Advertisement

” கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா…
கங்கை நதி வைகை நதி பெண் தானம்மா…
மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்…
பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்…
வலப்பக்கம் ஒரு கரை..
இடப்பக்கம் ஒரு கரை…
நதிகள் நடுவில் ஓடி வரும்…”
என்று கைகளை வலதும் இடதும் ஆட்டிய படி உடலசைத்து திரும்பியவள் அப்படியே ஸ்தம்பித்தாள்…. ஆராதனா.
“ஹேய்… நீ எப்போ டி உள்ளே வந்த… “
பேந்த பேந்த விழித்தப்படி கேட்டாள் பெண்.
மறுபக்கம் முறைப்பு தான் வந்தது…
“ஏய்.. ஏண்டி.. என் மேல கோபமா என்ன..?! என் செல்லம்ல…” என கொஞ்சியபடி நாடியை பிடித்து கொஞ்சினாள்…
“ஹ்ம்ம்… தள்ளி போடி முதல…. நீ அடி தான் வாங்க போற… தொடாத… போ…”
என்று கோபமாய் சீறி பாய்ந்தாள் அடுத்தவள்…
இந்த அடுத்தவள் ஆராதனாவின் தோழி கீதா. அந்த ஆணழகன் ராமின் தங்கை..
“ஏய் கீது…! மன்னிச்சிக்கோ டி… நேத்து நான் உன் வீட்டுக்கு வரேன்..ன்..னு சொன்னதை மறந்தே போய்ட்டேன் டி… எல்லாம் இந்த வெள்ளச்சியால வந்ததுடி..”
(அதாங்க.. அவளோட செல்ல அக்கா வதனா… அக்கா அடிக்கிற வெள்ளை கலர்ல இருபாப்பல அதான் அம்மணி பெயர் வச்சிட்டாப்புள…)
“அவா இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங்ன்னு சொல்லி என்னை ரொம்ப வேலை வாங்கிட்டாடி…. நானும் அசதியில அப்படியே தூங்கிட்டேன்டி….”
என்று சலித்தப்படி  வருத்தம் தெரிவிக்க முயன்றாள் பெண்…முகத்தில் டன் கணக்கில் சோகம்…
சோகமா… இல்லை … அப்படி ஒரு தோற்றமா?!!    ஹ்ம்மம்மம்… யோசனையை புறந்தள்ளிய கீது பொரிய ஆரம்பித்தாள்…
“என்ன…ன…ன…து….?????!
அப்படியே தூங்கிட்டியா…?!?
யாரு….ரு….ரு…    நீ…நீ…நீயி….??!!
மம்ம்ம்ம்ம்ம்…….”
நம்பாத பார்வை ஒன்றை பார்த்தாள்…
“ஹேய்… நம்புடி… நிஜமம்ம்ம்ம்ம்ம்ம்மா தான்… “
என்று தலையில் அடித்து சத்தியம் செய்தாள் பெண்ணவள்….
கொஞ்சம் லூசாகவும் இல்லாமல் சரியாகவும் இல்லாமல் ஃபிரீயாக அவள் அணிந்திருந்த உடையும்… ஃபேதர் கட் ஹேர் ஸ்டைல்லும்… குழந்தை முகமும்… அவள் தலையில் அடித்த படி நின்ற தோரணையும், அப்பாவி நடிப்பும்… கொஞ்சம் அழகாய் தான் இருந்ததோ… ?!!
படைத்தவனே வியந்தான்…
உன் பஞ்சு மேனி கண்டு…!
இரு கண்கள் போதாது…
உன்னழகை கண்டு ரசிக்க…!
தொட்டு பார்க்கவா உன்னை…
ஒருமுறையேனும் போதும்..
பெண்ணே! நான் பிறந்த பலன் அடைவேன்….!!
ஹ்ம்ம்… எத்தனை அழகு இவள்… அழகை பற்றிய கர்வமில்லாமல்… இப்படி வாஞ்சையில்லாமல் இருக்கிறாளே…..  என்று தான் நினைக்க தோன்றியது…
கடவுளே! இவளை எப்பொழுதும் சந்தோசமாகவே வைத்துக் கொள்…. என்று கடவுளிடம் ஒரு பெட்டிசனை போட்டப்படி ஆராதனாவை முறைத்து பார்த்தாள் கீதா…
அவள் இன்னும் கொஞ்சம் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டாள்… நடிப்பதற்கு இவளுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்??!ஹ்ம்ம்…?!
