Advertisement

அத்தியாயம் 5
“என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு . . .  
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன். . .
செல்லறிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு. . .  !
ஓ ஓ ஓ ஓ . . .
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை. .
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு. . .!
ஓ ஓ ஓ ஓ . . . . . . “
தென்றலாய் காற்றிலே கலந்து ஒலித்தது இன்னிசை பாடல். அனால் இவை ஏதும் காதில் விழாமல் அந்த புத்தம் புது இளஞ்ஜோடி  தன் போக்கில் கனவில் மிதந்த படி இருக்க. . . சில நொடி பொழுதுகள் கடந்தும் இதே நிலை நீடிக்க. . . அது வரை பொறுத்து. . பொறுத்து. .. பார்த்த ஆராதனா இனியும் முடியாது என்றெண்ணி. . அவர்கள் அருகில் வந்து கோர்த்திருந்த இரு கைகளையும் பிரித்து விட்டாள் .
“ச் ச் ச்சு . .  போதும் நிறுத்துங்க…!” என்று இருவரையும் பொதுப்படையாக பார்த்து கூறியவள்..,
பின் கீதாவை பார்த்து . . ,
“ஏய் ! கீது. . .  அவன் தான் லூசு தனமா பிஹேவ் பண்ணறானா …. உனக்கு என்ன ஆச்சி. . ? ! நீ அவனை விட மோசமா கேனத்தனமால நடந்துக்கிற. . ! !
அவனை பற்றி தான் தெரியுமே. .   ஏதோ ஒரு ஆர்வத்துல. .  பைத்தியக்கார தனம் பண்றானா. . .  நீ என்னடானா . .  அவன் கூட சரிக்கு சமமா வம்புக்கு நிக்குற. . ?!
எல்லோரும் பார்க்கிற மாதிரி இருக்கிற இடத்துல இருந்துகிட்டு ரெண்டு பேரும் என்ன விளையாடுறீங்களா . . ?! “
ராஜேஷ் புறம் திரும்பியவள் ,
“டேய் ! உனக்கு வேற வேலை இல்லை. . ? எதுல காமெடி பண்ணனும்ம்னு ஒரு விவஸ்தை வேணாம். . . ? ! நீ பண்ணற இந்த   அலம்பல் எல்லாம் பொண்ணுங்க எங்களை எந்த அளவு பாதிக்கும்னு உனக்கு தெரியுமா. .  ?!
என்னை பொறுத்த வரை நீ இந்த ஏரியாவில் வசிக்கிற ஒரு பையன்! புரிஞ்சுதா உனக்கு . . ?! ஏன் இப்போ மட்டும் மரம் மாதிரி நிக்குற. . ?! வாயை திறந்து பேசுடா மடையா . . ? ? ! !
சும்மா ரோமியோ மாதிரி பூவை தூக்கிட்டு அலையாத . . ?! புருஞ்சுதாடா .. “
“இந்த உலகத்துல பாதி பேர் . . நீ எனக்காக பிறந்த ஜீவன்னு நினைச்சி . .  காதல் ஹார்மோன் கூட விளையாடி. . அப்புறமா பல அடிகள் பட்டு . . . வாழ்க்கைன்னா என்னன்னு நிதர்சனம் புரிஞ்சி. . . அதற்கு அப்புறம் தான் தனக்கான நிரந்தர துணையை கண்டுப் பிடிக்கிறாங்க. .  .!
இதுக்கு நீயும் விதிவிலக்கு இல்ல. . .”
“உனக்குன்னு ஒருத்தி வருவா. . . அப்போ நீயும் நல்ல இடத்துல இருந்தா. . . அவளா உன்னை தேடி வந்து  காதலை சொல்லுவா. . “
என்று கீதாவை ஒரு பார்வை பார்த்து கூறினாளோ பெண்ணவள் . . . ?!
“ஹ்ம்ம்ம்…… சரியா. . . நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா. . . ?! “
என்று சில பல அறிவுரை மழைகளை பொழிந்த ஆராதனா. . . அவனை கிளம்ப சொன்னாள்.
