Advertisement

ஐந்து வருடத்திற்கு பின்.
சென்னையில் மகேஷ் வர்மாவின் இல்லத்தில்..
அங்கு முதலாவது பிறந்தநாள் கொண்டாத்திற்கு தயாரான நிலையில் கலகலப்பாக ஆட்கள் நடமாடியபடி மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டது அவ் வீடு.
புகழின் இரண்டாவது மகன் ஸ்ரீவதணன். தான் இன்று முதலாவது பிறந்தநாளை அட்டகாசமாக கொண்டாடுகின்றார்..
புகழின் முதல் பெண் குழந்தை நான்கு வயதான ஸ்ரீநிலா. அத்தோடு மகேஷின் குழந்தைகள் ஆதர்ஷ் வர்மா , ஆதேஷ் வர்மா. அத்துடன் பொன்னியின் நான்கு வயதான ஆண்குழந்தை நிலவன். இவர்கள் தங்களது பிஞ்சிகால்களினால் அங்கும் இங்கும் நடந்து மகேஷின் பெண்ணரசி இரண்டே வயதான ஆதர்ஷிக்கா மற்றும் ஸ்ரீவதணனையும் சிரிப்பூட்டி உற்சாகபடுத்தியபடியே அங்கும் இங்கும் சுற்றித்திரிகின்றார்கள். பிள்ளை செல்வங்கள்..
ஆறுமாத சிசுவை சுமந்தபடியே அங்கும் இங்கும் வேலைகள் சரியாக நடைபெறுகின்றதா என்று பார்த்துக்கொண்டிருந்த வடிவை கைதாங்களாக அழைத்துவந்து அதட்டி ஒரு இடத்தில் அமரவைத்து அவனது மகன்களை அழைத்து அம்மாவை எங்கும் எழுந்து போகாமல் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு  அவனது பொறுப்பை கவனிக்கச்சென்றான் மகேஷ்வர்மா.
போலீஸ் உத்தியோகத்தர்கள் ஏனைய நண்பர்கள் புகழின் குடும்பம் வடிவின் அம்மா குடும்பம் பொன்னி நிரஞ்சன் என்று அனைத்து சொந்தங்களும் ஒன்று கூடி உரிய நேரத்தில் கேக்வெட்டி அங்கு பரிமாரப்படும் போது புகழ் ஏற்பாடு செய்த படி குழந்தைகள் ஆதரவற்றோர் ஆசிரமங்களில் கேக் பிரியாணி என்று உணவு வகைகள் வழங்கி தனது இளவரசனின் பிறந்தநாளை அனைவரது ஆசீயுடனும் கொண்டாடி மகிழ்ந்தான் புகழேந்தி. 
அன்று பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் அனைவரும் உணவருந்தி விட்டு உறங்கிவிட்டார்கள்.
ஐந்து வருடத்திற்கு  முன்.
குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த வடிவை இரண்டு மாதம் கழித்து அழைக்கசென்ற நேரம் அவனே பாட்டிமாவிடம் அம்மாவை எவ்வாறு யார்மூலம் இங்கிருந்தே கண்டுபிடித்திர்கள் என்று கேட்டான் மகேஷ்.
பெரியாத்தாவோ மகேஷின் நம்பிக்கைகுறியவன் ரமேஷை பற்றிச்சொன்னார்.
அவனை அவர்தான் படிக்கவைத்ததாகவும் அவனது படிப்பு முடிந்ததும் சிவசங்கரினால் மகேஷிற்கு ஆபத்து வர வாய்ப்பிருப்பதாகவும் அதனால் மகேஷுடன் இருந்து அவனிற்கு உதவி செய்து கொண்டு அவனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதற்குதான் அவனை அனுப்பிவைத்ததாகவும் அவனே ஒவ்வொரு நாளும் நடந்தவைகளை அவரிடம் தெரிவித்து ஆலோசனை கேட்டு அவரின் சொல்படி நடந்து மகேஷ் சிவசங்கர் வர்மாவையும் சுவேத்தாவையும் கைது செய்து அழைத்து செல்லும்போது சுவேத்தாவை சரியாக அடையாளம் கண்டு ஏதோ சந்தேகம் ஏற்படவும் தான் ரமேஷை சிவசங்கரின் பி ஏ மாலிக்கை கண்காணிக்க சொல்லி அதன் மூலம்தான் சுவிதாவை கண்டுபிடித்ததாக சொல்லிமுடித்தார் பெரியாத்தா.
