Advertisement

கொடைக்கானல்..
காரில் இருவரும் செல்கின்றனர் 
புகழ் காரை ஓட்டியபடியே அன்று ஆபிஸ் முடிந்ததும் மகேஷ் கைபேசியில் அழைக்கவும் மகேஷின் வீட்டிற்கு சென்றதை பற்றி நினைத்துக்கொண்டு காரின் கதவில் சாய்ந்து உறங்கிய மனைவியை அவனது தோலில் சாய்த்து வசதியாக படுக்க வைத்துவிட்டு அன்றய நினைவில் வீதியிலும் கவனம் வைத்தபடியே கொடைக்கானலிற்கு காரில் ஹனிமூன் செல்கின்றனர் இளம் தம்பதியினர்..
   பெரியாத்தாவின் வீட்டில்.
தனது நிழல் வாழ்வையும் அதில் அனுபவித்த துன்பங்களையும் இன்று அனுபவித்தது போன்று வேதனை முகத்தில் பிரதிபலிக்க தனது பாட்டிமாவிடம்  சொல்லி முடித்தார் சுவிதா.
” இருபத்திஐந்து வருடம் கழித்து ஐந்து வயதில் என் கைவிட்டு சென்ற மகன் முப்பது வயதில் அவனுக்கும் குழந்தைகள்  பிறக்க இருக்குற நேரம் தான் என் கண்ணால பார்க்கனும்னு விதி இருக்கு பாட்டிமா” என்று நீண்ட பெருமூச்சை விட்டு தனது மகனை தொட்டு    “நான் தான் உன் அம்மா ராசா” என்று சொல்லவும். 
அவனோ ” கையை எடுங்க என்னை தொடாதிங்க என்கிட்ட பேசாதிங்க” என்று கத்தி சொன்னான்.
தன்னை புரிந்துகொள்வான் தன் மகன் என்னை அம்மாவாக ஏற்றுக்கொள்வான் என்று நினைத்து அவரது இத்தனை வருட ஏக்கத்தை முகத்தில் தேக்கியவாறு அவனது அருகில் சென்று கையை தொட்டு பேசமுன்வரவும் அவன் கையை தட்டிவிட்டு எழுந்து சென்றதை தாங்க இயலாமல் அவரது இதயம் அதன் தாக்கத்தை வலியுடன் அவருக்கு தனது துன்பத்தையும் அழுத்தத்தையும் தெரியப்படுத்தியது சுவிதாவிற்கு.
அதை தாங்க இயலாமல் நெஞ்சில்  அழுத்தி கைவைத்து வலியில் அனத்தியபடியே கீழே சரிந்துவிட்டார் சுவிதா.
அவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த மகேஷ் அவன் அறிந்து முதல் முதலாக அம்மா என்ற உயிர் மூச்சின் நாமத்தை அம்மா அம்மா அழைத்தபடியே அவரை கையில்,ஏந்தி தனது மாமனாருடன் அவனது காரில் அங்கிருக்கும் சிறிய கிளினிக்கிற்கு  கொண்டு சென்றான் அவரது ராசா..
உடனடியாக சுவிதாவை பரிசோதனை செய்த டாக்டர் சுவிதாவின் மன அழுத்தம் அதிகமாகி அது இல்லாமல் போகப்போகின்றது என்ற அதிக மகிழ்ச்சியுடன் இருந்த நேரம் அது நடக்காமல் போன அதிர்வில் “இவங்களுக்கு ஆரம்ப கட்ட இதய நோயின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது அதை உடனடியாக குணப்படுத்த வேண்டும் தற்போது அவருக்கு மன நிம்மதி தான் மிகவும் அவசியமானது. அவரை ஓய்வு  எடுக்க விட்டு நீங்கள் வெளியே காத்திருங்கள் கண் முழித்ததும் ஒருவர் வந்து கூடவே இருந்து கவனித்து பார்த்துக்கொள்ளுங்கள்.”
என்று டாக்டர் மகேஷிடம் கூறியபடியே அடுத்த நோயாளியை பார்க்க சென்றார்.
அவர் சென்றதும் ராஜதுரை பொன்னியின் அம்மா வேணியை அழைத்தார். அதை எடுத்த பொன்னி
” அலோ யாருங்க??.”
