Advertisement

அத்தியாயம்-இரண்டு.
சென்னையின் புறநகர் காட்டுப் பகுதி நிசப்தமான இரவு நேரம். காற்றடித்து மரங்கள் அசையும் சத்தம். தவிர வேறு சத்தம் ஏதும் இல்லை. அப்பொழுது “டங்கமாரி உதாரி புட்டுகினா நீ நாரி” என்னும் பாடல்  இருளை கிழித்து சத்தமாக ஒலித்தது.
   டேய் காள பாரு உன்ற போனு சத்தம்போடுது யாருனு பாருடா??.. வேற யாருடா மச்சான் எல்லாம் அந்த பொம்பள ரவுடிதான் இரு ஸ்பீக்கர்ல போடூறன் நீயும் கேளு என்ன கத்து கத்தபோகுதுனு.
ஹலோ மேடம்.” இந்த மேடம் கீடம் எல்லாம் இருக்கட்டும் அவள புடிச்சிட்டீங்களாடா??.. இல்ல மேடம் அவளத்தான் தேடிக்கிட்டு இருக்குறம். அங்க இருந்து ஆட்டோல வந்து இடையில இறங்கி ஒடிட்டாள் திறத்திக்கிட்டே வந்தம் காட்டு பகுதிக்குள்ள வந்துடாள் கண்டிப்பா பிடிச்சுருவம் மேடம். அட போங்கடா ஒன்னுத்துக்கும் விளங்காத எச்சப்பொறுக்கி நாய்ங்களா!  பிரியாணில  லெக் பீஸ் வரல மட்டன் பிரியாணி வரலனு குறசொல்லத்தெரியும் ஒரு வேலைய ஒழுங்கா முடிக்கத்தெரியல இல்ல உங்களுக்கு.
உங்கள நம்பி வேல இல்ல எங்க??..  அந்த நாதாரி பொண்டாட்டிய புடிக்கமுடியாம ஒடவிட்டவன்.
“அவன் தேடி தூரம் போய்டான் மேடம்” அவள புடீக்காட்டி அவன என் கண்ணுல படவேனாம்னு சொல்லிருங்க. ஒரு பொட்டச்சி உங்களுக்கு தண்ணி காட்டுறா அவள புடிக்கத்தெரியல உங்களுக்கு எதுக்குடா?. மீசை உங்கயாரையும் நம்பி வேல இல்ல. நான் ரெங்கன வரச்சொல்லுறன் ஸ்பாட்டுக்கு அவன் வருர வரை நேரத்த கடத்தாம அவள விட்டுறாம புடிங்க அவ யாருட்டயாவது மாட்டி விசயம் லேசா வெளிய கசிஞ்சாலும்.  உங்க யாருக்கும் இந்த மாச சம்பளம் இல்லடா கூண்டோட எமலோகம் தான் போகனும்  எல்லாரும். அப்புறம் அதுல தப்பினீங்கன்னா.  உங்க பொண்ட்டிட யாரும் நல்ல புருசனா போகமாட்டிங்க நீங்க வெட்டிபுடுவன் வெட்டி அம்புட்டு நாய்களையும். பீ கெயார் ப்புல் இடியட்ஸ்”.
டேய் தாஸு சொல்லுடா காள என்னடா அந்த பொம்புளபாட்டுக்கு நம்மல இப்புடி சீப்பா களுவி ஊத்துறா. நாம என்ன சும்மாவா வேல பாக்குறம். இந்த எலவுபுடிச்ச வேலைல சேர்ந்த நாளைல இருந்து என்ற புள்ளயிட முகத்த கூட இரவைல திருட்டுத்தனமா போய்ப்பார்க வேண்டியதா இருக்கு பாரு. “உசுர பனயம் வச்சு நாம இந்த வேலய பார்த்தா. அது அந்த ரவ்டிக்கு ஏதோ ஏசி அறையில சொகுசா இருந்து பார்க்குற வேலனு நினைச்சுடா போலடா..”
