Advertisement

அத்தியாயம் எட்டு.
சென்னையில் புகழேந்தியின் இல்லம்…
புகழின் அப்பா கண்ணன் ….. சீத்தா.
“என்னங்க”??..
“என்னவாம்???… ஏன் புகழ் கூப்பிட்டான்????….”
“எனக்கும் எதுவும் தெரியாதுங்க ஏதோ முக்கியமான விசயம் பேசணும் அப்பாவ வரச்சொல்லுங்க அதுவரை நான் தூங்குறேன்.”
“வந்ததும் எழுப்பிவிடுங்க பேசணும்ன்னு சொல்லிட்டு புள்ள சாப்புடவும் இல்ல காபி மட்டும் குடிச்சிட்டு படுக்கப்போயிட்டான்ங்க…”
“என்க்கிட்டயும் என்ன விசயம்ன்னு எதுவும் சொல்லிக்கலை.”
“அவனே நேரம் ஒதுக்கி பேசணும்ன்னு  சொல்லுறான் இதுதான் சரியான சந்தர்ப்பம். விட்டுடாம அவன் கல்யாணம் பற்றிய பேச்ச இன்னைக்கே நீங்க பேசிருங்க சரியா???… “
கண்ணன் —-  சரிம்மா கொஞ்சம் பொறுமையா இரு அவன் என்ன சொல்லுறான்னு  பார்த்துட்டுத்தான் அதுக்கு அப்புறம் நாம கல்யாண விசயத்தபேசிப்போம்.. சரியா???….
சீத்தா—- ம்ம் அப்பாவும் புள்ளையும் ஏதோ பண்ணுங்க.
“வயசு அதிகமாகுது அவனுக்கு. உங்க யாருக்கும் பொறுப்பே இல்ல..ஹுக்கும்…”
“சரிமா பொறுப்பு இல்லன்னே வச்சுக்கோ நீ இப்ப போய் உன் மகன எழுப்பி விடு இல்லன்னா இனி நம்மல நம்பி தூங்கமாட்டான். “
“அவன் சொன்ன நேரத்துக்கு எழுப்பி விடாம இருந்தா இனி அலாரம் வச்சி தூங்குவான் போ எழுப்பு நானும் என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு.. ஆட்டோ ஸ்டான்ட் போகன்னும். சீத்தா… “
சீத்தா—-  புகழ் தம்பி. எழுந்துக்கோப்பா அப்பா வந்துவ்விட்டார்..
புகழ்— ம் சரிம்மா போங்க நான் ப்ரஸ்சப் ஆகிட்டு வாறேன்.
“சரிப்பா”
“அம்மா காபிம்மா”
“சரி புகழ் இருங்க ரெண்டு பேரும் இதோ எடுத்துட்டு வாறேன்..”
கண்ணன்—-  வாப்பா புகழ் நைட் வீட்டுக்கு வர முடியாத டைம் இனி போன்ல கூப்பிட்டு  தகவல் சொல்லிறணும்..
“உனக்கே தெரியும் நீதான் இந்த குடும்பத்துக்கு இனி எல்லாமே. அப்பாவிற்கு வயசு போயிருச்சுப்பா..
உன்னோட சேர்த்து மூணு பேரைய்யும் நீ தான் வழி நடத்தன்னும்.”
“உன்னோட படிப்பிற்க்கும் பொறுப்பான குணத்திற்க்கும் நான் எதுவும் சொல்லி நீ செய்யணும்ன்னு இல்லப்பா புகழ். “
“புத்தி உள்ள புள்ள நீ உன்ன நம்பி நாங்களும் இருக்குறோம். “
“உன்னோட எதிர்கால வாழ்க்கையும் இருக்குங்கிறத மனசுல  வச்சிக்கிட்டு உன்னோட வேலையில் கவனமாக இருக்கன்னும் புகழ் அப்பா அம்புட்டுத்தான் சொல்லுவேன்…”
“நீ முக்கியமான விசயம் ஏதோ பேசணும்ன்னு சொன்னியாம்.அம்மா சொன்னா என்னன்னு சொல்லுப்பா???….”
