Advertisement

அத்தியாயம் பத்து..
சென்னையில் ஒரு காப்பி ஷாப்பில் இரண்டு உயர் அதிகாரிகளின் சந்திப்பு  ….
“ஹாய் கலெக்டர் சார்..”
ஹாய் வாங்க ஏசிபி சார்
“சிட்டவுன்”
“உங்களுடைய வேலை அதாவது மதிவதனியை துரத்தியவர்கள் சம்மந்தபட்ட வேலை இப்போது எந்தளவில் இருக்கின்றது??..”
“கிட்டதட்ட முடிவை நெருங்கிய நிலை தான் சார்..”
“ஓகே எந்த சந்தர்ப்பத்திலும் என்னை தொடர்பு கொள்ளுங்க. உடனடியா என்னோட உதவியை செய்வேன். ஓகே.”
“ஓகே சார் பட் அந்த மாலதி பொண்ணோட பாடி போஸ்ட்மார்ட்டம் செய்த ரிப்போட் பார்த்ததும் சாக் ஆகிட்டேன்.. “
“அந்த பொண்ணு தானாகவே கடலில் விழுந்து தற்கொலை செய்யாவிட்டால்  இன்னும் சிறிது நாட்களில் இறக்கும்     நிலைதானாம்.. “
“அன்னைக்கு வதனியை ஷிட்டி ஹாஸ்பிட்டலில்  வைத்திருக்கும் போது..  அந்த பொண்ணு அங்க வந்துட்டு போனதை நான் பார்த்தேன்.. “
“அந்த பொண்ணோட கையில் கருப்பாக வட்டமா ஏதோ இருந்தது நானும் டாட்டுனு நினைத்தேன்.. ஆனா கடற்கரையில் அந்த பொண்ணோட பாடி பார்க்கும்போது தான் தெரிஞ்கிட்டேன்.. “
“அது அவிஞ்ச மாதிரி சின்னசின்ன
ஓட்டையா இருந்தது  அதுல இருந்து நீர் வரஆரம்பித்து விட்டது. முகமெல்லாம் ஒருவித துற்நாற்றம்.. தோல் அதிகமாக அலர்சிக் ஆகிருக்கு..   உடனே    ஜி எச் கொண்டுபோய் போஸ்மார்ட்டம் செய்ததும் ஒரு பெரிய சாக்.. “
“அதை கிளியர் பண்ணிக்க மாலதி டீரீட்மெண்ட் எடுத்த டாக்டரையும். வில்சன் டாக்டரோட சேர்த்து சந்தித்து அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் காட்டி விளக்கம் கேட்டு அதை ரெக்கார்ட் பண்ணினேன்..”
” அது  என்னன்னா????”
“சொல்லுங்க??… புகழ்”
” பெண்கள் அவர்களின் நிறம் தான் அவங்களோட அழகுன்னு நினைக்குறாங்க.. “
“அவர்களின் இந்த மனநிலையை நன்கு தெரிந்து  பணம் லாபத்தை  பிரதானமாக கொண்ட அழகு சாதனம் தயாரிக்கின்ற கம்பெனி  தற்போது வைட்னிங் நைட் கிரீம் தயாரித்து விற்ப்பனை  செய்கின்றது. “
“7.14.21. நாட்கள் இந்த கிரீம் நைட் டைம்ல அப்ளே பண்ணிணா வெள்ளை நிறமாக வந்துடலாம்னு விதவிதமான விளம்பரங்கள் செய்து கருப்பாக பொதுநிறமாக இருக்கும் பெண்களுக்கு வெள்ளை  நிறம் வந்தால் தாங்கள் அழகாக இருப்போம் திருமணம் விரைவில் நடந்துவிடும்.. என்ற பெண்களின் ஆசைகளை இவர்களுக்கு  சாதகமாக பயன்படுத்தி  இந்த கம்பெனி நடத்துனர்கள் உழைக்கின்றார்கள்.. “
“அதன்மூலம் வெவ்வேறு இடங்களில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆனா நம்ம சென்னையில்  இந்த பாதிப்பு நம்மலோட கண்முன்   மாலதிக்கு  நடந்துருக்கு கலெக்டர் சார்..”
“ஒரு பவர் அதிகமான கிரீம் பாவித்து உடலிலுள்ள மெலன் என்னும் நிறமீ அதாவது ஒரு மனிதன் பிறக்கும்போது உடலில் உள்ள மெலனின் அளவுதான் நிறத்தை தீர்மானிக்குமாம்.”
