Advertisement

அத்தியாயம் 16.
சென்னையின் பிரபலமான ஷாப்பிங் மால்..
புகழ் அவனது அன்னையின் கட்டாயத்தில் மதியை மாலிற்கு அழைத்துவந்தான்..
வந்தவன் மதியை உள்ளே போகசொல்லிவிட்டு மால் உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தான். இந்த மாலில் இருக்கும் பேன்சி கிரீம் நைட் கிரீம் வகைகளின் லிஸ்டை வாங்கி பார்த்தான் அதில் எங்கும் மாலதி வீட்டில் பார்த்த கிரீமின் பெயர் தென்படவில்லை. 
பின்பு அதை விடுத்து மால் முழுவது அவனது போலீஸ் எக்ஸ்ரே கண்ணை சுழற்றி பார்த்தான். பார்த்தவனது கண்கள் ஓர் இடத்தில் நிலை பெற்றது. மூளை அறிவுருத்திய விஷயத்தை நன்றாக ஞாபகம்  படுத்தியபடியே அவ்விடம் சென்றான்.
 அங்கு மதியோ கந்தனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.            ” ஹலோ அண்ணா கொஞ்சம் வழிவிட்டு நில்லுங்க நான் அந்தபக்கம் போகனும்” என்று சொல்லவும். அவனோ” நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா மதி  யாரை??..” என்று மதியின்  கழுத்தில் புது தாலி காலில் மெட்டி வகிட்டில் குங்குமம்  வைத்து பார்கவே மங்களகரமாக காட்சியளித்தாள் அதை மேலும் கீழுமாக பார்த்தான் கந்தன்.
“என்னை உங்களுக்கு  தெரியுமா? நீங்க யாருனு தெரியலயே எனக்கு ஆமா நான் புகழை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொல்லவும் அவன் தான் சரியாகதான் கேட்டோமா?? ஏசிபி புகழ் மட்டுமா இருப்பாங்க வேற யாராவது புகழா இருக்கலாம்  என்று அவனது குற்றமுள்ள மனம் நினைத்து தவித்தது.
உடனடியாக கந்தன் தன்னை சுற்றி பார்த்தான் சற்று தூரத்தில் புகழ் இவர்களை நோக்கி வருவதை பார்த்துவிட்டான்” ஏம்மா மதி உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு இனிமே சந்தோசமா வாழணும் நீ நான் இப்ப உடனே போகனும் கவனமா இருந்துக்கோ சரியா” என்று கூறியபடியே அங்கு இருந்து சென்றான் கந்தன்.
யாரு இந்த அண்ணன் நமக்கு தெரியலயே இவ்வளவு அக்கறையா சொல்லிட்டு போறாரு ஒரு வேளை நம்ம முகில்கு தெரிஞ்சவங்கலா?. இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு தன்னை அழைத்து வந்த ஜீவனை தேடினாள் மதி.
அவசரகதியில் அவ்விடம் வந்த புகழோ அவன் தன்னை பார்த்ததும் இங்கிருந்து போனதை பார்த்தவன் அவனிடம் எதுவோ சரியில்லை என்பதை கண்டுகொண்டான்.
உடனடியாக மதியின் கையை பிடித்து மால் உரிமையாளர் இருக்கும் இடம் அழைத்துச்சென்று.” சார் நான் இப்போ உடனே அவசரமா கேஸ் விசயமா வெளியபோகணும். இது என்னோட மனைவி மதிவதனி இவங்க இங்க இருப்பாங்க நீங்க கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க சென்னைக்கு புதுசு வீட்டுக்கு போறதுக்கு இடம் தெரியாது என்னோட அப்பா வருவாரு வந்ததும் சேப்பா அனுப்பிவைங்க. உங்க வாட்சப்கு அவரோட போட்டோ அனுப்பிருக்கேன் பார்த்துக்கோங்க. சரியா??” என்று அவரிடம் ஆரம்பித்து “வதனி எங்கயும் போயிறக்கூடாது அப்பா வந்ததும் வீட்டுக்கு போ”.என்று தனது மனைவியிடம் அறிவுருத்தி விட்டு சென்றான் கடமை தவறாத ஏசிபி புகழேந்தி..
********
பத்து நாட்களுக்கு முன்பு.
