Advertisement

அத்தியாயம்  12
கொடைக்கானல். சுற்றுலா தலங்கள்..
இந்தியாவின் கோடை வாழிடங்களில் மிக முக்கியமானது..
மேற்கு மலைத்தொடரில் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள். வருடம் முழுவதும். வந்து இயற்கை எழில் அழகை கண்டு மகிழ்வர்..
இங்கும் அதே போன்று. நமது பனைமரமும் பஞ்சுமிட்டாயும். தேன்நிலவிற்க்கு. வந்து பிரையண்ட் பூங்காவில். நாயகியின் ஊர் சுற்றும் ஆசையை சுற்றிக்காட்டி  நிறை வேற்றிக்கொண்டிருக்கின்றான். நாயகன்..
வாங்க அவங்க ஊர் சுத்தி பார்க்கட்டும். நாம வடிவின் அதிர்ச்சிக்கு காரணம் என்னனு பார்க்கலாம்..
வடிவின் வீட்டில் இருந்து புறப்பட்டு  மகேஷின் வேலை நேரத்திற்கு சென்னை செல்வதற்கு. வடிவிற்கு ப்ளைட் டிக்கெட் எடுத்து முன் ஏற்ப்பாடு செய்திருந்தான். அதனால் மதுரை விமானநிலையம். அழைத்துவந்திருந்தான்.
அந்த பழைமையான ஊரை விட்டு முதல் முதலாக வெளியே வந்த சந்தோசத்தில் சற்று குதூகலமாக  இருந்தாள்.. அதை குழப்புவது போன்று கார் நின்றது. அவளை இறங்கச்சொல்லி அவனது பவரை பயன்படுத்தி. உள்ளே அழைத்துச்சென்றான்.
அதுவரை எங்கு வந்துருக்கின்றோம். பனைமரம் என்ன செய்கின்றான் என்று எதுவும் புரியாமல் திரு திருவென முழித்து அவன் கையை பிடித்து அழைத்து சென்ற பக்கம் எல்லாம் சென்று, அவன் ஒவ்வொன்றும் சொல்ல இவள் செய்துகொண்டு  இருந்தாள். அனைத்து பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து விமான அறிவிப்பு வந்ததும் விமானத்தில் ஏறுவதற்கு அழைத்து சென்றான்.
முதன்முதலில் நேரடியாக மிகவும் பக்கத்தில் விமானத்தை பார்த்ததால். அதிர்ந்துவிட்டாள். “ஏங்க இதுலயா??..  நாம மெட்ராஸ் போகபோறோம். இது என்ன வானத்துல பார்க்கும்போது இம்புட்டூன்டா தெரியும் ஆனா இங்க இம்மாப்பெருசா இருக்கு. எனக்கு பயமா இருக்குதுங்க.. இதெல்லாம் வேணாம் வாங்க நாம பஸ்வண்டில போவோம்.. என்னால இதுலயெல்லாம் வரமுடியாது… “
“ஐயோ அம்மு பஸ்ல போனா இன்னைக்கு என்னால ஆபிஸ் போகமுடியாது. மாமன புரிஞ்சுக்க டி சரியா வந்து பாரு ஜாலியா இருக்கும்.. சென்னை  வந்ததும் நீ என்ன கேட்டாலும்  வாங்கிதாறேன் அலப்பறையை கூட்டாம சமத்தா இப்ப உள்ள வா டி.. ” என்று ஒருவாறு உள்ளே அழைத்து சென்று சீட் பெல்ட் போட்டு விட்டான்.
விமானம் சரியான நேரத்திற்கு மேல் எழுப்பவும். வடிவு நெளிந்து கொண்டிருந்தாள். ” ஏங்க நான் பாட்டுக்கு பஸ்வண்டில போனா நல்லா பிறாக்கு பார்த்துகிட்டு போகலாம்ன்னு எம்புட்டு கற்பனை பண்ணுனேன் தெரியுமா??.. அதவிட்டு இப்புடி அடைச்சிவச்சு கட்டிப்போட்டமாதிரி கூட்டிட்டுபோறிங்களே.. உங்களுக்கே இது அடுக்குமா???… ” என்று விமானத்தில் ஏறியதில் இருந்து சென்னை வந்து இறங்கியது வரை கலெக்டர் மகேஷை ஒரு வழியாக்கிவிட்டால். நமது குறும்புகார பஞ்சிமிட்டாய்..
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விட்டு வாடகை காரில். வீட்டிற்க்கு செல்லும் வழியில் அடுக்கடுக்கா உயர்ந்து இருந்த கட்டிடம். துரிதமாக செல்லும் மக்கள்கூட்டம். ட்ராபிக்கில் நின்றது என அனைத்தையும் ஒருவித ஆர்வத்தோடு பார்த்துவந்தாள்.. பேதையவள்..
