மணி இப்படி கிடந்து தூங்குறாளா…??!”
“ஏய்.. ஏய்.. ஆரு.. எழுந்துருடி…! இது என்ன வேலை… !” ஆருவை எழுப்பியபடி கேட்டாள்.
“ச் ச் ச்… மம்மி சும்மா இரு… இல்லை நீ ஆகிடுவ டம்மி…!” சொல்லியபடி தலையை வசதியாக சாய்த்து கொண்டாள்.
“ஹே…பூசி போன கத்தரிக்காய்.. எழுந்திருடி நாயே…”
அலரலில் இப்போது ஆரு முழித்து கொண்டாள்.
“ஷ்..ஷ்..
கத்தாதடி எருமை.. கடிச்சிடுவேன் உன்னை…” பதிலுக்கு அவளும் கத்தினாள். தூக்கம் கெடுகிறதே என்ற கவலை..
“என்னடி பண்ணி வச்சிருக்க… வெளியே என்ன நடக்குதுன்னு தெரியுமா..?!”
கொட்டாவி ஒன்றை விட்டப்படி.. “எனக்கு எப்ப..டி..டி தெரியும்.??! நான் என்ன வெளியே போய் பார்த்துகிட்டா இருக்கேன்.?!”
“வர்ற கோபத்து…க்கு அடிச்சிடுவேன் உன்னை.. நீ என்னடி பண்ண.. முதல அதை சொல்லு”
“இது என்ன..?? நீ ஏன் பெட்ல படுக்கமா இங்க ஜன்னல் பக்கம் உக்காந்து தூங்குன்னா…”
சர சரவென.. ஆருவிற்கு நேற்றிரவு நடந்தது நியாபகத்திற்கு வந்தது. “அச்சோ.. மறந்துட்டே..ன்..டீ” பதறியப்படி ஜன்னல்புறம் பார்த்தாள். அவளையும் பார்த்து சிரித்தது அந்த ஆவி. கூடவே அந்த ஏரியா ஆட்களையும் தான்.
“ஹைய்யோ.. இப்போ என்னடி செய்ய…”
“இப்போ பீல் பண்ணி ஒன்னும் ஆக போறது இல்லை. முதல நீ என்ன பண்ணுனன்னு சொல்லு…”
“அ…து…வா…” என்று தயங்கிய படி விஷயத்தை சொன்னாள் பெண்..
நேற்றிரவு தூக்கம் வராமல் தவித்ததையும்.. பின் செய்த செயலையும்…
“சோ நான் மட்டும் தூக்கம் வராமல் கஷ்டப்படுற மாதிரி எல்லோரும் ப..ட..ட..ட்..டு..மே அப்டிங்கிற எண்ண..த்..து..ல…” கைகளை பிசைந்தபடி இழுத்தாள் பெண்.
“ஹ்ம்மம்ம்… மேலே சொல்லு..”
“என்..னோ..ட.. ஜிகினா பதித்த வெள்ளை துப்பட்டாவை பட்டத்துல கட்டிட்டு..”
“ம்ம்ம்… அப்புறம்…”
“அதோ..ட.. பட்டம் பார்க்க கோஸ்ட் மாதிரி தெரிய… முடியை விரிச்சபடி கோரமா ஒரு பெண்ணோட முகத்தை வரைஞ்சு… அந்த பட்டத்தோட ஒட்டினேன்.. கொஞ்சம் பார்க்க பேய் மாதிரி… இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சா.. அதான்… அப்படியே மின்மினி பூச்சி மாதிரி பளிச்சுன்னு தெரியட்டுமேன்னு…
கூடவே கொஞ்சம் டெக்கரேஷனுக்கு… ரேடியம் ஸ்டிக்கர்ஸ் ஒட்டுனேன்…”
“அடி பாவி.. நல்லா தான் யோசிச்சிருக்க போ…! அப்புறம்..?”
“அதை மேலே கொண்டு போய் பறக்க விட்டுட்டு நூலை அங்கே இருந்த பைப்பில கட்டிட்டேன்”
“அச்சு அசல் பேய் மாதிரியே இருந்துச்சிடி! அந்த ராத்திரி நேரத்துல பார்க்க சும்மா ஜம்ம்ன்னு இருந்து…!! சோ என்னோட பிளான் படி ராத்திரி கச்சேரிக்கு ஹீரோயின் ரெடி…” சிரித்தபடி சொன்னாள்.
