Advertisement

“சந்தோஷமே நம் உறவு 
சங்கமிக்கும் இடத்தில்
சாமி சிலையாய் நீயிருந்தால்…”
எத்தனை வருடங்கள் கடந்தாலும்… எவ்வளவு காலம் வசித்தாலும்.. பூக்களின் தேனை உறிஞ்ச ஓடோடி வரும் தேனீக்கு வாடகை கேட்பதில்லையே பூக்கள். அதன் நிறங்களின் எண்ணிக்கையை அறிய முற்பட்டால் பிரமிக்க வைக்கும் எந்தவொரு அறிஞனையும். ஆளை மயக்கும் மணத்தை எத்தனை பொருத்தமாய் செயற்கை முறையில் மனிதன் தயாரித்தாலும் இயற்கையாய் மலர்ந்த மலரின் மணத்திற்கு ஈடு உண்டோ…?! பூக்களை பிடிக்காத ஜீவன் தான் உலகில் உண்டோ…?! எத்தனை அழகாய் இருந்தாலும் அவ்வழகையே அலங்கரிக்க பூக்களை தானே நாடி வருகின்றனர். அப்படி இருக்கையில் பூக்களுக்கு இறுமாப்பு இருக்க கூடாதா…? கர்வம் பிறக்க கூடாதா…?! என்று பூக்களுக்குள் சொற்பொழிவு விறுவிறுப்பாய் நடக்க… இவை எதுவும் அறியாமல் அப்பூக்களுக்கு நீர் கொடுத்து உபசரித்து கொண்டிருந்தார் ஆரதனாவின் அன்னை கீர்த்தனா.
தன் வீட்டில் வளர்க்கும் எல்லா செடிகளுடன் காலையில் வேலைக்கு செல்லும் முன் கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு போவது தான் அவரது வழக்கம். இன்றும் அதே போல செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டு வாசலிலிருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.
“கீர்த்தனா அக்கா… கீர்த்தனா அக்கா…”
கையிலிருந்த தண்ணீர் பைப்பை கீழே போட்டு பைப்பை அடைத்து விட்டு வாசலிற்கு விரைந்தார் அவர்.
அங்கே பக்கத்து வீட்டு மாலதி நின்றிருந்தார்.
“என்னம்மா.. என்ன விஷயம்?”
“அக்கா. இன்றைக்கு என்னோட பொண்ணு ‘மகி’யோட ஸ்கூல இருந்து அவளோட கிளாஸ் மிஸ் வர சொல்லி கூப்பிட்டு இருக்கிறாங்க. என்னோட துணைக்கு நீங்களும் வந்தா எனக்கு உதவியா இருக்கும்”.
“அப்படியா மாலதி. எனக்கு பத்து மணிக்கு ரெஸ்டாரண்ட்ல இருக்கணுமே”.
“இல்லக்கா. நாம போய்ட்டு உடனே வந்திரலாம். இப்போ மணி இன்னும் ஒன்பது கூட ஆகல. அதுவும் இல்லமா இவள்ட்ட மட்டும் தான் அவளோட மிஸ் வர சொல்லியிருக்கிறாங்க. மத்த பசங்க பேரெண்ட்ஸ் அல்ரெடி மீட் பண்ணி ஆச்சாம். சோ நீங்க பத்து மணிக்கு எல்லாம் வேலைக்கு போயிறலாம்”.
“அப்போ சரி மாலதி. இதோ வந்துர்றேன்”. சொன்னவர் வீட்டை பூட்டி விட்டு அவருடன் பள்ளியை நோக்கி செல்லலானார்.
##############
மேகத்தை தொட்டு விடும் நோக்கில் உடலை குறுக்கி சிறகை விரித்து பறக்க தயாரானது போல ஒரு வித ஆயத்ததுடன் இருக்கும் பறவையை போல இருந்தது அந்த அறையில் குழுமியிருந்தவர்களின் நிலை. எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் உழைப்பிற்கான பதில் வரலாம். தத்தம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் எல்லோர் மனமும் ஒரு சேர அந்த தொலைபேசியிலேயே கவனம் செலுத்திய படி இருந்தது.
ஆனால் எதை பற்றிய அக்கறையும் சிந்தனையும் இன்றி ஆராதனாவிடம் தன் காதலை சொல்லிவிட்ட நிம்மதியில் நாற்காலியில் தலை சாய்த்து உதட்டிலே இளநகை மின்ன கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான் வர்மா குரூப்பின் சக்கரவர்த்தி ரவி வர்ம குலோத்துங்கன்.
