Advertisement

அத்தியாயம் ஒன்பது.
“மதுரையில் அந்த பழமை வாய்ந்த கிராமத்தில் அனைவரது முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு.”
“ஒவ்வொருவரும் தங்களது வீட்டு பிளைகளுக்கு கல்யாணம் செய்வது போன்று. மிகவும் மகிழ்ந்து ஆளுக்கு ஒரு வேலையை பிரித்து செய்து கொண்டிருந்தனர்.”
“ஊரில் உள்ள அனைவரையும் ரெண்டு பிரிவாக பிரித்து. ஒரு பகுதி பெரியாத்தா வீட்டிலும். ஒரு பகுதியினர் ராஜதுரை வீட்டிலும் கல்யாண வேலைகளை அனைத்தையும் ஆர்வத்துடன் செய்தனர்.”
“ராஜதுரை கலைவாணி இருவரும் கல்யாணப்பட்டு  மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டி சட்டை மோதிரம்  ஏனைய நகை மற்றைய பிள்ளைகளுக்கும் அவர்கள் இருவருக்கும் புதுத்துணிகள் எடுப்பதற்கும் மதுரை பஜார் சென்றிருந்தனர்..”
“பெரியாத்தாவும் அவரது பங்கிற்க்கு மணப்பெண் சீர் மணமகன் பட்டு எடுப்பதற்க்கும் அவரது பரம்பரை  நகை புதுப்பிப்பதற்கும் பணம் கொடுத்து . அவரிடம் வேலை செய்வோர் அனைவருக்கும் புடவை வேட்டி சட்டை எடுத்து கொடுப்பதற்கு போதியளவு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்…பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி அவரது மனைவி நேசமணி இருவரையும்.”
“அவர்களும். ஊரில் கடும் ஏழை குடிமக்களிற்க்கும் வயது முதிர்ந்தோர்களிற்க்கும். புது துணி எடுத்து தருவது அவர்களின் வழமையான ஒன்று அதன்படி இந்த கல்யாணத்திற்கு அவர்கள் எடுப்பதற்க்கும் மதுரை பஜார் சென்றனர்..”
பெரியாத்தா—- ஏன்டி வனஜா உன்ற பொண்ணு முழுகாம இருந்தாலே இது எத்தினையாவது மாசம்.
வனஜா—- அது ஆத்தா இது எட்டாவது மாசம் ஆத்தா தலைபிரசவம் வளையல் பூட்டித்தான் கூட்டிவரணும்..
“சரிடியம்மா இந்த கல்யாணம் முடிய என்னை வந்து பாரு.”
“இவ்வாறு அனைவருக்கும் கட்டாயம் வேண்டியளவு உதவிகள் செய்வார் பெரியாத்தா. அவரது வயதிற்கு மட்டும் அல்லாமல் குணத்திற்க்கு அனைவரும் அவரை தங்களது சொந்த அன்னை போன்றே உரிமையுடன் பழகுவர்.”
“அவரைப்போன்று அவரது பேரனும் இந்த சொத்தை காப்பாற்றி இந்த ஏழை மக்களை கவனித்துக்கொள்வான் என்று முழு நம்பிக்கை கொண்டு அவரது அனைத்து சொத்தையும் அவனது பெயரில் எழுதிவிட்டார்..”
*************
ராஜதுரை—- வாணி அக்காக்கு இன்னும் கல்யாண விசயத்தை சொல்லலயே..
வாணி—-  சரிங்க இப்ப சொல்லுங்க.
ராஜதுரை—–  ஹலோ அக்கா
கனகா— சொல்லுடா???… ராஜா என்ன விஷயம் போனுல கூப்புட்டுருக்க.
“நம்ம வடிவுக்கு உடனே நாளைக்கு கல்யாணம் முடிவாகிருக்கு அக்கா.”
“ஓ!.. அப்புடியா??? இப்போ என்கிட்ட அம்புட்டு பணம்மெல்லாம் இல்லையேடா தம்பி.”
