Advertisement

ராஜதுரையுடன் கைபேசியில் பேசியதும் வீட்டிற்கு சென்ற வேணி தனது அத்தையிடம் விபரம் சொல்லிவிட்டு ராசுக்குட்டியையும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு வந்த மகேஷின் காரில் ஏறி சென்றுவிட்டார் கிளினிக்கிற்கு.
அன்று ஓய்வு எடுத்துவிட்டு அடுத்தநாள் காலை சென்னையில் இருந்து ஹார்ட் பெஸலிஸ்ட் வரவழைத்து சத்திரசிகிச்சை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துமுடித்தான் மகேஷ்.
மாலை நேரமானதால் கோவிலிற்கு ஊர்மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.
அதை பார்த்த ராசுக்குட்டி அவனது வீட்டிற்கு சென்று அபத்தாவிடம் விபரத்தை சொல்லி அவரை அழைத்துவந்தான்.
வந்த பொன்னியம்மாவோ பொன்னியை தனது பக்கம் இழுத்து ” என்ன காரியம் செய்துட்டிங்க தம்பி இப்புடியா செய்விங்க படிச்சிருக்கிங்க தானே இப்பவே உங்க அம்மா அப்பாவை வரச்சொல்லுங்க, நான் ராஜதுரைக்கு கூப்புடுறேன்.” என்று அவருக்கு அழைத்து சுருக்கமாக விபரத்தை சொல்லிவிட்டு வைத்தவர் நேராக பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி வீட்டிற்கு அழைத்துசென்றார் இருவரையும்.
விபரம் கேள்விபட்டு ராஜதுரையும் மகேஷும் அங்கு வந்தனர்.
இரவு நெருங்கும் நேரம் தான் கனகா குடும்பத்துடன் அங்கு வந்தார் அவர்களுக்காக காத்திருந்தவர்கள் அவர்கள்  வரவும் உடனடியாக பஞ்சாயத்தை ஆரம்பித்தனர்.
இந்த விஷயம் கேள்வி பட்டதும் இன்று தான் சுவிதாவை பார்த்துக்கொள்வதாகவும் நாளை வந்தால் போதும் என்று பெரியாத்தா வேணியை உடனே அனுப்பிவைத்தார்.
நேரடியாக நிரஞ்சனே தான் பொன்னியை விரும்புவதாகவும் இதை வீட்டில் சொன்னால் தனது அம்மா கனகா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் வீட்டில் தனக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்திருப்பதாகவும் அதனால் தான் இப்படி ஒரு காரியம் செய்ததாகவும் இதில் பொன்னியின் தவறு ஒன்றும் இல்லை தான் விரும்பியது கூட சொல்லமுடியாமல் போய்விட்டது.
இன்று காலையில் ராஜதுரை மாமா வீட்டிற்கு அழைத்து பேசிய போது குழலி தான் கேட்டது அனைத்திற்கும் பதில் அளித்ததனால் அதில் பொன்னி கோவிலுக்கு வருவது தெரிந்தபடியால் இன்று திருமணம் முடித்து விடவேண்டும்  என்று நினைத்தேன்.
அதன் படி நடந்துவிட்டது” என்று அவன் தரப்பு விளகத்தை கூறினான் நிரஞ்சன்.
“இந்த கல்யாணம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏன்டா உனக்கு புத்தி இப்புடி போகுது உன்னை நினைத்து நான் எவ்வளவு பெரிய கனவு கண்டிருந்தேன் எல்லாத்தையும் இப்புடி நாசமாக்கிட்டியே நீ அடிக்கடி இங்க வரும் போது அந்த பட்டிக்காடு வடிவைத்தான் பார்க்க வாறன்னுல நினைத்தேன் ஆனா அவளோ இந்த கலெக்டர் சாரை கட்டிக்கிட்டு போய்ட்டாள் ஆனா இந்த சிறுக்கியதான் பார்க்க வந்தியா?? இவங்களிடம் என்ன சொத்து இருக்குனு நீ பொண்ணு எடுத்த ஒரு பைசா தேராது அப்பனும் இல்ல இந்தா இவங்களே கூலி வேலை செய்துதான் அந்த குடும்பம் ஓடுது.”
என்று இன்னும் வாய்க்கு வந்தது என்னவெல்லாம் பேசியிருப்பாரோ கனகா அவரது கணவன் தர்மராஜ் கொடுத்த அடியின் வலி தாங்கமுடியாமல் வாயை மூடிக்கொண்டார் கனகா.