“மெலன் குறைந்தபடியால்  உள் உறுப்புகள் திசுக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு. இறக்கும் நிலைக்கு வந்துவிட்டது அவளோட முடிவை டாக்டர் தெரியப்படுத்தவும். தான் வீட்டில் இறந்தால் யாருக்கும் தெரியாமல் போய்விடும்ன்னு தற்கொலை செய்து இதன் மூலம் இனி எந்த பொண்ணும் பாதிக்கப்படக்கூடாதுன்னு கடிதம் எழுதுதி அவங்க வீட்டில் வைத்துவிட்டு தான் இந்த தற்கொலை முடிவை எடுத்து இருக்கின்றாள். சார்.”
“இதுபற்றி நாம் டாக்டர் வில்சன் . அழகுகலை நிபுணர், ஸ்கின் டாக்டர், இவங்கமூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும்.. அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை.”
“அவ்வாறு விழிப்புணர்வு செய்தால் தான் மக்கள் அதோட தீமையை தெரிந்து பாவிப்பதை தடுக்கமுடியும்.”
“அப்போதுதான்  சென்னையின் அனைத்து பேன்சி கடை.. ஸாப்பிங்மால் வேறு எங்கயெல்லாம் இந்த வைட்னிங் கிரீம் கிடைக்குமோ எல்லா வகையான வைட்னிங் கிரீம்களையும் இனி மக்கள் கைக்கு கிடைக்காம சீழ் பண்ணணும்.. “
“அதையும் மீறி விற்பனை செய்தா அந்த கடைக்கே மொத்த விற்பனையும் முடங்கும்படி சீழ் வைக்கப்படும்ன்னு அறிவிப்பு விடுத்தா தன்னால அடங்குவாங்க கலெக்டர் சார் ..”
“ஓகே  மக்களுக்கு  நன்மை கிடைக்கணும்னு தான் நாம ரெண்டு பேரும் இந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தோம்.”
“நாம் மினிஸ்டர் ,சி எம் ரெண்டு பேர்க்கிட்டையும்  இதைபத்தி பேசி முடிவெடுப்போம். “
“நீங்க ஆதாரமா இன்னும் இந்த பிரச்சினை மூலம் பாதிக்கப்பட்டவங்க தகவல் சேகரிச்சா இன்னும் நாம ஸ்டெப் எடுக்க வசதியாக இருக்கும்.. புகழ்.”
“ஓகே சார் உடனடியா பாதிப்பை குறைப்பதற்க்கு  தாமதிக்காம நடவடிக்கை  எடுக்கனும் கமிஸ்னர்க்கு நீங்களே மெயில் பண்ணிடுங்க. அப்போதான் சீக்கிரம் வேலை முடியும்.. “
“ஓகே ஏசிபி புகழ்..”
[ஆம் இந்த கலெக்டர் மகேஷ் வர்மா மற்றும் ஏசிபி புகழேந்தி இருவரும்  15வயதில் மகேஷ் சென்னை வந்ததில் இருந்து இருவரும் ஒரே பாடசாலையில் படித்ததால் நெருங்கிய நண்பர்கள். “
“அதை தொடர்ந்து காலேஜில் படிக்குபோதுதான். ராஜேஷ் ப்ரண்ட் ஆனான். “
“இருவருடைய பாதையும் ஒன்றாக அமைந்தது நேர்மை மக்களிற்க்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதே அதை அடிப்படையாகக் கொண்டு அதனை செய்வதற்கு தகுந்த பதவிகளை தேர்வு செய்து படித்து. நட்புடன் நட்சத்திரமாக சிறந்து விளங்கினர்..”
“டேய் மச்சி புகழ் போதும் போர்மலா பேசினது முடியலடா என்னால அதுவும் உன்கிட்ட கலெக்டரா நடந்துக்கமுடியலடா. சிரிப்பு சிரிப்பா வருது மச்சி அங்க பாரு ராஜேஷ் காப்பியை  பார்க்குறதும் நம்மல பார்க்குறதுமாவே முறைச்சிக்கிட்டு இருக்கின்றான்.. “
புகழ்—- டேய் மச்சான் மகேஷ் வேலை நேரத்துல அதுக்கு ஏத்த மாதிரி இருக்கனும் வேலைகிடையில நட்ப கொண்டுவரக்கூடாது ஓகே..