“ஐயோ அக்கா பணவிஷயம் இல்ல நீயும் மாமா புள்ளைங்க எல்லாரும் வடிவு கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடனும்.”
“மாமா இருந்தா குடு அவருக்கு நான் சொல்லுறேன்.”
கனகா—– ஒ என்ன உடனடி அவசரக் கல்யாணமோ எனக்கு தெரியாது அவர் ஊர்ல இல்ல நாங்க வர முடிஞ்சா வருவோம்.
ராஜதுரை—- சரிக்கா கட்டாயம் வரப்பாரு. காலை 6.30 முகூர்த்தம் நாளைக்கு.
“ம் சரிடா” ராஜா.
**********
பெரியாத்தா—- நாளைக்கு கல்யாணம் வச்சிக்கிட்டு இப்ப எங்க ராசா புறப்பட்டிங்க???….
மகேஷ்—- அதுவந்துங்க பாட்டிமா இவங்க நாளைக்கு சென்னை போயிடுவாங்க. எனக்கும் நேரம் இருக்காது. அதுதான் இன்னைக்கு நம்ம ஊரு வயல் தோப்பு எல்லாம் சுத்திப்பார்த்துட்டு வாறோமே????….
“சரிப்பு தாராளமாக நம்ம ஊரை சுத்தி பார்க்கட்டும். இருட்டுறதுக்கு முன்ன வீட்டுக்கு வந்துபுடுங்கப்பு காத்து கருப்பு அடிச்சுப்புடாம. சரியா ராசா.”
“சரி பாட்டிமா”
பாஸ்கர் பாடிகார்ட்—– சார் உண்மையை சொல்லுங்க அந்த பொண்ண பார்க்கத்தானே வெளிய வந்திங்க???….
மகேஷ்—- அப்புடியும் சொல்லலாம் அதோடு உங்களுக்கும் ஊரை சுத்திக்காட்டின மாதிரியும் இருக்குமே..
பாடி கார்ட்ஸ்2—– சார் வடிவு சிஸ்டர் பக்கத்துல நின்ன தம்பி அங்க நிக்குறானே. அவன்கிட்ட சொன்னா சிஸ்டர கூப்பிட்டு வருவான் தானே..
“யா தம்பி இங்கவாப்பா….. “
ராசுக்குட்டி—– வட் சார்????….
மகேஷ்—- எனக்கு ஒரு உதவி பண்ணுறியா????…
“டெல் மி சார்… “
“உங்கவடிவு அக்காவ யாருக்கும் தெரியாம பக்கத்து தோப்புக்கு நான் வரச்சொன்னேன்னு வரச்சொல்லுறியா????… கொஞ்சம் பேசணும்.”
“ம் டன் சார் நீங்க நேர்மையா பஞ்சாயத்துல கேட்டு அவங்க முடியாதுன்னு சொன்னதால மட்டும் உங்க நேர்மைக்காக நான் இந்த ஹெல்ப் பண்ணுறேன். ஒகே. நீங்க நம்பிகையா போங்க வடிவு அக்கா வரும்.”
“வடிவு அவளது அறையில் தற்போது சோகமாக அமர்ந்திருக்கின்றாள்.”
வடிவு— டி பொன்னி நான் இப்புடியெல்லாம் நடக்கும்ன்னு நினைத்துகூட பார்த்தது இல்லைடி. உடனே பேசி நாளைக்கே கல்யாணம். அந்த பனமரத்த பத்தி எதுவும் எனக்குத் தெரியாது.
“அதுமட்டும் இல்லடி பொன்னி உன்னை ராசுகுட்டிய இந்த ஊர் எல்லாம் விட்டு நான் எப்புடி அங்க புது ஊர்ல இருப்பேன்.”
பொன்னி—பொண்ணா பிறந்த நாம என்னடி பண்ணமுடியும். இது காலம் காலமா நடக்குறதுதானே.
“பிறந்த ஊர்லயே கல்யாணம் கட்டி புகுந்த வீட்டுல வாழுறதும் தாய்வீட்டுல சீராடுறதெல்லாம் ஒரு வரம் டி வடிவு.”
