Advertisement

சொன்னது போன்று அவனும் அழைத்து ” ஹலோ சார் வழமை போல இன்னைக்கும் கமிஷ்னர் வந்திருக்கிறார் சார் நானும் மறைந்து பின்னாலயே போனேன் ஆனால் ஒரு ஆள் வந்து அவரோட தோள் மேல கைபோட்டு வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனார் சார் ஆனா அது ஒரு குடும்பம் இருக்குற மாதிரி தெரியல ஒரே ஆட்கள் பேசும் சத்தமாவும் ஒருவித மருந்து நெடியும் வருதுசார் இப்ப கொஞ்ச நேரம் முன்ன ஒரு வாகனம் வெளிய போகுது சார் இப்ப நான் என்ன செய்யட்டும் ” என்று ரமேஷ் கேட்கவும்.   
” சரி ரமேஷ் நீங்க அந்த கமிஷ்னரை மட்டும் வாட்ச் பண்ணுங்க இப்பவே அந்த வாகனத்தை பாலோ பண்ண ஆளை அனுப்புறேன்”  என்று கூறி போனை வைத்துவிட்டு. “எதுவோ பெரிதாக  நடக்குது ஆனா என்னன்னு சரியா தெரியல இவங்களுக்கும் அந்த ரெண்டு பொண்ணுங்களோட மரணத்துக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோன்னு  பார்க்கனும் புகழ் நாம போற வழி சரியா?? இந்த கேஸ் கண்டுபிடிக்குறதுக்குள்ள நாம ரெண்டு பேர்  நிலமையும் கஷ்டம் தான் மச்சான் என்ன செய்றது அனுபவித்து தான் ஆகனும் ” என்று மகேஷ் புகழிடம் நடந்ததை கைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தான்.
மேலும் மூன்று நாட்கள் கடந்தது  ஒரு நாள் புகழ் வீடு திரும்பிய அன்று அவனின் அம்மா சீத்தா அவனை திட்டி லெப்படன் ரைட் வாங்கினார். “நீ என்னதான் உன்னோட மனசுல நினைத்துகிட்டு இருக்கிற புகழ் இதுக்கு முதல் தான் வேலைனு அலைந்த உன்னை கவனிக்காம இப்ப உன்னை நம்பி ஒரு பொண்ணு வேற வந்துருக்கு நாங்க தூங்கினதுகு பிறகு வீட்டுக்கு வார விடிய எழும்புறக்கு முதல் வெளிய போயிடுற மதி பொண்ணு முகமும் வாட்டமா இருக்கு நீ என்ன செய்றன்னா நாளைக்கு நேரத்தோட வீட்டுவந்து மதியை வெளிய கோவில் பீச்சுன்னு எங்கயாவது அழைச்சிட்டு போகனும் நாளைக்கும் இப்புடி நேரம் செண்டு வந்தன்னா அப்பாகிட்ட சொல்ல வேண்டியதா இருக்கும் அப்பா மாத்திரை போட்டு படுத்துட்டார். மதியும் இன்னும் சாப்புடல ரெண்டு பேரும் சாப்புட்டுங்க நம்மல நம்பி வந்த புள்ளையை நாமதான் நல்லா கவனிச்சிக்கனும் புகழ். “
“இப்பயெல்லாம் வீட்டுல எவ்வளவு  சந்தோசம் தெரியுமா??உனக்கு எங்க அதெல்லாம் தெரியப்போகுது நீ வீட்டயா இருக்குற இல்லயே வேலையை கட்டிட்டுல அலையுற. மதி சமையல் கத்துக்குது அப்பா கார்த்தி நாங்க மூணு பேரும் ஜாலியா இருக்கிறோம் இந்த சந்தோசத்துக்காகதான் அம்மா உன்னை கல்யாணம் பண்ணச்சொல்லி அவசரப்படுத்தி ஒரு வழியா முடிச்சும் வச்சிட்டேன். ஒரு வீட்டுல எல்லா வசதியும் உறவுகளும் இருந்தாலும் ஒரு பொண்ணு இருக்குறதுக்கு எதுவும் ஈடாகாது புகழ் மதி கால்ல கொலுசு போட்டுட்டு அங்கேயும் இங்கேயும் நடக்குற அழகும் சத்தமுமே இந்த வீட்டை நிறைக்குது தம்பி அம்மாக்கு இன்னும் ஒண்ணு மட்டும் பண்ணுங்க இன்னும் ஒரு மூணு பொண்ணுங்களை பெத்து தந்துட்டிங்கன்னா அவங்களோட வளர்ச்சி சடங்கு எல்லாம் கண்ணாற பார்த்து அனுபவித்து சந்தோசப்படுவேன் புகழ்” என்று அவரது அடுத்த பெரிய ஆசையை நிறைவேற்ற அடி போட்டார் சீத்தா.  