” நான் துரை மாமா பேசுறேன்மா பொன்னி அம்மாகிட்ட குடும்மா பேசணும்”
“அம்மா கோவிலுக்கு போயிருக்காங்களாம் மாமா எதுன்னா அவசரமா?. “
” ஆமா மா நீ கொஞ்சம் கோவிலுக்கு போய் அம்மாகிட்ட போன குடு நான் பேசுறேன் சரியா??..”
“சரி மாமா இப்ப நீங்க வைச்சிட்டு சரியாக பத்து நிமிஷத்துல திரும்ப கூப்புடுவீங்களாம் மாமா நான் இப்பவே கோவிலுக்கு போறேன்.”
என்று ராஜதுரையிடம் கூறிவிட்டு புது தாவணி பாவாடை அனிந்து கொண்டு கைபேசியை கையில் எடுத்து “அப்பத்தா நான் கோவிலுக்கு போறேன் மாமா போய் அம்மாகிட்ட  கைபேசியை கொடுக்கட்டுமாம் ஏதோ பேசணுமாம் மாமா சொன்னாங்க நான் போறேன் அப்பத்தா” என்று சொல்லி பொன்னி போகவும். 
” இந்த கூறுகெட்ட சிறுக்கி போய்ட்டு வாறேன்னு சொல்லி பழகுறதே இல்லை எப்ப பாரு போறேன்னே சொல்லுவா நானும் எத்தினவாட்டி வாய்லயே ரெண்டு போடுறது திருந்தாத ஜென்மம்.” என்று பொன்னியை திட்டியபடியே வீட்டின் பின் கட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் பொன்னியம்மா..
கோவிலுக்கு சென்ற பொன்னி தனது தாய் அங்கப்பிரதட்சனை செய்வதை பார்த்து தாயின் அருகே ஓடிச்சென்று அவரை தொட்டு தூக்க பார்க்கவும் வேண்டாம் என்று தலையசைத்து மறுத்த வேணி இறுதி சுற்றை சுற்றி முடித்ததுமே எழுந்து மகளிடம் வந்தார்.
“ஏம்மா எங்க ரெண்டு பேரையும் நீ பெத்துட்டு கூலி வேலைக்கு போய் படுற கஷ்டம் போதாதுனு இன்னும் ஏன்மா உன் உடம்பை வருத்திக்கிற இப்ப கோவில்ல உருண்டு வேண்டுற அளவுக்கு என்ன அவசியம் உனக்கு  பாரு நெத்தி தலை எல்லாம் மண்ணா இருக்கு” என்று அதை துடைத்தபடி தாயிடம் தனது கேள்விகனைகளை தொடுத்தாள் பொன்னி.
“அது வந்து ஒண்ணும் இல்லடா பொன்னி அம்மாவாள என்ன செய்யமுடிமோ அதுக்கு தகுந்தமாதிரி உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க நம்ம தரகர்கிட்ட சொல்லியிருந்தேன் அவரும் கூடிய சீக்கிரம் அமையும் போலயிருக்கு அவங்க சரி சொன்னா பொண்ணு பார்க்க வருவாங்க நீங்களும் தயாராக இருங்கன்னு சொன்னார் அதுதான் உனக்கு வடிவு வயசுதான் இப்ப வடிவு மசக்கையா இருக்கு அதோட ஒத்த நீ இன்னும்  கல்யாணம் காட்சினு ஒண்ணும் இல்லாம இருக்கியே அதுக்குதான் காலா காலத்தில வயசு பொண்ணுக்கு செய்யவேண்டியதை செய்துடனும் அதுக்கு வச்ச வேண்டுதல் தான் அம்மா இப்ப செய்யிறேன் பொன்னி.”
” இனி நீதான் உன் கையால விளக்கு ஏத்தனும் அதுசரி நான் உன்கிட்ட எதுவுமே சொல்லவேயில்ல நீ எப்புடி இந்நேரம் கோவிலுக்கு வந்த அத்தைக்கும் நான் வேண்டுதல பத்தி எதுவுமே சொல்லிக்கலை சொன்ன உன்ன மாதிரித்தான் வேணாம்னு சொல்லுவாங்கனு சும்மா கோவிலுக்கு போய்ட்டு வாறேன் அத்தைனு தான் சொல்லிட்டு வந்தேன் இப்ப நீ வந்து நிக்கிற என்னாச்சி??” என்று பதட்டத்துடன் கேட்டார் வேணி.
