Advertisement

அத்தியாயம்  18.
மதுரையில் பெரியாத்தாவின் வீட்டில்..
பெரியாத்தா மகேஷ் சுவேத்தா ராஜதுரை.என்று இவர்கள் நால்வரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்ததுபோன்று இருந்தார்கள். 
அந்த இடமே பெரும் அமைதியாக இருந்தது அதை கலைப்பது போன்று பெரியாத்தா சிவசங்கர் வர்மாவை திட்டி தாளித்தபடி இருந்தார்.
பத்து நாட்களுக்கு முன்.
கங்காதேவி கூட்டத்தை கைது செய்து எப்பையார் பையில் பண்ணி உள்ளே தள்ளி விட்டார்கள் இருவரும். 
சிவசங்கர் வர்மாவின் பழைய கேசான அந்த கட்டிடம் இடிந்துவிழுந்த கேஸ், இந்த மருந்து கடத்தல் கேஸ் , அந்த க்ரீம் பாவித்து வெளியே தெரிந்து இரண்டு பொண்ணுகளின் மரணமும். தெரியாமல் இதுவரை காலமும் உத்தியோகஸ்தர்கள் கிம்பலம் வாங்கி மறைத்துவைத்த 140 பொண்ணுகளின்  மரணம்  என்று அனைத்து கேஸையும்.   ஆள் மாறட்டம் செய்தல் என்று அவர்கள் பண்ணிய குற்றங்கள் முழுவதும் கங்காதேவி சிவசங்கர் வர்மா இருவரின் மேலும் கேஸ் பைலாகி நீதிமன்றம் அழைத்துசென்றனர்.
கங்காதேவி டீமை புகழ் கைது செய்த   அன்று தகவல் தெரிந்த ப்ரஸ் டீம் ஸ்டேஷன் செல்லவும் விசாரணைக்கு அழைத்து வந்திருக்கின்றோம். கேஸ் உண்மை என்றால் அப்போது உங்களிற்கு தகவல் சொல்லுவோம் என்று பத்திரிகை டீம்களிடம் மகேஷ் சொல்லவும் அவர்களோ கலெக்டரின் பேச்சை மீறயிலாமல் சென்றுவிட்டனர். 
ஆனால் இன்று கேஸ் உண்மையாகி வழக்கிற்கு நீதிமன்றம் வந்திருக்கின்றது. அங்கோ இவர்கள் வருவதற்கு முதல் பத்திரிக்கை டீம் வந்து காத்திருந்தது. குற்றவாளிகள்  உள்ளே அழைத்து செல்லும் போது அவர்களின் வசதிப்படி புகைபடம் க்ளிக் பண்ணினார்கள். 
மாவட்ட கலெக்டரின் அம்மா அப்பா இப்படி ஒரு சட்டவிரோதமான செயல் செய்து கைதாகிய விஷயம் டிவி. ரேடியோ பத்திரிகை என அனைத்து ஊடகங்களிலும் வைரலாக ப்ளாஸ் நீயூஸாக வெளிவந்தபடி இருந்ப்பதால் மக்களும் பரபரப்பாக இருந்தனர். 
டீவி செய்தி
” பிரபல தொழில் அதிபரும் மாவட்ட கலெக்டரின் தந்தையுமான மிஸ்டர் சிவசங்கர் வர்மாவும் அவரது மனைவி கங்காதேவி என்ற பெயரில் மருந்து வகைகள் கடத்தல் செய்த சுவேத்தா என்பவரும். இவர்களுக்கு உதவி புரிந்த கமிஷ்னர், அரசியல்வாதிகள். சையன்டிஸ். மற்றும் டாக்டர்ஸ் ரவ்டீஸ் என அனைவரையும்  ஏசிபி புகழேந்தியும் கலெக்டர் மகேஷ்வர்மாவும் மாலதி என்னும் பெண்ணின் தற்கொலையை தொடர்ந்து தீவிரமாக ஆதாரங்களுடன் இந்த கடத்தல் கூட்டத்தை வகையாக பிடித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
கலெக்டர் மகேஷ் வர்மாவின் தந்தை தாய் இருவரும் இதில் பிரதான குற்றவாளியாக இருந்தும் அவரின் நேர்மையினால். அவரே முன்நின்று ஏசிபி புகழேந்தியுடன் சேர்ந்து கைது செய்துள்ளார் கலெக்டர். இது மிகவும் ஒரு பெறுமைக்குறிய விஷயமாக மக்களிடையே பேசப்பட்டுவருகின்றது. 
