Advertisement

அத்தியாயம் 11
இக்கட்டில் நானிருக்க
இதழணைக்க நீ
இலவசமாய் வருகிறாய்…
இது காதலின் மாயாஜாலமோ?!
காற்று கூட புக முடியாத படி… தன்னை இப்படி இறுக்கி அணைத்தபடி ஆடவன் ஒருவன் இருப்பதை சற்றும் உணராமல் அப்பேதை அழகாய் கண் மூடி காதல் தேவனை தியனித்திருந்தாள்.
அந்நொடி அந்த ஸ்பரிசம்… அவளுக்கு எதையோ உணர்த்தியது… நெஞ்சில் தலை சாய்த்து இருந்ததால் அவனது இதய கீதம் துல்லியமாய் பெண்ணவள் காதில் இசை பாடியது.
முகம் பற்றி கன்னம் தட்டி இதழ் பதித்து அவன் பரிதவித்ததில் அந்த அவனுக்கே உரிய பிரத்யோக வாசனை பழைய நினைவுகளை மீட்டெடுத்தது.
இந்த துடிப்பு..
இந்த பதற்றம்..
இந்த அணைப்பு..
இந்த மன்றாடல்..
இந்த மணம்…
எல்லாம் எதையோ… பெண்ணவளுக்குள் புகுத்தி நாடி நரம்பெங்கும் பரவி… அவளை பாடாய் படுத்தியது…
அவளது நினைவு மெதுவாக அவள் நெஞ்சில் குலசம் விசாரித்த படி கண் திறக்க சொன்னது. பேதையவள் அந்த ஆடவனின் சுகமான அணைப்பில் கட்டுண்டு கிடக்கவே விரும்பினாள்.
“ம்ஹும்….” தலையை இன்னும் நெஞ்சினுள் புதைத்துக் கொண்டாள்.
அதே பாதுகாப்பு உணர்வு பெண்ணிற்குள் எழாமல் இல்லை. மனம் அடித்து சொன்னது இது அவ..ன்..னே தான்.
விழி திறந்து பார்த்தால் என்..ன…
இல்லை வேண்டாம். பார்த்தவுடன் அவன் அன்று போல் மறைந்து விட்டால்.. என்ன செய்வது.. இனி எப்போது வருவானோ..?! இதே போலான இறுகிய அணைப்பு இனி கிடைக்குமோ கிடைக்காதோ… அப்படியே கொஞ்சம் நேரம் போகட்டுமே…
“ஆராதனா.. ஆராதனா…”
“ஹே ஆரு…”
“நான் பேசுறது கேட்குதா…”
குளிர்ச்சியாய் கண்களில் எதுவோ பட்டு சிதறவும் பெண்ணிற்குள் மின்சார தீண்டல். மெதுவாக இமைகளை பிரித்து காட்சியை உள்வாங்க முற்பட்டாள்.
அதற்குள் மீண்டும் ஒரு உழுக்கல்.
“ஆரு… ஆரு..
கண்ணை திறந்து பாரு.. ஹே… கம் ஆன்..”
இப்போது கொஞ்சம் இலகுவாக இருந்தது இமைகளை பிரிப்பதில். எதிரே கொஞ்சம் பதற்றத்தோடு இவளை தாங்கி பிடித்த படி… அமர்ந்த வாக்கில் தெரிந்தான் அவன்.
“ரா..ரா…ம்…”
“யெஸ்.. ராம் தான். கொஞ்ச நேரத்துல நல்லா பயங்காட்டிட்ட போ… எழுந்திடு.”
“இப்படியா பார்க்காமா ரோடு கிராஸ் பண்ணுவ.. அப்படி என்ன அவசரம்.?!”
“நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகலை. இல்லைன்னா என்ன நடந்திருக்கும்…
கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு..”
அவன் பாட்டிற்கு திட்டி கொண்டிருந்தான்.
“நான் எப்படி பயந்து போனேன் தெரியுமா..சரியான லூசுடி நீ..”
முகத்தில் படிந்த நீர்த்திவலைகளை துப்பட்டா கொண்டு துடைத்து விட்டான்.
