Advertisement

மூன் டீவி சேனலின் ஆபிஸ்..
கலந்துரையாடல் மண்டபத்தில் தற்போது நேர்காணல் நடைபெறயிருக்கின்றது.
“மூன் டீவியில் இருந்து நான் உங்கள் வனிஷா இங்கு அழைத்ததும் அவர்களது வேலை பளுவிலும் மக்களின் நன்மைக்காக நேரம் ஒதுக்கி நேர்காணலிற்கு வருகை தந்திருக்கும்.”
“கலெக்டர் மகேஷ் வர்மா .ஷிட்டி ஹாஸ்ப்பிடல் டீன் வில்ஷன் டாக்டர். மனோதத்துவ டாக்டர். மற்றும் ஏசிபி புகழேந்தி, அழகுக்கலைநிபுணர். இந்த நிகழ்வை காணும் மக்கள் அனைவருக்கும் எனது சிரம் தால்ந்த வணக்கங்கள்.”
“சரி நேயர்களே அனைவரும் உத்தியோகஸ்தர்கள் என்ற படியால் அவர்களது பொன்னான நேரத்தை வீண் செய்யாமல் நாம் நேரடியாக விஷயத்திற்க்கு செல்வோம் நேயர்களே.”
 வனிஷா– டாக்டர் வில்ஷன் சார் நீங்க இந்த மருந்து கடத்தல் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துசொல்லுங்க.
டாக்டர் வில்ஷன்— ஒரு மனிதனோட உடலிற்கு இரத்தம் மற்றும் ஏனைய உருப்புக்கள் எந்தளவு முக்கியம் வாய்ந்ததோ அதே அளவு மனிதன் சீராக இயங்குவதற்கு மெலனின் என்னும் நிறமியும் முக்கியமானது.
” மக்களுக்கு இந்த மெலனின் நிறமி பற்றிய அறிவு எந்தளவுக்கு இருக்கின்றது என்று தெரியாது. அதை இனி இந்த நிகழ்வின் மூலம் அறிந்துகொண்டு அதனால் வரும் பாதிப்பை தவிர்த்து இனிவரும் எதிர் கால சந்ததியினரிடமும் கொண்டுசென்று அதனால் எந்த பெண்களும் பாதிக்கப்படவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். “
மனிதனை காக்கும் மெலனின்.
——————–          —————
 “மெலனின் நிறமி என்றால் என்ன என்பதை முதலில் சொல்லுகிறேன்.”
“மெலனின் என்ற சொல்லானது “மிலாஸ்” என்ற கிரேக்க சொல்லிருந்து பெறப்பட்டது மிலாஸ் என்பது கருமை என்று பொருளாகும். 
“மெலனின் கருப்பு நிறத்தை கொடுக்ககூடிய ஓர் இயற்கை கரிம வேதிப்பொருளாகும். “
“பல காரணங்களை பொருத்து மனித நிறம் வேறுபடும் அதாவது வாழும் இடம் சூழலை பொருத்தும் வேறுபடும். அதில் முக்கியமானது மெலனின் தான்.இது மனித தோலில் இருக்கும் அளவை பொருத்து அவரின் நிறம் வேறுபடுகின்றது.” 
“மெலனின் நிறமி அதிகமாக உள்ளவர்கள் கருமை நிறமாகவும் குறைவாக உள்ளவர்கள் வெள்ளைநிறமாகவும் இருப்பார்கள்.  அறவே மெலனின் இல்லாமல் இருந்தால் வெண்குஷ்டம் ஏற்படும்.”
“ஒருவரது உடலில் இருக்கும் மெலனின் அளவு அவர்களது மரபுபண்பபை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது.”
வனிஷா— டாக்டர் இந்த மெலனின் எப்புடி ஒரு மனிதனின் உடலில் சேர்கின்றது ?. அது பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்.”
வில்ஷன். — மெலனின் உற்பத்தியானது உடலில் இருக்கும் மெலனோசைட்டு செல்களில் டைரோசின் எனும் அமினோ அமிலம் ஆக்சிஜன் கரிமபொருளோடு சேர்ந்து ஆக்சிகரணம் அடைந்து பின்னர் எண்ணற்ற தொகுதிகள் சேர்ந்து நீண்ட மூலக்கூற்றினை உருவாக்கி பலபடியாக்கல் வினைக்கு உட்பட்டு மெலனின் மனித உடலில் உற்பத்தியாகின்றது.”
“அதன்பின்பு மெலனின் மூன்று வாகையாக பிரிக்கபடுகின்றது.
01 இயூ மெலனின்— இது மனிதனின் தோலின் நிறத்தை வெண்மை மற்றும் கருமை நிறத்தை தீர்மானிக்கின்றது.
02 ஃபியோமெலனின்— இது சிஸ்டைன் எனும் அமினோ அமிலத்தை அடிப்படையாக கொண்டு தலைமுடியின் செம்பட்டை வெள்ளை , கறுப்பு போன்ற 
நிறங்களை தீர்மானிக்கின்றது.
03— நியூரோ மெலனின் — இது மூளையில் மட்டுமே இருக்ககூடியது. 