பெண்களின் அழகு என்னும் எண்ணத்தை  அவர்களது பலகினமாக நினைத்து அவர்களை வைத்து பணம் சம்பாரித்த சுவேத்தா சிவசங்கர் வர்மாவின்.கூட்டத்திற்கு நீதிபதி வழங்கயிருக்கும் தண்டனையை கேஸ் விசாரனை முடிவை உங்களுக்கு உடனுக்குடதன் அறியதருவதற்காக நீதிமன்ற வளாகத்தில் இருந்து மூன் டிவியின் மக்கள்பிரதிநிதியாகிய நான் தி. வனிஷா. தொடர்ந்து மூன் டிவியுடன் இணைந்திருங்கள்.
சுவேத்தா மதியை ஆள் வைத்து துரத்தியதும். சிவசங்கர் வர்மா ஆள்வைத்து வடிவை கடத்தி அடைத்துவைத்ததும் வெளியே தங்களது மனைவியரின் பெயர் அடிபட விரும்பாததால் புகழும் மகேஷும் அவ்விரண்டு கேஸ்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை.
நீதிமன்றத்தின் உள்ளே.
பிரபல வக்கில் ஒருவர் அவர்களின் கேஸிற்கான புகழ் திரட்டிக்கொடுத்த அனைத்து ஒருஜினல் ஆதாரங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்து அவர்களுக்கு எந்தவிதமான மறுபரிசிலனைக்கும் இடம் கொடுக்காமல் ஜாமின் இதுபோன்று எந்த வழிகளிலும் சுவேத்தாவையும்  சிவசங்கர் வர்மாவும் வெளியே வரமுடியாதளவு   வாதாடி கடுழிய ஆயுள் தண்டனை என்று  திர்ப்பை பெற்றுவிட்டார். 
அதேபோன்று கமிஷ்னர். அவர்களுக்கு மருந்தையும் க்ரீமையும் தயாரிப்பதற்கு உதவி செய்த சையன்டிஸ் டாக்டர்ஸ் ஏனைய அனைவரினதும் பதவிகள் பறிக்கப்பட்டு அவர்களிற்கும் சிறை தண்டனை கிடைப்பட்டது. 
சுவேத்தாவின் கையாட்கள் நால்வரும் கோர்டிலும் வாக்குமூலம் கொடுத்து சரண்டர் ஆகியதால் அவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 
இங்கு அவர்கள் விதித்த அதிகவிலையின் காரணமாக அவ் ஊசியை வாங்கமாட்டார்கள் என்று ஊசிக்கு மருந்து தயாரித்த கழிவு மெலன் மருந்தில் கெமிகலும் அதிகமாக கழந்து அந்த க்ரீம் போடும் பெண்கள் அதிக தோல் நோய்கள் ஏனைய நோய்கள் மூலம் பாதிக்கப்படுவார்கள் இந்த க்ரீம் தொடர்ந்து பாவித்துவந்தால் ஸ்கின் கேன்சர் வந்து இறந்து போவார்கள் என்ற அனைத்துவிதமான எதிர்வினைகளையும் தெரிந்தே இவர்கள் பணம் ஒன்றே குறிக்கோள் என்ற அடிபடையில் தயாரித்து திருட்டுத்தனமாக சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த்திருக்கின்றார்கள்.
