Advertisement

அத்தியாயம் முன்று.
சென்னையில் விரல் விட்டு என்னும் பணம் படைத்த அதிகார வர்க்கத்தினரில் ஒருவர்தான் சிவசங்கர் வர்மா.
[அதாவது அவர எல்லோரும் சிவா என்று தான்  கூப்புடனுமாம் பண இருக்குறதனால அவர் நினைச்சா ஒருவரை வாழவைக்கவும் முடியும் அழிக்கவும் முடியுமாம். லோட் சிவானு மனசுல நினைப்பு இந்தாளுக்கு.]
இவரோட மனைவி சுவேதா [அமைதின்னா அமைதி அப்புடி ஒரு அமைதி திமிர்புடிச்ச புள்ளைகள் இரண்டுக்கும் நல்லது சொன்னா புடிக்காது எங்க தான் ஏதும் கதைக்கப்போய் வீட்ல பிரச்சினை வந்துருமோனு பயம் இவருக்கு. இவர்ட பிள்ளைகளுக்கே இவருக்கு வாய் பேச வருமானு சந்தேகம் இருக்குன்னா பாருங்க. ஆனா நல்ல கவனிச்சு புள்ளைகள பார்த்துபார் அன்பான அன்னை ஆனா அத மனதளவில தான். அத அவங்கட்ட நேரடியா காட்டமுடியாது. அவங்க கூட பேசவும் மாட்டார்.]
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்
  1. நம்ம கதையின் நாயகன் மகேஷ்வர்மா. அழுத்தம்னா அழுத்தம்  அப்புடி ஒரு அழுத்தமான காளையவன்.
  2. சிரிப்புனு ஒன்னு இருக்கா?.. னு கேள்வி கேட்டும் கட்டுமஸ்த்தான 29வயது ஆண் மகன்.
  3. வேலை னு வந்தா நீதி நாய தர்மப்படிதான் வேல நடக்கனும். ப்ராடு பண்ணி யாரும் மாட்டினாங்க வாழ்கைல மறக்கமுடியாத தண்டனை குடுப்பான்.
இரண்டாவது ராஜ்வர்மா. [MBA] இருதிவருடம்.
ப்ளே பாய் அப்பன் காச கரைச்சு சொகுசா வாழநினைப்பவன்.
மூன்றாவது. ஷர்மினி [காலேஜ் இரண்டாவது வருட மாணவி]
ஒரே வரில சிவசங்கர் வர்மாவின் [ஜெறாக்ஸ்] பா இந்த பொண்ணு உடம்பு ப்புள்ளா பணத்திமிர்.
“அனுபவ பாடம் மாதிரி வேறு ஆசான் யாரு?.. இந்த புள்ளயும் திருந்துற காலம் வரும் போல யாரு கண்டா?..
ஷர்மி அவளது அறையில் இருந்து கையடக்க தொலைபேசியில் அவளது முகநூல் நண்பர்களுடன் சாட்பண்ணிக்கொண்டு இருந்தால் சுவாரசியமாக.
அதை கெடுப்பது போன்று அவளது அறை கதவு தொடர்ந்து தட்டப்பட்டது அதில் எரிச்சல் உற்றவள் “இதோ வரேன் இந்த வேலக்கார நாய்களுக்கு நான் காலேஜ் போனதும் அறைய கிளின் பண்ண வேண்டியது தானே சும்மா டிஷ்ட்ப் பண்ணுதுகள் னு வாய்ல வாந்த மாதிரி தீட்டி தீர்துக்கொண்டே கதவை திறந்தால்.
“ஹாய் ஷர்மி மா குட் மோனிங்”.
“ஹாய் டாட் நீங்களா?.. வாட்  எ சர்ப்ரைஷ்  நீங்க என்ன பார்க்க என்னோட ரூம்க்கு வந்துருக்கீங்களா?.. என்னால நம்ப முடியல டாட்.”
[அதாங்க சிவசங்கர் வர்மாவேதான் அவர் இவ்வளவு லேசுல யாருட்டயும் அவர் கெத்த விட்டு போகமாட்டார் அதுதான் அவர் மகளே அவ்வளவு சாக்கிங்கா பார்க்குது. “காரியம் ஆகனும்னா கழுதையும் காலபுடிக்குமாம்”]
“அப்புடிதான் இங்க நடக்கபோகுது நீங்களே பாருங்க”
“சொல்லுங்க டாட் கூப்புடுயிருந்தா நானே வந்துருப்பனே நீங்க ஏன் டாட் வந்து உங்க டைம வேஸ்ட் பண்ணுறீங்க?..