“இருந்தாலும் இதை பார்த்து யாரோட தூக்கமாது போகண்ணுமே… அப்படின்னு நினைச்சி.. செக் பண்ணி பார்த்தேன்…”
“என்னடி சொல்லுற…??! எப்படி செக் பண்ணுன ?!?யாருடி அந்த சோதனை எலி.???”
“அ..து..வா…?? நம்ம ஏரியா குர்க்கா தான்…!” சிரித்தபடி சொன்னாள்.
“அப்புறம் என்ன.. அவர் என் வீட்டு பக்கம் வர்றப்போ.. பேய் மாதிரி சிரிச்சிகிட்டே… கத்துனேன்னா.. அவன் பயந்து போய் ஓடிட்டான்..” புன்னகைத்து கொண்டாள் ஆரு.
“ஹைய்யோ…”
கையை தலையில் வைத்தபடி நொந்து போனாள் கீது.
“ஏன் டி நீ பீல் பண்ணுற…??!”
“கொன்னுருவேன் உன்னை… நீ பண்ணி வச்சிருக்கிற காரியத்துக்கு… உன்னை…” கைகளால் அவள் கழுத்தை நெருக்குவது போல் செய்தாள்.
“ஏய்… என்னடி ஆச்சு…” ஆருவிற்கு இப்போது லேசான பயம் ஒற்றிக் கொண்டது.
“முதலில் மாடிக்கு போவோம் வா…” இருவரும் தட தட வென மாடிக்கு ஓடினர்.
“ஹேய் முதல அந்த பட்டத்தை அவுத்து விடுடி..”
ஆருவும் கட கடவென சென்று பட்டத்தை அவிழ்க்க பார்த்தாள். முடியவில்லை.
“என்னடி முழிக்கிற..?”
“கீது முடிச்சை எடுக்க முடியலடி…” பாவமாய் சொன்னாள் ஆரு.
“எந்த லட்சணத்துலடி கட்டுன…??!” சொல்லியபடி அருகே வந்து முயன்றாள் கீது. அவளாலும் முடியவில்லை.
“இப்போது என்ன செய்வது.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமே… இல்லாவிட்டால் ஆரு மாட்டிக்கொள்வாளே…” பதறிய மனதை அடக்கியபடி… பட்டத்தின் நூலை பற்களால் கடித்து அறுபட செய்தாள்.
நூல் துண்டிக்கப் பட்டதும் அங்கும் இங்கும் குட்டிகரணம் போட்டபடி… அந்த பூதம் வானில் பறந்து சென்றது…
“ஹேய்.. ஹேய்… என்னோட துப்பட்டாடி…” பதறினாள் ஆரு.
“வாயை மூடுடி கழுதை..” முதுகிலே ஒன்று போட்டாள் கீது.
“ஷ் ஷ்… ஏன்டி அடிக்கிற…??”
“போற சனியனை ஏன்டி கூப்பிடுற…?!”
“அது என்னோட பேவரைட் துப்பட்டாடி… !”
“ஆமா ஆமா.. இப்போ ரொம்ப முக்கியம்.. தலையே போக போகுது இப்போ உனக்கு மூடிக்க துண்டு வேணுமா…?!”
“சும்மா கம்முன்னு இரு..”
“நீ பண்ணி வச்ச காரியத்தால அங்கே குர்க்கா ஆஸ்ப்பிட்டல கிடக்கிறான்.. டீ கடைக்காரன் மயக்கத்துல கிடக்கான்… ஏரியா ஆட்கள் எல்லாம் பயந்து போய் கிடக்கிறாங்க… அது மட்டுமா…??
ஹ்ம்ம்…?!” இடுப்பில் கை வைத்து புருவம் உயர்த்திய படி சொன்னாள் கீது.
“அது மட்டு..மா..டி…?! உன் துப்பட்டாவை பேயின்னு நம்பி போலீஸுக்கு வேற தகவல் சொல்லியாச்சி… இப்போ வந்து உன்னை மாமியார் வீட்டுக்கு அனுப்ப போறாங்க.. அங்கே போய் உன் துப்பட்டா காணும்ன்னு கம்ப்பெலேய்ன் பண்ணு… சரியா…?!” நக்கலாய் முடித்தாள் தோழி.
“ஹேய்.. என்னடி சொல்லுற.. எல்லாம் நிஜமா..?!”