அவர்கள் சட்டவிரோதமாக  தயாரித்த மெலனின் மருந்து ஊசி அனைத்தையும் இவர்கள்மூலம் கடத்தல் வழியில்   பெற்று வெளிநாட்டில் அதிக விலையில் போதை மருந்து விற்கும் கும்பலே  இந்த மருந்தையும் விற்று சுவேத்தா கூட்டத்திற்கு பணம் அனுபுவார்கள் அதன் மூலம் தான் சிவசங்கர் வர்மா தானே எல்லாம் என்ற பணத்திமிரில் மிதந்தார்.
வெளிநாட்டில் மருந்து வாங்கும் குபலையும் சிவாசங்ர் வர்மாவிடம் விசாரிக்கும் முறையில் விசாரித்து தெரிந்துகொண்டு அந்த கும்பலிற்கு தகவல் கிடைக்கும் முதல் ப்ரைம் மினிஸ்டர் மூலம் அந்தநாட்டு இந்திய தூதுவர் ஒருவரான நபரின் மூலம் அந்நாட்டு ஜனாதிபதிக்கு ஆதாரத்துடன் தகவலை அனுப்பி அங்கிருக்கின்ற குற்றவாளிகள் அனைவரையும் பிடிக்கும் படியும் அந்த பவர் அதிகமான மெலனின் ஊசிகள் அனைத்தையும் உடனடியாக தடைசெய்யுமாறும் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
டீவி செய்தி
” சிவசங்கர் வர்மாவிற்கும் அவரது மனைவி சுவேத்தாவிற்கும் அந்த கூட்டத்தினர் அனைவருக்கும் கடுழிய சிறைதண்டனை வழங்கப்பட்டு. இந்த கடத்தல் பணத்தினால் வாங்கப்பட்ட சிவசங்கர் வர்மாவின் பூர்விக சொத்துகள். தவிர்ந்த அவர் தற்போது இருக்கும் வீடு உட்பட அனைத்தையும் ஜப்தி பண்ணும்படியும். கமிஷ்னர். டாக்டர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யும்படியும் அரசிற்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். 
அத்தோடு கலெக்டர் மகேஷ்வர்மாவின் நேர்மையான செயலுக்கும் ஏசிபி புகழேந்தியின் கடுமையான உழைப்பிற்கும் நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
தீர்ப்பின்படி சென்னையின் மத்தியசிறைசாலையில் கடத்தல் கும்பல் அடைக்கப்பட்டனர்.
இன்றுமுதல் சென்னையிலும் ஏனைய வெளி மாநிலத்திலும் இருக்கும்  அனைத்து சில்லறைகடைமுதல் சாப்பிங்மால் வரை அனைத்திலும் எதிர்வினையற்ற அழகுக்கலை நிபுணரால் பரிந்துரை செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களை தவிர்த்து கெமிகல் பீளிச்சிங் கலந்த அழகுசாதனை பொருட்கள் நைட்க்ரீம் என்று அனைவகையான க்ரீம்களையும் இன்றில் இருந்து சுகாதார துறை அமைச்சரின் கண்கானிப்பின் கீழ் அனைத்து இடங்களிலும் தடைவிதித்து தற்போது பாவனையில் இருக்கும் க்ரீம்களையும் ஆராய்ந்து வெளியற்றுமாறும் இந்த தீர்ப்பை எதிர்க்கும் உரிமையாளரின் மால்களை சீல் வைக்கும் படி இந்த உயர்நீதி மன்ற நீதிபதியின் தீர்ப்பாக கூறப்பட்டது.
பெண்களே இந்நாட்டின் கண்களாகையால் அவர்களை அவர்களே அனைத்துவிததிலும் பாதுகாத்துக்கொள்ம்படியும் அழகு என்பது இயற்கையின் வரம் அதை மெருகேற்றுவதற்கும் இயற்கை முறையில் அழகுபடுத்தும் படியும் நீதிபதியால் கேட்டுக்கொள்ளப்பட்டது. 