ராஜேஷ்—- டேய் நல்லவன்ங்கலா நான் பாட்டுக்கு மகேஷ் வீட்ட போயிருந்தாலும் இன்நேரம் வடிவு சிஸ்டர் நல்ல டிபன் செய்து தந்துருப்பாங்க போயும் போயும் ரெண்டு கடமை கண்ணாயிரங்களோட வந்தேனே. முடியலடா.
“ஒரு கலெக்டர் ஒரு ஏசிபி ப்ரண்ட வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ஐயோ ஐயோ..”
மகேஷ்— டேய் ராஜேஷ்  போ போய் வடிவு கையால நல்லா அடிவாங்கிக்கோ…
புகழ்— மகேஷ் வடிவு சிஸ்டர் ஜாலி டைப் உன்னோட வாழ்க்கை கலர்ப்புள்ளா இருக்கும்..இன்னும் போனவாரம் எங்களுக்கு சொல்லாம நீ கல்யாணம் பண்ணின கோவம் உன் மேல அப்புடியேதான் இருக்கு இருந்தாலும் நண்பேன்டா நீ அதுக்காக உன்னோட சூழ்நிலைக்காக உன்னை மன்னிக்குறோம்..
மகேஷ்— அவளோட கலாட்டாக்கு அளவே இல்லாம போச்சிடா ஆனா இப்பெல்லாம் ஏதோ ஒரு சந்தோசத்தை என்மனசு உணருது.. அந்த பீல் நல்லாதான் இருக்கு..
ராஜேஷ்— அனுபவி ராஜா அனுபவி. அதோட நீயும் சேர்த்து அடியும் வாங்கிக்கோ…
மகேஷ்—-  புகழ் நீ சொல்லு மதி இப்போ எப்புடி இருக்கு??…
புகழ்—- உனக்கே தெரியும் அவளுக்கு கந்தன்னு ஒருத்தனோட கல்யாணம் ஆனதும் இப்ப அவன் எங்க இருக்கான்னும் தெரியல. அவனதான் தேடுறேன்.
“மூன்றாவது நாள் .டாகடர் வில்சனும்  மதியை பரிசோதனை  செய்த மனோதத்துவ டாக்டர் மூர்த்தியும்  எங்களை அவரின் அறைக்கு அழைத்து. “
“அதிகமா மதி ஒரே விஷயத்தை யோசிச்சு அதை மூளைக்கு அதிகமா கடத்தியதால்.  நரம்பு பாதிச்சு இதுக்குமேல உடல் ஒத்துக்காம தான்  மயக்கம் வந்து கடைசியா என்னோட கார்ல வந்து விழுந்துருக்கா எல்லா அதிர்ச்சியும் சேர்ந்து மூளைக்கு ப்றசர் அதிகமாகி பழசு எல்லாம் மறந்துட்டாலாம் அதாவது மூளையில இருந்த எல்லாமே றப்பர் கொண்டு அழிந்து போனமாதிரி ஆகிட்டாம் டா..”
“அவளோட தனிமையும் அமைதியும். மிகவும் கொடுமையானதுடா.. அதுதான் இப்புடி ஆகிட்டா..”
“இதேதான் அவங்க அம்மா கலியாணத்துக்கு ஜாதகம் பார்கபோனப்ப ஜோசியர் சொல்லிருந்தாராம்..”
“உங்க பொண்ணுக்கு ஒரு பெரிய கண்டம் இருக்கு அதுல மாட்டிதான் அதிகம் பாதிப்பு இல்லாம புதிதாக பிறந்தமாதிரி திரும்பி வருவா அப்போ உங்க பொண்ண முதல் கவனிக்காம விட்டதுக்கும் சேர்த்து அன்பா ஆசையா பார்த்துக்கோங்கன்னு சொன்னாராம்..”
