Advertisement

மூன் டீவி ஆபிஸ் நேர்காணல் மண்டபம்.
வனிஷா—– வணக்கம் நேயர்களே மீண்டும் நாம் சிறிய இடைவேளையின் பின் இணைந்திருக்கின்றோம். 
“நாம் இதுவரை மனிதனின் நிறத்தை பற்றி அறிந்திராத பல விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் அதில் சிலவற்றை தெரிந்துகொள்ள டாக்டர்  வில்ஷனோடு தொடர்ந்து பேசுவோம் இதை தவராமல் நேயர்களாகிய நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். “
“டாக்டர் சார் இதுக்கு முதல் மெலனின் என்றால் என்ன எவ்வாறு உற்பத்தியாகின்றது என்று பார்த்தோம். இதன்பின்பு இந்த மெலனின் எதில் இருந்து பெறப்படுகின்றது அதன் நன்மை தீமைகளை எடுத்து சொல்லுங்கள்.”
டாக்டர் வில்ஷன்.—- 
“மெலனின் சில உணவுகளில் இருந்தும் கிடைக்கின்றது. அந்த உணவு வகைகள் என்னவென்றால்.”
“பழவகைகள்– சிட்ரஸ் பெர்சி ஸ்ர்டாப்பரி. மற்றும் பச்சை இலை காய்கறிகள், விட்டமீன் சி நிறைந்த உணவுகள். “
“கருங்கோழி இது எத்தினை பேருக்கு தெரியும்ன்னு தெரியாது. இந்த வகை  நாட்டு கோழியின் முழுப்பாகங்களும் அதாவது பூ தலை உடல் வால் கால் இறைச்சி இரத்தம். ஏனைய உள் உறுப்புகள் அனைத்தும் அதிக கருமை நிறமாக காணப்படும். இந்த கோழி இறைச்சி முட்டை போன்றன இதய நோய் கிட்னி சம்மந்தமான நோய். போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதன் விஷேஷமான பண்பு மெலனினை அதிகமாக உடலில் உற்பத்தி செய்து மெலனின் குறைவினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கின்றது. “
“இதனை தெரிந்து கொண்டபடியினால் தான். மேல்குறிப்பிட்ட பழங்கள் மற்றும் இந்த கருங்கோழியின் கொழுப்பு இரத்தம் என்பவாற்றை விட்டாமீன்கள் அனைத்தையும் கொண்டு காச்சி அதனை பதப்படுத்தி ஊசி மருந்தாக தயார் செய்து கடத்தி விற்பனை செய்து இருக்கின்றனர்.”
“மெலனின் மனித உடலில் அளவாக இருந்தால் என்ன நன்மை என்று பார்ப்போம். “
“நம் நாட்டிலும் சரி அயல் நாடான இலங்கையிலும் சரி மெலனில் சமமாகவோ அதிகமாகவோ இருக்கும் மனிதன் கறுப்பு நிறமாக [திராவிட நிறம் ] இருந்தாலும் திடமாக ஆரோக்கியமாக இந்தார்கள் ஒரு மனிதன் நூறு வயதிற்கும் மேல் வாழ்ந்த விஷயம் நாம் கேள்வி பட்டிருப்போம்.”
“அவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருந்திருப்பார்கள். அவர்களது உடலில் மெலனின் அளவு சமமாகவோ அதிகமாகவோ இருந்ததனால் அவர்களால் எவ்வித பாதிப்பும் இன்றி இயங்க முடிந்தது. உதாரணமாக  மெலனின் குறைந்த  நாட்டு மக்களினால் தற்போது உலகையே ஆட்டி படைக்கும் கரோனா நோய் அதிகமான பாதிப்பை வெள்ளைகாரன் தான் அனுபவித்தான் ஏன் என்றால் அவனின் உடலில் மெலனின் கடுமையாக குறைந்த இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து இருக்கின்றது. “
 ஆனால் நம் நாட்டில் அதிகம் வயது முதிர்ந்தோர் எனைய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவார்கள் தான் கரோனா வைரசால் பதிக்கப்பட்டு இறந்தவர்கள். அதில் ஒரளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பிழைத்தும் விட்டனர். 
அதனால் மெலனின் அதிகமாக இருந்து கறுப்பு நிறம் உடையவர்கள் வரம் பெற்றவர் ஆவர்.
மெலனின் இயற்க்கையாக குறைந்து இருப்பின் மேலே கூறிய உணவு வகைகளை அதிகம் உண்ணுங்கள். 