மகேஷ் குடும்பம் சென்னை கிளம்பும்போது வடிவை அழைத்து அவர்கள் திருமணம் செய்து சென்ற அன்று கொடுத்த பரிசை எடுத்து வரச்சொல்லி அதை திறந்து அதில் இருந்த வைரம் , மாணிக்கம் . என்று இருந்த நவரத்திணங்களை காட்டி இது அவர்களது ஐந்து தலைமுறை பாரம்பரியம் இது அவர்கள்  குடும்பத்திற்கு வரும் ஒவ்வொரு மருமகளும் இதை கவனமாக பார்த்துக்கொண்டு அடுத்ததலைமுறைக்கு குடுத்து வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
அப்போது தான் சந்ததி விருத்தி குடும்பத்தில் ஒற்றுமை சுபீட்சம் அடைந்து காலம் காலமாக பாரம்பரியத்தோடு இவ்வூரில் மக்களின் ஆசியுடன் அவர்களையும் வாழவைத்து தாங்களும்  குடும்பத்துடன் சந்தோசமாக வாழமுடியும் என்று கூறி ஆசிவழங்கி அனுப்பிவைத்தார். பெரியாத்தா..
அதன்பின் மகேஷும் புகழும் மேலும் சில சிக்கலான கேஸ்களை சவாலாக எடுத்துக்கொண்டு  அதிலும் வெற்றியடைந்து உயர் அதிகாரிகளின் மனதிலும் மக்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்துவிட்டனர்.
அதன்பின் இதோ ஐந்து வருடம் கழித்து இரண்டு மாததிற்கு முன்புதான் புகழிற்கு கமிஷ்னராக பதவி உயர்வு கிடைத்தது அதற்கும் சேர்த்துதான் இன்று மகனின் பிறந்தநாளுடன் பதவி உயர்விற்கும் சேர்த்தே விருந்து நடந்துமுடிந்தது.
அடுத்தநாள் காலை எழுந்த வடிவு அவளது குட்டிஸ்ஸிற்கு பின் திரிந்து அவர்களை வாணியிடம் தயார் பண்ணச்சொல்லி ஒப்படைத்து ஆதர்ஷிக்கா வை குளித்து தயார் படுத்தி கீழே விட்டுவிட்டு அவளது ஆக பெரிய குழந்தையான பனைமரத்தை எழுப்பினாள் அவனது பஞ்சுமிட்டாய்..
அவனும் அடம் செய்து ஒருவழியாக எழுந்து வடிவின் நிலை கருதி லாவகமாக அவளை வளைத்து டேர்ட்டி கிஸ் கொடுத்து அவளிடம் இரண்டு அடியையும் வாங்கிக்கொண்டு குளிப்பதற்கு எழுந்து சென்றான் கலெக்டர்…
ஒருவழியாக அனைவரையும் ஏற்றிக்கொண்டு அந்த மினி பேருந்து மகாவலிபுரத்தை நோக்கி சென்றது..
அங்கு சென்றதும் மகேஷ் அவனது மூன்று குழந்தைகளையும் அவனது மாமியாரிடம் பொறுப்பாக கொடுத்துவிட்டு அவனது நான்காவது குழந்தையை சுமக்கும் முதல் குழந்தையை கை தாங்களாக ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறுகையில் வீட்டில் ஆரோக்கியமான முறையில் சத்தாக வாணி செய்து கொண்டுவந்த பலகாரத்தையும் ஆப்பிள் ஜூஸ் தண்ணீர் என்று ஒரு பையில் எடுத்துக்கொண்டு அவனது பஞ்சுமிட்டாயையும் அழைத்துச்சென்றான் மகேஷ்.