அவ திட்டுறதுக்கு ஏத்த மாதிரி அந்த கந்தன் நாயும் அந்த பொண்ண கொஞ்சம் கவனமா பார்த்துக்காம விட்டுட்டான். அவ என்னத்தையெல்லாம் கேட்டுத்தொலைச்சாலோ!. இந்த பொம்பல நம்மல போட்டு காயுது.
என்ன பண்ணுறது “நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தான் ஆகனும் போல” நம்ம தலையெழுத்து அப்புடித்தான் இருக்குபோலடா ஆயி அப்பன் படிக்கப்போனு விரட்டும் போதெல்லாம் நாம அதுகல ஏமாத்திட்டு திரிஞ்சம் ஆனா அப்போ தெரியல நாமதான் ஏமாற்றப்பட போறம்னு. “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செஞ்ச கதையா இருக்கு நம்ம நிலமை. இப்ப பாரு படிப்பு இல்ல சொல்லிக்குறமாதிரி ஒழுங்கான தொழில் இல்ல.  பொத குழியில விழுந்தா எழும்ப ஏலாத மாதிரி இந்த பொம்புள ரவுடிக்கிட்டயே ஏதோ ஆபிஸ் போகின்ற மாதிரி டிப்டொப்பா ட்ரெஸ் பண்ணிட்டு ஆள் புடிக்குறது. கடைக்கு சரக்கு போடுறது.இப்புடியெல்லாம்  வேலசெய்றம் நாம செய்ற வேலைக்கும். உடுத்தியிருக்குற உடுப்புக்கும் சம்மந்தம் இருக்காடா தாஸு.
(“ஆமாங்க பலய சினிமா படங்கள்ல வர்ற மாதிரி தாடி வச்சி கர்ன கொடுரமா இல்லாம டிஷன்டா யாரும் பார்த்தா ரவுடி பயல்கள்னு சொல்லவே மாட்டாங்க ஸ்மார்ட் லுக்கோட இருப்பானுக. இது ஒரு வகையான தொழில் தந்திரம்”)
கவல படாத காள மனசவிட்டுறாத  எனக்கு அந்த பொண்ணு யாருட்டயாவது மாட்டி அதுக்கு தெரிஞ்ச உண்மைய யாராவது நியாயவாதிகிட்ட சொல்லிறனும் அப்புறம் பாரு அந்த பொம்பளைக்கு அல்லு ஆட்டம் காணும். நாமலும் அந்த பொம்புளகூட சேர்ந்து பண்ணுன பாவச்செயலுக்கு வாக்குமூலம் குடுத்து தண்டனய கொறச்சுக்கலாம்டா அப்புறம் இருக்குற மிச்ச சொச்ச காலத்தயும் புள்ள குட்டிகளோட நிம்மதியா வாழனும் டா அதுக்கு நாம மூன்று பேரும் ஒற்றுமையா இருக்கனும்டா.
நாம இப்புடியெல்லாம் நினைச்சு  கதை பேசுறம்னு நூள் கிடைச்சாளும் அந்த காட்டேரி நம்மல கூண்டோட அளிச்சுடுவா..
“சரிடா.. தாஸு கந்தனும் வரட்டும் கேட்டுகுவம். என்ன சொல்லுறானு.
[“யார் சொல்லுவார்கள் இவர்களின் நினைப்பிற்கும் ஆசைக்கும் ஆயுள் மிகவும் குறைவென்பதை”]
நாமவேற ஓடி வந்த களைப்பு போக கொஞ்சம் காஞ்ச தொண்டய நனைக்க கூலா கலர் குடிச்சுட்டு நம்ம “சொந்த கதை. சோக கதைகள” பேசிட்டு நேரத்த கடத்துவம்.வாங்கிட்டுவாடானு அனுப்பினா இந்த கந்தன் பய எங்க மாட்டிகிட்டு எவள்ட அடிவாங்குறானோ தெரியலடா??..
