Advertisement

அத்தியாயம்  நான்கு.
பவானி சாகர்.
அதி காலை 5.30 மணி.
அங்கு ஒரு வீட்டில் கவலை சூழ்ந்த முகத்துடன். இருவர் அமர்ந்து காலை தேநீர் அருந்திக்கொண்டு. கதைபேசிக்கொண்டு இருக்கின்றனர்.
வாங்க அவங்க யாருனு பார்க்கலாம்.
புனிதவதி கணவரை இழந்தவர். மோகன் என்பரை காதல் மணம் புரிந்தவர்.
அவர்களின் காதலுக்குப்பரிசாக இரண்டு பிள்ளைகள். மூத்தவன்- முகிலன். இளயவள்- நம் கதையின் மற்றுமொரு நாயகி மதிவதனி.
“மதிக்கு 10 வயது இருக்கும் போது காட்டிற்க்கு விறகு வெட்ட சென்ற நேரம் யானை மிதித்து இறந்து போனார் மோகன்.
“மூன்று நாட்களாக கணவர் வீடு வராமல் இருக்கவும் போலிஸ்சில் தகவல் சொல்லி தேடலை ஆரம்பித்தார் புனிதா அதன் பலனாக அவரது சடலம் தான் வீடு வந்து சேர்ந்தது.
“கணவர் இருந்தவரை வருமான சிக்கல் இல்லாமல் இருந்தவர் தற்போது காதல் கணவரின் இழப்பை தாங்கமுடியாமல் தீக்பிரமை பிடித்தது போன்று இருந்தார்”.
“மருமகளையும் பேரப்பிள்ளைகளையும் இன்னிலமையில் இருந்து மோகனின் தாயார் நாச்சியம்மா மடிதாங்கி ஒருவாறு இயல்பு நிலைக்கு மீட்டெடுத்து. புனிதாவிற்கு வீட்டின் தற்போதைய நிலையை புரியவைத்து. வருமானத்திற்கு உதவி செய்து வீட்டிலையே மசாலா மிளகாய்த்தூள் போன்று சிறியளவில் சரக்குகளையும். வேறு வகையான கைத்தொழிலிலும் ஈடுபடுத்தி நிலைமையை சரி செய்தார்”.
“மாமியாரின் துணையுடன் தொழிலையும் பிள்ளைகளையும் கவனித்துவந்தார்”.
வீட்டுப்பொறுப்பு தன் கையில் வந்தபடியால் உழைக்கவேண்டும் பிள்ளைகளை வயிறு வாடாமல்.உணவு கொடுக்கவேண்டும்.படிக்கவைக்கவேண்டும் என்று கடுமையாக
உழைக்க ஆரம்பித்தார் புனிதா..
அதன் விளைவு மதியிடம் அதிகமாக தாக்கியது.முகிலன் அப்பொழுது 17 வயது இளைஞன் பக்குவமாக நிலைமையை ஏற்றுக்கொண்டான். ஆனால்  தந்தை இருந்தவரை வீட்டில் இளவரசி போன்று வளம் வந்த மதி இனி தந்தை தன்னுடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலாமலும் முன்பு போன்று தாயிடமும். அதிக சலுகை கிடைக்காமலும். தவித்து கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் ஒடுங்க ஆரம்பித்தால்.
மதியின் கலையிழந்த முகத்தை பார்த்து நாச்சியம்மாதான். அதனை புனிதவதியின் கவனத்திற்குக்கொண்டு சென்றார்.
வேலை பளுவின் காரணமாக பிள்ளைகளை கவனிக்கதவறிவிட்டார்.
கணவர் இருக்கும் வரை பிள்ளைகளை நல்ல விதமாக  வீட்டில் கிடைக்கும் காய்கறி சத்தான பழவகை போன்று இயற்கையாக சுத்தமாக கிடைக்கும் சத்தான உணவு கொடுத்து வளர்த்த மகளை தற்ப்போது  உடல் மெலிந்து கருத்து சோர்ந்து பார்க்கும் போது அந்த தாயால் தன்னையே மன்னிக்க இயலவில்லை.