அங்கு சுற்றித்திரிந்து மதிய உணவை உண்டு நிழலில் ஒய்வெடுத்துவிட்டு மாலைநேரம் அனைவரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் அவர்களது இல்லத்தை நோக்கி சென்றனர்.
சென்றது மீண்டும் வாணி இரவு உணவை தயார் செய்துகொண்டு இரவு விமானத்திற்கு மதுரை செல்வதற்கு மகேஷ் ராஜதுரை குடும்பம் அவர்களுடன் ராசுக்குட்டி வேணியும் மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றனர்..
ஆம் ஆறு மதத்திற்கு முன்புதான் மகேஷ் விரும்பி மதுரைக்கு மாற்றளாகி மதுரை மாவாட்ட கலெக்டராக வந்திருக்கின்றான். 
மாற்றம் வந்ததும் மகேஷ் இருந்தவீட்டை தற்போது புகழுக்கு கொடுக்கவும் சும்மா வாங்க மனமின்றி அவனது சேமிப்பையும் பேங்லோன் போட்டும் அவ்வீட்டை மகேஷின் முறைப்பை பொறுட்படுத்தாது மிகவும் அகமகிழ்ந்து வாங்கிக்கொண்டான் புகழ். 
அவர்கள் சென்னை வந்தால் தங்குவதற்கு மகேஷின் ப்ளாட் இருப்பதனால்.
புகழின் தன்மானத்தை சீண்டாமல் அவனது விருப்பபடியே பணம் வாங்கிக்கொண்டு அவ்வீட்டை அனைவரின் விருப்படியே சீத்தாவின் பெயரில் பதிவு செய்து கொடுத்துவிட்டான் மகேஷ்.
மதுரை வந்து இறங்கி நேராக அனைவரும் பெரியாத்தாவின் வீட்டிற்கு  சென்றனர் அவர் வயது முதிர்வின் காரணமாக சோர்வாக இருந்தார். முன்பு போல் அவரால் அதிகமாக வேலைகளை செய்ய முடியவில்லை அதனால் மகேஷ் தனது மாமனார் ராஜதுரையை முன்னிறுத்தி பெரியாத்தாவின் ஆலோசனை படியே அனைத்து வேலைகளையும் செய்யவைத்துவிட்டு மதுரையில் அவனது ஆபிஸின் அருகிலேயே ஒரு மினி பங்களா வாங்கி தனது குடும்பத்துடன் வாழ்கின்றான் மகேஷ்.
இன்று சனிக்கிழமை நாளையும் லீவ் அதனால் பெரியாத்தாவை பார்த்துவிட்டு அடுத்தநாள் தனது மாமானாருடன் சேர்ந்து தோட்டம் மில் வயல் நிலம் என்று அவர்களது குடும்ப சொத்தை பார்வையிட்டபடி மாமானாருடன் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.
அவன் வந்ததும் சுவிதாவே மகனுக்கும் சம்மந்திக்கும் மோர் கொண்டுவந்து கொடுத்தார்.
அதை வாங்கி குடித்துவிட்டு அவனது பெண்ணரசியை மடியில் வைத்துக்கொண்டு  சிரித்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான் அந்த அன்புத்தந்தை.
நான்காவது தலைமுறையின் கொள்ளுபேரன்களுடன் கதை சொல்லி தனது தளர்வை போக்கி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார் பெரியாத்தா.
ஒருவாறு அவர்களது விடுமுறை மகிழ்ச்சியுடன் கழித்துவிட்டு சுவிதாவை பெரியாத்தாவிற்கு துணைக்கு வைத்துவிட்டு வாணியை மீண்டும் வடிவின் மூன்றாவது பிரசவம் முடியும் வரை வடிவையும் குழந்தகளையும் கவனிப்பதற்க்காக மதுரையில் அவர்களது வீட்டிற்கு அழைத்துசென்றான் மகேஷ்..