நாம எப்புடியும் அந்த புள்ளய இனைக்கு புடிக்கமாட்டம் ஆமான்டா தாஸு அந்த புள்ள என்னடா “அடிக்குற காத்து கொஞ்சம் வேகமா அடிச்சா பறந்து போயிடும் போல அப்புடி காத்துகூடா” இருந்துகிட்டு இதுதான் சந்தர்பம்னு இப்புடி காத்தவிட வேகமா ஓடுது.
ரெங்கன் வந்து மட்டும் என்னத்த புடுங்குறானு பார்துறலாம். காள
இந்தா வந்துடான்டா கந்தன் பாருடா தாஸு ஒரு சேதாரமும் இல்லாம வந்துடானானு??.. அட போங்கடா போக்கத்தவனுகளா இந்த காட்டுப்பகுதியில நான் எங்கபோய் கலர் வாங்குவன் நேரம் இப்போ ஏழுமணி டிபன் தான் வாங்கிடு வந்தன் வாங்க சாப்புடலாம். நீங்க இங்க இருந்து நல்லா காத்து வாங்கிடு கதை பேசுறீங்க அவள எல்லாருமா சேர்ந்து ஓட விட்டுடம்.
ஆமான்டா நீ அந்தபக்கம்  போனதும் அந்த பொம்புள போனபோட்டு எல்லாருக்கும் கிழிக்குறாடா. காதாலகேக்க முடியலடா தொழில் செய்யும்போது நாம சரக்கடிக்க மாட்டம்னு தெரிஞ்சு நிதானமா இருக்கும் போது வச்சு செய்றாடா கந்தன்  அதபத்திதான் நாங்க பேசிடு இருந்தம். நீ வந்துட.
என்னடா??.. கந்தன் நடந்துசி “அந்த பொம்புள நான் வீட்ட நிக்கும் போது  போன் போட்டு  சரக்கு வாங்குற இடத்துக்கு போய் சரக்கு இருக்கா?.. இல்லனா?.. எப்ப வேணும்னு கேட்டுட்டு யாரும் ஏதும் கம்ளைன் பண்ணியிருக்காங்களானு பார்த்துட்டு வர சொன்னா டா நானும்  ஓகே சொல்லிட்டு சரக்கு தயாரிக்க கொஞ்சம் தீங்ஸ் வாங்கணும் போய்கேளு தருவாங்க வாங்கிட்டு வா இடத்த வாட்சப் பண்ணுறனு சொன்னா டா அப்போ திங்ஸ் எவ்வளவுனு?.. கேட்டன்டா.
அவ அப்போ கோவிலுக்கு போயிட்டா  விட்டுல இல்லனு தெரிஞ்சுதான் நான் கதைச்சன். நாங்க கதைக்கும் போது ஏதோ சத்தம் கேக்கவும் திரும்பி பார்த்தா முகமெல்லாம் வேர்த்து நடுங்கி போய் நின்னா லைன்ல வேற அந்த பொம்பள இருக்கா அவளும் யாருனு கேட்டு உயிர எடுக்குறா. நான் என்னனு கேட்டன் பூவ விட்டு போய்டாலாம் எடுக்க வந்தாலாம்னா. அவ எல்லாதயும் விளக்கமா கேட்டுட்டானு அவட முகமே சொல்லிச்சு அவள புடிடா எருமனு சொல்லவுமே ஓட ஆரம்பிச்சுடா அப்புறம்தான் உங்களயும் கூப்புடன்டா அவள புடிக்க வரச்சொல்லி இதுதான் நடந்துசு.
உனக்கு கதவ அடச்சுட்டு பேசத்தெரியாதாடா நீ பார்த்த வேலயால நாம இப்ப நாயவிட மோசமா ஓடித்திரிய வேண்டியதா இருக்கு பாரு. சரி போனத பத்தி பேசி வேல இல்லடா தாஸு நீ சொல்லுரதும் சரிதான் காள சாப்புட்டம்தானே அந்த ரெங்கன் வரதுக்குள்ள நாம அவள தேடி போவம் கெளம்புங்கடா. வாங்க.