“ஹ்ம்ம்… கையை பிடி… எழுந்திரு… ம்ம்ம்… சொல்றேன்ல…”
“வா… இங்க வந்து இப்படி உட்காரு… ஹ்ம்ம்.. வா வா…”
அவன் பேச்சிற்கு அப்படியே செயலாற்றினாள்.
அவள் அமர உதவி செய்தவன்,
“இதை குடி. கொஞ்சம் ரிலாக்ஸா பீல் பண்ணுவ.”
பேதையவள் எண்ணம் முழுதும் அந்த நிழல் தேவனே ஆக்கிரமித்திருந்தான். அவன் எங்கே போனான்? இவன் எப்போது இங்கே வந்தான்.? குழப்பத்தில் பெண் அருகிலிருந்தவர்களில் அவன் தென்படுகிறானா என தேடினாள்..
“ஹே.. நான் பாட்டிற்கு பேசிட்டு இருக்கேன். நீ யாரை தேடுற…?”
“ஷ் ஷ்… ராம் நீ எப்படி இங்க வந்த… என்னை யாரு காப்பாற்றுனா… முதல அதை சொல்லு..!”
“ஏன்?என்ன ஆச்சு?! ஹேய் ஆர் யு ஆல் ரைட்?” தோள்களை ஆதரவாய் தடவிய படி கேட்டான்.
“யெஸ். ஐ ம் ஓ.கே. சொல்லு என்னை யாரு காப்பாற்றுனா..ஹ்ம்ம்.. சொல்லு.”
“அது யாருன்னு சரியா கவனிக்கல. நான் உன்னோட எதிர் பக்கம் நின்னுட்டு இருந்தேன். அப்போ நீ நான் இருக்கிற பக்கம் வந்துகிட்டு இருந்தா. அப்போ பார்த்து அந்த லாரி தீடீர்ன்னு எங்கிருந்து தான் வந்துச்சோ.. அவ்வளவு வேகம்.. இதுல வேற அம்மையார் எதையும் கவனிக்காமா வேகமா வர்றீங்க. உன் பின்னாடி இருந்து தான் யாரோ உன்னை தடுத்து காப்பாற்றுனது. அதுக்குள்ள என்னவோ ஏதோன்னு கூட்டம் கூடிருற்று… பின்ன என்ன நான் ரோடு கிராஸ் பண்ணி வந்து பார்க்கும் போ நீ கீழ படுத்து இருந்த…”
“எனக்கு அப்படியே தூக்கிவாரி போட்ருற்றி..”
“என்னமா இப்போ கொஞ்சம் பரவாயில்லையா…?!”
பெண்ணவள் மனம் அரற்றியது.. இது அவன் தான்.எங்கே போனான்.எங்கிருந்து வந்தான். எதற்காக உடனே போய் விட்டான். மங்கை மனம் குழம்பியது.
“ஹ்ம்ம்.. எழுந்துடுமா.. வா.. நான் உன்னை ட்ராப் பண்ணுறேன். வீட்டுக்கு ரிட்டன் போறியா.. இல்லை ஆபீஸா..?”
“இல்லை ராம். எனக்கு ஒன்னுமில்லை. பதட்டத்துல வந்த மயக்கம் தான் அது. நவ் ஐ ம் ஆல் ரைட். என்னை ஆபீசிலயே விட்ரு.”
“ஹ்ம்ம்.. சரி வா. உன்னால முடியும்ல.. ?!”
அவனுக்கு இவள் நிலை கொஞ்சம் கவலையாக இருந்தது.
“யெஸ் ராம். ஐ கேன்.” ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி கொண்டு , அவனுடன் செல்ல தயாரானாள்.
“கால பயணங்களின் வெற்றி பாடங்கள்
வாழ்க்கையில் சிலவற்றை புதிதாக உருவாக்கலாம், இல்லாமல்  அழிக்கலாம், இல்லையெனில் பிறருக்கு உதவுமாறு அளிக்கலாம்,  ஆனால் எப்பொழுதும் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுசெல்ல துணியாதீர்கள்.
