Advertisement

” அதுக்கு அவரோ இவன் எனக்கு பிறந்தாலும் நான் ஆசைப்பட்ட சுவேத்தாவுக்கு பிறக்கள அதனால இவன் எனக்கு முக்கியமில்லை உன்னாலயும் இப்ப காரியம் ஆகனும் அந்த கிழவனுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது அதுக்காக மட்டும் உன்னை இப்போ உயிரோட விட்டுட்டு நீ செத்தது போல நடிக்கவைக்ப்போறேன். அப்போதான் நீ இங்க சுவேத்தாவாக இருந்தால்தான் நான் சுவேத்தாகூட தொழிலயையும் பார்த்துக்கிட்டு சந்தோசமாக வாழமுடியும்.”
” என்று சொல்லிவிட்டு நான் மறுப்பு சொல்லவும் ஐந்து  வயதான மகேஷை தூக்கிட்டுப்போய் இரக்கமே இல்லாமல் குளிர்சாதனப்பெட்டில உள்ள வைத்து அடைச்சி பூட்டிவிட்டு வெளியே போய்டார்.”
” நான் கதறியழுது துடிக்கவும் அரைமணி நேரம் கழித்து திரந்து மகேஷை தூக்கிடு வந்து இப்ப இந்த டீலுக்கு ஒத்துக்கிறியா? இல்லையா? ஓகே சொன்னா டாக்டர் வெளிய நிக்கிறார் உடனே வந்து உன்னோட பிள்ளையை குணமாப்படுத்துவார்.”
” இல்லையா நீ கடத்துற நேரம் உன் பிள்ளை உயிருக்குதான் ஆபத்துன்னு சொன்னார் மகேஷும் குளிர்ல விரைத்துப்போய் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்தான் அதனால்தான்  பாட்டிமாகிட்ட மகேஷ் வளர்ந்த என் புள்ள இந்த கஷ்டம் எதுவுமே இல்லாம வளர்வான்னு நான் சம்மதித்தேன்.”
” அதன்பின் மகேஷை குணப்படுத்தி தந்துட்டு என்னை மறைத்து வச்சிட்டு எனக்கு ஹார்ட்அட்டாக் வந்து அம்மாக்கு வந்த வலிப்பு வந்து நான் ஹாஸ்பிடல்ல இறந்துட்டதா என்னை மாதிரி முகம் வடிவமைத்து ஒரு பாடியையும் ரிப்போர்ட்டையும் காட்டி மாமாவையும் உங்க எல்லாரையும் நம்பவைத்து மகேஷையும் உங்களிடம்   கொடுத்துவிட்டு வாந்துட்டார்”
” அதன்பின் அவர் சுவேத்தாவை கல்யாணம் செய்து மகேஷ் இப்போ கைது பண்ணின வீட்டுல தொழிலயையும் பார்த்துகிட்டு வாழுறோம்ன்னு சொல்லுவார்.”
” அப்புறம் அத்தை இறந்ததும் மாமா கோவில் குளம்ன்னு போனதால இவருக்கு கேட்க்க ஆள் இல்லாம அதிகமாக என்னை துன்புறுத்தினார் மாமா இல்லாததுக்கு பிறகு கொஞ்ச வருஷம் கழிச்சி சுவேத்தாவுக்கு ராஜ் பிறந்தான் அவனை என்கிட்ட கொண்டுவந்து தந்து வளர்கச்சொன்னார் அங்க தொழில் செய்யும் போது பிள்ளையை வளர்க்க கஷ்டமாம்னு பிறந்ததும் தந்துட்டுப்போய்ட்டார் உதவிக்கு ஒரு பொண்ணை துணைக்கு வச்சிட்டு அங்க போய்ட்டாரு.”
” தனிய இருந்த எனக்கு ராஜ் கிடைத்ததும் சந்தோசமாக மகேஷ் என்கூட இல்லாத குறையை தீர்த்தான் ராஜ்,”
” பிள்ளை பிறந்திருக்குன்னு கேள்விப்பட்டு மாமா வந்து பார்த்தார் அவர் வரும் போது நான் சுவேத்தாவா நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன் தலைமுடியை பாதியா வெட்டி ஆங்கிலம் கழந்த தமிழ் பேசி நாகரிகமாக சுவேத்தா மாதிரி மாறினேன்.”