மதுரைக்கு மாற்றளாகி வந்ததும் ஒரு வாரமாக அனைத்தையும் பொறுமையாக பார்வையிட்டு தற்போது அவசியமாக செய்யவேண்டிய வேலைகளை குறித்துக்கொண்டு மாதம் ஒரு கிராமம் சென்று அவனே நேரில் அனைத்தையும் பார்வையிட்டு முடிக்காமல் இருந்த வேலைகள் ஆரம்பிக்காமல் இருந்த வேலைகள் என்று தரம் பிரித்து அதனை அதற்குரிய அதிகாரிகளிடம் பொறுப்பை கொடுத்து அவனின் மேற்பார்வையில் அனைத்து வேலைகளும் துரிதமாக நடந்தது.
இது போன்று ஒவ்வொரு மாதமும் மகேஷின் வருகைனால் அதிகாரி,பீதியடைவதும் மக்கள் இதன் மூலம் தங்கள் கிராமம் வளர்ச்சிடையும் என்ற சந்தோசத்திலும் இருந்தனர்.
அதுபோன்று அவர்களது எதிர்பார்பை நிறைவேற்றி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுக்கொண்டு மதுரையில் ராஜாவாக திகழ்ந்தான் கலெக்டர் மகேஷ்வர்மா..
சென்னையிலோ ஏசிபியாக இருந்து கமிஷ்னராக பதவி உயர்வின் பின் சென்னையையும் போலீஸ் அதிகாரிகளையும் மக்களுக்கும் வாங்கும் சம்பளத்திற்க்கும் உண்மையாக நேர்மையாக வேலை செய்யவைத்து சவலான கேஸை அவனது டீம் பார்த்து முடித்துக்கொள்வதும் மற்ற அதிகாரிகள் அவனின் கட்டளைபடி தீவிரமாக வேலை செய்யவைத்து பெரும்பாலான குற்றங்களை குறைத்துவிட்டான் சி பி புகழேந்தி..
திருமணப்பதிவு பற்றியும் டாக்டர் வில்ஷன் கேட்டதற்கு இனங்க அதை கவனதுடன் பார்த்துகொள்கின்றார்கள் நண்பர்கள் இருவரும்.
வெளிநாட்டில் வேலையில் இருந்து வேலைகாலம் முடிந்ததும் தாயகம் திரும்பி தனது அம்மா அப்பதாவையும் கெஞ்சி கூத்தாடி பின் புனிதாவும் நாச்சியும் பிள்ளையின் முன்னேற்றத்திற்கு தடைசொல்லாமல் முகிலன் அழைத்ததும் சென்னை வந்துவிட்டனர். 
சென்னை வந்ததும் தனது மகளை அடிகடி பார்த்துக்கொண்டு பேரனின் பிறந்தாள் விழாவில்  கழந்துகொண்ட மகிழ்வில்   தனது மகனின் குழந்தையையும் இதே போன்று பார்பதற்காக அசையாக மகனுடன் அவனது விருப்படி பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கு காத்திருக்கின்றார் புனிதா.
அவனோ ஒருத்தியை மனதில் நினைத்து அவளின் வருகைக்காக 32 வயதிலும் திருமணம் செய்யாமல் இன்னும் காத்திருக்கின்றான் முகிலன்.
  ஐந்து வருடத்திற்கு முன் பெரியாத்தாவும் சுவிதாவும் சிவசங்கர் சுவேத்தாவை பற்றி மகேஷிடம் சொல்லும் போது மகேஷ் அவனது தம்பி ராஜ் தங்கை ஷர்மி இருவருக்கும் அழைப்புவிடுத்து அவர்களையும் தந்தையின் செயலை கேட்கவைத்தான்.
 அதன்பின் அவனது தாயின் உடல் நலம் சரியானதும் அவர்களுக்கும் போதுமான கால அவகாசம் கொடுத்து முடிவைடுக்கச்சொன்னான் அவர்களும் இனி தந்தை தங்களுக்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு அண்ணனிடம் தஞ்சமானார்கள் இருவரும்.