புனிதா- மதிக்குட்டி ஏன் இப்புடி இருக்குறீங்க அம்மாக்கு வேல அதிகம்டா மதி அத புரிஞ்சுக்கனும். இனி நமக்கு அப்பா இல்லன்றத நீங்க ஏற்றுக்கொண்டு சமத்துபுள்ளயா படிக்கனும். அப்பா இல்லாம ஏன் புள்ளைகள் எதயும் இழந்துறக்கூடாதுனு தான் அம்மா நேரம் காலம் இல்லாம உழைக்குறேன் அம்மா உங்க மேல பாசம் இல்லாம இல்லடா மதிகுட்டி நீங்க ரெண்டு பேரும் அத சரியா புரிஞ்சுக்கனும் டா. அம்மா உங்கமேல உயிரயே வச்சுருக்கேன் நீங்க தான் அம்மாக்கு எல்லாமே சரியா??..
அப்பா இல்லாம வளர்ந்த புள்ள ஊதாறியா போய்டுசினு என் புள்ளைகள யாரும் தப்பு சொல்லகூடாது. மதி நீ இனிமே எது செய்றதுனாலும் அண்ணன்ட தான் கேக்கணும் நாம யார் வம்புக்கும் போகாம நம்ம வேலைய சரியா இருக்குற இடம் தெரியாம செய்துட்டு போயிரனும்.
பொம்புள புள்ள அடக்கமா அமைதியா இருக்கனும். மதி நீங்க எவ்வளவும் படிங்க அம்மா உங்கள படிக்க வைப்பேன் இனி உங்க கவனம் படிப்புல மட்டும் தான் இருக்கனும் புரிஞ்சுதா??..
முகிலா நீ இனி எப்பவும் மதிய பார்த்துக்கனும். பா
முகிலன்– அம்மா நீங்க கவல படாதீங்க இன்னும் ஐந்து வருடத்துல என்னோட படிப்பு முடிஞ்சுரும். நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் நீங்க அப்பத்தா நான் மதிகுட்டி எல்லாரும் இந்த வீட்டுல கஷ்டமே இல்லாம சந்தோசமா இருப்போம். சரியா??..
புனிதா– முகிலா கவனமா போய் நாம வழமையா வாங்குற கடையில லெக் பீஸ் வச்சு எல்லாருக்கும் பிரியாணி வாங்கிட்டு கெதியா வா..
“மதி நீ போய் முகம் கழுவி விபூதி வச்சுடுவாமா”.
முகிலன்– இந்தாங்கம்மா.
மதி மா வாங்க அம்மா ஊட்டிவிடுறேன்.இனி நேரம் இருக்கும்போது முதல் மாதிரி அம்மா உங்க கூட இருப்பேன் சரியா இனி அப்பா இல்லனு யாரும் சோகமா இருக்ககூடாது. மதி சிரிச்சமுகமா அழகா இருக்கனும்.சரியா??.. மதி மா உன்னோட வேலையை நீயே செய்து பழகனும் டா. சாப்புட்டு போய் படுங்க.
“அதன்பிறகு வருடங்கள் வேகமாக ஓட முகிலன் சென்னையில் காலேஜில் படித்து அங்கு நடந்த நேர்முகதேர்வில் தெரிவாகி.ஐடி கம்பெனியில் மூன்று வருடம் வேலை செய்து தற்போது வெளிநாட்டில் வேலை செய்கின்றான்”.
மதி முகிலன் படித்த அதே காலேஜில் படித்து டிகிரி முடித்து தாயிடம் அனுமதி பெற்று சென்னையில்    ஒரு வருடம் அவளுடன் படித்த மாலதி ராதா வுடன் ஹாஸ்டலில் தங்கி வேலை செய்தால் தாயின் ஒரு வருட அனுமதி முடிந்ததும்.