புகழும் அவர் சொன்னது அனைத்தையும் கேட்டு “சரிமா எல்லாம் உங்க விருப்படியே நடக்கும் இந்த கேஸ் முடியட்டும் அப்புறம் பாருங்க ஏன்டா நீ வேலைக்கு போகமாட்டியானு நீங்களே துரத்திவிடுறளவுக்கு உங்களை தொல்லை பண்ணுறேன் லீவ் போட்டு” என்று அவனது தாயின் மனதை குளிர்வித்துவிட்டு எழுந்து அவனது அறைக்குள் சென்று குளித்து வந்தான்.
வந்தவன் தாய் தந்த உணவை எடுத்துக்கொண்டு அறைக்குள் போய் மனைவியை எழுப்பினான் ஆனால் அவளோ எழும்பும் வழியை காணோம் ஒருவழியாக மதியை தட்டி எழுப்பி அவனே சாப்பாடு ஊட்டி வாய்துடைத்து திரும்ப படுக்கவைத்துவிட்டு சாப்பிட்ட ஏனத்தை எடுத்து சமையலறையில் வைத்துவிட்டு பால் எடுத்து வந்தான் புகழ்.
அவனது தலை மறைந்ததும் லபக்குனு எழுந்த மதி அறையை சுத்திபார்த்துவிட்டு ” என்னையவா புருசா காக்கவைக்குற அதுக்குதான் இந்த ஊட்டிவிடும் வேலை செய்யவைத்தேன் ஆனா எனக்கு ஊட்டி விட்டதனால அவரு ஒழுங்கா வயிறு நிறைய சாப்புட்டாரோ தெரியலயே??.”  என்று மனதில் நினைத்து புகழ் வரும் சத்தம் கேட்கவும் மீண்டும் படுத்துவிட்டாள் மதி.
அவளது கள்ளத்தனம் அவனுக்கா தெரியாது உள்ளே வந்ததும்.                 ” நல்ல தண்டனைதான் பொம்மு நீயே ஊட்டிவிடு மாமான்னு சொல்லிருந்தா ஊட்டிவிட்டுருப்பேனே அதவிட்டு ஒரு போலீஸ்காரன்கிட்டயே தூங்குறது போல திருட்டுத்தனமா கண்ணை மூடி படுத்திருந்தா எனக்கு தெரியாதா?? டி கள்ளி” என்று புகழ் அவன் கண்டுபிடித்ததை சொல்லவும் அதை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தவள் மறுபுறம்  படுத்து அவளது ஊடலை தொடர்ந்தபடியே அவள் தூங்கிப்போக இன்றும் மகேஷிற்கு அழைத்து கேஸ் விசயத்தை பற்றி பேசிவிட்டு பின்பு மதியை அணைத்த படி தூங்கிப்போனான் புகழ்.
