Advertisement

அத்தியாயம் 3
தனித்துவமுண்டு
வெள்ளை நிறத்திற்கென்று..?!
அதில் கூட்டு சேரும் எதுவும்
வெளிச்சம் போட்டு தெரியும்…
இரவு வானில் நட்சத்திரம் போல
மனதை கொள்ளை கொள்ளுமே…?!!
வெள்ளை நிறத்திலான அந்த சாதத்தையும்… அதில் மின்னிய மாதுளை  மணிகளையும்.. பசுமை நிறத்திலான குண்டு குண்டு திராட்சை மாணிக்கங்களையும்… மயக்கும் மஞ்சள் நிறத்திலான அந்த அன்னாசி பழ துண்டுகளையும்…. பக்குவமாய் தாளித்து பொரித்திருந்த அந்த கருஞ்சிவப்பு நிற வத்தலும்… அந்த சாதத்திற்கு கூடுதல் கவர்ச்சி தந்ததோ..?!
அனைத்தையும் பக்குவமாய் சேர்த்து.. கூடவே கொஞ்சம் கை மணம் தூக்கலாகவே கொட்டி.. நாசியின் வழியே இதயத்தை தட்டி மனதை திருடி சென்றது…
அந்த சிவப்பு நிற தட்டில் சிரித்த சாதம் … அது… அது…. “தயிர் சாதம்”…!!!!
அவனுக்கு பிடித்த இந்திய உணவுகளில் முதன்மையானது.! உணவு உள்ளே இறங்க இறங்க.. அவன் இதயக்  கிடங்கில் பொதிந்திருந்த அன்னையின் நினைவுகள் மேலோங்கி வந்தன….
ஒவ்வொரு கவளமும் அவன் அன்னையின் மணத்தை பிரதிபலிப்பதாய் இருந்தது…
வெகுநாள் கழித்து அவன் ரசித்து உண்டான்.. கொஞ்சம் வயிறு நிரம்பவே…!
தாயை விவரம் தெரியும் சமயத்தில் இழந்தவன் தான் அவன்.  வளர்ந்தது எல்லாம் பாட்டி மற்றும் அப்பாவுடன் தான். இருந்தும் தாயின் வாசம் அறிந்தவன். கடைசி பருக்கை வரை ரசித்து.. ரசித்து… சப்பு கொட்டி… கடைசியில் தாள மாட்டாமல் விரல் சூப்பி விட்டான்..
உடலும் மனமும் ஏதோ ஒரு வகையில்.. இத்தனை ஆண்டுகள் கழித்து… பெற்ற தாயை தேடியது…
ஹ்ம்ம்ம்…. பெருமூச்சு விட்டபடி அது இப்போதைக்கு முடியாத காரியம்…என்று நினைத்து கொண்டான்…
சட்டென ஒரு யோசனை.! உடனே பேரரை கை அசைத்து அழைத்தான்.அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தான் .  பேரர் யோசனையாக பார்த்தான்.
“ஹேய்.. டோன்ட் ஒர்ரி மேன்…ஜஸ்ட் வாண்ட் டு சி. தோணிச்சி.. அவ்வ்வ்ளோ தான்.போ போய் கூட்டிட்டு வா…”
“ஓ.கே சார்.” பேரர் நகர்ந்து விட்டான்…
சில சில நிமிட இடைவெளிக்கு பிறகு தன்முன்னே வந்து நின்ற அந்த மனிதரை கண்டதும் விழிகள் பளிச்சிட சிரித்தான்.
பார்ப்பதற்கு மரியாதையான தோற்றத்தில் எதிரே வந்து நின்ற அந்த அழகிய பெண்மணியை நோக்கி எழுந்தவன், அவரோடு கை குலுக்கி தன்னை அறிமுக படுத்தி கொண்டான்.
அவரும் பதிலுக்கு,
“நான் கீர்த்தனா. இங்கே குக்கா  ஒர்க் பண்ணுறேன். உங்களுக்கு செய்த டிஷ் நான் பண்ணது தான்.நீங்க என்னை பார்க்கணும்ன்னு சொன்னிங்களாம். என்ன விஷயம்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா . . ? !”