வீட்டிற்கு மறுக்காமல் சென்று விட்டால்.
புனிதா– மதிமா நீ யாரையும் மனசுல நினைச்சுருகியாடா??.. முகிலுக்கு கண்ணால வயசு வந்துருசிடா அதுதான் உனக்கு கண்ணாலம் கட்டிவைக்க அம்மா கேக்குறேன் மா.
” யார பார்த்து என்ன கேள்வி கேக்குறிங்க நம்ம மதி மண்ண பார்த்து நடக்குற சாதி பொண்ணு நிமிர்ந்து பார்த்திருந்தா தான் அவளையே பார்த்து உருகி காதலிச்சு சொல்லமுடியாம குடும்ப சூழ்நிலையில இருந்த ஒரு ஜீவனை பார்த்துருப்பாளே??..
மதி– அப்புடி எதுவும் இல்லம்மா நீங்களும் அண்ணனும் யார சொல்லுறீங்கலோ கட்டிக்குறேன்மா.
புனிதா– மாப்புள பேரு கந்தன் மெட்ராஸ்ல ஏது கம்பெனில கடைக்கு சாமான்கள் போடுற வேலை செய்றாங்களாம்.
இந்த வரன நம்ம தங்கவேல் மாமா சொன்னாருமா.மாப்புளைக்கு ஆயி அப்பன் இல்லயாம். அவருக்கு நீ தான் எல்லாமா இருக்கனும் மதி புரியுதா??..
மதி– ம் சரிமா நீங்க உங்களுக்கு ஒகேனா பாருங்க.
புனிதா— பாருங்க அத்த நம்மவளர்ப்பு தப்பிபோகல.
நாச்சிபாட்டி– என்ற பேத்தியாச்சே அப்புடிதான் இருப்பா சரி புனிதா நம்ம முகில்டயும் விசயத்த சொல்லிருவம்.
” அதன் பின்பு முகிலனின் முழு சம்மதமின்மையுடன் ஒரே மாததில் பவானிசாகரின் பண்ணாரி அம்மன் கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது மதிவதனி. கந்தனின் திருமணம்”..
“இதோ திருமணம்  முடிந்து ஒருமாதம் இன்றுடன் முடிந்துவிட்டது”
புனிதா— அத்த மதிக்கு கண்ணாலம் கட்டிக்கொடுத்து ஒருமாசம் ஆகிட்டு மாப்புள்ளையும்.வேலைக்கு போனா புள்ள ஒத்தையில என்ன செய்தோ நேத்து சாயந்தரதுல இருந்து போனும் போகமாட்டிங்குது. விடியகாலையில ஒருகெட்ட கனவு கண்டேன்.மனசு தவிக்குது அத்த நம்ம யோசியர் சொன்ன மாதிரி மதிக்கு எதுவும் நடந்துருமோனு பயமா இருக்கு அத்த.
நாச்சிபாட்டி– அது ஒன்னும் இல்ல நீ அதயே நினைத்து கவல படாத பெருச ஒன்னும் ஆகாது. நம்ம குலசாமி முனியப்பனுக்கு காசு முடிஞ்சு வை புனிதா..
புனிதா இந்த போனு அடிக்குது யாருனு பாருமா..
முகிலன் வந்ததும் மொத ஒரு சாய்வுநாற்காலி வாங்கணும் கீழ இருந்தா எழும்பவே விடுதில்ல இந்த மூட்டு வலி…
*************
“சென்னை வலசரவாக்கம். நடுத்தரவர்க்கத்தினர் அதிகம் வாழும் இடம்”. அங்கு ஒரு வீட்டில்.
கண்ணன்– சீத்தா
“என்னங்க “
“புகழ் இரவு வீட்டுக்கு வந்தானா”??..