ஆனால் அம்மாயக்கண்ணன் அசைந்தானில்லையே . .  !
அவன் தான் தன் இந்நாள் . . . இந்நொடி. . புதிதாய் பிறந்த தன் காதலியை  வைத்த கண் வைத்தப்படி பார்த்துக் கொண்டே இருந்தானே. .
” என் முன்நாள் காதலியே . . .
நீ சொன்னால் நான் கேட்பேனோ . . ?!
உன் கேள்விகளுக்கு பதில் சொல்லிட தோணலையே . .
ஏனென்றால் இன்று
என் காதலியை கண்டுகொண்டேனடி பெண்ணே. .  .!
வருவேனடி நான் மீண்டும் . . .
புதிதாய். . .  வளமான எதிர்காலத்தோடு. . .
உன் தோழியின் கழுத்தில் மாலை சூட. . . “
என்று மனதால் கவிபாடிய படி கீதாவிடம் விழியசைவால் விடைப் பெற்று சென்றான் அவன். அவன் ராஜேஷ்.. இப்பொழுது அவன் கீ. . தா. .வி. .ன் ராஜேஷ். . . !
மந்திரித்து விட்ட ஆடு போல ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்து இருந்தாள் கீதா. என்ன நினைத்தாளோ ஆருவும் அவளிடம் தோண்டி துருவி கேட்காமல் விட்டு விட்டாள்.
—————————————————————————————————————–
இயற்கை புல்வெளியில் நடந்தபடி தன் அலைபேசியில் பேச ஆரம்பித்திருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன் தன் ஆசை பாட்டியிடம்.
“யெஸ் . .  கிரன்னி …. ஐ ம் குட் . .. “
“யு டோன்ட் ஒர்ரி டார்லிங். . . !”
“ஹவ் இஸ் தி டே  . ..  ?! “
“போடா. . . ஒண்ணுமே நல்லா இல்லை. . ..   நீ இல்லாம எனக்கு என்னவோ போல இருக்குதுடா …. பேசாம நானும் உன் கூடவே வந்துருக்கலாம் போல. . . .” அங்கலாய்த்தார் ரவி வர்மாவின் பாட்டி பார்கவி.
“ஸ் ஸ் ஸ் ஸ் ஸ். . .  என்ன பாட்டி . . . உங்களுக்கு இந்தியா வரணும்ன்னு தோணிச்சுன்னா வாங்க. ..  என்கிட்ட ஏன் பெர்மிஷன் எல்லாம் கேக்கிறீங்க . ..  ?!” புன்னகைத்தான் பேரன்.
“ச் ச் ச்சு . . . போடா. . .  இங்க கம்பெனியை யாரு பார்த்துப்பா . . ? பேசாம ஒண்ணு செய்வோமாட கண்ணா. . . ? ” கொஞ்சம் தாழ்ந்து வந்தார் பெண்மணி.
புருவம் சுருக்கியவாறே. . .
“ஹ்ம்ம்ம். . . . எ. . ன். . ன . . . ?” என்று ஏதும் அறியா பிள்ளை போல் கேட்டான்..
“வேற என்னடா கேட்க போறேன் . . . பேசாம இந்த பிஸ்னஸ் எல்லாத்தையும் உன் அம்மாவோட தம்பிங்க .. அதான் உன் மாமன்மார்களிடன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சொல்லிவிட்டு. . . நாம ஏன் இந்தியாவிலே செட்டில் ஆகுற மாதிரி ஏற்பாடு பண்ண கூடாது. . ” என்று தன் ஆசையை தெரிவித்தார்.
“பண்ணலாம் பாட்டி . . . ஆனா இப்போ வேண்டாம். . . அது அதுக்குன்னு சரியான நேரம் வரும் போது..” என்று பட்டென சொன்னான்.
“போடா. . . எனக்கு ரொம்ப பயமா இருக்குதுடா . . . எனக்கு வேற வயசாகிட்டே போகுது… என் காலத்துக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேண்டாமா. .  ?”