”  ஒரு முக்கியமான கவர்மெண்ட் வேல டென்டர்கு வருது அதுக்கு இன்னைக்கு லாஸ்ட் டேட் அத சமிட் பண்ண உங்க அண்ணன் மகேஷ்சோட  சைன் வேணும்மா  அவனோட வீட்டுல இருந்து  அவன் ஆபீஸ் போறதுகிடையில நீ அவன மீட் பண்ணி சைன் வாங்கி என்னோட    பி எ மாலிக் வருவான் அவன்ட குடுத்தனுப்பு பைல. ரொம்ப இம்போர்டன் சர்மி விளையாட்டு இல்ல புரிஞ்சுக்கமா.
இது சக்சஸ் ப்புள்ளா முடிச்ச உனக்கும் செயார் தருவன் ஒகே”
“ஒகே டாட் டோன்ட் வெரி நான் பார்த்துக்குறன் நீங்க இத இனி என்னோட கைல விட்டுட்டு நீ உங்க மற்ற வேலைய பாருங்க.”
” ஒகே மா அந்த அடங்காதவன்ட சைன் வாங்குறது அவ்வளவு லேசு பட்ட விசயம் இல்ல எல்லாதயும் பக்காவா காய் நகர்த்தனும் ஷர்மி”
“ஒகே டாட் பைல ஏன் கைல குடுத்துட்டீங்கல்ல நான் இனி என்ன செய்யணும்னு பார்த்துகுறன்.”
“ஒகே மா பாய் டேக் கெயர்”
*****************
“ஹலோ- யாருங்க கார் கண்ணாடிய ஒடைச்சது. யாரா இருந்தாலும் வெளிய வாங்க?.. இடியட்ஸ்..
[மகேஷ் வர்மா. அவனது பாட்டியின் அன்னை பேச்சியம்மாவை வயது92 வயது முதிர்வினால் ஊரில் அனைவரும். அவரை பெரியாத்தா என்று தான் அழைப்பர். அவரை பார்ப்பதற்கு தான். லீவ் எடுத்து மதுரைக்கு வந்துள்ளான். அவர்தான் அவனை வளர்த்தவர். சிறு வயதில் இருந்து அந்த கிராமத்தில் இருந்து கொண்டு கொஞ்சம் தொலைவில்  டவுனில் இருக்கும் உயர் பாடசாலையில் தான் படித்தான். அவனின் 15வது வயதில் அவனது தந்தையின் தந்தை மணிவாசக வர்மா வின் இறுதி நேரத்தில் அவனை சந்திக்க வரச்சொல்லவும் மதுரையில் இருந்து சென்னைக்கு சென்றான்.]
அங்கே அவர் அவனிடம் கூறியதை கேட்டு.  அங்கிருந்தே படிப்பை தொடர்ந்து படித்து அவனது தாத்தாவின் இறுதி ஆசையை நிறைவேற்றி கம்பிரமாக அவனது வேலையில் இருக்கின்றான்.
தற்போது முதலாவது போஸ்டிங் அவனது தந்தையின் பவரில் சென்னையிலயே கிடைத்து விட்டது.அது அவனிற்கு தாத்தாவின் நோக்கத்தை செய்வதற்கு மிகவும் வசதியாகி போனது.
“சொந்த செலவிலயே சிவசங்கர வர்மா தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டார்.”
“அவனின் விலை உயர்ந்த கார் கண்ணாடி உடைந்து விட்ட கோவத்தில் இருக்கும் போது அவனது தொலை பேசி அழைத்தது”
அதை எடுத்து காதிற்க்கு கொடுத்தான்.
ஷர்மி-ஹலோ. ஹாய் ப்ரோ எங்க இருக்குறீங்க வீட்டயே இருங்க இன்னும் பைவ் மினிட்ஷ்ல நான் அங்க இருப்பன்.
மகேஷ்- வெயிட் ஷர்மி முதல் கோல் பண்ணினா என்னயும் பேசவிடு ஒகே. நான் என்ன சொல்ல வாரனு கேக்கனும். நீ எங்கயும் வராத நான் இப்போ ஆல் மோஸ்ட் பாட்டிய பார்க்க லீவ்ல மதுரை வந்துடன் ஒகே இனி மன்டே ஆப்பீஸ்க்கு தான் வருவேன் மைட் இட்.