சீத்தா— இந்தாங்க காபி..எடுத்துக்கோங்க ரெண்டு பேரும்..
புகழ்—- உங்களுக்கும் காபி எடுத்துட்டு வாங்கம்மா. வந்து நீங்களும் இருங்க என்ன விசயம்ன்னு சொல்லுறேன்..
சீத்தா — இல்லப்பா அம்மாக்கு சமையல் வேலை இருக்கு நீங்க பேசுங்க இப்ப ஆரம்பிச்சாத்தான். நீங்க வெளிய போகின்ற நேரத்திற்கு சமையல் எல்லாம் செய்து முடிக்க சரியாக இருக்கும்..
புகழ்—  அட இருங்கம்மா கொஞ்ச நேரந்தான். அப்புறம் போய்ச்சாதம் வைத்து சாம்பார் பொரியல் பண்ணிக்கலாம்..
“சரி என்னன்னு சொல்லு புகழ்”
புகழ்—- அதுவந்து நான் சொல்லுறத தப்பா எடுத்துக்க கூடாது நீங்க  ரெண்டு பேரும் சரியா???….
“நான்  காலேஜ் கடைசி வருடம் படிக்கும் போது. ஒரு பொண்ணு முதல் வருடம் வந்து அந்த காலேஜ்ல சேர்ந்தாம்மா. “
“அமைதியான பொண்ணு அதிகம் யாரோடையும்  பேசி நான் பார்த்ததும் இல்லம்மா.”
“பவானிசாகர்  அப்பா இல்ல அண்ணன் இப்ப வெளிநாட்டுல வேலை பார்க்குறான். வீட்ட அவங்க அம்மாவும். பாட்டியும். இருக்குறாங்க”.
“எனக்கு அந்தப்பொண்ண பிடிச்சுருக்கும்மா”.
“நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லுறீங்க??…”
“காலேஜ் டைம்லயே பிடிச்சத அந்த பொண்ணுக்கிட்ட நான் சொல்லவில்லை அதுக்கு எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ம்மா.”
“பேரு மதிவதனி. இப்ப 22வயசு. அவ எப்புடி சென்னை வந்தான்னு எனக்கு தெரியாது. நான் நேற்று நைட் ரவ்ன்ட்ஸ் போகும்போது தான் என் காரில் அவ மயங்கி விழுந்துவிட்டா. “
“நான் என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியாம ஷிட்டி ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்துட்டு அவங்க வீட்டுக்கும் தகவல் சொல்லிட்டுத்தான் இப்ப நம்ம வீட்டுக்கு வந்தேன்ம்மா.”
“நீங்கதான் இனி பதில் சொல்லுங்க??.. எனக்கு”
சீத்தா—- அச்சோ என்னப்பா சொல்லுற புள்ள இப்ப எப்புடி இருக்கு புகழ்.
இத நேற்று இரவே சொல்லியிருந்தா என் மருமகளுக்கு நான் துணையாக இருந்துருப்பேனே தம்பி.
“ஒத்த பொண்ணு பிறக்காம தவிச்சிக்கிட்டு  இருந்தேன். நான் சரி நம்ம ரெண்டு மருமகளுங்களையும் மகளா பார்த்துக்கலாம்ன்னு மனச தேத்திக்கிட்டேன்பா.”
“உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி மருமகவீட்டுக்கு வந்தாத்தான் இந்த வீடு சுபீட்ச்சமா இருக்கும்.”
“நாங்க உன்க்கிட்ட கேட்டோமே. யாரயாவது நீ விரும்புறீயான்னு நீ பதில் சொல்லாம கல்யாணத்தை தல்லிப்போட்டுக்கிட்டே வந்த அந்த கவலை தான் எங்களுக்கு.”