ஹலோ- ” சொல்லுங்க மேடம் நான் ரெங்கன் உங்க அடிம பேசுறன். உன்ன நம்பி பொருப்ப ஒப்படைக்குறன் செய்து முடி…            சரி விசயம் என்னு சொல்லுங்க ??.. இந்த கங்காதேவி கோட்டையிட ரகசியத்த கந்தன்ட பொண்டாடி ஒரு பொட்டச்சி தெரிஞ்சுகிட்டா
அவ எவன்கையிலயாவது சிக்கி எவனாவது நம்மல மோப்பம் புடிச்சு வாரதுக்குள்ள நீ ஸ்பாட்டுக்கு போ அவனுகள நம்ப முடியாது கந்தன் பொண்டாடிய காப்பாத்த பார்பான்டா.
ம்ம் சரிங்க மேடம்  சொல்லிடிங்கள வேலய முடிச்சுடு உங்களுக்கு தாக்கல் தாரன் மேடம் கவல பாடாதீங்க நீங்க தொழில பாருங்க   இப்ப இடத்த வாட்ஷாப் பண்ணுங்க இதோ போறன்.
********
” ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெறும் வீராங்கனை போன்று ஓடி வந்து ரோஜா வில் இருக்கும் பனித்துளி போல் பளிங்கு முகத்தில் இருக்கும் வியர்வை முத்துக்களை துப்பட்டாவினால் ஒற்றி எடுத்து.  “ஊப் ஊப் என்று முச்சு காற்றை வேகமாக உள் இலுத்து வெளியேற்றி  சீராக்கிக் கொண்டிருக்கின்றாள் பதுமை.
“இம்புட்டு அயோக்கியனயா?.. அம்மா எனக்கு கட்டிவச்சிருக்காங்க அம்மாவும் பாவம் என்ன செய்யும் ஊரவிட்டு எங்கயும் வெளிய போனதில்லயே அப்போ எப்புடி நல்லவங்க யாரு ப்ராடுகள் யாருனு தெரியும். இனிமேல் இந்த விசயத்துல அம்மாவ நினைச்சு  அம்மாட பேச்ச கேட்டுட்டு சும்மா இருக்க கூடாது கேட்டா நீ பழைய மாதிரி பயந்த பெண்ணாவே அகிருவ மதி.
“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசனு” படிச்ச நாமலும் இருக்ககூடது. இனி எந்த பொண்ணும் இவங்கட மாயைல மாட்டி சின்னா பின்னமாககூடாது.  கெட்அப் மதி உன்னால முடியும் நீ எதையும் நினைக்காத இவங்கட கையில மாட்டிறாம  என்னோட தைரியத்தை எல்லாம் ஒன்றுகூட்டி ஓடிப்போய் மெயின்ரோட்ல யாருட்டயாவது லிப்ட் கேட்டு போய் அவங்க செய்றது எல்லாத்தயும் போலிஸ் ல சொல்லி என்னயும் எங்க அம்மாவயும். ஏமாத்தி என்ன கல்யாணம் பண்ணின அந்த கந்தனயும் அவன்ட கூட்டத்தையும் பிடிச்சு குடுத்துறனும்.
ஒடு உன்னால இத கண்டிப்பா செய்ய முடியும். என்று அவளுக்கு அவளே தன்னை தயார் செய்து கொண்டால். போரடுவதற்க்கு பேதையவள்.
*****************
நீண்ட நெடுஞ்சாலையில் அவனுக்கு மிகவும் பிடித்த விசயமான அவனின் வேலை பலுவின் வெம்மையை குறைப்பதற்க்கு லோங் ட்ரைவ் சென்று கொண்டிருக்கின்றான். இசை ஞானி இளயராஜாவின் மெல்லிசையை மீடிய சௌவ்ன்டில் வைத்து அந்த இசையை   கேட்டுக்கொண்டு அந்த இரவு நேரத்தின் ஏகாந்ததை ரசித்துக்கொண்டு.
