Advertisement

“ஏங்க எத்தினை பேர் வருவாங்க??”
“ரெண்டு பேர் டி நான் சொல்லிருக்கேன்ல போலீஸ் புகழ், ராஜேஷ் அவங்க ரெண்டு பேரும் தான் என்னோட நண்பர்கள். வேறயாரும் இல்லை அம்மு.” என்று கூரி அவர்களுக்கு புடித்த உணவை சொன்னான்.  அதை கேட்டு வேலையாள் கோமதி லதா உதவியுடன். ஒரு குட்டி விருந்தே செய்து முடித்தாள்..
சரியாக இரவு எட்டு மணிக்கு புகழும் ராஜேஷும் கிப்ட்டுடன் வந்தார்கள். முகத்தில் சிரிப்புடன். வாசலுக்கே வந்து வரவேற்றாள் வடிவு.
“வாங்க அண்ணாஸ்”
மகேஷ்  இவன்தான் ஏசிபி புகழேந்தி
இவன் ஐடில வேலை செய்றான். ராஜேஷ். உள்ள வாங்கடா.
“இருங்க தண்ணி எடுத்துட்டு வாறேன்.”
தண்ணி குடித்ததும் புகழும் மகேஷும் அன்று நடந்த வரதனின் பிரச்சினையை பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
வீட்டுக்கு வந்து ஆபிஸ் விசயத்ததான் பேசுறானுகள். கலெக்டர் ஏசிபினு ஓவரா சீன் போடுறானுகள். தாங்களடா சாமி என்று ராஜேஷ் புலம்பி விட்டு. “ஏன்மா வடிவு நீ எப்புடிமா இவன  கல்யாணம் கட்டிக்கிட்ட” என்று ராஜேஷ் ஒரு கேள்விதான் கேட்டான் வடிவிடம். அவள் கதை சொல்லும் பாணியில் அவளது திருமணம் நடந்த விதத்தை மதுரைக்கு மகேஷ் வந்ததில் இருந்து இன்று இவர்கள் வீட்டிற்கு வரும் வரை சொல்லி முடித்தாள். அதை கேட்ட ராஜேஷ் கொட்டாவி விட்டான்.
“ஏன்மா வடிவு எப்புடி தெரியும்னு ஒரு கேள்விதானே கேட்டேன். பாவம்மா இந்த பச்சபுள்ள. இப்புடி வகைவகையான சாப்பாட ருசி பார்க்கிறதுகுள்ள. தூங்க வச்சிடுவ போலயே. போம்மா போய் அந்த தடியன்களையும் கூப்புடு சூடு ஆற முன்ன சாப்புடுறுவோம். வாசனை ஆள இழுக்குது.”என்று நாவை சுழற்றி சப்புக்கொட்டினான் ராஜேஷ்..
ஒருவாறு அனைவரும் உணவை சுவைத்து உண்டுமுடித்து. வடிவை பாராட்டி. கொண்டுவந்த பரிசை கொடுத்தான் ராஜேஷ்.
“என்னடா மச்சி இதெல்லாம் நீ கிப்ட் வாங்கிட்டு வந்துருக்க??.. ” என்று மகேஷ் ராஜேஷிடம் கேட்க்க.
“அதுவந்து மச்சி இந்த சின்ன மீனை போட்டு பெரியமீனை புடிக்கிற கதை தெரியும்தானே உனக்கு??.. அது மாதிரித்தான் இதுவும் நான் சின்ன கிப்ட் குடுத்தா நீ கலெக்டர் உன் ரேஞ்சுக்கு இதைவிட பெருசா செய்யமாட்டியா??.. மச்சி. அதுக்குத்தான். இந்த கிப்ட்.” என்று ராஜேஷ் மகேஷிடம் சொல்ல இதை கேட்ட புகழ் சிரித்துக்கொண்டே அவனது கிப்ட்டை கொடுத்தான்.
“நீயுமாடா??” புகழ்
“ஆமாம் டா மகேஷ். இங்க வாம்மா வடிவு. இந்தாங்க இது ஹனிமூன் சூட் பக்கேஜ்  கொடைக்கானல். போறதுக்கு. அங்க போய் தங்குறதுல இருந்து எல்லாத்துக்கும். ஏற்பாடு பண்ணிட்டேன். நீங்க போறதும் ஜாலியா என்ஜோய் பண்ணுறது மட்டும் தான். உங்க வேலை. வடிவு இவன நீ தான் புடிச்சி வச்சிக்கனும் அங்கயும் போய்  லெப்டப்ப கட்டிக்கிட்டு  சுத்தப்போறான் அத ஒரு ஓரமா வாங்கி வச்சிடுமா சரியா??..” என்று புகழ் கேட்டதும் சிரித்துக்கொண்டு தலையை ஆட்டினால். வடிவழகி.