 வடிவை ஷிட்டி ஹாஸ்பிடலில் வைத்திருந்த அன்று ஒரு தாய் தனது 16 வயதான இளம் பெண்ணின் உடலை கட்டிக்கொண்டு அழுதுகொண்டு இருந்தாள். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற மகேஷ் அந்த பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ந்துவிட்டான். ஏன் என்றால் கறுப்பு நிறம் என்றாலும் நல்ல முகவடிவான பெண் அவள் பள்ளியில் கறுப்பி என்று அழைத்து கேலி செய்து முகத்தில் மைதாமாவை குழைத்து அப்பி அந்த பெண் நிலாவை மிகவும் மனம் வருந்தும் நிலைக்கு தள்ளி விட்டனர். 
அதனால் தானும் வெள்ளை நிறமாக வரவேண்டும் என்று மாலதி பாவித்த அதே கெமிக்கல் அதிகமான கிரீமை நிலாவும் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தி. ஆரம்பத்தில் ரிசல்ட் விரைவாக வெண்மை நிறம் தெரியவந்தது நாட்கள் மாதங்கள் போகவும் மிகவும் சிறு பெண் தோலும் மிகவும் மென்மையானது அந்த சருமம் இந்த அதிகபடியான கெமிக்கலை தாங்கும் சக்தி இல்லாததால். நிலாவின் முகம் அதன் எதிர்வினையை காட்ட ஆரம்பித்தது.
அந்த எதிர்வினை முகத்தில் பரு தடித்து சிவப்பாகுவது அது காலப்போக்கில் சிறு துளைகலாக உருவெடுத்தது. பல் தீட்டவோ சாப்புடவோ இயலாமல் போகவும் அதை தாயிடம் சொல்லி முக கவசத்தை கலட்டி காட்டவும் மகளின் அழகான முகம் நீர் வந்து கோரமாக காட்ச்சியளித்தது அதை பார்த்த தாய் மனம் மிகவும் வருந்தி பணம் செலவானாலும் பரவாயில்லை என்று தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.
அந்த சிகிச்சை பயனளிக்கவில்லை ஸ்கின் கேன்சர் லாஸ்ட் ஸ்டேச்லதான் ஹாஸ்பிடல் வந்தனர்  டாக்டர்ஸ் எவ்வளவோ முயன்றும் காப்பாத்த முடியவில்லை நிலாவை.
இதோ யாரோ செய்த கேலி கிண்டல் மற்றும் பணம் பறிக்கும் சுயநல பிசாசுகளின் மாயவலையில் சிக்கி ஓர் இளம் பெண் மரணம். 
மகேஷிற்கு மிகுந்த குற்ற உணர்வு தான் நேர்மையாக இருந்தும் என்ன பயன். இதோ ஒருவகையான மாயையில் சிக்கி அவன் அறிந்தே இரண்டு பெண்களின் மரணம் மேலும் வெளிவராமல் இன்னும் என்னவெல்லாம் புதைந்து கிடக்கின்றனவோ?? என்று அச்சம் கொண்டான்.
அவனது பிள்ளையின் வரவை நினைத்து மகிழ்ந்த நெஞ்சம் தற்போது குற்றவுணர்வில் தவித்தது. உடனடியாக கலெக்டராக கமிஷ்னர் உதயனிற்கு தகவல் சொல்லி அவரை நேரடியாக சீக்கிரமாக ஷிட்டி ஹாஸ்பிடல் வரச்சொன்னான்.
கமிஷ்னர் உதயனும் மிகவும் வேகமாக கலெக்டரின் உத்தரவை நிறைவேற்றும் நல்லவன் போன்று வந்து நின்றான்.
உதயன் வந்ததும் மகேஷ் அவனை திட்டி தாளிக்க ஆரம்பித்து விட்டான்.   ” என்ன மிஸ்டர் உதயன் நீங்க அரசாங்கத்துகிட்ட சம்பளம் வாங்கிட்டு யாருக்கு வேலை பார்க்குறீங்க??.. இந்த கல்ப்பிரிட் யாருனு உங்களுக்கு தெரியும்னு எனக்கும்  தெரியும் நீங்க வாங்குற கிம்பலத்துக்கு அந்த அயோக்கியங்களுக்கு வேலை செய்றிங்கனும் எனக்கு நல்லா தெரியும் உங்க சப்போர்ட் இல்லாம இந்தளவுக்கு ஒரு தீவிரமான வேலையை செய்யமுடியாது இந்த பொண்ணு நிலாவை பத்தி எல்லா தகவலையும் திரட்டி பாடியை போஸ்ட் மார்ட்டம் பண்ணி ரிப்போர்ட் வாங்கி இவங்க ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் ரிப்போர்ட் இப்புடி இன்னும் என்வெல்லாம் பார்மாலிட்டிஸ் இருக்கோ அது அத்தனையும் நீங்களே திரட்டி நாளைக்கு ஆபிஸ்ல வந்து என்னை பார்க்கனும்” 
” அடுத்து ஏசிபி புகழ்தான் இந்த கேஸ் பார்க்குறாரு அவருக்கு இன்றைக்கு திருமணம் அவர் லீவ்ல இருக்குறார் லீவ் முடிஞ்சதும் வந்து கேஸை கண்டிநியூவ் பண்ணுவார் அவரோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ஏசிபி புகழை உங்க அதிகாரத்தை காட்டி கட்டாயப்படுத்தக்கூடாது உதயன் ஓகே.” 
“எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ குயிக்கா இந்த கேஸ் முடிஞ்சு குற்றவாளி வெளியவரனும். இல்லன்னா நீங்க வீட்டுக்கு போகவேண்டியது வரும். புரிஞ்சதா?” என்று பப்ளிக்கில் கமிஷ்னர் என்றும் பார்க்காமல் அவனது கோபம் குற்றவுணர்ச்சி என்று அனைத்தையும் அந்த ஆளின் மோசடி எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இன்று உதயனிடம் ஆக்ரோசமாக கத்தி தீர்த்துவிட்டான். கலெக்டர் மகேஷ்வர்மா..
கண்முழித்ததும் பெட்டில் இருந்து எழுந்த வடிவு ஒரு நிமிடம் தனக்கு என்ன நேர்ந்தது என்று நினைத்து பார்தாள் பாவை. அன்று காலை புகழ் மதியின் திருமணத்தில் அவள் தான் நாத்தனார் முடிச்சு போடவேண்டும் என்பது புகழின் ஆசை அதை நிறைவேற்றி அவளது சார்பாக அவர்களுக்கு பரிசு கொடுப்பதற்கு மகேஷிடம் சொல்லி வாங்கி வரவைத்தாள் அதை எடுத்து வருவதற்க்காக அவர்களின் அறைக்கு சென்றாள் செல்லும்போதே ஒருவித சோர்வுதன்மை வந்துபோனது ஆனால் அதை வடிவு பெரிதாக எடுக்கவில்லை அறையில் தண்ணி இல்லாமல் இருக்கவும் தண்ணீர் எடுப்பதற்கு எழும் போதுதான் மயக்கம் வந்து பேலன்ஸ் தவறி கீழே விழுந்துவிட்டாள் அப்போது கட்டில் விளிம்பில் தலை மோதி ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றுவிட்டாள். 
இது அனைத்தையும் நினைத்து பார்த்தவள் சோர்வு சற்று குறைந்ததை போன்று இருக்கவும் தலையில் அடிபட்ட இடம் மட்டும் விண் என்று வலி எடுத்தது. அதை பொருட்படுத்தாமல் அறையை விட்டு தனது பனைமரத்தை பார்க்கவந்தாள். வடிவு
வந்தவள் அவனது புதிய கலெக்டர் அவதாரத்தை உதயனிடம் கத்தியதையும் பார்த்து அரண்டுவிட்டாள். இந்த பனைமரமா தன்னிடம் வம்பு வளர்பதும் ஒரு குழந்தைதனமாக அன்பாக கொஞ்சுவதும் என்று அடாவடி செய்பவன் என்று அவனது புதிய பரிமாணத்தை பார்த்து மிரண்டுவிழித்தபடி நின்றாள் அவனது பஞ்சுமிட்டாய். 
அவள் நிற்பதை ராஜேஷ் சொல்லவும் உதயனை அனுப்பி விட்டு திரும்பியவன் அவளது பயத்தை பார்த்து தன்னை சாந்தமாக்கிகொண்டு அவளிடம் சென்றான். மகேஷ்.