“என்னங்க நீங்க என்ன சொல்லுறீங்க????… “
கண்ணன்—–  எனக்கு என் மகனப்பத்தி தெரிந்துதான். உன்ன பொறுமையாக இருன்னு சொன்னேன்.                                     இப்ப உனக்கு ஏன் நான் அப்புடி சொன்னேன்னு புரியுதா???… சீத்தா.
“புகழ் நான் ஆரம்பத்தில் சொன்னதுதான். உனக்குத்தெரியாத நல்லது கெட்டது எதுவும் இல்ல உன்னோட பக்குப்பட்ட வயதிற்க்கு.”
“பொண்ணோட வாழப்போறதும் நீதான் பொண்ணு உனக்கு புடிச்சிருந்தா எங்களுக்கு மனப்பூர்வ சம்மதம். “
புகழ்—- அப்பான்னா எங்க அப்பாதான் பெஸ்ட்.
“எனக்கு இப்ப ஒரு சந்தேகம் இருக்கும்மா நான் அது சரியான்னு தெரிஞ்சிக்கிட்டு நீங்க யோசிச்சு திரும்பவும் பதில் சொல்லுங்க. சரியா.”
“நான் இப்ப ஸ்டேசனுக்கு போய்ட்டு உங்களுக்கு தகவல் சொல்லுவேன் அப்ப நீங்க ரெண்டு பேரும் வந்து உங்க மருமகளையும் அவ குடும்பத்தையும் பாருங்க. சரியா வாறேன்ம்மா.”
“புகழ் இப்பயும் சாப்புடாம போறியேப்பா???. “
“நான் வெளிய சாப்புட்டுக்கிறேன்மா அப்பா நீங்க இருந்து சாப்புட்டு போங்க அம்மா கார்த்தி வந்ததும் நீங்க இப்போதைக்கு எதுவும் சொல்லாதீங்க. எல்லாம் சரியானதும் சொல்லிக்கலாம். சரியா நேரம் இல்ல நான் போயிட்டுவாறேன்ம்மா.”
சீத்தா—- அப்பாடி எப்புடியோ என் புள்ள இப்பயாச்சும் அவன் வாழ்க்கையைப்பற்றி யோசிச்சானே அதுவே எனக்கு மனசுக்கு அப்புடி ஒரு நிறைவா இருக்குங்க.
கண்ணன் —- நான் புகழ் முக்கியமா நம்மட்ட பேசணும்ன்னு சொன்னதுமே நினைத்தேன் இப்புடி இருக்கும்ன்னு அதுதான் அவன் முதல் என்ன விசயம்ன்னு சொல்லட்டும்ன்னு உன்ன பொறுமையாக இருன்னு சொன்னேன் சீத்தா. சரியா.
“சரிங்க நீங்க சொல்லி நான் இதுவரை எதுவும் கேக்காம இருந்துருக்கனாங்க. என்னவோ மருமக வரணும்ன்னு இப்புடி பேசிட்டேன் அதப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு பேசுறீங்க.”
“சரி டீவி பாருங்க நான் சமைக்குறேன். சாப்புட்டு போகலாம்.இருங்க.”
கண்ணன்—- நான் எங்கடி??… உன்ன குறை சொன்னேன்.  சரி சந்தோசத்துல உப்பு காரம் எல்லாம் அதிகமா போட்டுறாதடி என் செல்லப்பொண்டாட்டி.
*****************
தாம்பரம் காவல் நிலையம்.
புகழ்—– பாண்டியன் இங்க வாங்க.
“என்ன சார். “
“ஏன் இன்னைக்கு இந்த கேஷ் கோர்ட்டுக்கு போகல????…. “
“அதுவந்து சார் கோர்ட்க்கு போற கான்ஸ்டாபில் இன்னைக்கு லீவ் சார்.”
“அப்போ அவர் லீவ்ன்னா நீங்க வேற யாரும் போகமாட்டிங்களா????…. “
“என்ன அமைதியா நின்னா சரியா பதில் சொல்லுங்க???…. “
“அப்போது அவரை காப்பாற்றுவதற்க்காகவே புகழின் தொ(ல்)லைப்பேசி அவனை அழைத்தது. அதை இயக்கி காதில் வைத்தான்.”