சில சமயம் என்றோ நடந்த உரையாடல்கள் நினைவலையில் எழும்பி இதழ்களை மலர செய்யும் அன்பின் ஆதிக்கம் அதிகமிருந்தால். அதேபோல காதல் சொல்லியதும் அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களை எண்ணி ரசித்து கொண்டிருந்தான். என்னை பிடிக்கும் அவளுக்கும் அது இவன் மனதுக்கும் தெரியும். ஆனால் ஏனோ ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறாளோ. அவள் மனம் அறிந்து கொள்ளாமல் இவன் மேற்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணம் பற்றி எப்படி சொல்வது அவளிடத்தில். முதலில் அவள் இவனை நம்ப வேண்டுமே.
விஷயத்தை சொன்னால் “அட போடா பைத்தியகாரா என்று சொல்லிவிட்டால்..?! உண்மையை சொல்லி அவள் காதலை பெறுவதை விட அவள் எனக்காக… என் ஒருவனுக்காக.. என் மனம் புரிந்து… என்னை ஏற்று கொள்ள வேண்டும். அவள் முழு காதலும் எனக்கு மட்டும் வேண்டும். இந்த ரவியை தான் அவள் நேசிக்க வேண்டும். அடைமொழி கொண்ட ரவியை அல்ல. அவளறிந்த அந்த சாதாரண மனிதன் ரவிக்காக மட்டும். அப்படி ஒரு காதல் தான் எனக்கு வேண்டும். வேறு எந்த காரணத்திற்க்காகவும் அவள் என் காதலை ஏற்று கொள்ள கூடாது”. அவனது கருத்தில் உறுதியாய் இருந்தான்.
“கண்டிப்பாக அவளே வருவாள். வந்து என் மீதான காதலை மூச்சு முட்ட கொடுப்பாள். நடந்தே தீரும் என் காதல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது”. அடித்து சொல்லியது அவனது காதல் கொண்ட மனது.
“எக்ஸ்குயுஸ் மீ சார்” கதவை தட்டியபடி தலையை நீட்டி அனுமதி கேட்டாள் ஆராதனா. அவன் மனம் கவர்ந்த தேவதை. கண்களை திறக்காமலே வந்தது அவள் தான் என்று குரலை வைத்தே அறிந்து கொண்டவன் அமர்ந்திருந்த நாற்காலியை அவள் புறமாக சுழற்றியவாறே
“யெஸ் கம் இன்” சொல்லியபடி கண்களை திறந்து விழி முழுதும் பெண்ணவளை நிரப்பி கொண்டான்.
ஒரு நொடி அவனது பார்வையில் தடுமாறியவள் எதையும் முகத்தில் காட்டாமல் புன்னகை முகமாக உள்ளே வந்தாள்.
“குட் மார்னிங் சார். இப்போ நீங்க பிரீயா இருந்தா நாம் ரெஸ்டாரண்ட் சம்மந்தமா சில டிடைல்ஸ் பேசலாமா..?”
” ஓ..பேச..லா..மே.. ஆனால் இப்போ இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு. என்னோட காபின்ல. எனக்காக கொஞ்சம் காத்திருக்க முடியுமா மிஸ்.ஆராதனா…??!”
கண்கள் வேறு பாஷை பேச இதழ்கள் வேறு சொன்னது. அவன் காதலை புரிந்து கொண்ட மங்கைக்கு இது என்ன புரியாமலா இருக்கும். மெதுவாக உதடுகளை கடித்து கொண்டாள் பெண். தன்னுள் எழும் அந்த பெயர் அறியா உணர்வை அடக்க வழி தேடியது உள்ளம். அவள் தவிப்பை அதிகப்படுத்தாமல் அவனே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்
“பிளீஸ் டேக் யுவர் சீட் மிஸ்”.
எதுவும் பேசாமல் அமைதியாக அவன் சுட்டி காட்டிய நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். கையில் இருந்த பையில்லில் அவள் கவனம் செலுத்துவது போல குனிந்திருந்தாலும் அவனது பார்வை அவளை கூறு போட்டதை பெண்ணவளால் உணர முடிந்தது. கன்னங்கள் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அந்த கள்வன் அதையும் தான் கண்டு கொண்டானே. மீண்டும் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அந்த ஏகாந்த நிலையை கலைத்தது போன்று குரல் எழுப்பியது மேசையில் இருந்த தொலைபேசி.
“ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…”
ரவி கண்ணசைக்கவும் அவனது செக்கரட்டி அதை எடுத்து காதில் வைத்து பேசலானான்.
சுற்றி இருந்தவர்கள் முகத்தில் ஆர்வம் குடி கொண்டது. செக்கரட்டியின் பேச்சை கூர்ந்து கவனிக்கலானார்கள். இவர்களது ஆர்வம் கண்டு ஆருவும் அதில் கவனம் செலுத்தினாள். அவர்கள் பேசிய அந்த குறுகிய வார்த்தைகள் கொண்டு அவளால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. வெறுமனே பார்த்து கொண்டு இருந்தாள்.
செக்கரட்டி போன் பேசி முடித்ததும் அவன் வெற்றி குறியை காண்பிக்கும் வகையில் மற்ற நான்கு விரல்களை உள்நோக்கி மடக்கி பெருவிரலை உயர்த்தி காட்டவும் அங்கிருந்தவரகள் “ஓ ஓ” வென ஆர்ப்பரித்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி கை குலுக்கி கொண்டனர்.
“ஓ. எதுவும் நல்ல செய்தி போல”. எல்லோரும் சந்தோஷத்தில் ஆர்பரிப்பதை பார்த்து புரிந்து கொண்டாள் ஆராதனா.
அனைவரையும் கை உயர்த்தி அமர சொன்னவன் தன் ஆறடி உயரத்திற்கும் முழுதாய் எழுந்து நிமிர்ந்து நின்றான் ரவி. முறுக்கேறிய புஜங்கள் உருண்டு திரண்டு அந்த மூடிய ஆடைக்குள்ளும் காட்சியளிக்க ஆணழகனாய் தெரிய அழகாய் புன்னகைத்தான். அனைவரையும் வீழ்த்த இந்த இவனது ஒற்றை புன்னகை போதுமே. அங்கியிருந்த ஆண்கள் உட்பட கொஞ்சம் என்ன அதிகமே அதில் கவர பட்டனர். ஆரதனாவின் மனமும் அவனில் மயங்கி போனதில் ஆச்சரியம் இல்லையே.
“காங்கிராட்ஸ் கைஸ். நூறு கோடி பெறுமானம் மிக்க இந்த ப்ரொஜெக்ட் வின் பண்ணுனதை விட உங்க எல்லோராட சந்தோஷத்தையும் பார்க்கும் போது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது உங்க எல்லோராட உழைப்பு. இந்த வெற்றிக்கு நீங்க எல்லோரும் தான் காரணம். ஆனால் இது மட்டும் போதாது. இன்னும் இன்னும். உங்களுக்குள்ள இருக்கிற எல்லா திறமையும் வெளியே கொண்டு வாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு என்னோட டீம் இதுக்கு மேலயும் டலேண்ட் ஆனவங்க. நான் உங்க எல்லோரையும் நம்புறேன். தாங்க் யு கைஸ்” எல்லோருக்கும் பொதுவாக வாழ்த்தினை சொன்னவன் கண்ணசைவில் ஆருவையும் வெளியே வருமாறு சொல்லி விட்டு வெளியேறினான்.
###########
மலாதியும் கீர்த்தனாவும் ஆசிரியரை சந்தித்து விட்டு வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது மாலதி
“ரொம்ப தாங்க்ஸ் அக்கா. டீச்சர் கூப்பிட்டவுடன் என்னமோ ஏதோன்னு பயந்து போய்ட்டேன். சாதாரண மீட்டிங் தான் அப்படின்னு பொண்ணு சொன்னப்போ கூட கொஞ்சம் உதறல் இருக்க தான் செய்து. அதான் உங்களை துணைக்கு கூப்பிட்டேன். நீங்க கூட இருந்தா ஒரு பலம் வந்த மாதிரி இருக்கும். அப்படி ஒரு மேஜிக் உங்ககிட்ட இருக்குக்கா”.