தாய் வேறு என்று தெரிந்தபின் அவர்களிடம் எந்தவித வேறுபாடும் காட்டாமல் அவர்களின் விருப்பபடியே ராஜ் மலேசியா சென்று மிகுதி படிப்பை படித்து அங்கே ஒரு வேலையில் இருக்கின்றான்.
ஷர்மி அமெரிக்க சென்று முதுகலை படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கின்றாள். அவள் அங்கு செல்லும் முன் தந்தையின் பணத்திமிரில் யாரையும் மதிக்காமல் இருந்ததினால் நல்லதொரு படிப்பினையையும் பெற்றுக்கொண்டு தந்தையின் எந்தவிதமான சொத்தும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அமெரிக்க சென்றாள் ஷர்மி.
ஆனால் மகேஷோ அவனது தாத்தாவின் மற்றும் பெரியாத்தாவின் பூர்விக சொத்துகளை அனைத்தையும் மூன்றாக பிரித்து அவர்கள் இருவருக்கும்  அவர்களது பங்கை எழுதிவிட்டு தனது பங்கை தனது தாய் சுவிதாவின் பெயரில் எழுதிவிட்டு இதோ முன்புபோன்று தனது சுயசம்பாத்தியதில் தான் அவனது குடும்பத்தை வழிநடத்துகின்றான் மகேஷ் வர்மா
சுவேத்தா கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக மருந்துகளை செய்துகொண்டு அந்த மருந்து நெடியை சுவாசித்துக்கொண்டு வெளிகாற்றை அதிகமாக சுவாசிக்காமல் விட்டதால் சுவாசம் மற்றும் உணவு குழாயில் கட்டி வந்துவிட்டது அதனால் முதல்கட்டம் அதிக திண்ம உணவு உட்கொள்ள முடியாமல் அதன் அடுத்தபடி அறை திண்மம் பின்பு ஜூஸ் போன்ற திரவம் நீர் என்று தற்போது அக்கட்டி நுரையிரலின் அருகில் உணவுக்குழாய் முழுவதும் மூடி எந்தவிதமான ஆகாரமும் உண்ணவோ குடிக்கவோ முடியாமல் சிறையில் இருக்கும்  அரச மருத்துவ மனையில் சேலைன் மட்டும் நேரத்திற்கு ஏற்றபட்டு கவனிக்க யாருமற்று உயிர் பிரிந்து நல்லது நடக்காமல் அறை உயிரில் மிகுந்த  சிரமத்தை அனுபவித்துக்கொண்டு அவரின் பாவப்பணம் எதுவும் உதவாமல் காலனின் பிடியில் சுற்றம் பெத்தபிள்ளைகள் எவரது உதவியும் இல்லாமல் இறுதி நாளை வெகுவிரைவில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றார் த கிரேட் சுவேத்தா..
அதே போன்று சிறைசாலையில் கடூழியதண்டனை வழங்கப்பட்டதனால் தினமும் அறை வயிற்று உணவு உண்டு கடும் சுமையான வேலைகளை செய்து வரும்போது. சிறையின் வெளி முற்றத்தில் இடஞ்சலாக இருந்த மரம் ஒன்றினை ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று வெட்டிக்கொண்டிருந்தது அதில் சிவசங்கரும் ஒருவராக இருந்தார் அப்போது மரக்கிளை ஒன்று முறிந்து அவரின் மீது விழுந்துவிட்டது அதில் அதிக காயமடைந்து ரெத்தம் அதிகமாக வெளியேறி தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் கடந்தும் அவரது காலில் இருந்த புண் குணமாகாமல் உள்ளே புறையாகி அதிக வேதனையை கொடுத்தது அதனால் மீண்டும் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றபோது அவருக்கு சக்கரை நோய் அதி தீவிரம் அடைந்து விட்டதனால் இப் புண் குணமாக வாய்ப்பில்லை என்று புண் இருந்த பகுதியோடு காலை அகற்றிவிட்டனர். அதன்பின் அரசினால் பரிந்துரை செய்து ஒரு ஆசிரமத்தில் அவரை சேர்த்து சக்கரநாற்க்காலி கொடுக்கப்பட்டது.