அடுத்தநாள் பத்தாவது நாள் மாலை புகழின் அம்மா சீத்தா சொன்னது போன்று வேலையில் இருந்து மாலை நேரத்தோடு வீடு வந்த புகழ் ப்ரஸ்ஸாகி அழகாக ரெடியாகி இருந்த மனையாளை அழைத்துக்கு கொண்டு முதலில் பீச்சில் இருக்கும் அம்மன் கோவிலிற்கு சென்று சாமி தரிசனம் பார்த்துவிட்டு அப்படியே பீச்சில் சற்று நேரம் நடந்து கடலலையில் கால் நனைத்துவிட்டு வரும் போது ஒரு பெண் மதி மதி என்று அழைத்தவாறே இவர்களுக்கு அருகில் வந்துவிட்டாள் ” ஏன்டி மதி வீட்டுக்கு லீவ்ல போறேனு சொல்லிட்டு போனவ ஐந்து மாசமா ஆளையே காணோம் எங்க போன நீ யார்கிட்டயும் சொல்லாம??.. இப்ப ஒரு மாசத்துக்கு முதல் தான் புகழ் சார் வந்து உனக்கு கல்யாணம் முடிவாகிட்டு இனி வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லி உன்னோட சர்ட்டுபிக்கேட் எல்லாமே வாங்கிட்டு போனாரு டி”  என்று  அவளோடு முதலில் வேலை செய்த பெண் ராதா கேட்கவும் அவளின் மறதி காரணமாக யார் என்று தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றாள் மதி.
அந்த சூழ்நிலையில் புகழ்தான் ராதாவை தனியே அழைத்து நடந்த விபத்தில் அவள் அனைத்தும் மறந்துவிட்டதை கூறி சாரி கேட்டு ராதாவை அனுப்பிவிட்டு மதியை அங்கிருந்து மாலிற்கு அழைத்து வந்தான் புகழ்.
மாலில் கந்தனை கண்டதும் அவன் மீது சந்தேகம் கொண்டு அவனது அப்பா கண்ணனிற்கு அழைத்து மதியை அழைத்துசெல்ல கூறிவிட்டு அங்கிருந்து கார்பார்க்கிங் சென்று அவனது காரை எடுத்துக்கொண்டு கந்தனை தேடி சென்றான் செல்லும் வழியில் மகேஷை அழைத்து அன்று அவனது ஹனிமூன் போட்டோ மற்றும் ஷிட்டி ஹாஸ்ப்பிடலில் சிசிடிவி கேமராவில் பார்த்தது அனைத்தையும் சொல்லி தற்ப்போது அவனை கண்டு தேடிப்போவதாக சொல்லி வைத்துவிட்டு சென்றுகொண்டிருக்கின்றான் ஏசிபி புகழ். 
புகழின் கால் கட்டானதும் உடனே மகேஷ் அவனது நம்பிக்கையான ரமேஷை கைபேசியில் அழைத்து தற்போது சைபர்கிரைம் ஆபிஸில் ஒரு பைல் தருவார்கள் அதை வாங்கி வருமாறு கூறிவிட்டு அவனது ஆபிஸ் அறையில் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து இரண்டு நாட்களிற்கு முன் நடந்தவற்றை யோசித்துக்கொண்டிருந்தான் மகேஷ்.
ரமேஷ்  கமிஷ்னரை பாலோபண்ணிய அன்று அந்த வாகனத்தை பாலோபண்ண அனுப்பிய பாஸ்கர் அந்த வாகனம் ஹார்பர் சென்றதை பார்த்துவிட்டு கைபேசியில் அதை போட்டோ எடுத்து வந்து மகேஷிடம்  காட்டினான் அதில் கையில் ஒரு கறுப்பு சூட்க்கேஷ் எடுத்துக்கொண்டு கமிஷ்னரே ஹார்பர்  சென்று அதை  ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு வாகனத்தில் இருந்து கையில் வேறு சிறிய சூட்கேஷை எடுத்துக்கொண்டு வேறு ஒரு காரில் சென்றது அனைத்தையும் வீடியோவாகவும் எடுத்து அனைத்து ஆதாரத்தையும் மகேஷிடம் ஒப்படைத்தான் பாஸ்கர்.