” கலெக்டர் சார பார்த்தா நல்லவராட்டம்தான் தெரியுது. நீ கொஞ்சம் பொறுமையா இருந்தா சந்தோசமா இருப்படி வடிவு விடிஞ்சா கல்யாணம் நாங்க எல்லாம் முன்னமாதிரி உன்னோட நினைத்ததும் பேசமுடியாது. ”              
“டி வடிவுனு உரிமையா சொல்லமுடியாது. கலெக்டரம்மான்னு தான். இனி உன்னை  சொல்லனும்.”
வடிவு—- அடிபோடி எனக்கு எப்புடி நீங்க இல்லாமல் இருப்பேனோன்னு இருக்கேன். நீ வேற வெறுப்பு ஏத்தாதடி..
“அங்க போனால் பேச்சுத்துணைக்கு கூட ஆள் இல்லடி இந்த மஞ்சப்பை படம் பார்த்ததானே. அதுமாதிரித்தான் மெட்ராஸ் ல ஆளுங்க யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கவோ உதவி செய்துக்கவோ மாட்டாங்கலாம். டி பொன்னி எனக்குத்தான் சாப்பாடும் பேச்சும் இது ரெண்டும் இல்லாமல்  இருக்கமுடியாதே. தனியாக என்ன பண்ணப்போறனோ தெரியல..”
பொன்னி—- பக்கத்து ஆளுங்க பேசாட்டி உனக்கு என்ன வேலை  பார்க்குற ஆளுங்க இருப்பாங்க தானே அவங்களோட பேசேன்டி நீ.
ராசுகுட்டி—–   வடிவக்கா வா பக்கத்து தோப்புல காவலுக்கு யாரும் இல்லயாம் அந்த மாங்காய் எம்புட்டு ருசியா இருக்கும் அந்த ஆள் இருக்கும் போது நம்மல ஒண்ணு கூட பறிக்கவிட்டது இல்லயே வா இன்னைக்கு பறிச்சுட்டு வரலாம்.
பொன்னி— டேய் ராசுகுட்டி கலை அத்தைக்கு தெரிஞ்சுது என்னபண்ணுமோ தெரியல வேண்டாம் டி வடிவு போகாத நேத்து தோப்புக்கு போனதும் போதும் நீ பட்ட கஷ்டமும் போதும் நாளைக்கு கல்யாணம் இன்னைகும் போய் எதுவும் ஒறண்டைய இலுத்துட்டு வராத அம்புட்டுத்தான் சொல்லுவேன்..
வடிவு—  அம்மா வந்தா நான் தூங்குறேன்னு சொல்லி நீதான் சமாளிக்கனும் டி பொன்னி இனி இது மாதிரி அந்த ஆள் இல்லாமல் இருக்கும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு அமையாது நாங்க போயிட்டு தாமதிக்காம வந்துருவோம். வாடா ராசுகுட்டி..
மாந்தோப்பு…..
ராசுகுட்டி—- வடிவு அக்கா நீ போய் பறிச்சுட்டு கெதியா வா  இங்க அந்த ஆள் வந்தா நான் சொல்லுவேன் நீ ஓடி வந்துடு சரியா???…
” சரிடா….”
மகேஷ்—–  ஹாய்..
வடிவு—– காய் இன்னும் பறிக்கல கொஞ்சம் பொறுங்க ஆமா யாரு????….  நீங்க.
“வடிவு யாரிடமோ மாட்டிக்கொண்டோம் என்று ஸ்லோ மோசனில் மெதுவாக திரும்பிபார்த்தாள்..  “
” அட பனமரம் நீ எங்க??…  இந்த பக்கம். உன்னோட வளர்த்திக்கு சும்மா கையை மேல தூக்கினாலே மாங்காய் பறிக்கலாமே…”
மகேஷ்— ஐயோ மாங்காய் இல்லங்க ஹாய் னு ஆங்கிலத்தில் வணக்கம்ன்னு சொன்னேன் பியூட்டி.