பெண்கள் க்ரீம் பாவித்து மெலனினை குறைத்திருந்தால் அதனை இன்றோடு தவிர்த்து மாற்றுவழி செய்து பயனடைந்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் மக்களே.
வனிஷா — 
“மெலனின் பற்றி தேவையான அளவு விளக்கத்தை நமக்கு அளித்த டாக்டர் வில்ஷன் அவர்களுக்கு எமது நன்றி.”
“அதனை தொடர்ந்து மெலனின் சம்மந்தமாகவும் கிரீம் பாவனை சம்மந்தமாகவும் அழகுக்கலை நிபுணர் மிஸ்ஸஸ் நிர்மலா அவர்கள் நமக்கு தெளிவு படுத்துவார்கள்.” 
“வணக்கம் நிர்மலா நீங்க உங்களது விளக்கத்தை மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள்.”
 நிர்மலா— நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 
“அழகு என்பது நிறத்தை வைத்து தீர்மானிப்பது இல்லை. கருமையும் முகலட்சனமாக இருந்தால் அவர்களும் தனி அழகுதான்.”
“சிவப்பாக இல்லையே என்று எந்த பெண்களும் வருந்தவேண்டாம். நீங்கள் கறுப்பாக இருந்தாலும் எந்த விதமான மெலனின் குறைவினால் ஏற்படும் பாதிப்புக்கள். உங்களை அண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.”
“முந்தைய கால பெண்கள் இயற்கை மூலிகை  மஞ்சள் சந்தனம் கடைலைமா முல்தானிமெட்டி இவற்றை பொடிசெய்து பால் தயிர் போன்றவற்றில் கலந்து மேல் பூச்சு பூசி குளிப்பார்கள் அதனால் இந்த கால பெண்கள் போன்று பாதிப்புகள் இல்லாமல் அவர்களது சருமம் பொலிவாக இருந்தது.”
” ஆனால் இப்பொழுது சிவப்பழகை பெற அதிகம் கெமிகல் கழந்த கிரீம்கள் சோப்பு பேஸ்வாஸ் பியூட்டி பார்லரின் பிளிச்சிங் அதிகமுள்ள பேசியல் பெக்கள். இன்னும் என்வெல்லாமோ செய்து இயற்கையாக நமக்கு  கிடைத்த வரத்தை அழித்து செய்ற்கை தற்காலிக சிவப்பழகை தேடிச்சென்று பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.” 
“நம்முடைய நிறம் மரபணு சார்ந்தது கருமை நிறத்தை மஞ்சள் சந்தனம் கடலைமா முல்தானி மெட்டி இவாற்றில் தயிர் அல்லது பால் கலந்து ஒவ்வொரு நாளும் முகத்தில் முடிந்தால் கை கழுத்து பகுதிகளில் பூசி குளித்து அதன் மூலம் சருமத்தை பளிச்சென்று ஆக்குவது சாத்தியம் பாதிப்பற்றது. “
” சில சிவப்பழகு சாதனங்கள் தயாரிப்பில் அதிகம் பிளிச்சிங் ஏஜென்ட்கள் உள்ளன அவை தோலை வெளுப்பாக்கும் ஸ்டிராய்டுகள் இருப்பதனால் பிறக்கும் போது இருக்கும் தோலின் நிறம் உரிந்து  உடலில் மெலனின் சுரப்பியை தடை செய்கின்றது.  இதனால் சருமம் இலகுவில் வெளுப்பாகும் ஆனால் காலப்போக்கில்  மிகக்கடுமையான பக்கவிளைவுகள் நோய்கள்  ஏற்படுகின்றது.”
வனிஷா—-  மிஸ்ஸஸ் நிர்மலா இதனால் ஏற்படும் நோய்கள் என்ன என்று கூறுங்கள்.”
நிர்மலா??.. என்ன பக்கவிளைவு நோய்கள் ஏற்படும் என்றால். தோல் நோய், பரு, சருமம் வெடிப்பாகுதல், ஸ்கின் கேன்சர், சரும செல்கள் பாதிப்படைந்து சருமம் பழுதாகி ஓட்டைகள் விழுதல் . துற்நாற்றம் வீசுதல் , இரத்ததில் ஈமோகுளோபின் அளவு குறைந்து இரத்தின் ஓட்ட அளவு குறைதல். சரும வெடிப்பு, வயது முதிர்ந்த தோற்றம் விரைவில் முகத்தில்  காணப்படுதல் அலர்ஜிக் , முக்கியமாக குழந்தைக்களுக்கு தாய் பால் ஊட்ட இயலாமல் போகவும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. “
“அதனால் ஏன் இயற்கை அழகை கெடுத்து செயற்கையை தேடிப்போய் காசுகொடுத்து வாங்கி பின் அதனால் ஏற்படும் நோய்களுக்கும் காசுகொடுத்து மருத்துவம் பார்த்து. இதெல்லாம் தேவையற்ற வீண் விரையமாகும்.”