அவளது செயலை ரசிக்க தோன்றியது தோழியவளுக்கு…! கொஞ்சம் கோபம் குறைந்தார்ப் போல தான் இருந்தது… ஆனாலும் கோபத்தை பிடித்து கொண்டே பேசினாள் தோழி…
“ஹாங்…. அப்டிங்கிற….?!!
ஆன்னானா…… எனக்கு வேற மதிரியில்லா நியூஸ் வந்துச்சு… “என்று தடையை யோசனையாய் தடவியபடி சொன்னாள் தோழி…
“யார்…ர்…ரோ…. கேட்டுக்கோடி…. யார்ர்ரோ பார்த்துக்க… “என்ற படி அந்த யாரோவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தப் படி…..
“யார்ரோ நல்லா மூக்கு முட்ட தின்னுப்புட்டு… விடிய விடிய ஆட்டம் போட்டாப்புல்லால இருந்துச்சி….?!!…
ஹ்ம்மம்ம்…. ?! “
என்றபடி இடுப்பில் தன் கைகளை ஊன்றியபடி… புருவம் உயர்த்தி கேட்டாள் கீது….
அச்சச்சோ….! புள்ளைக்கு விஷயம் தெரிஞ்சிடிச்சி போல…?! செத்தேன்…! இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது….???
மனதினுள் நினைத்தபடி யோசனையில் நகம் கடிக்க ஆரம்பித்தாள் ஆராதனா…
“அடச் ச்சீ… விரலை வாயிலிருந்து எடுடி….”
என்றபடி அந்த விரலை சட்டென தட்டிவிட்டாள் கீது…
“ரொம்பலாம் யோசிக்காத… அங்கே மூளையில இருக்கிற கொஞ்சன்னுண்டு
அறிவும் உருகி வழிஞ்சிட போகுது….”
“என்ன அங்க சத்தத்தை காணோம்…. ஹ்ம்மம்மம்…..
இப்போ அமைதியா இருந்து என்ன ப்ரேயோசனம்டி…?!!”
“கருமம்டி…. உன்னையெல்லாம் நம்பி நான் ராத்திரி ஃபுல்லா… என்னோட டெய்லரிங் வேலையெல்லாம் விட்டு புட்டு காத்துக் கிட்டு இருந்திருக்கேன்…
ஆனா நீயி… அந்த வெள்ளச்சிய வெறுப்பேத்தனும்ன்னு… சத்தமா பாட்டை போட்டு குத்தாட்டம் போட்ருக்க… அதுவும் இல்லாம அவள வேலை செய்ய விடமா தடுக்க… அவளுக்கு குடிக்க வச்சிருந்த பால்லுல தூக்க மாத்திரை வேற கலந்து கொடுத்துருக்கிற….
ஹ்ம்ம்……
அதோட பிள்ளை போளச்சி போகட்டும்னு விட்டியா நீ… ?!? “
ஹாங்…. ?!?
என்று கை உயர்த்தி கேள்வி கேட்டாள் கீது….
என்ன மீதியை சொல்லட்டுமா…?! என்ற ரீதியில் புருவம் உயர்த்தினாள் கீது…
இவா விட மாட்டா போல…
மனம் கசங்கினாள் ஆரு.
“அதோட விட்டியாம்மா…நீ?!
வெள்ளச்சி கஷ்டப்பட்டு ரெடி பண்ண அந்த ரிப்போர்ட் பேப்பர்..ர்..ரை…”
பேப்பர் என்பதில் கொஞ்சம் இடைவெளி விட்டு… பின்…
“அந்த பேப்பர்ரை என்னங்க அம்மணி பண்ணினிங்க….?!?! “
ஹ்ம்மம்ம்…..
“தெரு பசங்க கூட சேர்ந்து… பேப்பர் ராக்கெட் விட்டு விளையாண்டு இருக்கீங்க….”
“அதுல வேற அந்த தடி மாடு ராஜேஷ் கூட சண்டை பிடிச்சிருக்கிற…?!”
“அவனெல்லாம் ஒரு மனுஷன்….?! சும்மாவே ஜொள்ளு விட்டுகிட்டு அலைவான்….  அவனை போய் ஏண்டி சீண்டுனா… “
ஹைய்யையோ…. ! இவளுக்கு எப்படி…??  நேர்ல பார்த்த மாதிரி… எல்லாம் தெரியுது…. ?!