“ஹாலோ யாருங்க??… நான் புகழ் பேசுறேன் நீங்க.”
“தம்பி நாங்க மதிட அம்மா புனிதாப்பா.”
“ஒ ஆன்டி நீங்களா???. “
“ஆமாப்பா நாங்க வந்து இறங்கிட்டோம்.”
“சரி ஆன்டி இருங்க நான் இதோ வாறேன்.”
****************
சற்று நேரத்தில் ஷிட்டி ஹாஸ்ப்பிட்டால்.
புகழ்—- ராஜேஷ் டாக்டர் எங்கடா????… அவரோட ரூம்ல இல்லயே.
“அவர் பேசன்ட் பார்க்க போயிருக்காருடா மச்சான். நீங்க வந்தா அவாரோட ரூம்ல வெயிட் பண்ணச்சொன்னார்”.
“சரி நீ போ வீட்டுக்கு ஈவ்னிங் வா நான் இப்ப பார்த்துக்குறேன்”.
“சரிடா மச்சான். கவனமா இரு உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு பார்த்துக்கோ நான் போயிட்டு வாறேன்”.
புனிதா— தம்பி மதிய இப்ப பார்க்கமுடியாதா??…
“இல்ல ஆன்டி”.
“பாட்டி கடுமையா சோர்ந்து போயிருக்குறீங்க இப்புடி இருங்௧??..”
டாக்டர் வருவதற்க்கு முன்ன உங்களுக்கு கூலா கலர் வாங்கிட்டு வாறேன்.
புனிதா—–  அதுதான் மதிக்கு ஒண்ணும் இல்ல நல்லா இருக்கான்னு தம்பி சொல்லுச்சில்ல அத்த கவலை படாதீங்க.
புகழ்—- இந்தாங்க இத ரெண்டு பேரும் குடிங்க இப்ப டாக்டர் வந்துடுவாரு பாட்டி.
டாக்டர் வில்சன்—-  சாரி புகழ் ஒரு அவசரகேஷ். அதுதான் லேட் ஆகிவிட்டது.
“இட்ஸ் ஓகே சார் உங்க வேலை அப்புடித்தானே நாங்க வெயிட் பண்ணிணா தப்பில்ல.”
“சார் இவங்கதான் வதனியோட அம்மாவும் பாட்டியும்.”
டாக்டர்— சொல்லுங்க சிஸ்டர் உங்க பொண்ணு மதிவதனியை பற்றி.
“புனிதா மதியின் சகலத்தையும் ஒன்று விடாமல் சொன்னார்”
“அதை கேட்ட புகழின் முகம் வெளுத்துவிட்டது”
டாக்டர்— சரிம்மா உங்க பொண்ணுக்கு உடால் ரீதியான
பிரச்சினை எதுவும் இல்ல அவங்க இன்னும் கண்முளிக்கல.
“மனோதத்துவ டாக்டர் அவங்க கண்முளிச்சதும் தான் என்ன ஏதுன்னு பார்த்து சொல்லுவாங்க  உங்க பொண்ணநினைத்து கவலைப்படாதீங்க.”
” இந்த அம்மா ரொம்ப சோர்வாக  இருக்கின்றார் இன்று நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு காலையில் வந்தா போதும்.”
“இன்று முழுவதும் உங்க பொண்ணு தூங்குவதற்க்கு ஊசி போட்டிருக்கு ஒண்ணும் பயமில்ல எதையும் யோசிக்காம போய் ரெஸ்ட் எடுங்க.”
“புகழ் நில்லுங்க”
“சொல்லுங்க டாக்டர்”
“அந்த அம்மா சொன்னது எல்லாமே தெளிவாக கேட்டுருப்பீங்கன்னு நினைக்குறேன்”.