“பா பா ட் ட் டீ . .  .  “
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் மத்தவங்க மாதிரி குடும்பம் குழந்தைங்கன்னு வாழணும்டா . . . “
“பாட்டி .. போதும்.. கண்டிப்பா நீங்க சொல்றது எல்லாம் நடக்கும்.. எனக்கு இப்போ கொஞ்சம் டைம் கொடுங்க…! அது வரை இனி இந்த . . த . .  த. . . பேச்சே வர கூடாது… சரியா…?!”
“சரிடா. .  . நீ பண்ணிக்கிறேன் சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம்…. சரிடா.. போனை வச்சிருதேன்..”
“ஓ கே… பை “
என்றபடி அணைப்பை துண்டித்தான்.
ஹம்ம்ம்ம்ம்ம்…..
இந்த பாட்டி இருக்கிறார்களே. . . .விடவே மாட்டார்களே. . .  என்ற படி புன்னகைத்து கொண்டான்.
நினைவுகள் பின்னோக்கி சென்றன. அந்த சின்னஞ்சிறு வயதில்… பாசத்தை கொட்டி வளர்த்த அன்னையை . .  இழந்து. . . தனியாய் தவித்த போது. . .. ஓடோடி வந்து தன்னை அரவணைத்தது இந்த பாட்டி தானே. .  ?!
இவர் மட்டும் அன்று மடி தாங்கா விட்டால் . .  ?! நினைக்கவே கஷ்டமாக இருந்தது. .
இன்று இந்த நிலைமையில்.. கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் இவரல்லவா. . .  ?!
இந்த பாட்டிக்காக  சரி சொல்லி விடலாமா..   கொஞ்சம் யோசித்தான்.. பின் தலையை குலுக்கியவாறே. . . “ஹ்ம்ம். ..  நோ. . . நாட் நொவ் . .  .” முடிவெடுத்து விட்டான்…..
———————————————————————————-
அந்த ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக . .  வாசல் புறமே பார்த்தவாறு யோசனையாய் இருந்தாள் வதனா .
அம்மா அப்பா எல்லோரும் கேட்டாயிற்று. என்னம்மா? என்ன விஷயம் ? என்று… ஆனால் எதற்கும் பதில் இல்லை பெண்ணவளிடத்தில்!
” வேலைக்கு போயிட்டு நாங்களே வீட்டுக்கு வந்தாச்சு .. இவா . .  இந்த அம்மணி மட்டும் இன்னும் வீடு வந்து சேரல… . டெய்லி ஊர் சுத்துறதே இவளுக்கு பொழப்பா போய்ட்டு.!
வீட்ல யாராவது ஒரு வார்த்தை அவளை கேக்கிறாங்களா…?!”
“ச் ச் ச்ச . . ” என்று காலை தரையில் அடித்துக் கொண்டாள்.
அத்தனை வசவுக்கும் சொந்தக்காரி அவள் செல்ல தங்கை ஆராதனா தான் என்று நான் சொல்லவும் வேண்டுமோ. . ?!
ஏதோ வாயிக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவள் சட்டென முதுகில் ஒரு அடி விலவும் திடுக்கிட்டுப் போனாள்.
“ஹைய்யோ…! அம்மா…”
“ஏன்மா … இப்போ என்னை அடிக்கிற. . ?!” முறைத்தபடி கேட்டாள் வதனா….
” பின்னே.. ? எத்தனை தரம் உன்னை கூப்பிடறது…பதில் சொல்ல வேண்டாமா..?!” என்று கண்டிப்பு காட்டினார் அந்த அன்பு அன்னை கீர்த்தனா.
“சாரிம்மா . . சும்மா ஒரு யோசனை. சொல்லுங்கம்மா. . “
“ஆராதனா பூஜை முடிஞ்சி அந்த ராம் வீட்டுல சாப்பிட்டுட்டு தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னா . .  அவள் வர இன்னைக்கு லேட்டாகும். அவள் வந்தானா . .  அடுப்புல தான் பால் இருக்கு.. ரெண்டு பேரும் குடிச்சிட்டு அப்புறமா போய் படுங்க சரியா. . .. ?!”