அப்படியே நீங்கள் பழைய நிலைக்கு அதை கொண்டு சென்றாலும், அது உங்களுக்கு முந்தைய சந்தோசத்தை எப்பொழுதும் திருப்பித்தருவதில்லை. உங்களது வாழ்வின்  நேரம் மட்டுமே வீணாகும். காலத்தின் வேகத்தில் பயணிக்க கற்று கொள்ளுங்கள்.
காலம் உங்களுக்கு பல பாடங்களை கற்றுத்தர ஓடிக்கொண்டிருக்கிறது.  காலத்தின் பாடங்களை கற்றுக்கொண்டால் அதுவே உங்களை சிறந்த வெற்றியாளராக மாற்றும். காலை வணக்கம்.”
புது நம்பரிலிருந்து தனக்கு வந்த அந்த குறுஞ்செய்தியை விழி அசைக்காமல் பார்த்து கொண்டிருந்தார் அந்த அயர்ன் லேடி.
மனம் அதன் உள்ளர்த்தத்தை தேடி ஆராய்ந்தது.
யாரோ நம் பின்னே நமக்கு தெரியாமலே நம் செயலை கவனிக்கிறார்கள்… அப்படின்னா… நான் இப்போ சரியான பாதையில் சரியான ஆளை தான் தேடி போறேன்…..
“ஹா ஹா ஹா…”உற்சாகமாய் சிரித்து கொண்டார்.
“நீ யாரா இருந்தாலும் கண்டிப்பா உன் மூச்சு என்னால தான் காத்தோடு கலக்கும்டா…”
வெறியோடு முகம் சிவக்க கத்தினார்.
“பாட்டி… பாட்டி…”
என்றபடி வந்து கொண்டிருந்த பேரனை பார்த்ததும் தன் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டார்.
கனிவு ததும்ப… “என்னடா.. சொல்லு என்ன விஷயம்..”
வந்தவன் ஒன்றும் பேசாமல்… பாட்டியின் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டான்.
“டேய் என்னடா இது.. இன்னும் சின்ன குழந்தையாட்டம் இருக்க…!”
பாட்டியின் முகம் கனிந்தது.
“ச்..சும்மா.. உங்க மடியில படுத்துக்கணும்ன்னு தோணிச்சி…” அவ்ளோ தான்.
என்றபடி பாட்டியின் கைகளை எடுத்து தன் தலை மீது வைத்து…
“ஹ்ம்ம்… தடவி விடுங்க பாட்டி…” அன்பு கோரிக்கை வைத்தான்.
பாட்டியும் ஏற்றுக்கொண்டார் விரும்பியே.
தாயாக மாறிப் போனார் அவர்.
பழைய நினைவுகள் அம்முதியவரை வாட்டின..
“டேய் கண்ணா…”
“ம்ம்ம்ம்… சொல்லுங்க பாட்டி…”
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா… உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா நான் நிம்மதியா இருப்பேன்டா…
குரலில் லேசான நடுக்கம் இருந்தது. அன்பினால் ஏற்பட்ட பாசகுரல் அது.
மூடியிருந்த இமைகளின் உள்ளே தேவதை முகம்கொண்ட பெண்ணொருத்தி  மனதை கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் இவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவன் இதழும் முகமும் தானாக மலர்ந்தது.
“என்னடா சொல்லுற…? சரின்னு சொல்லேன்டா…” பாட்டியின் குரல் கெஞ்சியது.
“ஹ்ம்ம்…. சொல்றேன் பாட்டி. கூடிய சீக்கிரமே சொல்றேன். உங்களுக்கு நல்ல பதிலா…! சரியா..??!” என்றபடி பாட்டியின் கன்னத்தை ஆசையாய் கிள்ளி கொஞ்சினான்…
பாட்டியின் முகம் மலர்ந்தது. கூடிய சீக்கிரமே தன் பேரனின் வாழ்வும் மலரும் என்பதில் அவருக்கு தெளிவு பிறந்தது.
“அப்புறம் சொல்லுடா… மார்னிங் ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் சைன் பண்ண அவசர அவசரமா போனீயே.. ரிசல்ட் என்னடா…”
“எல்லாம் நம்ம பக்கம் தான் . சோ கவலைப்பட எதுவும் இல்லை பாட்டி.”