சீத்தா—  இல்லயேங்க
கண்ணன்– நம்ம புள்ள இப்புடி பொருப்பில்லாம இருந்ததில்லையே என்னாச்சு போனும் பண்ணலயா??.. சீத்தா நமக்கு ஆதாரமே அவன்தான்.
விடிஞ்சதும் இப்பயெல்லாம் அவன் முகத்த பார்த்துடு ஆட்டோ ஓட்ட போனாதான் எனக்கு அந்த நாளே தெம்மா இருக்கும்.
“இந்த குடும்பத்தின் தலைவர் கண்ணன். [ஆட்டோ ஓட்டுநர்]  
“அவரின்.
மனைவி சீத்தாவதி.[குடும்பத்தலைவி] சூது வாது தெரியாதவர்.”
இவர்களின் மகன்கள் இருவர் முத்தவன். நம் கதையின் மற்றுமொரு.                                 நாயகன் புகழேந்தி [ACP] இதுவே அவனது கனவாகும்.
தீட்சண்ய பார்வை கொண்டவன் அவனது பார்வையில் குற்றம் செய்தவர் இலகுவில் தப்ப இயலாது. திராவிட நிறமுடையவன். உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆறடி ஆண்மகன்.
பல இன்னல்களை கேலிக்கைகளை கடந்து படிப்படியாக ACP யாக உயர்ந்துள்ளான். எந்த அரசியல்வாதிக்கும் தவறான உயர் அதிகாரிகளுக்கும் தலைவணங்காதவன். அவனின் கஷ்டங்களே அவனை ஓர் உயர்ந்த உன்னதமான மனிதனாக செதுக்கியுள்ளது என்றால் மிகையல்ல.
ஆனால் அவனது வீட்டில் நேர் எதிர் குடும்பத்துடன் கலகலப்பானவன்.
அவனது பதவியின் காரணமாக தனது குடும்பத்தினருக்கு எவ்விதமான கெடுதல்களும் நேராத படி எப்பொழுதும் கவனித்து பார்த்துக்கொள்வான்.
“இவனது தம்பி கார்த்திக் [காலேஜ் இருதிவருடம்] குடும்ப கஷ்டத்தை உணர்ந்து. தனது அண்ணன் போன்று உயர்வாக வாழ நினைக்கும் இளைஞன்”
கண்ணன்– ஹலோ ராஜேஷ் உனக்கு புகழ் போன் ஏதும் பண்ணினாப்பா??..
“ஆமாப்பா நைட் ரவ்ன்ஸ் போயிட்டுவரும்போது ஒரு விபத்து நடந்துரிசுப்பா அதுதான் சிட்டி ஹாஸ்பிடல்ல இருக்குறான் போனும் ஆப் ஆகிடாம். நான் இப்ப வீட்டுக்கு தான் வந்துட்டுருக்கிறேன் நீங்க கவலப்படாதீங்க.
புகழ்— ஹலோ ராஜேஷ் நான் புகழ் டா சொல்லுமாப்புள நீ வரும்போது நம்ம காலேஜ் போயி மௌனராகம் தெரியும்தானே உனக்கு அவள்ட வீட்டு அட்ரஸ் வாங்கிட்டு எனக்கு ஒரு செட் உடுப்பும் எடுத்துட்டுவா டா கெதியா வா
“சரிடா மாப்புள்ள”
“ஏங்க இந்த புகழ் பயலுக்கு வாயசு 29 ஆகபோகுது அவனோட ஒத்த வயசு பசங்க எல்லாரும் ரெண்டு புள்ளைகளோட இருக்கும் போது இவன் மட்டும் இன்னும் கல்யாணம் இப்போதைக்கு வேணாங்குறான். நாமலும் யாரயாவது மனசுல நினைச்சிருக்கியா இருந்தா சொல்லுனு கூட கேட்டுப்பார்துடம் பிடி குடுத்து பதில் சொல்லாம வேல வேவனு அதயே கட்டிட்டு அலையுறானேங்க.”