உதாரணமாக நாம் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை அந்த உணவு சோறாகவும் இருக்கலாம் பீட்ஸா சாப்பிட்டுதான் உயிர் வாழவேண்டும் என்று கட்டாயம் இல்லையே அதுபோன்றே கறுப்பாக இருந்தாலும் வாழும்வரை நோய் இல்லாம் வாழுவது முக்கியமே தவிற பல நோய்களை தரும் கிரீம்களை போட்டு வெள்ளையாக வாழ்வது முக்கியமில்லை. “
இந்த உதாரணத்தை மனதில் நிறுத்தி அனைவரும் ஆரோக்கியமாக நாமும் இனிவரும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்து சென்று வாழவைப்போம். 
நன்றி,
வனிஷா—  எது உண்மையான அழகு என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்கூறிய நிர்மலாவிற்கு மிக்க நன்றி.
அடுத்ததாக இதனால் ஏற்படும் மன அழுத்தம் பற்றி கூறுவார் நமது மனோதத்துவ டாக்டர் மிஸ்டர் விக்டர். சொல்லுங்கள் சார்.
டாக்டர் விக்டர்.——- 
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 
“வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற காமெடி வசனம் படத்தலைப்பாகவே வரும் அளவுக்கு நம் சமூகத்தில் நிறவெறி ஊறிக்கிடக்கின்றது. “
” அழகாக இருப்பது அடுத்து அதற்குமுன் சிவப்பாக இருந்தாலே அழகாகி விடுவோம் என்பதே இக்கால பெண்களின் மன நிலை அதிகமாகி விட்டது.”
“அதற்கு காரணம் சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு நம் சமூகத்தில் கொடுக்கப்படுகின்ற மதிப்பு தனிதான். அதனாலயே நிறத்தை அதிகம் மேம்படுத்திக்கொள்ள நினைத்து சிவாஜி படத்தில் ரஜனி ஸ்டைலில் எதையும் முயற்சி செய்து பார்க்க தயங்குவதில்லை சிலர்,”
” பெண்கள் கறுப்பாக இருந்தால் திருமணத்திற்கு தாமதமாகுதல். கறுப்பி என்று பட்டபெயர் கொண்டு அழைத்து கேலி பேசுவதனால் அதை மாற்றுவதற்கு கேளிக்கைகளை கடந்து செல்லாமல் அதற்கு முக்கியதுவம் கொடுத்து  இந்த கிரீம் வழியை தேர்வு செய்து அவர்களது வாழ்வை அவர்களே அழித்துக்கொள்கின்றார்கள்.”
” இதுவே நம் நாட்டில் ஆண்கள் கறுப்பாக இருந்தால் அழகு என்று கொண்டாடுவார்கள், ஆனால் அதே ஆண்கள் தனது மனைவி பிள்ளைகள் கறுப்பாக இருந்தால் அவர்களை ஒதுக்கியும் வைப்பார்கள்.”
” பிறந்த பிள்ளை கறுப்பாக பிறந்ததனால் அப்பிள்ளையை வெறுத்த தாய் தகபனும் உண்டு,”
“கறுப்பும் ஒரு நிறம் தான் ஆரோக்கியமான ஆழகுதான் என்பதை ஏற்றுக்கொண்டு ஆண்களும் சக பெண்களும் கறுப்பாக இருப்பவரை கேளி செய்து துன்புறுத்தாமல். வெறுத்து ஒதுக்காமல் அவர்களை தவறான பாதைகளுக்கு அழைத்து செல்லாமல் அவர்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு , “
“வெள்ளையாக இருப்பவர்கள் டாக்டர் வில்ஷன் கூறிய உணவு பழங்கள் போன்றவற்றை உண்டு மெலனினை சமமாக ஆக்கிக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வளர்த்துகொள்ளுங்கள்.”