ஷர்மி- என்ன அந்த கிழவிய பார்க்க  எங்க யாருட்டயும் சொல்லாம நீ போயிருக்கியா??.. இது டாட் கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?..
மகேஷ்- சட்டாப் ஷர்மி பர்ஸ்ட் பெரியவங்கள மதிக்க கத்துக்க ஒகே. பெரியாத்தாவ இப்புடி இடியட் மாதிரி பேசுறது எனக்கு சுத்தமா புடிக்காது ஒகே மைண்ட் யுவர் வேர்ட்ஸ். நான் ஜாலியா சந்தோசத்த தேடி வீக்கெண்ட்ட கழிக்க. பாட்டிய பார்க்க வந்துருக்கன். இனி என்னோட பர்சனல் நம்பர்கு யாரும் கால் பண்ணி டிஸ்டப் பண்ணகூடாது. ஒகே பாய்.
**********
வடிவு- அடி பொன்னி இந்தாள் என்னடி இம்புட்டு வளர்ந்துகெட்டவனா இருக்கான்.
வோவக்காரன் போல மூஞ்சப்பாரு பனமரம் முசுடு போல இருக்கானே  என்ன செய்யப்போறானோ??.. தெரியல புள்ள.
இந்த ராசு பயட பேச்ச கேட்டு கார சரியா பார்க்காம விட்டுடம் டி அவன் பேச்ச கேட்டுருக்க கூடாது போல டி பொன்னி. அந்த நிரஞ்சன் அத்தான்ட காரு இம்புட்டு அழகாவா?.. இருக்கும். அது டப்பா காருடி. அத கவனிச்சு பார்க்காம விட்டுடமேடி இப்ப  என்ன செய்றது நாம??.
ராசுகுட்டி- ஐயோ வடிவக்கா இந்த பக்கம் வா எனக்கு என்ன நடக்குமோனு பயமா இருக்கு உனக்கு காரு பத்தி ஆரச்சியா முக்கியம். அந்த சாரு வேற நாம கல்லால அடிக்கும்போதுதானா?.. கார நிறுத்தி போன் கதைக்கனும். ஓடும் போதுனா சில நேரம் குறி தப்பிருக்கும். இப்ப காரு நின்னுருசி சேதாரம் அதிகம் போல வடிவக்கா.
பொன்னி- அடி வடிவு எனக்கு பயமா இருக்குடி.
[நானே உள்ளுக்கு நடுங்குறன் இதுகள் வேற என்ன இன்னும் பிதீயாக்குதுகளே டி வடிவு. மொத்ததுல உனக்கு இன்னைக்கு நாள் சரி இல்லடி]
வடிவு- இப்ப என்னங்கடா நாங்க மாங்காய்கு கல்லால எரிஞ்சம் அது உங்க கார்ல பட்டுறுச்சினு முனு பேரும் ஒரே மாதிரி சொல்லுவம். பனமரத்துட்ட நம்மல கண்டுபிடிச்சா சரியா?..
பொன்னி- வாங்க போய் ஒளிஞ்சுபம்.
வடிவு வடிவு புள்ள வடிவு டேய் ராசுகுட்டி வடிவு எங்கடா போய்ட்டு நம்மகூடதானே வந்துசி காணயில்லயேடா…
எனக்கு மட்டும் என்னக்கா தெரியும் நானும் உங்களோடதானே இருக்குறன்.
இப்ப கலை அத்தை கேட்டா என்ன சொல்லுறது வயல்லயும் எங்கயும் வடிவூ.. அவள காணயில்லடா வா வடிவுட வீட்ட போய் சொல்லுவம் ராசுகுட்டி அழுவாதடா வா போவம்.
ராசுகுட்டி- எனக்கு பயமா இருக்குக்கா என்ன நடக்குமோ??.. தெரியல.
**************
ஷர்மி- ரொம்பவும் டென்சனாக இருந்தாள் அவளது பங்கு அவளுக்கு கிடைக்கபோவதில்லை என்று தெரிந்து விட்டது அந்த கடுப்பில் இருந்தாள்.
சங்கர்- சொல்லு ஷர்மி என்ன போன் செய்த விசயம் என்னனு சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம். டெல் மீ.
