Advertisement

அத்தியாயம் – 06
ஷிட்டி ஹாஸ்பிடல்
ராஜேஷ்.  டேய் மச்சான் புகழ் இந்த கொரோனா வைரஸ் வந்ததும் போதும் ஒவ்வொருவருகும் ஏது ஒரு வகையான சிக்கலும் கஷ்டமும் இருக்குடா.
பாரு நீ லவ் பண்ணின பொண்ணுகிட்ட உன்னோட காதல சொல்லுறதுகு குடும்ப கஷ்டம் விடயில்ல ஆரம்பத்துல. இப்ப என்னடான்னா அதெல்லாம் சரியானதும் சொல்லாம்னு போக ரெடியாக கொரோனா அதிகமாகி லாக்டவ்ன் போட்டுடாங்க..
இந்த அமைதிசிகரம் சென்னையில தான் இருக்குனு  தெரியாம இருந்துருக்க.இவ்வளவு நாளும் நீ
ஆனா எங்களமாதிரி பேச்சுலர்ஸ் ரொம்ப பாவம்டா மச்சான்..
இந்த கொரோனா வந்ததும் வந்துசி நாங்க அழகான பொண்ண பார்த்து சைட் அடிக்கமுடியாம கஷ்டப்பட்டு காலத்த போக்கிட்டு இருக்குறோம்.
ஏன்னா எல்லா பிகரும் முகமூடி “மாஸ்க்” போட்டு முகத்த மறைச்சிட்டு போறாளுகள்டா நாங்க எம்புட்டு பிலாவனும் மச்சி.
நீ என்னடா அந்த புள்ள உன்னோட கைல கிடைச்சுட்டு இனி ஹாப்பி அண்ணாசிதானே.
அந்த புள்ள குணமாகினதும் அவங்க வீட்டாலுங்க வாறாங்க சூழ்நிலை சரியானதும் அவங்க அம்மாட பேசி மெரேஜ் பண்ணிக்கலாம். ஜாலியா ஹனிமூன் போகலாம். அதவிட்டு முகத்துல சோகத்த இன்னும் டன் கணக்கா வழியவிடுற இது சரி இல்ல மச்சி சொல்லிடேன்..
புகழ்– டேய் சும்மா டென்ஷன் பண்ணாத மச்சான்..
அவங்க அம்மாக்கு பேசும்போது வதனிய நீங்க தூக்கிட்டு வந்து சேர்த்துருகீங்க தம்பி மாப்பிள்ளை எங்க போனாருனு தெரியலயேனு சொன்னாங்கடா…
நானே அவளுக்கு கல்யாணம் ஆகிட்டோனு தெரியலயேனு??? அவள ஹாஸ்பிடல்ல கொண்டுவந்து சேர்க்கனும்ற டென்ஷன்ல அவ கழுத்த கால எதயும் பார்க்கலடா மச்சான்.
எனக்கு மட்டும் தெரியுமா என்ன அவளுக்கு கல்யாணம் முடிஞ்சுருக்கும்னு..
அவ எனக்குனு பொறந்தவ காலம் எனக்காக அவள காத்திருக்க வைக்கும்னு நானும் கொஞ்சமும் சின்ன முயற்சி கூட எடுக்காம படிக்க போனது தப்புதானே???…. 
அதுதான் அவ எனக்கு கிடைக்காம போயிட்டா. லட்சியம் முக்கியம்னு நான் இருந்ததுனால அவள கோட்ட விட்டுடனேடா மச்சான்…
ராஜேஷ்—- டேய் புகழ் நீ கெத்தான எசிபி டா இப்புடி அழுதுவடிஞ்சா யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க கன்ரோல் பண்ணிக்க மச்சி…
“அங்க பாரேன் மச்சி”…
ஒரு பொண்ணு நம்மல பார்த்தமாதிரியே வருது ஆனா முகத்த ப்புள்ளா கவர் பண்ணிடுடா. டேய் நமக்கு கிட்ட வந்ததும் நடைய ஸ்லோபண்ணிட்டு மச்சி… நிமிர்ந்து பாருடா…
புகழ்— சும்மா இருடா நான் எந்த பொண்ணயும் இப்ப பார்க்குற நிலையில் இல்லடா… ஒகே.
ராஜேஷ்… டேய் நல்லவனே அந்த புள்ளய சைட் அடிக்க சொல்லயில்ல உன்ன.. இது ஏதோ சரி இல்லனு தோனுதுடா கொரானாகு முகத்த மறைச்ச மாதிரி தெரியலடா..
நீ போலீஸ் மச்சி நீ பார்க்க வேண்டிய வேலைய நான் பார்க்குறேன்..எந்த கஷ்டமான நிலையிலும் உன்ன சுத்தி என்ன நடக்குதுனு நீ ரொம்ப கவனமா இருக்கனும்டா புகழ்..