” இப்புடியே காலம் மூணு வருஷம் ஓடிப்போச்சி அப்போ எதுலயோ மாமாவுக்கு சந்தேகம்   வந்து என்னை சுவிதாம்மான்னு கூப்புட்டார் நானும் பழக்கதோசத்துல திரும்பி பார்த்துட்டேன்.”
” அப்போ ஏன்மா நடிக்கிற நீ சுவிதானு நான் உன்னோட நடவடிக்கைகள்ல கண்டுபிடித்து விட்டேன் பிறந்ததுல இருந்து நான் சுவேத்தாவை பார்க்கிறேன் எனக்கு அந்த பொண்ணோட நடவடிக்கை பழக்கம் எல்லாமே அத்துப்படிமா உன்னோட பொறுமைதான் எனக்கு உன்னை   அடையாளம்  காட்டிக்கொடுத்தது நீ யார்ன்னு இனி எனக்கு முன்னால் என்னோட மருமகளா சுவிதாவாவே இரும்மா அதுதான் எனக்கு தெரிஞ்சிட்டே அப்புறம் ஏன் உனக்கு  வராத ஒண்ணை கஷ்டப்பட்டு வரவழைக்கிற நான் எனக்கு தெரிந்தத சங்கர்ட்ட காட்டிக்கமாட்டேன்னு சொன்னாரு மாமா.”
” மாமா வீட்டுக்கு வந்ததில இருந்து அவரும் இங்க தங்க ஆரம்பித்தாரு மாமாவால இதை எல்லாம் பார்க்கமுடியாம திரும்பவும் கோவில்களுக்கு போய்ட்டாரு. அப்புறம்  தான் வர்ஷி பிறந்தா அதேபோலவே என்கிட்ட வளர்க்கச்சொல்லி கொண்டுவந்து கைல குடுத்துட்டுப்போய்டார்.”
” இதுக்கெல்லாம் முடிவு மாதிரி அவரோட தொழிலுக்கு ஆரம்பிக்கிற முறை செய்து பார்த்து கண்டுபிடித்துவிட்டாராம். அதுக்கே நிறைய பணம் தேவை பட்டுதாம் இப்போ அதை செய்து விற்பனை செய்வதற்கு பணம் தேவையாம் என்னோட பேர்ல மாமா எழுதிவைத்த சொத்தை அவரோட பேர்ல எழுதி தரட்டும்ன்னு சொன்னார் அப்போது மாமா அங்கவந்து அதுதான் சுவிதா இறந்துட்டாளே சங்கர அதனால அந்த சொத்தை நான் மகேஷ்க்கு எழுதிவைத்துவிட்டேன் என்று சொன்னார்,”
” அப்போது நான்யார்ட்ட சொத்தை கேக்குறேன்னு உங்களுக்கு தெரியுமானு? கேட்டார் அதுக்கு  மாமா நான் உனக்கு அப்பா எனக்கு இது சுவிதான்ற எல்லாமே தெரியும்னு சொல்லவும் நான்தான் மாமாவிடம் எல்லாமே சொல்லிட்டேன்னு கண்டபடி என்னைபோட்டு அடித்தாரு அப்போ அதை தடுக்கவந்த மாமாவை பிடித்து கீழ தள்ளிவிட்டுட்டார் படியில உருண்டு  மாமா கீழ விழுந்ததால கால் முறிந்துவிட்டது மாமாவிற்கு அதன்பின் அவரால இனி ஒண்ணும் செய்யமுடியாதுன்னு தெரிஞ்சதும் இவரோட சித்திரவதை அதிகமாகிவிட்டது.”
” அப்போ ராஜ்கே பத்துவயது ஆகிவிட்டது அவனிற்கு விபரம் தெரிந்துவிட்டது அதனால் அதன்பின் என்னோடு இருந்தால் நான் அவங்களை பற்றிஜசொல்லிருவேன்னு ஹாஸ்டல் சேர்த்துவிட்டுடார் அதேபோன்று ஷர்மியையும் என்னைவிட்டு பிரித்துவிட்டார்.”
” அப்போதுதான் மாமா உடல் நிலை சரி இல்லைன்னு இறந்துபோனார்.”
” அதன்பின் நான் நானாகவே இருந்தேன் ஆனா சுவேத்தா என்ற பேரோடு இருந்தேன்.”