அதன்பின்பு புகழும் மகேஷும் அடுத்தநாளே அதி காலையில் ஹார்பர் சென்று அவர்களது பவரை யூஸ்பண்ணி மிரட்டி அதிகாரமாக அந்த சூட்கேஸை வாங்கி திறந்து அதில் என்ன இருக்கின்றது என்று பார்த்தனர் இருவரும் அதில் சிறு குப்பியில் மருந்தும் ஊசிகளும் நிறையவே இருந்தது. 
அது கெட்டுவிடாமலும் உடைந்து சேதாரம் ஆகாமலும் இருப்பதற்கு மிகவும்  பாதுகாப்பாக வைத்திருந்தனர் அதையும் ஹார்பரில்வேலை செய்யும் அந்த ஆளையும் கூடவே அழைத்து சென்றார்கள். 
அவனிடம் பெறவேண்டிய அனைத்து தகவல்களையும் ஆதாரத்தோடு எடுத்துக்கொண்டு” இந்த கேஸ் முடியும் வரை மட்டும் அவனை வேலையில் இருக்கும் படியும் இந்த விசயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது இதில் சம்மந்தப்பட்ட யாருக்கேனும் இவர்கள்  வந்த விஷயம் தெரிந்தால்  அவர்கள் உசாராகி விடுவார்கள்” என்று  அவனை மிரட்டி அனுப்பிவைத்துவிட்டு அவனது கைபேசியை ட்ராக் பண்ண சொல்லி விட்டு அவனை அனுப்பிவிட்டு அந்த மருந்து இருந்த சூட்கேஸை பேமசான லாப் டெக்னிஷியனிடம் கொடுத்து அதை என்னவென்று பார்த்து ரிப்போர்ட் தருமாறு  கூறிவிட்டு வந்தனர் மகேஷும் புகழும். 
இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததை நினைத்துக்கொண்டு ரமேஷின் வருகைபார்த்து அவனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கின்றான் கலெக்டர் மகேஷ் வர்மா.
புகழ் ஒருவழியாக ஒரு குறுக்கு சந்து ரோட்டில் கார் போகாது என்று தெரிந்து அந்தவழியாக கந்தன் செல்லவும் புகழும் அங்கே காரை நிறுத்திவிட்டு அங்கு நின்ற ஒருவருடைய பைக்கை வாங்கி அந்த குறுக்கு சந்தின் இன்னுமொரு பாதையில் சென்று வசதியாக கந்தனை மடக்கி பிடித்துவிட்டான் புகழ்.
அவனை கையோடு கை காப்பு மாட்டி அரஷ்ட் பண்ணி அவனது காரில் ஏற்றி மகேஷ் வரச்சொல்லியிருந்த இடத்திற்கு சென்றான் ஏசிபி புகழ்.
அங்கு சென்றதும் கந்தனை வைத்தே கால் பண்ணச்சொல்லி அந்த இடத்திற்கு சரக்கு சப்ளை பண்ண வருமாறு கூறி தாஸையும் காளையையும் வரவைத்து அவர்களையும் பிடித்து கட்டிப்போட்டு விசாரித்தான் புகழ்.
 அவர்கள் மூவரும் மதியை துரத்தி செல்லும் போது ஆரம்பத்தில் பேசியது போன்று அவர்களுக்கு தெரிந்த அனைத்தையும்  வாக்குமூலம் கொடுத்துவிட்டனர் வீடியோ ஆதாரத்தோடு பெற்றுக்கொண்டனர். அதன்பின்பு வீடியோவை ஆப் பண்ணியதும் கந்தன் மதியை திருமணம் செய்ததுபற்றியும் அவளை நல்லவன் யாருக்கேனும் மீண்டும் திருமணம் செய்து வைக்க நினைத்தது அனைத்தையும் இன்று மதியை மாலில் பார்த்து பேசியது அவள் தன்னை தெரியாது போன்று இருந்ததையும் சொன்னான் கந்தன். 
அதை கேட்ட புகழிற்கோ என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான் மதியை அன்றய நிலையில் பார்த்தற்கு கோபப்படுவதா அல்லது மதியை தனக்கு மீண்டும் கிடைக்க இவன்தான் காரணம் என்று விடுவதா என்று எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான் புகழ். 