ஷர்மி- டாட் நம்ம காரியம் நடக்காது போல அந்த நியாயவாதி அந்த கிழவிய பார்க்க போயிருக்கானாம்
சங்கர்- ஷட் ஒகே டொன்ட் வெரி இனி நான் என்னோடா ஸ்டையில் ல சைன் வாங்கிகுறன் நீ காலேஜ் போ மா.
  ***********
  வடிவின் வீட்டில்.
முத்து- ஏன்டி குழலி இந்த வடிவக்காவ  இன்னைக்கு என்ன பண்ணுறனு மட்டும் பாரு நம்ம யாருக்கும் பலகாரம் வைக்காம எடுத்துட்டு போயிட்டாள்ல இரவு அம்மகூட நான்தான் கண்முளிச்சு செய்தன் அப்பயும் ஆளுக்கு முதல் போய் படுத்துட்டா நான் குளிக்கபோன கேப்ல எடுத்துட்டு போய்ட்டாளே வரட்டும் இன்னைக்கு.
கலைவாணி- ஏய் என்னங்கடி சத்தம் அங்க உள்ளாற வந்தன்னா தெரியும் சங்கதி.
ஒரு பொட்டபுள்ளைக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா??.. வரட்டும் வீட்ட இன்னைக்கு காலுக்கு கீழயே சூடு இலுக்குறன்.
மூனு பொம்புள புள்ளைகல பெத்தும் எல்லா வேலயும் என் கையாலயே செய்யவேண்டிய நிலமை. கல்யாணம் கட்டுற வயசுல கூடமாட ஒத்தாச செய்து பழகினாதானே நாலு வேலய தெரிஞ்சுக்க முடியும்.
என்நேரம் ஊர் சுத்த போனவ மழை வேற தூற ஆரம்பிச்சுட்டு இவள இன்னும் காணோம்.
நாளைக்கு கல்யாணம் கட்டி போற வீட்டுல எனக்கு என்ன பாட்டு விங்கி தர போறாளோ வளர்த்த வளர்ப்பு சரி இல்லனு எல்லாம் அவங்க அப்பா குடுக்குற செல்லம் தான் அவ இப்புடி ஆடுறா?..
பொன்னியம்மா- ஏம்த்தா கலை ஏன் சத்தம் போடுறவ?..
கலை- அட வாங்க அத்த                 நீங்க இம்புட்டு தூரம் வந்துருக்கிங்க. செத்த இருங்க வாரன் காப்பி தண்ணி கலக்கி எடுத்துட்டு முகமெல்லாம் வாடி கெடக்கே என்ன சங்கதி.
பொ- என்னடியம்மா செய்யட்டும். இந்த வயசு போன காலத்துல இந்த புள்ளைங்க வீட்டுல இருக்கவிடுதுகலா??.. பொன்னியும்,ராசுகுட்டியும் காலையிலயே வந்துசுதுக இன்னும் வீட்டுக்கு வரல மா அதுதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தன்.
கலை-  இந்தாங்க  அத்த காப்பி குடிங்க அதுக்குதான் நானும் வடிவுக்கு சத்தம் போடுறன் இன்னும் காணோமேனு தோப்புக்கு போயிருக்காங்களாம்.
பொ-  இதோ இதுகள் ரெண்டும் வருதுகளே ஏன்டா ராசுக்குட்டி அழுவுற அடியே பொன்னி நீயாவது என்னனு சொல்லுடி?..
கலை- வடிவு எங்கத்தா பொன்னி என்னனு சொல்லுங்களேன் நெஞ்சு பதறுதுத்தா..
பொன்னி- நாங்க மாங்காய் சாப்புட்டுகிட்டே பேசிகிட்டு நடந்து போயிட்டு இருந்தம் அத்த. கொஞ்சம் தூரம் போனபிறகும் வடிவுட சத்தம் இல்லனு திரும்பி பார்த்தம் எங்க பின்னால வந்த வடிவ காணோம் அத்த எல்லா இடமும் தேடிட்டம் எனக்கு பயமா இருக்கு அத்த அதுதான் உங்கட்ட சொல்ல வந்தம்.
கலை- ஐயோ என்ன புள்ள சொல்லுற நீ சொல்லுறது உண்மையா??.. நான் இப்ப என்ன செய்யடும் இதுகுதான் தலபாடா அடிச்சுகிட்டன் கேட்டளா?.. இந்த கூறு கெட்டவ. முத்து இங்க வா
முத்து . என்னம்மா?..
கலை- அந்த போனுல அப்பாகு கூப்புடு எங்க என்ன செய்யுறாலோ தெரியலயே?..