வனிஷா—- டாக்டர் நீங்க இந்த மெலனின் நிறமி மனிதனின் இடம் சூழலிற்கு ஏற்ப மாறுபடும் என்று சொன்னிங்க அதை கொஞ்சம் விரிவா சொல்லுங்க??..
வில்ஷன்—-
“மெலனின் அளவு என்பது பொதுவாக பூமியின் நிலப்பரப்பை பொறுத்து மனிதர்களின் தோலின் நிறம் மாறுபடுகின்றது. அதாவது குறிப்பாக புற ஊதா கதிர் தாக்கம் அதிகமாக உள்ள பூமத்திய ரேகைக்கு அருகாமையில் உள்ள பகுதிகள். இந்தியா , இலங்கை இந்தோனேசியா , உகண்டா மலைதீவு , போன்ற நாடுகளில் வாழும் கூடியளவு மக்கள்  மெலனின் அதிகம் இருப்பதால் கருமை நிறத்தோலினை பெற்றுருப்பார்கள்.”
“பூமியின் துவருவப்பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் ஐக்கிய அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளில் வாழும் மக்களுக்கு மெலனின் அளவு குறைந்தபடியால் அவர்கள் வெள்ளை நிறமாக இருப்பார்கள்..”
“மேலும் மெலனின் ஒருவரது உடல் முழுவதும் ஒரே அளவில் இருப்பதில்லை உதாரணம் – நமது உள்ளங்கையில் உடலின் மற்ற பாகங்களை விட மெலனின் குறைவு அதனால்  வெண்மையாக இருக்கும்.”
வனிஷா— டாக்டார் உடலில் எப்போது இந்த மெலனின் உற்பத்தி குறைவது.  பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.??”
டாக்டர் வில்ஷன்–
“அதாவது ஒரு மனிதன்  சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதால் அதிலிருந்து வரும் புற ஊதா கதிரின் தாக்கத்தால் மெலனின் உற்பத்தி பாதிக்கப்படும். அத்தோடு ஹார்மோன்  மாற்றங்கள். மற்றும் அதிக கொழுப்பு உணவுகளை அதிகமாக உணவில் எடுப்பது போன்ற காரணங்களினால் உடலில் மெலனின் உற்பத்தி குறைவாக வாய்ப்புகள் அதிகம்.” 
வனிஷா– சார் மெலனின் உணவுகள் மூலம் பெறக்கூடியதா?. டாக்டர்.
” இதற்க்கான பதிலை அறிவதற்கு  ஒரு சிறிய இடைவேளையின் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே தொடர்ந்தும் மூன் டீவீயுடன் இணைந்திருங்கள் நான் உங்கள் வனிஷா.
********** 
மகேஷின் வீட்டில். 
வடிவு தற்போது நான்கு மாத சிசுவை சுமந்தபடி தாயின் அதீத கவனிப்பினாள் பூரிப்புடன் மிகவும் அழகுடனும் பொலிவுடனும் சோபாவில் சாய்ந்து அமர்ந்து மூன் டீவியில் நேர்காணலில் இருக்கும் தனது கணவனை பார்த்து சைட் அடித்தபடி ஜுஸில் இனிப்பு பத்தவில்லை என்று தாயிடம் வம்பு பண்ணிக்கொண்டிருக்கின்றாள்.
அப்போது  வடிவின் கை பேசி அழைத்தது. “அம்மா அந்த போன கொஞ்சம் எடுத்து காதுல வைம்மா” என்று வாணியிடம் சொல்லவும். 
அவரோ ” ஏன்டி அடுப்படில வேலையா இருக்குறேன் நீ எடுத்து பேசு மாப்பிள்ளை தான் உனக்கு கூப்புடுவாரு.” என்று வாணி சொல்லவும். “இருமா  உன் மாப்பிள்ளையிடமும் அப்பாகிட்டயும் சொல்லுறேன் ஜுஸ் குடிக்கிற என்னைபோய் போன் எடுக்கசொல்லுற மேசைல இருக்குற கைபேசியை எடுத்து தறமாட்டங்கிறனு சொல்லுறேன் பாரு கவனிப்பு காணாதுமா அம்புட்டுதான் சொல்லுவேன்” என்று வடிவு தாயிடம் வம்பிலுத்தபடி தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்த கைபேசியை எடுத்து காதிற்கு கொடுத்து “அலோ   இங்கிட்டு வடிவு அங்குட்டு யாரு?.. ” என்று கேட்டாள் வடிவு.
கிடைத்த இடைவேளையில் மனைவியை அழைத்தான் மகேஷ்     அழைத்தவன் அவளது அலோவிலும் குறும்பிலும் மென் முறுவள் சிந்தியபடி தலையை கோதிவாறு பேசினான் ” என்னடி அலோவே ஒரு மாதிரியா வருது என்ன சங்கதி மாமன சைட் அடிக்கிறியாக்ககும் ஒவரா சைட் அடிக்காதடி அழகி கண்ணு வலிக்கப்போது. இப்ப நீ ஜுஸ் குடிக்கிற நேரம் குடுச்சியா??. அத்தை குடுத்துருப்பாங்க வேண்டாம்னு சொல்லாம குடிக்கனும்.சரியா?? கவனமாக இருந்துக்கோ அம்மு. ” என்று கணவனாக அக்கறையாக சொன்னான் மகேஷ்.
