Advertisement

அத்தியாயம் 17
மகேஷ் வர்மாவின் இல்லம்..
வாணி அவரது ஊரிலும் அதி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பழகியவர் அதே பழக்கத்தில் தனது மகளின் மகிழ்ச்சியான வாழ்வை பார்த்த சந்தோசத்திலும் வழமை போன்று இங்கும் நான்கு மணிக்கெல்லாம் விழித்துவிட்டார்.வாணி
விழித்தவர் அவரது காலை கடனை முடித்து கோலம் போட்டுவிட்டு பூஜை செய்து பின்பு அனைவருக்கும் காப்பி கலக்குவதற்கு வடிவின் சமைலறையில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். வாணி
அப்போது தான் புகழ் யாரும் இந்த நேரம் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணி போலீஸ் உடையில் ரெடியாகி யாரும் பார்பதற்கு முதல் வெளியே சென்றுவிடலாம் என்று பம்மி பம்மி வந்தான் அதே நேரம் சமையலறையை விட்டு வெளியே வந்த வாணியும் பார்த்துவிட்டார். 
நேற்று அவர்கள் முன்பேதான் மகேஷ் புகழை கண்டித்து அறைக்குள் அனுப்பிவைத்தான் புது மாப்பிள்ளையை ஆனால் அவனோ இன்றே போலீஸ் உடையில் இந்த அதி காலை நேரத்தில் திருடன் போன்று பம்மி வெளியே போக வந்ததை பார்த்து இன்று மறுவீட்டு சடங்குகள்  இருப்பதால் இவனை வெளியே விட முடியாது என்று நினைத்து தனது மாப்பிள்ளையை அறையின் கதவை தட்டி எழுப்பிவிட்டார் வாணி.
” மாப்பிள்ளை நீங்களே புகழ் தம்பியை என்னன்னு கேளுங்க நேத்து எம்புட்டு கிளி பிள்ளைக்கு சொல்லுறது போல சொன்னிங்க பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டினாரு இன்னைக்கு பார்த்தா விடியமுன்னவே இவருதான் போலீஸ் டேஷனை தொறக்க போறது மாதிரி வெளிக்கிட்டு சுத்தியும் பார்த்து யாரும் இல்லனு நினைத்து பம்மி வெளிய போகபார்த்தாரு அதுதான் கோழி அமுக்குற மாதிரி பிடிச்டோமில்ல.”
“இன்னைக்கு மறுவீட்டு அழைப்பு இருக்குன்னு தெரியும் தெரிஞ்சே இவரு இப்புடி பண்ணினா சரியா??. ஒரு மனிசன் வேலை பார்க்கத்தான் வேணும் அதுக்காக ஒரு கல்யாணம் காட்சினா லீவ் எடுக்க கூடாதுன்னா சட்டம் இருக்கு. உங்க மெட்ராஸுல எல்லாம் தெளிவா முன்கூட்டியே யோசித்துதான் போலீஸ் உடுப்பெல்லாம் சடங்குக்கு வரும் போதே தயாராக  எடுத்துட்டு வந்திருக்கிறாரு போல இருந்தாலும் இம்புட்டு ஆர்வமா வேலையில இருக்ககூடாது புகழ் தம்பி நீங்க. என்னவோ போங்க காப்பி ஆறிப்போச்சு நான் புதுசா போட்டுட்டு வாறேன் நீங்களாச்சி புகழ் தம்பியாச்சி மாப்பிள்ளை ஆளை விடுங்க”  என்று ஒரு பிஞ்சு மனதிற்கு பெரிய ஆப்பை ரெடி பண்ணி தனது மாப்பிள்ளை  மகேஷிடம் பொறுப்பை சிறப்பாக ஒப்படைத்து விட்டு மீண்டும் சமையலறைக்கு சென்று விட்டார் நான் வடிவின் அம்மா என்பதை நிருபித்துவிட்டார் கலைவாணி..
அவர் சொன்னது அனைத்தையும் கேட்டதும் மகேஷ் புகழை முறைத்து பார்த்துவிட்டு அவனது அறையின் கதவில் கை வைத்தான். அடுத்து அவன் என்ன செய்ய போகின்றான் என்பதை நன்கு புரிந்து கொண்ட புகழோ வேகமாக மகேஷின் அருகில் சென்றவன் தலையை ஆட்டியபடியே ” மீ பாவம் மச்சான் நீ இப்ப வடிவை எழுப்பபோறன்னு நீ நிக்கிற போஸ்லயே தெரியுது வேணாம்டா இப்பதான் வாணிமா ஒரு பெரிய கச்சேரியே நடத்திட்டு போறாங்க இதுல வடிவோட திட்டையும் தாங்குற சக்தி இந்த பிஞ்சு மனசுக்கு இல்லடா மச்சான். விட்டுடு” என்று மகேஷின் கையை பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தான் த கிரேட் ஏசிபி புகழேந்தி.