”  சரிம்மா வடிவு நாங்க போய்ட்டு வாறோம். டேய் மச்சான் ஹாப்பி ஜேர்னி.டா என்று புகழ் சொல்ல வயிராற ருசியா சாப்பாடு போட்டமா வடிவு இதுக்காகவே டெய்லி இங்க வரலாம். ஹோட்டல் சாப்பாடு சாப்புட்டு நாக்கு டெத் ஆகிட்டு. சரி நேரம் ஆகிட்டு நானும் போயிட்டுவாறேன். மகேஷ் பாய்டா.”என்று  வயிறு முட்ட உண்ட மயக்கத்தில் நடக்க முடியாமல் நடந்து சென்றான் ராஜேஷ்..
அதன்பின்பு அடுத்தநாள் அவர்கள் சிட்டாக பறந்தனர் ஹனிமூனிற்க்கு ஜோடி பறவைகள். கொடைக்கானல் போய் அன்று இரவு அலுப்பு தீர ஹீட்டர் போட்டு குளித்து உணவு உண்டு உறங்கிவிட்டர்..
அடுத்தநாள் காலை நேரம் கடந்து எழுந்ததும். காலை கடன்களை முடித்துவிட்டு. உணவு உட்கொண்டதும். இதோ இன்று பிரையண்ட் பூங்காவில். மனையாளின் ஊர் சுற்றும் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுகின்றான். கண்ணாலன்.
அவன் விளக்கி சொன்ன அனைத்தையும்  கேட்டு தலையாட்டியபடியே அவளும் அது என்ன இது என்ன என்று கேள்வி கேட்டு அவளது பனைமரத்தை ஒருவழியாக்கி கொண்டிருந்தாள் பஞ்சிமிட்டாய்..
அவளது கையை பற்றியபடியே இருவரும்  பூங்காவை வலம் வந்தனர்.
அப்போது சட சட மழை தூறல் போட ஆரம்பித்தது. உடனடியாக அருகில்  இருந்த அவர்களது காட்டேஜ் சென்றனர்.. வந்ததும் அவள் அவனது தலையை துவட்டிவிட்டு குட்டி குளியல் போட்டாள். “ஏங்க என்னால குளிர் தாங்க முடியலங்க. சூடா காபி வாங்கித்தாங்க??.. ” என்றதும் அவனும் இன்டர்கிராமில் கிட்சனிற்க்கு அழைத்து காபி ரெண்டு கொண்டுவரும் படி சொல்லிவிட்டு குளிக்கச்சென்றான்..
அவனும் குளித்து வரவும் சூடான காபியும் வந்தது. அதை ரசித்து இருவரும் பருகியபடியே பேசிக்கொண்டிருந்தனர். “ஏங்க மெட்ராஸ்லயே இருந்துகிட்டு ஏன் அத்த மாமா யாரும் நம்மல பார்க்க வரல நீங்களும் என்னை கூட்டிட்டு போகல?? நாம ஏன் தனிய இருக்குறோம்.” என்று வடிவு கேட்கவும். மகேஷ் அவனிற்க்கு தெரிந்தளவிற்க்கு சொன்னான்.
“ஏன்னா எங்க அப்பா செய்ற வேலை எனக்கு புடிக்கல நான் பாட்டிமாட்டதான் வளர்ந்தேன். சென்னை வந்ததும் ஹாஸ்டலில் தங்கி படிச்சேன் ஒரு தம்பி தங்கச்சி இருக்குறாங்க டி அம்மா அப்பா செய்ற எதையும் ஏன்னு கேட்க மாட்டாங்கலாம். அது எனக்கு புடிக்கல. அதனால நான் தனிய இருக்குறேன். இது போதுமா இன்னும் எதுவும் தெரிஞ்சுக்கனுமா?? என் பஞ்சிமிட்டாய்க்கு.”
“எனக்கு அவங்க எல்லாரையும் பார்கணும் பேசணும்னு ஆசையா இருக்குங்க.” என்று வடிவு சொன்னதும் மகேஷின் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது.
அதன் பின்பு இரவை நெருங்கியும் மழை நிற்காமல் வழுத்தது. மழைக்கும் இந்த ஜோடிக்கும் நல்ல ராசி போல. குளிர் அதிகமாகவும். ஹீட்டரின் வேகத்தை அதிகப்படுத்தியும் வடிவிற்கு நடுங்குவது குறையவில்லை. “ஏங்க குளிருதுங்க “என்று ஒரு வார்த்தை பேசுவதற்குள் வடிவின் வாய் டைப்படித்தது.
அவள்படும் பாட்டை பார்க்க முடியாமல் அங்கு கலெக்டரும் சராசரி அக்மார்க் கணவனான்.
அவளை நெருங்கி இழுத்து அவனது வெற்று மார்பில் உடல் கதகதப்பில் ஆழ புதைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் நடுக்கம் சற்று குறைந்ததும். அவளை மெதுவாக நிமிர்த்தி அவளது செப்பு இதழில் பூவில் தேன் எடுக்கும் வண்டாக ஆழமாக இதழமுதம் பருகினான். அவள் சுவாசத்திற்க்கு சிரமப்படவும். மெதுவாக அவளை விடுவித்து. “ஏன்டி அம்மு மாமனை உனக்கு பிடிச்சிருக்கா??. ” என்று கேள்வி கேட்கவும்.