“ஆமா… அந்த பொ..ண்..ணு…”ஏதோ சொல்ல ஆரம்பித்தவன் பேச்சு பாதியில் தடைபட்டது கதவு தட்டும் ஓசையில்.
“யெஸ் கம் இன்..” குரலில் ஆணிற்கு உரிய நிமிர்வு வந்திருந்தது இப்போது.
அங்கே கதவை திறந்த படி.. ஆண்மகன் ரவி வர்மாவின் இதயத்தை சாய்க்கவே கங்கணம் கட்டி கொண்டு ரதியாட்டம் நின்றிருந்தாள் பெண்ணவள் ஆராதனா.
கண்கள் அக்காரிகையை விட்டு நொடி பொழுதும் அகலவில்லை. மனம் மத்தளம் கொட்டியது. ஐஸ் மழை தூவியது. தேவதைகளின் ஆராவாரம் ரீங்காரமிட்டது. மங்கையவள் உச்சி முதல் பாதம் வரை அலசி ஆராய்ந்தது அக்கோமகனின் கண்கள்.
பெண்ணவள் இதய துடிப்பு ஏற தொடங்கியது அவனது பார்வையில்.
“வெல்கம் மிஸ் ஆராதனா… ப்ளீஸ் டேக் யுவர் சீட்” முதிர்ந்த குரல் இயல்பாய் வரவேற்றது.
அக்குரலில் சுதாரித்தவள் தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள். சிரித்த முகமாகவே அவளும் பதில் கொடுத்தாள். எதையும் அவள் காட்டி கொள்ளவில்லை.
“எப்படி இருக்க ஆராதனா. இப்போ ஓ.கே வா…?!”
நிமிர்ந்த விழிகளில் சிறு குழப்ப சாயல் இருந்தது.
“இவர் எதை கேட்கிறார்.. ஒருவேளை இன்று காலை நடந்தது தெரியுமோ.. எப்படி… யார் சொல்லியிருப்பார்கள்.?!”
மனம் குழம்பியது.
“என்ன அப்படி பார்க்கிற. உன்னை கிராஸ் பண்ணி தான் நாங்க ஆபீஸ் வந்திட்டு இருந்தோம். உனக்கு அந்த இன்சிடெண்ட் நடக்கும் போ நாங்க உன் பக்கத்துல தான் இருந்தோம். சோ விஷயம் எங்களுக்கு தெரியும்.
அப்புறம் அது உனக்கு தெரிஞ்ச பையன் போல.. உன்னை அவன் தான் பார்த்துகிட்டான். எங்களுக்கு அவசரமா ஒரு ப்ரொஜெக்ட் பைனல் பண்ண வேண்டி இருந்து அதான் உன்னை எங்க கூட கூட்டிட்டு வர முடியாம போச்சி.
ஆனாலும் எனக்கு மனசு கேட்கலை. ரவிய மட்டும் அங்கே அனுப்பிட்டு நான் உன் பக்கத்துல தான் இருந்தேன். அவனுக்கும் போக இஷ்டம் இல்லை தான். இப்படி உன்னை அந்த நிலைமையில விட்டுட்டு போக. நான் தான் அவனை சமாதான படுத்தி அனுப்பி வச்சேன்.
அப்புறம்  உனக்கு ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சதும் தான் நான் கிளம்புனேன். என் மனசு அப்போ தான் நிம்மதி ஆச்சி”. எந்தவித பந்தாவும் இன்றி விஷயத்தை சொன்னார் பாட்டி.
இவர் எப்பேர்பட்டவர். பணத்தை  விட குணத்தால்  உயர்ந்தவர்.
“ஓ. அப்படியா.. ரொம்ப தாங்க்ஸ் மேம்.  நவ் ஐ ம் ஓ.கே மேம்”.
“ரோடு கிராஸ் பண்ணும் போ கொஞ்சம் பொறுமையா பார்த்து போங்க மிஸ் ஆராதனா”. அக்கறையையாய் சொன்னான் ரவி வர்மா.
அவன் விழிகளை ஒரு முறை சந்தித்தவள், அந்த ஈர்ப்பில் கட்டுண்டு கிடக்க விரும்பிய மனதை அடக்கி..