“ஹ்ம்ம்.. சரிம்மா..”
அம்மா சென்று விட…
“சனியன் ! என் நேரம். .. . ! இன்னைக்கு பார்த்து . . . . இவா இவ்வளவு லே. . ட். . டா. . வா. .
வரணும்… ?! “
கொட்டாவி வேறு வந்து தொலைத்தது..
“ச்ச்ச்ச . . .”  இது வேறு. .  .
வாசலுக்கு நேராக இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டாள் பெண். ” இன்னைக்கு நான் அவ ரூம்ல பண்ணி வச்சிருக்கிற கூத்துக்கு  இனி அவள் என் பக்கமே திரும்ப கூடாது..
கண் குளிர அதை பார்க்கலாம்ன்னா இந்த தடிமாடை இன்னும் காணோம்… ?” என்று புலம்பியபடி ஆராதனாவிற்க்காக காத்துக் கொண்டிருந்தாள் .
————————————————————————————————–
அதே நேரம்.. அங்கே ராமின் வீட்டில் வதனா… டைனிங் டேபிளில் அமர்ந்தபடி நன்றாக சப்பு கொட்டியபடி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
“ஹப்பாடா . . . நல்லா சாப்பிட்டேன்” என்று தன் வயிற்றை இரு கைகளாலும் தடவிய படியே ஆரு ராமை பார்த்து. . .
” டேய் ராமு… நீ நல்லா சமைச்சிருக்காடா … உனக்கு வர போற மனைவி ரொம்ப குடுத்து வச்சவடா….” என்று புகழாரம் சூட்டினாள் ஆரு .
வலிக்காமல் அவள் தலையில் கொட்டியவன்…
“ஏய்.. எருமை.. எத்தனை தடவ சொல்லுறது உனக்கு.. பெயர் சொல்லி கூப்பிடாதான்னு..! ஒழுங்கா மரியாதையா கூப்பிடு”
“அட போடா.. நீயும் சின்ன வயசுல இருந்து சொல்லுற.. ஆனால் என்னோட வாய் கேட்கவா செய்யுது.. போடா ..!
எல்லோருக்கும் அந்த ஸ்பெஷல் ஐட்டம்   கொண்டு வா. . . போ..!
என்னடா முறைக்கிற. . . ?    போ போ…
உன் சாப்பாட்டை கஷ்டப்பட்டு நான் சாப்பிட்டு இருக்கேன்ல. . .
போய் எடுத்துட்டு வா…”
“மவளே. . . நல்லா வழிச்சி கொட்டிக்கிட்டு பேச்ச்சா பேசுற. .  .?!”
“ஹீ ஹீ ஹீ. .  .. “
“சரி.. கொஞ்சம் டேஸ்ட்டா இருந்து.. அதான் சாப்புட்டுட்டேன்… இப்போ என்னங்கிற.. . ?”
என்று கை மடக்கி கேட்டவள் பின் . .
“ரொம்ப சாப்பிட்டுட்டேன்டா ராம். . . எல்லாம் டைஜெஸ்ட் ஆகாண்டமா. . ?!   நீ பக்குவமா செய்வீயே அதை எடுத்துக் கிட்டு வாடா என் ராசா . .  !”
என்றபடி வீட்டிற்கு முன்புறம் இருந்த ஹாலில் நாற்காலியில் சென்று அமர்ந்தாள். கூடவே கீதுவும் ஒட்டிக் கொண்டாள்.
இம்மூவருக்கும் ஒரு பழக்கம் , சாப்பிட்டு முடித்த பின் இப்படி சற்று நேரம் அமர்ந்து ஏதாவது கதை பேசியபடி இருப்பது…
சரி அவர்கள் பேசுவது இருக்கட்டும் .நாம் வருவோம் அந்த டிஷ்ஷிற்கு ! கண்டுபிடிப்பதற்காக உங்களுக்கான குளு இதோ. . . .
டொட்ட டொயின் . .  .
“தாகத்தை தணிக்கும் அதை
சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகில்
ஒரு சூரிய குளியல் போட வைத்து . . .