” அம்மா பாரு உன்னை இப்புடி பார்க்கவும் நான் வந்த விஷயத்தையே மறந்துட்டேன். ராஜு மாமா உன்னோட பேசணுமாம் அதுதான் கைபேசியை உன்னிடம் கொடுக்க சொன்னார் அதுதான் நான் வந்தேன் இந்தாம்மா பேசு” என்று ராஜதுரைக்கு அழைப்பு விடுத்து தாயிடம் கொடுத்துவிட்டு சற்று தள்ளி நின்றாள் பொன்னி.
” அலோ சொல்லுங்க அண்ணே போனுல கூப்பிட்டு இருக்கீக என்ன அவசரமோ என்ன அண்ணே வடிவு சொகந்தானே?
” ஆமாத்தா இப்ப உன்னால எனக்கு ஒரு உதவி வேணும்த்தா செய்வியா?.”
” என்ன அண்ணே செய்ன்னு சொன்னா செய்துட்டு போறேன் அதவிட்டு ஏன்கிட்ட செய்வியான்னு கேக்குறிங்களே என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்கண்ணே.”
” அதுவந்துத்தா நம்ம சம்மந்தியம்மாக்கு திடீரென இதயத்துல அடைப்பு வந்து நம்மவூர் கிளினிக்லதான் வச்சியிருக்காங்க வாணியும் இல்ல தானே நீ கொஞ்சம் துணைக்கு வந்து கூடமாட ஒத்தாசையா இருப்பியாத்தா??.. உனக்கு எம்புட்டு வேலை இருக்குன்னு எனக்கு தெரியும் ஆனாலும் நம்ம வீட்டாலுக பார்த்துக்கிறது போல யாரும் பார்த்துக்க மாட்டாக வரமுடியுமா வேணி.”
” என்ன அண்ணே இப்புடி சொல்லிப்புட்டிங்க நான் வாக்கப்பட்டு இந்த ஊருக்கு வந்ததுல இருந்து மனசாறத்தான் உங்கள ஏன் அண்ணணா நினைத்து கூப்புடுறேன் கலை மதினி வேற இல்லனு எனக்கு தெரியும் இதோ உடனே வாறேன்”
” சரிமா மாப்பிள்ளையோட கார் வீட்ட வரும் நீ அதுல வந்திரும்மா சரியா?. நான் வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தனது மாப்பிள்ளையிடம் விஷயத்தை சொல்வதற்கு  சென்றார் ராஜதுரை..
” ஆத்தா பொன்னி நீ இங்க இருக்குற விளக்கு எல்லாத்துக்குமே நெய்விட்டு திரியை போட்டு நனைத்து வை நான் போய் உனக்கு  உதவிக்கு ராசுக்குட்டிய அனுப்பி வைக்கிறேன் நூத்தி எட்டு விளக்கும் தவறாம ஏத்தனும் பொன்னி. “
“அம்மா கூட நிக்கமுடியல சாமி காரியத்துல விளையாடாம ஏத்தி முடிச்சிட்டு நெய் முடிஞ்சு விளக்கு அனைந்ததும் வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும்.” என்று கவனம் சொல்லிவிட்டு சென்றார் வேணி..
” சரிமா நீ கவனமா போய்ட்டு வாம்மா” என்று தாயை வழியனுப்பி விட்டு தனது வேலையை பார்க்க சென்றாள் பொன்னி..
கொக்கிற்கு மீன் ஒன்றே மதி என்பது போன்று சரியான காலம் பார்த்து காத்திருந்தவன் வேணி அந்த பக்கம் போனதும் கோவிலுக்கு உள்ளே வந்து சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு அவன் கையில் வைத்திருந்த தாலியை பொன்னியின் கழுத்தில் கட்டிவிட்டான் என்னவென்று நிமிர்ந்து பார்த்த பொன்னி அதிர்த்து விழித்தாள். 