அவளது அருகில் வந்தவன் அவளது கையை பற்றி அவள் அட்மிட் ஆகி இருந்த அறைக்கு அழைத்து சென்றான் “சாரி அம்மு பயந்துட்டியா??.. மாமான் வேலைனு வந்தா அப்புடித்தான் கோபக்காரன் ஆனா அம்முகிட்ட மட்டும் ரொமென்ஸ் மன்னன் டி இவ்வளவு சீக்கிரம் எனக்கு உயர் பதவி தந்துட்ட தந்தது சந்தோசம் தான் இருந்தாலும் முன்னமாதிரி அதிகமா உன் பக்கத்துல வரமுடியாதுல்ல சே கிட்டதட்ட ஒரு வருடம் நான் தள்ளி இருக்கனுமா??. என்று மனம் சுணங்கி பின் தனது குழந்தையிடம் பேசினான். “ஜூனியர் பியூட்டி அப்பா உங்களை ரொம்ப சீக்கிரமாக எதிர்பார்க்கிறேன் உங்க அம்மாவே ஒரு குழந்தை மாதிரி அதனால அம்மாவை தொல்லை செய்யாமல் சமத்தா இருக்கனும்” என்று தற்போது கருவாகி இருக்கும் அவனது குட்டிஷிடம் அவனது மனைவிக்காக கெஞ்சிகொஞ்சினான் மகேஷ்.
அதன்பின்பு அவளை டாக்டர் ஹேமாவிடம் அழைத்துச்சென்று அவரது அறிவுரைகளையும் மருந்துகளையும் பெற்றுக்கொண்டு அவனது பாடிகார்ட் பாஸ்கரனிடம் ஏனைய பார்மாலிட்டிஸ் முடிக்கச்சொல்லிவிட்டு அவனது அம்முவை அழைத்துக்கொண்டு  ராஜேஷுடன் அவனது வீட்டிற்கு சென்றான்.
அங்கு சென்றதும் அவளது அம்மா அப்பா மற்றும் தங்கைகள் என அனைவரையும் கண்டு சிறுமி போன்று குதூகலமாக மகேஷை விட்டு அவர்களிடம் சென்றாள்   ” அங்கயே மாப்பிள்ளைகு பக்கத்துல நில்லுமா” என்று கூறியபடியே வாணி ஆழம் சுற்றியதும்  வீட்டின் உள்ளே அழைக்கப்பட்டாள் வடிவு.
மகேஷ் கேட்டதும் பொன்னி ராசுக்குட்டி வடிவின் குடும்பம் என அனைவரும் ஒன்றாக மெட்ராஸை சுத்தி பார்க்கவும் வடிவை பார்க்கவும் வந்துவிட்டனர். 
அவர்களுடன் அரட்டை அடித்தவள். அப்பொழுதுதான்   அன்றைய நாளை பற்றி யோசித்தாள். உடனடியாக மகேஷை அழைத்து விபரம் கேட்கவும் அவனும் திருமண ஜோடி இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள். அத்தை அனைத்து ஏற்ப்பாட்டையும் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறி அவளை அறைக்கு அழைத்துச்சென்றான்.
சென்றவன் அவளை பின்னிருந்து அணைத்து கழுத்தில் முகம் புதைத்து ” அம்மு இனி ஜூனியர் வரப்போறாங்க நல்ல ஹெல்தி உணவா அத்தை தருவதை வேணாம்னு சொல்லாம சாப்புட்டு இன்னொரு உயிரை தாங்குற சக்தியை வளர்த்துக்கனும் சரியா?.. கொஞ்ச நாளைக்கு இந்த கேஸ் முடியும் வரைக்கும் இரவு எந்த நேரம் வீட்டுக்கு வருவேன் போவேன்னு எனக்கே தெரியாது புகழை தனியா விடமுடியாது அந்த உதயன் மேல எனக்கு நம்பிக்கை இல்ல அதனால நாங்களே நேரடியாக  இறங்கபோறோம். அதை வெற்றிகரமா முடிச்சுட்டு முழு ரொமான்ஸ் மன்னனா என் அழகி கூட விட்டதெல்லாம் புடிக்குற மாதிரி ரொமான்ஸ அள்ளி தெரிக்கவிடுவம்ல. சரியா??. மனசபோட்டு குழப்பிக்காம சந்தோசமா ஜாலியா இருக்கனும் புரிஞ்சுதா??. இப்ப நீ குளிச்சிட்டு வா அவங்க வந்துருவாங்க எப்புடிதான் நீ பக்கத்துல இல்லாம இந்த காலத்தை ஓட்டப்போறேனோ எனக்கு தெரியல ட்ரை பண்ணி பார்கிறேன்.” என்று கழுத்தில் முத்தம் பதித்து முன்வந்து அவளது வயிற்றை தடவி முத்தம் வைத்து என்று அவனது அனைத்து தேவைகளையும் முடித்துவிட்டு அவளை குளியலறையில் விட்டு அவனும் வேறு அறையில் குளிப்பதற்கு சென்று விட்டான் மகேஷ்.