“நமக்கும் வயசு திரும்புதா என்ன காலாகாலத்துல முடிச்சாதானே நம்மலும் பேரபுள்ளைகளையும் பார்த்து வளர்த்து எடுக்கமுடியும்”.
“சீத்தா நீ மனச போட்டு குழப்பிக்காத இன்னைக்கு தம்பி வீட்டுக்கு வரட்டும் நான் கேக்குறேன்”.
“அம்மா”  அடடே வாப்பா ராஜேஷ்.
“புகழ் அவனுக்கு ஒரு செட் உடுப்பு எடுத்துட்டு வரச்சொன்னான்மா”
“அதுதானே நீ வேல இல்லாம இந்தப்பக்கம் வாருவியா??.. என்ன”
அப்புடி இல்லம்மா ஆபீஸ் போனா “வர நைட்டாகிடுது வீக்எண்டுல வளர்ந்த ஆசிரமத்துக்கு போகனும் அதெல்லாம் போக எங்கம்மா நேரம் இருக்கு.”
“ஹாய் ராஜேஷ் அண்ணா ஹவ் ஆர் யு??..”
” பைன் கார்த்தி”
“அம்மா அப்பா நான் காலேஜ் போயிட்டு வாறேன். பாய் ண்ணா”
” இந்தாப்பா ராஜேஷ் இதுல உடுப்பு இருக்கு. இந்த பைல ரெண்டு பேருக்கும் சுட சுட இட்லி இருக்கு மறந்துறாம சாப்புடுங்க”
“அவன் வேலயா சாப்புடாம அலைவான் நீ தான் புடிச்சு சாப்புடவைக்கனும். இனியாச்சும் நேரம் கிடைக்கும்போது வீட்டுப்பக்கம் வாப்பா நாங்களாம் இருக்குறோம் உனக்கு புரிஞ்சுதா??”
சரிங்கம்மா அப்பா போய்டுவாறன்.
“கவனமா ரோட்டப்பார்த்து வண்டிஓட்டிட்டு போப்பா”
“ஏங்க நீங்க இன்னைக்கு போகலயா??
” போகனும் சீத்தா”
“அப்ப வாங்க சாப்புடுவீங்க”
” இனி வலம போலயே நீங்க எல்லாரும் வெளிய போயிட்டா நான் தான் தனிய பேச்சு துணைக்கும் ஆள் இல்லாம வீட்டு முகட்டாயே வெரிச்சு பார்த்துட்டு இருக்கனும்”.
“இன்நேரம் எம் மருமவ வந்துருக்கனும் இந்த வீடு எப்புடி கலகலப்பா இருந்துருக்கும். நானும் இந்த டிவி பொட்டிய உத்து பார்த்துட்டு இருந்துருக்கமாட்டன்”.
“அடியே சீத்தா என்னடி நீ கொஞ்சநேரம் புலம்பாம்ம மாமன கொஞ்சம் கவனிக்குறது”
“அடியாத்தி கெழவனுக்கு குசும்ப பாரு புள்ள இல்லாத வீட்டுல கெழம் துள்ளி விளையாடுன கதையால்ல இருக்கு உம்மர்ற பவ்சு போவியலா அங்குட்டு. சும்மா வந்துட்டாரு கொஞ்சிகிட்டு”
சிட்டி ஹாஸ்பிடல்.
ராஜேஷ்– என்னடா மாப்புள இது எப்புடி ஆச்சு அந்த புள்ள எப்புடி எங்கயோ இருக்குற புள்ள அங்க வாந்துருகும்.
எனக்கு என்னடா தெரியும். மொத உடுப்ப குடு நான் குளிச்சுட்டு வாறன்  நைட் ப்புள்ளா அலைஞ்சது அசதியா இருக்குடா. பிறகு அத பத்தி பேசலாம்.