ஐயோ என்ன காரியம் பண்ணிட்டிங்க ஏன் இப்புடி என்று அவனை போட்டு பொன்னி அடிக்கும் போதே அங்கு வந்த ராசுக்குட்டியும் வடிவின் தங்கை குழலியும் இதை பார்த்து பொன்னியின் அருகில் வந்து நடப்பதை பார்த்து நின்றார்கள் இருவரும்..
மலைப்பாதையில் வளைந்து நெளிந்து லாவகமாக காரை ஓட்டியபடியே அன்றய நாளை நினைத்தான் புகழ்.
அன்று மூன் டிவி நிகழ்ச்சி முடிந்ததும் ஸ்டேஷன் சென்று பெண்டிங் கேஸை பார்த்துவிட்டு மாலை நேரம் வீட்டிற்கு சென்றான். 
அங்கோ அவனது மனையாள் முகத்தை தூக்கி வைத்திருந்தாள் அவனும் கேஸ் சீக்கிரம் முடியவேண்டும் என்று அதன் பின் ஓடி அலைந்து திரிந்தவன் மதியை கவனிக்கத்தவறிவிட்டான் அவளோ இல்லாதது பொல்லாதது அனைத்தையும் யோசித்து தன்னை தானே குழப்பியபடி இருந்தாள் அதை அவளது முகமே காட்டிக்கொடுத்தது. 
வேலைபளுவின் காரணத்தினால் மகேஷின் ப்ளாட்டில் தங்கவும் நேரும் சில நேரம் வீட்டிற்கு வரும் பொழுதும் சோர்வினால் குளித்து சாப்பிட்டுவிட்டு உறங்கிடுவான் மதியை கவனிக்கவில்லை அவளோ அவன் அவளை காதலித்தது பற்றி எதுவும் தெரியாமல் அவன் தன்னை பிடித்துதான் திருமணம் செய்தானா என்று பலது பத்தையும் யோசித்துக்கொண்டிருந்தாள் அதை உண்மைபடுத்துவது போன்றே புகழின் நடவடிக்கையும் இருந்தது.
அவளை கவனிக்காமல் இருந்தான். இதற்கு இடையில் அன்று வடிவும் கால் போட்டு பேசி மதியை நன்றாக குழப்பிவிட்டாள். 
வீட்டிற்கு வந்த புகழின் கவனம் மனையாளின் பக்கம் சென்றது. முகத்தை தூக்கி வைத்திருந்த மனையாளை அன்றுதான் நன்றாக கவனித்தான். 
அவனும் அவளோட பேச்சுக்கொடுத்து பார்த்தான் அதற்கும் எந்த பதிலும் இல்லை.
 அதற்கு சீத்தாவும் மதியை மாலில் தனியாக விட்டுசென்ற கோபம் ஒவ்வொரு  நாளும் மதி வாசலை பார்த்து ஏமாற்றம் அடைவதையும் பார்ப்பவர்தானே சீத்தா மகனது வேலை பற்றி தெரிந்தாலும் அவனே காதலித்து காத்திருந்து பல சோதனைகளை கடந்து வந்து திருமணம் செய்திருக்கின்றான் அப்படி இருந்தும் கிடைக்கும் நேரத்தில் மனைவியையும் கவனித்தால் என்ன??.. என்ற கோபத்தோடு இருந்தவர்
மகனின் இச்செயலில் புகழை பிடித்து மதி படும் கவலையை சொல்லி திட்டி லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டார் சீத்தா இதை பார்த்த கண்ணன் மகனிற்கு எதுவும் பரிந்து பேசாமல் இருந்தார் அவரும் அதுவே நினைத்தார் வேலை செய்றவன் குடும்பத்தையும் கவனிக்ககூடாதா என்று நினைத்து தனது மனைவி கண்டிக்கும் போது அமைதியாக இருந்துவிட்டார் கண்ணன்.
அதன் பின் சற்று நேரத்தில் மகேஷ் கால் பண்ணி  வடிவு வரச்சொன்னதாக சொல்லவும். அங்கயுமா முடியலடா சாமி என்று நொந்தபடி மதியையும் அழைத்துக்கொண்டு சென்றான் பாசத்திற்கு கட்டுபட்ட ஏசிபி. 