அதன்பின்பு மாலை டிபன் காப்பி குடித்து முடித்ததும்  நல்ல நேரத்தில் புகழ் மதி தம்பதியினர் மகேஷ் வீட்டிற்கு மாலையில் வந்து சேர்ந்தனர்.
அவர்களை வரவேற்று ஆழம் சுற்றி பின்பு மாலை டிபன் அனைவருக்கும் கொடுத்து. அனைவரும் வடிவின் நல்ல செய்தி கேள்விப்பட்டு வாழ்த்து தெரிவித்து திருமண விருந்தோடு மகேஷின் பிள்ளை வரும் சந்தோசத்தின் விருந்தும் சேர்த்தும் அன்றைய நாளின் நிகழ்வுகள் கலை கட்டியது மகேஷ் வர்மாவின் வீட்டில்.
நிகழ்வுகள் முடிந்ததும் ஏசிபியும் கலெக்டர் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். மகேஷ் அன்று ஹாஸ்பிடலில் நடை பெற்ற அனைத்தையும் கூறினான் அதை கேட்ட புகழின் மனமோ மிகவும் வருத்தம் கொண்டது அதனால் உடனடியாக ஒரு முடிவெடுத்து விட்டான் புகழ்.
ஒருவழியாக ராஜதுரை அவர்களை எழுப்பி மகேஷை அவனது அறைக்கும் புகழை அவனது அறைக்கும் அனுப்பி வைத்தார்.
அதன்பின் மதியை ரெடி பண்ணி புகழ் இருந்த அறைக்கு அனுப்பிவைத்து அனைவரையும் படுக்க அனுப்பிவைத்துவிட்டு வாணி ராஜதுரையிடம் தனது மகளின் பெருமையான அன்பான வாழ்வை பற்றி மகிழ்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்னர் வடிவின் அப்பா அம்மா .
மதி அறைக்குள் வந்ததும் புகழோ கட்டிலில் இருந்து எழுந்து அவளது கையை பற்றி. அழைத்து சென்று இருத்தி “நாம அன்றே பேசின  மாதிரி என்னால இந்த கேஸ் முடியுறது வரை வேறு நினைப்பு எதுவும் இல்ல வதனி நீ தப்பா எடுத்துக்காம தூங்கு சரியா” என்று புகழ் கேட்கவும் அவளோ “சரிங்க ஆனா நான் கீழ படுக்கனுமா??” என்று மதி கேட்டாள்.
” யாரும் கீழ படுக்குறது இல்ல நீ கட்டில்லயே படு நான் இதோ ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வாறேன்” என்று அவள் நீட்டிய பாலை வாங்கி குடித்துவிட்டு வெளியே சென்றான். சென்றவன் ஐந்து நிமிடத்தில் திரும்பி மேலே அறைக்கு வந்துவிட்டான்.புகழ்
” என்னங்க என்ன கண்டு பயந்து ஓடுநீங்க எங்க பக்கத்துல இருந்தா கையை வச்சிக்கிட்டு சும்மா இருப்பமோன்னு உங்க மேலயே நம்பிக்கை இல்லாமல்தானே வேலை இருக்குதுனு வெளிய போனிங்க??.. போன அதே வேகத்துல திரும்பி வந்துடிங்களே..” என்று மதி ராகமிலுக்கவும்.
“அடஅடே!  மௌனராகம் எப்போ சங்கீதமா மாறிச்சாம் சௌவ்ண்ட் எல்லாம் சத்தமா வருதே. பயம் விட்டு போச்சில்ல என்மேல இருடி நான் யாருனு காட்டுறேன். வெளிய என்னன்னா?.. உங்க கலெக்டர் அண்ணன் குச்சிய வச்சி மிரட்டுறான் தங்கச்சி தனியா இருக்குமாம் புது இடமாம். இப்பவே ரூம்க்கு போகட்டுமாம் இன்னைக்கு ஒரு வேலையும் பார்க்கத்தேவை இல்லையாம்னு விரட்டி விடுறான் இங்க நீ நக்கல் பேசுற. இன்றைய நாள் முடியுறதுக்குள்ள நீ வடிவு மகேஷ் ராஜேஷ்னு எல்லாரும் என்னை ஒரு வழி பண்ணுறிங்க இல்ல” யூஸ் மீ யூஸ் மீ என்று வடிவேல் பாணியில் சொல்லிக்கொண்டே மதியின் கையை பற்றி கட்டிலுக்கு இலுத்து அவனும் அவளது அருகில் படுத்துக்கொண்டான். புகழ்.