“கண்டிப்பா சார்”. சாதாரணமாக இருக்க பெரும்பாடு பட்டாள் பெண். உள்மனம் பகாய் உருக.. வெளிமனம் திடமாய் இருந்தது. இது எத்தனை நாளைக்கோ..?!
“ஆராதனா உங்களோட ப்ரொஜெக்ட் ஒர்க் இன்னையிலிருந்து ஸ்டார்ட் ஆகுது.
டேக் திஸ் பைல்ஸ் வித் யு அண்ட் ரீட் திஸ் கம்ப்லீட்லி தென் ஷர் யுவர் ஐடியாஸ். டௌட் இருந்தா கேளுங்க”.
“ஓ. கே சார்”.
“ரெஸ்டாரண்ட் பார்க்க ஒரு நாள் உங்களை கூட்டிட்டு போறேன். நேர்ல பாருங்க. அதுக்கு அப்புறம் உங்களோட கருத்தை சொல்லுங்க”.
“சுவர் சார்”.
“நவ் யு கோ டூ யுவர் கஃபின். என்னோட பி.ஏ உங்களுக்கு தேவையான மத்த இன்ஸ்டரக்க்ஷனை தருவார்.
ஓ.கே வா மிஸ்.ஆராதனா.?!”
புருவம் உயர்த்தி கண்களில் கூர்மையுடன் பேசிய ஆண்மகனின் தோற்றத்தில் பெண்ணவள் நெஞ்சம் கொஞ்சம் தடுமாறியதோ…
இவன் தன்னிடம் அனுமதி கேட்கிறானா..?! ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது..
அவன் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து…
“ஹண்டேர்ட் பெர்சன் ஓ.கே சார்”. தடுமாறாமல் சொன்னாள் அவள் மனம் தடம் மாறியதை உணர்ந்தும்.
விழிகளில் சுவாரசியம் கூட.. அவளை பார்த்தபடியே சொன்னான்.
“கண்டிப்பா எல்லா விஷயத்திலும் நீங்க இப்படி சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்”.
அவன் கண்ணில் குறும்பு கூத்தாடியது. பெண்ணவளுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. கிழட்டு லேடிக்கு வேடிக்கையாக இருந்ததோ…?!
அவள் பதற்றம் அவனுக்கு உற்சாகத்தை கூட்டியது. அவளையே ஆவலாய் ரசித்தான்.
இவர்கள் பேச்சிற்கு இடைவெளி கொடுக்கும் பொருட்டு , “பெஸ்ட் விஷஸ் ஆராதனா” வாழ்த்து சொன்னார் பாட்டி.
“தாங்க் யு மேம்”. என்றபடி அவள் வெளியேறினாள்.
“கண்ணோரமாய். .
கசியும் ஒரு துளியில்…
ஆ..யி..ர..ம் அர்த்தங்கள் உண்டு…
அந்த ஆயிரம் பேரிடத்திலும்..!”
அங்கே குற்ற உணர்வில்.. தலை கவிழ்ந்தபடி..கவலையின் கவனிப்பில்.. பார்க்கவே பாவமாக அமர்ந்திருந்தான் அகில்.
எல்லாம் என்னால் வந்தது. நான் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம். அவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்று என்றால்… என்னால் எப்படி…?!
மேலே நினைக்கவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது..
நிமிர்ந்து தலையை கோதி கொண்டான். மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்த தொடங்கினான். அங்கே தூரத்தில் தன்னை நோக்கி நடந்து வருவது… பெண்ணவள்… ஆராதனா தானே….?!
கண்கள் தானாக வேர்க்க தொடங்கியது.
அவள் நலமாக கண் முன்னே வந்ததும் தான் மனம் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது.
எழுந்து அவளை ஒரு முறை நன்றாக பார்த்தான்.  “தாங்க் காட்.” அவளுக்கு ஒன்றும் இல்லை. நிம்மதியில் முகம் மலர்ந்தது.