என்று கைகளை பிசைந்தபடி…  களவு செய்து மாட்டி கொண்ட பிள்ளை போல் முழித்தாள் ஆராதனா…..
“ஏய்.. இப்படி பச்ச பிள்ளை மாதிரி முழிக்காதடி… “
என்றபடி அவள் தலையில் வலிக்காமல் கொட்டினாள் கீது.
“அய்யயோ… அம்மா… அடிக்கிறாளே… யாராவது வாங்களேன்…  ஹைய்யயையோ…. காப்பாத்துங்க….காப்பாத்துங்க…. ” என்ற படி கத்தினாள் ஆரு…(ஆராதனா)
“ஏய்… கத்தினா கொன்னுருவேன்…” என்ற படி அவள் வாயை அழுந்த மூடினாள்..
“என்னடி.. உண்மையை சொன்னதும் இந்த கத்து கத்துற… இருடி… அந்த வெள்ளச்சி கிட்ட போட்டு கொடுக்கிறேன்…. “
“ஹேய்…. அப்படி மட்டும் செஞ்சிறாதடி… அவளுக்கு தெரிஞ்சா அம்மாட்ட வத்தி வச்சிருவாடி….”
“ப்ளீஸ் டி… நான் உன் பிரண்ட் இல்ல…?!?”
கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு… கொஞ்சமும் இரக்கம் காட்டாமல்… சொன்னாள் கீது
“இல்ல… இல்லவே இல்லை….!”
“நீ பிரண்ட் இல்ல…. என்ன பிடிச்ச சனிடி.. சனி…”
மீண்டும் மீண்டும் மண்டையில் கொஞ்சம் வலிக்கவே கொட்டினாள் கீது…
“சனியனே.. உண்ட எத்தனை தடவ சொல்றது.. அந்த எருமை ராஜேஷ் கிட்ட எதுவும் வச்சிக்காதன்னு…
“சொன்னா கேக்கிற ஐடியாவில் இல்லையோ நீ…!?!”
ஆருவிற்கு சட்டென ரோஷம் மேலோங்க ,
“ஹே… நான் ஒன்னும் அவன்கிட்ட வம்புக்கு போகல… அவனா தான் வந்தான்… “
“அடச்ச்சீ..! பேசி மழுப்பாதடி… “
“ஹேய்… நீ நினைக்கிற அளவு அவன் ஒன்னும் அவ்ளோ ஒர்த் இல்லைடி… அவன்லாம் காமெடி பீஸ்டி…”
என்று சொல்லி கல கல வென சிரித்தாள் ஆரு…
அந்த தெத்து பல் சிரிப்பில் இயற்கையாக சிவந்த கன்னங்களை கடித்து தின்னலாம் போல தான் இருந்தது….
“ஹ்ம்மம்ம்….. அதுவும் சரி தான்… ஆனாலும் அவன் மனசுல வீணா ஏன் உன் மேல ஆசைய வளர்க்கணும்….?!”
“அப்படிலாம் ஒன்னும் இல்லைப்பா…. அவன்கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன்… காதல் கீதல் எல்லாம் எனக்கு சரிப் பட்டு வராது… அதுவும் உன்னோட…. சத்தியமா முடியவே முடியாதுன்னு தெளிவா அவன்கிட்ட சொல்லிட்டேன்டி… சோ பயப்பட எதுவும் இல்லை…. நீ கவலைப்படாதா…ஓ.கே…?!”
“ஒன்னும் பிரச்சனை வராம இருந்தா சரி….”
தோள் மேல் தோள் கை போட்டபடி நடந்து  வாசலில் போடப்பட்ட நாற்காலியில் போய் அமர்ந்தனர் தோழியர்….
கீது ஆருவை பார்த்து….
“அப்புறம் என்னடி… உங்க அப்பா என்ன இன்னும் கடைக்கு வரல…?! இந்நேரத்துக்கு வந்து இருக்கணுமே….”