“ஹே ஹே.. என்ன இது.. மேஜிக் அப்டிலாம் ஒன்னும் இல்லை. எல்லாம் நாம நம்ம மேலே வைக்கிற நம்பிக்கை தான். எதிரிலேயே பதிலை வச்சிக்கிட்டு விடை தேடி வேற எல்லா இடத்திலும் தேடுவோம். அது மாதிரி தான். அடுத்த தடவை மீட்டிங்கிற்கு நீ தனியா தான் போற. சரியா!? பஸ்ட்டு உன் மேல நம்பிக்கை வை. வாழ்க்கையை நாம் தனியா தான் வாழனும். கடைசி வரை துணைக்கு யாரும் வர மாட்டாங்க. புரியுதா உனக்கு”.
“ஹ்ம்ம்… நீங்க சொல்லுறதும் சரி தான். நான் முயற்சி பண்ணுறேன் அக்கா”.
“ம்ம்ம்ம்.. தட்ஸ் மை கேள். ஓ கே. எனக்கு நேரமாச்சு. நான் இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும். நீ பஸ் பிடிச்சி தனியா போயிருவீயா..?!”
“என்னக்கா நீங்க. இவ்ளோ நேரம் நீங்க பேசுன பேச்சை கேட்டதுக்கு அப்புறம் நான் தனியா போய் சேர மாட்டேனா. அதெல்லாம் போயிருவேன். நீங்க முதல கிளம்புங்க”. சொல்லியபடி இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து சென்றனர்.
ரெஸ்டாரண்ட்ற்கு செல்லும் பேருந்தில் ஏறியவர் சரியாக பத்து மணி ஆக மூன்று நிமிடம் இருக்கும் பொழுது அவர் இறங்க வேண்டிய இடத்திற்கு சென்றடைந்தார்.
“ஓ.காட். த்ரீ மினிட்ஸ் ஒன்லி”. சொல்லியபடி அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கியவர் ரெஸ்டாரண்ட் நோக்கி நடையை எட்டி போட்டார். கொஞ்சம் தாமாதமானலும் அங்கே யாரும் இவரை கேள்வி கேட்க போவதில்லை. ஆனாலும் அவருக்கென்று ஒரு நேர்த்தி வேண்டும் என்று விரும்புபவர்.
கையில் கட்டியிருந்த தங்க நிற டைட்டான் வாட்ச்சில் நேரத்தை பார்த்தவாறு சாலையை கடந்தவர் அந்த ஓரமாய் வந்து கொண்டிருந்த காரை கவனிக்க தவறினார். இதோ அடுத்த சில அடிகளில் ரெஸ்டாரண்ட் வாசலை தொட்டு விடும் சமயம் ‘கீர்ச்’ சத்தத்துடன் அந்த கார் கீர்த்தனாவின் ஆடையை தொட்டு பார்த்தது.
“ஹைய்யோ! அம்மா…” அலரலுடன் அவர் மயங்கும் நிலைக்கு செல்லலானார்.
##########
அங்கே தன்னை பின் தொடர்ந்து வருமாறு சைகை செய்து விட்டு சென்றவன் பின், தன் பைலை எடுத்து கொண்டு சென்றாள் ஆராதனா. அவன் வேக எட்டுகளுக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. வேகமாக சென்றவன் சட்டென்று நிற்க்கவும் அவன் மீதே பட் டென்று மோதி கொண்டாள் பெண்.
“ஷ் ஷ்..”
கையிலிருந்த பேப்பர் எல்லாம் காலடியில் தஞ்சம் புகுந்தது. அது கூட பரவாயில்லை. முன் நெற்றி அவனது பாறை போன்ற பரந்த முதுகில் மோதியதில் நெற்றி ‘விர் விர்’ ரென்று வலித்தது.
‘தடி மாட்டு பைய. இப்படியா உடம்பை வளர்த்து வைப்பான். இது முதுகா இல்லை இரும்பா. சை…’ மனதில் சலித்து கொண்டு நிமிர்ந்தவள் முன் சிவப்பேரிய கண்களுடன் இவளையே பார்த்தபடி அழகாய் முறைத்து கொண்டிருந்தான்.
இடது புருவம் யுடேர்ன் போட்டு வில்லேந்திய நாண் போல வளைந்து இருக்க, மருதாணி வைத்ததும் சிவக்கும் கை போல அவனது கண்கள் சிவக்க, அவன் திரும்பியதில் அலை அலையான கேசம் ஒரு முறை துள்ளி அடங்க, அழுத்தமான கொஞ்சம் என்ன ரொம்பவே அம்சமாய் இருந்த அந்த ஸ்டராபெர்ரி உதடுகளும், இறுகிய தாடையும் அவனது கோபத்தை பறை சாற்றியது.