அவளது அனைத்து செயல்களையும் வாடாத கீற்று புன்னகையுடன் கடந்து அவனது இல்லத்திற்கு இல்லத்து அரசியை அழைத்து வந்தான்.
பாடிகார்ட்ஸ் பாஸ்கர்.கலெக்டரின்  வீட்டில் முதல் வேலை செய்த ஆண் சமையலாளரை மாற்றி இளம்பெண்ணை சமைப்பதற்க்கும் ஏனைய மேல் வேலை செய்ய மற்றுமொரு இளம் பெண். தோட்டகாரர். வாட்ச்மேன் என்று . அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தான்.
வீட்டிற்க்கு வந்து இறங்கியதும் சமையல் செய்யும் கோமதி ஆழம் சுற்றி உள்ளே அழைத்தால்..
வடிவு வேகமாக வீட்டின் உள்ளே சென்று முதலாவதாக இருந்த அறையை திறந்து உள் நுழைந்தாள்..
மகேஷ் கை கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு இவள் என்ன பண்ணுறாள்ன்னு பார்த்துக்கொண்டு இருந்தான். அறையின் உள் சென்று பாத்ரூமில் குளித்துவிட்டு புடவை மாற்றிவிட்டு. வெளியே வந்தாள்..
“கோமதி அக்கோய்.  இங்க வாங்க.”
“என்னம்மா??.. “
“என்ன என்னைய போய் அம்மானு சொல்லுறீங்க உங்களவிட சின்னபொண்ணுதான் வடிவுனு கூப்புடுங்க சரியா??.. இங்க சாமியறை எங்கயிருக்கு??”
” வாங்கமா காட்டுறேன்.”
“ஏங்க என்ன இருந்துடிங்க வேலைக்கு போற எண்ணம் கொஞ்சமும் இல்லயா??.. போங்க போய் குளிச்சிட்டு சீக்கிரம் சாமியறைக்கு வாங்க..”
அவள் சொன்னதை கிளிப்பிள்ளை போன்று செய்தான்.கலெக்டர்.
சாமியறையில். அவன் வந்ததும். விளக்கேற்றி தீபம் காட்டி வணங்கியதும் அவனிற்க்கு விபூதி பூசிவிட்டாள்.. “ஏங்க இந்த குங்குமத்தை எனக்கும் தாலிக்கும் வச்சுவிடுங்க.” அவனும் வச்சுவிட்டதும் இவள் அவனது காலில் விழுந்து வணங்கினாள்.. உடனடியாக மகேஷ் அறையின் வெளியே பார்வையை ஓட்டி யாரும் இல்லாததை உறுதிசெய்து கொண்டு “என்ன வேலை பண்ணுற அம்மு அன்னைக்கே சொன்னந்தானே இதெல்லாம் வேணாம்ன்னு இனி இப்புடி பண்ணக்கூடாது சரியா??..” என்று கேட்கவும் தலையை ஆட்டினாள்.. அவளது தலைபிடித்து நிறுத்திவிட்டு கண்ணத்தை தட்டினான்.. கள்வன்.
“சரி அம்மு நேரம் ஒன்பதுமணியாகிட்டு நான் ஆபீஸ் போறேன். நீ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு.” என்று சொல்லி அவளை அழைத்து சென்று தங்களது அறையை காண்பித்தான்..
அறையை சுற்றிப்பார்த்ததும்.. “சரி வாங்க சாப்புட்டுபோவிங்கலாம்” என்றதும் “அவனா மாட்டேனு சொல்லுவான். இதுவரை கண்டிக்க கேள்வி கேட்க பாசத்துடன் பார்த்துப்பார்த்து பரிமாற ஆள்இல்லாமல்.. யாரோ சமைத்து மேசையில் வைத்திருப்பதை போட்டு உண்டுவிட்டு செல்வான்.
இன்றானால். அவனையும் ஒருத்தி அதிகாரம் பண்ணி சாப்பிடச்சொல்லி அழைத்துச்சென்று பரிமாறுகிறாள். இந்த புதுவிதமான அனுபவத்தை ரசித்துக்கொண்டே உண்டுவிட்டு அவள் உண்ணும் வரை இருந்து பார்த்து விட்டு. “சரி அம்மு இதுக்குமேல லேட் பண்ணமுடியாது நான் போய்டுவாறேன் சரியா வெளிய எங்கயும் போகக்கூடாது. இன்னைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. நான் வந்து உனக்கு எல்லாத்தையும் சுத்திகாட்டுறேன்.” என்று சொல்லி புறப்பட்டு சென்றான் கடமை தவறாத கலெக்டர் ..