நம்மல மீறி என்ன நடக்கும் அமைதிசிகரம் உனக்குதான் உன் காதல் மேல உனக்கு  நம்பிக்கை இல்லயா???… மச்சான்..
ஆன் இப்பதான் முகத்துல பல்ப் எரியுது அந்த பொண்ணு நம்மல நெருங்கி வந்துட்டு டா பாருடா…
புகழ்… ஆமான்டா மச்சி. அந்த பொண்ணு கைய பார்த்தியா??.. ஏது வித்தியாசமா டாட்டு போட்டமாதிரி கருப்பா  இருக்கு டா .. நம்மலயே திரும்பி பார்த்துட்டு போகுது இரு நான் போய் என்னனு பார்த்துட்டு வாறேன்..
ரவ்டீஸ் தாஸ்— டேய் அந்த பொம்புளைகு கால் போடுடா நம்மட்டா ரெகுலரா சரக்கு வாங்குற பொண்ணு இந்தா ஹாஸ்பிடல்ல இருந்து வெளிய போறாளே என்னவோ தெரியலடா??…
ஏதும் பிரசினை ஆச்சின்னா அதுக்கும் நம்மலதான் போட்டு காயும் அந்த ரவ்டீ…
டேய் காள என்னடா????… புகழ் வாறான்டா.. தாஸு அங்கப்பாரு வா ஒழிஞ்சுகுவம்..
ஐயோ இவன் எங்கடா இங்க வந்துருக்கான்..
கந்தன்ட பொண்டாடியும் எவனோ இங்கதான் சேர்த்துருக்கான் இந்த பொண்ணும் இங்க வந்துருக்கா புகழும் இங்க இருக்குறான் மொத்ததுல ஏதோ சரி இல்லடா இன்னைக்கு..
கந்தா நீ அந்த பொண்ண பாலோபண்ணி போ நீயும் இங்க இருந்தா உன் பொண்டாடி வீட்டாலுங்க யாரும் வந்தா சிக்கலா போயிரும்..
சரிடா காள அதுக ரெண்டும் பவானிசாகர்ல இருக்குதுங்க இங்க யாரும் சொல்லமாட்டாங்க என்னய தவிர.. யாரும் இல்லயே..
ஆனா நான் சொல்லப்போறதும் இல்லயே இவ கண்முளிச்சதும் நான் எங்கயாவது எஸ்ஸாகிருவேன்..
காள— அது ஏன்டா எங்களுக்கு குடும்ப பாசம் இருக்குறது மாதிரி உனக்கு இல்ல உன்ன நம்பி வந்த புள்ள உன்னால அடி பட்டு கிடக்கு நீ எனக்கும் அதுகும் சம்மந்தம் இல்லனு பேசுற..
புள்ளயும் படிச்சிருந்தாலும் திமிர் ஏதும் காட்டினதில்ல நாம எல்லாரும் போனாலும் வாங்க அண்ணானு அழகா கூப்புட்டு சாப்பாடு போடும் நல்லா வாய்க்கு ருசியா சமைக்கும்.. நல்ல குணமமான புள்ளடா கந்தா உன் பொண்டாடி..
அந்த புள்ளய விட்டுறாத பிறகு நீ தான் கஷ்டப்படுவ..  நாங்க எல்லாரும். இந்த தொழில் செய்தாலும் குடும்பம் புள்ளைங்கனு இருக்குறோம் நீயும் அப்புடி இருடா சந்தோசமா..
கந்தன்—- அதெல்லாம் எனக்கு சரி வராதுடா எங்க மாமா ஒருதர் பவானிசாகர்ல இருக்குறாரு அவாருதான் நான் தனிய இருக்குறேனு இந்த புள்ளையை எனக்கு கட்டி வச்சாருடா நான் எவ்வளவோ வேணாம்னுதான் சொன்னேன் அந்தாள் கேக்கல டா..
பிறகு அவரோட வந்து இருக்கசொன்னாரு இந்த தொழில் செய்துட்டு எங்க போறது.. நான்.
அதுதான் எனக்கு மனசுக்கு சரி இல்ல நான் அந்த புள்ளைக்கு அநியாயம் செய்றனு நல்லாவே தெரியுது..
நம்ம உயிர் எப்ப போகும்னு நமக்கே தெரியாது..
அதுதான் இன்னும் அந்த புள்ளைய நான் தொடக்கூட இல்ல..
நானே கொஞ்ச நாள்ல வேலை விசயமா பாரீன் போறேனு  சொல்லி அந்த புள்ளைய அவங்க வீட்டுல விட்டுடலாம்னு இருந்தேன்டா..
நல்ல புள்ள யாராவது நல்லவனுக்கு வாக்கப்பட்டு நல்லா இருக்கட்டும் இப்ப என்னாலயே அந்த புள்ளைக்கு இம்புட்டு கஷ்டம் வந்துடுசி..