“புல் மீல்ஸ் தான் இப்போதைக்கு இல்ல ஆனா  கறி சோறும் சாப்புடக்கூடாதுனு தடையில்லயே.??. பொம்மு. அப்புடியே குட்டி டால் கனக்கா இருக்குறடி மாமன சுண்டி இழுத்துகிட்டு வருது உன் பக்கத்துல” என்று வாசம் இழுத்து அவளது கூந்தலில் முகம் புதைத்து கழுத்து முதுகு என்று முத்த அச்சாரம் பதித்து பெண்ணவளை நாணி சிவக்கவைத்தான் ஏசிபி. 
அவளை முன் பக்கம் திருப்பி நெற்றி முத்தம் வைத்து உதட்டில் கை வைத்து காட்டி “இங்க முத்தம்  குடுத்தா நான் கன்ரோல் இல்லாமல் போயிடுவேன் பின் எனது வேலையை சரியா செய்யமுடியாது” என்று அவளிடம் கூறி அவளை அணைத்து உறங்க முயன்றான். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை. சிந்தனை முழுதும் இன்று மகேஷ் காட்டிய அந்த நிலா பொண்ணின் முகமே அவன் கண்முன் வந்து அவனை இம்சித்தது
அவன் உறங்குவதற்கு படும் சிரமத்தை பார்த்து அவனது தலையை அவளது நெஞ்சில் சாய்த்து அவன் தலையை தடவி ஆறுதல் படுத்தி அவனையும் உறங்க வைத்து தானும் உறங்கி போனாள் புகழின் பொம்மு.
ஒருவழியாக புகழை அறைக்கு அனுப்பிவிட்டு மகேஷ் அவனது அறைக்குள் வந்தான் “எனக்கு தெரிஞ்சுதான் நான் வெளிய நின்னதே இவன் இப்புடி டிமிக்கி குடுத்துட்டு வெளிய போவான்னு. யாருகிட்ட மகேஷ்டா. ” என்று நினைத்துக்கொண்டு அவனது அழகியின் அருகில் சென்றான்.
சோர்வு அலைச்சல் எல்லாம் அவளை பாடாய் படுத்த அவளது சொந்தங்களை வீட்டில் பார்கவும் திருமணத்திற்கு பின்பு தனியாக இருந்தவள் மனது அப்புடி ஒரு நிறைவாக இருந்தது வடிவிற்கு எல்லாம் சேர்ந்து அவளை ஆழ்ந்த தூக்கதிற்கு அழைத்து சென்றது சுவாசம் சீராக வர தூங்கிப்போனாள். வடிவு.
சோர்விலும் ஒரு விதமான அழகுடன் ஓவியம் போன்று படுத்திருந்தாள் சேலை கொஞ்சமாக கலைந்து அவளது சிற்றிடை அவனைபார்த்து சிரித்தது. 
தூங்குபவளை ரசிக்ககூடாது என்று மூளை சொன்னாலும் காதல் மனம் கேட்கவில்லை ரசித்து பார்த்து நெற்றி கன்னம் எல்லாம் முத்தம் வைத்து அவளை அலேக்காக வயிற்றில் கை கொடுத்து தூக்கி அவனது நெஞ்சத்தை மஞ்சமாக்கி தட்டிக்கொடுத்த படி அவனும் தூங்கி போனான் அவளது பனைமரம்.
ஒரு வழியாக திருமண நாள் முடிந்து அடுத்த நாளும் அழகாக விடிந்தது. வாணி எழுந்து குளித்து பூஜை செய்து அனைவருக்கும் காப்பி கலந்தார் பொன்னி அவருடன் வடிவின் சமையல் அறையில் நின்று உதவி செய்துகொண்டிருந்தாள்.
புகழ் சீக்கிரமாக எழுந்து கீழே வந்தான் வந்தவன் அங்கு இந்த அதி காலை நேரத்தில் வாணியை எதிர் பார்க்க வில்லை போல அவனும் நிற்கவும் அவனது கோலத்தை பார்த்து இரவு மகேஷ் அவனை ஏன் வம்படியாக அறைக்கு அனுப்பி வைத்தான் என்று புரிந்துகொண்டார். 
அதனால் வீட்டில் அனைவரையும் முதலில் வடிவின் அறை கதவை தட்டி மகேஷை எழுப்பி அவன் வெளியே வந்ததும் புகழ் நின்ற கோலத்தை  பாசமாக பார்த்து நின்றான் மகேஷ் வர்மா..
தொடரும்…

Advertisement