அங்கு வடிவோ புகழ் எதிர் பார்த்தபடி எதுவும் திட்டாமல் சின்னதாக விருந்து வைத்து ஹனிமூன் போவதற்கு கொடைகானல் சூட் பக்கேஜ் டிக்கெட்டை கொடுத்து “நல்லபடியாக போய் சந்தோசமாக ஊர் சுத்தி பார்த்துட்டு அண்ணிக்கு தேவையானதை அசைப்படுறதை வாங்கி குடுங்க அண்ணா சரியா??.. அங்க போய் போலீஸா இருந்தார்னா எனக்கு ஒரு கால் போடுங்க அண்ணி அப்புறம் தெரியும் அண்ணாக்கு சேதி  என்ன நான் சொல்லுறது புரியுதுங்களா??.. அண்ணி..” என்று புகழில் ஆரம்பித்து மதியிடம் கேள்வியுடன் முடித்தாள் வடிவு.
அதற்கு மதி தலையை ஆட்டவும் அதை பிடித்து நிறுத்திவிட்டு ” சும்மா எதுக்கெடுத்தாலும் சின்ன புள்ளை மாதிரி தலையை ஆட்டகக்கூடாதுங்க அண்ணி நீங்க கேள்வி கேட்டு அண்ணா பதில் சொல்லனும் அண்ணாவை எப்புடி கைக்குள்ள வச்சிருக்கிறதுன்னு முந்தானை முடிச்சி படம் பாருங்க தெரியும் ஆரம்பத்திலயே அவுங்க சொல்லுறதுக்கெல்லாம் தலையை ஆட்டினா அப்புறம் காலம் பூராவும் அதுதான் நிலை இனி உங்க கையிலதான் இருக்கு உங்க வாழ்க்கை சந்தோசம் இப்ப விட்டுடாதிங்க பின்னுக்கு நீங்கதான் கஷ்டப்படுவிங்க பார்த்து சூதானமா நடந்துக்கோங்க அம்புட்டுதான் நான் சொல்லுவேன் எல்லாமே புரிஞ்சிருக்குமே??. ” என்று வடிவு கேட்கவும்.
” ம் புரிஞ்சுது நாளைக்கு இருக்கு உங்க அண்ணாவுக்கு கச்சேரி சரி வடிவு நீ ரொம்ப கவனமா இருக்கனும் இப்ப ஒண்ணு இல்ல ரெண்டு புள்ளையை சுமக்கிற நீயும் எல்லாவிஷயத்திலயும் சூதானமா இருந்துக்கோ சரியா வாணி அத்தை மகேஷ் அண்ணா இல்லாத நேரத்தில வடிவு உங்க பேச்சு எதுனா கேக்கலன்னா உடனே சீத்தா அத்தைக்கு கால் போடுங்க அப்புறம் வடிவு தன்னால சொல்பேச்சி கேக்கும் சரியா?? அத்தை”  என்று வடிவின் நலத்தை பற்றி கவலையுடன் சொல்லி முடித்தாள் மதி..   
பெண்கள் இந்த பக்கம் பேசவும் புகழோ மகேஷை சற்று தள்ளி அழைத்துச்சென்றவன் ” ஏன்டா மச்சான் கேக்கக்கூடாதுதான் இருந்தாலும் சந்தேகத்தை சீனியரிடம் தானே  கேட்டு தெரிஞ்சிகனும் அதுதான் கேக்கிறேன் தப்பா நினைத்துக்ககூடாது நான் ரொம்ப நல்லபிள்ளை சரியா?.”  என்று புகழ் ராகமிலுக்கவும்.
அதில் கடுப்பான மகேஷ் ” டேய் மச்சான் நீ ரொம்ப நல்லவன்னு இந்த சென்னைக்கே தெரியும் இலுக்காம என்ன விஷயம்னு நேரடியா சொல்லுடா மென்னு முழுங்காம” 
” இல்ல நீங்க ஹனிமூன் போய் ஊர்சுத்தி பார்த்து பர்சேஸ் மட்டுதான் பண்ணுனிங்களா மச்சான் அப்போது எப்புடி வடிவு இப்ப ரெட்டை பிள்ளையை சுமந்து நாலுமாசமாக இருக்காம்.”