அதற்கு வடிவோ ” ஏங்க நீங்க எப்ப டீவி பொட்டில பேசுவிங்கலாம்??.. அத பார்க்க  எம்புட்டு நேரம் காத்திருகேன் இன்னும் அந்த டாக்டர் தான் ஏதோ வாய்லயே நொலயாத பேரெல்லாம் சொல்லுறாரு. இவங்களதான் மெத்தப்படிச்ச மேதாவினு சொல்லுவாங்களோ?..” என்று வடிவு கேட்கவும். 
” சரி அழகி குடுத்த நேரம் முடியப்போகுது நான் இங்கயிருந்து   ஆபீஸ் போய்ட்டு வந்ததும் டாக்டர் என்ன சொன்னார்ன்னு உனக்கு புரியும் படி சொல்லுறேன் சரியா??. நல்லா ஓய்வு எடுக்கனும் அத்தை என்ன சொன்னாலும் எதிர்த்து வாய் பேசாம கேட்டு செய்யனும்.புரியுதா??. நான் வைக்கிறேன்”  என்று மனைவியிடம் பேசிவிட்டு வைத்தான் மகேஷ்.
மகேஷ் வைத்ததும் வடிவு மதிவதனிக்கு கால் பண்ணி ” அலோ அண்ணி எனக்கு உங்க அண்ணன் அங்கயிருந்து கால்பண்ணி பேசினாங்க இப்ப புகழ் அண்ணா உங்களோட பேசினாங்கலா?? என்று வடிவு கேட்கவும் அவளோ ” இல்லயே வடிவு நானும் இந்த நிகழ்ச்சி தான் பார்க்குறேன் உங்க அண்ணா கூப்புடலயே எதுவும் வேலையாக இருப்பாரு அதுதான் கூப்புடல போல” என்று மதி சொல்லவும்.
“ஒண்ணாவே டீவி பொட்டில எல்லாருக்கும் காப்பி குடிக்க நேரம் குடுத்திருக்காங்க அந்த நேரத்துல உங்களோட பேசாம என்ன வேலையோ போங்க அண்ணி இந்த புகழ் அண்ணா வரட்டும் இன்னைக்கு பேசிக்கிறேன். சரி அண்ணி அதுதான் கேட்க கூப்புட்டேன் திரும்ப ஆரம்பிக்க போறாங்க நான் அப்புறம் பேசுறேன் அண்ணி வைக்கவா??.”  என்று சும்மா இருந்த மதியிடம் புகழை சிறப்பாக கொழுத்திப்போட்டுவிட்டு ஆறுதலாக மீண்டும் ஆப்பிள் சாப்பிட்டபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்து டீவி பொட்டியில் அவளது பனைமரத்தை சைட் அடிக்க ஆரம்பித்தாள் அவனது பஞ்சுமிட்டாய்.
உண்மையிலயே கிடைத்த நேரத்தில் மதியோடு பேசுவதற்குதான் புகழ் கைபேசியை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி வந்தான். ஆனால் அவனது நேரம் இடைவெளி நேரத்தில் அவனிடம் பேசுவதற்கு மூன் டீவி மேனேஜர் வந்துவிட்டார் அவரை தவிர்கமுடியாமல் அவருடன் பேச ஆரம்பித்து விட்டான் புகழ் இது தெரியாமல் வடிவு மதியிடம் தனக்கு மகேஷ் கால் பண்ணி பேசினார் ஏன் அண்ணா உங்களுடன் பேசவில்லை என்று மதியின் மனதை நன்றாக குழப்பி விட்டாள் வடிவு.
சும்மாவே சற்று கோபத்துடன் இருக்கும் மதியும் இதை கேட்டதும் இவர் என்னை பிடித்துதான் திருமணம் செய்தாரா?? இல்லை கட்டாயத்தினால் செய்தாரா?? ஏன் என்னை இவர் எங்கும் அழைத்து செல்லவில்லை திருமணம் முடிந்து இரண்டு மாதம் முடியப்போகுது. ஆனால் இன்னும் சரியாக மனம் விட்டு இருவரும் பேசவில்லையே அவரும் வேலை வேலைன்னு அலைந்துதிரியுறாரு. பிடிக்காம ஏன் திருமணம் செய்யனும் என்னை ஆனால் பிடிக்காமலா முத்தம் குடுக்குறாரு. அன்றும் சாப்பாடு ஊட்டிவிட்டாரே. இதெல்லாம் பிடிக்காம யாரும் பண்ணுவாங்கலா என்ன??. ஒண்ணும் புரியல எதுவானாலும் அவரே முதல்ல சொல்லட்டும் நாம எதுவும் கேட்கவேணாம். என்று அவளே அவளை குழப்பி அதற்கு அவளே ஆறுதலும் சொல்லிக்கொண்டாள் புகழின் பொம்மு.
**************

Advertisement