ஐயஹோ!.. இவன் கடமை கண்ணாயிரம்னு  தெரிஞ்சும் நாம வீட்டுல சாப்புடாம வந்துடமே. இன்னைக்கு டிபன் சாப்புட்ட மாதிரித்தான். இதுல எங்க??.. பிரியாணி சாப்புடுறது.
வாடா மாப்புள நீ ப்ரஸ் ஆனதும் அம்மா குட் பாயா சாப்புட சொன்னாங்கடா. வா வா.
டேய் அறிவிருக்கா உனக்கு அங்க மயங்கி கிடக்குறது வேற யாரும் இல்ல நான் ஒரு பொண்ண விரும்புறேனு சொன்னனே அது வேற யாரும் இல்ல மௌனராகம் தான்டா ராஜேஷ்.
அவ இப்புடி கிடக்கும் போது எனக்கு சாப்பாடு முக்கியம் இல்ல நீ சாப்புடு நான் அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டு வாறன். “பேஸ் புக்ல” அவங்க அண்ணாவ தேடி கண்டு புடிச்சு விசயத்த சொல்லனும் விபரமா.
என்னடா மாப்புள சொல்லுற அந்த பொண்ணு இந்த அமைதி சிகரமா??..
“அவள்ட சொல்லாம பொண்ணு யாருனு எங்க யாருட்டயும் சொல்லமாட்டேனு சொன்ன நீ”.
“ஆனா காலேஜ் முடிஞ்சும் நீ கடைசி வரை அந்த புள்ளய்ட்ட உன்னோட காதலை சொல்லவே இல்லயே மாப்புள”.
“ஆமான்டா என் குடும்ப நிலை தெரியும்தானே அப்புடி இருக்கும் போது நான் காதல் னு திரிஞ்சா சரி வருமா இப்ப ஒன்னும் கெட்டுபோகல மௌனராகம் கண்முளிக்கட்டும் இனி எனக்கு ஒன்னும் தடை இல்ல”.             
“நான் என்னோட காதல சொல்லிட்டு அவள்ட இந்த நிலைக்கு காரணமான அயோக்கியன்களை கொலையறுக்காம விட மாட்டேன்”.
நான்போய் அவட வீட்ட தகவல் சொல்லிட்டு வாறன் நீ இங்க இரு டாக்டர் வெளிய வந்தா எனக்கு கூப்புடு வாறன்.
” என்னங்கடா இது ஒரு பொண்ணு அம்மா பேச்ச கேட்டு அமைதியா இருக்குறது ஒரு குற்றமா??.. அவங்க அம்மா அழகா மதிவதனி னு பேரு வச்சா இவனுக என்னன்னா ஆளாளுக்கு ஒரு பேர் வைக்குறானுகளே!.. ஒருத்தன் மௌனராகம்றான் ஒருத்தன் அமைதியின்சிகரம்ங்குறான். என்னடா நடக்குது. பாவம் அந்த
மதி புள்ள”.
“யார் சொல்வது அவனிடம் அவன் காதல் சொல்லும் காலம் கடந்துவிட்டது அவள் இன்னொருவனின் மனவாட்டி என்பதை அதை அறிந்தால் தாங்குமோ??.. அவனது இதயம்”
**********
“பவானி சாகர் மதியின் வீடு.
“அலோ யாருங்க நான் புனிதா பேசுறேன்”.
“ஹலோ ஆன்டி நான் சென்னையில ஹாஸ்பிடல்ல இருந்து புகழ் பேசுறேன். மதிவதனி உங்க பொண்ணுதானே??..”
“ஆமாங்க என்பொண்ணுதான் என்னாச்சி ஏன் அஸ்பத்திரில இருக்கா???…
“ஆன்டி பயப்புடும் படி ஒன்னும் இல்ல மயங்கி விழுந்துட்டாங்க அதுதான். கொண்டுவந்து சேர்த்துருகோம்”.