” அதுவந்து மச்சான் எங்களுக்கு மழைதான் கடவுள் மாதிரி இருந்து  சீரும் சிறப்புமாக எல்லாத்தையும் நடத்த உதவியாக இருந்தது மச்சான்.”  என்று நாணி கோணி சொன்னான் கலெக்டர்…
” ஓ அப்புடியா?? வேற மச்சான்.”
” டேய் நல்லவனே உனக்கு இன்னும் சந்தேகமா??.. இதோ அழகிய கூப்புடவா?? எல்லாம் சந்தேகத்தையும் தெளியவைப்பாள் எப்புடி மச்சான் வசதி” என்று புகழை வடிவிடம் கோர்த்து விட தயாரானான் கலெக்டர்…
இவர்களின் கலாட்டாவெல்லாம் முடித்து வீட்டிற்கு சென்று பயணத்திற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்துவிட்டு உறங்கி பின் காலை வீட்டில் அனைவரிடமும் விடைபெற்று மகேஷ் வடிவிற்கும் கைபேசியில் அழைத்து சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள் அவர்களின் ஹனிமூன் கொண்டாடத்திற்கு., 
ஒருவழியாக கொடைக்கானலில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி ஹாட்டேஜிற்கு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தனர் பயணத்தில் நன்கு மதி உறங்கியபடியால் இப்போது குளிக்கச்சென்றாள்.
அவள் செல்வதற்கு முன் குளியலறை மற்றும் அனைத்து இடத்தையும் எங்கும் கெமரா பொறுத்தப்படிருக்கின்றதா?? என்று பார்த்தவன் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு வெளியே வந்து அவனது வீட்டிற்கு அழைத்து பாதுகாப்பாக வந்துவிட்டதாக சொல்லிவிட்டு வைத்தான்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தவன் மூச்சடைக்காத குறையாக நின்றுவிட்டான்.
ஏன் என்றால் மதிக்கு குளித்துவிட்டு அங்கே புடவை கட்டி பழக்கம் இல்லை ஈரத்தில் அதனால் புகழ் அறையில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அறைக்குவந்து கதவை பூட்டிவிட்டுதான் புடவை மாற்றுவதற்கு வந்தாள்.
ஆனால் அவள் நேரமோ கதவு ஒழுங்காக பூட்டப்படவில்லை இதுவரை இதுபோன்ற சந்தர்ப்பம் புகழிற்கு அமைந்தது இல்லை அதனால் அவனிற்கு மதியின் பழக்கம் தெரியவில்லை..
முதன்முதலாக கட்டிய மனைவி என்றாலும் இவ்வாறு ஒரு நிலையில் பார்ப்தால் அவனது இளமை அவனை மிகவும் சோதித்தது.
மெதுவாக அருகில் சென்றவன் அவள் புடவை கட்டும் அழகை ரசித்து பார்த்தபடி இருந்தான்.
புடவை கட்டி திரும்பியல் அங்கு புகழை பார்த்து அவள் அவனுடன் கோபம் என்பதையும் மறந்து  ” நீங்க எப்புடி எப்ப? உள்ள வந்திங்க நான் கதவை பூட்டிதானே வச்சேன்” என்று அவனுடன் மல்லுக்கு நிக்கவும் அவனோ எதுவும் பேசாமல் எழுந்து குளிப்பதற்கு சென்றுவிட்டான்..
” நாம அவரு மேல உண்மையான கோபத்துல இருக்கிறோம்னு நினைத்து அவரும் கோபித்துவிட்டாரோ அச்சோ இப்ப என்ன பண்ணி இவரோட கோபத்தை குறைக்கிறதாம் நான் ஆ என்ன செய்யலாம்னு வடிவுகிட்ட கேக்கலாம்” என்று மதி கைபேசியை எடுத்தாள்.
குளித்துவிட்டு வெளியே வந்தவன் மதி சோகமாக யோசித்துக்கொண்டிருப்பதை பார்த்து என்னதான் செய்கிறாள் என்று பார்ப்பதற்கு அவளின் பின் நின்றான் அவளோ போனில் வடிவின் நம்பரை அடித்துவிட்டு யோசித்துக்கொண்டிருந்தாள் அதை பார்த்தவன் இது ஏதோ சரி இல்லை என்பதை கண்டுகொண்டு பின்னிருந்து அவளை அணைத்தபடியே போனை வாங்கி ஆஃப் பண்ணி வைத்துவிட்டு பெட்டிற்கு அழைத்துவந்தான் புகழ்.