“இல்லைடி இன்னைக்கு அம்மாக்கு ரெஸ்டுடாரண்ட் ஒர்க் வந்துருக்கு… நம்ம ஹேமா ஆன்ட்டி தான் கூப்பிட்டு இருக்கிறாங்க…”
“உனக்கு தான் தெரியுமே.. அம்மா நல்லா சமைப்பாங்கன்னு… அவுங்க ரெஸ்டாரண்ட்ல ஒரு குக்  இப்போ தேவைப்படுதாம்… அதான் அம்மாவ கூப்பிட்டு இருக்கிறாங்க…”
“சோ அப்பா மதியம் தான் வருவாங்க…”
ஹேமா ஆன்ட்டி அவர்கள் காலனியில் வசிப்பவர். டவுனில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இவரும் ஆருவின் அம்மாவும் தோழியர்.. நட்பின் காரணமாக உதவிக்கு சென்றிருக்கிறார் ஆரு அம்மா கீர்த்தனா…
“சரி சரி…. “
என்ற படி கீதாவும் ஆருவும் அவர்கள் காலனியில் நடந்த பிற வம்பு தும்புகளை பற்றி குதூகலத்துடன் பேச ஆரம்பித்தனர்…
====================================
“ரா ரா ரா ம் ம் ம் ம் ம் . . .”
“ஹேய்… ராம்… என்ன ஆச்சி… ஏன் அப்படியே பிரீஸ் ஆகி நின்னுட்ட.. “
“நீ முழிக்கிற முழிய பார்த்தா…. ஏதோ கனவுலத்துக்கு போய்ட்ட போல…”
“டேய்! என்னடா ஆச்சி…”
என்றபடி ராமின் தோள்களை உலுக்கினாள் அந்த சொப்பன சுந்தரி வதனா…
சட்டென தலையை உலுக்கிய படி நினைவுக்கு வந்தான் ராம்…
அட.. நாம் என்ன கனவா கண்டோம்…?!
ச் ச் ச…
ஹ்ம்ம்…. எப்போ தான் என் காதலை இவளிடம் சொல்லப் போகிறோனோ…
என்று பெருமூச்சு விட்டப்படி நிமிர்ந்து பார்த்தான்…எதிரே சிரித்த முகமாய் நின்றிருந்த வதனா பட்டாள்…
“ஹ்ம்ம்…ஒன்னும் இல்லை வதனா.. ஒரு சின்ன யோசனை.. சரி வா… போகலாம்… “
என்ற படி பஸ் ஸ்டாப் நோக்கி நடை போட்டான் ராம்.. கூடவே வதனாவும்…
அவர்கள் போகும் பாதை காதல் பேருந்தை அழைத்து வருமா… இல்லை வில்லனிடம் கொண்டு போய் சேர்க்குமா..?!
===================================
அந்த ரெஸ்டாரண்ட் வாசலை இடித்து தள்ளி விடுவான் போல… தன் ஆறடி உயரத்தையும், கட்டுமஸ்தான தோள்களையும் குறுக்கியப்படி உள்ளே நுழைந்தான்…
அந்த கிரேக்க ஆணழகன்…!
பார்ப்பதற்கு அந்நிய நாட்டு ஆடவனை போன்ற நாகரிகம் இருந்தாலும் …. அவன் இந்தியன் என்பதை முகம் கொஞ்சம் எடுத்துக் காட்டியது…
கண்ணுக்கு குளிர்ச்சியாக கருப்பு நிற குளிர் கண்ணாடியும்…., முனிவர் போன்ற உச்சி கொண்டையும்…., தோள் வரை சீராக கத்தரிக்கப் பட்ட கூந்தலும்…., பிரவுன் கலர் கலரிங் செய்தபடி இருந்த ஒன்றிரண்டு முடிகளும்…, கொஞ்சம் அழகுக்கு அழகு சேர்த்ததுப் போல இருந்தது….
ஆங்காங்கே சிறு சிறு கிளிசல் போட்டப்படி இன்றைய நாகரீக சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ்ஸும்,  அவனுக்கு கச்சிதமாய் பொருந்தியதோ…?!
ஆண்மை பொருந்திய அந்த நீள கழுத்தில் சில்வர் நிற செயினும்… அதில் பறவை டாலரும்… கூடவே ஜோடியாக ஒரு ஜெபமாலை போன்ற தோற்றத்தில் ஏதோ ஒரு பாசி மாலையும்… இடது கையில் பல வகை கயிறும்…. அவனை அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாமல் கொஞ்சமே…. என்ன ….?!?!  நிறையவே வித்தியாசமாக தூக்கி காட்டியது….