அந்த இசை போன்று மென்மயான மனதை உடைய அவனது மெல்லியாளை அவன் சந்திக்கும் நேரம் வந்து விட்டது  இனி அவனிற்க்கு தடைகள் இல்லை எங்கு எவ்வாறு சந்திக்கலாம் என்று சிந்திக்கும் நேரம்.  “பூஜை வேளை கரடி “போன்று அவனது ஆருயிர் நண்பன் ராஜேஷ் அவனை தொ(ல்)லைபேசி முலம் அழைப்பு விடுத்தான்.
ஹலோ. என்னடா?.. அவன் கேட்ட விதத்தில் காரம் அனல்தெரித்தது. ராஜேஷ்- என்னடா மச்சான் கோவப்படுற?.. பின்ன என்னத்துக்கு இப்ப என்ன டிஸ்ட்டாப் பண்ணுற?.. அது ஒன்னுமில்ல மச்சான் இன்னையோட வீக்கென்ட் தானே சரி நம்ம மச்சனுக்கும் சேர்த்து சரக்குவாங்குவமேனு என்ன பிராண்ட் வாங்கணும்னு கேட்க கூப்புட்ட இப்புடி பாயுற.
சாரிடா நான் இன்னைக்கு சரக்கடிக்குற மூட்ல இல்ல வெளிய ட்ரய்வ் வந்துருக்கன் நீ குடி.
“சர் சர்” பிரேக் புடிக்கும் சத்தம். ஹலோ ஹலோ டேய் மச்சன் லைன்ல இருக்கியாடா?.. நான் இருக்குறது காட்டுப்பகுதிடா டவர் ப்ராப்ளம் போலடா இரு வண்டில யாரோ மோதின மாதிரி இருந்துசே யாரயும் காணோமே?… கீழ விழுந்துருக்க போறாங்க நீ முதல் இரங்கி என்னனுபாரு.  நான் வைக்குறன்டா   திரும்ப கூப்புடுறன் டேய் டேய் லைன்லயே இருடா வச்சிறாத இறங்கிடேன்டா  நேரம் வேற ரெண்டுங்கெட்டானா இருக்கு. காட்டுப்பகுதி வேற ஏதும் பேய் ஊசாட்டமா இருக்கபோகுதுடா.
ராஜேஷ்- டேய் நல்லவனே என்ற வாய்ல ஏதாச்சும் நல்லா வந்துற போகுதுடா உன்ன பார்த்து தான் ஊரே நடுங்கும் அதுல தப்பு பண்ணுற பேயும் சேர்த்திதான்.
அப்புடி இருக்குறப்போ உனக்கு பேய்க்கு பயமான்னா ஹஹஹ இதுதான் இந்த வருசத்துட முதல் காமெடி.
லொட லொட கத்தாம கொஞ்சம் வெயிட் பண்ணு நான் யாருனு பார்த்துடு நானே உனக்கு கூப்புடுறன்.
ராஜேஷின் புலம்பல். டேய் கொலவெறில இருக்கன்டா பப்பெல்லோ உன்மேல. ஜாலியா இன்னேரம் சரக்கடிச்சுடு வீக்கேன்ட கொண்டாடிடு நான்பாட்டுக்கு கனவுல ஷன்னிலியோனோட டுயட் பாடிட்டு  இருந்துருபன் நண்பனாசே ஒரு கட்டிங் போடடுமேனு உன்ன கூப்புடன் பாரு என்ன சொல்லனும்டா. நானே வைக்குறனு சொன்னனே.  இல்ல மச்சான் லைன்ல இருனு சொல்லிட்டு இப்ப காமெடி பீஸ் ஆக்கிடானே என்ன அப்பாடா அவனே வச்சுட்டான் இல்லன்னா இன்னேரம் அவன பப்பெலோனு திட்டுனதுக்கு  தேடி வந்து தூக்கி போட்டு மதிப்பானே!.