“சில விசயத்துல விஞ்ஞானமும் யோசியமும் ஒத்து போகும் அப்புடித்தான் இந்த பொண்ணு வாழ்க்கையிலும் நடந்து இருக்கு”.
“ஒண்ணு நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும்”.
“அந்த பொண்ணோட சூழ்நிலை அப்புடி ஒரு திருமணத்திற்கு ஒத்துக்கவச்சுருக்கு”.
“நீங்களும் உங்க விருப்பத்த தெரிவிக்கல. அதுமட்டும் இல்ல கிராமத்துல வாழுறவங்க யோசித்த அதிகமா நம்புவாங்க புகழ்”.
“உங்க உண்மையான காதல் உங்களை சேர்த்துவைக்கும் புகழ்”.
“டோன்ட் சேட் பீல் ஒகே”.
” அவங்க பண்ணிய பெரிய தப்பு இந்த திருமணத்தை பதிவு செய்யாதது. இன்னும் இந்த காலத்துலயும் திருமணத்தை பதிவு செய்றது எவ்வளவு முக்கியம்ன்னு சிலருக்கு தெரியுறது இல்ல புகழ்.”
“ஏதோ இந்த பொண்ணுக்கு நல்லகாலம் பெரிதா எந்த ஆபத்தும் இல்லாம உங்ககிட்டயே வந்து சேர்ந்துட்டு.”
” கட்டினவன் ஏன்  இன்னும் இங்க வரவில்லைன்னு தெரியல அவன் நல்லவனா???… மோசமானவனா??? எதுவும் நமக்கு தெரியாது.”
“அந்த பொண்ணு  சொன்னாதான் தெரியும். என்ன நடந்ததுன்னு எப்புடி அந்த இரவுல அங்கவந்து மயங்கி விழுந்ததுன்னு.”
“இப்புடி நமக்குள்ள இவ்வளவு கேள்விகள் இருக்கு புகழ் அதெல்லாம் நீங்கதான் கண்டுபிடிச்சு இந்த முடிச்செல்லாம் அவிழ்த்து.”
“இந்த சிக்கல்களிள் இருந்து அந்த பொண்ணு காத்து உங்க விருப்பத்த தெரிவித்து திருமணம் செய்துக்கனும். “
“உங்களுக்கு நிறைய பொறுப்புக்கள் இருக்கு மனச தளரந்து போக விட்டுடாதீங்க புகழ்.”
“எங்க அக்காவிற்கு திருமணம் ஆகும்போது எனக்கு எட்டுவயது.”
“திருமணம் நடந்த அன்று அதை பதிவு செய்ய அனுமதி கிடைக்கவில்லை.”
“எல்லாருக்கும் அலைசல் வேற சரி நாளைக்கு பண்ணிக்கலாம்ன்னு விட்டுடாங்க.”
“ஆனா விடிஞ்சதும் எங்களுக்கு இடிதான் விழுந்தது அவன் அக்கா அசந்த நேரம் பார்த்து. நகை பணம் எல்லாம் எடுத்துட்டு ஓடிட்டான்.”
“அப்புறம் போலீஸ்ல சொன்னோம். அவங்க விசாரணை செய்து அவன் அயோக்கியனாம் அவன் கூட வந்தவங்க அம்மா அப்பா இல்லயாம். காசுக்கு நடிக்கவந்தவங்கலாம். அவனத்தான் தேடுறாங்கலாம்ன்னு சொல்லிட்டு. போயிட்டாங்க அதுக்கு பிறகு எந்த தகவலும் இல்ல.”
“அப்புறம் எங்க அக்கா குழந்தை
உண்டாகிட்டாங்க அதோட நாங்க சென்னை வந்துடோம்.”
“குழந்தை பிறந்ததும் மனவுழைச்சல்ல டிப்றஷன் ஆகி மூளை நரம்பு பாதிச்சு இறந்துட்டாங்க. பிறந்த குழந்தை  சின்னபிள்ளை குணத்தோடதான் வளர்ந்தது. “
“அன்று ஒருநாள் அசால்ட்டா இருந்ததால இன்னைக்கு வரை நாங்க கஷ்டத்த அனுபவிக்குறோம்.”