“யாருடைய கேளிக்கைகளையும்  கண்டுகொள்ளாமல் கடந்து சென்று நமக்கான வாழ்வை நமக்காக மட்டுமே  நமது சந்ததியினருடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.” 
நன்றி.
வனிஷா—— பாதிக்கபடுபவர்களின் மன நிலையை எடுத்துக்கூறிய மனோதத்துவ டாக்டர் விக்டர் அவர்களுக்கு எனது நன்றி.
அதனை தொடர்ந்து நமது கலெக்டர் மகேஷ் வர்மா ஏசிபி புகழேந்தி இருவரும் இந்த கேஸ் சம்மந்தமாக கூறுவார்கள்.
கலெக்டர் மகேஷ்.. 
அனைவரும் வணக்கம்.
“ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் தற்கொலையில் தான் இந்த கேஸை விசாரிக்க ஆரம்பித்தோம் இருவரும் அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்களை பிடித்து விசாரித்து அந்த கூட்டத்தை பிடிக்க போன இடத்தில் எனது தாய் தந்தையை அங்கு எதிர் பார்கவில்லை நான்,”
“எனது தந்தை தவறுகள்  செய்பவர் பணம் ஆசை கொண்டவர் என்பதால் நான் அவர்களை பிரிந்துதான் வாழுகின்றேன். அந்த துன்பத்தை காலப்போக்கில் நான் எனது மனைவி வடிவழகி மற்றும் குழந்தை பாட்டிமா ஏனைய சொந்தங்களின் ஆறுதல்களினால் கடந்து வந்து விடுவேன். “
 ” குற்றவாளிகளை இனியும் வெளியே விடாமல் எனது பதவிகாலத்தில் அவர்களை கைது செய்து இவ்வளவு பெரிய சட்ட விரோத குற்றத்தை நிறுத்தி விட்டேன் என்பதே எனக்கு பெரிய நிம்மதி.”
” இனிவரும் காலங்களில் இளம் பெண்கள்  வெள்ளை என்கின்ற மாயையில் விழுந்து உங்களது வாழ்வை கெடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். “
 நன்றி.
ஏசிபி புகழேந்தி….
மக்கள் அனைவருக்கும் வணக்கம். 
“இந்த கேஸ் மிகுந்த சவாலான ஒன்றாக இருந்தது. அதை நாங்கள் சமயோஷிதமாக சிந்தித்து கடந்து இன்று குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டோம்.”
“அவர்களது நீலாங்கரை வீட்டில் கருங்கோழி பண்ணை இருந்தது அதில் மிகுதியாக இருந்த கோழியை ஏற்றுமதி செய்து அப்பணத்தை ஒரு ஆசிரமத்திற்கு கொடுத்துவிட்டோம்.”
” ஏனைய அனைத்தையும் சீல் வைத்து விட்டோம் . காளான் மெலனின் அதிகமாகும் பழங்கள் கறுங்கோழி இரத்தம் கொழுப்பு என்பவற்றை எடுத்து அதில் கலப்படம் செய்து நன்கு கற்றுத்தேர்ந்த சையன்டிஸ் டாக்டர்ஸ் இவர்களை வைத்து லேப் ஒன்று அமைத்து  அதில் மருந்தை தயாரித்து மெலனின் குறைந்த நாடுகளுக்கு அந்த ஊசியை கடத்தல் செய்திருக்கிறார்கள். ” 
“ஊசியை ஏற்றி அதன் மூலம் மெலனினை பெற்று அழகுடனும் இளமையுடனும் இருப்பார்கலாம் வருடத்திற்கு இரண்டு ஊசி போடவேண்டுமாம் அதனால் இவர்களும் கடந்த பத்து வருடங்களாக இந்த கடத்தலை செய்து வந்திருக்கின்றனர். “
” இவர்கள் மருந்து தாயாரித்து கடத்தி விற்பனைசெய்து அதில் வரும் கழிவுகளை கொண்டு அதில் கெமிகல் பிளிச்சிங் கலந்து மிகவும் கடுகையான சைட்எபக்ட் கொடுக்கக்கூடிய கிரீம் தயார் செய்து நம் நாட்டில் களவாக விற்பனை செய்திருக்கின்றனர். “
” இதனால் நம் நாட்டு இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களை தவிர பாதிக்கப்பட்ட பெண்களை மாற்றுவழி செய்வதற்கு சிவசங்கர் கூட்டத்தின்  பணத்திலயே நீதிமன்றம் ஏற்ப்பாடு செய்துள்ளது.”