” பஞ்சாயத்துல அவளுக்கு  பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் இவ பணம் வரசட்சனை அழகு என்று முக்கிய தேவை அன்பான குணத்தை தவிற தேவையற்ற அனைத்தையும் பிடித்துக்கொண்டு பெண் தேடுகின்றேன் என்று அலைந்து மகனையும் நிம்மதி இல்லாமல் ஆக்கியிருக்கின்றாள். “
” அப்போது தான் நிரஞ்சன் பொன்னியை பற்றி என்னிடம் சொன்னான் நானும் பொருமையா துரை மச்சானிடம் சொல்லி பேசச்சொல்லுறேன்னு சொன்னேன் ஆனால் என்ன நினைத்தானோ இன்று காலை எனக்கு கால் பண்ணி அப்பா நான் இன்னைக்கு பொன்னிக்கு தாலிகட்டி கல்யாணம் பண்ணிக்கபோறேன் என்னை தப்பா நினைக்காதிங்க முடிஞ்சா மாமா ஊருக்கு வாங்கனுசொல்லி வச்சிட்டான் அப்போ நான் சென்னையில் இருந்தேன் இப்பதான் இங்க வந்தேன் இதுதான் நடந்தது இவங்களை இந்த பஞ்சாயத்துலயே சேர்த்து வச்சிடுங்க.” என்று தனது மகனிற்காக பேசியபடியே அவனது தோளில் கை போட்டு அணைத்து நின்று கொண்டார் அந்த அன்பு தந்தை.
அதன் பின் வேணி ராசுக்குட்டி குழலி என்று அனைவரும் நடந்ததை சொன்னார்கள். 
“சரி தம்பி இப்பவே உங்க அம்மா இந்த போடுபோடுது நாளபின்ன பொன்னியை எப்புடி நல்லபடியா வாழவைக்கும் ”  என்று பஞ்சாயத்தில் ஒருவர் கேள்வி கேட்கவும் ” அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை வராதுங்க ஐயா நான் நேர இங்கயிருந்து நாளைக்கு மெட்ராஸ் போறேன் அங்கயே எனக்கு வேலையும் இருக்க வீடும் எங்க அப்பாவே ஏற்பாடு பண்ணிடுதான் வந்திருக்கின்றார்.அங்கதான் வடிவும் மகேஷ் அண்ணாவும் இருக்குறாங்க வடிவோட இருந்தா பொன்னியும் சந்தோசமா இருக்கும் நானும் நிம்மதியாக வேலைக்கு போவேன் எங்க அம்மா எப்பா மனம் திருந்தி அம்மாவோட பாசத்தை காமிக்க வாறாங்களோ அப்போ தான் நான் திருச்சி போவேன் அதுக்கிடையில இங்கதான் வேணி அத்தை வீட்டுக்கு வந்து போவோம் யாரும் எதுக்கும் பயப்புட வேணாம் முக்கியமாக அத்தை பாட்டி நீங்க யாரும் எதுவும் நினைத்து கவலைபட வேண்டாம் நீங்க பொன்னிக்கு மாப்பிள்ளை பார்க்கிறிங்கன்னு தெரிஞ்சுதான்  அவசரமாக இப்புடி செய்யவேண்டியதாக போய்ட்டுது  அத்தை என்னை மன்னிச்சு ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை அப்பத்தா” அனைத்து பெரியவர்களின் காலிலும் விழுந்து ஆசீ வாங்கினான்.
” ஏன்பா நீங்களே எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டா அப்புறம் ஏன்பா பஞ்சாயத்து கூட்டினிங்க” என்று பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி கேட்கவும்.
ஒருவாறு அவரை அமைதிபடுத்தி பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு இன்று இரவை ராஜதுரையின் வீட்டில் கழித்து விட்டு நாளை மெட்ராஸ் செல்வதாக இருந்தனர்.
அங்கும் சென்று கனகா தனது திட்டை ஆரம்பிக்கவும் இம்முறை 
நிரஞ்சனே திட்டிவிட்டான் கனகாவை ” வாழுறதுக்கு பணம் தேவைதான் இருந்தாலும் பணமும் பகட்டும் வாழ்க்கை இல்லை நான் வாழ்வை அனுபவித்து நிம்மதியாக வாழனும்னு நினைத்தேன் மா அதுதான் எனக்கு பிடித்த பொன்னியை கல்யாணம் பண்ணிருக்கேன் அவள் ஒரு நாளும் உன்னை மாதிரி பணத்தை கண்டதும் மாற மாட்டாள் நீ தான் பணத்துக்கு பின்னுக்கு திரிந்து எங்க யாரையும் அன்பா பார்த்துக்கல அப்பாவும் உன்னால நிம்மதி இல்லாமதான் வேலை வேலைனு வெளியூர்லயே தங்கிடுறாரு சரியா நாங்க நிம்மதியான ஒரு வாழ்வு வாழனும் அதுக்கு நீ இடஞ்சலாக நிக்காம இருந்தாலே போதும்.” என்று அவனது நீண்ட நாள் ஆதங்கத்தை இன்று ஒன்று திரட்டி ஒரு வழியாக்கிவிட்டான் கனகாவை அவரது தவப்புதல்வன்..
அடுத்தநாள் அவர்களை நல்லபடியாக மெட்ராஸ்க்கு வழியனுப்பி வைத்துவிட்டு வேணியும் சுவிதாவை கவனித்துக்கொள்வதற்க்காக சென்றுவிட்டார்.