அளவாக அந்த காய்ந்த சருகுகளை
சட்டென கவிழ்த்து. . .
கொஞ்சம் குளிரவிட்டு. . .
மஞ்சள் மங்கையை சேர்த்தால். . .
ஆஹா . . .
கூடவே தித்திப்பை கலந்தால். . .
ஓஹோ. . .
சொல்லவும் வேண்டுமோ. . .
அந்த சுவைக்கு அடிமையானால் . .
மீள்வது கடினமடி பெண்ணே. .  !”
ராமும் தன் கையில் மூவருக்குமாய் சேர்த்து அந்த ஸ்பெஷல் ஐட்டத்தை எல்லோருக்கும் கொடுத்து விட்டு அதில் தானும் ஒன்றை எடுத்து பின் அவர்கள் கூடவே அமர்ந்து கொண்டான்.
அப்போது ,
“ஆண்கள் ஆண்களாக இருப்பதற்கு
பெண்கள் அனுமதிப்பதே காரணம்..!
பெண்கள் அனுமதிக்கா விட்டால்
ஆண்கள் என்றோ மனிதர்களாக மாறியிருப்பார்கள்..!
அதேபோல் பெண்கள் பெண்களாக இருப்பதற்கு
ஆண்கள் அனுமதித்ததே காரணம்..!
ஆண்கள் அனுமதி மறுத்தால் . .
பெண்கள் என்றோ தெய்வங்களாக, சர்வமுமாய் மாறி இருப்பார்கள். . !”
என்று ஒரு பெண் பட்டிமன்றத்தில் பேசி கொண்டிருந்தது பக்கத்துக்கு வீட்டு தொலைக்காட்சியிலிருந்து கேட்டது.
“எவ்வளவு மகத்தான உண்மை பார்த்தியா கீது..” -ஆராதனா
“ஹ்ம்ம்….” என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள் கீது.
“கொஞ்சம் சரி தான்.. ஆனா . .   பெண் தான் ஆணை ஒரு எல்லைக்குள்ள நிறுத்தி வைத்து கொள்கிறா. சின்ன வயசுல இருந்தே ஆண் பிள்ளைகள் ஆழ கூடாதுன்னு சொல்றது… ஆணுக்கு ஒரு நியதி பின்பற்றுறது… ஆண் பிள்ளைகளிடம் பெண்கள் அந்த நாட்கள்ல அனுபவிக்கும் வலியை சொல்லாம வளர்க்கிறது இப்படி எல்லாத்தையும் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட இடத்துல ஆணை வளர்க்கிற..! ” -ராம்.
“ஹே.. இதை முழுசா தப்புன்னு சொல்ல முடியாது. இந்த குடும்பம் , சமுதாயம், கலாச்சாரம் இது எல்லாம் சேர்ந்து தான் அவளை இப்படி நடந்துக்க சொல்லுது..”   என்றபடி பெண் குலத்திற்கு வக்காலத்து வாங்கினாள் கீதா.
“ஆனா பெண் பெண்ணாக இருப்பதற்கு பெண் தான் காரணம்ன்னு நான் சொல்லுவேன்”  என்றாள் ஆராதனா..
மற்ற இருவரும் அவள் முகம் நோக்க. . .
“ஆண்களின் அனுமதிக்காக காத்திருந்து காத்திருந்து பெண்களே தங்களை ஒரு எல்லைக்குள்ள முடக்கி கொள்கிறார்கள் . பார்க்கப் போனா ஒரு வகையில அது தான்தான் உண்மை. நீ என்ன நினைக்கிற கீது .?”
“ஆமா ஆரு. ஆனா இந்த எல்லைகள் எல்லாம் கடந்து சாதிக்கிற பொண்ணுங்களும் இருக்காங்கப்பா. .  .சோ ஒட்டு மொத்தமா சொல்ல முடியாது.” பொதுவாக கீதா பேசினாள் .