ஒருவாரு புகழை தேற்றி அவனது கவனத்தை கேஸின் பக்கம் திருப்பினான் மகேஷ். அப்போது கந்தனின் கைபேசியில் அழைப்பு வந்தது அவுட்டில் போட்டு பேசுமாறு சொல்லவும் இவனும் பேசினான்        ” ஹலோ நான் கங்காதேவி பேசுறேன் யாரு கந்தனா??”
 “ஆமாம் மேடம் நான்தான் சொல்லுங்க” என்று இவன் பேசவும். அந்தபக்கமிருந்து. ” இந்த முறைக்குறிய சரக்கை கப்பல்ல அனுப்பியாச்சி நீங்க நாளுபேரும் எங்கயாவது டூர் போங்கடா பணம் வழமையா வாங்குற இடத்துல வாங்கிக்கோங்க சரியா  அந்த மகேஷும் புகழும் இன்னும் கல்யாண சோக்குல இருந்து வெளிவரலபோல புது பொண்டாட்டி மோகம் குறைந்தாதானே வேறு நினைப்பு வரும் அந்த மாலதி செத்தப்ப இளரெத்தம் துடிச்சிது நானும் பயந்துட்டேன் எங்க நம்மல பிடிச்சிடுவாங்களோனு அவனுகள் கல்யாணம் ஹனிமூன்னு திரியுறானுகள்.”
” இந்த முறையும் நேரடியா கமிஷ்னரே சரக்கை கொண்டுபோய் குடுத்துட்டு வந்துட்டார். வழமையை விட சரக்கு அதிகமா அனுப்பிருக்கு எப்புடியும்  பத்தை தாண்டும் பணம் இன்னும் இதுக்கு மார்க்கெட் ரேட் அதிகமாகும் அதனால இனி கொஞ்சம் விட்டுத்தான் திரும்ப செய்ய ஆரம்பிக்கனும் கலெக்டரும் ஏசிப்பியும் என்ன புடுங்குறானுகள்னு பார்த்துட்டு இதற்குரிய மிகுதி பணமும்  கைக்கு வரட்டும் தற்போது மில்லீன் க்ரீமும் கொஞ்சம் ஸ்டாக் இருக்கு அதை நான் ரெங்கன்கிட்ட குடுத்து அனுப்புரேன் நீங்க இனி நான் கூப்புட்டாதான் வரனும் புரிஞ்சுதா??” என்று கங்காதேவியே சொந்த செலவில் ஒரு சிங்கத்தையும் புலியையும் சீண்டி வெறிகொண்டு வேட்டையாட தூண்டியது தெரியாமல் சரக்கு அனுபிய மிதப்பில் பேசி இருந்தாள்.
 கந்தனை இங்கு அழைத்து வரசொல்வதற்கு முன் ரமேஷிற்காக காத்திருந்த மகேஷ் அவன் சொன்ன நேரத்திற்கு வந்ததும் அவனிடம் இந்த கமிஷ்னரின் விடியோவை காட்டினான் அதை பார்த்த அவனோ  ” என்ன தான் சார் நடக்குது அன்னைக்கு நான் வாகனம் ஒண்ணு வெளியபோகுதுனு சொல்லும்போதும் சரி போனபின்பும் சரி  கமிஷ்னர அந்த கங்காதேவி வீட்ல நானே என் கண்ணால பார்த்தேன் சார் ஆனா எப்புடி கமிஷ்னர் வாகனத்திலயும் போகமுடியும் அங்கயும் இருக்கமுடியும் என்னால நம்பவே முடியல சார் ஒரே குழப்பமா இருக்கு சார் ” என்று சொல்லி அவன் கொண்டுவந்த பைலை மகேஷிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டான் ரமேஷ்..
அவனை அனுப்பிய பின் இங்கு கந்தனை வைத்திருக்கும் இடத்திற்கு வந்தான் மகேஷ்.