அலோ.  என்னங்க நம்ம வடிவ காணோமாங்க எனக்கு பயமா இருக்கு வீட்டுக்கு வாங்க தோப்புல இருந்த புள்ள எங்குட்டு போனாலோ.
ராஜதுரை –  நமக்கு யாரும் எதிரிகள் கடத்துறளவுக்கு  இல்ல வாணி நீ கவல பட்டு புள்ளைகளயும் பயப்புட வைக்காத நான் வீட்டதான் வந்துட்டு இருந்தன் இப்ப தோப்புல போய் பார்க்குறன். வேற யாருடயும் தோப்பு மாங்காய் இனிக்கும்னு அங்க போய் இருக்கும். வடிவு இதுக்குமுன்ன இப்புடி செய்தது இல்லயா என்ன வடிவ நான் கூட்டிவாரன்.
பொ- பதறாதத்தா புள்ள எங்க போயிரபோகுது அது பொறந்து வளர்ந்த ஊருல அதுக்கு என்ன நடக்கபோகுது பார்த்துக்கலாம். அங்கபாரு உன்ன பார்த்து முத்து குழலி எல்லாம் அழுவுறாங்க.
கலை- அவள பெத்ததுக்கும் கூடப்பொறந்ததுக்கும் அழுவுறத தவிர நாங்க என்ன அத்த செய்யமுடியும் கொஞ்சமும் கூறு இருக்கா?.. இருந்தா இப்புடியா??.. எங்கள தவிக்கவிடுவா?..  இவளுக்கு…
பொ- வடிவு வேணும்னு இப்புடி இருக்குற புள்ள இல்லனு உனக்கும் தெரியும். ஏதோ கால கிரகம் வடிவ இப்புடி போட்டு ஆட்டுது வந்ததும் குலசாமி கருப்பன ஒரு வாட்டம் போய் எல்லாரும் கெடா வெட்டி கும்புட்டு வந்துருவம்த்தா. போத்தா போய் காசு முடிஞ்சு வை கருப்பனுக்கு புள்ள நல்ல படியா கெடைக்கணும்னு.
“யாருக்கும் காத்திராமல் நேரம் அது கடமையை தவறாது செய்தது இரவை நெருங்கியது”
வடிவு இன்னும் வீட்டிற்கு வரவில்லை அதனால் அந்த வீட்டில் காலை உணவை தவிர வேறு எதுவும் யாரும் இன்னும் சாப்புடாமல் ஆளுக்கு ஒரு மூலையில் கவலை அப்பிய முகத்துடன் இருந்தனர்.
முத்து- அம்மா. அப்பா வந்துட்டாங்க.
கலை- என்னங்க எங்க அவ?..
ராஜதுரை- நானும் தேடாத இடம் இல்லத்தா எங்கயும் புள்ள இல்ல என்ன செய்யுறது அதுதான் பஞ்சாயத்து தலைவர்ட விசயத்த சொல்லிப்புட்டு வாரன்.
“சாப்புடுறீங்களாங்க?. எனக்கு எதும் வேணாம்த்தா அங்கபாரு கடைக்குட்டி தூங்கபோகுது அத எழுப்பி சாப்பாடு குடு நீ சமைச்சுயா?.. என்ன”
“இல்லங்க வேணி அத்தாச்சி தான் வந்து குடுத்துட்டு போனாக.”
“சரி புள்ளைகளுக்கு சாப்புட குடுத்தா நான் வெளிய இருக்கன்.”
“அடுத்த நாள் காலை.
துரை அண்ணே துரை அண்ணே”
“என்று வீட்டுக்கதவு தட்டப்பட்டது  காலை நான்கு மணி வரை ராஜதுரை வெளி திண்ணையில் கண்முளித்துதான் இருந்தார். மழை தூறல் விழவும் உள்ளே சென்று கண்ணசந்து விட்டார் வெளியே கூப்புடும் குரல் கேட்கவுமே விழித்துவிட்டார்”
யாருங்க??.. இதோ வாரன்.
அட!.. வா மாடசாமி வந்து இரு ஐயா அனுப்பிச்சாரா??..