“வெற்றியோ தோல்வியோ எல்லாத்துக்கும் இந்த சமுதாயம்,உறவுகள்,குடும்பம் தான் காரணம். வாழ்க்கையிலே சாதிக்கணும்ன்னு நினைச்சா. . முதல அந்த ஆள் எல்லா தடைகளையும் தூக்கி போட்டுட்டு .. தைரியமா உலகத்தை பேஸ் பண்ணனும்..!
அப்படி இருந்திருக்கலாம் .. இப்படி பண்ணியிருக்கலாமே. .. அப்படின்னு தேவையில்லாமா புலம்புறத விட்டுட்டுட்டு . .  உறவுகள் முன் தனக்கான மரியாதையை உரிமையை அவுங்க அவுங்க தான் வாங்கிக்கணும் . .
நமக்கு விதிச்சது இது தான் அப்படின்னு மூலையில் கிடக்க கூடாது. . . இப்படி நிறைய விஷயங்கள் இருக்குது. . . “ என்று கொஞ்சம் பெரியவளாய் பேசினாள் ஆராதனா. .
“ஹ்ம்ம்…. சரி தான் . .  அவர் அவர் வாழ்க்கை . அவர் அவர் உரிமை. . “ -ராம்
“இத்தனை பேசுற சில பெரிய ஆள்கள் அதை பயன்படுத்தாம சும்மா வெட்டியால நேரத்தை போக்கிட்டு இருக்காங்க . .”
என்று சந்தடி சாக்கில் ஆருவை வாரினாள் . அவளுக்கு ஆற்றாமை தன் தோழி திறமை இருந்தும் இப்படி விளையாட்டு தனமாக இருக்கிறாளே என்று….
“ஹா ஹா ஹா . . . “
அண்ணனும் தங்கையும் கைகளை தட்டி ஹை ஃபை  கொடுத்து கொண்டனர்…..
“ம்ம்ம்ம். . . . என்னை கலாய்க்கிறதுல உங்க ரெண்டு பேருக்கும் அம்புட்டு சந்தோஷம். . .?!  ஹ்ம்ம். . . . நடக்கட்டும்.. நடக்கட்டும்..! இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி என்னை கிண்டல் பண்றீங்கன்னு பார்க்க தானே போறேன்.  . .”
விழிகள் பளிச்சிட அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இவள் சொல்வதன் பொருள் என்ன. .  அப்படியானால். . ?! என்று வியப்புடன் ஆருவை பார்த்தாள் கீது. . .
இரு கண்களையும் சிமிட்டி வசீகரமாய் புன்னகைத்தவள். . .ஆம் நீங்கள் நினைப்பது சரியே என்பது போல தலையை ஆட்டினாள் . . .
“என்னடி சொல்லுற. . . ?!”
“ஆமா . . கொஞ்ச நாளாவே.. என் மனசுக்குள்ள இந்த நினைப்பு ஓடிக்கிட்டு தான் இருக்கு… கூடிய சீக்கிரமே நல்ல வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன். .”  என்று சொல்லி முடித்ததும் தான் தாமதம் கீது.. ஆருவை கட்டிக்கொண்டாள் . .
“ஹே . . !” குதூகலமாய் ஒலித்தது தோழியின் குரல். .
“வாழ்த்துக்கள் ஆராதனா . .” என்றான் ராம். கூடவே …
“உனக்கு என்ன உதவின்னாலும் தயங்காம என்னிடம் நீ கேட்கலாம்.. நீயும் கீதுவும் எனக்கு வேறு வேறு கிடையாது. . சரியா. . ?!” என்று பொறுப்பான ஆண் பிள்ளையாய். .
“ஹ்ம்ம்ம்…” தலையசைத்து கொண்டாள் ஆரு…
“சரி வா. .  உன்னை வீட்ல விட்டுடுறேன் . . . “  என்றபடி எழுந்தான் ராம்..
“பாய் டி . .”  கை அசைத்தபடி ஆருவும் எழுந்து கொண்டாள்.
இருவரும் ஆருவின் வீடு நோக்கி நடக்க . .  அங்கே அவளுக்காக படுக்கையறை குளியல் சிரித்துக் கொண்டிருந்தது…

Advertisement