வந்தவன் அவர்கள் சொன்னது கங்காதேவி சொன்ன விஷயம் அவர்களை சீண்டி பேசியது என்று அனைத்தையும் கேட்டதும் மகேஷ் கொலைவெறிக்கே சென்றுவிட்டான்.
இப்பொழுது மகேஷை புகழ் தேற்றி இவர்களுக்கு காவலுக்கு மூன்று பேரை வைத்துவிட்டு மகேஷிற்க்கு இருக்கும் பிளாட்டிற்கு சென்றனர் இருவரும். அங்குதான் இதற்கு முன்பும் பெரியளவிலான கேஸ் வந்தால் அது முடியும் வரை தங்குவது. அது போன்றே இன்றும் வந்துவிட்டனர் இருவரும்.
வந்தவர்கள் பிரஸ்ஸாகி பின்பு உணவு உண்டு இருவரின் மனைவியிடமும் கொஞ்சி கெஞ்சி சமாளித்து பேசி அவர்களின் பதுகாப்பை தெரிந்துகொண்டு. மீண்டும் அவர்களது கவனத்தை கேஸின் பக்கம் திருப்பினர்.
ரமேஷ் தந்து சென்ற கமிஷ்னரின் ட்ரேஸ் கால் லிஸ்டை எடுத்து புரட்டி பார்த்தனர் அதில் அவருடையதோ அவரின் வீட்டினருடையதோ யாருடைய கைபேசியிலும்,அலுவலக டெலிபோனிலுமோ கங்காதேவியோடு பேசியதற்கான எந்த ஆதாரமும் இல்லை முதல் இரண்டு பக்கங்களையும் பிரட்டினர் அதன் அடுத்த பக்கத்தில் ஒரு புதிய எண் இருந்தது அந்த எண்ணில் நிறைய கால் பேசியிருக்கின்றார் கமிஷ்னர்.
ஒருவாரு இன்று இது போதும் என்று இருவரும் நினைத்து அலைச்சல் சோர்வில் உடல் ஒய்விற்கு கெஞ்ச படுத்து உறங்கிவிட்டனர் இருவரும்.
ஆனால் புகழின் வீட்டிலோ சீத்தா கவலையுடன் புலம்பித்தல்லினார் மதி தனது மாமனாரோடு வருவதை பார்த்ததும் என்னவென்று கேட்டார் அதற்கு மாலில் நடந்தது அனைத்தையும் அவள் சொல்லவும் அவரிற்கு கவலை பிறந்தது தனது கட்டாயத்தின் பேரில் மனைவியை அழைத்து சென்றும் போனஇடத்தில் அவளை விட்டுவிட்டு வேலையின் பின்னால் அலைகிறானே மதி என்ன நினைக்குமோ என்று புலம்பியபடியே இருந்தார் அவரது புலம்பலை இறுதியில் கார்த்தி தான் தீர்த்துவைத்தான் காலேஜில் இருந்துவந்ததும் ” ஏன்மா இப்புடி இன்னமும் புலம்புற அண்ணன் இந்த கேஸ் எவ்வளவு முக்கியமானதுனு சொல்லிச்சிதானே அதெல்லாம் தெரிஞ்சுதான் நீ அவசரமாக கல்யாணம் பண்ணி வச்ச இப்ப குத்துதே கொடையுதேன்னா எப்புடி அண்ணியை கூட்டிட்டு போச்சி சரி ஆனா தனிய பொறுப்பில்லாம விட்டுட்டு போகலயே அப்பாக்கு கால் பண்ணி வந்து கூட்டிட்டு போகசொல்லி சொல்லிட்டு மால் உரிமையாளர்டயும் சொல்லிட்டு தான் அண்ணா போயிருக்காங்க வேலை விசயமா அதுதான்அண்ணி பாதுகாப்பா வந்துட்டாங்களே இன்னும் அதே நினைத்து புலம்பாம பசிக்கிது சாப்பாடு எடுத்துவைம்மா” என்று  சொல்லிக்கொண்டே தாயின் கவனத்தை திசை திருப்ப சாப்புடுவதற்கு போய் அமர்ந்தான் கார்த்தி.