“ஒருதரோட கர்ம பலன் தான் அவங்க வாழும்போது நடக்கும் நல்லது கெட்டதுக்கு கிடைக்கப்படும் பலன்.. உங்க பொண்ணு ரொம்ப நல்லவ அதுதான் இந்த பிறப்புல அனுபவிக்க வேண்டிய கஷ்டம் அனுபவிச்சுட்டா இந்த கண்டத்துல இருந்து பாதிப்பு இல்லாம தப்பி வருவதற்கு காரணம் போன ஜென்மத்து நன்மையான பலன்தான். ரெண்டாவது திருமணவாழ்க்கை அமோகமா இருக்கும்ன்னு சொன்னாரம்.. “
“இன்னும் ஒரு மாததில் நீங்க திருமணம் செய்து வைக்கனும் அப்புடி இல்லன்னா வேற பெரிய ஆபத்து வந்துடும்ன்னு சொன்னாராம். “
“அதுதான் அவங்க அம்மா அவங்க சொந்ததுல ஒருவர் சொன்ன கந்தன திருமணம் செய்து வச்சிருக்காங்க.. “
“அவனோட ஒரு போட்டோவும் இல்ல மதிக்கும் மறந்துடுச்சி எப்புடி அவன கண்டுபிடிக்கப் போறனோ தெரியல??.. டா மகேஷ்..”
“இதுல மாலதியோட கேஸும்  சவாலா இருக்கு அவங்க வீட்ல கிடைத்த கிரீம் டப்பா பப்லிக்கா எல்லா பேன்சி கடையிலயும் கிடைக்குறது இல்லயாம். யாரோ தனிப்பட குறிப்பிட்ட இடங்களுக்கு சேல் பண்ணுறாங்க அதுவும் யாருனு கண்டு பிடிக்கனும்.. “
“அதுதான் மதி பட்ட கஷ்டத்துக்கு கொஞ்சம் நிம்மதியா அவங்க அம்மாட்ட இருக்கட்டும்ன்னு இப்போதைக்கு கல்யாண பேச்சை எடுக்காம இருகேன்.”
“அம்மா அப்பா மதியோட எல்லாப்பிரச்சினையும் தெரிஞ்சும் எனக்காக ஒத்துகிட்டாங்க அவங்களுக்கு மதி மேல எந்த தப்பான எண்ணமும் இல்லன்னு சொல்லிட்டாங்க. “
“மதி கண்முழிச்சதும் எல்லாம் மறந்ததால என்னயவே நீங்க யாருனு கேட்டுடா மச்சான். அவளயே மனசுல நினைத்து இருந்த என்னால அதை தாங்க முடியல. “
“அதனால என்னோட வேலையும் முடியனும். மதியும் அவங்க அம்மாவோட  அன்பை  நல்லா அனுபவிக்கனும். நானும் அப்போ சொல்லாம விட்ட காதலை இந்த பெப்ரவரி காதல் மாதத்தில் காதலர் தினம் அன்று ப்ரோப்போஸ் பண்ணி கொஞ்ச காலம் காதல் பறவைகலா பறந்து  அனுபவித்து அவளுக்கு என்னை புரியவைத்த பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவுல இருக்கேன்.. “
ராஜேஷ்—- ஹுக்கும் காதல் கழுத வயசுல காதல் மலருமாம்ல காதல். கலி முத்திடுத்து…
மகேஷ்— நான் அனுபவித்த தனிமைக்கும் சேர்த்து இந்த ஒருவாரகாலமா சந்தோசமா இருக்கேன். இனியும் அழகியோட கலகலப்பான குணத்தினால என்னை நிம்மதியாக வச்சிருப்பான்னு நம்புறேன்.
“அதுபோலதான் நீயும் மதியும் திருமணம் பண்ணினா வாழ்க்கையை சந்தோசமா வாழுவீங்க.பாருடா மச்சான்.”
“இந்த ராஜேஷ் பயதான் காதல் பண்ணாம  ஞானசூனியமா சும்மா வெட்டியா இருக்கான்..”
ராஜேஷ்—- என்ன வார்த்தை மச்சான் சொல்லிப்புட்ட அதுவும் என்னைப்பார்த்து. நான் சிங்கிளாவே சைட் அடிச்சு என்னோட காலாத்தை போக்கிடுவேன் மிங்கிள் இப்போதைக்கு வேண்டாம் டா இருக்குறவனுக்கு ஒரு பொண்டாட்டி இல்லாதவணுக்கு ஊர்ல உள்ள சிங்கிள் பொண்ணுங்க மொத்தமும்
பிகருங்கடா மச்சான். தெரிஞ்சுக்கோ..”
புகழ்—-” சரிடா மச்சான் ராஜேஷ் யாருடைய கையாலயும் அடிவாங்கி என்கிட்ட கேஸ் வராம இருந்தா சரிதான்..”