மேலும் மூன்று நாள் கடந்ததும்.. வீட்டில் நடப்பதை கவனித்த வடிவு ; இந்த வீட்டு சமையல்அறையை மாற்றுவதற்க்கு திட்டமிட்டாள். தோட்டகாரரை அழைத்து மூன்று கல் கொண்டுவரச்செய்து ஈரவிறகை அதுதான் அவசரத்துக்கு கிடைச்சுதாம் அதை வைத்து அடுப்பு மூட்டினாள்.  ஒருவாறு மண்ணெண்ணெய் ஊற்றி ஊதி ஊதி புகைமண்டலத்தை வரவைத்து அடுப்பு மூட்டி வடை சுட்டாள். அன்நேரம் தான் வேலையாட்கள் அனைவரும் புகை கண்எரிச்சல் தாங்க முடியாமல். வீட்டின் வெளியே சென்றுநின்றனர்..
அன்று தான் மகேஷ் ஏசிபி புகழேந்தியை சந்தித்து கேஷ் விசயமாக பேசி. பின்பு தனது நண்பனுடன் அலவலாவி விட்டு வீட்டிற்க்கு வந்தான்..
வீட்டிற்க்கு வந்ததும் புகையை பார்த்து என்னவோ ஏதோ என்று வடிவை அழைத்தவன் அவளது கோலத்தை பார்த்ததும் அவளிற்க்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் வைத்தகண் எடுக்காமல் அவளை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்..
” என்னங்க என்ன இப்புடி பார்க்குறீங்க??? போங்க போய் கைகால் கழுவிட்டு வாங்க வடை சுட்டு வச்சிருக்கேன். காபி போட்டுத்தறேன். சுடச்சுட சாப்புட்டாதான். நல்லா இருக்கும். மசமசனு நிக்காம சீக்கிரமா வாங்க..”
மகேஷ் வீட்டின்னுள் சென்று ப்ரஸ்சாகி. தோட்டத்திற்கு வந்தான். அவனை தொடந்து ட்ரேயில் வடை காபி கப் வைத்து எடுத்துச்சென்றாள் வடிவு..
“நீ பண்ணுறது உனக்கே நல்லாயிருக்காடி??.. என்ன வேலை பண்ணி வெச்சிருக்க??.. வீடு புகைந்ததை பார்த்து கொஞ்ச நேரம் நடுங்கிபோயிட்டேன்.. ஏன் நீ கிட்சன் போன??… “என்று அவனது பயம் கோபம் எதையும் அவளிற்க்கு காட்டாமல். அடக்கிவைத்து கேட்டான்..
“ஏங்க கொஞ்சம் பொறுமையா ஒரு ஒரு கேள்வியா கேளுங்க. அப்பதானே நான் யோசித்து  பதில் சொல்ல முடியும்.. இங்க பாருங்க நான் உங்களுக்கு   சமைத்துப்போடாம வேற யாரு செய்வா??…   நான் இங்க எதுக்கு இருக்கனாம். உங்கள கவனிக்குறத விட வேற வெட்டி முறிக்குற வேலை எதுவும் இல்ல எனக்கு புரிஞ்சுதா??..    என்னால இந்த  பட்டன தட்டினதும் நோகாம சமையல் பண்ணுற வேலை எல்லாம் செய்யமுடியாது.. “
“ஏன்னா நான் உங்களோட நல்லபடியா ஆரோக்கியமான வாழ்க்கை வாழணும். இன்னும் ஐந்து வருடம் போனதும். நீங்க பெறுமாசக்காரி மாதிரி வைத்தை தள்ளிட்டு நிக்ககூடாது..”
” ஊருக்கே அடுப்புல சமைப்பமாம். இங்கயிருக்க ஆறேழு பேருக்கு சமைக்க கஷ்டமா என்ன. நான் சொல்லுறத கேளுங்க உங்களுக்கு இப்ப  அலுப்பு இல்லன்னா. நேரம் ஆறு மணி ஆகிட்டு வாங்க கடைத்தெருவுக்கு போவோம்.. கொஞ்ச சாமான் வாங்கணும். “
“இருங்க பேப்பர் பேனா எடுத்துட்டு வாறேன் நான் சொல்லுறத உங்களுக்கு புரியும் படி எழுதுங்க..”என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். மகேஷு இவகிட்ட கொஞ்சம் உசாராத்தான் இருக்கணும். எடுத்த உடனே தடைபோடக்கூடாது. அவளும் ஆரோக்கியமான நல்ல சமையல் சாப்புடனும்னு நல்லதுதான் சொல்லுறா இருந்தாலும் இந்த அழகு முகம் விறகு அடுப்புல சூட்டுல நின்னு கஷ்டப்படுவாளே. அத புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளே??… இப்பவே என்ன கோலத்துல வந்து நின்றாள் .. என்று மனதில் நினைத்து கவலை பட்டபடியே போனில் மனையாளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்க்கு. அதிகம் புகை கறி படாமல் சமைக்கும் விறகு அடுப்பை தேடினான்..அந்த அன்பு கணவன்..