அடுத்தநாள் காலை தாமதமாக எழுந்த மகேஷும் புகழும் அவர்களது காலை கடன்களை முடித்துக்கொண்டு பேசியபடியே ஆபிஸ் போவதற்கு ரெடியாகினர்.       ” டேய் மச்சான் புகழ் நான் என்ன நினைக்குறேன்னா??.. அந்த கங்காதேவியே நமக்கு நல்ல ஐடியா கொடுத்திருக்கா அவளை பிடிக்கிறதுக்கு அவங்க சந்தேகப்படும் படி எதுவும் நடக்கபோறதுமில்ல சரக்கு அனுப்பிட்டோம்கிற சந்தோச மிதப்புல இப்புடியே அந்த மருந்தோட ரிப்போர்ட் வரும் வரை நாம வெயிட்பண்ணிதான் ஆகனும் அதுதான் நேரடியான நிரந்தரமான ஆதாரம் இதுக்குமேல கொஞ்சம் அவசரப்படாம பொறுமையா இன்னும் தேவையான ஆதாரங்களை தேடி எடுத்து அவர்களை அரஸ்ட் பண்ணுறதுக்கு வாரண்ட் வாங்குமோம் எல்லாதையும் பக்காவா வெளிய வரமுடியாத படி செய்யனும் அதுக்கு அவசரப்பட்டா காரியம் ஆகாது சரியா?? யாருக்கும் நம்ம மேல சந்தேகம்  வராத படி இருந்து புலி பதுங்கிதான் பாயும்னு அந்த ரவ்டி பொம்பளைக்கு காட்டுவோம் ” என்று மகேஷ் புகழிடம் கூறினான் அதற்கு புகழும் சம்மதித்தான்.
கமிஷ்னர் அந்த ஒரு நம்பரிடம் அதிகமாக பேசியது யார் என்று கண்டுபிடிக்குமாறு மகேஷ் ரமேஷிடம் சொல்லவும் அவனும் அதை பற்றிய முழு தகவலையும் திரட்டி கொடுத்துவிட்டான். அதில் இருந்தது கமிஷ்னர் கங்காதேவியோடு அதிகம் பேசிய நம்பர் அவருடைய கீப்பின் கைபேசி எண்ணிலிருந்து அவர் அவரின் குடும்பதிற்கு நேர்மையாணவராகவும் இருந்து அவர் வாங்கிய கிம்பல பணத்தில் அனைத்தையும் அவருடைய கீப்பிற்கு மட்டும் கொடுத்து இரண்டு வேடம் இட்டு வாழுகின்றார் கமிஷ்னர் என்று தெரியவந்தது .
அவருடைய இந்த ஆதாரத்தையும் பக்காவாக கலெக்ட் பண்ணி வைத்துக்கொண்டு அந்த மருந்தின் ரிப்போர்டிற்காக காத்திருந்தனர்.
காத்திருந்த இடைவேளையில் இருவரும் அவர்களது மனைவிகளையும் சாந்தோசப்படுத்தி அவர்களும் தங்களது மனதையும் உடலையும் ரிலாக்ஸ் படுத்தினார்கள் கலெக்டரும் ஏசிபியும்.
ஒருவழியாக அந்த மருந்தின் ரிப்போர்ட் சாம்பில் ரெண்டும் இருபது நாளைக்கு பின் அவர்களது கையில் ஒப்படைத்தார் லாப் டெக்னிஸியன்.