“ஆ..ஆ…ர்..ர்..ரு….” என்றபடி அருகில் வந்தவளை அன்பொழுக அணைத்து கொண்டான். எதிர்பாராத பாச தாக்குதல். பெண்ணவள் உள்ளம் நெகிழ்ந்தது.
“என்னை மன்னிச்சிடு ஆரு. எல்லாம் என்னால தான். சாரி..  வெர்ரி சாரிமா…
நான் இனிமேல் இவ்வளவு மோசமா நடந்துக்க மாட்டேன். ஐ ப்ரோமிஸ் யு. சுயர்.. “
முகம் பார்த்து வருந்தினான். அவன் கண்ணில் கண்ணீரா.. அதுவும் பிடிக்காத ஒருத்திக்காகவா..?! பெண்ணவளுக்கு என்னவோ போல் ஆனது. இதுநாள் வரை ஒருவரை ஒருவர் திட்டி கொண்டும் சண்டை போட்டு கொண்டும் இருந்து விட்டு.. இப்போது உடனே பாச மழை என்றால்…
புரிந்தது அவளுக்கு..
“ஹ்ம்ம்…விடு அகில். என் மேலயும் தப்பு இருக்கு. நான் உனக்கு மரியாதை கொடுத்திருக்கணும். உன்னை மதிக்காத மாதிரி பேசுனது என்னோட தப்பு தான். உன்னோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா… இதுக்கு மேல தான் பிகேவ் பண்ணியிருப்பாங்க. சோ விடு.. உன் மேல தப்பு இல்ல..”
அவனது குற்ற உணர்வை போக்கினாள் தேவதை பெண். ஆம் தேவதை பெண்ணவள் அவள்.
“நியாயம் பார்ப்பதாக இருந்தால் முதலில் நம் பக்கம் உள்ள தவறை நாம் உணர வேண்டும். நம் சூழ்நிலை நம்மை மாற்றி விட்டதற்காக பழியை இன்னொருவர் மேல் சுமத்த கூடாது.”
ஆம். இது தான் அவளது தாராக மந்திரம். எல்லோருக்குமே சூழ்நிலை மாறும். இக்கட்டுகள் நெருக்கும். உறவுகள் உறங்கும்.மனம் மரணிக்கும். இருந்தும் நாமும் தவறிழைத்திருப்போம்.
அதை உணர்ந்து.. நம்மை முதலில் திருத்தி கொள்ள வேண்டும். எத்தனை இடர்கள் வந்தாலும் அதில் ஒரு துளி அளவேணும் நமக்கு நல்லது என்று ஒன்று ஒளிந்திருக்கும்.  இது தான் விதியின் சூட்சமம்.
தெளிந்த மனதோடு நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நடைபோட வேண்டும்.
இப்போது ஆருவின் முறை. தன் தவறை அவனிடம் தெளியப்படுத்துவது.
“சாரி… என்னை மன்னிச்சிடு.. இனி இப்படி நடக்க வேண்டாம். மறந்திரு..வோ..ம். எ..ல்..லா..த்..தை..யு..ம் மறந்திருவோம். நமக்குள்ள இனி நல்ல நட்பு மட்டும் இருக்கட்டும்.தேவையில்லாத எந்த விஷயமும் வேண்டாம். ” குரலில் தெளிவு இருந்தது.
கண்கள் இருவருக்குமே பனித்ததோ.. அங்கே ஒரு அன்பு மலர் பூத்ததோ..
இதழ்களில் மென்னகை அரும்பியதோ…
மானிட்டரில் தெரிந்த அந்த பாச பரிமாற்ற காணொளியை கண் சிமிட்டாமல் கண்டு கொண்டிருந்தான் ரவி. ரவி என்கிற ரவி வர்ம குலோத்துங்கன். கொஞ்சம் பொறாமை கலந்த வதனத்தோடு.
“வதனா.. சொல்றதை கேளு.. அடம்பிடிக்கதடா… ஒரு ரெண்டு வருஷம் போகட்டுமே… அதுக்கு அப்புறம் நம்ம கல்யாணம் பற்றி திங்க் பண்ணலாம். பிளீஸ்டா…”அமைதியாய் கெஞ்சிக் கொண்டிருந்தான் ராம்.