இவ ஓடாம இருந்துருக்கலாம். நான் அந்த பொம்பளைட ஏதாவது சொல்லி சமாளிச்சு அவங்க வீட்ட நானே அனுப்பிருப்பன்..
பயந்த சுபாவம்..அந்த புள்ளைக்கு நான் ஏதாவது செய்துருவனு நினைச்சிதான் ஓடிருக்கு.. இப்ப இங்க வந்து கிடக்கு..
கண்முளிசதும் நானே அவங்க வீட்டுக்கு தாக்கல் சொல்லிட்டு. ஒதுங்கிடுவேன் அவங்க வந்து கூட்டிடு போகடும்..
என்ன என்னய கொஞ்ச நாளைக்கு திட்டுவாங்க நாம செய்ற தொழிலுக்கு நாம வாங்காத திட்டா அவங்க திட்டப்போறாங்க..
அது போகடும் தாஸு நீ கொஞ்சம் உள்ள பார்த்துகோ நான் அந்த மாலதி புள்ளைய தேடிபோறேன்.. காள நீ ரெங்கன் வாரவரைக்கும் என்ன நடக்குதுனு மறைஞ்சு இருந்து பார்த்துக்கோ..
சரிடா நீ போய் என்ன விசயம்னு சொன்னாதான் நான் அந்த பொம்பளைக்கு என்ன விளக்கம்னு சொல்ல முடியும்..
“ஹாஸ்பிடாலின் உள்”..
புகழ் டாக்டர் வந்துடாருடா வா போய் என்னனு கேக்கலாம்..
ஹாய் புகழ் ஹவ் ஆர் யு???..
பைன் டாக்டர் வில்சன்.
ஒகே எசிபி.. புகழ்.
நீங்க கொண்டு வந்து சேர்த்துருக்க பொண்ணு யாருனு நான் தெரிஞ்சிகலாமா????….
யா ஷுவர் மை வுட்பி சார் பட் இன்னும் என்னோட விருப்பத்தை அவங்கட்ட சொல்லவேயில்லை நான்..
ஒகே அப்போ அவங்கள பத்தி உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்னு எனக்கு தெரியல..
அதனால இப்ப அந்த பொண்ணு உயிர் ஆபத்து வேற கெல்த் பிராப்ளம் எதுவும் இல்ல..பட் அவங்க பேரண்ஸ் வந்தான் என்னு தெரிஞ்சுகலாம்.. புகழ் அப்போதான் மெண்டலீ ஏதும் பிராப்ளமானு தெரிஞ்சுக்க முடியும்..
அவங்க இன்னும் கண்முளிக்க லேட் ஆகும்.. ஸ்லிப்பிங் டோஸ் கொடுத்துருக்கு புகழ் அவங்களுக்கு மைண்ட் ரெஸ்ட் வேணும் இப்போதைக்கு என்னால இவளவுதான் சொல்லமுடியும்.. 
இனி அவங்க பேரண்ட் வந்ததும் நீங்க என்ன வந்து பாருங்க..
நீங்களும் கொஞ்ச டைம் ரெஸ்ட் எடுங்க புகழ்..
பாய் சி யூ லேட்டர் யங் மேன்..
புகழ்—- டேய் மச்சி வதனி இன்னும் கண்முளிக்கல. நான் வீட்டுக்கும் போய்ட்டு ஸ்டேசன் போயிட்டுதான் வருவேன்.
நீ கொஞ்சம் இங்க பார்த்துக்க எனக்காக ஏதும்னா கூப்புடுடா வந்துருவேன்டா..
ராஜேஷ்— சும்மா சென்டிமெண்ட் பிழியாதடா மச்சி சீ போ. வீட்ட அப்பா உன்ன எதிர் பார்ப்பாரு போடா..
சற்று நேரத்தில் புகழின் வீட்டில்.
கலை– வாப்பா புகழ் அப்பா ஆட்டா ஸ்டான் போயிடாங்க நான் வாரசொல்லுறேன் உன்ன பார்க்காம போறேனு ரொம்ப விசனப்பட்டாக நீ செத்தநேரம் படுபா புகழ் அப்பா வந்தது உன்ன எழுப்புறேன்..
சாப்புடியா??.. புகழ்
இல்லம்மா
ஏன்பா வா முதல் வந்து சாப்புடு. எனக்கு தெரியும் நீ இப்புடி தான் செய்வேன்னு..
இப்ப டிபன் வேணாம்மா. காப்பி தாங்க சரியா ஒன்ஹவர்ல எழுப்பிவிடுங்க..
சரிப்பா புகழ் அப்பா வந்ததும் எழுப்புறேன். இந்தா காப்பி.
நான் உங்கட்ட முக்கியமான விசயம் பேசனும். மா ஸ்டேசனும் போகனும்..
பையன்ல இருக்க பாசத்துல என்ன எழுப்பாம விட்டுறாதீங்க ஒகே..
தொடரும்…

Advertisement