” ராஜ் ஷர்மியும் வளர்ந்ததும் எதையும் அவங்கள்ட நான் அவங்களோட அம்மா இல்லைன்னு எதுவும் சொன்னால் இப்போ மகேஷ் இங்க மெட்ராஸ்லதான் ஹாஸ்டல்ல நின்னு படிக்கிறான் அவனை ஆக்ஸிடன் பண்ணிருவேன் ஓழுங்க நான் சொல்லுறதை கேட்டு இருக்கனும்னு சொல்லிட்டு போய்ட்டார்.”
” அப்புறம்  காலம் ஓடிப்போச்சி ராஜ் ஷர்மி ரெண்டு பேரும் வளர்ந்து காலேஜ் போக ஆரம்பித்தாங்க அதனால நான் அவங்களோட பேசாமல் இருப்பதனால் அவங்களும் என்னோட அண்டி புழங்கவில்லை.”
” பின் மகேஷ் கலெக்டர் ஆகி மெட்ராஸ்கே அவர் பதவிவாங்கி கொடுத்தாராம். அப்புறம் இடையில என்கிட்ட மகேஷிடம் கையெழுத்து  வாங்கி தரச்சொல்லி சித்திரவதை பண்ணுவார் நானும் மகேஷை பார்க்குற ஆசையில சரின்னு சொல்லிட்டேன்.”
” ஆனால் அதுக்கான சந்தர்ப்பம் அமையவில்லை இத்தினைவருடம் இவங்க என்ன தொழில் செய்றாங்கன்ற எதையும் என்னிடம் சொன்னதில்லை.”
” அவரே பாட்டிமா மகேஷுக்கு கல்யாணம்  பண்ணி வைத்துவிட்டாங்கன்னு சொன்னார் இந்த ஊர் பொண்ணாம். “
” மாமா சாகும் போது மகேஷ் பொண்டாட்டி கையெழுத்து போட்டாத்தான் மகேஷ் சொத்தை விக்கவோ யாருக்கேனும் கொடுக்கவோ முடியும்னு உயில் எழுதியிருந்தார்.”
” அதனால வடிவிடம் திருட்டுத்தனமாக கையெழுத்து வாங்க சுவேத்தா ஆள் அனுப்பினாளாம் வடிவு திட்டி அனுப்பிட்டாம் அதையும் என்னிடம் சொல்லி என்னை அடித்தார். 
” அப்புறம் கொஞ்சநாளைக்கு முன்புதான் என்னை அந்த வீட்ல இருந்து வேறவீட்டுல வச்சிருந்தார் அப்போ போலீஸ் ரைடு வந்த நேரம் அப்போ இருந்து மகேஷ் வந்து கூப்புடும் வரை நான் அங்கதான் இருந்தேன்.”
” இதுதான் நடந்தது கல்யாணம் முடித்து அந்த வீட்டுக்கு போனதுக்கு பிறகு கைதாகிதான் சுவேத்தா வீட்டை விட்டு வெளியே வந்திருக்கா இருப்பத்திஐந்து வருடம் கழித்து,”
” தொழிலுக்கு பொறுந்துறது போல அமைத்துதான் கங்காதேவின்னு அவளுக்கு பேரை மாற்றி வைத்துவிட்டு என்னை சுவேத்தாவாக சிவசங்கர் மாற்றிய கதை.”
” சரி சொல்லுங்க பாட்டிமா என்னை எப்புடி நீங்க கண்டுபிடித்தீங்க??..”  என்று சுவிதா கேட்கவும்.பெரியாத்தாவோ எல்லாரும் சாப்பிட்டு விட்டு பேசலாம் என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார் பெரியாத்தா.
அப்போது மகேஷ் அவனது கைபேசியை எடுத்து “இவங்க சொன்னது எல்லாத்தையும் நீயும் கேட்டதானே  இனிமே நீ தான் என்ன செய்யலாம் என்று முடிவு சொல்லனும்” என்று பேசிவிட்டு வைத்தான் மகேஷ் வர்மா.
அதன்பின் சுவிதா அவனது அருகில் சென்று கையை பிடிக்கவும் ” என்னை தொடாதிங்க என்னோட பெயரை சொல்லாதீங்க என்று சுவிதாவிடம் கத்திவிட்டு சென்றுவிட்டான்.”

அதை பார்த்த சுவிதா தனது

நெஞ்சை பிடித்து கீழே விழுந்துவிட்டார்.

தொடரும்….

Advertisement