மக்களுக்கு முக்கியமாக பெண்களுக்கு அழகை மேம்படுத்தல் தொடர்பாகவும் மெலன் நிறமி தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதற்காக அழகுக்கலை நிபுணர், டாக்டார் வில்ஷன், மனோதத்துவ டாக்டர். அவர்களுடன் கலெக்டர் ஏசிபி இவர்கள் அனைவரும் நமது மூன் டிவியில். நாளை காலை ஒன்பதுமணிக்கு  விழிப்புணர்வுடன் கூடிய கலந்துரையாடல் ஒன்று நடக்க இருக்கின்றது அதனை மக்கள் தவறாமல் பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறும் நான் மூன் டிவியில் இருந்து உங்கள் வனிஷா.
இந்த கேஸ் விஷயமாக மனவுழைச்சலில் இருந்த மகேஷை அவனது தாய் தந்தையின் இச்செயல் மேலும் கவலைக்குள்ளாகியது. அவர்களை அவனால் மன்னிகயிலவில்லை. ஆதலால் அவனது தம்பி தங்கை இருவரையும் பாதுகாப்பாக அவனது பிளாட்டில் நம்பிக்கையான ஒரு ஆண் பெண்ணின்  துணையுடன் குடிவைத்துவிட்டான்.
அவனை தெரிந்த அனைவரும் இந்த கேஸ் விஷயத்தை பற்றி கால் பண்ணிக்கேட்டு தொல்லை செய்து துன்புறுத்துகின்றனர். வீட்டில் இருக்கும் போது அவனது கைபேசியை வடிவு வாங்கி வைத்துவிட்டு அவனிற்கு ஆறுதலாக இருப்பாள்.
அவன் நேர்மையான மனிதன் கலெக்டர் ஒரு அண்ணாகவும் இருந்து இச்சூழ்நிலையை சமாளித்துவிட்டான். ஆனால் அவனது தாய் தந்தையின் துரோகத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதனால் மிகவும் மனவுழைச்சலின் காரணமாக சோர்ந்து காணப்பட்டான்.மகேஷ்
மகேஷை தனிமையில் விடாமல் அவனது இரண்டு நண்பர்கள் புகழும் ராஜேஷும் அவனுடன் இருந்தும் அவர்களாளும் அவனது தனிமை மற்றும் சோர்வையும் போக்கயிலவில்லை.
 தொடர்ந்தும் அவனது சோர்வை பார்த்து வடிவினால் சமாளிக்கமுடியாமல் பெரியாத்தாவிற்கு கால் செய்து சொல்லிவிட்டாள்.வடிவு
அவரோ உடனடியாக ராஜதுரையுடன் வடிவின் தங்கை முத்துவையும் பொன்னியையும் வடிவிற்கு உதவியாக வாணியுடன் விட்டுவிட்டு மகேஷை இங்கு அழைத்துவரும்படி கூறி அனுப்பிவைத்தார்.
ராஜதுரையும் வந்ததும் பெரியாத்தா மகேஷிற்கு கால் செய்து அவர் கூறும் முகவரியில் இருக்கும் நபரையும் அழைத்துக்கொண்டு உடனடியாக மதுரை வரும்படி அழைப்பு விடுத்தார். 
அவரின் அழைப்பை ஏற்று அவர் சொன்னமுகவரில் போய் அந்நபரை பார்த்தவன் அவனது மண்டையை பிய்த்துக்கொள்ளாத குறையாக அவரையும் அழைத்துக்கொண்டு தனது மாமனாருடன் பிளைடில் மதுரை சென்று இதோ பெரியாத்தாவின் வீட்டில் சுவேத்தாவின் கதையை கேட்பதற்காக காத்திருக்கின்றனர்.
யார் ?.. இந்த மற்றும் ஒரு சுவேத்தா அவரின் கதை என்ன??..
அடுத்த பகுதியில் வரும்.
 தொடரும்…

Advertisement