“நீங்க வாங்க ஆன்டி “
“ஐய்யோ என்ன தம்பி சொல்லுறீங்க எங்க மாப்புள எங்க போனாரு??..”
“நீங்க யாரு”
“என்னது மாப்பிள்ளையா???…
“நான் புகழ் ஆன்டி உங்க பொண்ணு படிச்ச காலேஜ் ல தான் படிச்சேன் நான் போலிஸ் இந்த தகவல் உண்மைதான். நீங்க பயப்புடாம தைரியமா நம்பி சென்னைக்கு வாங்க??.. நானே முகிலன்ட சொல்லிகுறேன்.                            
நீங்க வந்து இறங்கினதும் இந்த நம்பருக்கு கூப்புடுங்க ஹாஸ்பிடலுக்கு நீங்க வாறதுக்கு நான் ஆள் அனுப்புறேன் புரிஞ்சுதுங்களா??.. ஆன்டி”
அத்த நம்ம மதி மயங்கி கீழ விழுந்துட்டாம் ஆஸ்பத்திரில சேர்த்து இருக்கோம்னு  இப்ப போன் வந்துசு கெளம்புங்க அத்த மெட்ராஸ் போறதுகு முகில்டயும். சொல்லிருவம்.
என்னடியம்மா சொல்லுற புள்ள எப்புடி இருக்காளோ அப்பவும் முகில் சொன்னான் அவசரப்படாதீங்கனு நாமதான் யோசியம் அது இதுனு நம்ம புள்ளைய யாரும் துணைக்கு கூட இல்லாத இடத்துல கட்டிகுடுதுட்டு இப்ப அவதி படுறோம் புனிதா.
ஆமா அத்த எனக்கும் பயமா இருக்கு காலையிலயே உங்கட்ட சொன்னனே கெட்ட கனவு கண்டேனு மனசு அடிச்சுகுது அத்த.
சரி இனி பேசி ஒன்னும் ஆகபோறதில்ல நடந்து முடிஞ்சுட்டு கெளம்பலாம் முன்ன பின்ன தெரியாத ஊருக்கு போறோம். என்ன நடக்குமோ??.. எங்க தங்குறதுனு ஒன்னுமே தெரியல புனிதா.
ஆமாத்த மாப்புள எங்க போனாரோ??.. யாரோ புகழாம் அந்த தம்பி தான் இப்ப போனு போட்டு நமக்கு தாக்கல் சொல்லிசு.
வாங்க கெளம்புவம். ஒரு மூனு நாளைக்கு ஏத்த மாதிரி உடுப்பு எடுத்துகோங்க அத்த.
***********
சென்னை ரவ்டீஸ்.
ஹலோ நான் ரெங்கன் பேசுறேன்டா அவள புடிச்சுடிங்களா???..
இல்லண்ணே நாங்க தொரத்திகிட்டு தான் வந்தோம் அந்த புள்ள ஒரு காருல மோதி கீழ விழுந்துடுசி அவன் தூக்கிட்டுபோய் சிட்டி ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காண்ணே.
நாங்க அங்கதான் வெளிய நிக்குறோம்.
சரிடா நானும் அங்க வாறன் நீங்க எங்கயும் போயிறாம என்ன நடக்குதுனு தாஸ உள்ள அனுப்பி பாருங்க.
டேய் நீ என்னடா காள இவனுக்கு எல்லாம் பணிஞ்சு பேசுற??.
பின்ன என்னடா தாஸு அவன்தானே நமக்கு பெரியவன் கந்தன். அந்த பொம்புளைக்கும் வலது கை வேற.
“அவள யாரு கொண்டுவந்து சேர்த்தானோ தெரியலடா????….
“அதிரடியாக தெரியப்படுத்துவான் அவன் யார் என்று”.  
தொடரும்….

Advertisement