‘அட. கொக்கா மக்கா.. இப்போ கொஞ்ச முன்னாடி தான் அப்படி சிரிச்சு பேசுனான். இப்போ என்னடா..ன்..னா இப்படி பாசமா லுக் விடுறான். இது சரி இல்..லை..யே ஆரு..’ நினைத்தபடி முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டாள். மெதுவாக குனிந்து கீழே சிதறி கிடந்த பேப்பரை எடுத்துவிட்டு ஒரு முடிவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘ஹ்ம்ம்.. வருவது வரட்டும். எதற்கும் தயாராக இருப்போம்’.
மிரண்டு விழிக்கும் குழந்தை போல தோற்றத்தை மாற்றினாள் சடுதியில் கிடைத்த நேரத்தில். அவன் இந்த குழந்தை தனமான விளையாட்டை எதிர்பார்க்கவில்லை போலும். தன் காதலை சொல்லி அவள் இன்னும் பதில் கூறாமல் இருப்பது மட்டுமின்றி ஒன்றுமே நடக்காதது போல அங்கே மீட்டிங் ஹாலில் நடந்து கொண்டது அவனது கோபத்தை கிளறி விட்டிருந்தது. அதை கேட்கலாம் என்று நினைத்தால் இவள் என்னடா வென்றால் பச்சை பிள்ளையாட்டம் நடிக்கிறாளே..? ! அட ஆண்டவா.. மானசீகமாக தலையில் அடித்து கொண்டான்.
கோபமாக ஏதோ சொல்ல வந்தவன் சட்டென நிறுத்தி தலையை குலுக்கி விட்டு பின் “கம் டூ மை காபின்” சொல்லியவன் திரும்பி ஒரு எட்டு வைத்தவன் சட்டென இவள் புறம் திரும்பினான். இதையும் அவள் எதிர் பார்க்கவில்லை போலும். இம்முறை அவனது ஆளுமை மிகுந்த நெஞ்சில் தலையை முட்டி கொண்டாள். மூக்கு நுனி வரை கோபம் எட்டி பார்த்தது. கஷ்டப்பட்டு கோபத்தை கட்டுப்படுத்தினாள் பெண்.
‘இவன் என்ன நினைத்து கொண்டிருக்கிறான். வா என்பானாம் பின் சுவர் மாதிரி வழியிலே நிற்பானம். தடிமாடு. தடிமாடு. எத்தனை முறை தான் என் நெற்றியை பதம் பார்ப்பான். ஒரு வேளை நே..ற்..று.. நெற்றியில் தானே முத்தம் கொடுத்தான். அதற்கு தான் இப்போ சேர்த்து வச்சி கொடுக்கிறானோ. இது தான் முத்தத்தால் அடிக்கிறதோ.?! அட கிரதகா. உனக்கு வேற இடமே கிடைக்கலையா… இப்படி ஒரே இடத்தில் இடிக்கிறியே’. எல்லாம் மனத்திற்குள்ளாகவே சலித்து கொண்டாள்.
‘இப்போ என்ன.. ?’ என்பது போல பார்த்தாள் கொஞ்சம் காட்டமாகவே.
“நேரே என்னோட அறைக்கு வரணும். அங்க நின்னு இங்க நின்னு கதை அளந்துகிட்டு இருக்க கூடாது. புரியுதா..?!”
‘ஆமா. நான் இவன் பொண்டாட்டி பாரு. சொன்னதும் செய்றதுக்கு. ஆர்டர் போடுறாராம் துறை. போடா போடா..’ தூசி போல அவன் பேச்சை தட்டி விட்டு கொண்டது மனம்’.
அவள் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும், “என்ன நான் சொல்றது உனக்கு புரியுதா..? ஹ்ம்ம்..? “
ஏற்கனவே பக்கத்தில் தான் இருந்தான். இப்போதோ இன்னும் நெருக்கமாய் வந்தால் நான் என்னடா செய்வேன். மூச்சு முட்டுதடா. ஆண் மகனுக்கே உரிய வாசம் பெண்ணவள் இதயத்தை பதம் பார்க்க… அக்காதலனின் அருகாமை பாடாய் படுத்தியது. காதலில் கசிந்துருக துடித்த இதயத்தை காரி துப்பி அடக்கினாள். அவள் முகத்தில் வந்து போன மாற்றத்தை அக்கள்வனும் கண்டு கொண்டான். அவள் முகம் நோக்கி குனிந்தவன் கண்ணோடு கண்கள் கலக்க விட்டு மூக்கு நுனி லேசாக உரச… பெண்ணவள் நெஞ்சிலோ காதல் சரவெடி!