வடிவு இடுப்பில் கை வைத்து முறைத்தாள். “அட வெவஸ்தை கெட்ட மனுசா எங்கவந்து என்ன கேள்வி கேக்குறனு தெரியுதா??. ” என்று முறைப்புடன் கேட்டவும்.
அடடா நம்ம பொண்டாட்டி பார்ம்க்கு திரும்பிடாலோனு மகேஷ் நினைத்து முடிப்பதற்க்குள். இப்போது பேசியது அவள்தானானு யோசிக்கும் படி திரும்பவும் நடுங்க ஆரம்பித்து விட்டாள்.
கீழே விடாது இன்னும் நெருங்கி மீண்டும் இதழ் முத்தம் வைத்து இறுக்கி அணைத்துக்கொண்டான்.
இதுதான் இவளிற்கு குளிரை போக்கும் சரியான மருந்து என்று கண்டு கொண்டான்.
அவனும் சராசரி உணர்வு படைத்த மனிதன்தானே. அவன் தனது உணர்வை கட்டுப்படுத்த போராடுவதை மனையாள் தலை நிமிர்த்தி அவனை  மழங்க விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது சம்மதம் இல்லாமல் முன்னேற மாட்டான் என்று அறிந்து கொண்ட பேதையவள். அவனிற்கு கடித்து வைத்து குறிப்பு மூலம் தனது சம்மததை தெரிவித்தால்.
அதனை சரியாக புரிந்து கொண்டவன். காரியமே கண்ணாக களமிரங்கினான்.
அதனைத்தொடர்ந்து அவளது கையை பிடித்து இழுத்து அவனது மடியில் அவளை இருத்தி கழுத்தில் ஆழந்த முத்தம் பதித்து.  விளையாட புதிதாக சிறுவனிற்க்கு கிடைத்த பொம்மை போன்று அவளை முழுவதுமாக  அவனும் அனுபவித்து அவளிற்க்கும் புனிதமான புதிய தாம்பத்திய பாடத்தை படிப்படியாக அவளை தாங்கி அவளின் சௌகரியம் பார்த்து கற்றுக்கொடுத்தான். இங்கு அழகான ஒரு ஜோடி சிட்டுக்கள் இரண்டரக்கலந்து கூடல் ஆரம்பித்தது. புதிய பாடத்தை கற்க்கும் மாணவி போன்று சிரத்தையுடன் கற்பதற்க்கு முழுவதுமா ஒளிவு மறைவுயின்றி மனையாள் தன்னை ஒப்புக்கொடுத்தால். அங்கு ஆடைகளிற்கு விடுதலை அளிக்கப்பட்டது. இருவரும் வெகு நேரம் கூடி கலித்து களைப்புற்றனர்.
இருவர் மனமொத்து இணையின் திருப்தியை அறிந்து புனிதமான கூடலைக் கூடி மகிழ்ந்தனர்.
களைப்பை போக்குவதற்க்கு இதழமுதம் பருகி. அவளை அணைத்து இடையை  இறுக்கி கை போட்டு கம்பளியை    போர்த்திவிட்டு  நெற்றியில் முத்தம் பதித்து தட்டிக்கொடுத்து தூங்க  வைத்தான் மனையாளை. மகேஷ் வர்மா..
அடுத்தநாள் காலை வெகு தாமதமாக எழுந்தனர்.. எழுந்ததும். அவளிற்கு சரியாக போர்த்திவிட்டு. அவன் குளித்துவந்ததும். காபிக்கு சொல்லிவிட்டு அவளை எழுப்பினான். அவள் எழுந்ததும் தான் இருக்கும் நிலையுணர்ந்து கணவனை காணமுடியாமல் வெட்கம் தடுக்க போர்வையை சுற்றிகொண்டு குளியல் அறையில் ஓடி மறைந்தாள்..
அன்று சென்னையில்..
“என்னடி உன்னோட மகனுக்கு பயம் விட்டுப்போச்சி அங்க போய் அந்த கிழவி யாரோ ஒரு பட்டிகாட்டு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிடாளாம் உன்னோட மகனுக்கு. அவரும்  இது தான் சரியான சந்தர்ப்பம்ன்னு ஊர் சுத்தி தேன்நிலவு கொண்டாட போய்ட்டாறு. நீ என்ன செய்வியோ தெரியாது அவன் வந்தது உன்னோட கலெக்டர் மகன்கிட்ட இந்த பையில்லயாவது அவனோட கையெழுத்து வாங்கி தந்துரு இதுவும் கைவிட்டு போச்சி. உங்க மூணு பேரு உயிருக்கும் நான் உத்தரவாதம் இல்ல சொல்லிடேன்.” என்று சிவாசங்கர் வர்மா அவரது மனையாள் சுவேதாவிடம்  உக்கிரமா   கத்தி விட்டுச் சென்றார்.
அதை சுவேத்தா கொஞ்சமும் செவிமெடுக்காமல் ஒரு மிடுக்குடன் நின்று கொண்டிருந்தார்..
தொடரும்…

Advertisement