நேர்ல கதைக்குறதுன்னா எப்ப எப்புடி இருப்பானு பார்த்துடு கோவமா இருந்தா நம்ம உடம்பு புண்ணாகிறாம எஸ்ஸாகிலம். போன்ல கதைக்கவே பயமா இருக்கே எப்புடி நிலமைல இருப்பானோ தெரியல. என்ன செய்றது அவன் பார்க்குற வேலயும் அப்புடிதானே!..
இப்ப நண்பன்ட நிலம என்னவோ?.. அவன் ஊரையே பார்த்துக்குறான் அவன அவனே பார்த்துபான். நாம நாலைக்கு என்ன பிரியாணி திங்களாம்னு திங் பண்ணுவம்.
*********
ஐயோ ஒரு பொண்ணு போல இருக்கே?.. நல்ல காலம் காருல மோதல. இந்த லுசனோட பேசினதால இத கவனிக்கல இந்த காட்டுல வந்து மயங்கி விழுந்துருக்கே முதல் பல்ஸ் பார்பம். பல்ஸ் வேலசெய்து என்ன?.. முகமெல்லாம் மண்ணா இருக்கு இந்த புள்ள சாப்புடுமானே தெரியல இப்புடி காத்து கூடுமாதிரி இருக்கு.
” டேய் மொத அந்த புள்ளய பாரு அப்புறம் உன்ட ஆராச்சிய வச்சுக்க அவனது மனசாட்சி வாறியது அவனை” சே என்ன நான் வேற ஒரு பொண்ண ரசிக்குறனா?? நோ வே தண்ணீர் தெளிச்சும் எழுந்தபாடில்லயே!.. அட யாருமா நீ உனக்கு என்ன பிரச்சினையோ யாரு பெத்த பிள்ளையோ??.. இப்புடி காட்டுல வந்து கிடக்குற.
“ஐயோ என்ன இந்த பொண்ணு என்னயவே புலம்ப வச்சுட்டு”
இந்த புள்ளய்கு முகம் கழுவியே தண்ணி முடிஞ்சுது எழுப்பி தண்ணி குடுக்கனும் தண்ணி இல்ல இந்த ராஜேஷ் தீணி பண்டாரம் காருலயே திண்னுடு நான் வச்சுருக்க தண்ணிய எடுத்து குடுச்சிருவான். நான் வேற தண்ணி காணுமானு பார்க்கல சே. முகத்த துடச்சுடு இப்ப காஸ்பிடலுக்குதான் துக்கீட்டு போகனும் இவ்வளவு தட்டியும் எழுந்த பாடில்லயே!..
இந்த பொண்ண எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?.. போயிகிட்டே யோசிப்பம்.
ஐயஹோ!..  என்னோட மௌனராகமா???… நீ  மெலிஞ்சு இருக்குறதால உன்ன எனக்கு அடயாலம் தெரியலயா?..  எப்புடி தெரியாம போகும் நீ தானு என் மனசுக்கு தெரிஞ்சுருக்கே!.. அதுதான் உரிமையா ரசிச்சு பார்த்துருக்கன். இத்தின வருசம் கழிச்சு உன்ன இந்த கோலத்துலயா?.. நான் பார்க்கனும்  நீ மட்டும் எழுந்ததும் உன்னோட இந்த நிலைக்கு யாரு காரணம்னு மட்டும் சொல்லுடி.  என்னோட கையாலயே அந்த எருமைகள கொன்னு புதச்சிருவன். உன்னோட நான் எப்புடி எல்லாம்வாழணும்னு நினைச்சன்.  உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டன் அடி படல உனக்கு அப்புடி இருந்தும் நீ இன்னும் ஏன் மயக்கம் தெளியாம இருக்க?.. எழும்பி பாரு என்ன பாரு…
பார்ப்பாள் பாவை தொடரும்…

Advertisement