தனது ஒவ்வொரு தேவைக்கும் வேறு ஒருவரை எதிர் பார்த்து நோயில் விழுந்தபடியால் வயது முதிர்வினாலும்  நன்றாக சோர்ந்து மிகுந்த துன்பம் அனுபவித்து வருகின்றார் அவரின் பாவாச்செயலுக்கு இது ஆரம்ப கட்ட தண்டனை மட்டுமே அவர் இன்னும் அனுபவிக்கவேண்டியதை சிறப்பாக அனுபவித்தபின்னே அவரின் இந்த பிறவிப்பலனை அடைந்து காலத்தை முடித்துக்கொள்வார்.                               த கிரேட் சிவசங்கர் வர்மா..
கனகாவோ ஐந்தாண்டு கடந்தும் இன்னும் அவரின் பணத்திமிரில் இருந்து இறங்கி வராமல் இருக்கின்றதால் நிரஞ்சனும் கனகாவோடு இன்னும் சகஜமாகாமல் அவன் தனது தந்தையுடன் நன்கு பேசி உறவை வளர்த்துக்கொள்கின்றான்.
அவனது கடமை தவறாமல் அவனுடன் வேலை செய்யும் நன்கு தெரிந்த பாரம்பரியமான குடும்பத்தில் ஆறு மாததிற்கு முன்புதான் அவனது தந்தையுடன் இணைந்து விமர்சயாக அவனது தங்கை லீலாவிற்கு திருமணம் செய்து வைத்தான் நிரஞ்சன்..
தற்போது ராஜேஷ் அவனது வேலையின் காரணமாக சிங்கப்பூரில் பணிபுரிகின்றான்.
ஐந்து ஆண்டு சிறை தண்டனை முடிந்து உடல் வளைத்து கூலி வேலை செய்து,குடும்பத்தை காப்பாத்துகின்றார்கள் சுவேத்தாவின் ரவ்டீஸ்..
இரண்டு மாதமாக ஓடி அலைந்த கேஸ் இன்று தான்  ஒருவழியாக அவன் பார்க்க சென்றதன் பின்  கேஸை முடித்து நள்ளிரவில் வீடு வந்தான் புகழ்.
மதி எழுந்து கதவை திறந்து அவன் குளித்து வந்ததும் உணவை கொடுத்தாள் அதை உண்டவன் சாப்பிட்டு முடிந்ததும் அறைக்குள் சென்று அவர்களுடன் படுக்கும் மகனை நெற்றி முத்தம் வைத்து அதற்கு மதியிடம் இரண்டு அடிகளையும் வாங்கி பின் படுத்துவிட்டான் புகழ்.
படுத்து உடல் அலுப்பில்,அவரே நன்கு உறங்கி எழுந்த போது நேரம் காலை பத்துமணி எழுந்து குளித்து சாப்பிட்டு மதி அறைக்குள் வந்ததும்.
அவளை இறுக்கி அணைத்து உம்மாகொடுத்துவிட்டு ” இந்த மன நிம்மதிக்கும் என்னோட வெற்றிக்கும் என்னை திருமணம் செய்து அனைத்து விதத்திலும்  உறுதுணையாக இருந்து பெண் ஆண் என்று  இரண்டு  பிள்ளை செல்வங்களை பெற்று தந்து பதவி உயர்வு வாங்கி தந்து  நீ கிடைப்பியோனு யோசனையாக இருந்த நேரம் நானே எதிர் பார்க்காத போது  மிகுந்த போராட்டத்திற்கு பின்பு  என்னருகில் நீ இருந்ததனால் மட்டுமே சாத்தியமானது பொம்மு.” 
“நீயும் பிள்ளைகளும் மாலை தயாராக இருங்க வடிவு வீட்டுக்கு போகனும்”  என்று சொல்லிவிட்டு அவளை அணைத்து நெற்றி உதடு கன்னம் என்று முத்தம் வைத்து பின் அவனது கடமையை பார்க்க சென்றுவிட்டான் சி பி புகழேந்தி..