வடிவு—- இங்க பாருங்க எனக்கு எங்க அம்மா வடிவுனு பேர் வாச்சிருக்காங்க அதவிட்டு இப்புடி பூட்டி சாவின்னு சொல்லாதீங்க கேக்க நல்லாவா இருக்கு..
மகேஷ்—- நான் மகேஷ்வர்மா சென்னை மாவட்டக்கலெக்டர்.
“அதுதான் தெரியுமே ஊரே பெருமையா பேசுதே மேல சொல்லுங்க???…. “
“எனக்கு உங்களோட பேச நேரமில்ல சீக்கிரம் என்னன்னு சொல்லுங்க யாரும் பார்த்தா அம்மாகிட்ட சொல்லிருவாங்க எனக்கு பயமா இருக்கு. “
” சொல்ல எதுவும் இல்லன்னா இப்ப நீங்க போங்க நானும் இந்த ஒரு மாங்காய பறிச்சுட்டு உடனே போயிடுவேன்..””
மகேஷ்—- உன்னை எனக்கு புடிச்சுருக்கு டி அழகி..
“எனக்கு அம்மாவா பாசம் காட்டுவியா???? நீ …. “
“அவன் அவ்வாறு கேட்டதும் வடிவு அழ ஆரம்பித்து விட்டால்..”
***************
ஹலோ —— நீங்க நினைத்தமாதிரி கலெக்டர் சார்க்கு அந்த ஊர்லயே நாளைக்கு மெரேஜ் நடக்கப்போகுது மேடம்….
“ஒ அந்த படிக்காத பட்டிகாடா த கிரேட் கலெக்டர்  பொண்டாட்டி அவனுக்கு இப்புடித்தான் நல்லா வேணும்… “
“இப்போதான் ஐ ம் ஹாப்பி….”
அடுத்த நாள் அதிகாலை….
வடிவின் இல்லம்..
கலைவாணி—–  வடிவு எழும்பு புள்ள இப்பவே நேரம் மூன்று மணியாச்சி உன்ன ரெடியாக்கிட்டுத்தான் நாங்க ரெடியாகனும்..
வடிவு—–  ம்மா என்ன நீ புடவை கட்டி பவ்டர் பூசி பொட்டு பூ வைக்க ஏன்மா இப்புட்டு நேரத்தோட எழுப்புற இப்ப எழும்பினா எனக்கு பசிக்கும். நீ வேற இரவு வெறும் பத்து இட்டிலியும் பாலும் தான் தந்த கேசரிய கண்ணுலயும் காட்டல. போம்மா உன்னோட கோவமா தூங்குறேன். நான்.
வாணி—-   அடியே கூறுகெட்டவளே மெதுவா பேசு நீ மட்டும்தான் இரவு தூங்கின. நாங்க யாரும் தூங்கல  எல்லாரும் வெளியதான் வேலை செய்றாங்க நீ பேசுறது கேக்கும்டி..
“அப்புறம் என்னடா இந்த வடிவு புள்ள அதோட கல்யாணத்து அன்று கூட சாப்பாடுனு அலையுதுனு நினைக்கப்போறாங்க…”
“நீ  கல்யாணத்துக்கு கருப்பன் குலசாமி கோவில் போறதுக்குமுதல் மாப்பிள்ளை வீட்டுல இருந்து நலங்கு வைக்க வருவாங்க அதனால குளிச்சு ரெடியாகனும்..”
“என்னம்மா இந்த குளிர்ல நான் எத்தினை தடவை குளிக்குறதாம்..”
வாணி—- வடிவு அம்மா சொல்லுறத கேளுடா நீ மெட்ராஸ் போனதும் இங்கமாதிரி எதுவும் துடுக்குத்தனமா எதுவும் செய்யக்கூடாது சரியா???…
“மாப்பிள்ளை பாவம் எல்லாரும் இருந்தும் தனியாளா இருந்தவரு  இனி நீதான் அவர அன்பா பார்த்துக்கணும்.. “
“பொறுப்பான புள்ளையா இருக்கனும்.. அவர தொல்லை பண்ணக்கூடாது அவரு வேலை அப்புடி ஊர் பிரச்சினை அதிகம் அவருக்கு நீ ஆறுதல் குடுக்கனுமே தவிற கஷ்டப்படுத்தக்கூடாது..”