அதற்காகவே காத்திருந்தவர்கள் அதனை எடுத்துக்கொண்டு லாப் டெக்னிஸியன் மற்றும் புகழ் பெற்ற அழகுகலை நிபுணர் ஷிட்டி ஹாஸ்ப்பிடல் டீன் வில்சன் டாக்டர் இவர்கள் மூவரையும் ஒரு இடத்தில் ஒன்று கூட்டி அந்த மருந்தை பற்றி விளக்கம் கேட்டனர் அவர்கள் மூவரும் அதை நன்கு ஆராய்ந்து சொன்ன பதிலில் இவர்கள் இருவருக்கும்  மயக்கம் வரும் போல் இருந்தது ஒருவாரு அதில் இருந்து மீண்டு அந்த ஆதாரத்தையும் எடுத்துக்கொண்டு அனைத்து ஆதாரத்தையும் ஒன்று திரட்டி காப்பி பண்ணி ஒரிஜினலை சேப்பாக லாக்கரில் வைத்துவிட்டு அந்த மருந்து ரிப்போர்டை நேர்மையான நம்பகமான உயர் அரச மருத்துவரிடமும் ஆவணப்படுத்தி என்று மேலும் இரண்டு நாட்கள் கடந்து அனைத்தையும் பக்காவாக ரெடி பண்ணி சி எம் , பி எம் இரண்டுபேரிடமும் கலெக்டரே நேரடியாக சென்று அரஸ்ட் வாரண்ட் கேக்கவும் அவர்களும் கேஸின் வீரியம் உணர்த்து அனுமதியளித்தனர். 
வெகுநாட்களாக மண்டையை குடைந்த இந்த கேஸிற்கு இன்றோடு ஒரு முடிவை கட்டிவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக வாழ எண்ணி மகேஷ் புகழ் பாஸ்கர் ரமேஷ் இன்னும் ஐந்து நம்பகமான இன்ஸ்பெக்டர் என்று ஒரு டிமாக ஒன்று திரண்டு அந்த கோட்டைக்குள் நுழையும் பாதையை சரியாக கண்டுபிடித்து இதோ இன்று இரவு 12 மணிக்கு போவாதாக 11.30 பேசியபடியே உடனடியாக கிளம்பி விட்டனர்.
நேரத்தோடே அங்கு சென்ற ரமேஷை முன்னிருத்தி சத்தமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்று சுற்றி வளைத்தனர் மகேஷும் புகழும் பாஸ்கரும் மட்டும் அவ்வீட்டின் கதவை தட்டி நின்றனர். 
இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது என்று பயத்துடனயே கங்காதேவி அவரது கணவருடன் வந்து கதவை மெதுவாக திறந்தாள். 
கதவை திறந்தவளையும் அவளின் பின்னால் நின்ற அவரது கணவனையும் கண்ட மூவரும் மயக்கம் வந்த நிலைதான் வேறு யாரோ என்று வந்தவர்கள் இவர்களை இங்கு எதிர்பார்கவில்லை. 
மகேஷின் கலெக்டர் தோரணையை வைத்தே அவள் மகேஷை முதல் முதலாக பார்த்தும் அடையாளம் கண்டுவிட்டார் கங்காதேவி.
ஏனைய அனைவரும் உள்ளே வந்து மற்றவர்களையும் கைது செய்து வாகனதில் ஏற்றினர் அதன்பின்பு மகேஷும் புகழும் ஒருவழியாக அவர்களது அதிர்தியில் இருந்து விலகி கடமையை முன்னிருத்தி கங்காதேவியையும் அவரது கணவனையும் கைதி செய்து அந்த வீட்டில் இருந்த அனைத்துபொருட்கள் லாப் மருந்து வகைகள் என்று அனைத்தையும் போட்டோவும் வீடியோவும் எடுத்து அவ்வீட்டை சீல் வைத்து காவலிற்கு ஆள்வைத்து இவர்களுடன் சம்மந்தபட்ட ஏனையோரையும் கந்தன் டீம் உட்பட கைது செய்து வழக்குப்போட்டு அடைத்தனர்.
அவர்கள் இருவராலும் இந்த அதிர்ச்சியை இன்னும் நம்பி ஏற்றுக்கொள்ள முடியாமல் மிகவும் தவித்து சிரமப்பட்டனர்.
யார்??. இந்த கங்காதேவியும் அவளது கணவனும்.
ஏன்??.. மகேஷும் புகழும் அவர்களை பார்த்து அதிர்ந்தனர்..
தொடரும்…

Advertisement