 “இனிவரும் காலங்களில் கருமை நிறத்தை சீ என்று வெறுக்காமல் அதை நமக்கு இயற்கையாக கிடைத்த பொக்கிஷமாக கருதி போற்றுவோம்.”
” இந்த கருமை நிறம் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காமல் அவர்கள் மெலனின் அளவை கூட்டுவதற்கு சூரிய குளியல் செய்வார்கள், மிகவும் சிரமப்பட்டு அவர்கள் பெற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் நமக்கோ நம்மை பாதுகாக்கும் வரமாக இயற்கையாக கிடைக்கப்பெற்றதை. நாம் அழிக்காமல் போற்றி வளர்த்து பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் இதை தெரியப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம் நன்றி.”
வனிஷா — கலெக்டர் சார் ஏசிபி சார் உங்கள் இருவரது தீவிர முயற்சியின்  சாதனைக்கு மூன் டீவியின் பாராட்டும் பரிசும் சார் வாங்க எங்க எடிட்டர் மிஸ்டர் வாசு இந்த பரிசை உங்களுக்கு வழங்குவார்.” என்று சொல்லவும் அந்த வாசு பரிசை கொடுத்து சென்றார். “
“மெலனின் நிறமி மற்றும் கிரீம் பாவனையின் நன்மை தீமைகளை கவனதில் எடுத்து அதன் படி  நாம்  அனைவரும் சந்தோசத்தோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வோம்.”
“அழைத்ததும் அவர்களது வேலை பளுவிலும் வருகை தந்து மக்களது அன்றாட தேவை போன்று மாறிப்போன அழகு என்ற செயலின் நன்மை தீமை மெலனின் தேவைகளை தெளிவாக எடுத்துக்கூறி சிவப்பழகு மாயையை தெளியவைத்தற்கு டாக்டர் வில்ஷன் மனோதத்துவ டாக்டர் விக்டர் மற்றும் அழகுக்கலை நிபுணர் நிர்மலா, கலெக்டர் மகேஷ் வர்மா , ஏசிபி புகழேந்தி இவர்கள் அனைவரின் நேர்மையான உன்னதமான சேவைகளை பாராட்டி பரிசு வழங்கி நன்றி கூறி கொண்டு இத்துடன்  இந்நிகழ்ச்சியை நிறைவு செய்கின்றோம்.”
” இந்நிகழ்வை பார்க்க தவறியவர்களுக்காக மீண்டும் நாளை இரவு மறுஒளிபரப்பு செய்யப்படும். “
 மூன் டீவியில் இருந்து நான் உங்கள் வனிஷா. நன்றி நேயர்களே..
**************
டீவி நிகழ்வு முடிவடைந்ததும் மகேஷும் புகழும் மற்ற மூவருக்கும் தங்களது நன்றியை கூறிவிட்டு. அவர்களது ஆபிஸ்ற்க்கு மாலை சந்திப்போம் என்று கூறியபடி பிரிந்து சென்றனர்.
மகேஷிற்கு அவனது தாயும்  இந்த தவறை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலவில்லை அதயே நினைத்து மிகவும் மனம் சோர்ந்து போனான்.
அவனின் முகத்திற்கு முன் ஒருவிதமாகவும் அவன் இல்லை என்று தெரிந்ததும் அவனது தாய் தந்தையின் கடத்தலுக்கும் இவனுக்கும் சம்மந்தம் இருக்கும் இவன் கலெக்டர்  என்ற துணிவில் தான் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று ஆபிஸில் வம்பு பேசுவார்கள் அதை மகேஷ் கேட்கவும் நேர்ந்திருக்கின்றது. 
இவ்வாறான சூழ்நிலையில் அவன் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டு சோர்ந்து இருப்பான்.
இன்று மாலையில் மகேஷ் விட்டிற்க்கு வந்ததும் வடிவு அவனிடம் புகழ் மதியின் வாழ்வு நிலையை கவலையுடன் கூறி அவர்களையும் வரவைத்து அவர்கள் ஹனிமூன் செல்வதற்கு கொடைகானலில் அனைத்து ஏற்பாடும் செய்து கொடுத்து அனுப்பி வைத்தனர். 
மகேஷின் மனநிலையை மாற்றுவதற்கு பெரியாத்தாவிடம் கூறி அவனை அங்கே அனுப்பிவைத்தாள் வடிவழகி.
தொடரும்..

Advertisement