வியப்பில் விழிகள் விரிக்க அந்த அழகில் கவரப்பட்டவன் உள்ளம் கவிபாட விரும்பியது அவளிடத்தில். மீசை நுனி கீழ் மூக்கு பிரதேசத்தில் வருட சிலிர்த்து அடங்கியது ஆருவின் உடல். குழந்தையின் தவழல் போல மெது மெதுவாக காதல் தேவனிடம் அடைக்கலம் புக சென்றது ஆருவின் மனம். கண்கள் தானாக மூட அடுத்த செயலுக்காக ஏங்கியது அவ்வுள்ளம்.
அவளது அந்த காதல் சிந்தும் முகத்தை அருகில் கண்டவனது உள்ளம் ஆரவாரம் போட்டது. இத்தனை காதலையும் உள்ளத்தே வைத்து விட்டு ஒன்றுமே இல்லாதது போல இவள் நடந்து கொள்வது தான் என்ன..? முத்தமிட துடித்த இதழ்களை அடக்கியவன் குழந்தைதனம் கொண்ட அவளது முகத்தை ஒருநொடி ஆழ்ந்து பார்த்தவன் சட்டென்று பின்னோக்கி நகர்ந்து விட்டான்.
“ம்ம்ம்… சீக்கிரம் வந்து சேர்”. சொல்லியபடி வேகமாய் மறைந்தும் விட்டான்.
காதல் உலகில் சஞ்சரித்து கொண்டிருந்த ஆராதனாவால் இந்த திடீர் புறக்கணிப்பை ஏற்று கொள்ளமுடியவில்லை. ‘இவன் மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறான். நான் என்ன இவனுக்கு விளையாட்டு பொம்மையா..? வேண்டும் என்றால் பக்கத்தில் வருவானாம். இல்லை என்றால் தூர நிறுத்துவானாம். என் உணர்வுகளோடு விளையாட இவனுக்கு யார் அனுமதி கொடுத்தது.?’ வானுக்கும் மண்ணுக்கும் கோபம் பறந்து பறந்து சென்று பெண்ணவளை ஆக்கிரமித்தது.
‘இருடா… உனக்கு ஒரு நாள் இதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கொடுக்கிறேன்’. மனதினுள் கருவி கொண்டவள் பெரிய எட்டுகளுடன் அவனது அறை நோக்கி சென்றாள்.
###########
சரியான நேரத்திற்கு ரெஸ்டாரண்ட் செல்ல வேண்டும் என்ற அவசரத்துடன் வந்த கீர்த்தனாவை அந்த கார் பதம் பார்க்க நினைத்த தருணத்தில் டிரைவரின் சமார்த்தியத்தால் அவர் ஆடையை மட்டும் பதம் பார்த்தபடி கர்ஜித்த கொண்டு நின்றது அந்த பென்ஸ் கார். ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று உணர்ந்த கீர்த்தனாவும் பதட்டத்தில் “அய்யோ அம்மா” என்று அலறி இருந்தார். மயக்கம் கூட வருவது போல தான் இருந்தது.
ஒரு நொடி அவரது உலகமே ஆட்டம் கண்டது. படபடத்த உடலை அமைதியாக்கியபடி மூடிய கண்களை மெதுவாக திறந்து பார்த்தார்.
அங்கே அந்த காரின் கதவை திறந்தபடி வந்த அந்த மனிதரை பார்த்ததும் முகம் கோபத்தில் ஜொலிக்க… இதற்கு இந்த காரிலேயே அடிபட்டு செத்திருக்கலாம். யார் முகத்தில் முழிக்கவே கூடாது என்று எண்ணியிருந்தேனோ அவரது முகத்திலேயே விழிக்க வேண்டிய தன் விதியை எண்ணி நொந்து போனார் கீர்த்தனா.
அப்படி யார் மேல் இத்தனை கோபம். அதுவும் கனிவிற்கு மறுஉருவமாய் இருப்பவர் இவ்வளவு வெறுத்து பேசும் படி என்ன நடந்திருக்கும்..?!

Advertisement