ஆமாங்கண்ணே எல்லாம் நம்ம வடிவு பாப்பா விசயம்தான்ணே பாப்பா ஐயா வீட்ட வந்துருச்சுண்ணே ஐயாதான் பாப்பாக்கு ஒன்னும் இல்ல பத்திரமா இருக்கு உங்கள பயப்புட வேணாம்னு சொல்லிட்டு காலை 8.30 மணிக்கு பஞ்சாயத்துகு வர தாக்கல் சொல்ல சொன்னாங்கண்ணே. வந்துருங்க நான் வாரன்.
ராஜதுரை- அட இருப்பா என்ன நடந்துனு சொல்லு வடிவு எப்புடி அங்க வந்துசு நான் எல்லா இடமும் தேடினனே!…
எனக்கு அத பத்தி எந்த விபரமும் தெரியாதுண்ணே ஐயா ஏதும் சொல்லிகல உங்கள பஞ்சாயத்துல  வந்து தெரிஞ்சுகவாம். பாப்பாக்கு ஒன்னும் இல்லண்ணே பயப்படாதீங்க நான் வாரன் வேல இருக்கு.
வாணி என்னங்க??.. மாடசாமி அண்ணே சொன்னத நானும் கேட்டங்க அந்த பாவி மக என்ன செய்தாலோ இன்னைக்கு பஞ்சாயத்து வர வந்து நிக்குது அவள்ட துடுக்குக்கு ஒரு அளவே இல்லாம போச்சுங்க. போகனும் என்னவோ தெரியலயே!..
நீங்க ஒரு வாட்டம் ஐயா வீட்டுக்கு போய் என்னனு பார்த்துடு வாங்களேன்.மனசு அடிச்சுகுதுங்க.
அது சரிவராதுத்தா ஐயாக்கு தனிப்பட்ட முறையில பஞ்சாயத்து விசயமா பார்க்குறது புடிக்காது அதுதான் நம்ம புள்ளய்க்கு ஒன்னும் இல்லள நீ உள்ளாற போய் வேலய பாரு மொத எனக்கு ஒரு காப்பி தா வேலய முடிச்சுட்டு பொரப்படுங்க..
************
” டொம் டொம் டொம் இதனால் மக்களுக்கு தெரியப்படுத்துவது என்ன வென்றால் இன்று காலை 8.30 மணிக்கு பஞ்சாயத்து கூட இருப்பதால் அனைவரையும் தவராது பஞ்சாயத்தில் கலந்துகொள்ளுமாறு பஞ்சாயத்து  தலைவர் ஐயா கந்தசாமியின் உத்தரவுங்கோ”  …
********
பஞ்சாயத்து கூடும் இடம்..
மக்களின் சலசலப்பு.
பொன்னி -அத்த இந்தா ஐயா கூட வடிவு வாராளே.
கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் புள்ளையை காணத தாயின் கண்ணில் பரிதவிப்பு. உச்சி முதல் பாதம் வரை வருடியது. தனது மகள் உடலளவில் ஒன்றும் இல்லாமல் நன்றாக இருப்பதை பார்த்த பின்புதான். மனம் கொஞ்சம் அசுவாசப்பட்டது. அத் தாயிற்கு.
தலைவர் கந்தசாமி ஐயா அவரது பெரிய மீசையை தடவிய படியே தொண்டையை செருமிக்கொண்டு.அவரது வருகையை மக்களுக்கு தெரியப்படுத்திய படியே அவரது இருப்பிடத்தில் வந்து அமர்ந்தார்..
அனைவருக்கும் காலை வணக்கம்.
எல்லோரும் அமைதியா இருந்தீங்கன்னா நானும் என்ன பிராதுனு தெரிஞ்சுக்க  தீர விசாரிப்பன்.
எல்லா குடும்பங்களில்லிருந்தும் ஒவ்வொருத்தர் படி வந்துருகீங்களா??..
தவிர்கமுடியாத காரணமாக  இருந்தாமட்டும் வராதவங்க பஞ்சாயத்து போர்ட்டுக்கு கடிதமும். அபாரதொகையும் நாளைக்கு கட்டிரனும் சொல்லிருங்க.
ஏன்பா பிராது காரவுக குடும்பம் வந்துடிங்கன அவுக புள்ளைகளுக்கு பக்கதுல  வந்து நில்லுங்க.
சரி ஆரம்பிக்கலாம்..
ஏன்மா வடிவு என்னமா நடந்துசு??.. இங்க நீ யாருக்கும் பயப்புட வேணாம். உள்ளத உள்ள படி சரியா சொல்லனும்த்தா புரிஞ்சுதா??..
நடந்தது என்ன??.. தொடரும்……

Advertisement