“நான் தான் அக்கா மகள் மலர்விழியை இப்ப திருமணம் செய்துருக்கேன். எங்களுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்குறாங்க புகழ்.”
“நான் ஏன் இத உங்கட்ட சொல்லுறேன்னா??..  திருமணத்திற்கு பதிவு செய்றது ரொம்ப முக்கியம். “
“இந்த விசயத்தை நீங்க அது பற்றி விபரம் தெரியாதவங்களுக்கு சொல்லி பாதிக்கப்படாம தடுக்கனும்.”
“இப்ப இந்த மதி பொண்ணு திருமணத்தை பதிவு பண்ணல புகழ் படிச்ச பொண்ணும் ஏன் இப்புடி அக்கறை இல்லாம இருக்குறாங்களோ தெரியல.”
“ஒண்ணு மதியோட மெடிக்கல் ரிப்போட் வச்சு நீங்க திருமணம் பண்ணிக்கனும்.”
“இல்லன்னா அந்த கந்தன் யாருன்னு தெரிஞ்சு அவனால எந்த ப்ராப்ளமும் இந்த பொண்ணுக்கு வராதுன்னு கன்போர்ம் பண்ணிட்டு திருமணம் செய்துக்கனும் புகழ்.”
“பொதுவா உங்க திருமணம் உங்களுக்கு சவாலான விசயம் புகழ் இதுல நீங்க ரெண்டு பேரும் எந்த பாதிப்பும் இல்லம வாழ்க்கையை தொடங்கிட்டிங்கன்னா கிரேட். “
“அப்புறம் வாழ்க்கை முழுதும் சந்தோசமா வாழலாம் புகழ். நான் சொன்ன பதிவு விசயத்த மட்டும் மறந்துறாதீங்க. “
“ஒரு பொறுப்பான அதிகாரிகிட்ட என்னோட பெரிய மனபாரத்த இறக்கிவச்சிட்டேன். நீங்க பொறுப்பா செய்விங்கன்னு நம்புறேன். புகழ்.”
“குட் லக்”
“நாளைக்கு சந்திக்கலாம் “.
“ஒகே சார் டேக்கெர்.”
“வாங்க பாட்டிமா வீட்டுக்கு போகலாம் மதியை நேர்ஸ் நல்லா பாத்துக்குவாங்க எதையும் யோசிக்காம நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. பாட்டி.”
நாச்சிப்பாட்டி—–  எங்க தம்பி போறோம் எங்களுக்கு இங்க யாரையும் தெரியாதே.
“புகழ்— நம்ம வீட்டுக்குத்தான் பாட்டி போறோம். ஒண்ணும் பிரச்சினை இல்ல வாங்க. நீங்க எதையும் கஷ்டமா நினைச்சுக்காதிங்க சரியா???….  “
“புகழ் வீட்டில் அவர்களை விட்டுவரும் போது. அவனது தொலைபேசி அழைத்தது.”
“ஹலோ பாண்டியன் சொல்லுங்க என்ன விசயம்.”
“சார் கடற்கரையில் ஒரு பொண்ணோட டெட்பாடி கரை ஒதுங்கிருக்காம். சார் இப்பதான் தகவல் வந்தது.”
“ஒ சரி நான் இப்ப ஸ்டேஷன்தான் வாந்துகொண்டு இருக்கின்றேன். நீங்க அங்க போய் என்ன ஏதுன்னு விபரத்தை சேகரிங்க பாண்டியன்.”
“நான் கொஞ்ச நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்துருவேன் சனங்கள நெருங்க விடாதீங்க. ஒகே..”
“சரிங்க சார்”
யார் அந்த பொண்ணு நடந்தது என்ன?????……
தொடாரும்………

Advertisement