அவளை அருகில் அமரவைத்து முகத்தை நிமிர்த்தி ” ஏன்டி பொம்மு இப்புடி முகத்தை தூக்கி வச்சிருக்க இன்னும் என்மேல கோபமா இப்ப நான் சொல்லுறத கேளு கொஞ்சம் “
என்று அவளிற்கும் சந்தேகம் வராதபடி அவன் அவளை எந்தளவு காதலித்தான் என்பதை சிறுபிள்ளைக்கு சொல்வது போன்று எடுத்து சொன்னான்.
அவளோ தலையாட்டி பொம்மை மாதிரியே தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தாள் மதி.
தற்போது அவளின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் அவள் கேட்காமலே அவளின் மனதை படித்தது போன்று புகழ் சாதூரியமாக பதில் அளித்து அவளின் மனதில் நிறந்தரமான நீங்காத இடம் பிடித்துவிட்டான் புகழ் மதியின் மனதில்.
அதன்பின் அறைக்கே இரவு உணவை வரவழைத்து உண்டுவிட்டு மனதுவிட்டு பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.
தற்போது நேரம் சரியாக 11.55 ஆகியது தூக்கம் கண்ணை சொக்கியபடியே புகழின் பேச்சினை கேட்டுக்கொண்டிருந்தவள் அவன் அவளை உசுப்பி எழுப்பி ப்ரெஸ் ஆகி இருவரும் கீழே மண்டபத்திற்கு வந்தனர். 
நேராக அவன் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஹாலிற்கு அழைத்துவந்து மதியின் கண்ணை கட்டி உள்ளே அழைத்துவந்தான் புகழ்.
உள்ளே வந்ததும் கண்ணை திறந்து விட்டான் வந்திருக்கும் இடத்தை அவள் கண்ணை விரித்து வாயில் கைவைத்து பார்த்தபடி இருந்தாள்.
சரியாக நேரம் 12 மணி அனதும் பலூன் உடைத்து அவளை அழைத்துசென்று கேக் வெட்டி அவளது பிறந்தநாளை கொண்டாடி அத்துடன் அவன் விரும்பிய படியை பொக்கே கொடுத்து மோதிரம் அணிவித்து அதில் முத்தம் வைத்து வைத்து அவனது பிரப்போஸலையும் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்திருந்தவர்களுக்கு பார்ட்டி கொடுத்து அதன் பின் அவளை அறைக்கு அழைத்து வந்தான் புகழ். 
அறையிலும் முதலிரவு அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்திருந்தான் அவர்களும் சிறப்பாக செய்து முடித்திருந்தனர்.
அறையின் உள்ளே அழைத்து வந்தவன் மீண்டும் ஒருமுறை எங்கும் கேமரா இருக்கின்றதா?? என்று செக் பண்ணிவிட்டு விசில் அடித்தபடி அவளது அருகில் வந்து       ” இப்ப நீ ஹாப்பியா?? பொம்மு”  என்று கேட்டான்.
” ஆமாங்க ரொம்ப சந்தோசம் எனக்கு இதுக்கு மேல என்ன சொல்லுறதுனு தெரியலங்க மனசு நிறைஞ்சு போயிட்டுது ” என்று கூறியபடி அவனது தோளில் சாய்ந்துகொண்டாள் மதி.
இதுவே வாய்பாக எடுத்துக்கொண்டு அவளை இறுக்கி அணைத்து உச்சிமுத்தம் வைத்து இனிய பிறந்தநாள் பொம்முகுட்டி எனக்கு நீ தான் டி உயிர் மூச்சு” என்று கூறியபடியே இனிய தாம்பத்தியத்தின் மூலம் அவனது காதலின் ஆழத்தை அவனது பொம்முவிற்கு உணர்த்திக்கொண்டிருந்தான் கூடலில் மூலம் புகழேந்தி.
தொடரும்..

Advertisement