“வீட்டுக்கு வேலை முடிஞ்சு கலைச்சி போய் அவரு வந்தா நீ உன்னோட பிரச்சினைகள் எதுவும் உடனே அவர்ட்ட சொல்லாம நீ சிரிச்சமுகத்தோட அவர கவனிக்கனும். வாய்க்கு ருசியா சமைச்சு போடு . “
“மொத்ததுல நீயும் சந்தோசமா இருக்கனும் அவரையும் உன்னை ஏன்டா கட்டினோம்ன்னு நினைக்காம பெருமையா நினைத்து உன்னோட நீண்ட காலம் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்து வாழனும் புரிஞ்சுதா வடிவுமா சரியாடா???..”
வடிவு—- நீ இம்புட்டு சொன்னதானே நான் அவளத்தையும் கேட்டேன் எல்லாமே தெளிவா புரிஞ்சது இன்னைக்கு நீ என்னை திட்டக்கூடாது மா.
“புள்ள பசியோட இருக்கேன் சாப்புடாட்டி அழகாவே இருக்கமாட்டேன் . போம்மா போய் ஏலக்காய் தட்டிப்போட்டு ஸ்றாங்கா டீ  போட்டு பலகாரம்   எடுத்துட்டு வாம்மா அச்சாம்மால்ல.. “
வாணி —– ஐயோ இப்புடி பொழைக்கத்தெரியாதவளா இருக்காலே எம்புட்டுப்பெரிய விஷயம் சொல்லுறேன் அத காதுகுடுத்து கேக்கமாட்டேங்குறாளே அவ சொன்னதத்தான் ஒத்தப்புடியா நிக்குறா..
“எப்புடிதான் சூதானமா மெட்ராஸ்ல வாழப்போறாளோ இவளோட கவலை தான் எனக்கு எப்பவுமே அதிகம். வேணி அத்தாச்சி.. என் வளர்ப்பு தப்பா போயிடுமோனு பயமா இருக்கு.. எந்த நேரத்துல இவள பெத்தேனோ நான்.”
வேணி பொன்னியின் அம்மா—–   “ஏன் கலை புள்ளைய வையுற வடிவு முகம் பாரு சுருங்கிப்போச்சு புள்ள இன்னைக்குதான் உன்கிட்ட உரிமையா கேப்பா இனி கலெக்டர் தம்பிக்கு எப்ப லீவ் கிடைச்சு வடிவு தாய் வீடு வந்து சீராடுமோ யார் கண்டா..”
“இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து வடிவ சந்தோசமா வச்சிருக்கனும்.. கலை அப்போதான் புள்ள வாழ்க்கை முழுதும் செழிப்பா சந்தோசமா இருக்கும்..”
“வடிவுக்கு பொறுப்பு இல்லாமல் இல்ல இனி ஒரு குழந்தை வந்து வடிவு அம்மா ஆகிட்டுன்னா அதோட வடிவுக்கு பொறுப்பு தானா வந்துரும்.. போ கலை நான் வடிவ எழுப்பி குளிக்கவைக்குறேன். குளிச்சா இன்னும் புள்ளைக்கு அதிகமா பசிக்கும்..  வடிவு வரும்போது சுடச்சுட சாப்புடுறமாதிரி கேட்டதெல்லாம் எடுத்துட்டு வா கலை….”
வாணி— -“ஹுக்கும்  என்வோ போங்க அத்தாச்சி சும்மாவே ஆடுவா இதுல நீங்க அவுக அப்பா எல்லாம் குடுக்குற செல்லத்துல கொம்பு சீவி விட்டமாதிரி இன்னும் ஆடப்போறா நீங்க வேணும்ன்னா பாருங்க…”
“ஐயோ என்னது நமக்கு குட்டி பாப்பா பொறக்குமா????…. எப்புடி??…  “
தொடரும்…..

Advertisement