“பி..ன்..ன…?!! நான் என்ன பல்லாங்குழியா விளையாடுறேன்.. அடி போடி… இவளே…!!”
ஆரு அமைதி ஆகி விட்டாள். அவள் செய்த முட்டாள் தனம் , அவளை எங்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. ஆருவின் மௌனம் கீதுவிற்கு புரிந்தது. அதை கலைக்க விரும்பவில்லை அவள்.
வானமகள் இப்பொழுது நிலா குளியல் முடிந்ததன் அடையாளமாக மஞ்சள் பூசி… முகம் சிவக்க.. சூரியனை நெற்றியில் பொட்டு வைத்து… அன்றைய வேலைக்கு தயாராகி காட்சி தந்தாள்.
காலை நேர இளம் வெயில் ஆருவின் முகத்தில் பட்டு தங்கத்தில் ஜொலித்தது… அவளை தேவதையாட்டம் காண்பித்தது.. கூடவே அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த நீல பச்சை டாலரும் ஒளிர்ந்தது மயில் நீல நிறத்தில்…
ஆச்சர்யப்பட்டு போனாள் கீது. இது என்ன… வித்தியாசமாய்…
ஆரு தங்க நிறத்தில் ஜொலிக்க… அக்கற்கள் பசுமை கலந்த நீல நிறத்தில் ஒளிர… சாட்சாத் அந்த கடவுள் லட்சுமி தேவியாட்டம் தெரிந்தாள்.
கீதுவிற்குள் பரவசம் பொங்கியது. ஏதோ ஒருவித புது அனுபவத்தை அவளுள் பாய்ச்சியது.. அவ்வொளி மெதுவாக பட்டு தெறித்து… ஒளி பிரகாசமகி… பின் சட்டென மறைந்து விட்டது.. இது என்ன விதமான கற்கள்…?!
ஒரு நொடி மேனியே சிலிர்த்து விட்டதே.. அ..ப்..ப..ப்..பா… இப்பொழுது கூட ஸ்பரிசம் கூசுகிறதே…
“ஹேய் ஆரு.. ஆரு..” தோள் தொட்டு அழைத்தாள் கீது..
“ஹ்ம்ம்.. நான் இந்த அளவுக்கு சீரியஸ் ஆகும்னு நினைக்கலை கீது.. அந்த குர்க்காகக்கு ஏதும் ஆகிடுமா …?!
டீ கடைகாரன் முழிச்சிப்பானா..??!”
“அதெல்லாம் ஒன்றும் ஆகாது… நீ பயப்படாதா… நீ தான் பன்ணுனன்னு எந்தவித ஆதாரமும் இல்லை. அதோட.. இதை யாரு பெருசு படுத்த போறா… நீ தைரியமா இரு.. இனி இப்படி லூசுதனமா எதுவும் பண்ணி தொலைக்கதா… சரியா…”
“ஹ்ம்ம்…” பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிப் கொண்டாள்.
“அப்புறம் இந்த செயின்…” என்றபடி அவள் கழுத்தில் அணிந்திருந்தை தூக்கி காண்பித்தவள்… “இந்த டாலர் இப்போ மின்னுச்சிடி… அது பார்க்க ஏதோ தெய்வீகமா இருந்து… நானே ஒரு நொடி ஸ்தம்பித்து போய்ட்டேன் டி…”
“இது அன்றைக்கு இருட்டுல வந்த ஆ..ள்..” ஆரு முறைக்கவும்…
“சரி சரி தேவேந்திரன் தானே உனக்கு தந்ததா சொன்ன… ??ஹ்ம்ம்..??”
“ம்ம்ம்.ஆமா”.
“இது ஒரு வேளை வைரமா இருக்குமோ.. அழகா ஜொலி ஜொலிச்சுடி… பேசாம விற்றுவிடுவோமா…”
“பேசாம ஓடிரு.. மவளே… நானே இதை அவனோட நியபகர்த்தமா வச்சிருக்கேன். இதை போய் விற்க சொல்லுற..அதுவும் இல்லாம இது எனக்கு சொந்தமானது இல்ல. கண்டிப்பா அவன் வருவான்.. அப்போ இதை அவன்கிட்ட கொடுப்பேன். அதுவரை என்னோட பதுகாப்புல இது இருக்கும்.”
“இனி இது போல பேசாத..” சொல்லியபடி கீழிறங்கி செல்லும் ஆருவையே கீது பார்த்துக்கொண்டு இருந்தாள்..

Advertisement