தன் எதிரே இருந்த காலி இருக்கையை காட்டி அமருமாறு சைகை செய்தான்.அவரும் “தேங்க்ஸ் ”  சொல்லிவிட்டு  என்ன விஷயமாக இருக்கும் என்ற யோசனையில் அமர்ந்தார்.
“முன்ன பின்ன தெரியாத நான் கூப்பிட்டதும் கஷ்டம் பார்க்காம வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ். நான் உங்களோட டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. சட்டுன்னு விஷயத்தை சொல்லிடுறேன்” என்றபடி எந்தவித பீடிகையுமின்றி பேச ஆரம்பித்தான்.
“நான் இந்தியா வரப்போ எல்லாம் இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவேன். ஆனா அப்போல்..லா..ம் பீல் பண்ணாத ஏதோ ஒண்ணு இப்போ பீல் ஆகுது. சம்திங் ஸ்பெஷல்..! எ..எ..எனக்கு .. அதை எப்படி சொல்லுறதுன்னு சரியா தெரியல…
ஆனா. . .னா.. னா ஐ கேன் பீல் டிபர்ரன்ட்  . அல்சோ ஐ லைக் தட்…
ஹ்ம்ம்…. அந்த பீ..பீல்….. என்ற படி தன் விரல்களை மடக்கி இதயத்தை தொட்டு காட்டி . .
இங்கே… எ . .எ. .என். .ன். .ன். .ன. .வோ  செய்யுது ஆன்ட்டி … சம்திங்…” கொஞ்சம் குரல் தழு தழுத்ததோ. .. .
“ஆன்ட்டி ன்னு உங்களை கூப்பிடலாம்ல. . . ?!  ஒன்னும் பிரச்சனை இல்லையே…?!”
“ச் ச ச . . .  நோ ப்ரோப்லம் தம்பி…”
“அதான் ஆன்ட்டி . . இந்த அளவு இதயத்தை கவர்வது மாதிரி சமைச்சது யாருன்னு பார்க்கணும்ம்னு தோணிச்சி..அதான் உங்களை கூப்பிட்டேன். . . “
“ஓ ! ரியலி… ரொம்ப சந்தோஷம் தம்பி… உங்களுக்கு இந்த டிஷ் இவ்வ்ளோ பிடிச்சதுக்கு. . . !”
அவரும் தம்பி முறைக்கு மாறி உறவை புதுப்பித்து கொண்டார். . .
அவன் அம்மாவை இழந்து தனியாக இருப்பது தெரிந்ததும் ரொம்பவே பரிதவித்துப் போனார் பெண்மணி.
அம்மாவின் இழப்பை மறக்கும் பொருட்டு அவனிடம் பேச்சு கொடுத்தார்.. கொஞ்ச நேரத்தில் அவன் ஜாதகமே இவர் கையில்… அவன் அமெரிக்க வாழ் இந்தியனாம்.  தமிழ்நாட்டு தகப்பனுக்கும்…மும்பை தாய்க்கும் பிறந்தவனாம். சிறு வயதிலே தாயை இழந்ததால் அப்பாவுடனும் பின் அப்பாவின் அன்னையிடமும் அதாவது இவனது அப்பம்மாவிடமும் வளர்ந்தானாம்.  படித்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவாம். இப்போது அப்பாவை பார்ப்பதற்காக இந்தியா வந்திருக்கிறானாம். அப்படியே ஊர் சுற்றி பார்த்து விட்டு உடனே கிளம்பி விடுவானாம்.இது தான் இப்போதைக்கு இவனது திட்டம்.
பேச்சு பேச்சாக. . . அவர்கள் உரையாடல் கொஞ்ச நேரம் தொடர்ந்தது. முடிவில் இருவரும் அவ்வளவு நெருக்கமாகி விட்டனர்.
கீர்த்தனா தாயாக மாறி அன்பு மழை பொழிய ஆரம்பித்து விட்டார்.