“ஏங்க அந்த போன இப்புடி வச்சிட்டு நான் சொல்லுறத எழுதுங்க.. நேரமாகுதுல்ல.
விறகு வச்சு சமைக்குற அடுப்பு, விறகு.
மண்பானை, சட்டி. ஒரு 5ஜோடி.
ஆட்டுக்கல்.அம்மி. மா இடிக்குற உரல்
மசாலா அரைக்குற சாமான்.    சத்துமா கஞ்சி செய்ற சாமான். குரக்கன் மா.”
இன்னும் பல.  ஏங்க போகலாம் வாங்க என்னை அந்த கடைக்கு கூட்டிட்டு போங்க நான் நல்லது எதுனு பார்த்துவாங்குவேன். சரியா நான் வரலன்னா உங்களுக்கு இந்த சாமானுகல பத்தி எதுவும் தெரியாது சொத்தைய குடுத்து ஏமாத்திடுவானுக..” த சென்னை மாவட்ட கலெக்டர ஏமாத்திடுவாங்கலாம். என்று ஊர் சுற்றுவதற்கு எப்புடி எல்லாம் அடிபோடுது இந்த வடிவு புள்ள..
ஒருவாறு அவளையும் அழைத்துச்சென்று அவளுக்கு பாதிப்பில்லாத விறகடுப்பு. என்று அவள் கேட்ட அனைத்து சாமான்களையும் முகம்சுளிக்காமல் அவளுடன் அழைந்து திரிந்து வாங்கிக்கொடுத்தான்.
அடுத்தநாள்  மகேஷ் ஆபிஸ் போவதற்க்கு முன். தோட்டக்காரர் மூலம் மேஸ்திரியை வரவைத்து தற்போது இருக்கும் சமையல்அறையை குழப்பாமல் அதனுடன் தொடுத்து  இன்னும் ஒரு சமையல் அறையை கட்டுவதற்க்கு ஏற்பாடுசெய்தான். இதுவும் வடிவின் வேலைதான். ஏன் என்றால். இருக்குற சமையல் அறை வீட்டுக்கு அழகா  இருக்கடுமாம்..  அதனால் அதை கெடுக்காமல் அவளிற்கு ஏற்ற மாதிரி இன்னோறு சமையல் அறை கட்டித்தரச்சொல்லி கேட்டாள். அவள் கேட்டு இல்லனு சொல்லுவானா??.. அவளது பனைமரம். அதுதான் உடனே செய்றதுக்கு  ஏற்பாடு பண்ணிவிட்டான்.
அன்றுதான் அந்த ஆபிஸ் பாய் வரதனின் பிரச்சினை நடந்தது..
அன்றுதான் வார இறுதி நாளை தவிற்த்து கிழமை நாளுடன் கூடிய ஐந்து நாள் திருமண விடுமுறை எடுத்துவிட்டு. அதை நண்பன் புகழிற்க்கு அழைத்துச்சொன்னான்..
ஏசிபி புகழ் அவனது கேஷ் விசயமாக வெளியே இருந்தான். அப்போது அவனது போன் அழைத்தது..
“மகேஷ்  ஹலோ மச்சான் எங்கடா இருக்க.??.”
“புகழ்– வேலை விசயமா வெளிய வந்துயிருக்கேன் சொல்லுடா மச்சான்.”
“நான் ஹனிமூன் போறதுக்கு லீவ் எடுத்துட்டேன் நாளைக்கு போகனும்டா “
“சரி டா மச்சி  நைட் வீட்டுக்கு  வாறேன் அங்க வந்து பேசிக்குவோம்.. சரியா ??.. “
“சரிடா மச்சான் ரஜேஷையும் கூட்டிட்டு வா.”
“ஓகேடா பாய்”
உடனே மகேஷ் வீட்டிற்க்கு வந்து அவனது நண்பர்கள் வருவதை வடிவிடம் சொல்லி சமையல் செய்யச்சொன்னான்.

Advertisement