” டேய் புகழ் இதுதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ் இனிமேலும் நீ ஆடங்காம திரிஞ்சன்னா பார்க்கமாட்டேன். எல்லாத்தையும் அழகி கிட்ட சொல்லிருவேன் அதுக்கு பிறகு நீ என்னை எதுவும் குறை சொல்லக்கூடாது. சொல்லிட்டேன் சரியா?? நீ லீவ் முடியாம ஆபிஸ் வரமாட்டன்னு நானே சொல்லிட்டேன் அதனால அந்த ஆள் கமிஷ்னர் உன்னை டிஸ்ர்டப் பண்ணமாட்டான் எல்லாருக்கும் இந்த கேஸ் முக்கியம் தான் அதுக்காக கல்யாணம் குடும்பம் இதெல்லாம் விட்டுட்டு கேஸ் பின்னாடியே அலையனும்னு இல்ல என்ன சொல்லுறது புரிஞ்சுதா??. சும்மா தலையை ஆட்டாம போ போய் இந்த டிப் டாப் போலீஸ் ட்ரெஸை மாத்திட்டு புது மாப்பிள்ளை மாதிரி கெத்தா வா” என்று மீண்டும் ஒரு முறை புகழை எச்சரித்துவிட்டு அவன் விட்ட தூக்கத்தை தொடர்வதற்கு அவனது அறைக்குள் சென்று மறைந்தான் மகேஷ்.
ஒருவழியாக மறுவீட்டு சடங்கு திருமண விருந்து என்று புகழும் அவனது பொம்முவுடன் ஒருமனதாக லீவ் நாட்களை கழித்துவிட்டு அவனது வேலைக்கு சென்றான். புகழ்.
அதே போன்று மகேஷும் அவனது ஆபிஸ் வேலையை முடித்துவிட்டு மாலையில் வடிவையும் வாணியையும் வீட்டில் விட்டுவிட்டு வடிவின் தங்கைகள் ராஜதுரை பொன்னி ராசுகுட்டி என்று அனைவரும் மகேஷுடன் அவனது கார்ட்ஸ் துணையோடு காரில் ஒவ்வொரு நாள் ஒரு இடம் என்று தெளிவாக அவர்களுக்கு சுத்தி காட்டி முகம் சுழிக்காமல் அவனது அன்பை கொடுத்து அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து . வெற்றிகரமாக ஐந்துநாட்கள் சுத்திய பின்பு வாணியை தவிற அனைவரையும் ராஜதுரையுடன் விமானத்தில் அனுப்பிவைத்துவிட்டான். மகேஷ்.
ஆனால் அவனது வீட்டம்மாவோ அவன் மீது கொலைவெறியில் இருந்தால் அவனது பஞ்சுமிட்டாய் ஏன்னென்றால். அவளது மசக்கை நேரத்தில் அவனோடு இருக்க அதிகம் அவனை எதிர்பார்தாள் பாவை ஆனால் அவனோ வேலை ஊர்சுத்தல் என்று நாட்களை கடத்திவிட்டு அவள் இரவு தூங்கியதும் வந்து அவளை அனைத்து படுத்து அவனும் உறங்கிவிடுவான். இதுவே தொடர்ந்து ஒரு வாரகாலமாக நடக்கவும் வடிவிற்கு கோபம் வந்து அவன் இன்று நேரத்திற்கு வீட்டிற்கு வரவும் குழந்தை முகத்தை தூக்கிவைத்திருப்பது போன்று பொய்கோபத்தில் ஊடலுடன் அமர்ந்திருந்தாள் வடிவழகி. 
மனைவியின் சகலவித பரிமாணங்களையும் சரியாக தெரிந்து வைத்திருந்த கணவன் இன்றும் அவளது கோபத்தின் காரணம் புரிந்து அதை சரி செய்யும் வழியையும் கண்டுகொண்டு அவளை ஒரு கள்ளபார்வை பார்த்து அவர்களது அறைக்குள் சென்று மறைந்துவிட்டான். பின்பு அன்றய இரவு வடிவு அறைக்குள் வந்ததும் அவளை மெதுவாக தூக்கி மடியில் வைத்து அவளது முகத்தை தன்னை நோக்கி திருப்பி நெற்றியில் முத்தம் வைத்து அவளது வயிற்றை தடவியபடி பொறுமையாக அவனது வேலை பளுவை எடுத்து சொல்லி இனிவரும் காலத்திலும் இந்த கேஸ் முடிவடையாமல் அவன் வீட்டிற்கு இரவு வராமல் கூட இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவன் மீது கோவப்பட வேண்டாம் என்று அவளை கொஞ்சியபடியே சொன்னான். 
அதனை தலையை ஆட்டியபடியே கேட்டுக்கொண்டிருந்தவள். மசக்கையின் சோர்வில் அவனது நெஞ்சின் மீதே தூங்கிப்போனாள் வடிவு அவளை மெதுவாக நகர்த்தி படுக்கவைத்து அவளை அணைத்து தட்டிக்கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவன் எழுந்து அன்று கமிஷ்னரை திட்டி அனுப்பியதன் பின்பு சும்மா இருக்காமல் அவனது நம்பிக்கையான ஆள் வைத்து நோட்டம் விட்டான் அதில் இரவு நடு சாமத்திற்கு பிறகு நீலாங்கரை பீச் ரோட்டிற்கு செல்வது தெரியவந்தது.  மகேஷிற்கு.
அவர் ஏன் எதற்காக அந்த இரவு நேரத்தில் அங்கு போகின்றார் என்று இன்று பார்த்து அவனது ஆள் போனில் அழைத்து சொல்வதாக சொல்லியிருந்தான் அதற்காக  காத்திருந்தான். 

Advertisement