விடைபெறுகையில் அமெரிக்கா கிளம்பும் முன் ஒருமுறை தன் வீட்டிற்கு வருமாறு அழைப்பு வேறு. . . !
அந்த அளவு இருவரும் உணவால் உணர்வால் இணைக்கப்பட்டனர் .
இது தான் தமிழ் காலச்சாரமோ …  உணவால் கட்டிப் போடுவது என்று இதை தான் சொல்வார்களோ . . ?!
————————————————————————————————————————-
” அம்மாடி ஆராதனா . . .! ஆரு . . ! அப்பா வர கொஞ்சம் நேரம் ஆகிடிச்சி..”
என்று சொல்லியபடி தன் வண்டியை கடையின் அருகில் பார்க் பண்ணியவர் ஆருவிடம் . .
“உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையேம்மா . . . ?!”
“நோப்பா. . “
“சரிம்மா . .  நீ வீட்டுக்கு போ. நான் கடையை பார்த்துக்கிறேன் . நீ ஈவ்னிங் வந்தா போதும்.  சரியா. . . ?”
“சரிப்பா… பை பை . . ” என்ற படி  கையில் ஒரு குச்சி மிட்டாயுடன் , விடை பெற்று சென்றாள் ஆரு . ..
அவள் அப்பா தேவேந்திரன் சிறு துள்ளலுடன் செல்லும் தன் அன்பு மகளை ஆசை பொங்க பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார். .  .
———————————————————————————————————————
அவசர அவசரமாக அனைத்து கோப்புகளையம் சரிபார்த்து வரிசையாக பார்வைக்கு தகுந்தார்ப் போல் வைத்துக் கொண்டிருந்தாள் வதனா.
சட்டென அவளுக்கு பிடிப்பட்டது. முக்கியமான பேப்பர் பண்டில் ஒன்று மிஸ்ஸிங் . மீண்டும் அந்த கோப்பை சரி பார்த்தாள்.
அவள் நினைத்தது சரி தான். அந்த பேப்பர்ஸ் இங்கில்லை. . .
அது எப்படி. ..  ??? நேநே ற் ற் று தானே . . . ?!!! என்று புருவம் சுருக்கி யோசித்தவளுக்கு சட்டென பொரி தட்டியது……
“ஆ ஆ ஆ ர் ர் ரூ ரூ ரூ . . . “
அந்த பளிங்கு பற்களுக்கிடையே அவளது பெயர் கடிப்பட்டு சின்னா பின்னாமானது . .
“யூ . . யூ . . யூ. . யூ  . . ! செத்தடி நீ. . .  நீ தான். . .! கண்டிப்பா இது நீ தான். . .  ! இருடி . .  .  வீட்டுக்கு வந்து வச்சிக்கிறேன் . . .” என்றபடி தன் வலக்கையில் கட்டியிருந்த டைட்டன் கடிகாரத்தை பார்த்தாள். மணி 10.30. மீட்டிங்கிற்கு இன்னும் 30 நிமிடம் இருக்கிறது.
வேக நடை போட்டு. . . தன் குதிகால் செருப்பின் இசையோடு . .  கைகளை காற்றில் அசைத்து . .  கொஞ்சம் வேகமாக தன் அறைக்கு சென்று, தான் ஏற்கனவே சேவ் பண்ணி வைத்திருந்த பென் டிரைவை எடுத்தாள். கணினியை உயிர்ப்பித்து அத்தனை பேப்பர்களையும் ஒரு பிரிண்ட் எடுத்தாள். . .
“ஷ் ஷ் ஷ் . . .   ஹப்பாடா . . .  வேலை முடிஞ்சது . . .  !”
அனைத்தையும் சரியாக அடுக்கிய பின் எழுந்து மீட்டிங் நடக்கவிருக்கும் ஹாலிற்கு சென்றாள் பெண். .  இம்முறை கொஞ்சம் மெதுவாகவே. . . டென்ஷன் இல்லாமல் அமைதியாகவே. . . !

Advertisement