“மச்சி மகேஷ் நீ எப்ப ஹனிமுன் போகப்போற????…. “
மகேஷ்—- ஆபிஸ்ல கொஞ்சம் வேலைகள் பென்டிங் இருக்கு மச்சான் முடிச்சுடுதான் வீக்எண்ட் சேர்ந்து வருகின்றமாதிரி ஒரு பைவ் டேஸ் லீவ் போடணும். டா புகழ்.
புகழ்—  ஒகே மகேஷ் நீ லீவ் ஓகே ஆனதும் என்கிட்ட சொல்லு. நான் இப்போ அந்த மாலினி வீட்ட போய்ட்டு தான் வீட்ட போகணும். அம்மாவும் வீட்ல அதிகம் தங்குறது இல்லன்னு கவலைப்படுறாங்க. நீங்க சன்டே வீட்டுக்கு ஜோடியா விருந்துக்கு வந்துடணும் மச்சான்.
ராஜேஷ்—-  ஏன்டா புகழ் ஜோடியா வந்தாமட்டும்தான் அம்மா விருந்து வைப்பாங்கலா???…  அப்போ நான்.. எங்கடா போறது??… ஜோடிக்கு 
புகழ்—- இத நான் அப்பாட்ட கேட்டு சொல்லவாடா????….  மச்சான்.
மகேஷ்—- இப்ப இதுக்கு கண்ணன் அப்பாவ விட சரியான ஆளு என் ப்யூட்டிதான் அவளோட ஸ்டைல்ல ராஜேஷ்க்கு பதில் சொல்லுவாள்..
ராஜேஷ்—- ஐயோ நல்ல ஆள்கிட்ட  என்ன கோர்த்து விடுற மச்சி நீ எனக்கு விருந்தே வேண்டாம் டா ஆள விடு பாய் டா நான் ரூம்க்கு போறேன்..
புகழ்— ஓகே மச்சி நாங்களும் போகத்தான். பாய்டா மகேஷ் & ராஜேஷ்.
மகேஷ்—  ஒகே சன்டே புகழ் வீட்டில் சந்திப்போம் பாய்டா …
“மகேஷ் வர்மா அவனது வீட்டை நோக்கி செல்கின்றேன் வாங்க நாமலும் நம்ம வடிவு என்ன பண்ணுதுனு பார்ப்போம்…”
“மகேஷ்   வீட்டின் கேட்டிற்க்கு வரும் போதே வேளை ஆட்கள் அனைவரும் முகத்திலும் பதட்டத்துடன் வெளியே நின்றனர்.. “
மகேஷ்—! !என்ன ராமு அண்ணன் ஏன் எல்லாரும் வெளிய நிக்குறீங்க??…
வேலையாள் ராமு—- நீங்களே உள்ளபோய் பாருங்க தம்பி பாப்பா பண்ணுற வேலையை..
மகேஷ்—  அப்புடி என்னதான் செய்றா??. ஐயோ வீட்டுக்குள்ள இப்புடி புகை வருதே..
“வடிவு என்ன பண்ணுற கண் எரியுது வெளிய வா???…”
“வடிவழகி கட்டிய சேலையை இடுப்பில் சொருகி. முகமெல்லாம்.வியர்த்து கண் சிவந்து ஒரு வித அழகான ஒவியம் போன்று காணப்பட்டால்..”
“அதை இந்த ரசிகன் ஏன் அவளை அழைத்தோம் என்று மறந்து அவளது தோற்றத்தை வைத்த கண் எடுக்காமல் ரசித்து பார்த்து நின்றான்..”
அதே சென்னையில் வேறு இடத்தில்..
“என்னடா அந்த மகேஷ் அந்த பட்டிக்காட்டோட வாழுறானா???… இல்ல தலைல கை வைத்து சோகமா இருக்கானா??..”
“அவனோட முகத்துல இருக்க சந்தோசம் பார்த்தா வாழுறான் போலதான் தெரியுது மேடம்..”
“சரி அப்போ அவன் ஆபிஸ் போனதும் இதுல அவளோட சைன் வாங்கிட்டு வந்துடு.. “
” ஒகே மேடம்.”
“இப்போது நீ போ திரும்ப உன்னை கூப்புடுறேன்..”
புகழ்—- -ஹலோ ஹாய்..
“யாருங்க???.. நீங்க…”
தொடரும்…..

Advertisement