கையிலிருந்த ஏதோ ஒன்றை ஸ்டைலாக வலக்கையிலிருந்து இடக்கைக்கு தூக்கிப்போட்டப்படி… அசால்ட்டாக… வெகு அசால்ட்டாக வே நடந்து வந்து கொண்டிருந்தான்…. அந்த முறுக்கேறிய கட்டுமஸ்தான உடம்புக்கு சொந்தக்காரன்…..
காலியாக இருந்த ஜன்னலோர இருக்கைக்கு சென்றமர்ந்த அவனை நோக்கி பேரர் சென்றார்….
கூடவே சுற்றியிருந்த பலரது கண்களும் தான்…..
அந்த உணவு பட்டியல் தாங்கிய அட்டை என்ன புண்ணியம் பண்ணியதோ…. ?!! அவன் விரல்கள் தீண்டியதில் காதல் உஷ்ணம் கூடி… மன்மதன் காலடியில் சரண் புகுந்தது…..
அவன்… அவன் பாட்டிற்கு அவனுக்கு தேவையானதை சொல்லி முடிக்க… பேரரின் முகம் ஒரு நொடி ஆச்சரியத்தை காட்டி சென்றது….
பேரர் நகர்ந்து விட… அவன் ஜன்னலுக்கு வெளிப்புறம் தெரிந்த அந்த அழகிய நீண்ட நீலநிறத்தில் வெள்ளைக்கோடுகள் ஒன்றன் பின் ஒன்றாக…ஊர்வலம் வந்து கொண்டிருந்த கடல்லலைகளையும்… கடற்கரையையும் ரசிக்க தொடங்கியிருந்தான்…
ஏதோ..அந்த இயற்கையை ரசிக்கவே பிறந்தவன் போல சுற்றியிருந்த எதையும் பொருட்படுத்தாமல்…. அவன்பாட்டிற்கு அவனுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்…
அவனது தவத்தை கலைப்பது போல் டேபிள் மேலிருந்த செல்போன் அழைப்பு விடுத்தது.
எடுத்தவன் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான்…..
“யெஸ் டாட்…
……………..?
ஐ அம் பைன்…
………………?
ரீச்ட்டு அட் மார்னிங்.
………………..!
நோ வொரி டாட். ஐ வில் பி தேர்அட் ரைட் டைம். ஓ. கே…. சி யூ டாட்.. லவ் யூ…!உம்மா!”
என்றபடி அணைப்பை துண்டித்தான். முகத்தில் புதிதாய் ஒரு இளநகை..!
கொஞ்ச நேரத்தில் பேரர் உணவு பாதர்த்தங்களை வைத்துவிட்டு சென்றுவிட… அவன் கண்களை கவர்ந்தது அந்த சிவப்பு நிற பீங்கான் தட்டும்… அந்த பத்தார்த்தமும்….!
“ஆகாய வெண்மையில்
பளிச் பளிச்சென மின்னுகிறது…
சிவப்பு நிற ரத்தின கற்கள்!
அள்ளி அணைத்திடுகையில்
கிலுக் கிலுக்கென சிரிக்கிறது….
பச்சை நிற மாணிக்கங்கள்!
ஆடி கூத்தாடுகையில்
மலுக் மலுக்கென சண்டையிடுகிறது…
மஞ்சள் நிற முத்துக்கள்!
அவசரமாய் இதழணைக்கையில்
சுருக் சுருக்கென வாட்டுகிறது…
கருஞ்சிவப்பு நிற வைடூரியங்கள்!
பெண்ணே! நீ எப்படி கை தேர்ந்தவளானாய்…?!
அனைத்தையும் கச்சிதமாய் தேர்ந்தெடுத்து…
சில்லிட வைக்கிறாய்…
மனதையும் உடலையும்..!!!”
(மக்களே…! இந்த கவிதை ஒரு உணவு பத்தார்த்தை பற்றியது. அதில் சேர்ந்துள்ள பொருட்கள் என்னன்னு ஒவ்வொன்றாக விவரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாசிக்க வாசிக்க பொருள் விளங்கும். பொருள் பிடிபட்டால் உணவின் பெயர் நாசியின் மணம் தீண்டும்…. என்ன கண்டுபிடிப்பீங்க தானே…?!?!)

Advertisement