“நோ ராம் நோ… என்னால முடிய..ல..டா..
எங்க திரும்புனாலும் நீ தான் தெரியுற.. எல்லா வேலையிலும் நீ தான் சிரிக்கிற.. எனக்கு ஒரு வேலையும் நடக்க மாட்டுக்குது… உன் நினைப்பாவே இருக்கு… ப்ளீஸ் ராம் என்னை புரிஞ்சிக்கோ..டா..”அவன் கை பற்றி காதலால் விம்மினாள் வதனா.
“ஹ்ம்ம்…. முதல கண்ணை துடை..”
“பார்க்கிற யாராச்சும் தப்பா நினைக்க போறாங்க.. ம்ம்ம் இதை குடி. கொஞ்சம் ரீலாக்ஸா பீல் பண்ணுவ.”
மௌனமாக அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டாள் காதலி.
“ஹ்ம்ம்… இப்போ கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுறியா…?!”
“ஹ்ம்மம்ம்…”அமைதி திரும்பியது அவளுள்.
“இங்க பாரு வது…”குனிந்த தலையை மெதுவாக நிமிர்த்தி அவன் முகம் நோக்கினாள்.
அவன் விழிகள் பேசிய காதல் பாஷை பெண்ணவள் மனதை கலைக்க தொடங்கியது.
“உன்னோட கேரியர்ல இப்போ தான் ரொம்ப முக்கியமான பீரியட். இ..வ்ளோ வருஷம் கஷ்டப்..ப..ட்டு நீ இந்த இடத்துக்கு வந்திரு..க்..க. அதை சட்டுன்னு தூர போட முடியாதுமா.
நான் சொல்லுறதை பொறுமையா கேளு. நீ இப்போ தான் ஒரு ஸ்டேடியான இடத்துல இருக்க. இந்த நேரத்துல மேரேஜ் குடும்பம்ன்னு உனக்கு அதிக பொறுப்புகளை நான் கொடுக்க விரும்பலை.”
அவனது காதலில் பெண்ணவள் உள்ளம் நனைந்தது.
“உனக்கே  உன்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியலைன்னா.. எனக்கு எப்படி இருக்கும். அப்படி இருந்தும் நானே இதை சொல்றேன்னா… உன்னால ஏன் உன்னோட பீலிங்க்ஸை ஸ்டாப் பண்ண முடியாது.?!”
“உன்னோட கனவை எந்த காரணத்துக்காகவும் நான் ஸ்பாயில் பண்ண அலவ் பண்ண மாட்டேன். அப்படி இருக்கும் போ நா..னே எ..ப்..ப..டி..டி..?!”
“ஏன்டா என்னை இவ்ளோ லவ் பண்ணுற.. அப்படி நான் உனக்கு என்ன செஞ்சிட்டேன்…?!” பெண்ணவள் குரல் தழுதழுத்தது.
“அட ச்..சி.. பைத்தியமே… ஏன் கலங்குற. இது உன்னோட காதல் பற்றி இல்லை. என்னோட காதல் சம்மந்தப்பட்டதுடி.. நீ என்னோட லய்ஃப்ல வரதுக்கு முன்னாடியே உன்னோட நல்லததுக்காக யோசிக்கறவன்.. இப்போ நீ தான் எனக்கு எல்லாம் அப்டிங்கிற சமயத்துல நான் எப்படி..டி.. இப்படி ஒரு முடிவு எடுப்பேன்”. ஆறுதலாய் அவளை அணைத்துக் கொண்டான்.
“ஐ லவ் யு சோ மச் டா…” விசும்பிய படியே அவனது உரோமம் படர்ந்த கன்னத்தில் அவன் வெகுநாள் எதிர்பார்த்த அந்த முதல் முத்தத்தை பதித்தாள்.
“எத்தனை எத்தனை 
சந்தோஷ செய்தி கேட்டாலும்
இத்தனை இத்தனை
சந்தோஷம் வந்திடுமா..
பெண்ணே!
உன் பட்டு இதழ் தீண்டலில்
ஆண்மகன் ஆன்மா 
ஆடி களிக்கிறதே..
கண்ணே..!”

Advertisement