******* 
ஒருவழியாக ஹனிமூன் ட்ரிப் முடிந்து அவர்கள் வாங்கியவற்றை பிரித்து எடுத்துக்கொண்டு மதியின் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றான் புகழ்.
அங்கும் மாமியார் வீட்டு விருந்து முடித்துவிட்டு தீம் பார்க் கோவில் பவானி ஆறு என்று சுற்றி திரிந்து விட்டு சென்னை வந்துவிட்டனர் புகழ் தம்பதியினர்.
வெற்றிகரமாக சத்திரசிகிச்சையை முடித்து ஒருமாதம் பாட்டிமாவிடம் ஓய்வு எடுத்து உடம்பை தேற்றிக்கொண்டு மகேஷிடம் சென்னை வந்துவிட்டார் சுவிதா.
வடிவும் மகேஷும் அவரை நன்றாக அன்புடன் பார்த்துக்கொண்டனர். மகேஷும் பழயதை நினைத்து தானும் வருந்தி தாயையும் வருத்தபடவைக்காமல் இனியாவது தனது தாயுடன் அன்பாக வாழுவோம் என்று தாயை ஏற்றுக்கொண்டான் மகேஷ் வர்மா.
நான்கு  மாததிற்கு பின். 
விமர்சையாக வடிவின் வளைகாப்பை அனைவருக்கும்  சொல்லி மண்டபம் பிடித்து செய்து முடித்தனர்.
அன்றே அவளுக்கு வலி எடுக்கவும் உடனடியாக ஷிட்டி ஹாஸ்பிடல் அழைத்து சென்றுவிட்டான் மகேஷ் அதன் பின்தான் அனைவருக்கும்  
அழைத்து சொன்னான். 
ஒருவழியாக வடிவை பாடு படுத்திவிட்டு அவளது இரண்டு ஆண் குழந்தைகளும் இந்த பூமியில் ஜனித்தனர்.
அப்போது மதியும் நான்கு மாதமாகவும் பொன்னி மூன்று மாதமாகவும் இருந்தனர்.
தனது பேரப்பிள்ளையை பார்த்த சந்தோசத்தில் சுவிதா மிகவும் மனதளவில் உடலளவிலும் நன்கு குணமடைத்து விட்டார்.
ஒருமாததில் மொட்டை அடித்து பேர்வைப்பதற்கு இதோ அனைவரும் மதுரையில் பெரியாத்தாவின் ஊரில் அவரின் ஆசியுடன் கறுப்பரின் முன் புகழின் மடியில் வைத்து மொட்டையடிது காது குத்தி      ஆதர்ஷ் வர்மா , ஆதேஷ் வர்மா என்று பெயரிட்டு சீனி வைத்து மகிழ்ந்தனர் மகேஷ் தம்பதியினர்.
அங்கே கறி விருந்தும் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
வடிவின் அம்மா வீட்டில் அவர்களின் அறையில் பிள்ளைகளை தொட்டிலில் போட்டு ஆட்டியபடி இருந்தாள் வடிவு.
அப்போது பாலை ஆற்றி எடுத்துவந்து மேசையில் வைத்துவிட்டு வந்த மகேஷ் அவளை அணைத்து ” ஏன்டி அம்மு ரெண்டு பிள்ளையை பெத்துருக்க அதுல ஒண்ணாவது உன்னை மாதிரி துறு துறு ஒரு பொண்ணு பெத்து தந்தியா??.. நீ  இப்ப வேற உன்னை தொடக்கூடாதுனு பாட்டிமா ஓடர் அதனால மாமன் சோகமா சென்னை போறேன் இன்னும் ரெண்டு  மாசத்துல அங்க வந்திறனும் புரிஞ்சிதா??.. நேரம் கிடைத்தால் இடையில வருவேன் ”  என்று கூறியபடியே மனதே இல்லாமல் வடிவை அவளது அம்மா வீட்டில் விட்டுவிட்டு பாட்டிமாவிடம் சொல்லிக்கொண்டு சென்னை சென்றுவிட்டான் மகேஷ்வர்மா.
மதி மாசமாக இருக்கும் இந்நிலையில் மிகுந்த அன்பாகவும் ஆசையாகவும் அவளை கவனித்து பார்த்துக்கொண்டான் ஏசிபி புகழேந்தி.
வடிவை விட்டு வந்த கவலையை தவிற தாயின் கிடைக்கபெறாத அன்பை பெற்று சுவிதாவின் பாசத்திலும் கவனிப்பிலும் மனம் நிறைந்த சந்தோசத்துடன் ஆபிஸ் வேலை மற்றும் குடும்ப வாழ்வு என்று மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்வை ரசித்து அனுபவித்து வாழ்கின்றான் கலெக்டர் மகேஷ்வர்மா..
 பனைமரத்தை சற்று நேரம் மறந்து அவளது இரண்டு வாண்டுகளையும் கவனித்துக்கொண்டு அவளது குடும்பத்துடன் இருக்கும் சந்தோசத்திலும் தாயின்  கவனிப்பிலும்  ஒரு சுற்று பெருத்து தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்தாள் வடிவழகி..
             முற்றும்..

Advertisement