  ஒரு அரச விடுமுறையில் மகேஷின் குடும்பம் வேணி குடும்பம் புகழின் குடும்பம் மட்டும் இணைந்து சிறியளவில் வடிவிற்கு வளையல் போட்டு வளைகாப்பு கொண்டாடினார்கள்.
இந்தமுறை வடிவை தாயின் வீட்டிற்கு அனுப்பாமல் வழமைபோன்று வாணி அவர்களுடன் இருந்தே வடிவையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டார். 
அன்று இரவு  உணவு உண்டுவிட்டு அவனது அறைக்கு வந்தான் மகேஷ் அவனது ஆண்குழந்தைகள் வாணியுடனும் பெண்ணரசி சுவிதாவிடம் உறங்கிவிட்டார்கள் ஒன்பது மாதம் என்பதால் வடிவை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டான் மகேஷ்.
அவனது மனையாளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு ” ஏன்டி அம்மு முதல் ஆண் குழந்தைகள் அப்புறம் நான் உன்னமாதிரி ஒரு குட்டி பஞ்சுமிட்டாய் பெத்துதான்னு கேட்டேன் அதுபோலவே இளவரசியை  பெத்து தந்துட்ட நீ இப்போ இந்த குழந்தை என்னவா இருக்கும்டி பஞ்சு.”
” ஏன்யா இது என்ன புள்ளையா  இருந்த என்னவாம்??..  நான்தானே வலிதாங்கி பெத்தெடுக்கப்போறேன். இதுவும் ஆண் ஒண்ணும் பெண் ஒண்ணுமா இருந்துட்டு போகட்டுமே அதனால இப்ப என்ன நட்டம் வந்திச்சி ஐந்து பிள்ளைகளையும் நானே வளர்த்து ஆளாக்குவேன் மாமா ” என்று அவனது பேச்சிக்கு  முற்றுப்புள்ளி வைத்துவிட்டு களைப்பில் தூங்க முயற்றாள் அவளால் முயலமட்டுமே முடிந்தது.
ஏன் என்றால்??. மகேஷ் வடிவை அவனது நெஞ்சில் சாய்த்துக்கொண்டு ” பஞ்சு உன்ன எப்ப அந்த தோப்புல பார்த்து ஒரு கட்டாய சூழ்நிலையில் திருமணம் முடித்து இப்புடி ஒரு பூந்தோட்டத்தோடு அனைவரும் இருந்தும் இல்லாமல் தனிமையில் இருந்த நான் இப்புடி உறவுகள் பிள்ளைகள் நீ எல்லாரும் என்னை சுத்தி இருப்பதற்கு நீ மட்டும் தான்டி அழகி காரணம்.” 
“உறவின் புறக்கனிப்பு தந்தையின் இந்த கொடும் செயல் தனிமை இதுல  இருந்து நான் இப்போ விடுபட்டு இப்புடி சந்தோசமாக ஒரு நல்ல மனிதன் கணவன் அன்பு தந்தை இப்புடி பல படிகளில் உயர்ந்து அம்மாவோட அன்பும் கிடைத்து அனுபவித்த மன கஷ்டங்கள் எல்லாம் இப்போது காணமல் போய் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்னா நான் அதுக்கு எனது இந்த பஞ்சுமிட்டாய் என்னருகில் நீ இருந்ததனால் மட்டுமே சாத்தியமானதுடி.” என்று அவன் அவளிடம் பேசிக்கொண்டிருக்க அவளோ ம் ம் கொட்டிக்கொண்டு அவனது மார்பை மஞ்சமாக்கி உறங்க ஆயத்தமானாள். பனைமரத்தின் பஞ்சுமிட்டாய்..
சரி மகேஷ் வர்மா  குழந்தை பிறக்கும் வரையில் என்ன குழந்தையாக இருக்கும் என்று தீவிரமாக சிந்திக்கட்டும் நாம் இவர்களிடம் இருந்து விடைபெறுவோம்..
            *****சுபம்*****

Advertisement